• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

12.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem

12.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே​



விது, “ வாகி… சொல்லு டா.. என்ன பண்ணி வச்சு இருக்க? எதுக்கு இப்ப அவசரமா பிரஸ்மீட்

அவங்க நேரடியா மினிஸ்ட்ரி லெவல்ல டிரை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க விது இதுக்கு மேல நான் யாருன்னு தெரியாம இருந்தா அம்மாக்கு பாதுகாப்பு இல்ல அதான் என்று சொல்லவும்..

இப்ப மட்டும் பாதுகாப்பு இருக்கா…

ஏன் இல்லாம திருடன் கையில் சாவி கொடுத்து இருக்கேன் இப்ப மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம தவிக்கனும் அதுக்கு தான் இந்த பிரஸ்மீட்..

வாகி…

விடுடா எங்க இருக்க எப்ப வர நீ ..

கிளம்பிட்டேன் நான் ஒரு பத்து நாள் லீவ் போட்டு இருக்கேன் அதுக்குள்ள டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்துட்டா அம்மாவை அழைச்சிட்டு கிளம்பிடுவேன்..நீ வா அதை பத்தி அப்புறம் பேசிக்கலாம் என்று வாகி சொல்ல..போனை வைத்தவன் அடுத்து அழைத்தது ரவிக்கு தான்.

அண்ணா..

சொல்லுடா …

உங்க மச்சான் போன் பண்ணாரா..

இல்லடா எங்க பண்ணிடுவானோன்னு பயமா இருக்கு…

வரும் வராம எப்படி இங்க ஏர்போர்ட் ல நின்னுட்டு இருக்கார் அதோட மிஸ்டர்.பகலவனும்..

டேய் இப்ப எதுக்கு கடிச்சு துப்புற..

சொன்ன வார்த்தையை காப்பாத்த தெரியாதவர்களுக்கு எல்லாம் எதுக்கு அண்ணா காதல் . அதேநேரம் பச்சோந்தியா இருக்கிற இவங்களுக்கு எதுக்கு உறவு… என்று காதில் கேட்கும் அளவுக்கு அருகில் நின்று சொல்ல..

என்னடா டயலாக் பேசிட்டு இருக்க..

ஆமா அண்ணா இருக்கும் போது அந்த உறவை காப்பாத்திக்க தெரியல அது இல்லன்னு ஆனதும் உடனே இன்னொரு உறவுக்கு தயாராகிட்டு இப்ப எதுக்கு நல்லவன் வேஷம் என்றவன் பக்கத்து நாற்காலியில் சாய்ந்து அமர..அருகில் இருந்தவருக்கோ உறுத்தல் தன்னிடம் சொல்வது போலவே..

ஆனால் அப்படி பட்டவன் அல்லவே நான் என்பது போல் அவர் அமர்ந்து இருக்க… வர்மன் அருகில் வந்தவன் மாமா கண்டிப்பா போகனுமா?

ஆமா வர்மா பழனி கண்டிப்பா உன் அத்தையை பார்க்காம வரமாட்டான் நான் போயே ஆகனும்.

மாமா நீங்க இன்னும் வீட்டுக்கு கூட போகல அங்க இன்னும் என்ன என்ன பிரச்சனையை இழுத்துட்டு இருக்காங்கன்னு தெரியல தாத்தா வேற போன் பண்ணிட்டே இருக்காங்க வாங்க போகலாம் கண்டிப்பா நான் அத்த கிட்ட கூட்டிட்டு போறேன்..

அப்ப பாப்பா வர்மா…

பாப்பாவை பார்க்கிறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல மாமா அவளை நீங்க பார்க்கலாம் நான் கண்டிப்பா அழைச்சிட்டு போறேன் என்றவன் பகலவனை சமாதானம் செய்ய..

எந்த முடிவுக்கும் வராமல் அமைதியாக அவர் அமர்ந்து இருக்க அந்த பிளைட் கிளம்புவதற்கான அறிவிப்பு வந்து இருந்தது கண்களை திறந்த பகலவன் தவிப்புடன் வர்மனை பார்க்க, மாமா நீ நினைச்சதும் அழைச்சிட்டு போக நம்ம கிட்ட இல்லாததா வா மாமா சொன்னா கேளு என்று வர்மன் அவரை அழைக்க மெல்ல எழுந்து வர்மனுடன் நடக்க..

இகழ்ச்சியாக சிரித்த விது… மாறவே இல்ல எப்பவும் போலத்தான் என்று நினைத்து கொண்டவன் கிளம்பி இருந்தான் தாய் தமக்கையை பார்க்க..


பிரஸ்மீட் முடிந்து வீடு வந்து சேர்ந்தவளை என்ன வாகி பண்ணிட்டு வந்து இருக்க இப்ப அவங்க எல்லாம் தேட ஆரம்பிச்சுடுவாங்க என்று தவிப்புடன் ரிஷி சொல்ல…

வாகி, “வரட்டும் ம்மா எதுக்கு பயப்படுற? பயமா அம்மா…

ஆம் என்று தலையசைத்தாள் எதுக்கும் துணிஞ்சவங்க வாகி அவங்க ..

அப்ப நானு என்றாள் வாகி..

வாகி..

விடுமா வரட்டும் அதுக்கு முன்னாடி.. நீ பாதுகாத்துட்டு இருக்க பூதத்தை எப்ப வெளியேவிடுவ…

வாகி…

ஆமா மா அடுத்த என்க்கொயிரி க்கு நீ தான் அங்க இருக்கனும் இல்லையா…

ஒரு பெருமூச்சுடன் ஆமா என்று தலையாட்ட..

என்ன பண்ணலாம் ன்னு இருக்க…

சாமிக்கண்ணு இப்ப முடியாம இருக்காரு வாகி அவரை இதுக்கெல்லாம் அழைச்சிட்டு வரனுமான்னு என்று ரிஷி இழுக்க..

கண்டிப்பா மா அவரை எப்படி பாதுகாப்பா அழைச்சிட்டு வரனும் ன்னு எனக்கு தெரியும் நீ கவலைப்படாதே எங்க இருக்காங்கன்னு மட்டும் சொல்லு…ரிஷி ஒரு நொடி அமைதியாக இருந்தவர்… கன்னியாகுமரி ல ..

மா…

சொல்லு வாகி…

இத்தனை வருஷத்துல நீ எங்கேயும் போனது இல்லையே…

ஆமா…

ஆனா அவங்க…

உங்க அம்மா… இருபது மாவடத்துல சப்கலெக்டரா வேலை பார்த்து இருக்கேன் என்றவரை பார்த்து புன்னகைத்தவள் பெரிய ஆள் தான்மா நீ..

உதட்டை சுழித்த ரிஷி வாகியை பார்க்க… அடுத்து என்ன பண்ணலாம் ன்னு இருக்க வாகி…?

அதை நீ தான் சொல்லனும்.

சென்னை போகலாம் வாகி இந்த கேஸ் சிபிஐ க்கு மாறி இருக்கு கண்டிப்பா பெரிய புள்ளிங்க தலையீடு இருக்கும்.இருக்காதா நானே இருக்கேனே என்று சொல்லி நகைத்தவளை பார்த்து…வாகி தேவையில்லாம இதுல நீ தலையிட வேண்டாம் என்று ரிஷி எச்சரிக்க..அட வா ம்மா விது வந்துடுவான் நாம் ஜாலியா என்ஜாய் பண்ணலாம் இந்த கேஸ் விஷயமா பேச நேரம் இருக்கு என்றவள் அதை ஆறப்போட..

இங்கே வீட்டிற்கு வந்த வர்மன், பகலவனை பார்த்த ராமைய்யா..என்னத்த டா இவ்வளவு நேரம் பண்ணிட்டு இருந்தீங்க என்று எகிற..

காலேஜ் போனேன் தாத்தா அங்க வேற எதுவும் டீடெயில்ஸ் இருக்கான்னு பார்க்க..

அங்க ஒரு எழவும் இல்ல எல்லாத்தையும் அப்பவே பார்த்து கிளியர் ன்னு போலீஸ் சொல்லிட்டாங்க இப்ப எதுக்கு இந்த பிரச்சினை முளைச்சு இருக்குன்னு தெரியல என்றவர் எங்கடா ஊரை சுத்திட்டு இருக்க? இங்க உன் பொண்டாட்டி தவிச்சுட்டு இருப்பான்னு எண்ணம் இருக்கா உனக்கு…

என்னதுக்கு அப்பா தவிக்க போறா…

டேய் அவளை போலீஸ் பிடிச்சுட்டு போய் இருக்கு..

ஓஓஓ..

என்னடா பதில் இது..


அலட்சியமா நடந்துட்டு இருக்க பகலவா என்று அகத்தியன் கேட்க..

உங்க பொண்ணோட முடிவு எதுலையும் என்னோட பங்கு இல்ல மிஸ்டர்.அகத்தியன் சார்..



பகலவா என்று ராமைய்யா சத்தம் தர..

அப்பா போதும் இன்னும் எத்தனை நாளைக்கு உங்க கையிலையே எல்லாம் இருக்கனும் ன்னு நினைக்குறீங்க..?

என்னடா பேசுற…

ஒன்னும் இல்ல இப்ப என்ன மாலினி வெளியே எடுக்கனும் அவ்வளவு தானே பார்த்துக்கலாம் வெறும் என்க்கொயிரி மட்டும் தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவாங்க என்றவன் சோஃபாவில் அமர்ந்து விட..வேகமாக உள்ளே நுழைந்து இருந்தாள் தாரா..

டாடி…

கண் மூடி இருந்த பகலவன் சலிப்புடன் சொல்லு தாரா…

மம்மி…

இதெல்லாம் காலேஜ் ரன் பண்ணா வரத்தான் செய்யும் யூ டோன்ட்வொரி என்றவன் அவளை அருகே அமர்த்தி கொள்ள…

அதானே எப்பவும் என் பொண்ணு உங்களுக்கு ரெண்டாம் பட்சம் தான் இல்ல பகலவன் என்று அகத்தியன் கேட்க..

என்ன பிரச்சினை உங்களுக்கு ?

என் பொண்ணு அங்க ஸ்டேஷன் ல என்று அவர் தடுமாற..

அதனால் என்ன?

என்ன இப்படி கேள்வி கேட்குறீங்க


வேற எப்படி கேட்கனும் நானும் ஒரு ஐஏஎஸ் தான் என்னைய பார்க்க எத்தனையோ முறை உங்க பொண்ணு வந்து இருக்கா பல நேரம் நான் ஸ்டேஷன் ல இருந்தப்ப கூட அது மாதிரி தான் இதுவும் வந்துடுவாங்க என்று சொல்ல..

டாடி உங்க பொண்ணும் வொய்ப் இருக்காங்கன்னு தெரிஞ்சு தான் இப்ப இப்படி இருக்கீங்களா என்றாள் தாரா..

என்ன தாரா பேசுற..

ஆமா எல்லாரும் சொல்லுறாங்க நீங்க இனி மம்மியை மதிக்க மாட்டீங்கன்னு..

உனக்கும் அப்படி தோணுதா தாரா..

….



ஓஓஓ அப்ப உன் அமைதி அதை சரின்னு சொல்லுது போல..ஓகே ரைட் எப்படி பார்த்தாலும் ரிஷி தான் என் மனைவி அதுல எந்த மாற்றமும் இல்லை அவ உனக்கு அம்மா தான்..

சாரி டாடி என் அம்மா இருக்கும் போது நான் ஏன் அவங்களை அம்மான்னு…

தாரா என்று பகலவன் அதட்ட..

போதும் பகலவா என் பேத்தியை அதட்ட உனக்கு உரிமை இல்ல என்னைக்கு நீ அந்த அனாதை முக்கியமான சொல்லிட்டியோ அதோட இருந்துக்க என்ற அகத்தியன் தன் மூத்த மருமகனை பார்க்க அவனோ பகலவனை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

பகலவன், “ அண்ணா உன் வாழ்க்கை வேற, எனக்கு அமைஞ்ச வாழ்க்கை வேற நீ எதையும் உன்னோட டைஅப் பண்ண வேண்டாம் கிளம்பு என்றதும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் கிளம்ப தாரா வா என்று அகத்தியன் சொன்னதும் எழுந்தவள் நான் வீட்டுக்கு போறேன் டாடி..

ஓகே டா என்று முடித்து கொண்டான் பகலவன்..


ராமைய்யா, “ தாரா எங்க போற இது தான் நம்ம வீடு…

அப்படியா இத்தனை வருஷம் இல்லாம இப்ப என்ன புதுசா என்றவள் நான் எங்க வீட்டுக்கு போறேன் என்று வெளியேறி விட..

பகலவா…

சொல்லுங்க அப்பா…

என்னடா புதுசா எல்லாம்..

நீங்க ஆரம்பிச்சு வச்சது தானே.. எல்லாம் உங்க பொண்ணுக்காக தானே அப்ப இப்படித்தானே இருக்கும் என்று சொல்ல..

ராமைய்யா ஒரு நொடி அதிர்ந்து தான் போனார்..ஆம் பல்லவி சொன்னது தான் வீட்டின் சட்டம் அதில் எந்த மாற்றமும் இல்லை அப்படித்தான் மூத்தவன் வேந்தனை அகத்தியன் குடும்பத்தில் பெண் எடுத்து பல்லவி அந்த வீட்டு மருமகளா என்று பெண் குடுத்து பெண் எடுத்தனர். பல்லவி வணிகத்தில் நாட்டம் உடையவள் ஆனால் அவள் கணவனோ பெரிதாக அதில் கவனம் இல்லை. குடும்பம் சம்பாத்தியம் தவிர ஆட்சிபுரியும் எண்ணம் எல்லாம் இல்லை ஆனால் பல்லவி வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்குவதில் ஆர்வம் காட்ட குடும்பம் அன்பு என்ற எந்த இடத்திலும் அவள் இல்லாமல் நின்று விட சாகித்ய வர்மன் தந்தையில்லா மகனாக வளர ஆரம்பித்து இருந்தான்.

அந்த எண்ணங்களிலிருந்து பட்டென வெளியே வந்தவர் பகலவா தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பேசாதே…

பேசவேண்டிய காலம் வந்தா பேசத் தானே செய்யனும் என்று பகலவன் சொல்ல…

போதும் பகலவா…

வர்மன், " தாத்தா என்ன விஷயம் ஏன் இப்படி மாமாவை போட்டு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க மாமா ஏற்கனவே ரொம்ப வருத்ததுல இருக்காங்க..

வர்மா நீ போ நான் சொல்லும் போது வந்தா போதும் என்று ராமைய்யா சொல்ல..

இன்னும் என்னத்தப்பா நீங்க அவன் கிட்ட மறைக்க பார்க்குறீங்க என்று பகலவன் கேட்டு நொடி ராமைய்யா வர்மன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க…ராமைய்யா பதட்டமாக வர்மனை பார்க்க.. வர்மன் பகலவனை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் கேட்காமல் நகர்ந்து இருக்க ராமைய்யாவிற்கு தான் படபடப்பாக இருந்தது.


தொடரும்




 
  • Love
Reactions: shasri