• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

12. காற்றோடு கலந்த விதையாவள்

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
இதற்கிடையில் ஏழு மணி தாண்டியும் தூஷாவை காணவில்லை என நினைத்தவள்,

பஸ் பிரேக் டவுண் ஆகி இருக்கலாம். என நினைத்து, ஏழு அரைமட்டும் பொறுத்தவள், வர்மனுக்கு அழைத்து கேட்டாள்.


அவனாே அவள் தாமதமாக வந்ததால், இரவு எட்டு மணி ஆகும் என்றான்.

பொறுத்து பொறுத்து பார்த்த சைலு.
எட்டு முப்பதை தாண்டவும், மீண்டும் வர்மனுக்கு அழைத்து, திட்டி தீர்த்தாள்.

அவனுக்கும் எதுவும் புரியவில்லை.
'இன்நேரம் அவள் சென்றிருக்க வேண்டுமே!' என நினைத்தவன், தன் பைக்கை எடுத்து கொண்டு, சூப்பர் மார்க்கெட் சென்றான்.

ரதனாே ஒன்பது மணி ஆகியதால், தன்னிடம் வந்து வீட்டில் விட சொல்லி துஷாவே உதவி கேட்பாள். எனநினைத்திருக்க, அவள் பஸ்சுக்காக காத்திருக்கவும்.


'பஸ் வந்தால் தானே! இனி உன் றோடுக்கு பஸ் இருக்காதே! என்னட்ட தான் வரோணும்.' என அவளையே எதிர் பார்த்திருந்தவன், போன் வரவும், பேசிக்கொண்டிருந்ததான்.


துஷா மெயின் ஸ்டாப் சென்றதை கவனிக்க வில்லை.
பேசி முடிந்து பார்க்க, அவளை காணாது வெளியே வந்தவன் கண்ணில் பட்டனர் அந்த கயவர்கள்

அதே நேரம் வர்மனும் வந்துவிட,
தனது கை பையுடன், அவர்களிடம் இருந்து பறிக்க போராடியவள், திரும்பும் போது தான், ரதனையும் வர்மனையும் கண்டாள்.

உயிரே வந்தது போல் ஓர் பிரம்மை.

"அண்ணா!" என்று குரல் எழாமல் அழைத்தவளை பார்த்த தடியர்கள், அவள் பார்வை சென்ற பக்கம் பார்த்த அந்த நொடி, தன் பையை பறித்துக்கொண்டு ஓடி வந்து, ஏதோ பிடிமானம் கிடைத்ததை போல் வர்மனை பயத்தில் அணைத்துக் கொண்டாள்.


அவள் உடல் நடுங்கத்தை உணர்ந்த வர்மன்,

"ஒன்டும் இல்ல துஷா... நாங்க தான் வந்துட்டமே பயப்பிடாத" என ஆறுதல் கூறி எழுப்ப, அவன் மீதே மயங்கி சரிந்தாள்.



தங்களை கண்டு ஓடி வந்தவள், வர்மனை கட்டிக் கொண்டதும் தான், ரதனுக்கு கோவம் கண் முன் தெரியாமல் வந்தது.

'நானும் தானே வந்தன்? அவளுக்கு வர்மனை மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறதா?' என்றெண்ணியவனது மொத்த கோபமும், அவளது இந்த நிலைக்கு காரணமானவர்களிடம் திரும்பியது.

அவர்கள் போதையில் இருந்தார்கள் போல.

பாவம் அவளும் இருந்த பதட்டத்தில், எங்கு தான் அவர்களிடம் சிக்கி நாசமாகி விடுவேனோ என்று பயந்திருந்தவளுக்கு, நேற்று எந்த ஆணுடனும் பேச்சுவார்த்தை வேண்டாம் என்று எடுத்த முடிவை மறந்தும் போனாள்.

வர்மனே இப்போது கடவுளாக தெரிய, சற்று பின்னே வந்த ரதனை அவள் கவனிக்கவில்லை.

அதற்குள் வர்மன் துஷாவை எழுப்பவும் தான், அவன்மேல் அவள் இருப்பதை கண்டான்.

அந்த குடிகாறர்கள் வெறியே உண்டானது.

அதற்குள் அவர்களும் துஷாவை தாங்கி பிடித்திருந்த வர்மன் முன் வந்து நின்றவர்கள்,

"இன்டைக்கு இவள் உன் முறையா? அது தான் உன்னட்ட ஓடி..........." என்று சொன்னவன் முடிக்கவில்லை.


அதற்கு அவன் வாய் சரியாக இருக்க வேண்டுமே!

அதை தான் ரதன் உடைத்திருந்தான். வாயல் ரத்தம் கக்க அதை துப்பினான்.

வாயிலிருந்து இரண்டு கடவாய் பற்களும், யார் முதலில் என்று போட்டி போட்டது போல... ஒன்றன் பின் ஒன்றென கீழே விழவும், அதை பார்த்து கொண்டிருந்த மற்றையவன், தன் பங்கிற்கு தானாக முன் வந்து,

இரண்டு குத்துக்களை அதிகமாகவே வாங்கியவன், அந்த முரடனிடம் இருந்து தாம் தப்பித்தால் போதும் என்று, பின்னங்கால் பிடரியில் பட ஓடி மறைந்தார்கள்.

வர்மன் கைகளில் துவழ்ந்திருப்பவளை பார்க்கப் பிடிக்காமல், அவனிடம் இருந்து அவளை தன் கையணைப்பில், பிடிங்காத குறையாக வாங்கிக் கொண்டாவன்,

"நீ தான் அப்பவே வீட்டுக்கு போனியே...!
இப்ப எப்படி இங்க?" என்றான்.

"அது சார்... இவளோட ஃப்ரெண்ட் தான் போன் பண்ணா இவளை காணேல என்டு.... அதான் தேடி வந்தன்.

வந்ததும் ஒரு வகையில நல்லது தான்" என்றான்.


'எங்க நல்லது? எனக்கு கிடைக்க வேண்டிய சந்தர்பத்தையும் தான், நீ புடுங்கிட்டியே'

கையணைப்பில் இருந்தவளை குனிந்து பார்த்தான். மயக்கம் தெளிந்த பாட்டை காணோம்.

'பைக்கிலயா வந்தீங்க வர்மன்..?" என்றான் வர்மனிடம்.


அவன் ஆமென்றதும்
"எப்பிடி இந்த நிலமையில பைக்கில கொண்டு போறது...?

பைக்க இங்கையே விட்டுட்டு வாங்க.. என்ர காரிலயே போகலாம்..." என்றவன்,

"கார் ஓட்ட தெரியும் தானே?" என்றான்.

இவனை ஒரு மார்க்கமாகவே பார்த்தான்..
இவன் காரில் போகலாம் என்றதும், துஷாவை பின் சீட்டில் வசதியாக கிடத்தி விட்டு, முன் சீட்டில் தாம் அமர்ந்து கொள்லலாம் என வர்மன் நினைத்திருக்க.

தன்னை டிரைவர் ஆக்கி விட்டு, இவன் துஷாவுடன் அமர்ந்து விடுவானோ என்று முந்திக்கொண்டான் ரதன்.


தன் பார்வையின் பொருள் விளங்கி ரதன் பார்ப்பதற்குள், அதை சரி செய்தவன்,
"தெரியும் சார்" என்க.

காரை நோக்கி துஷாவை தூக்கிக்கொண்டு நடந்தவன் பின்னால் வந்த வர்மனுக்கோ, எல்லா விதத்திலும் புதிதாக தெரிந்தான் ரதன்.

காலையில் அவளை காணவில்லை என கத்தியதிலிருந்து, இப்போது அவளுக்காக சண்டை போட்டது, அவளை தன்னிடம் இருந்து விலக்கி, தானே அவளை தூக்கி கொண்டு, கார் இருக்குமிடம் செல்வது என்று நினைத்தவனுக்கு,

இவனிடத்தில் வேலைக்கு சேர்ந்து, இதுவரை எந்த பெண்ணிடமும் காட்டாத உரிமை துஷாவிடம் காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்தியது.



எப்படி பார்த்தாலும் ஒன்றும் ஒன்றும் இரண்டென்றே விடையே கிடைக்க. அவர்களின் தனிப்பட்ட விடயத்தில் மூக்கை நுழைப்பது தவறென்று விட்டுவிட்டான்.


சாதாரணமாக வர்மன் எதையும் இலகுவில் கணிக்க மாட்டான். அப்படி கணித்தால் அதில் பிழை நேர்ந்திராது.

அதே போல் பல மடங்கு பண்பானவன். நம்பிக்கையானவனும் கூட.
அனாவசியமின்றி தன்னை எந்த விடயத்திற்குள்ளும், புகுத்தி கொள்ள மாட்டான்.


இவர்கள் விஷயமும் அப்படித்தான். கண்டும் காணதவன் போல விட்டு விட்டான்.

பாவம் அவனுக்கு தான் தெரிய வாய்ப்பில்லை. தன்னையே போட்டியாக துஷா விஷயத்தில் நினைத்து, இங்கு ரதன் அவனுக்கே தெரியாமல் அவனை அர்ச்சிப்பான் என்று.


காரில் அவளை ஒரு ஓரமாக இருத்தியவன், அருகில் தான் அமர்ந்து கொண்டு, அவள் தலையை தனது தோழ்களில் சரித்து, வர்மன் ஏறியதும், வண்டியை எடுக்க சொன்னான்.


அவள் அருகில் அவள் மேல் இருந்த கோபம் கொஞ்சம் குறைவது போல் அவனால் உணர முடிந்தது.


வரும் வழிகள் பூரகவும், அவள் தலையை வரிடிக்கொடுத்தே வந்தான்.

அவள் தங்கி இருக்கும் வீடு வரவும், காரை நிறுத்திய வர்மன், ரதனிடம்

'நானே துஷாவை உள்ள தூக்கி போறன்.. அது லேடீஸ் ஹோஸ்டல்.. இங்க அடிக்கடி நான் வந்து போறதால, யாரும் தப்பாக எடுக்க மாட்டினம்..

நீங்கள் புது ஆள்.. இவளை நீங்க தூக்கிக் கொண்டு வந்தா, பிழையான பேச்சு வரும்." என கூறியவன்,
அவள் கதவைத் திறந்து, கையில் ஏந்திக் கொண்டான்.

ரதனுக்கோ சென்ற கோபம் திரும்ப வந்து ஒட்டிக்கொண்டது.


'இவன் போகலாம்... நான் போக கூடாதா?'.

துஷா வருவாள் என்று வாசலில் காத்திருந்தவள், வர்மன் கையில் துவண்டு போயிருந்தவளை கண்டதும் பதறியவாய், அவனுக்கு வழி விட்டு நின்றாள்.


அவளை கட்டிலில் வளர்த்தியவன், நடந்ததை கூறவும் முதலில் வர்மனின் மேல் கோபம் கொண்டாள்.

'எல்லாம் உங்களால தான்... எதுக்கு இரவு எட்டு மணி வரைக்கும் வேலை குடுத்தீங்க"

இது கடையின்ர ரூல்.... என்னால அத மீறேலாது... இவளால போஸ் எனக்கு திட்டிட்டார்" என்று காலையில் நடந்ததை கூறினான்.

தோழியில் தவறை வைத்துக்கொண்டு, வர்மனை திட்டுவது தவறென்று உணர்ந்தவள்,

"சாரி வர்மன்" என்று விட்டு துஷாவிடம் திரும்பியவள், அவள் மயக்கத்திலே இருக்க.

"எவ்வளவு நேரமா இப்பிடி இருக்கிறாள்." என்றாள்.


"பதினைஞ்சு இருபது நிமிசம் வரும்" என்றான் அவன்.

"எனக்கென்னமோ பயமா இருக்கு.. எதுக்கும் டாெக்டரிட்ட கூட்டிட்டு போகலாமா?"

"ஒன்டும் வேண்டாம் தண்ணீர் எடுத்து வா" என்றவன், அவள் எடுத்து வந்துகொடுக்கவும், அவள் முகத்தில தெளிக்க, சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தாள்.

எழுந்தவளுக்கு இருக்கும் இடம் புரிபட, சைலுவை கட்டி கொண்டவள், அழுகையோ நின்ற பாடில்லை.

விடாமல் அழுதவடை தடவி கொடுத்தவள்,

"என்னடி..! நீ என் துஷா தானா? எங்கட ஊர் ஜான்சி ராணி, இப்பிடி அழுற... என்னாச்சு உனக்கு?" அவளை எழுப்பி தேர்தியவள், அவளை தூங்க வைத்து விட்டு வர்மனையும் அனுப்பினாள்..

வர்மனை தனது கடைமுன் இறக்கியவன், போவீங்க தானே வர்மன்? என்றான்.

அவன் குரலிரும் முகத்திலும் தெரிந்து குழப்பத்தை உணர்ந்த வர்மனும், ம்ம் என்று விட்டு தனது பைக் நோக்கி சென்றான்.

நேராக வீடு வந்தவன், தாய் சோபாவில் இருப்பதை கவனிக்கவில்லை, டென்ஷனில் தொபார் என்று சோபாவில் விழுந்தான்.

அவன் மனம் மட்டும் ஒரு நிலையில் இல்லை. எதையோ பெரிதாக இழந்ததை போல் உணர்வு.

துஷாவை தூக்கி செல்லும் போது, வர்மன் சொன்ன வார்தை மட்டுமே அவன் காதில் ஒலித்தது.

'இவன் மட்டும் ஆண் இல்லையா?
நான் போனா மட்டும் தான் அங்க இருக்கிறவங்க தப்பா நினைப்பாங்களா...?

அடிக்கடி போறதால தப்பாக நினைக்க மாட்டினம் என்டானே!
அப்படி என்டா... இவன் அங்க நெடுவ போறானா...?' வாய்விட்டே புலம்பியவன்

"ச்சை.." என்று அதங்கமாய் சோபாவில் ஓங்கி குத்தினான்.

எதை பற்றி இப்படி புலம்புகிறான் என்று புரியாத வசந்தா, அவன் அருகில் சென்று அமர்ந்து,

"என்னாச்சுப்பா...?" என்றது தான்
தனது தவறை உணர்ந்தவனாய்,

"அது.. கடையில சின்ன பிரச்சினையம்மா.

நீங்கள் சாப்பிட்டிங்களா?" என்றான் கதையை மாத்துவதாய்.

"நான் சாப்டேன்ப்பா.. குளிச்சிட்டு வா சாப்பிடலாம்." என்க.

"எனக்கு வேண்டாம்.." என கூறிவிட்டு, மேலே வசந்தாவை பேச விடாது படிகளில் ஏறி தனதறைக்கு சென்று விட்டான்.

கொஞ்ச நாளாக வசந்தாவும் மகனை கவனித்து கொண்டு தான் இருக்கிறார்.
அவன் செய்கைகள் அனைத்திலுமே நிறைய வேறு பாடுகள்.


எவ்வளவு தான் வேலையில் பிரச்சினை என்றாலும், வீட்டில் சாதரணமாக இருப்பவனை தான் இத்தனை நாள் கண்டிருக்கிறார். தன்னிடமே மறைக்கும் அளவிற்கு இருக்குமென்று அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை.


இதற்கு நாளையே முடிவு கட்ட வேண்டும், இப்படி தினமும் சாப்பிடாமல் இருந்தால், பெற்றவளால் தான் பார்த்து கொண்டு இருக்க முடியுமா?

எப்படியும் ரவிக்கு தெரிந்திருக்கும்... அவன் வேறு கடை வைத்துள்ளான் என்றாலும், இருவருக்குமான நட்பால் இவன் அவனிடம் சொல்லி இருப்பான்.
விடிந்ததும் அதை கேட்டறிய வேண்டும் என நினைத்தவர், தானும் உறங்க சென்றார்.

இங்கு துஷாவோ சைலுவை சிறிதும் தூங்க விடவில்லை.
நேற்றைய மன உளைச்சலாலும் இன்று நடந்த அதிர்சியினாலும் அவள் உடல் காச்சல் கண்டிருக்க,

இரவு முழுவதும் அப்பா அம்மா என்று பலம்புவதும், திடீரென விழித்து அழுவதென சைலுவை படுத்தி எடுத்து விட்டாள்.

சைலுவை விட துஷாவே தைரியமானவள், எதற்கும் சாதரணமாக பயப்பட மாட்டாள்.

பிரச்சினை ஒன்று வந்துவிட்டால், அதில் முதல் தலையே துஷாவுடையதாகவே இருக்கும்.

அப்படி பட்டவள் இன்று இப்படி துவண்டு கிடக்கவே, பள்ளி படிக்கும் போது நடந்த சம்பவம் நினைவில் வந்தது.

அன்று பாடசாலையில் நவராத்திரி கலைவிழா. எல்லா மாணவர்களும் கலாசார உடையில் பாடசாலையே திருவிழா கோலம் பூண்டிருந்தது.


ஆண்கள் வேட்டி சட்டையிலும், பதினைந்து வயதுக்கு உற்பட்ட மாணவிகள் முழு பட்டு பாவாடை சட்டையும், அதற்கு மேற்பட்டவர்கள், பட்டு பாவடை தவணியிலும், உயர்தரத்தில் படிக்கும் பெண்கள் பட்டு சாறியிலும் சிட்டு குருவிகள் போல் அங்குமிங்கும் பறந்து திரிந்தனர்.

சாதாரணமாக உடையில் பார்கும் பே்தே துஷா அழகி. இன்று பாவாடை தாவணியில் சொல்லவா வேண்டும்.?

சிறிதான ஒப்பனைகளிலே தேவலோக மங்கைகளையே தோற்கடிக்கும் அளகியாய் இருந்தாள்.

கற்றல் செயற்பாடுகள் இல்லததனால், கலை நிகழ்வுகள் முடிந்தவுடன், வீடு செல்ல அனுமதிக்க பட்டனர் அனைவரும்.

இவர்கள் வீடு கொஞ்சம் தொலைவு என்பதால், தோழிகள் இருவருடன் இன்னும் இரண்டு பெண்கள் நடந்தே வந்து கொண்டிருந்தனர்.

அவர்களும் நீண்ட நேரமாக கவனித்து கொண்டு தான் வந்தர்கள்.

இரு இருபத்தி ஐந்த மதிக்கதக்க ஆண்கள் மோட்டார் சைக்கிளில், ஐந்தாறு தடவைகள் போவதும் வருவதுமாக இவர்களை சீண்டிக்கொண்டே இருக்க.

மற்ற பெண்கள் பயப்படவும்,
"எதுக்குடி பயப்பிடுறீங்கள்...? யாராவது அவங்கள ரூட் விடுறீங்களா?" என்றாள். மூவரும் ஒரே சேர,

"நானில்லப்பா.." என்றிட.

"அப்ப பயப்பிடவே தேவையில்ல. அடுத்த தடவை வரட்டும்.... துஷா யாரென்டு காட்டுறன்....." என்று ஒரு நிமிடம் ஆகவில்லை,
மீண்டும் வந்தார்கள், அவர்கள் அருகே பைக்கை ஸ்லோவாக ஒட்டி, இவர்களை உரசுவது போல வரவும் சுதாரித்த துஷா.

ஓட்டி வந்தவனின் சட்டையை கொத்தாக பிடித்திட அதிர்ந்தவன், பிறேக்கை போட்டான்.

பிடித்த சட்டையை விடாமல்,

"என்னடா உனக்கு வேணும்? எங்கள பாக்க உனக்கு மதில் சுவர் மாதிரி தெரியுதாே? உரசிட்டே போற எரும மாடே!

உனக்கு அரிப்பு எடுத்து, கட்டாயம் உரசோணும் என்டா... உன்ர வீட்டிலயும் பொம்பிளயள் இருப்பாளுங்க... அவயள போய் உரசு... இந்த பக்கம் இனி வந்தா, இனி எந்த கதைக்கும் இடமில்ல.." என அவனை வறுத்தெடுத்து கொண்டிருக்க, பெரும் கூட்டமே திரண்டு விட்டது.

அதை பார்த்து பயந்த இருவருமே,

"டேய்...! இத பாக்க தான்டா பொண்ணு மாதிரி இருக்கு.....
சரயான பயாரி.... கூட்டத்த கூட்டி, அடிவாங்கி தரபோறாடா... வாட ஓடிடுவம்." என்று பின்னால் இருந்தவன் சொல்ல.


அவள் கையை தனது சட்டையில் இருந்து புடுங்கி விட்டவன், மோட்டசைக்கிளை முறுக்கி ஓடியே விட்டான்..

அன்றைய நாள் நினைவில் இப்போதுமே அவள் கண்முன் நிற்க,

'அப்படியானவளா..? இப்படி நடுங்குகிறாள்?
இவளுக்கு ஏதோ நடந்திருக்கோணும்.. இல்லாட்டி இப்பிடி இவள் துவண்டு போக வாய்ப்பே இல்ல..
இவளா எதுவும் சொல்ல மாட்டாள்.

விடியட்டும்... அம்மாக்கு தெரியாதது இருக்காது.
உலகத்தின்ர புதினமே அம்மா சேனலை தாண்டி தானே, மீதி சேனலுக்கு போகும்.'

ஆம் அவளுடைய அன்னைக்கு ஒரு செய்தி கிடைத்தால் போதும்.

அதை சந்து பொந்து என்று எல்லா இடமும் கொண்டு சேர்த்து விடக்கூடிய திறமை உடையவள். அதனால் தான் நாளைய வரவை எதிர்பார்த்து உறங்கிப்போனாள்.



விடியும் தருவாயில் தூங்கியதால் ஆறு முப்பது ஆயிற்று அவள் எழுந்து கொள்ள.
எழுந்தவள் துஷாவைத்தான் முதலில் ஆராய்ந்தாள்.

அவள் இன்னும் உறங்கிய படி தான் இருந்தாள்.

நேற்று படுத்திய பாட்டை நினைத்தவள், தாயிடம் அழைத்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது நினைவு வர, துஷாவின் காச்சல் குறைந்து விட்டதா? என அவளை தொட்டு பார்த்தாள்.

காச்சல் சாதுவாக குறைந்து தான் இருந்தது.

'சரி இன்டைக்ஙு ஓய்வெடுக்கட்டும்... வர்மனிட்ட போன் போட்டு, சொல்லி விடுவம்.' என நினைத்தவள்.

வேக வேகமாக காலை கடன்களை முடித்து, கல்லுரிக்கு தயாராகி நேரத்தை ஆராய, அது அவள் கல்லுாரி செல்ல இன்னும் அரைமணி நேரம் இருப்பதாகக் காட்டியது.

போனை எடுத்து கொண்டு தோட்டப்பக்கம் சென்றாள்.

இரண்டு ரிங்கிலேயே எடுத்து விட்டாள் சைலுவின் அன்னை.

"என்ன காலங்காத்தா போன் எல்லாம் எடுக்கிற" என்று ஆரம்பித்தாலும்,

காலேஜ் ரெடியாகிட்டியா...? என்றார் அக்கறையாய். பின் ஒரு சில பேச்சு வார்த்தை நீண்டு நிறைவுறவே,

சைலு தன் கேள்வியை ஆரம்பித்தாள்.

'அம்மா துஷாவ பற்றி கொஞ்சம் விசாரிக்கோணும்." என்றாள் நேரடியாக.

"யாரு உன்ட சினேகிதி? அந்த சாந்தியோட பொண்ணு தானே" என்றவள்,

"அவள் தான் இரவோட இரவா ஊரை விட்டு ஓடி விட்டாளே" என்றார்.

"என்னம்மா சொல்லுறிங்கள்?" என்று சைலு அதிர்சியாக.

"ஓம்டி... அந்த பொண்ணோட கதைய ஏன் கேக்கிற...." என தொடங்கி அவளுடைய கடந்த காலத்தை சொல்லலானார்.

அவள் வாழ்கையில் ஆறு மாத காலங்களுக்குள் விதி ஆடிய தாண்டவத்தை அன்னை வாய்வழியே கேட்டு கொண்டிருந்த சைலுவின் நெஞ்சமோ, தனது உயிர் தோழிக்கு இவ்வளவு பெரிய அனர்த்தமா? இருக்காது... வேறு யாராே ஒருவர் கதையை தான், தன் அன்னை கூறுகிறார் என நினைத்து,

"அம்மா........" என்றாள் வார்த்தைகள் வர சிரமப்பட்ட தொண்டையை செருமி.



"என்னடி சொல்லு..."

"அம்மா நீங்கள் என்னோட படிச்ச துஷாவை பற்றி தானே சொல்லுறிங்க.? என்றாள் நம்பாதவளாக.

எங்கு தாய் வேறு துஷா என்ற பெயர் உள்ள பெண்ணை பற்றி, கூறியதாக கூறிவிட மாட்டார என நப்பாசை அளுக்கு.

"என்னடி சொல்லுற...? எனக்கு வேற யாரை தெரியும்.?
எல்லாம் உன்னோட படிச்சாளே அவளை பற்றித்தான் சொல்கிறேன்." என்றவர் கூடுதலான தகவலாக, துஷாவே அறியாத தகவலையும் சேர்த்து கூறினார்.

அதாவது அவளது தந்தையின் நண்பனும், அவரது தொழில் பங்குதாரருமான மூர்த்தியால் அவள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினார்.

ஏற்கனவே தாய் சொன்ன செய்தியில் அதிர்ந்திருந்தவளுக்கு இது இன்னும் அதிர்சியை தந்தது.


"எதுக்கும்மா அந்த மூர்த்தி அங்கிள், துஷாவை கொள்ள நினைக்கோணும்?
உங்களுக்கு இந்த தகவலை யார் சொன்னது?

ஏதோ அவன் தொழில் பங்கு தாரறாமே சுதாகர்.
இப்ப தான் அவளின்ர அம்மா அப்பா இல்லையே!

அதனால தன்ர பொறுக்கி மகனை, துஷாவுக்கு கட்டி கொடுக்க ஏதோ சதி செய்திருக்கான் போல...

அப்பிடி கட்டி கொடுத்திட்டா... அந்த பங்கு வெளியால போகாம இருக்கும் என்டு, அந்த மூர்த்தி பிளான் போட்டிருக்கிறான்..
இத அந்த வீட்டில வேலை செய்த அன்னம்மா பாட்டி கேட்டுட்டா...

அதால தான் அவளை, நீ என்க என்டாலும் போ என்டு, இரவோடு இரவா பஸ் ஏத்தி அனுப்பியிருக்கு.

அதை தெரிஞ்ச அந்த நாசமா போன மூர்த்தி, எங்க அவள் பங்கு கேட்டு திரும்ப வந்திடுவாளோ என்டு~ ஆள் வைச்சு ஊர் முழுக்க தேடினான்.

அவதான் ஊரிலையே இல்லையே.
ஒன்டு தன்ர பாெடியன் அவளை கட்டோணும்.. இல்ல என்டா அவள் சாகோணும் என்டிருக்கிறானாம்.
எனக்கும் இது தெரியாது.. ஆரோ கதைக்கேக்க காதில விழுந்திது." என்றாள்.

"பாவம்..... எங்க போய்... என்ன பாடு படுதோ?" என்று பெரும் மூச்சை விட்டவள்.
"ஏன் சைலு இப்ப அவளை பற்றி கேக்கிற?" என்றார் அவளது திடீரென்ற தோழியின் பேச்சினால்.

துஷா அவளோடு தான் இருக்கின்றாள் என்பது அன்னைக்கு தெரிந்தால், ஊர் பூராகவும் பரப்பி, துஷாவின் உயிருக்கு தன்னால் ஆபத்து வந்து விடுமோ என நினைத்தவள்.

"அது அம்மா......... துஷாவை பற்றி இரவு கனவு கண்டன். மூன்டு வருஷமாச்சே அவளை கண்டு... அது தான் கேட்டன் அவளோட கதைச்சு பாப்பம் என்டு.

அவள் இவ்ளோ பெரிய பிரச்சினையில இருக்கிறது எனக்கு தெரியாதே! நீங்களும் ஏன் சொல்லேல...?"

"எங்கடி அதெல்லாம் உன்னோட கதைக்கேக்க நினைவு வருது.
நீயும் அவசரத்தில கதைச்சுட்டு வைச்சிடுற.. இதில அவளை பற்றி எப்படி சொல்லுறது...?"


அவர் சொல்வதும் சரி தான்.

அவளுக்கே அவள் தோழியை பற்றி விசாரிக்க தோன்றாத போது, அவள் அன்னைக்கு மட்டும் எப்படி அது நினைவு வரும்.

"சரிம்மா.... காலேஜ்க்கு நேரம் போகுது.. பிறகு பேசுறன்" என தொடர்பை துண்டித்தவள்.


'இப்படி ஒரு இக்கட்டில இவள் இருக்கேங்க, எப்படி இவளை தனியா விடுறது.?

நேற்று நடந்த சம்பவத்துக்கும் மூர்த்திக்கும் தொடர்பு இருக்குமோ?

பேசாம துஷாட்டயே சொல்லுவோமா...? மூர்தியால உனக்கு ஆபத்தென்டு' என நினைத்தவள்

"வேண்டாம் வேண்டாம்......
ஏற்கனவே மனசால சோர்ந்திட்டா... இதையும் சொல்லப் போய், உடலாலையும் சோர்ந்து போயிடுவா...

இங்க யாரையோ தேடி வந்ததா தானே இவள் சொல்லுறாள். ஆனா அம்மா அந்த மூர்த்திக்கு பயந்து, அன்னம்மா பஸ் ஏத்து எங்கயாவது போ என்டு சொன்னதாக சொல்லுறாங்களே..!

அம்மாட தகவல் பொய்யாக இருக்காது.
ஆனா துஷாவும் பொய் சொல்லுறத போல தெரியேலயே...!

சரி எதுக்கு இந்த ஆராச்சி...?
துஷான்ர பாதுகாப்பு தான் முக்கியம். போனை எடுத்து மைனாவின் அன்னைக்கு அழைத்தவள்,

ஆன்ட்டி நான் சைலு... மைனாவ இன்டைக்கு ஒரு நாள் எங்களோட இருக்க விடுறீங்களா?" என்றாள்.

அவர் என்ன சொன்னாரோ.
"தாங்க்ஸ் ஆன்ட்டி" 0 என்றவள் உடனே அவளை அவனுப்ப சொன்னாள்.

ஐந்து நிமிடங்களில் மைனா வந்து விட.....


"மைனா... துஷாவுக்கு காச்சல் பத்திரமா பாத்துக்கோ.. காச்சல் கூடினா எனக்கு போன் பண்ணு, நான் வர்மனிட்ட சொல்லி இவளை டாெக்டர்ட கூட்டிட்டு போக சொல்லுறன்.

முக்கியமா யாராச்சும் தெரியாதவ வந்தா.. யாரும் இங்க இல்ல எனனடு சொல்லி அனுப்பிச்சிடு.

எனக்கு முக்கியமா ஒரு பரீட்ச்சை இருக்கிறதால தான் நின்டு இவளை பாக்க முடியேல.. நேரமாகுது....

சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும்.... சரியா யாராச்சும் வந்தா விட்டுடாத?" மீண்டும் மீண்டும் எச்சரித்து விட்டுச் சென்றாள்.