நேரம் போக போக அனைத்து ஊழியர்களும் தங்கள் பதிவேட்டில், கையெப்பம் இடுவதை தனது அறை கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டிருந்தவன்,
"இவள இன்னும் காணேல.. மயக்கம் தெளியலையோ?
ஏதும் பிரச்சினையோ...! கார்ல இருந்து வீடு போற வரைக்குமே மயக்கமா இருந்தாளே!
இவள்ர நம்பர் வேறை இல்லையே!
வர்மனிட்ட கேட்பமா?' என நினைத்தவன், வர்மனுக்கு போன் செய்து தனது அறை வரச்சொன்னான்.
வர்மன் எதிர் பார்த்தது தான். வர சொல்கிறான் என்றால், ஏதோ கேட்கத்தான் போகிறான் என்று.
"என்ன வர்மன்... இன்னும் துஷா வரேலயே!"
"ஆமா சார்... அவள் இன்டைக்கே லீவு சொல்லி இருக்கா"
"என்னது லீவா....! ஏன் என்னாச்சு? இன்னும் மயக்கம் தெளியேலயோ.?" என்றான்.
"அப்பிடில்லாம் இல்லை சார்! நேற்றே தண்ணீர் தெளிச்சு எழுப்பீட்டு தான் வந்தன்" என்றவனை புரிவம் சுருங்க பார்த்தான்.
இந்த தகவல் அவனுக்க சொல்லப்படவில்லை.
'பிறகு எதுக்கு இன்டைக்கு லீவு?"
"அது நேற்று சரியா பயந்திட்டாள் போல... காச்சல் வந்துட்டுதாம்.. இரவு முழுக்க தூங்காம புலம்பிக் கொண்டே இருந்தாளாம். இப்ப தான் அவளின்ட ஃப்ரெண்ட் போன் பண்ணி சொன்னா.." என்றிட,
ஏதோ யோசனையில் இருந்தவனுக்கு என்ன தோன்றிற்றோ..,
துஷாவோட சுய விபரத்தில நம்பர் தர மறந்திட்டா போல.. உங்களிட்ட அவளோட நம்பர் இருக்கா...? அதை தரமுடியுமா?" என்றான்.
இதையும் அவன் எதிர் பார்த்தான் தான்.
"சாரி சார்! அவள் போன் யூஸ் பண்றேல.. அதால தான் நேற்று அவங்க தோழி என்னட்ட அவங்களை பாக்க சொன்னாங்க.." என்றதும்,
"ஓகே காச்சலுக்கு டாெக்டரிட்ட காட்டினாளாமா..?"
"இல்லை.... அவள்ர தோழி படிக்கிறாள், இன்டைக்கு ஏதோ பரீட்சை என்டு போயிட்டா.... வந்து தான் கூட்டிக் கொண்டு போகோணுமாம்" என்றான்....
"அப்படியா..?" என்றவன் "சரி நீங்கள் போங்ககோ.." என்றவன், அவன் சென்றதும்.
"இப்ப எப்படி அவளின்ர நிலமைய தெரிஞ்சு கொள்ளுறது...? கையில போனும் இல்லை... கூடவும் யாரும் இல்லை. திடீர் என்டு ஏதும் நடந்தா என்ன பண்ணுவா?' அந்த அறை முழுவதும் நடந்தவன், பதினொரு மணியளவில் அவள் வீடு நோக்கி காரை விட்டான்.
அவன் நல்ல நேரமோ இல்லை ..துஷாவின் கெட்ட நேரமோ எதுவோ ஒன்று.
மைனாவுக்கு அந்த நேரம் பார்த்து போன் வர, அதை எடுத்து கொண்டு, தோட்டப்பக்கம் கதைவை பூட்டாமல் சென்று விட்டாள்.
வாசலிலேயே காரை நிறுத்தியவன், அவனது அக்மார்க் நடையான வேக நடையுடன், புயல் வேகத்தில் உள்ளே சென்றவனை மைனாவால் காண முடியவில்லை..
உள்ளே சென்றவனுக்கு எல்லா திசைகளிலும் கதவாய் இருக்கவே, முன்னால் இருந்த அறைக்கதவினை மட்டும் மெதுவாக திறந்தான்.
முகத்தினை வாசல் புறம் திரும்பி படுத்தவாறு தூங்கியது அவனுக்கு வசதியாகிப்போனது.
அனுமதி வேண்டாமலே உள்ளே சென்றவன், அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தான்.
ஏற்கனவே எழுந்து விட்டாள் துஷா. தலை பாரமாக இரக்கவே, கண்களை திறவாமல் படுத்திருந்தவள்,
"எனக்கு ஒன்டுமில்ல மைனா.. நீ போன் கதைகக்க போற என்டியே கதைச்சிட்டியா?" என்றாள் மைனா தான் தன்னை ஆராயிறாள் என நினைத்து..
"என்ன சாப்பிட்டனி...?" அக்கறையாகத்தான் வந்தது வார்த்தைகள். ஆனால் ஆண் குரலில்.
அவசரமாய் கண்களை திறந்து கொண்டவள், முன்னே நின்றவனை கண்டதும் அதிர்ந்தவளாய்.
"நீ.....ங்கள் எப்ப வந்தனீங்கள்....?" என்றாள் எழ முயற்சி செய்தவாறு.
அவளை எழவிடாமல் தோள்களை பற்றித் தடுத்தவன்,
"இப்ப எப்பிடி இருக்கு?"
"ப.. பறவாயில்ல... சாதாரண காச்சல் தான்... நாளைக்கு வேலைக்கு வர ஏலுமா இருக்கும்." என்றாள் தடுமாறியடி.
மீண்டும் நெற்றியை தொட்டு பார்த்வன் கை பட்டதும், ஒரு மாதிரி நெளிந்தவளை கண்டு காெள்ளாதவனோ,.
"காச்சல் இப்பிடி அடிக்குது. சாதாரண காச்சல் என்டுற... வா டாெக்டரிட்ட" என்றான்.
"இல்லை வேண்டாம்..... எனக்கொன்டும் இல்ல.. அது தானாவே சரியாகிடும்" மறுக்க.
"விளையாடுறியா துஷி? மரியதையா வா போகலாம்." என்றான் அவள் மறுத்ததும் கோபம் உண்டானவனாய்.
"ப்ளீஸ் சார்.. இன்டைக்காவது தொல்லை பண்ணாதங்கோ.. என்னால உண்மையா எழும்ப கூட முடியேல.." என்றவள் கெஞ்சலில் அவளை முறைத்து விட்டே வெளியேறினான் அவன்.
உண்மையில் அவனுக்கு கோவம் தான்.. தன்னால் முடியவில்லை என்பதைக் சாெல்லக்கூட தன்னிடம் கெஞ்ச வேண்டுமா என்று.
'சாதாரணமாவே என்னால முடியேல என்டா, எல்லா டொக்டரையும் இங்க கொண்டு வந்திருப்பனே! அதுக்கு ஏன் பெரிய வார்த்தை பாவிக்கோணும்.?
ஏதோ நான் வில்லன் மாதிரி, இன்டைக்காவது விடு என்டா என்ன அர்த்தம்..?
கடை ஒன்றிற்கு சென்றவன், சில பொருட்ளை வாங்கி கொண்டு, போனில் வைத்தியரை அழைத்து தகவல் சொல்லி வைத்தவன்,
வீடு செல்லவும், வைத்தியர் வரவும், சரியாக இருந்தது.
உள்ளே சென்ற டாக்டரை, தோட்டத்தில் நின்று செடிகளை பிய்த்துப்போட்டுக் கொண்டிருந்த மைனா கண்டு.
"நீங்கள்....?" என்ற கேள்வியோடு நிறுத்த,
"இங்க துஷாந்தினி யாரு..? அவங்களுக்கு பீவர் என்டு சொல்லீச்சினம்... அதான் பாக்க வந்திருக்கிறன்." என்றார்.
வரமன் தான் அனுப்பி இருக்கிறான் என நினைத்தவள்,
"உள்ள தான்... வாங்கோ..." என அழைத்து செல்ல, அவர்கள் பின்னே உள்ளே நுழைந்தான் ரதன்.
அவளை பரிசோதித்து, சில மாத்திரைகளை கொடுத்தவர்,
"இதுக்கும் பீவர் குறையேல என்டா, பிளட் தான் சோதிக்கோணும்." என்று திரும்பியவரையே பார்த்திருந்தவள், அப்போது தான் பின்னால் நின்ற ரதனைனை கண்டாள்.
அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பியவன்,
கையில் இருந்த பையை துஷாவிடம் கொடுத்து,
"இனி இதை பாவி!" என்றான்.
அது என்ன என்று பிரித்துப் பார்த்தாள்.
புதிதாக மார்கெட்டுக்கு வந்த சாம்சாங்க் மொபைல் தான் அது.
"எனக்கு இது வேண்டாம்." என்றாள் எடுத்த எடுப்பில்.
"உனக்காக ஒன்டும் நான் தாரேல.. என்னட்ட வேலை பாக்கிறவயிட்ட போன் கட்டாயம் இருக்கோணும்.
அதுவும் நீ சூப்பர் வைசர்.. உன்னட்டயே போன் இல்லாம இருந்தா, எனக்கு தான் மரியாதை இல்லை.
அதோட இப்பிடி அவசரமான நிலமேல உன்னால போன் போட்டு சொல்ல கூடிய மாதிரி இருக்காேணும்.
இது உனக்காக இல்ல...
என்ட தேவைக்காக தான் தாறன்.
நீ எப்போ புது போன் வாங்கிறியோ, அப்ப இதை என்னட்ட குடு!" என்றவன்.
"மருந்த மறக்காம போடு! நேரத்துக்கு சாப்பிடு.
ஏதாச்சும் என்டா, எனக்கு போன் பண்ணு.. சரியா..?" என்று உத்தரவு போட்டு விட்டு சென்றான்.
மைனவுக்கோ உண்மையில் கனவு தான் காண்கிறேனா என்றிருந்தது.
அன்று அந்த துள்ளியவனா இவன்? என்று.
காச்சலால் தொய்ந்து போய் படுத்திருந்தவள், அருகில் வந்தவள்,
"துஷா...." என்றாள்.
"சொல்லுடி என்ன..?"
"இது அந்த நெட்டாங்கு தானே?" என்றாள் இன்னமும் சந்தேகம் விலகாது.
"ம்ம்... அவனே தான். அதில என்ன சந்தேகம்?"
"இவ்ளோ கரிசனையா இருக்கே... அவன் தானோ என்டிருக்கு"
"கரிசனையா? இவனுக்கா? நீ வேற மைனா.
சண்டை போடுறத்துக்கு ஆள் கிடைச்சிருக்காது.. அது தான் வீடு வரைக்கு தேடி வந்திருக்கிறான்." என அவள் அலுத்துக்கொள்ள..
"அதுவும் சரி தான்... ஆனா இந்த போன்....?"
"எனக்கும் அது தான் இடிக்குது.. ஆனா அவன் வேலை என்டு வந்திட்டா... வெள்ளைக்காறன் மைனா.
நானும் சொல்லாம கொள்ளாம நின்டுட்டன்.
ஒரு வேளை என்ன வைச்சு ஏதாச்சும் வேலை செய்ய பிளான் போட்டிருப்பான்... அது கெட்டு போயிருக்குமோ? வருஷ கடைசி வேற மைனா.
நிறைய வேலைடி! அதை என்னட்ட தள்ளப் பாத்திருப்பான். அதுவும் காரணமா இருக்கலாம்.
நேரில தொல்லை பண்றது காணாது போல.
போன்லையும் வைச்சு செய்ய தான் இது.
சரிடி நான் கொஞ்சம் தூங்க போறேன். நீ சாப்பிட்டியா?"
"இல்லடி..! நீயும் சாப்பிட்டு மருந்து போட்டுக்கோ" எங்கவும்.
"இல்லடி வாய் கைக்குது... கொஞ்ச நேரத்தால சாப்பிட்டுகலாம்" என்று படுத்து விட்டாள்.
இங்கு காரில் பாட்டை கேட்டவாறு, காரில் உல்லாசமாக சென்று கொண்டிருந்த ரவியின் செல்போனிலிருந்து,
சண்டாளி அசத்திற அழகில........ என்று பாடலை கேட்டு, காரை சிலோவாக்கி போனை பார்த்தான்.
அது ரதன் அம்மா என்றிருக்க.
எடுத்து காதில் வைத்தவன்,
"சொல்லுங்கம்மா... எப்பிடி இருகிறீங்கள்...!
என்ன என்ர ஞாபகம் திடீர் என்டு.." என்றான்.
"என்ன செய்யிறது ரவி! உனக்கு தான் இந்த அம்மாவ நினைவே இருக்காது.
அதான் நான் கூப்பிட்டன்.." என்றார் சலித்தவாறு.
"அப்பிடி எல்லாம் இல்லம்மா....! கொஞ்சம் வேலை! அதான்...." என்றான் சங்கடமாய்.
ரவிக்கு அவர் மீது தனி மரியாதை உண்டு.. தன்னுடைய அன்னை அவரை அசிங்க படுத்திய போது, தனது கணவனது சுயமரியாதை இழந்து விடக்கூடாது என்பதற்காக, தனக்கென்று இருந்த, சிறிய சொத்தாகிய வீட்டையும், நகையை தூக்கி கொடுத்ததை கதையை தந்தை வழி அறிந்தான்.
அதுவும் இல்லாமல், கணவன் இறந்ததும், துக்கமே என்றாலும், கணவன் விட்டு சென்ற முழு பொறுப்புகளையும், மகனிடம் ஒப்படைக்கும் வரை, தனி ஒருவளாக நின்று, தன் கடமையை சிறப்பாக செய்தவர் ஆயிற்றே!
அவர் பெயரை கேட்டாளே ரவிக்கு தனி பிரியமும், மரியாதையும் ஒட்டிக்கொண்டு விடும்.
"சொல்லுங்கம்மா என்ன விசயம்?'
"பவாயில்லையே! அம்மா எடுத்தா, ஏதோ இருக்கென்டு விளங்குற அளவு வளந்துட்ட போல..." என்றார் கேலியாக.
"என்னை ஓட்டினது காணும்மா.. விஷயத்துக்கு வாங்காே.."
"என்னத்த கேக்க போறன் ரவி? இப்பல்லாம் உன் நண்பனோட நடத்தை சுத்தமா சரியில்லை.... எதையோ நினைச்சுக்காெண்டு, தனிய கதைக்கிறான். என்ன என்டு கேட்டா...
எதுவும் இல்லை... வேலையில பிரச்சினை என்டுறான்.
சரியா சாப்பிடுறானா என்டது கூட தெரியேல..
நான் கூப்பிட்டாலும் வெளியால சாப்பிட்டன் என்பான்... இல்லை என்டா வேண்டாம் என்டு சொல்லுனான்.
ஏன்பா.... நீ தான் அவனையே ஒட்டிக்கொண்டே திரியிறியே! உனக்கு தெரியாம இருக்காது.... அவனுக்கு என்னதான் பிரச்சினை?" என்றார்.
"அது.... அது அம்மா எனக்கு என்னம்மா தெரியும்? நான் இங்க அப்பாவோட இருக்கிறதால, அங்க என்ன நடக்குது என்டே தெரியேலம்மா...
வேணும் என்டா கேட்டு சொல்லவா?" என்றான் தடுமாற்றமாய்.
"டேய்...... டேய் ......! எனக்கு தெரியும்டா.. இப்ப எதுக்கு பதறுற......" அவன் திருட்டை கண்டு கொண்டவர்,
"ரவி...! நீ ஏதோ பெருசா அம்மாட்ட மறைக்கிற.
என் புள்ளையை இப்பிடி பாக்க முடியலடா!
எந்த பிரச்சினையா இருந்தாலும், வீடு வரைக்கும் கொண்டு வர மாட்டான்... இப்ப அவன் ஏதோ போல இருக்கிறத பாக்க, பெத்தவ மனசு பதறுது..
உனக்கு தெரியாம இருக்காது ரவி.... சொல்லுப்பா..
இதையே நினைச்சு எனக்கு ஏதாவது ஆகிட்டா... என் புள்ளை நல்லதை பாக்காம போயிடுவனோ என்டு பயமா இருக்கு." என்றவர் பேச்சில் இம்முறை பதறுவது ரவி முறையானது.
"என்ன கதை கதைக்கிறீங்களம்மா.... கொள்ளு பேரனையும் தூக்காம, ரதன் உங்கள விடுவான் என்டா நினைக்கிறீங்கள்.."
"அது சரி..! கல்யாணமே வேண்டாம் என்டுறான்... இதில கொள்ளு பேரனை எங்க பாக்குறது...?" சலிப்பாக விழுந்தது வார்த்தைகள்.
"அதெல்லாம் வேளைக்கு நடக்கப்போகுது பாருங்கோ..." என்றவன் பேச்சு புரியாதவரோ,
"என்ன சொல்லுற ரவி...?"
"ம்ம்...நீங்க இப்ப புலம்புறீங்களே...! அதுக்கு என்ன காரணம் தெரியுமா?
நானே சொல்லுறன்.. ஆனா நீங்க அவனை கேட்க கூடாது.
நீங்க கவலை படுறதால தான் இதயே சொல்லுறன்.
ரவிக்கு ஒரு பொண்ணில காதல் வந்திட்டுது.
அதால தான் மந்திரிச்சு விட்டாமாதிரி திரியுறான்.
இப்ப கூட அவன பாக்கத்தான் போனான்... பயபுள்ளைய காணேல...
விசாரிச்சுப் பாத்ததுக்கு பிறகு தான் தெரிஞ்சிதே, அந்த பொண்ணுக்கு காய்ச்சலாம்..
அனேகமா அய்யா அங்க தான் போயிருக்கோணும்...." என்றான்.
"என்ன ரவி சொல்லுற..? என்ர புள்ள காதல்ல விழுந்தானா...?" அவராலும் நம்பமுடியவில்லை. அதனால் உண்டான ஆச்சரியம்.
"உங்கட புள்ளையே தான்....... இந்த பூனையும் பால் குடிக்குமா என்டு இருந்திட்டு, அது பெரிய சைஸ் பீரே அடிக்குது...." என்றான் சிரித்தவாறு.
"பொண்ணு யாரு ரவி...? என்ர புள்ளையையே இப்பிடி அலைய விட்டிருக்கிறவள, நான் பாத்தே ஆகோணும்." மருமகளாக வரப்போபவளை காணும் ஆவல் அவருக்குள்.
"அவளை பாத்து, என்னை உலகத்த பாக்க விடாம பண்ணுற எண்ணமாம்மா...?"
"டேய்...! சும்மா கதைச்சு நேரத்த வீணடிக்காம, என்னை அவளின்ர வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போறியா? இல்லையா?" என்றார் அதட்டலாய்.
"ஆ..... ஊ..... என்டா அம்மாவும், புள்ளையுமன என்னையே வெருட்டுங்க.
எனக்கும் அந்த பெண்ணோட வீடு தெரியுமா என்ன...?
ஏதோ உங்கட புள்ளய பாக்க வரேக்க, அவளை காட்டி, இது தான் என்ர ஆள் என்டான். வேற எதுவும் அவளை பற்றி தெரியாது."
"ஓ..... சரி சொல்லு என் மருகள் எங்க வேலை பாக்கிறாள்..?" என்றார்.
"கிழிஞ்சிது.... ...போ.....
உங்கட டவுன் கடையில தான்....."
"ஓ...... அங்க தானா? இப்பவே மருமகளை பாக்கோணும் போல இருக்குடா ரவி." என்றார் ஆசையாக.
"மருமகள் வேறையா? உங்கட புள்ள செய்து வைச்சிருக்கிற வேலைக்கு, அந்த அங்கிகாரம் உங்களுக்கு கிடைக்காேணுமேம்மா!"
"ஏன்டா...! அவன் என்ன செய்தான்.....? அவசரபட்டு லவ்வ சொல்லி, அவ வேலையும் வேண்டாம் ஒன்டும் வேண்டாம் என்டு போயிட்டாளாே?" முகத்தில் கலவரம் ஒட்டிக் கொண்டது.
"நல்ல குடும்பம்............." சலித்தான்.
"டேய்...டேய் ........" எங்கட குடும்பம் நல்லம் தான்.. பிறகு உன்ர கதைக்கு விளக்கம் தாறன்.. இப்ப சொல்லு என்னாச்சு என்டு."
"அதை ஏன் கேக்கிறீங்கள்...?" என்று, முதல் நாள் நடந்த நிபர்ந்தனை பத்திரத்திலிருந்து, நேற்றைக்கு முந்தைய நாள் வரை நடந்தவற்றை கூற,
"என்னடா...! ஆரம்பிக்கவே இல்லை... அதுக்குள்ளயே முடிச்சு வைச்சிட்டான். அப்ப என்ர மருமகளை இப்போதைக்கு பாக்க முடியாதாே?" என்றார் கவலையாக.
"எனக்கும் அதே சந்தேகம் தான்.
முதல்ல அவள் உங்கட மருமகளா வர சம்மதிக்கோணுமே!
அம்மா.... நல்ல ஒருக்கா யோசிச்சு பாருங்ககோ...
நீங்கள் ரதனை பெத்திருக்கேக்க, வேற யாரவது குழந்தை பெத்திருந்தீச்சினமா..?" என்றவனது வித்தியாசமான கேள்வியின் தொணியிலே,
"ஏன்டா அப்பிடி கேக்கிற?"
"இல்ல..... அப்பாட்டையோ, இல்ல உங்களிட்டயோ இருக்கிற குணம், கொஞ்சமும் இவனிட்ட இல்லையேம்மா! ஒருவேளை மாறி தூக்கீட்டு வந்திட்டிங்களோ?" என்றான் சந்தேகமாய்.
"ஒன்டு செய்வமா ரவி? இத ரதனிட்வயே கேட்டிடுவோமா....?"
"எதுக்கு இந்த கொலை வெறி? அவன ஒரு முறடன். அவனிட்ட போய் மாட்டி விட பாக்கிறீங்கள்..." என்றான் பாவமாய்.
"பின்ன என்னடா....! நான் எத கேக்குறன்.. நீ காமடி பண்ணினா...". அவர் கோபமாக.
"நாங்கள் என்னா பண்றது...? அவனாவே பாத்துப்பான்.
கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகிடும்.
பொறுத்திருந்து பாப்பம்.... அப்பிடி இல்லாட்டி, நாங்களே களத்தில இறங்குவம். இதல்லாம் உங்களுக்கு தெரிஞ்சா மாதிரி காட்டாதோங்கம்மா...
பிறகு என்னை உயிரோடையே புதைச்சிடுவான்.
என் உயிர் இப்ப உங்க வாயில தான் இருக்கும்மா! பாத்து பண்ணுங்க...
எனக்கு வேலை இருக்கு... நேரம் இருக்கேக்க கதைக்கவா.....?"
"டேய் ரவி........." வைத்துவிட போகிறான் என அவசரமாக அழைத்தார்.
"சொல்லுங்கம்மா?......"
"எப்ப அந்த பொண்ணு வருவாள் என்டு மட்டும் சொல்லு.. நான் யாரென்டு சொல்லாம அவளை பாக்குறன்.."
"சரிம்மா சொல்லுறன்... இப்ப வைக்கிறன்." என்றவன் வைத்ததும் அவருக்கு ஒரே சந்தோஷம்.
ஒருவழியாக தன் பிள்ளையுடைய கல்யாணம் உறுதியாகி விட்டதென்று.
ஆனால் அவன் செய்திருக்கும் வேலைகளை நினைத்தவர்,
'ஒரு பொண்ணை எப்பிடி வழிக்கு கொண்டு வரோணும் என்டு கூட தெரியேல.. பெரிய தொழிலதிபராம்...
என் பிள்ளையையே மயக்கியவளை பார்க்க வேணுமே!' ஆர்வம் ஒட்டிக்கொள்ள, அதே சந்தோஷத்தோடு தன் வேலைகளை கவனிக்கலானார்.
மாலை ஆனதும் வீட்க்குக்கு வந்த சைலு.. துஷா தூங்கி கொண்டிருக்கவும், அவளருகில் தூங்கி வழிந்த மைனாவை எழுப்பியவள்
"உன்னை இங்க நித்திர கொள்ளவா விட்டன்...?"
"என்னையே சும்மா குறை சொல்லாத.... நித்திரையா கிடக்கிற அவளையே, எவ்வளவு நேரம் தான் பாத்துக் கொண்டே இருக்க ஏலும்....?
அவளை பாத்தா, எனக்கும் நித்திரை வருது. அதன் கதவை கூட நல்லா பூட்டிட்டு படுத்தன்." தூக்க கலக்கத்தில் கூறியவள் தலையில் தட்டியவள்,
"தூங்கு மூஞ்சி... இப்ப அவளுக்கு காய்ச்சல் குறைஞ்சுதாே இல்லையாே...?"
"அவளுக்கு என்ன? மருந்து போட்டதும் காச்சல் நிட்டுட்டுது.. இப்ப அசதில நித்திரை ஆகிட்டாள்.."
"என்னடி மருந்தா?" என அவள் கேட்டு முடிக்கவில்லை... துஷாவின் தலைமாட்டில் இருந்து வந்த போன் சத்தத்தில் திரும்பியவள்,
ரொம்ப வசதியாகிட்டீங்க போல... புதுசா போனெல்லாம் தவளுது.... அதுவும் மாடல் போன்.. நிறைய காசு புழங்கினா இங்கயும் கொஞ்சத்த தள்ளுறது." கேலி தான் செய்தாள்.
"அது என்ர இல்ல... உன்ர உயிர் தோழின்ர... அவளிட்டையே பிச்சை எடு!" என்றதும் துஷாவை ஆச்சரியமாக திரும்பிப்பார்த்தாள் சைலு.
ஆம் அவளுமே போன் சத்தத்தில் விழித்து விட்டாள்.
"இது எப்ப..? எனக்கு சொல்லவே இல்லையே!" என்று அதை புரட்ட,
"அவளுக்கே கொஞ்ச நேரத்துக்கு முன்னம் தான் தெரியும்.... உனக்கெப்பிடி சொல்லுறது?" என்றாள் மைனா.
"என்னடி இவள் உளறுறாள்" என மைனா கூறியதன் பாெருள் புரியாமல் கேட்டவள்.
"அது சரி உனக்கு இப்ப காச்சல் நிண்டுட்டுதா...?" என்றவாறு தொட்டு பாத்தவள், இல்லை என்று உறுதியானதும்.
"நீ தான் ஆஸ்பத்திரி கூட்டுக்கொண்டு போனியா? உன்னட்ட நான் என்ன சொன்னன்.?
என்னன்டாலும் எனக்கு போன் பண்ண சொல்லி தானே!" என்றாள் கோபமாக. அவளுக்கு அவள் பயம்.
"அம்மா தாயே! என்னை கொஞ்சம் கதைக்க விட்டு, திட்டு... வந்ததில இருந்து, பெரிய vj மாதிரி சம்மந்தம் சம்மந்தமில்லாம கதைச்சுக் கொண்டே போற..
அவளின்ர பாேஸ் காச்சல் என்டு கேள்விப்பட்டு, பாக்க வந்தார்.
அவர் தான் டொக்டரையும் கூட்டிக்காெண்டு வந்தார். அந்த போன்னும் அவர் தான் குடுத்தார்.
மீதிய அவகிட்ட கேள்! என்னை விடு!" என்று கும்பிடு போட்டு அவள் ஒதுங்கிக்காெள்ள,
"என்னடி! அவள் சொல்லுறது உண்மையா?" என்றாள் புருவங்கள் முடிச்சிட சந்தேகமாய்.