• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

13. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
விசாலாட்சி டாக்டர் பெண் மருமகளாக வந்ததற்காக நியாயமாக பெருமை பட்டிருக்க வேண்டும்! ஆனால் அவர் போட்டிருந்த கணக்கு கலைய காரணமாகப் போனதால் அவள் மீது வெறுப்பு தான் உண்டாயிற்று!

சாருபாலா மட்டும் அவரது மகனை அழகை காட்டி மயக்கியிராவிட்டால்,
இன்று இந்த வீட்டின் மருமகளாக, ரிஷிக்கு தாயாக அனிதா இருந்திருப்பாள் என்ற எண்ணம் வேறு அவரை அவ்வப்போது எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது! அதைத்தான் மகன் இல்லாத சமயங்களில் மருமகளிடம் காட்டினார்!

அம்மாளுக்கு அனிதாவின் மீது பெரிதாக பாசம் ஒன்றும் கிடையாது! ஆனால் மகனை பெரிய இடத்து மாப்பிள்ளையாக ஆசைப்பட்டார்! அதற்கு ஏற்ப தனுஷ்கோடி இருந்தார்! கொழுந்தியா, மச்சான் என்று வேறு உறவுகள் இல்லாத இடம்! சொத்து முழுவதும் அனிதாவிற்கு தான்! அவர் வீட்டில் சம்பந்தம் செய்திருந்தால் ஊரே மெச்ச திருமணத்தை நடத்தியிருப்பார்! அந்த பெருமையை நாலுபேரிடம் சொல்லி பொறாமையை தூண்டியிருக்கலாம்! அது எதுவும் நடக்காமல் போனது சாருபாலாவால் தான் என்று அவருக்கு மனதுக்குள் அவள் மீது துவேஷம்!

அனிதா கைம்பெண் ஆனதும், இன்னொரு வாய்ப்பு என்று விசாலாட்சியின் மனது கணக்கு போட்டது! சும்மா மகளை அனுப்பி வைக்கும்படி தனுஷ்கோடியிடம் கேட்டால் அவர் நிச்சயமாக ஒப்புக்கொள்ள மாட்டார்! ஆனால் ஏதேனும் வலுவான காரணத்தோடு அழைத்தால் அனுப்புவார் என்று நினைத்தார்!

அவரது காலில் விழுந்த சின்ன விரிசலை பூதாகரமாக காட்டி, மகனிடம் நைச்சியமாக பேசி அனிதாவை வரவழைக்க சொன்னார்!

ஆனந்தனுக்கும் அனிதாவுக்கு இன்னொரு திருமணம் செய்து அவளது வாழ்க்கை மலரச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் அப்போது மேலோங்கியிருந்தது!

அதனால் அம்மா சொன்னபடி செய்தான்! அதன்படி அனிதாவும் வந்து சேர்ந்தாள்! பிறகு அவனது மனம் மனைவியையும் அனிதாவையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தது! அதன் விளைவு சிறிது சிறிதாக மனம் மாற ஆரம்பித்து விட்டது! அவளும் நெருங்கி வர ஆரம்பித்துவிட்டாள்! இனி அடுத்த கட்டத்திற்கு போக வேண்டியதுதான் பாக்கி! யார் முதலில் சொல்வது என்ற தயக்கம்!

ஆனந்ன் திருமணமாகி மனைவி குழந்தையுடன் இருப்பவன்!அவளோ கணவனை இழந்த கைம்பெண்! எப்படி சொல்வது என்று அனிதாவுக்கு தயக்கம் என்றால்..

ஆனந்தனுக்கோ, இந்த விஷயம் சாருபாலாவுக்கு தெரியும் போது என்னவாகும் என்ற பயம் அதிகமாக இருந்தது!

இப்போது அந்த வீட்டின் நிர்வாகமே அனிதாவின் கையில் தான் இருந்தது! சாருபாலாவுக்கு எதிலும் தன் உரிமை பறிபோகிறது என்ற எண்ணம் எழவே இல்லை! அனிதாவை அவள் உண்மையில் தங்கையாகவே நினைத்தாள்! ஷாப்பிங் போனால் அவளுக்கு என்று ஏதேனும் வாங்கி வருவாள்!
அனிதா வீட்டுப் பொறுப்பை எடுத்துச் செய்ததை தவறாக எண்ணவில்லை! பாவம், சும்மா எவ்வளவு நேரம் இருப்பாள், இப்படி வேலை செய்து தன் மனதை திசைதிருப்புகிறாள் என்று நினைத்து தான்,எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருந்தாள்!

சாருவின் சித்தி அவளுக்கு ஒரு குடும்பத்தில்,
பெண்பிள்ளை எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லித் தரவில்லை! வேளைக்கு உணவு தருவதும்,
தேவையான உடைகளை வாங்கித் தருவதும், படிப்பிற்கு பணம் கட்டுவதும்,என்று தாமரை இலை தண்ணீராக அவளது பதின் பருவம் கழிந்திருந்தது! கணவன் மனைவி அன்பு எப்படிப்பட்டது,என்று அவளுக்கு தெரியாது! கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட அவளுக்கு தெரியாது! ஆனந்தன் காட்டிய வழியில் அவளது திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்தது! ஆகவே அனிதாவும்,கணவனும் அவளுக்கு மறைத்து ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் பற்றி அவள் அறிந்து கொள்ளவே இல்லை!

அது தெரிய வந்தபோது.. ?

🩷🩷🩷

மருத்துவமனையில்..

சாருபாலா வக்கீல் தந்த கடிதத்தை பிரித்து படித்தாள்!

"இந்த கிழவனை வழியனுப்ப வந்துட்டியா மகளே, எனக்கு உறவுனு யாரும் இல்லை என்று உனக்கு தெரியும் மகளே! என்னதான் நீ மருத்துவராக உன் பணியை செய்து இருந்தாலும், ஒரு தந்தையை போல என்னை நீ கவனித்துக் கொண்டாயம்மா! எனக்கு என்று சில சொத்துபத்துகள் இருக்கிறதும்மா! அதுல கொஞ்சம் தர்மத்துக்கு எழுதிவிட்டேன்! மீதமிருப்பதை நான் உன் பெயருக்கு எழுதிட்டேன்! நீ மறுக்காமல் அதை பெற்றுக் கொண்டால் இந்த உயிர் நிம்மதியாக போய் சேரும்! என் திருப்திக்காக நீ அதை வாங்கிக்கோ மா!" கண்களில் நீருடன், மறுப்பாக தலையசைக்க, அவருக்கு மூச்சு திணறிக் கொண்டே, அவர் சைகையால் வக்கீலிடம் குறிப்பு காட்ட, அவர் ஒரு கவரை அவளிடம் நீட்டினார்!

"தயவு செய்து இதை நீ வாங்கிக் கொள்ளம்மா! அவர் சந்தோசமா கண்ணை மூடுவார்மா! இருக்கும் போதுதான் அவர் சந்தோஷமாக வாழவில்லை! போகும்போதாவது, அந்த சந்தோஷத்தை நீ கொடு அம்மா!" என்றார் அந்த வக்கீல் கருணாகரன் !

வேறு வழியின்றி அதை பெற்றுக் கொண்டவள் அவர் பாதங்களில் பணிந்து எழுந்தாள்! அவரது கைகள் எழுந்து அவளை ஆசி வழங்கியபடி புன்னகை முகத்துடன், அந்த ஆத்மா விடைபெற, சாருபாலா பொங்கி அழுதாள்! அவளது இந்த சில வருட மருத்துவ வாழ்வில் ஓரிரு இழப்புகளை பார்த்து இருந்தாலும் அவை கண்முன் நிகழவில்லை! அந்த மரணங்களை, ஒரு மருத்துவர் என்ற முறையில் இயல்பாக ஏற்றுக் கொண்டாள்! ஆனால், இந்த மனிதரின் அன்பு அவளை நிலைகுலைய வைத்திருந்தது!

காலையில் பத்து மணியளவில் எல்லா விதிமுறைகளும் முடிந்து வாசனின் உடலை வக்கீலிடம் ஒப்படைத்தனர் ! அவருடன் சாருபாலாவும் கிளம்பினாள்!

"நான் எல்லாக் காரியமும் என் ஆட்களை வைத்து செய்து விடுகிறேன் அம்மா! உன்னை எதிலும் சம்பந்தப்படுத்தி சங்கடப்படுத்த வேண்டாம் என்பது அவர் உத்தரவு! நீ வீட்டுக்கு போ அம்மா! இது என் கார்டு! எப்போது என்றாலும் உனக்கு எந்த உதவி என்றாலும் கேள், உதவ நான் காத்திருக்கிறேன் அம்மா!" என்று விடை பெற்றுக் கொண்டார்!

கூடிய சீக்கிரமே அந்த கார்டு பயன்படப் போவதை அப்போது அவள் அறியவில்லை!

சாருபாலா நள்ளிரவில் கிளம்பிச் சென்றது ஒரு அத்தியாவசிய தேவைக்காகத்தான் என்பது விசாலாட்சிக்கு நன்கு தெரியும்!

மருத்துவர்கள் எந்த நேரம் என்றாலும் நோயாளிக்கு ஒன்று என்றால் உதவ கால நேரம் பாராமல் பணி செய்கிறவர்கள் என்பது உலகமறிந்த விஷயம்!

விசாலாட்சிக்கு ஒரு வருடத்திற்கு முன்பாக என்றால் இந்த தைரியம் வந்திருக்காது! ஆனால் இப்போது அவருக்கு மகன் மீது நம்பிக்கை இருக்கிறது! ஆகவே அவளது வரவுக்காக ஒரு திட்டத்துடன் காத்திருந்தார்!

சாருபாலா, மருத்துவமனையில் தலைமை மருத்துவரை பார்த்து விவரத்தை தெரிவித்து, லீவிற்கு சொல்லிவிட்டு, வீடு வந்து சேர்ந்தபோது பதினோரு மணிக்கு மேலாகிவிட்டது! அவள் வரும் வழியில் ஆனந்தனை தொடர்பு கொள்ள முயன்றபோது அவன் அழைப்பை ஏற்கவில்லை! இரண்டு தடவை அழைத்தும் அவன் எடுக்கவில்லை என்றதும், அலுவலக எண்ணிற்கு அழைத்தாள், வரவேற்பில் இருந்த ஆள், அவன் மீட்டிங்கில் இருப்பதாக தெரிவிக்கவும் ஆசுவாசமானாள்! காரை ஷெட்டில் நிறுத்தினாள், பணிப்பெண்ணை அழைத்து, தனக்கு வேண்டியது கொணர்ந்து தரும்படி பணித்தவள்,தன் கைப்பையை அவளிடம் கொடுத்துவிட்டு பின்புறமாக இருந்த குளியல் அறை நோக்கி சென்றாள்!

சற்று நேரத்தில் சாரு குளித்து முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தபோது, அனிதா மதிய சமையலைப் பற்றி சமையல் ஆளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்! சாப்பிடும் மனநிலை இல்லாததால், கூடத்தில் இருந்த கைப்பையை எடுத்துக் கொண்டு அவளது அறைக்கு செல்லப் போனவளை..

"ஏய், நில்லுடி! என்று உரக்க அதட்டியபடி வந்து நின்றார் விசாலாட்சி!

சாரு பாலா புரியாமல் மாமியாரை பார்த்தாள்!

சத்தம் கேட்டு,ஓடி வந்த அனிதா," என்னாச்சு அத்தை?"என்றவள் !
ஆங்காங்கே நின்றிருந்த பணியாட்கள் பார்த்தும் பாராதது போல, வேலை செய்து கொண்டிருக்க, அனிதா அவர்களை அங்கிருந்து செல்லும்படி சைகை செய்தாள்!

"அனிதா இது உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயம்! நீ தலையிடாதே! போய் உன் வேலையை பாரு!" என்றார்!

ஆனால் அனிதா, நகராமல் நின்று கொண்டாள்!

அம்மாள் தொடர்ந்தார், "ஏன்டி, நடுராத்தியில் யாரைப் பார்க்க போயிருந்தே?!

உண்மையில் சாருபாலா இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை! திடுக்கிட்டுப் போனவளாக நிமிர்ந்தாள்!
 

Attachments

  • Picsart_24-05-04_15-06-20-975.jpg
    Picsart_24-05-04_15-06-20-975.jpg
    69.1 KB · Views: 15
Last edited:

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அருமை அம்மா 🩵🩵🩵🩵🩵🩵🩵இருந்தாலும் ஆனந்தன் இப்படி மாறுனது சரியில்லை