13.நவிலனின் கோதையானாள்
இருவரும் கீழே இறங்கி வர மங்கை அங்கே இல்லை..
அத்த எங்க நவிலா காணோம் கோவிச்சுட்டாங்களா என்று அவசரமாக பனி கீழே இறங்க..
பொறுமையா டி அம்மா ரூம்ல இருப்பாங்க என்று சொன்ன அடுத்த நொடி அறைக்குள் நுழைந்து இருந்தாள் பூம் பனி..
அத்த அத்த..
இங்க இருக்கேன் பூவு…
எங்க அத்தை..
உள்ள வாடா என்று குரல் தர அந்த அறைக்குள் இதுவரை செல்லாதவள் எந்த பக்கம் என்று முழிக்க ,நான் வரதுக்குள்ள என்ன அவசரம் வா என்று நவிலன் அழைத்து கொண்டு செல்ல அறையின் இடது பக்கத்தில் ஒரு சிறிய கதவு இருக்க அதன் வழியே அழைத்து உள்ளே செல்ல ஒற்றை படுக்கையறை கொண்ட சின்ன இடத்தில் ஆள் உயர புகைப்படத்தில் நவிலனின் தந்தை புன்னகையுடன் இருக்க அப்படியே நின்று விட்டாள்..
வா பூவு..
அத்த என்று அவரை அணைத்து கொண்டவள் கோவமா? இங்க வந்துட்டீங்க..
அதெல்லாம் ஒன்னு இல்ல அவளுக்கு எதாவது இங்க இருந்து எடுத்துட்டு போய்ட்டே இருக்கனும் அது தான்., இப்ப அந்த ஸ்கூல் ன்னு கண்ணுல பட்டு இருக்கு
நவிலன், “பனி பேர்ல ஸ்கூல் இருக்கிறது அவளுக்கு எப்படி தெரியும் மா..
விசாரிச்சு இருப்பா டா அவ தான் அதே வேலையா இருக்காளே…
யாரா இருக்கும் அம்மா என்றான் நவிலன்.
எனக்கு தெரிஞ்சு உங்க அப்பா ஆபிஸ் ல தான் ஆள் இருக்கும் இவ அங்க மட்டும் தானே போக வர இருந்தா குழப்பம் பண்ணவும் அவங்க காரியத்தை சாதிச்சுக்கவும் உள்ள யாராவது இருப்பாங்க..
ம்ம் என்றவன் யோசனையோடு அம்மா நான் ஒன்னு சொல்லவா?
மங்கை, “உங்க அப்பா சொத்தை முழுசா உங்க அக்கா பேருக்கு மாத்துறதை தவிர வேற எதுவானாலும் சொல்லு..
ப்ச் அம்மா அதை அவளுக்கு குடுத்துட்டா அவ வேலையை அவ பார்ப்பா..
கண்டிப்பா பார்க்க மாட்டா எது வாங்கினாலும் அதுல அவ பங்கு கேட்பா அதை அடைய எதுவானாலும் செய்வா அவ்வளவு பிடிவாதம் அவளுக்கு, வசந்த் மாப்பிள்ளை கிட்ட சொல்லிடு நவிலா அவளுக்கு காலம் பூரா ஷேர் வரும் நஷ்டத்தில் போனாலும் போகலன்னாலும் சொத்து பிரிச்சு எழுதுற மாதிரி இருந்தா அதை நீ உன் மருமகன் பேருக்கு தான் எழுதனும் அதுவும் நீங்க உங்க காலம் முடியும் வரை அவன் அனுபவிக்கலாம் அப்புறம் தான் உரிமை கொண்டாட முடியும் ன்னு..
ஏன் மா..
இந்த காலத்தில் யார் எப்ப எப்படி மாறுவான்னு தெரியாது நவிலா, இப்ப இந்த சொத்து என் பேர்ல தான் இருக்கு, எனக்கு அப்புறம் தான் உங்களுக்கு, அதை உங்க அப்பா என்கிட்டே சொல்லிட்டு தான் செஞ்சாரு…நம்ம பிள்ளைங்க நல்லவங்க தான் ஆனா காலமும் சூழ்நிலையும் ஒரு மனுஷனை எப்படி வேணும்னாலும் முடிவு எடுக்க சொல்லும் அதனால் இது உன் பேர்ல இருக்கட்டும்.உன் காலத்துக்கு அப்புறம் பிள்ளைங்க பேர்க்கு போகும் ன்னு சொன்னாரு ..
இதுல என்னம்மா இருக்க சம்பாதிக்கிறதே அக்காவுக்கும் சேர்த்து தான் மா
நீ நினைக்கலாம் ஆனா அவ பார்த்தியா நீ ஸ்கூல் ல ஷேர் வச்சு இருக்கிறதை தெரிஞ்சுக்கிட்டு வந்து நிற்குறா..
விடுங்கம்மா அக்காவை பத்தி தான் தெரியுமே
நவிலா அம்மா சொல்லுறேன் ன்னு தப்பா எடுத்துக்காத எல்லா உறவும் ஒரு எல்லையில் இருந்தா தான் அதுக்கு மதிப்பும் அழகும் இல்லன்னா அதுவே நரகமா மாறிடும்.
நவிலன், “ச்சே ஏன் இப்படி பலதை யோசிக்குறீங்க…
எல்லாம் உங்க நல்லதுக்கு தான் நவிலா ,பூவு அத்தை என்ன இப்படி சொல்லுறாங்கன்னு நினைக்காத எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் அப்புறம் உன் நாத்தனார் நல்லவ தான் அவளுக்கு எல்லாம் செய்யுற வரைக்கும் இதுவரை இந்த குடும்பத்தை நான் எடுத்து பார்த்தேன் . இனி நீ தான் பார்க்கனும் இந்தா என்றவர் கணவனின் புகைப்படம் முன் இருந்த சில சாவிகளையும் பேப்பரையும் எடுத்து நீட்ட..
அத்தை…
என்ன பூவு
உங்க காலத்துக்கு அப்புறம் நான் பார்த்துக்கிறேன் அத்த என்றாள் சாதாரணமாக எந்த செயற்கை பேச்சும் இல்லாமல்..
அது இல்லடா என்று மங்கை ஆரம்பிக்கவும்..
இல்ல அத்தை வந்ததும் இந்த பொறுப்பை நான் எடுத்துக்கல நீங்க சொல்ல சொல்ல நான் செய்யுறேன் ஆனா அது உங்க மூலமா தான் போகனும் நானே செய்யுறதுக்கு இன்னும் காலம் இருக்கு அத்தை இப்ப தானே இந்த திருமண உறவு மட்டும் இல்ல, குடும்பம் கடமைன்னு இருக்க பொறுப்புக்குள்ள வந்து இருக்கேன், யாருக்கு எது எப்படி செய்யனும் ன்னு உங்களுக்கு தான் தெரியும் நான் அதெல்லாம் கத்துக்கிட்டு அப்புறம் செய்யுறேன் என்று பூம் பனி சொல்ல ,மாமியார் மருமகள் உரையாடலை ரசித்து கொண்டு இருந்தான் நவிலன்.
என்னடா நவிலா அப்பா சொன்னதுக்கும் நேர்ல பூவு பேசுறதுக்குஞ் சம்பந்தமே இல்லை என்று மங்கை சிரிக்க
பூம்பனி என்ன சொல்லி இருப்பார் என்று திருதிருவென விழிக்க..
சரிக்கு சமமா எல்லாம் ஆபிஸ் ல தான் அம்மா பேச்சு, ஏன் நீங்க அந்த சிசிடிவி ல பார்த்து இருக்கீங்க தானே என்றான் நவிலன் புன்னகையுடன்.
அப்போது தான் உணர்ந்தாள் நம்மளை வச்சு நிறைய பேசி இருப்பாங்க போல போச்சு பனி இனி உன்னை என்ன எல்லாம் பேசுவாங்க ன்னு தெரியல நாம வேற அங்க நிறைய வாய் பேசி இருப்போமே என்று அவள் அதே நிலையில் நிற்க..
மங்கை, “பூவு நீ எடுக்கிற முடிவு தான் இனி நம்ம வீட்டில் ..
அத்த அது வந்து…
அதெல்லாம் எந்த பதிலும் வேணாம் மாமா க்கு அவ்வளவு ஆசை நீ எது சொன்னாலும் அது சரின்னு வந்து நிற்பாங்க அதுவும் ஆபிஸ் ல எந்த பிரச்சனையும் வராம பார்த்து சரியா செஞ்சுடுவியாம் அவரு கூட என்ன பண்ணுறது ன்னு சில சலுகை தந்தாலும் நீ வந்த பிறகு வேலையை சரியா செய்யல்லனா அவங்க பாடு திண்டாட்டம் ன்னு மாமா சொல்லுவாங்க அதனால் இனி வீட்டில் எந்த முடிவா இருந்தாலும் நீ தான் ஏன்னா நான் எல்லாம் ரொம்ப விட்டுக்கொடுத்து என்னைய ஏறி மிதிக்க தான் பார்ப்பாங்க ஏதோ நாங்க இங்க தனியா இருந்துட்டதால பெரிசா பிரச்சினை இல்லை அதனால் நீ எதையும் தைரியமா முடிவு எடுக்கலாம் அதுக்கு நாங்க துணையா இருப்போம்..
பூம்பனி நவிலனை பார்க்க சிரிப்புடன் உன்னால் முடியும் அம்மு என்றான்..
இல்ல பார்க்கிறவங்க…
அம்மு என்று அதட்டலாக நவிலன் ஒரு பார்வை பார்க்க..
சரி சரி என்று ஒத்துக்கொள்ள..
சரி நவிலா நைட்க்கு என்ன சமைக்கலாம் இரண்டு நாளாக உங்க அக்கா வந்து போகன்னு வேலை அதிகம் நான் இன்னும் சாயந்திரம் நடந்த விஷயத்துல சமையலை பத்தி எதுவும் சொல்லல என்று மங்கை ஆரம்பிக்க..
வெளியே போகலாம் அம்மா மணி அக்காவையும் தயாராக சொல்லுங்க சாப்பிட போய்ட்டு அப்படியே நம்ம ஃபார்ம் ஹவுஸ் போகலாம் ம்மா இரண்டு நாள் அங்க இருப்போம் அக்கா வந்தா அங்க வரட்டும்
மங்கை, “ அங்கேயுமா என்று சிரிக்க..
அம்மா விடும்மா அவ குணம் தெரியும் நாம அவளுக்கு செய்யலாமா இருக்கோம் ஆனாலும் அவ அப்படி தான் எதுக்கு நீங்க கவலைப்படுறீங்க என்று நவிலன் சொல்ல..
பூவு இங்க வா என்னால் நிற்க முடியல என்று கட்டிலில் பூம்பனியை அமர்த்தி கொண்டவர், உன்கிட்டே எனக்கு ஒளிவு மறைவு இல்லடா கவி என்று ஆரம்பிக்கும் போதே..
அத்த நீங்க சொல்லனும் ன்னு இல்ல நானே ஓரளவு புரிஞ்சுக்கிட்டேன் அவங்களை எப்படி சமாளிக்கனும் ன்னு எனக்கு தெரியும் நீங்க கவலையை விடுங்க..
நவிலன், “அம்மா போதுமா இனி உன் பொண்ணு பாடு திண்டாட்டம் தான் என்று சிரிக்க..
பூம்பனி, “அப்ப என்னைய வில்லி ரேஞ்ச்க்கு சொல்லிடுவீங்க போல என்று நவிலனை பார்க்க…
ச்சே ச்சே அப்படி இல்ல அம்மு என்று உதட்டுக்குள் சிரிக்க..
போங்க என்றவள் அத்த அவர் என்னைய கிண்டல் பண்ணுறாரு
மங்கை, “டேய் நவிலா இப்ப எதுக்கு வம்பு இழுக்குற?
அத்த நீங்களுமா என்று அவரின் முகத்தை பார்த்து சொல்ல..
இல்ல இல்ல என்றவர் அதற்கு மேல் அடக்கமுடியாமல் சிரித்து விட
அத்த…
சரி சரி நாம போகலாம் வாங்க டைம் ஆச்சு என்று நவிலன் சொல்ல..
இரண்டு நாள் தங்க தேவையானது என்று பூம் பனி இழுத்தாள்.
வா அம்மு நான் இருக்கேன் இல்ல என்றவன் மணியை அழைத்து கொண்டு குன்னூரை தாண்டி இருந்த அவர்களின் ஃபார்ம் ஹவுஸ் செல்ல தயாராகி இரவு உணவை முடித்து கொண்டு வந்து சேர பத்தை கடந்து இருக்க..
மங்கை நானும் மணியும் தூங்க போறோம் நீ அவளை அழைகழிக்காம தூங்க போங்க காலைல எல்லாத்தையும் பார்க்கலாம் என்றதும் அம்மா என்று நவிலன் சிணுங்க..
டேய் நீ பொங்குறது எல்லாம் பகல்ல பாரு அவ தூக்கத்தை கெடுக்காமல் பூவு நீ போய் தூங்கு டா என்று அறைக்குள் சென்றுவிட நவிலனும் பூம் பனியை அழைத்து கொண்டு சென்றான்..
இங்கே பேச்சு காரசாரமாக வளர்ந்து வளர்ந்து ஒரு கட்டத்தில் அம்சா பாத்திரங்களையும் பாஸ்புக்கையும் வீசி எறிந்து இருந்தாள்.
ராணி, "என்ன இது அம்சா?
நீங்க கேட்டதுக்கான பதில் அண்ணி உங்க பங்கை எந்த விதத்திலும் இதுவரை என் வீட்டுக்காரர் தொட்டது இல்ல இனிமேலும் தொடமாட்டார் நீங்க கவலைபட தேவையில்லை..
என்னடா கார்த்தி அவளை பேசிவிட்டு வேடிக்கை பார்க்கிற..
நீயும் தான் பேசுற மாமா எதுவும் உன்ன சொல்ல முடியாம இருக்க மாதிரி நானும் அம்சாவை சொல்ல முடியாம இருக்கேன்.
மங்கை, "இதுல அவங்க தலையிட என்ன இருக்க கார்த்தி இது நம்ம சொத்து..
அக்கா நீ வேணும் ன்னா இது உன்னோடது மட்டும் ன்னு நினைக்கலாம் ஆனா நான் எங்களதுன்னு நினைக்கிறேன் அதனால் அம்சா பேசுறதுல தப்பு எதுவும் இல்லையே நீ கேட்டது எங்க பொண்ணுக்கு நாங்க செஞ்ச சீர் பத்தி அப்ப அவ பேசத்தானே செய்வா..
ஓஓஓ அப்படியா என்று ராணி அம்சாவை முறைக்க..
எதுக்கு அண்ணி உங்களுக்கு பூவு மேல இவ்வளவு வெறுப்பு என் மருமக மருமகன்னு நீங்க தானே அவளை அப்படி பார்த்துக்கிட்டீங்க?
ஆமா இல்லன்னு சொல்லல இன்னும் சொல்லப்போனா விக்னேஷ் க்கு அவ தான்னு முடிவு பண்ணி கூடத்தான் இருந்தது ஆனா போன இடத்தில் வாயை வச்சுட்டு சும்மா இருந்து இருந்தா நல்ல நிம்மதியா வாழ்ந்து இருக்கலாம் அதுக்கு தான் வழி இல்லையே இப்ப வாச்சு இருக்கிறதையாவது தக்க வச்சுப்பாளா என்று ராணி பொறிய..
போதும் அண்ணி அவளுக்கு வந்த மாப்பிள்ளை அத்தனையும் தாட்டி விட்டு அனுப்பியது யாரு அவளை ஊர் பூரா பைத்தியம் ன்னு சொல்லி பேசினது யாரு எதுக்கு இவ்வளவு வன்மம் உங்களுக்கு என்றதும்..
அடி ஆத்தி என்னங்க என்னைய பார்த்து என்ன கேள்வி கேட்குறா பாருங்க இந்த வக்கத்தவ, வாழ வழி இல்லாம இருந்தவளை பாவம் பார்த்து இவனுக்கு கட்டி வச்சத்துக்கு எனக்கு தேவையா என்று மூக்கை உறிஞ்ச…
அடுத்து ராணி என்ன செய்வாள் என்று உணர்ந்து கார்த்திகேயனும் சாம்பசிவமும் அம்சாவை தான் அடக்க பார்க்க பொங்கி விட்டாள் அம்சா…
தொடரும்