• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

13.miss மானஷா சம்யுக்தா

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
அவன் வார்த்தைகளில் உண்மை தெரிய மெளனமாக அங்கிருந்து வெளியேறினாள்.

என்ன தான் நினைக்கிறாள் என்பதை அவள் மனமே அறியும் அவன் சொன்ன வேலையை செய்ய தொடங்கினாள் “குமார் இங்க வாங்க நீங்க போய் கொஞ்சம் ரெடியாகிட்டு வரிங்களா நம்ம தயாரிக்கிற காரோட ஸ்பெசாலிட்டி எல்லாம் தெளிவா சொல்லி ஒரு வீடியோவா ரெடி பண்ணனும் அதுக்கு தான்..‌” என்றது சரிங்க என்றவன் செல்ல “கேமரா மேன் வந்தாச்சா..” என்று அதையும் விசாரித்து விட்டு நிற்க நன்கு ஆங்கில புலமை கொண்ட குமார்யை வைத்து அந்த வீடியோ சுமார் ஒரு மணி நேரத்தில் தயார் செய்தாள் “சரி எடுத்தாச்சுல்லே அதை கொடுங்க எடிட் பண்ணிடலாம்…” என்று சிஸ்டம் முன் அமர்ந்தாள்....

இவளை கவனித்துக் கொண்டிருந்த அகிலன் “சம்யுக்தா எவ்ளோ நேரம் வேலைப் பார்ப்ப இந்தா இந்த காபியை குடி…” என்று நீட்டினான்.

“தாங்க்ஸ் அகிண்ணா…” என்றவள் வேலையில் மூழ்கிப் போனாள் அதை தயார் செய்து சரி பார்த்ததும் “இந்தாங்க சார் நீங்க ஒரு வாட்டி பாருங்க எல்லாம் ஓகேயான்னு..” என்று யுவாவிடம் கொடுத்துவிட்டு வேலை முடியும் நேரம் வர ஆபிஸ் விட்டு வெளியேறினாள்....

“ரிஷிண்ணா நம்ம எடத்துக்கிட்ட நிறுத்து ஆடர் பண்ணினே திங்ஸ் எல்லாம் வந்திட்டான்னு பார்க்கனும்…” என்றதும் சரி என்று இறக்கிவிட “அண்ணா உன் கிட்ட பெயின்டர்ஸ்க்கு ஏற்பாடு பண்ணுன்னு சொன்னேன்லே என்னாச்சு ஆட்கள் கிடைச்சாங்களா?..”

“ஆஹ் கிடைச்சாங்க இன்னும் ரெண்டு நாளையிலே வந்து பண்ணி கொடுக்கிறாங்களாம் அதோட நீ கலர்ஸ் செலக்ட் பண்ணி கொடுத்திடு…” என்றவனிடம் சரி என்றவள் தன் கம்பெனி கட்டும் வேலையை பார்வையிட்டாள்.

ஆபிஸ் வேலை அத்துடன் தான் ஆரம்பிக்க இருக்கும் கம்பெனி வேலை என அனைத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் இதற்கிடையில் மோனிகாவுடையை திருமண பேச்சு எழ இப்போதைக்கு நிச்சயம் பண்ணிக்கலாம் கல்யாணத்தை என் தங்கச்சி கம்பெனி ஆராம்பிச்சதும் வெச்சிக்கலாம் என்று முடிவாய் சொல்லிவிட மாப்பிள்ளை வீட்டார்களும் சரி என்று ஒத்துக் கொண்டனர்.

இங்கு அகியிற்கும் லில்லியிற்கு கல்யாண வேலை கலை கட்ட தொடங்கியது ஆனால் இதுவரையில் அகிலனுடன் யுவா பேசவேயில்லை எவ்வளவு சமாதானப்படுத்தியும் கண்டுக்காமல் இருந்தான்.

இவர்கள் அடிச்சாலும் பிடிச்சாலும் அடுத்த நாளே சேர்ந்து விடுவார்கள் என்ற மனநிலையில் இருந்த சன்முகவேலிற்கு மனதில் பயம் தொற்றிக் கொண்டது
ஏதோ தோன்ற உடனே அழைத்தார் சம்யுக்தாவிற்கு.....

“ஹலோ அன்கிள் கல்யாண வேலை எல்லாம் எப்பிடி போய்ட்டிருக்கு இன்னும் நாளு நாளையிலே கல்யாணம் செம்ம ஜாலியா இருப்பீங்க போல…” என அவள் சந்தோஷமாக கேட்க‌…

“அட நீ வேற ஏன் ப்ரென்ட் எனக்கு என்னமோ அது நடக்குமான்னே பயமாயிருக்கு…”என்றவரின் குரலில் சோர்வு தெரிந்தது.

என்னாச்சு?.... என்று பதட்டத்துடன் கேட்டவளிடம்.

“எல்லாம் நம்ம யுவா தான் இப்பிடியே போய்ட்டிருந்தா அகி கல்யாணமே வேண்டான்னு சொல்லிருவான் பாவம் அந்த பொண்ணை நாம அவமானப்படுத்தின மாதிரி போய்டும்னு யோசிச்சிட்டிருக்கேன்..”

“அய்யோ ப்ரென்ட் இதுக்கு தான் இவளோ கவலைப்பட்டீங்களா நானும் பயந்திட்டேன் அது எல்லாம் சரியாகும் நீங்க கவலைப்படாம வேலையை பாருங்க என்னாலே முடிஞ்சா ஏதாவது
பண்ணுறேன் சரியா?..”

“சரி ஏதோ நீ இருக்கிற தைரியத்துலே எல்லாம் பண்ணுறேன் ப்ரென்ட்டு பார்த்துக்கோ…” என்று ஏதோ நிம்மதி பெருமூச்சுடன் போனை வைத்தார்.

இரவு தென்றலோடு மொட்டை மாடியில் நின்று வானை வெறித்துக் கொண்டிருந்தவனின் காதில் விசும்பல் சத்தம் கேட்க அத் திசையை நோக்கி போக அங்கு தரையில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தான் அகி.

அவன் அழுவதை பொறுத்துக் கொள்ளாதவனாய்....

“ச்சே இப்போ எதுக்கு அழுகுற நான் இன்னும் உசுரோட தான் இருக்கேன் ஒப்பாரி வைக்காத…” என்றவனை நிமிர்ந்து பார்த்தவன் அவனது வார்த்தையில் அறைந்து விட்டான் “என்ன பேச்சு பேசுறடா வாய் இருந்தா என்ன வேணாலும் பேசுவியா?....” என்றவன் கோபமாக சீற அவனை விசித்திரமாக பார்த்தான் யுவா.

“இப்போ என்ன அவளை நான் லவ் பண்ணினதை உன்கிட்ட சொல்லாம மறைச்சிட்டேன் அதுக்கு தானே கோபப்படுறே சாரிடா எனக்கு சொல்லனும் தோனலை ஏன்னா இதுவரைக்கும் அவகிட்ட ஒழுங்கா பேசினது கூட இல்லை பிடிச்சிருக்குன்னு சொன்னனே தவிர அவகிட்ட விலகி தான்டா இருந்தேன் ஏன்னா நான் யார் மேலயாவது அதிக பாசம் வெச்சா அந்த கடவுளுக்கு தான் பொறுக்காதே என்னோட அம்மா அப்பா அடுத்தது அத்தை எல்லார் மேலயும் பாசமா இருந்தேன் ஆனா அவங்க என்னை விட்டு போய்ட்டாங்க இதை எல்லாம் நினைச்சு பார்க்கிறப்போ மனசுக்கு ஒரு பயம் என்னை அறியாமலே இருந்திச்சு அதோட எனக்கே ஒரு உறுதியான நம்பிக்கை இல்லாதப்போ எப்பிடி அவளை நான் காதலிக்கிறேன்னு உன்கிட்ட வந்து சொல்ல முடியும் அதோட இது வரைக்கும் இதை தவிர வேற எதையாவது மறைச்சிருக்கேனா ஏன்டா என்னை புரிஞ்சிக்காம கஷ்டப்படுத்துறே....” என்றவனை அணைத்துக் கொண்டான் யுவா.


“சாரிடா எனக்கு புரியிது ஆனா என்கூடவே இருந்தவன் என்கிட்ட மறச்சிட்டானேங்கிற ஆதங்கம் தான் என்னை கோபபட வெச்சிட்டு அதோட நீயும் சம்யுக்தாவும் பேசினதை கேட்டேன் அப்போதான் புரிஞ்சது ஆனா ஈகோ இருக்கே அதான் சீக்கிரம் ஏத்துக்க முடியலை அதோட அவங்க வீட்டிலே எல்லாத்தையும் விசாரிச்சேன் நல்லப் பொண்ணு தான் அதுவும் என் பொண்டாட்டியோட ப்ரென்ட் சொல்லவே தேவையில்லை…” என்று சிரித்தவனை தாங்க்ஸ்டா என்று அணைத்துக் கொண்டான் அகிலன்.

இவர்களை தேடி வந்த சம்யுக்தா மற்றும் வேல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் “இதுக்கு தான் இவ்வளோ பயப்புட்டீங்களா இப்போ பாருங்க ரெண்டு பேரும் எப்பிடி இருக்காங்கன்னு…” என்று கூறி சிரிக்க “ஹப்பாடி நாம சமாதானப்படுத்தலாம்ன்னு வந்தோம் ஆனா நமக்கு சிரமம் வைக்காம அவங்களே வேலையை முடிச்சிட்டாங்க....” என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு விலகி நின்றனர்.

“யுக்தா நீ என்ன இந்த நேரத்துலே இங்கே....” என்று சிறு கண்டிப்புடன் யுவா கேட்க....

“நான் தான்டா வர சொன்னேன் சரி சரி எல்லாம் பேசி முடிச்சாச்சுல்லே கீழே போலாம் வாங்க…”

“அப்பா நீங்க போங்க நாங்க கொஞ்சம் பேசிட்டு வரோம் யுக்தா இங்க வா?...” என்றதும் அவள் அங்கு நிற்க மற்ற இருவரும் இடத்தை காலி செய்தனர்‌....

“என்ன விஷயம் சார்…” என்றதும் முறைத்தவன் “இது ஆபிஸ் இல்லை சார் போட யுவான்னே கூப்பிடு…”

ஹ்ம்ம் என தலையாட்டி நின்றவளின் அழகை ரசித்தவனை தன் புருவங்களை உயர்த்தி என்ன என்பது போல் கேட்டதும் தன்னிலை அடைந்தவன் “ஆஹ்... அது வந்து எனக்கு ஒரு ரீஷன் வேணும்…”

“ரீஷன் எதுக்கு?...”

“நீதான் சொல்லுவியே ஏதாவது ஒரு விஷயத்துக்கு பின்னுக்கு ஒரு காரணம் இருக்கும்ன்னு அது மாதிரி நீ என்னை காதலிக்க முடியாதுங்கிறத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும்லே அது எனக்கு தெரிஞ்சாகனும்..”

அவள் முகம் இறுகியது “தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க அதை விடுங்க....”

“எனக்கு தெரியனும் அந்த ரீஷன் எனக்கும் சரியா இருந்தீச்சுன்னா நான் பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட் பண்ணாம இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாமே அதான் கேட்டேன்....” என்றபடி அவளை ஓரே பார்வை பார்த்தவன் அவளின் பதிலை எதிர்ப்பார்த்து நின்றான்.


அவன் வேற பெண் என்றது மனதிற்குள் கவலையாக இருந்தாலும் என்னை விட நல்ல பெண்ணாக கல்யாணம் பண்ணி கொள்ளட்டும் என்ற எண்ணத்தில்
“ஹ்ம்ம்... சொல்றேன் ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒருத்தன் அறிமுகம் ஆனான் தூரத்து சொந்தம்ன்னு நல்லா
தான் பழகினான்
ஒரு முறை என் அம்மாக்கிட்ட வந்து என் அக்காவே பொண்ணு கேட்டான் ஆனா அவ வேற பையனை விரும்புறான்னு தெரிஞ்சதும் அடுத்தது என்னை டார்கட் பண்ணினான் என் கிட்ட எல்லை மீறி நடந்திக்கிட்டான் அப்போவே எனக்கு அவன் மேல வெறுப்பு தான் வந்தது ஒதுங்கி ஒதுங்கி போய்டுவேன் ஆனா அவன் என்னை விடாம என் பின்னாடியே அலைஞ்சுக்கிட்டு இருந்தான் ஒரு முறை யாரும் இல்லாத நேரமா வந்து என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான் நான் அவனை அடிச்சு ஒரு வழி பண்ணிட்டேன் ஒரு கட்டத்துக்கு மேல என்னாலே முடியலை அந்த நேரம் வந்த ரிஷிண்ணா தான் எனக்கு எதுவும் ஆகாம காப்பாத்தினான் அதோட அவன் கையை முறிச்சு மிரட்டி அனுப்பி வெச்சிட்டான் இது யாருக்குமே தெரியாது அண்ணா யார் கிட்டயும் சொல்ல வேணாம்ன்னு சொல்லிட்டு அவனை என் பக்கம் தலை வெச்சுக்கூட படுக்க கூடாதுன்னு அடிச்சு அனுப்பிட்டான்…”

“ஆனா அவன் சொன்ன வார்த்தைகள் இன்னும் என்னாலே மறக்க முடியலை நீ பணம் காசி இல்லாத நாய் உனக்கு எதுக்கு கல்யாணம் அதுக்காக…” என்றவளுக்கு வார்த்தை எழவில்லை உடம்பை வித்து என் கூட வாழு நான் உனக்கு வாழ்க்கை பிச்சை போடுறேன்னு என் அப்பாவோட குணங்களையும் என்னோட பின்புலத்தை வெச்சு அப்படி கேவலமா நடந்துக்கிட்டான்…”
என்று திக்கி திணறி சொல்லிக்கொண்டவளுக்கு எத்தனையோ வருஷத்திற்கு பிறகோ தெரியவில்லை அனைத்தையும் தேக்கி வைத்த கண்கள் கண்ணீரை சிந்தியது.... அவள் சொன்னதும் அவனின் நரம்புகள் புடைக்க கோபம் தலைக்கேறியது இருந்தும் தன்னவளுக்காக அப்போதைக்கு கட்டுப்படுத்திக் கொண்டான்.

“அன்னையிலே இருந்து தான் எனக்கு ஒரு வைராக்கியமும் வெறுப்பும் உண்டாகிச்சு என் லைப்லே வர எந்த பசங்களை எனக்கு நம்பனும்ன்னு தோனலை வர ஆம்பிளங்க எல்லாரும் அதுக்காக மட்டும் தான் பொண்ணுங்களை யூஸ் பண்ணுவாங்கன்னு ஒரு எண்ணம் எனக்குள்ள வந்திடுச்சு விலகியே இருந்தேன் எங்க இப்பிடியே இருந்தா அம்மா கல்யாணம் பண்ணி வெச்சிடுவாங்களோன்னு ஒரு பயம் ஒருபக்கம் நமக்கு ஒரு அடையாளம் இருந்தா தான் இன்னொருத்தன் மதிப்பாங்கிறதாலே தான் பிஸ்னஸ் பண்ணலாம்ன்னு இறங்கினேன் இப்போ போதுமா தெரிஞ்சிடுச்சுல்லே விட்டிடுங்க ப்ளீஸ்..” என்று அழுதவளை அருகில் இழுத்து கண்ணீரை துடைத்து விட்டவன் “இது தான் காரணமா உனக்கு அப்பிடி தோனலாம் ஆனா எல்லாரும் அவனை மாதிரி இருக்க மாட்டாங்க புரிஞ்சிதா நீ இனிமே அழக்கூடாது வா..” என்று கீழே கூட்டி வந்தவன் எல்லாரிடமும் சொல்லிவிட்டு காரில் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.


அவளிற்கு தண்ணீரை எடுத்துக் கொடுத்தவன் குடிக்க வைத்து “எதுக்கும் கவலைப்படாத உன்னோட அந்த மனநிலையிலே இருந்து வெளியே வா அப்போ தான் உன்னை நீயே புரிஞ்சிக்கலாம்…” என்றவன் அவளை வீட்டில் இறக்கி விட இறங்கியவள் திரும்பி அவனிடம் வந்து “ஆனா நான் நினைச்ச எண்ணத்தை ஒரே நாள்ல தோற்கடிச்சிட்டிங்க மிஸ்டர் யுவா..” என்று வீட்டிற்குள் ஓட அப்போது தான் அவனுக்கு அவள் சொன்ன வார்த்தைகள் புரிய “தாங்க்ஸ்டி பொண்டாட்டி என்னை புரிஞ்சுக்கிட்டத்துக்கு…” என்றவன் அவள் சென்றதையே பார்த்து விட்டு வண்டியை
எடுத்தான் முகம் முழுவதும் புன்னகையுடன் மனது இலேசாகியது போல் ஓர் உணர்வு…
 
Top