"சொல்லாம நின்டுட்டன்... அதான் கலைச்சு பிடிச்சு, சண்டை போடவும் வேலை வாங்கவும் ஆள் தேடி இருப்பான். காணேல என்டதும் வந்திருக்கும் அந்த விருமாண்டி." என்றாள் சலித்தவாறு கூறியவளை கூர்ந்து நோக்கியவள்.
"எனக்கென்னமோ அப்பிடி படேலயே! ஒரு நாளுக்கே உன்னை ரொம்ப மிஸ் பண்ணி இருபாரோ என்டு தான் படுது...
ஏன்டி மைனா! உனக்கு அப்பிடி ஏதாவது படுதா...?" என்றாள் ஏதோ குடைவது போல் இருக்க,
மைனாவிடம் தன் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு.
"ஈஈஈஈஈஈஈ......" என இளித்தவளோ,
"எனக்கும் அப்பிடித்தான் இருக்கு... ஆனா அந்த மூஞ்சிக்கு ரொமான்ஸ் வராதிடி... அவனே லவ் பண்ணாலும் நீ வேண்டாம் என்டுடு..." என்றவளை துஷா முறைக்க.....
"என்னை முறைக்குறது விட்டுட்டு, அந்த போன் கனக்க நேரமா அடிக்குது.. அதை என்னன்டு கேள்..!" என்றாள் துஷாவை திசை திருப்பும் பாெருட்டு.
"அது எப்பிடி அடிக்கும்? நான் தான் அதில சிம்ம போடேலயே!" என்றிட,
"அவன் போட்டு தந்திருப்பான்." போனை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டாள் சைலு.
"ஹலோ யாரு?" என்ற ஆண் குரல் கேட்கவும்.
மைனாவிடம் பேசும்படி சைய்கை செய்தாள் சைலு.
முதலில் மாட்டேன் என்று செய்கை தெய்தவள், மீண்டும் மீண்டும் ஹலோ என்ற குரல் கேட்டுக்கொண்டே இருக்க..
"என்ன சார்! நீங்கள் போன போட்டுட்லே, எங்கள யாரெண்டுறீங்கள்........" என்றாள் கறார் போல் மைனா..
"நான் ரதன்...." என்றதும் தான், சொல்லி வைத்தது போல் இருவரும் ஒரே சேர துஷாவின் புறம் பார்வையை திருப்பினார்கள்.
"சொல்லுங்க சார்......" என்றவளிடம்,
"நீங்க....?" என்றான் எதிர் கேள்வியாய்..
"நீங்க வரேக்க துஷாவோட நின்டனே!" என்று அவளும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள்.
"ஓ...... ஏன் போன் எடுக்க இவ்வளவு நேரம்? துஷாவுக்கு இப்ப எப்பிடி இருக்கு?
சாப்பிட்டாளா? மருந்து போட்டாளா...?" என்று தொடர்ந்து வந்த அவனது அக்கறையான கேள்வியில், துஷாவை இருவரும் சந்தேகமாக நோக்கினார்கள்..
அவர்களது பார்வையின் மாற்றத்தை அவள் கண்டு கொண்டாலும், அதை அவர்களிடம் வெளிக்காட்ட முடியாதவளோ!
"என்னை எதுக்குடி பாக்கிறிங்கள்....? முதல்ல அவனுக்கு பதில சொல்லீட்டு, வைச்சு தொலையுங்கோ" என்றாள் அவர்களிடம் சைகையால்.
"ஆ....... சாப்பிட்டாள்... மருந்தும் குடிச்சாச்சு.... இப்ப பீவர் நின்டுட்டுது.."
"அப்ப துஷாவோட கதைக்கலாமா? குடுகிறிங்களா?" என்றதும் தான் தாமதம்.
முந்திக்கொண்டவளோ, "நான் தூங்கிட்டன் என்டு சொல்லு" என்றாள் அவசரமாக.
அவளும் அதே போல சொல்லி போனை வைக்கப்போன நேரம்..
"அவளை கொஞ்சம் கவனமா பார்...." நாளைக்கே வேலைக்கு வரோணும் என்டில்ல...
அதிகமா ஒரு நாள் வேணும் என்டாலும், ஓய்வெடுத்துட்டு வர சொல்லு." என்று கூறிவிட்டே போனை வைத்தான்..
அவன் போனை வைத்ததும் தான் தாமதம்,
"என்னடி நடக்குதிங்க? நீ அவனை ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு சித்தரிக்கிறதும், அவன் உன்மேல உருகோ உருகென்டு உருகிறதும்...
இதில ஒரு நாள் அதிகமா ஓய்வெடுக்கட்டாம்..... எவ்வளவு அக்கறை பாத்தியா மைனா....!
எது உண்மை என்டே தெரியலையேடி...!" என்றாள் கேலியாக அவளை வம்பிழுக்கும் நோக்கோடு..
உண்மை தானே! அவள் அவனைப்பற்றி சொன்னதற்கு எதிர்மறையாகவல்லவா எல்லாம் நடந்தேறுகிறது.. அதுவும் அவனது அக்கறை, அவளை சந்தேகம் கொள்ள செய்வதில் தவறேது..?
"இருக்கிற தலை இடியில, அடி வாங்கபோறீங்கள். அந்தாள் தான்... என்ன செய்யிறம்? ஏது செய்யிறம் என்டே தெரியாம செய்யிறான்.... நீங்க வேற.... அவனுக்கு குற்ற உணர்வுடி.!
அவனால தான் எனக்கிப்பிடி ஆகிட்டுதோன்டு... அதான் இந்த கரிசனை...
நீங்களா ஆளுகொரு கற்பனை பண்ணாம... சாத்தீட்டு உங்கட வேலைய பாருங்க" என்றாள் எரிச்சல் பாெங்க..
"நம்பீட்டம் போ! இப்ப உனக்கு விளங்கேல என்டா பிறகு விளங்கும்.." என்ற சைலு..
"வாடி இது படுக்கட்டும்.. நாங்கள் உன்ர வீட்டுக்கு போட்டு வருவம்.. நைட்கு சாப்பாட்டுக்கு சொல்லீட்டு வாறன்.... நீ படு! யாராவது கதவை தட்டினா திறக்காத..." என்றவள் மைனாவை அழைத்து சென்றாள்.
'என்ன எல்லாம் கதைக்குதுங்க இந்த மென்டலுகள்...?.
அதுக்கு ஏத்தா மாதிரி, இந்த நெட்டாங்கு வேற.... சாம்பிறாணி போடுறான்.
தொல்லை விட்டுது என்டு பேசாம இருக்க வேண்டியது தானே! ஒன்டு கிடைச்சிட்டுது... எப்பவும் இனி அந்த நெட்டாங்கோட என்னை சேர்த்து வைச்சு கேலி பண்ண போகுதுகளே.!
ஒரு வேளை இவளுங்கள் சொன்னது போல அவனுக்கும் அப்பிடி எண்ணம் இருக்குமோ?' என்று தோன்றிய மறுநொடியே, தன்னை திட்டிக்கொண்டாள்.
'யாருக்கு? அவனுக்கா? அதுவும் உன்மேல....?
போவியா? எப்போ பாத்தாலும், எரிஞ்சு விழுவான்... இல்லை என்டா முரட்டு தனமா நடக்கிறான்.. அவனுக்கு உன்மேல லவ்வு......?
ஆனால் ஏன் கொஞ்சக் காலம், எந்த தொந்தரவும் செய்யாம அமைதியா இருந்தான்....? அது தான் அவன் குணம் என்டா.... இப்ப ஏன் இப்பிடி நடக்குறான்....?
வர்மன் அண்ணாவோட கதைச்சது தான் காரணமா இருக்குமோ.?
ஓம்.... தானே! என்னையும் அண்ணாவையும் சேர்த்து வைச்சு தப்பா வேற கதைச்சானே...!
இவன்ர அசிங்கமான கதைய கேக்க முடியாம, நானும்,
எங்களுக்குள்ள அப்பிடி தான்... அதை கேக்க நீ யாரு என்டதுக்கு தானே கழுத்தை நெரிச்சிட்டே ஏதோ சொன்னான்.. என்ன சொன்னான்....?' யோசித்தவள் அப்போது சொன்ன வார்தையினை இப்போது மீட்டுப்பார்த்தாள்..
'என்னை கேள்வி கேக்கிற உரிமை தனக்கு மட்டுந்தான் இருக்கென்டு தானே சொன்னான்..... அதுக்கு என்ன அர்த்தம்.?
இப்ப இவ்வளவு உரிமை எடுத்துகிறதும் அதனால தானா?' ஒரு நொடி அலை பாய்ந்த மனது மீண்டும் முட்டுச்சந்தில் முட்டி நின்றது..
'வேண்டாம் துஷா! உனக்கு இருக்கிற பிரச்சினை காணும்...
புதுசா ஒன்டை இழுத்து வைக்காத.....
யாரு என்னவா நினைச்சாலும், நீ மனசுக்குள்ள கண்டதையும் போட்டு குழப்பாத...
பிறகு அம்மாவையும் அப்பாவையும் போல, யாருமில்லாத அனாதையா, போக வேண்டியதா போயிடும்..
இனி உன்ர வாழ்கேல நல்லதோ கெட்டதோ.... எது என்டாலும், சொந்தங்கள் தான் முடிவெடுக்கோணும்..' என தனக்குள் சொல்லிக்கொண்டவள்.
ரதன் தன்னை விரும்புவது தெரிந்தாலும், அதை அவனுக்கு காட்டி கொள்ள கூடாது. ஏன் இனி அவன் மனதில் தேவையில்லாத ஆசையையும், தான் வளர்த்து விட கூடாது என்ற முடிவுடனே இருந்தாள்.
காலை கதிரவன் கண்விழிக்க, காணங்களுடன் அவனை வரவேற்றன வண்ண பறவைகள்.
போனில் ஒலித்த அலாரத்தை அணைத்த சைலு, எழுந்து கொள்ள.... வழக்கம் போல் கையில் தேனீர் கோப்பையுடன் அவள் முன் நின்றாள் துஷா.
"என்னடி! உடம்பு இப்ப சரியாச்சா?"
"அது தான் நேத்தே சரியாச்சே! நானும் நித்திரை வரும் என்டு நினைச்சு படுத்தா... எங்க அது வருது....? வழமையா எழும்புற நேரம் முளிப்பு தட்டீட்டுது.
உடம்புக்கு தான் சுகமாச்சே! பிறகு எதுக்கு லீவ் எடுப்பான்.?
அது தான் வேலைக்கு போகலாம் என்டு வெளிக்கிட போறன்" என்றாள்.
"அதான் நெட்டாங்கு ஒரு நாள் கூட நின்டு வர சொன்னானே! பேசாம ஓய்வெடுத்துட்டு போ!" என்றாள் அக்கறையாய்..
"விட்டா படுக்கை நோயாளி ஆக்கிடுவ.... அது சாதாரண பீவர்டி. இப்ப இல்ல.... அதுவுமில்லாம நீ உன்ர பாட்டுக்கு போயிடுவ....
இங்க நான் இந்த பிஞ்சுபோன புஸ்தகத்தையும், கறல் கட்டின ஜன்னலையும், உடைஞ்சு போன ஓட்டையும் எண்ணிக்கொண்டு படுத்திருக்காேணுமாே?
எனக்கு ஒன்டுமல்ல.... வேலைக்கு போகோணும் சைலு! அங்க அந்த நெட்டாங்கு, அண்ணாவை தான் புரட்டி எடுக்கும். அதோட வருஷக் கடைசி வேறடி! நிறைய வேலை இருக்கு. அத முடிக்கோணும்" என்றவள்,
"சரி கதைச்சுக் கொண்டே நிக்காம வெளிக்கிடு!" என்றாள்.
"சரிடி! ஆனா முந்தாநேத்தையா மாதிரி, பொழுது போனதே தெரியாம, வேலையில ஓவரா சின்சியரா இருக்காத! பிறகு அந்த போனையும் பாவிச்சுக்கோ.
ஏதாச்சும் என்டா போன் பண்ணு.
ஈவ்னிங்க் வர்மனையே கூட்டிக்காண்டு வரச்சொல்லுறன்..
வெக்கம் பாக்காம ஏறி வா! பரியுதா?" என்றாள் கண்டிப்போடு
'என்னடி! இவ்ளோ கரிசனையா இருக்க..." உண்மை தெரியாது என்ற எண்ணத்தில் நக்கல் செய்தாள் துஷா..
"வாயை கிழறாத.... பிறகு இருகிற மரியாதை இல்லாம போயிடும்....
நீயெல்லம் ஒரு தோழி என்டு சொல்லாதடி!" என்று ஆதங்கமாய் ஆரம்பித்தவள், நினைவு வந்தவளாய் குளியலறை சென்று மறைந்தாள்.
கோபமாக ஆரம்பித்து விட்டு பாதியிலே விட்டு சென்றவள் சொல்ல வந்தது புரியாதவோ,
'இது எப்ப தான் விளங்குறா மாதிரி கதைச்சிது.?' தனக்குள் முணுமுணுத்து தயாராகச் சென்றாள்.
கணக்கிற்காக அங்கிருந்தவற்றை எண்ணியவறு நின்றவள், பின்னால் கேட்ட குரலில் திரும்பிப் பார்த்தாள்.
ரதன் தான்...
"இப்ப உடம்பு எப்பிடி இருக்கு?" பொதுவான விசாரணை தான்..
"சரியாச்சுது சார்.." என்றவள்,
"டாெக்டரை கூட்டிக்கொண்டு வந்துக்கு ரொம்ப நன்றி. நான் கேள்விபட்ட வரையில, எந்த முலாளியும் தொழிலாளிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரேல. ஆனா நீங்க கிரேட்!
சரியா கரைச்சல் தந்திருந்தா மன்னிச்சிடுங்கோ.... போகேக்க டாெக்டர் பீஸ் தந்துடுறன்... நேற்று தரேலாம போச்சு...
அப்புறம் அந்த போனும் நிறைய விலை வரும் என்டு என்ட ஃப்ரண்ட் சொன்னாள். அதனால அந்த போன் எனக்கு வேண்டாம்.... நான் வேற வாங்குறன்.
தப்பா எடுத்துக்க வேண்டாம்... அதை பாவிக்கிற அளவுக்கு நான் பெரிய பணக்காறியில்லை.
அதை விட அந்த போன்ல கதைக்கிறதுக்கோ, பாவிக்கிறதுக்கோ சொந்தம் என்டும் எனக்கு யாருமே இல்லை.
என்ர ஃபேக் கீழே இருக்கிறதால, இப்ப எடுக்கேலாது.. போகேக்கயே தாறனே!" என்றவள், அதோடு சொல்ல வேண்டியதை சொல்லியாயிற்று என்பது போல் வேலையில் மும்மரமானாள்.
ரதனிடம் தான் பேச வார்த்தை இல்லாமல் போனது.
கோபம் வந்தாலும், 'இவளிடம் காட்டப்போனால், மறுபடியும் காய்ச்சல் வந்து விடும்.. அவள் துடிப்பாளோ இல்லையோ தான் துடித்து விடுவேன்.' என எண்ணியவன் சிந்தையில் அளது வார்த்தைகளே வலம் வந்தது..
'டாெக்டர் பீஸ் தாறாளாமா....? நான் என்ன அவளின்ர ஆயாவாே? இவ படுக்கேல கிடக்கேக்க தொண்டு செய்ய....?
இப்போது கூட தனது மனதை புரிந்து கொள்ளாதவளை நினைத்து வருந்துவதா? கோபபடுவதா? என்றே பட்டிமன்றம் நடத்தி விடலாம் அவன் மனதுக்குள், அத்தனை விவாதம் நடந்தது.
ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியாமல் அவ்விடம் விட்டு சென்றான்.
அவன் முகம் மாற்றத்துடன் சென்றதை பார்த்தவள்,
'சாரி சார்! எனக்கு தெரியுது... பட் உங்களுக்கு ஏற்றவள் நான் கிடையாது.
எனக்கே எங்க என்ர முடிவிடம் என்டே தெரியேல.
எங்க விழுகிறனோ... அங்க முளைக்கிற விதை என்னோட வாழ்க்கை!
ஆனா நீங்கள் நந்தவனத்து செடி! உன்கட வாழ்க்கை வேற...' என நினைத்தவள் தனது வேலையில் கவனமானாள்.
மதிய நேரம் எல்லா பகுதியையும் பார்க சென்றவன், துஷா பகுதிக்கும் சென்றான்.
நேற்றைய வேலையும், இன்றைய வேலையும் சேர்த்து செய்து கொண்டிருக்கவும், அவளையே சிறிது நேரம் பார்த்திருவன்,
'உன்னை பற்றி தெரியிறதுக்கு ஒரு துரும்பு கிடைச்சா போதும்டி.! இந்த அழுகுணி கோலத்துக்கும், வாழ்கை வெறுத்த தோற்றத்துக்கும் நான் முடிவை கொண்டு வந்திடுவன்.
கடுமையா தவிக்க விடுற என்னை.!
எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சு என்னெல்லாம் பண்றன் பார்!' என்றவன் நடக்க.
"சார் சார்....." என்று அங்கு வேலையில் நின்ற ஆணொருவன் வந்து அழைத்தான்..
"சொல்லு...." என்றவனிடம்,
"அவர் ஏதோ கேக்கிறார்..." என்று யாரையோ காட்டிவிட்டு அவன் சென்று விட்டான்..
அதே நேரம் தண்ணிர் குடிப்பதற்காக வந்தவள், ரதனுடன் பேசிக்கொண்டிருந்த, ஐம்பது வயதை தாண்டயவரைக்கண்டு,
"வாசன் அங்கிள்!" என்று சந்தோஷத்தில் அவரை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தவள், அப்போது தான் அவர் எதிரில் நின்றவனை கண்டாள்..
எங்கு அவர் தன்னை கண்டால், ரதன் முன் காட்டி கொடுத்து விடுவாரோ என்றெண்ணி, பக்கத்தில் இருக்கும் ஓடையில் ழிந்து கொண்டாள்.
பேசி விட்டு ரதன் சென்றதும், அதை உறுதி செய்தவள், அவர் எதையோ பார்த்துக்கொண்டிருக்கவும், பின்னால் சென்று
"அங்கிள்...." என்றழைந்தாள்..
அவள் குரல் கேட்டு திரும்பியவரும், முதலில் அதிர்ந்தாலும், பின்பு சந்தோஷமாகவே,
"துஷி குட்டி...
நீ இங்க தான் இருக்கிறியா?" என்றார் நம்ப முடியாது..
ஓடி வந்து அவரை அணைத்து கொண்டவள்,
"அங்கிள்....... அங்கிள்......" என்று முடிந்தவரை அழைத்து தேம்பி அழவே ஆரம்பித்து விட்டாள்..
"துஷி குட்டி.... அழாதடா....... இங்க பாரு! அதான் அங்கிள் வந்திட்டனே! பிறகென்னா?" அவருக்கு அவள் கண்ணீர் புரியாமல் இல்லை.. ஆனால் இந்த நொடி ஆறுதல் கூறவேண்டுமே!
"ஏன் அங்கிள்..... எல்லாரும் என்னை தனியா விட்டு போனீங்கள்?
நான் அப்பிடி யாருக்கு என்ன பாவம் செய்தன்? எனக்கு மட்டும் ஏன் அங்குள் இப்பிடில்லாம் நடக்குது.?" ஆற்றாமையோடு அவர் தோளில் சாய்ந்தவாறே கேட்வளுக்கு ஏனோ தான் இருக்கும் இடம் மறந்து போனது.
"துஷி..... துஷி...... இங்க பாருடா! இப்ப இங்க நின்டு கொண்டு அழுதடா!
யாரா்சும் பார்த்தா... ஏதாவது நினைப்பினம்... முதல்ல கண்ணை துடை!" என அவளை தன் மீதிருந்து எழுப்பி கண்ணை துடைத்து விட்டவர்,
"நீ ஏன் ஊரை விட்டுட்டு ஓடி வந்தனி?
அங்கிள் உன்னை அங்க வந்து தேடினன் தெரியுமா.... உன்னை தான் காணேல.
அன்னம்மா தான் உன்னை பஸ் ஏத்தி விட்டன் என்டவா....
ஆனா இருட்டில எந்த பஸ் என்டு தெரியேல என்டதால, முடிஞ்ச அளவு அங்கிள் உன்னை தேடினன்டா. இப்ப பாத்தா... என்ர ஊரிலையே நிக்கிற...
அது தெரியாம நான் எங்கயோ எல்லாம் உன்னை தேடி இருக்கன்" என்று வராத சிரிப்பை வலுகட்டாயமாக வரவழைத்தவர்,
"இங்க தான் வேலை செய்யிறியா?
பெரிய முதலாளி பொண்ணு..... இங்க அதே வேலையில தொழிலாளியா வேலை பாக்குறா..." பெருமூச்சொன்றை இழுத்து விட்டார்.
அவள் இன்னமும் அழுகையை நிறுத்தாமல் இருக்கவே,
"துஷி.... இங்க யாரோவ தங்கி இருக்க.? என்றார்.
அவளும் தான் வந்ததில் இருந்து சைலுவை பார்த்தது என அனைத்தையும் கூற.
"பெத்தவ செய்த புண்ணியம் தான், இவ்ளோ தூரம் உன்னை காப்பாத்துது." என்றார் கவலையாய்..
"அங்கிள்! உங்களுக்கு தான் அம்மாக்களின்ர சொந்தக்காறங்கள தெரியுமே! என்னை அங்க கூட்டிக்கொண்டு போங்கோவன்" என்றாள்.
"அவசர படாதடா துஷி! இங்க எதுவும் பேச வேண்டாம்.உனக்கு எத்தினை மணிக்கு வேலை முடியும்"
"அது... ஆறு மணி ஆகும் அங்கிள்! நான் வேணும் என்டா, அரை நாள் லீவ் சொல்லிட்டு வந்திடுறன்.." என்றாள்.
"அப்ப சரி" என்றவர், அருகில் இருக்கும் பார்க்குக்கு மூன்று மணி அளவில் வர சொன்னவர், அவளை மீண்டும் அணைத்து நெற்றியில் முத்தம் வைத்து சென்றார்.
துஷாவிற்கோ ஏக பட்ட சந்தோஷம்..
எங்கே தனது உறவுகளை காணாமலே இருந்து விடுவேனோ என்றிருக்க, பெரிய புதையலே தன்னை தேடி வந்தது போல் உணர்ந்தாள்.
கீழே வந்தவன், கவுண்டரில் ஏதோ சல சலப்பாக இருக்கவும்,
"என்ன பிரச்சினை?" என்றான்..
பெண்ணொருவர் முந்திக்கொண்டு வந்து,
"இடையில் நீங்கள் யாரு?" என்றாள் சத்தமாக..
"சார் தான் இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு ஓனர்" என்றாள் கவுண்டரில் நின்ற பெண்.
எதையோ முண்டி விழுங்கியவளோ,
"இங்க என்னை கள்ளி என்டினம் சார். என்னை பாத்தா, திருடுறவ மாதிரியா இருக்கு?" என்றாள் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு..
அவளை ஏற இறங்க ஒரு முறை பார்த்தான்.
மூன்று நபர்கள் நிற்க கூடிய இடத்தை அவள் மாத்திரமே பிடித்திருந்த தோற்றமும், வாய் நிறைய வெற்றிலை சப்பி, எச்சில் கடவாய் வளிய வடிவதை பார்த்தவன்,
'இது திருடி மாதிரி இல்லாம.... தேவ சேனா மாதிரியா இருக்கு.?' மனதில் தான்..
தனது ஊளியர் புறம் திரும்பி,
"என்ன திருடு போச்சு?" என்றான்.
"தெரியேல... ஆனா இவ எதையோ எடுத்து, சட்டைக்குள்ள வைச்சத தீபன் பாத்திருக்கிறான். கேட்டா நான் திருடினத எடுத்து காட்டு என்டு சண்டைக்கு வாரா....
அவங்க சட்டைக்குள்ள வைச்சதை எப்பிடி சார் நாங்கள் எடுக்கேலும்...?"
"சரி.. முதல்ல கூட்டத்தை கூட்டம... உங்கட வேலைய பாருங்கோ... நான் என்னன்டு பாக்கிறன" என்றவன்,
"நீங்கள் திருடேல தானே! என்றான் அவரை அளவிடும் பார்வையோடு..
"என்ன தம்பி நீங்களும்... அவயல் தான் விவரம் இல்லாம கதைக்கினம் என்டா..." என மீண்டும் குரலை உயர்த்த ஆரம்பிக்க..
"சரி அப்ப இங்கயே இருங்கோ!" என அங்கிருந்த ஓர் இருக்கையில் இருத்தியவன், தீபனை அழைத்து,
அவாவ பார்.. நான் சீசீடீவிய செக் பண்ணீட்டே வாறன்.." என உள்ளே சென்றவன் எதிர் பார்கவில்லை..
ஒரு திருட்டை பிடிக்க சீசீடீவியை ஆராய்ந்தவனுக்கு, இரண்டு திருடர்கள் மாட்டிக் கொண்டனர்.
அந்த பெண் கூறுவது பொய் என அவள் முழிப்பதிலே தெரிந்தாலும், உறுதி செய்ய காமெராவை ஆராய்ந்தான் ரதன்.
பெரும் திரையில் எல்ல பகுதியினது காமெராவும் படம் பிடித்து காட்ட, முதலில் திருட்டு போன பகுதியை பார்த்தவன், அவர் திருடியது உறுதியாகவும், அவரை எச்சரித்து விடும்படி சொன்னான்.
சாதாரணமாக அனைத்து பகுதியையும் காட்டுமாறு, திரையை சரி செய்தவனுக்கு எல்லா பகுதியையும் அந்த திரை காட்டியதும், ஏனோ ஓர் இடத்தில் மாத்திரம் அவன் விழிகள் நிலை குத்தி நின்று கொண்டது.
யாரோ ஓர் ஆணொருவரை துஷா அணைத்திருந்த காட்சி தான் அது..
அந்த திரையை மட்டும் பெரிதாக்கிப் பார்த்தான்.
'யாரு இது? அவளின்ர அப்பாவோ!' என நினைத்தவன், இருக்க வாய்ப்பில்லை என்றே தேன்ற..
தனக்கு யாருமே இல்லை என்டு தானே சொன்னா...
இப்ப இப்பிடி அணைக்கிற அளவுக்கு இவர் யார்? இவங்களுக்க என்ன உறவு?' என ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும், தனக்கு தேவயானது கிடைத்த சந்தோஷம் அவனிடம்.
புரியவிலாலை என்றாலும் அவர்கள் இருவரது உரையாடலையும் காமெரா வழியே நோட்டமிட்டான்..
அவர் விலகி சென்றதும் துஷா முகத்தில் தெரிந்த தெளிவே காட்டியது அவளின் மனதை.
'அப்படி என்ட இவர் இவளுக்கு மிக முக்கியமான ஒருவர்' என நினைத்தவன், அவர் படத்தை தனது போனில் பதிவிறக்கினான்.
அதை இன்னொருவர் நம்பர்க்கு அனுப்பியவன், உடனே அந்த நம்பருக்கு உரியவரிடம் தொடர்பு கொண்டு, ஏதோ பேசியவன், இறுதியில் முடிந்த அளவு தனக்கு விரைவில் பதில் வரவேண்டும் என கூறி போனை வைத்தான்.
தொடர்வாள்.......