• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

14. திகட்டாத தீ நீயே!

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
671
"அப்புறம் என்ன..? தாப்பூலம் இருக்கு எடுத்திட்டு வாம்மா.." என்றவர்.. "நல்லவேளை எதுக்கும் இருக்கட்டும் என்று எடுத்து வைச்சது." என தன்னை தானே மெச்சிக்கொண்டார்.

நிச்சயம் முடிந்து இரண்டு நாட்கள் கடந்திருக்க.. கல்லூரியில் இருந்து சோர்ந்துபோய் வீட்டுக்கு வந்தவளை அழைத்த யோகலிங்கம்.. ஒரு சில பத்திரிகைகளை காட்டியவர்...

"மாப்பிள்ளை வீட்டில இருந்து அனுப்பிச்சிருக்காங்கடா.. உனக்கு இதில எது பிடிச்சிருக்குன்னு சொல்லு.. அதுவே அடிச்சிடுவோம்.." என அவள் கைகளில் பத்திரிக்கையினை திணித்தார்.

வைத்த கண் வாங்காது அதையே பார்த்தவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை..

"ப்பா... எனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்லப்பா..." என்றார் கலங்கிய விழிகளுடன்.

"என்னம்மா சொல்லுற..." என அதிர்ந்து எழ...

"ஆமாப்பா... நான் ஒருத்தர விரும்புறேன்.. அவரும் என்னை உயிரா நேசிக்கிறாருப்பா.. அவரை தவிர மனசால கூட யாரையும் என்னால நினைக்கமுடியாது." என்றவள் பேச்சில் ஆத்திரமே உண்டானது அவருக்கு.

இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான். அன்றே அவகாசம் கேட்டார்.. அவர்களிடம் ஒத்துக்கொண்டுவிட்டு நிச்சயம் முடிந்தபின் இப்படி கூறினால் அவரால் என்ன செய்ய முடியும்..?


"உன்னை கேட்டு தானே நிச்சயம் பண்ணோம் சந்தியா..? இப்போ இன்னொருத்தன விரும்புறேன்னா, என்ன அர்த்தம்..? இப்பபோய் என் பொண்ணு யாரையோ காதலிக்கிறாளாம்ன்னு என்னால போய் சொல்ல முடியுமா...? அப்படி சொல்லிட்டு.. அவன் முகத்தில தான் என்னால முழிக்க முடியுமா...?" என ஆதங்கமானவர்..

"சொல்லு.... எத்தனை நாள் என்னை இப்பிடி ஒரு சூழல்ல சிக்க வைக்கணும்னு பிளான் பண்ண...? என் பொண்ணு என் பொண்ணுன்னு செல்லம் குடுத்து வளர்த்ததுக்கு.. நல்ல தண்டனை தந்திட்டல்ல...?" மகள் கடைசி நேரம் கழுத்தறுக்கிறாள் என்ற கோபத்தில் கத்தியவருக்கு மகளின் நிலையறிய வாய்ப்பில்லையே...!

"அப்பிடில்லாம் பேசாதிங்கப்பா... அவங்க உங்கள தப்பா பேசக்கூடாதுன்னு தான் எதுவும் பேசல.. ஆனா தனிமையில உங்ககிட்ட உண்மைய சொன்னா.. என் நிலமைய புரிஞ்சுப்பிங்கன்னு தான்பா அமைதியா இருந்தேன். என்னை புரிஞ்சுக்கிட்ட நீங்களே இப்பிடி பேசலாமா...?"


"என்ன புரிஞ்சுக்கிட்டு.. என்ன பிரயோஜனம்...? இப்படி கடைசி நேரம் என் கவுரவத்த கெடுப்பன்னு எனக்கு என்ன தெரியும்..?" என்று தலைதிருப்பி கொண்டவரின் உதாசீனம் அவளை காயப்படுத்த...

"என்னை மன்னிச்சிடுங்கப்பா.. நல்லதுன்னு பண்ண தப்பினால.. உங்க கவுரவம் போகும்ன்னு சத்தியமா நினைக்கலப்பா... என்னால அவரை விட்டு வரமுடியாத சூழல்.. மனசில ஒருத்தரை நினைச்சிட்டு பெயருக்கு இன்னொருத்தன் கூட வாழ முடியாதுப்பா.. ப்ளீஸ்ப்பா.." என காலில் விழுந்தவளை கண்டு கொள்ளாது சென்று விட்டார் யோகலிங்கம்.

பாடசாலை முடிவடைந்து வந்த ஆத்விக்கும் கண்ட காட்சி அது தான். புவனாவுடன் சேர்ந்து தமக்கையை எழுப்பியவன்..

"அழாதக்கா... நான் வேணும்னா அப்பா கூட பேசவா...?" என தமக்கையின் அழுகையினை கண்டு விம்மியவனை நெஞ்சோடு அணைத்து கொண்டவள்..

"இல்லடா.. எனக்காக பேசப்போய்.. அவருகிட்ட நீயும் திட்டு வாங்காத.. நிதானமா அப்பாக்கிட்ட நானே பேசிக்கிறேன்." என்று தடுத்துவிட்டாள்.


அறை வந்தவர் அமைதி வேண்டி கட்டிலில் அமர்ந்து விட்டார்.
சில நிமிடங்கள் தாமதத்தின் பின் கையில் காஃபியோடு வந்த புவனா...

"என்னங்க..." என அழைக்க... இத்தனை நேரம் தனிமை தந்த நிசப்தமோ என்னமோ... அவர் முகம் தெளிந்திருந்தது.

மனைவியை திரும்பி பார்த்தவர்.. அவர் கையிலிருந்த கப்பினை கண்டு..

"கொடு..." என வாங்கி பருகியவர் அருகில் அமர்ந்து கொண்டாள் புவனா.

"எப்பவுமே நீங்க இப்படி இல்லையேங்க.. இன்னைக்கு என்ன உங்க செல்ல மகள் மேலயே இவ்ளோ கோபம்...? "

நிதானமாக மனைவியிடம் திரும்பியவர்..
"என்ன செய்ய சொல்ற புவனா..? இப்பிடி ஒரு சிக்கல் வந்திடக்கூடாதுன்னு தான் அன்னைக்கு பயந்தேன். கடைசியில அதே போல நடந்தா கோபம் வராதா..? வாக்கு தரதுக்கு முன்னாடி ஆயிரம் வாட்டி யோசிக்கலாம் புவனா.. தந்ததுக்கு அப்புறம் அதைபத்தி சிந்திக்கவே கூடாது.

ஆனா இவ தெரிஞ்சே பண்ணிருக்கா.. அதுவும் பத்திரிக்கை அடிக்க போற வேளையில... நீயே சொல்லு.. நிச்சயம் முடிஞ்சதுக்கப்புறம் இந்த மாதிரி சொன்னா ஏத்துப்பாங்களா.? இல்லை நான் தான் அவன் முகத்தில முழிக்க முடியுமா...?" என்றார் நீதி வேண்டுபவரைப்போல


'சரி இப்போ என்ன தான் பண்ண போறீங்க..?"

"என்ன பண்றது....?
அவமேலயும் தப்பில்லை.. அதான் இந்த காதல் யாருக்கு எப்ப வரும்ன்னு சொல்லமுடியாதே...!

ஒரே பொண்ணு... அதுவும் செல்லமா வளர்ந்தவ.. என் கவுரவத்தை பார்த்து, அவ சந்தோஷத்த எதுக்கு கெடுப்பான்...?

கல்யாணத்தை நிறுத்திடுவோம்.. நல்ல வேளை பத்திரிக்கை அடிக்கதுக்கு முன்னாடி சொன்னா.. பத்திரைக்கை அடிச்சு எல்லாருக்கும் சொன்னதும் சொல்லியிருந்தா.. மானமே போயிருக்கும்.." என்றதும் சந்தோஷமாக எழுந்தவர்..

"இதை அங்கேயே சொல்ல வேண்டியது தானே... பாவம் புள்ள அழுதுட்டு படுத்திருக்கா..."



"அவ திடீர்ன்னு சொன்னதும் அந்த நேரம் வந்த கோபத்துக்கு கண்டமேனிக்கு திட்டிட்டேன். அப்புறம் தனிமையில யோசிச்சு பாக்கிறப்போ தான் என் தவறே புரிஞ்சிச்சு..." என்க.

"அப்பிடின்னா இப்பவே நான் போய் சொல்லிடுறேன்." என ஆர்பரித்து எழுந்தவர் கையினை பற்றி தடுத்தவர்.

"இப்போ வேண்டாம் புவனா.. நாளைக்கே வரதராஜன்கிட்ட நேரில போய் பேசிட்டு.. அந்த சந்தோஷத்தையும் சேர்த்து சொல்லுவோம். அப்போ தான் சப்ரைஸ்ஸா இருக்கும்." என்றவர் அறிய வாய்ப்பில்லை.

தவிர்க்க முடியாத சில காரணங்களால் இரவோடு இரவாக தன் காதலனுடன் சந்தியா ஓடிப்போவாள் என்று..

விடிந்ததும் மகளிடம் விஷயத்தை சொல்ல வந்தவர்கள் பார்த்ததது... மகள் இல்லாத வெற்று அறையினை தான். அதன் பின் எங்கு தேடியும் சந்தியாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

உயிராக வளர்த்த மகள் செய்த தூரோகத்தையும்.. தன்மேல் வைத்திருந்த அவளது நம்பிக்கையினையும் நினைத்தவருக்கு இயலாமையே தோன்றியது. தன்மேல் இருக்கும் பாசத்தில் என்றோ ஒரு நாள் தன்னை தேடி வருவாள் என இருந்தவருக்கு ஏமாற்றமே எஞ்சியது. அதன் வெளிப்பாடு தான் மகனிடம் அன்று அப்படி பேசியது.

சமாதானமாகாத ஆத்விக்கின் கோபம் மொத்தமும் அவரிடம் திரும்பும் என்று அவரும் எதிர் பார்க்கவில்லை..

அன்று தாமிரா ஒட்டி வைத்த கண்ணாடி வளையல்களை பார்த்தவனுக்கு அந்த வளையல் யாருடையதென்பது புரிந்து போனது.

அவன் வாங்கி வந்த பொருள் அவனுக்கு தெரியாதா..?

இரவு முழுவதும் அதே சிந்தனையில் இருந்தவன் விடிந்ததும் சென்றது வேல்முருகன் வீட்டிற்கு தான்.
அந்த காலை பொழுதிலேயே ஆத்விக்கை எதிர் பார்க்கவில்லை வேல்முருகன்.

"என்ன மாப்பிள்ளை... இவ்ளோ காலையிலயே..?" என வினவ.


"உண்மை ஒன்னு தெரிஞ்சுக்கணும் மாமா...?" என்றான் எடுத்த எடுப்பில்.

அவனது பேச்சில் யோசனை உண்டாக..
"உள்ள வாங்க.. எதுவா இருந்தாலும் உக்காந்து பேசலாம்..." என்றார்.

"ம்ம்" என உள்ளே வந்தவனை சூழ்ந்து கொண்டது மொத்த குடும்பமும்.
காலையிலேயே பேசவேண்டுமென்றால் எதையென வீட்டவர்கள் நினைப்பது? 'தாமிரா தான் ஏதோ தவறிழைத்து விட்டாள்' என நினைத்தார் வேல்முருகன்.


"அம்மா மாப்பிள்ளைக்கு குடிக்க சூடா காஃபி எடுத்திட்டு வாங்க.." என்றவரை மறித்தவன்...

"எனக்கு எதுவும் வேண்டாம் மாமா..
இப்போ எனக்கு தேவையானது தாமிரா யாரு..? உங்களுக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்" என்றான் அவரை அளவிடும் பார்வையோடு...

இப்படி ஒரு கேள்வியை ஆத்விக்கிடமிருந்து எதிர் பார்க்கவில்லை வேல்முருகன். நிமிர்ந்து ஓரமாக நின்று கொண்டிருந்த வடிவுக்கரசியை பார்த்தார்.. அவருமே அவரை கூர்ந்து பார்த்திருக்க..

"அதெல்லாம் இப்போ எதுக்கு மாப்பிள்ளை... இன்னொரு நாளைக்கு அதை பத்தி சொல்...." என்றவரை இடை மறித்தவன்.

"இல்ல மாமா... எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்.. தாமிரா நிஜமாவே உங்க மக தானா.. தாமிரா உங்க மகன்னா, அவளோட அம்மா யாரு... இப்போ அவங்க எங்க...?" என்றான் தன் கேள்விக்கு இப்போதே பதில் தெரிந்துவிடும் நோக்கில்.

சிறுதுநேரம் மௌனம் காத்தவர் பின் தன் மௌனத்தை தானே கலைப்பதைப்போல் தொண்டையை செருமிக்காெண்டு நிமிர்ந்தார்.


"தாமிரா அம்மா உயிரோட இல்ல மாப்பிள்ளை... எங்களோட சந்திப்பே அவங்க மரணம் தான்." என்றார்.

"என்ன சொல்லுறீங்க..?" என அவன் அதிர்ந்து நிற்க.

"ஆமா மாப்பிள்ளை... எனக்கும் தாமிராவுக்குமான உறவு அன்னைக்கு தான் ஆரம்பமானதே.."

"புரியல மாமா... அப்போ தாமிரா உங்க மக இல்லையா..? உங்க மக இல்லன்னா, ஏன் மண்டபத்தில தாமிரா உங்க மகன்னு சொன்னீங்க?"

"நான் தாமிராவை இப்பவுமே என் மக இல்லன்னு சொல்லலையே..! அவ நான் பெத்த மக கிடையாதே தவிர... அவ எங்க வீட்டு ரத்தம்." என்றவரை அவன் புரியாது நோக்கினான்.

"ஆமா மாப்பிள்ளை.. இத்தனை நாள் என் சம்சாரம் உற்பட எல்லாருமே தாமிரா எனக்கு தவறான வழியில பிறந்தவன்னு தான் பேசிக்கிட்டாங்க. ஆனா உண்மை அதில்ல.. தாமிரா என் தம்பி கதிரோட பொண்ணு." என்றான் புது பீடிகையோடு.

அதை கேட்ட வடிவுக்கரசியின் விழிகள் பெரிதாய் விரிய... ஆத்விக்கோ மொத்தமாகவே குழம்பிப்போனான்.


"எனக்கு ஒரு தம்பி இருந்தான் மாப்பிள்ளை.. அவன் பெயர் தான் கதிர். ரொம்பவே கெட்டிக்காரன்.. அந்த காலத்தில பன்னிரண்டாவதே பெரிய படிப்பு.. அதுக்கே கவர்மண்ட்ல ஒரு வேலை எடுத்திடலாம்.. ஆனா அவனுக்கு காலேஜுக்கு கிடைச்சிது. என்ன டவுண் சைட் காலேஜ் என்கிறதனால அங்கேயே பசங்களோட சேர்ந்து ரூம்ல தங்கி படிச்சான்.



ரெண்டு வருஷம் காலேஜ்ல படிச்சிட்டிருந்தவன் .. திடீர்ன்னு ஒருநாள் வீட்டுக்கு வந்திட்டான். என்னன்னு கேட்டா...

நான் ஒரு பொண்ணை விரும்புறேன்.. அவளை கல்யாணம் செய்துக்க போறேன்னு சொன்னான்." என அன்றைய நாளுக்குள் சென்றார்.

அதற்கு வடிவுக்கரசி சம்மதிக்கவில்லை.. சின்ன வயதிலேயே தம்பி மகளுக்குத்தான் தன் ரெண்டாவது மகன் என அப்போது பேச்சில் முடிவு செய்திருக்க.. வேறொருத்தியை எப்படி அனுமதிப்பார் அவர்.


"இதுக்குத் தான் படிப்புன்னு பட்டணம் போனியா..? நீ படிச்சு கிழிச்ச வரை போதும்.. உள்ளூரில ஒரு வேலைய பார்த்திட்டு, என் தம்பி மக கழுத்தில தாலிய கட்டுற வழிய பாரு" என்றுவிட்டார்.

"நீ என்ன சொன்னாலும் சரி.. சந்தியாவ தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்.. ஏன்னா அவ வயித்தில என் குழந்தை வளருது.." என்றவன் பேச்சில் மொத்த குடும்பமும் அதிர்ந்து போனாலும்.. முதலில் தெளிந்த வடிவுக்கரசி..


"கழுத்தில தாலி ஏறதுக்கு முன்னாடியே ஒருத்தனுக்கு முந்தானையை விரிக்கிற பொண்ணு ஒழுக்கமானவளாவா இருப்பா...? உன்னை போல எத்தனை பேருக்கு முந்தானைய விரிச்சு எவன்கிட்ட புள்ளைய வாங்கிட்டு, அந்த பழிய உன் தலையில போடுறாளோ..." என தானும் ஒரு பெண் என்பதை மறந்து பேச..


"அம்மா....." என அதிர கத்தியவன்..

"நீ என்னை என்னவும் பேசு... அதுக்கு உனக்கு உரிமை இருக்கு.. சந்தியாவை பத்தி ஒரு வார்த்தை பேசினே... அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்...

அவளை நீ என்ன நினைச்சிட்டிருக்க...? அவ எவ்வளவு வசதியான வீட்டு பொண்ணு தெரியுமா..? அத்தனையும் தியாகம் பண்ணிட்டு என்னை நம்பி வீட்டை விட்டுட்டு வந்திருக்கா.. அவளை போய் தப்பா பேசுற.." என கோபத்தில் இரைந்தான்.

"சரிடா... நான் அவளை பத்தி எதுவும் பேசல... அவ எத்தனை வசதியா இருந்தாலும்... என்னோட முடிவில மாற்றமில்லை... என் வீட்டு மருமகன்னா அது என் தம்பி பொண்ணு தான்."

"ம்மா.... இவ்ளோ சொல்லுறேன்... திரும்ப மாமா பொண்ணை கட்டிக்கோன்னுற.. அப்போ அவளுக்கு பதில்.."



"என்னை கேட்டா தப்பு பண்ணிங்க... நான் பதில் சொல்ல.. அந்த ஒழுக்கம் கெட்டவள நான் ஏத்துக்க மாட்டேன்."


அலட்சியமாய் சிரித்த கதிர்... "வாழப்போறவன் நானு.. என் வாழ்க்கை துணையா நான் தான் முடிவு செய்யணும். உங்களோட முரட்டு பிடிவாதம் இல்ல." என்றான் அழுத்தமான முடிவோடு..

"ஓ... அப்போ பட்டணத்து சிருக்கியத்தான் கட்டிப்பேன்னு முடிவோட இருக்க... சரிடா சந்தோஷமா இரு... ஆனா ஒன்னு மாத்திரம் தெரிஞ்சுக்கோ... அடுத்து வர முகூர்த்தத்திலேயே என் தம்பி பொண்ணை நீ கட்டிக்கலன்னா..


இவ்ளோ கஷ்டத்துக்கு மத்தியில.. ஆணோட துணையும் இல்லாம... உங்க ரெண்டு பேரையும் ஊர் போற்றுற மாதிரி வளர்த்து ஆளாக்கிவிட்ட என்னோட உடம்பு மண்ணுக்குள்ள போக நீ காரணமா போவ.. இது சாமியா போன உங்கப்பன் மேல சத்தியம்.." என்றவர் அவிழ்ந்து போன கொண்டையை அள்ளி முடிந்தவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

அதன் பின் பேசிட முடியுமா கதிரால்..? இத்தனை ஆண்டுகள் தாயுடன் இருப்பவனுக்கு தெரியும் வடிவுக்கரசியின் பிடிவாதம் எத்தகையதென்று. ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் அதிலிருந்து மாற மாட்டாள் அவள்.

கதிர் பிறந்து மூன்று மாதத்திலேயே அவள் கணவன் அகால மரணமாகிப்போக. இன்னொரு திருமணத்திற்கு சம்மதியாது பிடிவாதமாக நின்று இரு பிள்ளைகளையும் வளர்த்தவர் ஆகிற்றே...

செய்வது அறியாது விழித்து நின்றவன் தோளை பற்றிய சியாமளா..

"உங்க நிலமை எனக்கு புரியுது கொழுந்து.. கவலை படாதிங்க ... அத்தக்கிட்ட எப்பிடியாவது பேசி சம்மதம் வாங்கிடலாம்." என்றான் நம்பிக்கையாய்.

ஆனால் என்ன தான் சியாமளா மசிப்பது போல் பேசியும் வடிவுக்கரசி அசரவில்லை..

கதிரின் திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை தம்பியுடன் பேசி அவசர அவசரமாக பார்க்க ஆரம்பித்தவர் தீவிரத்தை கண்டு பயந்து போகாதவரில்லை.

ஒரு கட்டத்தில் கதிரின் நிலை கண்டு வேல்முருகன் கூட பேசிப்பார்த்தார்.

"என்னடா எல்லாருமா சேர்ந்து என்ன பொல்லாதவள் ஆக்குறீங்களா..? சின்ன வயசில இருந்து அவனுக்காக ஒருத்தி காத்திட்டிருக்கான்னு தெரிஞ்சும் எப்பிடி இன்னொரு பொண்ண அவன் காதலிப்பான்..?

அந்த பேச்சுக்கே இடமில்லை.. வர புதன்கிழமை அம்மன் கோவில்ல கல்யாணம்ன்னு முடிவு பண்ணியாச்சு.. என் மனச மாத்த நினைக்காம, உன் தம்பி மனச மாத்த பாரு... அது தான் எல்லாருக்குமே நல்லது." என்றார் அதற்குமேல் பேச்சை வளர்க்க விரும்பாது.

திருமணத்திற்கு முன் இரவு வெளியே செல்கிறேன் என சென்றவன் வீட்டிற்கு வர பத்து மணியாகிப்போனது. வந்தவன் சாதாரணமாக வரவில்லை.. முழு போதையில் தான் வந்தான்.


நேராக தமையனிடம் சென்றவன்.. "உன்கூட கொஞ்சம் பேசணும்ணா" என வேல்முருகனை தனக்கான அறைக்கு அழைத்து சென்றான்.

"என் மனசாட்சி இடம் குடுக்கலன்னா.. என்னால என் சந்தியா இல்லாத வாழ்க்கைய நினைச்சு கூட பார்க்க முடியலன்னா..

அவ ரொம்ப நல்ல பொண்ணு.. ரொம்ப பெரிய இடத்து பொண்ணும்.. காலேஜ்ல தான் அவளை பார்த்தேன். பார்த்ததும் புடிச்சுப்போச்சு.... அவளுக்குமே என்னை பிடிச்சுப்போக.. சந்தர்ப்பமும் அமைஞ்சதனால, தப்பு பண்ணிட்டோம்.. இப்போ அவ வயித்தில என் குழந்தை வளர்ந்திட்டிருக்குது.

அதை வீட்டில சொல்ல முடியாம என்னை நம்பி வீட்ட விட்டு வந்திட்டா.. இப்போ கூட எனக்கு தெரிஞ்ச நர்ஸ் குவார்டஸ்ல தான் தங்க வைச்சிட்டு, அம்மாகிட்ட சம்மதம் வாங்க வந்தேன். ஆனா இங்க இப்பிடி ஆகும்ன்னு தெரியாம போச்சு...

இந்த விஷயம் மாத்திரம் அவளுக்கு தெரிஞ்சா.. சத்தியமா அவ உயிரோட இருக்க மாட்டா... அம்மா குணம் தெரிஞ்ச என்னாலயும் அவ தான் வேணும்ன்னு போக முடியல.. அப்புறம் அம்மா எதாவது பண்ணிடிச்சுன்னா அவமேல தான் மொத்த பழியும் வரும்.

அவ ரொம்ப நல்ல பொண்ணுண்ணா.. என்ன நம்பி மனசையும், கற்பையும் பறி கொடுத்ததை தவிர எந்த தப்பும் அவ பண்ணல... அவளுக்கு தம்பி, அப்பான்னா உயிர்.. எனக்காக எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு வந்தவளுக்காக என்னால எதையும் விட்டுக்குடுக்க முடியல....

எப்பிடியாவது அவளை காப்பாத்திடு.." என இரு கையெடுத்து கும்பிட்டவன் வாயில் இரத்தம் வடிய..

"கதிர் என்னடா.... என்னல்லாமோ உளர்ற..? வாய்ல ஏன் ரத்தம் வருது.." என வேல்முருகன் பதறவே செய்தார்.

"அது ஒன்னும் இல்லண்ணா... கொஞ்சமா விஷம் குடிச்சிட்டேன்." சாதாரணமாக சொன்னவன்..

"என்னால ஏன் இன்னொரு உயிர் போவான்.. நானே செத்துடுறேன்னு முடிவு பண்ணிட்டேன். என்ன என் சந்தியாவை தனிய விட்டுட்டு போகிறேன் என்கிற கவலை மாத்திரம் தான்.. ஆனா நீயும் அண்ணியும் நல்லா பார்த்துப்பிங்கன்னு நம்பிக்கை இருக்குண்ணா.. உன்னை நம்பி போறேன்." என்க.

"டேய் என்னடா காரியம் பண்ணி வைச்சிருக்க.. முதல்ல எந்திரி ஹாஸ்பிடல் போலாம்." என அவசரமாக எழுப்பியவர் கையினை தட்டியவன்.

"இல்லண்ணா... நான் புழைக்க மாட்டேன்.. விஷம் சாப்டு ரொம்ப நேரம் ஆகிடிச்சு.. அவளை கூட்டிட்டு வந்துடுண்ணா... தனியா விட்டுடாத..." என்றவன் தலையோ தொய்யத்தொடங்க.

"கதிர்...." என விரிட்டு கத்தினார் வேல்முருகன்.
அவர் கத்தலில் பதறியபடி மற்றவர்களும் அந்த அறைக்கு ஓடிவர.. கதிர் உயிரை விட்டிருந்தான்.
 
Top