• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

14.Miss மானஷா சம்யுக்தா

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
அகிலனிற்கு முழுமையாக லீவ் கொடுத்து வீட்டில் இருக்க வைத்த யுவா கல்யாண வேலை ஆஃபிஸ் வேலை அனைத்தையும் பார்த்துக் கொண்டான் சம்யுக்தாவும் அவனுக்கு திருமண வேலைகளில் உதவியாக இருந்தாள்....


அன்று அனைவரும் எதிர்ப்பார்த்த நாள் வர யுவாவின் திருமண விழாக்கோலம் கண்டு கம்பீரமாக அழகாக நின்று கொண்டிருந்தது அப்பெரும் மண்டபம் அகிலன் மாப்பிள்ளை கெட்டப்யில் ரெடியாகி வர அவனை அழைத்து கொண்டு மண்டபத்திற்கு நுழைந்தனர்...

ஐயர் மந்திரங்களை சொல்ல மேள தாளங்கள்‌ இசைக்க சொந்தங்களும் சுற்றத்தாரும் ஆசிர்வதிக்க லில்லியின் கழுத்தில் மங்கள நாணை இரண்டு முடிச்சிட்டு சம்யுக்தாவை கண்களால் அழைத்து நாத்தனார் முடிச்சு போட வைத்தான் அகிலன் மனநிறைவுடன் செய்தவளை காதலோடு பார்த்துக் கொண்டிருந்தான் யுவா குறு குறு பார்வையில் நிமிர்ந்து பார்த்தவளிடம் தாலி கட்டுவது போல் செய்கை செய்து நமக்கு எப்போ?.. என்று கேட்க உதட்டை சுழித்து முறைத்தபடி முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள் அவ்வழகை விழி வழியே பருகி கொண்டிருந்தான் யுக்தாவின் காதலன்.....

கம்பனி வேலைகள் முடிய ஆறுமாதங்கள் முடிந்திருக்க அன்று அவனை தேடி வந்தாள் சம்யுக்தா இதுவரை அவள் வேலைகள் அனைத்தையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறான் அவள் தடுமாறும் சமயம் துணையாக நின்று சரியாக மாற்றி விடுகிறான் சில நேரங்களில் பிஸ்னஸ் யுக்திகளை அவளுக்கு ஒரு ஆசானாக மாறி கற்றும் கொடுத்தான் அதை எல்லாம் கவனித்து தன் வழியில் பயணித்து கொண்டிருந்தாள் சம்யுக்தா.

அன்று அவன் அறை முன்பு அனுமதி கேட்டு நின்றவளிடம் கணனியில் கண்களை பதித்தபடியே “வா யுக்தா பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டேன் சைன் பண்ணிட்டு இந்த மன்த்யோட பேமென்ட் வாங்கிட்டு போ…” என்று சொல்லிக் கொண்டிருந்தவனை மெச்சுதலாக பார்த்தாள் இப்படி தான் தனக்கு தேவையானதை அவள் கேட்கும் முன்பே செய்து விடுகிறான்...


“ஓகே சார் தாங்க்ஸ்…” என்றவள் சைன் பண்ணி விட்டு எழ “இனிமே தான் நீ ஜாக்கிரதையா இருக்கனும் யுக்தா பிஸ்னஸ்‌ ஒரு வார் மாதிரி வெற்றி தோல்வி எதிரின்னு பல இடத்துலே இருந்து உனக்கு ப்ரெஸர் வரும் அதை எல்லாம் பேஸ் பண்ண கத்துக்கோ ஆல் தே பெஸ்ட்…” என்று அவளை வாழ்த்தி பெரிய சாக்லேட் நிறைந்த கூடை ஒன்றை தூக்கி கொடுக்க புன்னைகையுடன் வாங்கி கொண்டவளை வழியனுப்பி வைத்தனை கண்டு மனமெனும் பெட்டகத்துக்குள் வைத்து கொண்டாள்....


இரண்டு மாடி கட்டிடத்தில் பார்ப்பவர் கண்ணை ஈர்க்கும் விதமாக MISS FASHION என பெயர் தாங்கியபடி எழுந்து நின்ற கட்டிடத்தை சுற்றி வண்ணமயமாக சில மரங்களையும் பூச்செடிகளை வளர்க்கும் புற்களையும் வைத்து அழகாக மாற்றியிருந்தாள்.


இன்று அதற்கு திறப்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் அவளின் குடும்ப உறுப்பினர்கள் சன்முகவேல் லில்லி அகிலன் என அனைவரும் வந்து விட இன்னும் அவனை மட்டும் காணவில்லை மற்ற வேலைகளை கவனித்தாலும் அவள் பார்வை நொடிக்கொரு‌ முறை வாயிலை பார்க்க அவளை புன்னகையுடன் கண்ட அகிலன் யுவாவிற்கு அழைத்திருந்தான் “மச்சான் சீக்கிரம் வாடா தங்கச்சி உன்னை தேடுதுடா…” என்றவனிடம் “ம்ம்... குடும்பத்தோட வர சொன்னவள் எனக்கு என்ன சொன்னாளா வாங்கன்னு அவளே கூப்பிடட்டு அப்பறம் வரேன்…” என்றவன் அழைப்பை துண்டிக்க “இதுங்க ரெண்டும் கல்யாணம் பண்ணி....” என எதையோ நினைத்து பெருமூச்சை விட்டபடி அங்கிருந்து சென்று விட்டான் அகிலன்.


அனைவரும் சாப்பிட்டு கிளம்ப பொறுக்க முடியாமல் அழைத்து விட்டாள்
சம்யுக்தா அதை கண்டு‌ புன்னகை வந்து அவனது உதடுகளில் ஒட்டிக்கொள்ள
அடுத்த நிமிடமே காரில் வந்து இறங்கினான் அவன்.

அனைத்தையும் பார்வையால் அளந்தபடி வந்தவன் அவளின் அறிவை மெச்சிக்கொள்ள மறக்கவில்லை “என்ன மிஸ் சம்யுக்தா எங்கே எல்லாரும்…” என வந்தவனை கண்டு “இப்படி தான் ஒரு பங்சனை அடென் பண்ணுறதா?...” என்று கேட்டவளிடம் “வொய் இதுக்கு என்ன குறை…” என கோர்ட்யை ஸ்டைலாக கலட்டி கையில் வைத்தப்படி வேணும் என்று கேட்டவனிடம் நேரத்தை காட்டினாள்.

“ஓஹ் அதுவா மேடம்‌ எனக்கு தனியா கூப்பிடலயா அதான் லைட்டா சோகமாகிட்டேன் மத்தவங்களை விட நான் உனக்கு ஸ்பெசல் தானே அப்ப தனியா கூப்பிட்டு இருக்கனுமில்லயா…” என புருவம் உயர்த்த “அது எல்லாம் எதுவும் ஸ்பெசல் இல்லை…” என முறுக்கி கொண்டு திரும்பியவளின் உதட்டில் புன்னகை அவன் வந்து விட்டதை எண்ணி தேவையான மெஷின் துணிகள் அனைத்தும் அங்கு நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை கணாடவன் அங்கிருந்த புக் ஒன்றை திறந்து பார்த்தான் முழுவதும் டிசைன் கொண்ட ஆடைகளை கனகச்சிதமாக வரைந்து வைத்திருந்தாள் சம்யுக்தா‌....


“வாங்க சாப்பிடலாம்…” என அழைத்தவளருகே‌ போய் அமர்ந்து கொள்ள அவனுக்கு பரிமாறிய படி தானும் எடுத்து சாப்பிட்டவள் “கம்பனி எப்படி இருக்கு எதுவும் சொல்லலே…” என்றவளிடம் “ம்ம்... உன்னோட ஓவ்வொரு ஐடியாவும் சூப்பரா இருக்கு வேறலெவல்…” என்றவன் சிறிது நேரம் அவளுடன் இருந்து விட்டு கிளம்பினான் யுவா.....

நாட்கள் மாதங்களாகி கரைந்தது சில வேலையாட்கள் தேவை என்பது குறித்து விளம்பரம் போட மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் குடும்பத்தில் இருந்து மூன்று பெண்கள் வர அவர்களின் வேலையின் நேர்த்தியும் திறமையும் இவளுக்கு பிடித்து வேலைக்கு வைத்து கொண்டாள்......

ஆனால் ஒருதடவை கூட அவளுக்கு எந்தவித ஆர்டர்களும் வரவில்லை அதற்காக அவள் சோர்ந்து போகவும் இல்லை வித்தியாசமான மாடல்களில் உடைகளை தயாரித்து அதை தனது கம்பனிக்கு என்ற சமூகவலைத்தளங்களில் போட்டு விட்டாள் அத்துடன் நாட்டுக்குள் ஸ்டேட் லெவளில் நடக்கும் ஃபேஷன் ஷோக்களில் தான் தயாரித்த உடையை மாடர்ன் ஒன்றிற்கு அனுவித்து வலம் வர வைக்க அதுவும் நல்ல வரவேற்பை கொடுத்தாலும் அவள் கம்பனிக்கு என்று ஆர்டர் வரவில்லை மாறாக அவளுக்கு வேற கம்பனிகளுக்கு வேலைக்கு அழைத்து ஆஃபர் தான் வந்தது அதை எல்லாம் ஒதுக்கி‌ வைத்து விட்டு தலையை தாங்கியபடி இருக்கையில் அமர்ந்திருந்தவளை அன்று ஒருவள் தேடி வந்தாள் அவள் அஷ்விதா எம்எல்ஏ வின் மகள் அத்தோடு பிரபல நடிகையாக வலம் வருபவளும் கூட......


“ஹலோ இங்க சம்யுக்தாங்கிறது‌…” என அங்கு ஆடை ஒன்றிற்கு ஆரி வொர்க் பண்ணிக் கொண்டிருந்த பெண்ணிடம் அவளுடன் வந்த அசிஸ்டன்ட் கேட்க “மேடமா உள்ள இருக்காங்க சார்.. வாங்கம்மா…” என்று அந் நடிகை கண்டு வாய் எல்லாம் பல்லாக நின்ற பெண் அவசரமாக எம்டி அறைக்குள் ஓடினாள்.....


“மேடம்… மேடம்…” என்று வந்தவளை புதிதாக உடை ஒன்றை வரைந்து கொண்டிருந்த சம்யுக்தா நிமிர்ந்து பார்த்தாள் “என்னக்கா இப்படி பதட்டமா ஓடி வரீங்க ஏதும் பிராப்ளமா..” என்றவளிடம் “இல்லமா நம்ம ஆபிஸுக்கு அஷ்விதா மேடம் வந்திருக்காங்க..” என்று அவர் சொல்ல‌ “யாருக்கா அஷ்விதா எனக்கு தெரியாதே…” என்றவளிடம் “அதான் அந்த எம்எல்ஏ பொண்ணு ஏன் நடிகை அஷ்விதா காத்திருந்தேன் காதலே படம் எல்லாம் நடிச்சாங்களே அவங்க மேடம்…” என்று விளக்கி சொல்லிக் கொண்டிருக்க ஓஹ் வர சொல்லுங்க அக்கா.... என்றவள் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.....

இருவரும் உள்ளே வர புன்னகை முகமாக வரவேற்றாள் சம்யுக்தா....

“ஹலோ சம்யுக்தா உங்களோட ட்ரெஸ் கலெக்ஷன் பார்த்தேன் ரொம்ப நல்லாயிருந்தது…” என்றதும் புரியாமல் பார்த்தவளிடம் “ஃபேஷன் ஷோலே….” என்று அவள் கேள்விக்கு பதிலாக கூறிவிட்டு “எனக்கு வர மன்த் வெடிங் அதுக்கு என்னோட கல்யாண சாரி என்ட் ரிஷெப்ஷன்க்கு லெஹன்கா எல்லாம் ரெடி பண்ணி குடுக்க முடியுமா?...” என்றவளின் பேச்சில் மெய் மறந்து நின்றாள் உண்மையாக தனக்கு தான் இது கிடைத்துள்ளதா? என எண்ணிக் கொண்டவள் “ஓகே உங்களுக்கு என்ன மாதிரி டிசைன் வேணும்ன்னு பார்த்து சொல்லுங்க அஷ்விதா அதுக்கு ஏத்த மாதிரி பண்ணிக் குடுத்திடுறேன்…” என்றவள் சாரிக்கு என்று தனியாகவும் அதே சமயம் லெஹன்காவிற்கு என்று தனித் தனியாக அவள் வரைந்த புக் ஒன்றை எடுத்து அவள் முன் வைக்க.....

அவளோ தயக்கமாக “அது வந்து சம்யுக்தா…” என்று யோசித்தவளிடம் புன்னகையுடன் “நீங்க நினைக்கிற மாதிரி இல்ல
இது எல்லாம் என்னோட நிவ் ஐடியா தான் இதுவரைக்கும் வெளியிலே இது மாதிரி ட்ரெஸ் டிசைன் இல்ல இதுலே தனியான ஸ்டைல்லே இருக்கு உங்களுக்கு பிடிச்சதை நீங்களே செலக்ட் பண்ணி குடுங்க…” என்றவள் சொல்ல புன்னைகையுடன் அதை எடுத்து ஒவ்வொன்றாக வெகுநேரம் அதை பார்த்தவள் “எனக்கு இந்த இரண்டும் ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா எதை செலக்ட் பண்ணுறதுன்னு தான் தெரியலே…” என்றவள் உடனே அவளின் கணவனாக போகின்றவனுக்கு அழைத்து கேட்டு முடிவு சொல்லி விட்டு சென்றவள் அடுத்த நாளே உறவினர்களும் திருமணத்தில் ஒரே விதமாக அணிய போவதாகவும் அதுக்கு ஏற்றதுப் போல் தைத்து தர வேண்டும் என்று ஆர்டர் கொடுக்க அவளுக்கு இதை எல்லாம் நம்பவே முடியாமல் திகைத்து நின்றவள் அடுத்த அடுத்த வேலைகளில் இறங்கினாள்....

அனைவருக்கும் உடையை தயார் செய்ய வேண்டும் என்றாள் அவளிடம் இருக்கும் ஆட்கள் போதாது அதற்கு தகுந்த ஆட்களை இன்டர்வியூ வைத்து செலக்ட் பண்ணி வேலைக்கு வைத்து கொண்டாள் சிகப்பு நிற சாரியில் வெள்ளை நிற கற்கள் கொண்டு அழகாக மாற்றி அமைத்தாள் அச் சாரியின் முந்தானை பகுதியில் அவர்கள் ஜோடியாக நின்ற புகைப்படத்தை தனி நூலினால் எம்ப்ராய்ட் போட்டு முடித்து தயார் செய்தவள் இளநீல நிற லெஹங்கா கரும் நீல நிற கற்களை சுற்றி‌ பொருத்தி வைத்தாள் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது அதே சமயம் உறவினர்களது உடையும் அனைவரதும் கபிள் ட்ரெஸ் ஆளே இருக்க ஒரே நிறத்தில் வேற
டிசைன்களில் கவுன் குர்தி அனார்கலி சாரி அதே பாய்ஸ்களுக்கு சர்வானி கோர்ட் சூட் பார்மல் சேர்ட் என்ற வகையில் அனைத்தையும் தயார் செய்து வைத்த பிறகே நிம்மதியாக மூச்சு விட முடிஞ்சது இது நமக்கு கிடைச்ச ஆஃபர் எனக்கு துணையா நின்னு உதவி செஞ்ச உங்களுக்கு ரொம்ப நன்றி என்று தொழிலாளிகளுக்கு அவள் நன்றி சொல்லவும் மறக்கவில்லை....


அவர்களின் ஆட்கள் மூவர் வந்து உடை எடுத்து சென்ற அடுத்த நிமிடமே அட்வான்ஸ் போக மீதி பணம் அவள் அகெளன்ட்யில் வந்து விழுந்தது அதிலே அனைவருக்கு சம்பள பணத்தை கொடுத்துவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பினாள் வந்தவள் தாயிடம் விஷயத்தை சொல்ல அவர்கள் இருவரும் சந்தோஷப்பட்டு கொண்டனர் இந்த வளர்ச்சி அவர்களுக்கும் ஒரு வித தெம்பை வர வைத்திருந்தது.....

அன்று எளிமையான டிசைனர் சாரியில் முடியை விரித்து விட்டு கொஞ்சமாக எடுத்து க்ளிப்யில் அடக்கி‌ விட்டு வில் போன்ற புருவம் இடையே பொட்டிட்டு காதில் மட்டும் குடை போன்ற ஜிமிக்கி அணிந்து ஒப்பனையின்றி லட்ஷனமாக தோற்றமளிக்கு முகத்தில் இன்று மட்டும் லேசாக ரோஷ் பவுடர் லிப்ஸ்டிக் குடி வந்திருக்க தன்னை ஒரு முறை கண்ணாடி வழியாக பார்த்து திருப்தி கண்டவள் வெளியில் வர அவளுக்காக ஒரு கார் வந்து நின்றது வேறு யாரு அகிலன் தான் வந்திருந்தான் அவளை ஏற்றிக் கொண்டு அஷ்விதாவின்
ரிஸெப்சன் நடக்கும் பிரபல ****
ஹோட்டலின் முன் கார்யை நிறுத்தினான்.....

இவளும் இறங்கி கொண்ட சமயம் யுவாவின் கார் வந்து நின்றது இவளின் உடை கலரிலே அவனும் கோர்ட் சூட் அணிந்து கச்சிதமாக ரெடியாகி வந்திருந்தான் அசர வைக்கும் அழகில் வந்த ஆணவனை ஓரே விழி கொண்டு பார்த்தவள் அதிசயித்து போனாள்.

திருமண வைப் (vibe) இன்னும் குறைந்தப்பாடில்லை விஐபிகளும் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என வந்த வண்ணம் இருக்க அன்று அஷ்விதா சம்யுக்தாவின் கை வண்ணத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தாள் நேரமாவதை உணர்ந்து அவர்களுக்கு பரிசு கொடுக்க எண்ணி மேடையேறினாள் சம்யுக்தா அவளை கவனித்தப்படி இருந்த யுவேந்திரன்னும் மேடை ஏறினான்‌.

திருமண வாழ்த்தை சொல்லி பரிசை கொடுக்க வாங்கி கொண்ட அஷ்விதா “ரொம்ப தாங்க்ஸ் சம்யுக்தா எட் தே சேம் டைம் இவனுக்கும் தாங்க்ஸ் சொல்லனும்..” என்று யுவாவை சொல்ல புரியாமல் அவள் புருவம் முடிச்சிட்டது.

“இவன் தான் உன்னை அறிமுகப்படுத்தி வெச்சான் இவன் என்னோட ப்ரென்ட் தான் ஒரே ஸ்கூலே படிச்சோம் அதுக்கு அப்பறம் ரொம்ப நாளைக்கு அப்பறம் மீட் பண்ணேன் டேடியோட பிஸ்னஸ் விஷயமா?..” என்று நடந்ததை சொல்லிக் கொண்டிருக்க அவள் திரும்பி யுவாவை பார்க்க அவனோ மாப்பிள்ளையுடன் பேசிக் கொண்டு இருக்க இருவரும் நின்று போட்டோ எடுத்து கொண்டு கீழிறங்கினர் அவள் அவனுடன் பேச முயற்சி செய்ய அவன் கண்டுகொண்டால் தானே அவன்
பாட்டிற்கு சென்று விட கவலையில் பெண்ணவளின் முகம்
தொங்கி போனது.
 
Top