எங்கே இன்றும் அரை நேர விடுப்பு எடுத்தால், நேற்று இன்று நாளை என முழு வேலையும் நாளை செய்ய வேண்டி வந்து விடுமென பயந்தவளாய், முடிந்த அளவு இன்றைய வேலைை முடித்தவள், அரைநேர விடுப்பு எடுக்க, அனுமதி கேட்டு அவன் அறை சென்றாள்.
அலுமாரியில் எதையோ தேடிக்கொண்டிருந்தவன், கதவு தட்டும் சத்தத்தில் யார் என்றும் பார்க்காமல் "வரலாம்" என்றான்.
உள்ளே வந்தவள், திரும்பி நிற்பவனை கண்டு, எப்படி விடுப்பு கேட்பதென தனக்குள் ஒத்திகை பார்க்கலானாள்.
'திரும்ப காய்ச்சல் வந்திட்டுது என்டு சொல்லவா? தொட்டுப்பாத்துட்டா........ வேண்டாம்..... விலகோணும் என்டு நினைச்ச நானே, சந்தர்ப்பத்தை உருவாக்க கூடாது.
என்ன சொல்லி அனுமதி கேக்கலாம்..........
தலை வலிக்குது என்டு கேட்ப்போமா?
நேற்றே விருமாண்டி சொல்லிச்சே! அவசரமில்லை ஓய்வெடுத்திட்டு வரசொல்லி.... இப்ப தலை வலிக்கது என்டா சத்தம் போடுமோ?
கடவுளே காப்பாத்துப்பா..... இவன் முன்னாடி நிக்கிற நேரம் பூராவும், புலி சிங்கத்துக்கு முன்னுக்கு நிக்கிற மாதிரியே இருக்கு.....
எங்க கடிச்சு குதறிடுமோ என்டுபயம் தான் வருது.' ஒத்திகை பார்ப்பதையும் விட்டு, உள்ளே புலம்பி கொண்டிருந்தாள்.
"துஷா..... துஷா......" பல முறை அழைத்து விட்டான். அது அவள் காதில் விழ வேண்டுமே.
அழைத்து பயனற்று போகலே அவளை உளுக்கினான்.. கனவில் இருந்து விழிப்பதை போல் அதிர்ந்து விழித்தாள்..
"என்ன முழிச்சுக்காண்டே கனவா? நான் தானே!" என்றான் இதழ்களில் தவழ்ந்த புன்னகையை மறைக்காது.
அவன் கேள்வி புரியாது புருவங்களை நெரித்தவள் செயலில்,
ளகண்ணை திறந்து வைச்சுக் கொண்டே கனவு காண்றியே! அந்த கனவில் நான் தான் வந்தேனா என்டு கேட்டேன்." என்றான் இம்முறை தெளிவாகவே,
நேரடியான அவனது கேள்வியில் அதிர்ந்தாலும். அதை வெளியில் காட்டிக்கொள்ளாதவளுக்கு, தான் வந்த காரணத்தை எப்படி ஆரம்பிப்பதென்ற குழப்பம் மீண்டும் தொற்றிக் கொள்ள,
"அது.... எப்பிடி...." தடுமாறவே செய்தாள்..
"ஓகே ஓகே..... துஷா! நான் சும்மா விளையாடினன். என்ன விஷயம்.....? இந்த நேரத்தில என்னை ஏன் பாக்கோணும்?" அவனே ஆரம்பித்தும் வைத்தான்.
"அது அது...." என்று என்ன சொல்வதென்று தயங்கியவள், சட்டென்று ஓர் ஐடியா தோன்ற...
"என்ர ஃப்ரெண்டுக்கு காய்ச்சலாம்....
நான் தான் அவளை டாெக்டரிடம் கூட்டிக்கொண்டு போகோணும்... அரை நாள் விடுப்புக்கு அனுமதி கேட்க வந்தன்." என்று ஏதோ தட்டுத்தடுமாறி சொல்லிவிட்டு அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
அவளை நம்பாத பார்த்தவன் பார்வையில்,
'உளறி இப்பிடி மாட்டிட்டியே துஷி' ஏசி அறையிலும் வியர்வை கண்டிருந்தது அவள் வதனம்..
அதையும் அவன் கண்டு கொண்டான்.
அவள் பொய் உரைப்பது அப்பட்டமாகவே தெரிந்தது..
"அரை நேர விடுப்பு தானே! தந்திடலாம்.... ஆனா எனக்கு ஒரு சந்தேகம்" என்றான் கூரிய பார்வையோடு அவனை நோக்கி.
பயம் தான்.... ஆனால் அதை இப்போது வெளிகாட்டினால் எல்லாம் தவுடு பொடியாகிவிடும்.. இயல்பாக முகத்தை வைத்தவள், அவன் கேள்வியை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
"உன்னட்ட போன் இருக்கா?" என்றான்.
'இப்போ இது முக்கயம்?' மனதுள் தான்..
"இல்லை சார்"
"நான் தந்த போன்...?" கேள்வியே தொக்கி நின்றது..
"அது... ஸ்டாப் ரூம்ர இருக்கு. போகேக்க தந்துர்றன்" என்றாள். எங்கு அதை அவன் தரவில்லை என்று தான் கேட்கிறானோ என்று நினைத்து.
"ஓ....." என தீவிரமாக எதையோ சிந்தித்தவாறு தலையசைத்தவனோ,
"உன்ர ஃப்ரெண்டுக்கு காய்ச்சல் என்டு உனக்கு யாரு சொன்னது?"
அவனது இத்தனை கேள்வியும் தன்னை மோப்பம் பிடிக்கத்தான் என்று தெரியாது சட்டென,
"போன் பண்ணிதான் சார் சொன்னாள்" என்று சாதாரணமாக.
அது எப்பிடி....? உன்னட்ட போனே இல்லை... பிறகு போனில எப்பிடி.?" அதே குடையும் பார்வை.
விழி பிதுங்கவே ஆரம்பித்தது அவளுக்கு..
'இத யோசிக்கேலயே! சொல்லுற பொய்யக் கூட ஒழுங்கா சொல்ல மாட்டியா...? இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது...?'
"அது வர்மன் சார் போன்ல எடுத்து சொன்னாள்" ஏதோ சொல்லி விடடாள்.
அதை அவன் நம்ப வேண்டுமே! அவள் சொல்லும் பொய்யிற்கு பின்னால் தனது கேள்விகளின் விடை ஒழிந்திருக்கின்றது என்பதை மட்டும் அவன் மனம் உறுதியாக நம்பியது.
"ஓகே... நீங்கள் போகலாம்." என்றான்.
அவனது உள்னோக்கம் புரியாமல், அவனையே ஏமாற்றி விட்டோம் என்ற சந்தோஷத்துடனே தனது உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
உடனேயே வர்மனுக்கு போன் செய்தவன்,
"துஷாவோட காய்ச்சல் அவளின்ர ஃப்ரெண்டுக்கும் தொத்திட்டுது போல... நீங்கள் பாக்க போகேல?" என்றான் எதையோ அறியும் ஆவலில்.
"என்னது அவாவுக்கு காய்ச்சலா....? இல்லையே! அவா நல்லாதான் இருக்கா... இப்ப தான் போன் பண்ணினா" என்றான் நடந்தது தெரியாமல்.
"அப்பிடியா....? இப்ப வார்ற காய்ச்சல் எல்லாம் தொற்றுமாமே...
அது தான் அவங்களுக்கும் வந்திருக்குமோ என்டு கேட்டன்" என்று போனை வைத்து விட்டான்..
வர்மனுக்கும் துஷா இவனிடம் மாட்டி விட்டாள் என்பது புரிந்தது. இதில் தான் தலையிடாமல் விலகுவதே சரி என தோன்ற அமைதியானான்.
வாசன் சொன்ன நேரத்திற்கு அங்கு வந்தவள் வாசனை காணாது,
'அங்கிளுக்கு ஏதாவது வேலையா இருக்கும்... அது தான் லேட்டு போல' என நினைத்தவள்,
பார்க்கில் ஒதுக்கு புறமாக இருந்த, மலைவேப்பினை சுற்றிப் போடப்பட்டிருந்த சிமென்ட் இருக்கையில் அமர்ந்தாள்.
ஆம் அது ஒரு பழமை வாய்ந்த மரம். அதன் அடிப்பாகத்தை பத்துப்போர் ஒன்று சேர்ந்து அணைத்தாலும், அடங்குமா என்ற சந்தேகம் தான்.
சிறுவர்களின் ஆர்ப்பறிப்புக்கும், காதலர்களின் காதல் பாடங்களுக்கும் அங்கு பஞ்சமே இல்லை.
என்னதான் அவளை சுற்றி ஆயிரம் நிகழ்வுகள் நடைபெற்றாலும், தனிமை என்று வரும்போது, கடந்த காலத்தையே அவள் மனம் தோடிப்பிடித்தது.
சிறிது நேரத்தில் வாசன் வருவதை தூரத்தே கண்டவள், கையசைத்து தான் இருக்கும் இடத்தை அடையாளப்படுத்தினாள்.
அவரும் அவளை கண்டு அவளருகில் வந்து அமரவில்லை.
"சாரியங்கிள்.... எவ்வளவு நாளுக்கு பிறகு பாக்குறன்.. நலம் கூட விசாரிக்காம, என்ட கவலைய மட்டும் சொல்லிட்டு... சாரி அங்கிள்" குற்றவுணர்வோடு மன்னிப்பு வேண்டியவள்,
"எப்படி அங்கிள் இருக்கிறீங்கள்...?
ஆன்ட்டி, அக்கா, அத்தான் எல்லாரும் நல்லா இருக்கினமோ? வெளிநாட்டு பயணம் எல்லாம் எப்பிடி இருந்தது?" என்று யாரையும் விடாது நலம் கேட்க..
"எல்லாருமே நல்லா இருக்கினம்டா.... உன்னை தான் திருப்பி இந்த கேள்வி கேக்க முடியேல..... ஆறிவாற புண்ண... சொறிஞ்சு திரும்ப பெருசாக்குவான் ஏன்?
அதை விடு......!
தெரிஞ்சு தான் இந்த ஊர் பஸ்ல ஏறினியா? இங்க தான் உன்ர சொந்தகாறங்கள் இருக்கினம் என்டு யாரு சொன்னது?" நேரே விஷயத்திற்கு வந்தார்..
விரக்த்தியாக புண்ணகை சிந்தியவள்,
"நீங்களும் ஏன் அங்கிள் எனக்கு சொல்லேல....?
அவயல் தான் சொல்ல வேண்டாம் என்டு சொல்லீச்சினம் என்டு மட்டும் சொல்லாதங்கோ!
முன்னமே இதை சொல்லி இருந்தா .... இப்ப இப்பிடி நான் அனாதையா இருந்திருக்க மாட்டனே!
கடைசி வரைக்கும் என்னோடயே இருப்பினம் என்டா அங்கிள் எல்லாத்தையும் மறைச்சவ.....?
சரி உண்மைய மறைச்சிட்டினம்... அப்ப என்னை ஏன் இப்ப தனியா விட்டுட்டு போனவ....?
எந்த தைரியத்தில அங்கிள், என்னை இந்த உலகத்தில தனியா விட்டுட்டு அவயளால போக முடிஞ்சது?
நான் அவயோட பிள்ளை இல்லையா....? அவேன்ர நிழல் இல்லாம என்னால இருக்க முடியாது என்டு அவயளுக்கு தெரியாத அங்கிள்.?
இவ்வளவு நாளும் எனக்கு ஒரு கஷ்டம் வரகூடது என்டு கண்ணுக்குள்ள பொத்தி வளத்தீச்சினமே! இப்ப என்ன செய்தீச்சினம்....?
மொத்த கஷ்டத்தையும் நாங்கள் இல்லாம, தனியா இருந்து அனுபவி என்டு சந்தோஷமா போயிட்டினம் பாருங்கோ அங்கிள்!" என்று இவ்வளவு நாள் ஆற்றுவோர், தேற்றுவோர் இன்று யாருக்கும் தெரியாமல், படுக்கையில் கரைந்தவள், இன்று மனம் விட்டு அழ ஒரு மடி கிடைத்து விட, இன்றே தனது கண்ணிர் வற்றும் அளவு, அவர் தோள் சாய்ந்து அழுதாள்.
மனதின் பாரங்களை இன்றே அழுது தீர்க்கட்டும் என பொறுமை காத்தவர்,
தொடர்ந்து அவள் அழுவதை நிறுத்தும் பொறுட்டு.
"துஷா குட்டி அழதடா......
நடந்தது நடந்துட்டுது.... அழுறதாலையோ, புலம்புறதாலையோ எதுவும் மாறாது.
இனி நடக்க இருக்கிறத விதியோட போராடி வெல்லப் பாக்கோணும்." என்றார்.
"என்னங்கிள் சொல்லுறீங்கள்....?" என்றாள் அவர் கூற்று புரியாது எழுந்து அவர் விழி நோக்கி.
"நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லும்மா...." தன் கேள்வியை அவர் நினைவு படுத்த,
"அம்மா தான்.... கடைசி நேரத்தில சொன்னவா...." என்றாள்.
"என்னல்லாம் சொன்னா....?"
"தன்களோட காதல்.. அதை அவேன்ர பெத்தவ ஏற்காதது.. பிறகு நீங்கள் செய்த உதவி என்டு எல்லாமே அங்கிள்." என்றாள்.
"அவ்ளோ தான் சொன்னாவா துஷி.?"
"ம்ம் ஏன் அங்களிள்...?"
"உன்ர அப்பா உன்னை விட்டு போனது, சாதாரணமா தோன்டுதா உனக்கு?" என்றார் ஏதோ அறியும் ஆவலில்.
"அதில என்ன சந்தேகம்?" புருவங்கள் கேள்வியாய் வளைந்தது.
"எனக்கு அப்பிடி படேல..... இதுக்கு பின்னுக்கு ஏதோ இருக்குது..
ஆனா என்னன்டு தான் தெரியேல....
அவன் உங்களை விட்டுட்டு போறதுக்கு, மூன்டு நாளுக்கு முன்னம் கதைச்சான்ம்மா.....
உன்ர பர்த்டேக்கு ஏதோ சப்றைஸ் வைச்சிருக்கிறதா சொன்னான்.
நான் என்னன்டு விடமல் கேட்டன்... அப்ப மூர்த்தி வீட்டில இருந்தான் போல...
அப்ப தான் சொன்னான். உன்ர படிப்பு இன்னும் ரெண்டு மாதத்தில முடியுது.
அது முடிஞ்ச உடனம்.... உனக்கு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கிறதாயும், உன்ர பிறந்த நாள் அன்டைக்கு உனக்கு சொல்ல பேறதாயும் சொன்னான்.
அதுகு பிறகு என்னோட கதைக்கேல.... வெளிநாடு போற அலுவலா நானும் அலைஞ்சதால, அவனோட கதைக்க முடியேல..." என்றார்.
"என்னங்கிள் சொல்லுறீங்கள்? எனக்கு மாப்பிள்ளை பாத்தாரா? யாரங்கிள் அது?" என்றாள் அதிர்ச்சியாகி.
"நானும் கேட்டன்டா... ஆன அவன் சொல்லேல... பொண்ணுட்ட சொன்னாப் பிறகு தான் மீதிய சொல்லுறன் என்டான்.
உன்ர அம்மாக்கு தெரிஞ்சிருக்கலாம்..
அவா ஏன் உன்னட்ட சொல்லேல என்டு தான் எனக்கு தெரியேல...." என்றிட,
"இல்லை அங்கிள்! அம்மா கடைசியா ஏதோ சொல்லத்தான் வந்தா... நான் தான் சொல்ல விடேல... ஆனா கையால பெட்டி மாதிரி வரைஞ்சு செய்கை காட்டானா... அப்ப இருந்த மனநிலையில எதையும் நான் கவனிக்கேல.... இப்ப எப்பிடி அவயல கண்டு பிடிக்கிறது.?" சோகமாக வினவ,
"அதை விடுடா! இப்ப உனக்கு இருக்கிற பிரச்சினைைய முடிக்க பாப்பம்... அது முடியட்டும் மற்றதுகள நிதானமா யோசிப்பம்." என்றவர்,
"உன்னை தேடிக்கொண்டு வீட்டுக்கு போனன்... அப்ப தான் அன்னம்மா சொன்னா.....
அந்த மூர்த்தி தன்ர பொறுக்கி பாெடியனுக்கு உன்னை கட்டி வைக்க பாத்ததா...
எல்லாம் யோசிச்சு பாத்தா.... ஏதோ ஒன்டு இடிக்குது.
அந்த மூர்த்தி தான் ஏதோ செய்திருக்கான்.
இங்க பாருடா! அவனுக்கு இது தான் உன்ர சொந்த ஊர் என்டு தெரியும்.
அங்க உன்னை எல்லா இடமும் தேடி திரிஞ்சிருக்கான்... உன்னை காணேல என்டதால இங்க தான் இனி வருவான்.
நீ அவன் பிள்ளைய கட்டோணும்... இல்லை எனனடா உன்னை கொல்ல சொல்லி, அடியாளுகளை அனுப்பி இருக்கான்.
நீ இப்பிடி பொது இடத்தில வேலை செய்ய வேண்டாம்மா....
கொஞ்ச நாளைக்கு மட்டும் உன்ர தோழியோடையே இரு!
அங்கிள் ரெண்டு கிழமையில, உன்னை உன்ர சொந்தக்காறர் வீட்டில சேத்திற்றன் சரியா?" என்றார்.
"என்னங்கிள் சொல்லுறீங்க? என்னை எதுக்கு அவர் கொல்லோணும். அவரின்ர புள்ள, என்மேல உயிரே வைச்சிருக்கான்.... அதால என்னட்ட வந்து கட்டிக்கோ என்டு கெஞ்சினாரே அங்கிள்...."
"அவனுக்கு நீ வேணும்..... ஆனா அவன்ர அப்பனுக்கு உன்ர சொத்து தானே வேணும்....
திரும்ப வந்து அதை கேட்டிடுவியோ..., பாதப் பங்கு உனக்கு தரவேண்டி வந்துடுமோ என்டு பயப்பிற்றான்டா." என்நிலவரத்தை அவளுக்கு புரிய வைத்தார்.
"நான் தான் ஒன்டுமே வேண்டாம் என்டு வந்திட்டனே அங்கிள்."
"நீ வந்தா விட்டுடுவானா.....? அங்கிள் உன்ர நன்மைக்கு தான் சொல்லுறன்.
கொஞ்ச நாள் மட்டும் பத்திரமா இரும்மா..."
ஓகே அங்கிள்! நான் பாத்து இருக்கிறன். ஆனா வேலைய மட்டும் விட முடியாது அங்கிள்." என்று சேரும் போது நடந்தவற்றை கூறினாள்.
"அப்பிடியாடா... அப்ப பாத்து கவனமா இருந்துக்கோ.
கொழு கொழுன்னு இருந்த பொண்ணு.... பாரு இப்ப எப்பிடி ஆகிட்டா என்டு.
ஒன்டும் யோசிக்காத.... அங்கிள் உன்னை சேர்க வேண்டிய இடத்தில சேத்திற்றன்" என்றவர்,
"இனி இப்பிடியே வேலைக்கு போகோணுமோ.. இல்லை வீட்டையோ...." என்க.
"வீட்டை தான் அங்கிள்" என்று சாதாரணமாக பேச ஆரம்பித்தார்கள்..
சிறிது நேரத்தில் "என்னோட வாரீயா நானே உன்னை கூட்டிக்காெண்டு போறன்.." என்றார்..
"பிரச்சினை இல்லை... நானே போயிடுவன்.. டவுன் பக்கம் தானே! எதுவும் எனக்கு நடக்காது. நான் கவனமா இருந்துகிறன். நீங்கள் வெளிக்கிடுங்கோ" என்றவள், அவர் பின்னாலேயே வெளியேறினாள்.
இவர்களது பேச்சினை ஒன்றும் விடாமல், மரத்திற்கு பின்னால் இருந்து கேட்டுக்கொண்டிருந்தது ஜோடி செவிகள்......
வேளையோடு வீடு வந்தவளை நிற்க வைத்து கேள்வி கேட்டு கொண்டிருந்தாள் சைலு.
"போகேக்க உனக்கு சிங்களத்திலயா சொன்னன்.? தமிழ்ல தானே சொல்லி அனுப்பினன். வரேக்க தனியா வராத... ரவியோட வா என்டு.
பெரிய ஜான்சி ராணி கணக்கா தனியா வந்திருக்க.... ஏதாவது ஒன்டு இடையில நடந்திருந்தா, என்னடி செய்யிறது.?
நீ யார் சொல்லையுமே கேக்க மாட்டியா?
ஏன் மேடத்துக்கு ரவியோடு வாரதில அவ்வளவு வெற்கமோ? அவர் ஒன்டும் உன்னை பிடிச்சு தின்ன மாட்டார்..
உனக்கு இது தான் கடைசி! இனிமேல் தனியா வந்தா... வெளிய இருந்து வந்து உன்னை யாரும் எதுவும் செய்ய மாட்டினம்... நானே உன்னை கொன்டுடுவன்." என்று எச்சரிக்கை போல் சொன்னாலும்,
எங்கே தன் தோழிக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்று பயம் தான் மனம் பூரவுமே.
பேசி முடிந்து சமாதாணம் ஆகியவள்,
"என்ன பிரச்சினை? ஏன் வேளைக்கே வந்திட்ட.... உடம்புக்கு திரும்ப ஏலாதா" என்று அதே தொணியில், அக்கறையாக கேட்டாள்.
"முதலே இந்த கேள்வியை கேட்டிருக்காணும்.... அத விட்டுட்டு ஏதோ பச்ச புள்ள மாட்டினா காணுமே! ஆளாளுக்கு பந்தை உதைக்கிறா மாதிரி, மாறி மாறி கண்ட பாட்டுக்கு திட்டுறீங்கள்...
என்னடி நினைச்சுக் கொண்டு இருக்கிறீங்க எல்லாரும்.
அவன் என்னடா என்டா, தொட்டதுக்கெல்லாம் கேள்வியா கேட்டு, ஏதே பெருசா திருட்டை கண்டு பிடிச்சா போல கொல்லுறான்.
இங்க வந்ததும் வராததுமா.. உடுப்ப கூட மாத்த விடாம, தூக்கு தண்டனை கைத்திய நிக்க வைச்சு கேள்வி கேக்கிற மாதிரி எல்லோ கேக்கிற நீ....
அப்பிடி நான் ஒன்டும் உலக அழகி இல்ல.. என்னை யாரும் கடத்திக் கொண்டும் போகாயினம்." என்றாள் கோபமாக.
" பைத்தியம் மாதிரி, செய்யிறதையும் செய்திட்டு, உளறாத... சொன்னதை செய்! அவ்ளோ தான். கேட்டதுக்கு பதில சொல்லு" என்றாள் அவளும் விடாமல்.
"என்ன பதில் இப்ப வேணும்.? வாசன் அங்கிளை பாக்க போனன்." என்றாள்.
"என்னது! வாசன் அங்கிளா?" என்று நெற்றி சுருங்க கேட்டவள், அவர்தான் வெளிநாட்டில இரக்கிறாரே......"
"ம்ம்... இப்ப தான் வந்திருக்கிறார்.... அவரை பாத்திட்டு வந்தன்"
"அவரு எங்க இங்க.....?"
"அவரோடா ஊருக்கு வந்திருந்து கொண்டு, இந்த கேள்வி கேக்குற...
கடையில் எதற்சியா தான் கண்டன்" என்றாள்.
அவளுக்கும் அவளிடம் கேட்க்க நிறைய கேள்விகள் இருந்தாலும், இது அதற்கான சமயம் இல்லை என நினைத்து அமைதியானாள்.
சைலு மட்டும் கேட்டிருந்தால், துஷாவும் மறைக்காமல் சொல்லி இருப்பாள் தான். ஆனால் இப்போது சைலுவால் கேட்க்க தான் முடியவில்லை.
தான் கேட்க போய், மறுபடியும் அவள் வேதனை பட்டு விட்டாள், மாறிய காய்ச்சல் மீண்டும் வந்துவிடும், சமயம் வரும்போது கேட்கலாம் என விட்டுவிட்டாள்.