• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

15. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
அனிதாவிற்கு ஏதோ நாடகம் பார்ப்பது போல இருந்தது! அத்தையின் குற்றச்சாட்டு தவறு என்று அவளுக்கு தெரியும்! காலையில் ஆனந்தனின் முகம் வாடியிருந்தது என்னவோ நிஜம்தான்! ஆனால் அது அத்தை சொன்ன காரணத்திற்காக என்று அவளுக்கு தோன்றவில்லை! சாருபாலாவை விரட்ட ஏதோ திட்டம் போடுகிறார் அத்தை என்பது மட்டும் தெளிவு! ஆயினும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பறித்து, தான் வாழ வேண்டுமா என்று குற்றவுணர்வு உண்டாகவே செய்தது! ஆனால்,அவளது மனமோ, இல்லை, அவள் ஒன்றும் சாருவின் வாழ்வில் குறுக்கிடவில்லை ! இந்த வாழ்க்கை அவள் வாழ வேண்டியது! அதை தட்டிப் பறித்தவள் சாருதான்! அப்படி பார்த்தால் இது பழிக்கு பழி தானே தவிர, பாவம் இல்லை! தனக்குள்ளாக வாதம் பிரதிவாதம் செய்து தன்னை சமாதானம் செய்து கொண்டாள்!

அறைக்கு சென்ற சாருபாலா, மிகவும் சோர்வுடன் கட்டிலில் விழுந்தாள்! இன்று மாமியார் பேசியவிதம் வேண்டும் என்றே அவளை குற்றவாளியாக்க முயன்றது போலிருந்தது! சொல்லப் போனால் அதை நிரூபிக்கும்படி அவள்,போதும் என்றுவிட்டு வந்ததும் அவர் மேலே பேசாமல் போனதே சாட்சி! இதை எல்லாம்விட அவளது கணவனின் நடவடிக்கை தான்! புதிதாக புதிராக இருந்தது!

ஆனந்தனுடன் பழகத் தொடங்கியதில் இருந்து அவளது அழைப்பை அவன் புறக்கணித்ததே இல்லை! எடுக்க முடியாத சூழல் என்றால் உடனே தகவல் அனுப்பிவிடுவான்! இன்றைக்கு இரண்டு முறை அழைத்தும் அவன் எடுக்கவும் இல்லை! இப்போது வரை திரும்ப அழைக்கவும் இல்லை! ஏன்?
மாமியார் பேசியதை நினைத்துப் பார்த்தாள்!

காலையில் அவளைப் பற்றி யாரோ கணவனிடம் விசாரித்ததாக சொன்னதும், அதை அவன் அவமானமாக உணர்ந்ததாகவும் சொன்னதும், நினைவு வந்ததது! அப்படியானால் அவன் அப்படித்தான் நிஜமாக உணர்ந்தானா? அதனால்தான் அவளது அழைப்பை ஏற்கவில்லையா? என்று எண்ணியவள் மீண்டுமாக அவனை தொடர்பு கொண்ட போது அது அனைத்து வைப்பட்டிருப்பதாக தெரிவித்தது! ஆனந்தன் அன்று வரை அவளிடம் கோபித்துக் கொண்டதே கிடையாது! இப்போது அவனது முதல் கோபம் அவளை மிகவும் பாதித்தது.. அதற்கு மேலாக சிந்திக்க இயலாமல் தூக்கம் அவளை ஆட்கொண்டது!

ஆனந்தன் ஒருவித பதற்றத்துடன் இருந்தான்! தப்பு செய்யத் துணியாதவன், முதல் முறையாக செய்துவிட்ட தப்பை எண்ணி தவிப்பும் பதற்றமும் அவனை அலைக்கழித்தது!

காலையில் அவன் எழுந்த போது மனைவி அங்கே இல்லை! அவள் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்த சீட்டு தான் இருந்தது! அது நள்ளிரவை தாண்டிய நேரம்! சாரு தனியாக காரை எடுத்துக் கொண்டு போவது ஒன்றும் புதிதல்ல! ஆனால் அந்த இரவு நேரத்தில் துணையின்றி அவள் கிளம்பியிருந்தது அவனுக்கு உவப்பாக இல்லை! அவனை எழுப்பாவிட்டாலும் ஓட்டுனரை எழுப்பி அழைத்துப் போயிருக்கலாம்! ஒரு வேளை அவள் சென்ற நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்திருந்தால்? நேராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே! அவனுக்கு முதல் முறையாக அவள் மீது கோபம் துளிர்த்தது! அவன் மனம் தானாக அனிதாவை ஒப்பிட்டு பார்த்தது, அவளுக்கும் கார் ஓட்டத் தெரியும்தான்! ஆனால் அவள் இப்படியான செயலை செய்ய துணிய மாட்டாள்!

அன்றுவரை சாரு ஒரு நல்ல மனைவியாகத்தான் நடந்து வந்திருக்கிறாள்! மறுக்க முடியாது! ஆனால் இன்றைய நிகழ்வு, அவளுக்கு, இப்போதும் தொழில் தான் முக்கியம், கணவன், குழந்தை இரண்டாமிடம் என்பதைத் தானே உணர்த்துகிறது? இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவளுக்கு அவன் மீது நேசம் உண்டாகவில்லையா? அந்த கணம் அவன் மனம் சற்று வலித்தது!

நிறுவனத்திற்கு செல்ல தயாராகி கீழே சென்றபோது, அவனை அன்னை அழைப்பதாக பணியாள் சொல்ல.. அங்கே சென்றான்!

"என்னப்பா ராத்திரி சரியா தூங்கலையா உன் முகம் வாடிப் போயிருக்கு!

"நல்லா தூங்கினேன் அம்மா! என்னை கூப்பிட்டீங்கனு முனியன் சொன்னான்! என்ன விஷயம்மா? "

"ஆனந்த், சாரு எங்கே போயிருக்கிறாள் என்று தெரியுமா?

"தெரியும் அம்மா! ரொம்ப நாளாக நோய்வாய்ப்பட்டு இருந்த ஒருத்தர் சீரியஸ்னு கால் வந்து கிளம்பிப் போயிருக்கிறாள்! ஏனம்மா கேட்கிறீங்க? "

"உன்கிட்டே சொன்னாளா?" என்றார்

ஆனந்தன் இரவு நடந்ததையும், அவள் கிளம்பிய விவரத்தை அறிந்ததையும் தெரிவித்தான்!

"ஏன் இதென்ன குடும்பம் நடத்தர வீடுன்னு நினைச்சாளா? இல்ல சத்திரம்னு நினைச்சாளா? ஒரு துணை கூட இல்லாமல் ஏன்டா போனாள்? அந்த நேரத்துல யாராவது தெரிஞ்சவங்க பார்த்தா நம்ம குடும்பத்தை பத்தி என்னடா நினைப்பாங்க?"

"அம்மா! அவர் ரொம்ப நாளா அவளோட சிகிச்சையில் இருந்தவர்! அதனால் அவர் மேல ஒரு பற்று வைத்துவிட்டாள்! அதனால அவரோட மரணத்தை அவளால தாங்கிக்க முடியலை! எப்பவும் அவள் தன் வேதனையை மத்தவங்ககிட்ட காட்ட மாட்டாள்! அப்படியும் நேற்று சொல்லி அழுதுவிட்டாள்! இது அவளது தொழில் மா! ...

"போதும் ஆனந்தா! இன்னமும் நீ அவளுக்கு வக்காலத்து வாங்கணும்னு இல்லை! கொஞ்சம் உடைச்சு பேசலாமா?"

"அம்மா!"

"எனக்கு உன்னைப் பத்தி நல்லா தெரியும்! இப்ப நீ தவிச்சுட்டு இருக்கிறே! அனிதாவோட அனுசரணை உனக்கு பிடிச்சு இருக்கு! அதை முழுமனசா ஏத்துக்கவும் முடியாம, அதே சமயம் தாலிகட்டிக்கிட்டவளை தள்ளி வைக்கவும் முடியாம, என்ன செய்யறதுன்னு தெரியாம திண்டாடுறே!

"அம்மா.. அது வந்து...! தப்புத்தான்மா!"

"நான் தப்புன்னு எப்ப சொன்னேன்! சாருவை எப்படி கழட்டி விடறதுன்னு நான் யோசனை சொல்றேன்! மனசாட்சி மண்ணாங்கட்டினு எதையாவது உளறாமல், அதன்படி நீ செய்தால் போதும்!! அதுக்கு முதல்ல இன்னிக்கு அவள் செய்த விஷயத்தை கையில் எடுத்துக்கோ.. அதை வச்சு நீ அவகிட்ட இருந்து விலக ஆரம்பி! ஆரம்பத்துல நான் சொன்னப்போ நீ கேட்டிருந்தால் இந்த கஷ்டம் வந்திருக்காது! இனிமே அனிதாவை நீ மறுத்தால் அவள் தற்கொலை தான் செஞ்சுப்பா! நீ நல்லா யோசிச்சு அப்புறமா நான் சொன்னதை செய்! நாளைக்கு என் மேல பழி போடக்கூடாது!

"சாரு மட்டும் தற்கொலை செய்துக்க மாட்டாளா அம்மா?"

"நிச்சயமாக செய்ய மாட்டாள்! அவள் உயிரை காக்க தெரிஞ்சவள்! அது மட்டும் இல்லை ஒரு உயிரோட மதிப்பும் அவளுக்கு தெரியும்! அவளோட தொழில் அவளுக்கு துணை இருக்கும்! அதனால தான் நான் தைரியமா சொல்றேன்!

அன்னை வகுத்து தந்த வழியில், முதல் வேலையாக மனைவியின் அழைப்பை தவிர்த்தாயிற்று! இதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியவில்லை! சாரு எப்போதும் பொறுமைசாலி! எதற்கும் சட்டென்று எதிர்வினையாற்ற மாட்டாள்! ஒரு மனைவி எப்படியிருக்க வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தானோ, அப்படி அனிதா நடந்து கொள்ளும் போது அவன் மனது இயல்பாக அவளிடம் படர்ந்துவிட்டது! சாருவிற்கு உண்மை தெரியும் போது அவள் எப்படி இதை எதிர்கொள்வாள் என்று அவனால் அனுமானிக்க முடியவில்லை!

ஒருவேளை ஆரம்பத்திலேயே இப்படி நடக்க வேண்டும் என்று அவளிடம் கேட்டிருந்தால் அப்படியே நடந்து கொண்டிருப்பாள் என்பது காலம் கடந்த ஞானோதயம்! உன் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்று சொல்லித்தான் அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தான்! அதன்படியே இந்த நான்கு ஆண்டு காலமும் வாழ்ந்து வந்தான்! இனி அவ்வாறு அவனால் வாழ இயலாது! அனிதாவைப் போல ஒருத்தி தான் அவனுக்கு சரி என்று கடந்த சில வாரங்களாக அவனுக்கு தெளிவாகிவிட்டது! முன்பு அவளாக ஆசையை வளர்த்துக் கொண்டாள் நான் பொறுப்பல்ல என்று கழன்று கொண்டது போல இப்போது முடியாது! அது அனிதாவிற்கு செய்யும் பாவம்!

ஆனந்தன் சாருவை இன்னமும் நேசிக்கிறான்! அதனாலேயே அவளை இப்படி குறுக்குவழியில் தாக்குவது மனதுக்கு கஷ்டமாக இருந்தது! ஆகவே இந்த விவகாரத்தை சுமூகமாக பேசி முடித்துவிடலாம் என்றுதான் அவன் தாயிடம் சொன்னான்! காரணம் சாருபாலாவின் குணம் அப்படிப்பட்டது தான்! ஆனால் விசாலாட்சியோ அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தார்! அப்படி முறையாக பிரிந்தால் அவள் ரிஷியை தன்னோடு கொண்டு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது!அவன் நம் குடும்பத்து வாரிசு! அவனை என்னால விட்டுத்தர முடியாது! அது மட்டுமில்லை! நாளைக்கு அவனை நமக்கு எதிராக திருப்பிட்டா, அப்பா, பிள்ளை உறவு கெட்டுப் போகும்! எத்தனை நிதானமான பெண்ணாக இருந்தாலும் தன் உரிமை என்று வரும்போது, சீறித்தான் எழுவாள்! அதனால தடாலடியாக ஏதாவது செய்து தான் நம் காரியத்தை சாதிக்கணும்! அப்போதுதான் எதிராளிக்கு யோசிக்க அவகாசம் ஏதும் கிடைக்காது!"என்று போதித்தார்

ஆனந்தனும் வேறு வழியின்றி செயல்படுத்த ஆரம்பித்து விட்டான்!

சாருபாலாவுக்கு உண்மை புரியுமா?? புரிந்தால் அவளது நடவடிக்கை எப்படி இருக்கும்??
 

Attachments

  • Picsart_24-05-04_15-06-20-975.jpg
    Picsart_24-05-04_15-06-20-975.jpg
    69.1 KB · Views: 17
Last edited:

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
திருமணத்துக்கு முன்னாடியே சாருபாலா எவ்வளவு எடுத்து சொன்னா ஆனந்தன் கேட்டானாம் இப்போ துரோகம் செய்றான் 🙄🙄🙄🙄🙄🙄