• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

15. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
அத்தியாயம் 16


காதல் எந்த எல்லைக்கும் போக வைக்கும், எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும், யாரை வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கும். உலகமே காதல் எனும் சக்தியால் இயங்கும் போது, இந்த மது வர்ஷன் மட்டும் எம்மாத்திரம்?

தன் காதலை தக்க வைத்துக் கொள்ள, ஒவ்வொருவரும் ஒவ்வொரு முயற்சியில் ஈடுபடும் போது, எங்கே தன் காதல் தனக்கு கிடைக்காது போய் விடுமோ என்ற பயம்... அவனை எதையும் யோசிக்க விடாது தடுக்க, அவனது கண்ணுக்கு தெரிந்த ஒரே வழி தன்னவள் கழுத்தில் தாலி கட்டுவதாக இருந்தது. அதனால் மற்ற எதைப் பற்றிய சிந்தனை இன்றி, தோன்றியதை செற்து விட்டு இப்போது தவித்துக் கொண்டிருந்தான் வர்ஷன்.

" ஏன் ஸார் இப்பிடி பண்ணீங்க...? எதுக்கா ஸார் உங்க பாவத்துல என்னையும் பங்கு சேர்த்துக் கிட்டீங்க? " பார்வை என்னவோ தன் தோழியிடம் நிலை பெற்று இருக்க, உடைந்து போன குரலில் வந்த அகி பாப்பா வார்த்தைகள் வர்ஷனை நோக்கி இருந்தது.

" அகி.... " என அதிர்ந்த வர்ஷன், " நான் என்ன சொன்னாலும் உனக்கு புரியாதுடா " என விரக்தி குரலில் கூறி விரித்தியாக சிரித்தவன், தன்னவள் மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினான்.

அகி பாப்பாவையும், அவனது அண்ணன்காரனையும் நீண்ட நேரம் தவிக்க விடாத யாழினி, மெதுவாக கண்களை திறந்து பார்த்தவள் மீண்டும் தன் கழுத்தில் தொங்கும் தாலியில் வந்து நின்றாள்.

" அம்மு... " என அகி அவளை அழைக்க, " எதுக்கா அகி என்னை இங்க கூட்டிட்டு வந்த, உன்னை நான் எப்பவும் எந்த சந்தர்ப்பத்துலையும் நொடி நேரம் கூட சந்தேகப்பட்டது இல்லையே. நீ என்ன பண்ணாலும் என்னோட நல்லதுக்குன்னு என்னை விட அதிகமாக உம்மேல நம்பிக்கை வைச்சு இருந்தன். ஆனா என்னோட அந்த நம்பிக்கையை இப்போ சுக்கு நூறா உடைச்சுட்டல்ல... " உயிரை வதைக்கும் குரலில் யாழினி கேட்க,

அவளது அந்த வார்த்தைகள் உண்மையிலேயே அகியை உயிரோடு கொன்று போடச் செய்தது.

" அ... ம்.... மு... நா... நான் " அவனால் பேசக் கூட முடியவில்லை. கண்கள் குளம் கட்டி இருக்க, பார்வை என்னவோ வர்ஷனை நோக்கி கோவக் கனலை வீசியது.

" பாத்தீங்களா ஸார், என்னோட அம்மு.... என்னோட அம்மு என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்றன்னு காதுல விழுந்துச்சா? ஏன் ஸார் என்னை இப்பிடி ஒரு இக்கட்டுல கொண்டு வந்து நிறுத்துனீங்க...? " வார்த்தைகள் அற்ற கேள்வி வர்ஷனுக்கும் புரியத் தான் செய்தது.

" யாழினி வேணாம்மா, அகி மேல எந்த தப்பும் இல்ல... அவனுக்கு எதுவும் தெரியாது. நான் தான், எல்லா தப்பும் என்னோடது தான். உன்னை இழந்துடுவனோங்குற பயத்துல " வர்ஷன் எதையோ கூறிக் கொண்டு போக,

அவனது காதில் நொய்ங் என்ற சத்தம் கேட்க, அடுத்த நொடி கன்னம் பயங்கரமாக எரிய ஆரம்பித்தது. அதிர்ந்து போய் பார்த்தவனுக்கு அப்போது கூட நம்ப முடியவில்லை

அகியாலும் கூட நடந்து விட்ட அந்த சம்பத்தை நம்ம முடியவில்லை. எதற்கெடுத்தாலும் பயந்து போய் தனக்குள் சுருண்டு கொள்ளும் தன் அம்முவா இது எனும் ரீதியில் வியந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

" யாழினி.... " வர்ஷன் அழைக்க,

" என்ன என்ன யாழினி? என்னைப் பாத்தா எப்பிடி தெரியுது உங்களுக்கு? நீங்க என்ன வேணா பண்ணுவீங்க நான் எதுவும் பண்ணாம அமைதியா வேடிக்கை பாத்துட்டு இருக்கணுமா?

முன்னாடி ஒரு காலத்துல அப்பிடி தான் இருந்தன். இல்லன்னு சொல்லல... ஆனா என்னோட வாழ்க்கைல வந்த ஒருத்தர் தைரியமா இருக்க கத்துக் கொடுத்தாரு.

நமக்கு எதிரா நடக்குறதை எதிர்த்து கேள்வி கேட்கணும்னு சொன்னாரு. குட்டுறாங்கன்னு தலையை குனிஞ்சுட்டே இருக்காம, ஒரு தடவை அந்த குனிஞ்ச தலையை நிமிர்த்தி பார்க்க வைச்சாரு.

ஆனா இப்போ அவரே சொன்னதை எல்லாம் மறந்து, இப்பிடி பண்ணி வைச்சு இருக்காரு. " அவள் வார்த்தைகளில் அனல் காற்று பட்டுத் தெறித்தது.

" சொல்லுங்க மிஸ்டர் மது வர்ஷன், இதுக்கு பேரு என்ன? எதுக்காக என்னோட கழுத்துல என்னோட அனுமதி இல்லாம தாலி கட்டுனீங்க...? " நேர்ப் பார்வை பார்த்த கேட்டவளது இந்த அவதாரத்தை ஆண்மகன்கள் இருவருமே எதிர் பார்க்கவில்லை.

" யாழினி நான் உன்னை காதலிக்குறன்மா, எங்க உன்னை இழந்துடுவனோங்குற பயத்துல இப்பிடி பண்ணிட்டன். என்னை மன்னிச்சுடு " செய்த தவறு புரிந்ததனால் அமைதியாகவே பேசினான் வர்ஷன்.

" ஓஓ இப்போ நான் உங்களை மன்னிக்கணுமா? மன்னிச்சுட்டு அடுத்து என்ன பண்ணனும்? " யாழினியின் கேள்வி கணைக்கு பதில் சொல்ல வர்ஷனிடம் பதில் இல்லை.

" என்ன சொன்னீங்க மது, என்னை நீங்க காதலிக்குறீங்களா...? நீங்க காதலிச்சுட்டா அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரியாம தாலி கட்டிடுவீங்களா?

பொண்ணுங்க ஒண்ணும் அடிமைங்க இல்லன்னு நீங்க தான மது எனக்கு புரிய வைச்சீங்க. இப்போ இந்த தாலியை கட்டி பொண்ணுங்களுக்கு சுயமா ஆசைகள், கனவுகள் எதுவும் இல்லன்னு நிரூபிச்சுட்டீங்கல்ல, சத்தியமா இதை நான் உங்க கிட்ட எதிர்பார்க்கல,

ஏன் மது? எதுக்காக? "

சற்று நேரம் மூவருக்குள்ளும் அமைதி நிலவ,

அடுத்து யாழினி என்ன செய்ய போகிறாள் என புரியாது வர்ஷன் தவித்துக் கொண்டு இருந்தான். அகியோ இன்னும் தன் தோழி கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

" நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்குறதால எதுவும் மாறிடாதுன்னு எனக்கு தெரியும் யாழினி, நான் என்ன விளக்கம் சொன்னாலும் நான் பண்ணதுக்கு நியாயமும் சொல்ல முடியாது.

ஆனா நான் உன்னை காதலிக்குறன். இது மட்டும் உண்மைமா, உன்னை என்னோட உயிருக்குள்ள பொத்தி வைச்சு பாத்துக்கணும்னு ஆசை, இப்ப வரைக்கும் நீ கஷ்டப்படத்துக்கு எல்லாம் சேர்த்து உன்னை சந்தோசத்துல குளிப்பாட்டணும்னு கொள்ளை ஆசை.

சத்தியமா இண்ணைக்கு உங்கிட்ட என்னோட காதலை சொல்லணும்னு அவ்வளவு ப்ளான் பண்ணி வைச்சு இருந்தன். ஆனா இப்போ உன் முன்னாடி குற்றவாளியா நிக்குறன்.

நீ எம்மேல கோவபட்டு திட்டு, ஏன் அடிக்க கூட செய். ஆனா என்னோட காதலை மட்டும் தப்பா நினைக்காத ப்ளீஸ் " வர்ஷன் குரலில் என்னை புரிந்து கொள்ளேன் எனும் தவிப்பு அதிகமாக இருந்தது.

" இதுக்கு பேரு காதலா மது? ஆணாதிக்கம் இல்லையா அப்போ? " நக்கல் மிகுந்து இருந்தது யாழினி குரலில்.

" ஐயோ யாழினி சத்தியமா அப்பிடி இல்லமா, என்னை நம்பு. நான் உன்னை அவ்வளவு காதலிக்குறன். "

" ஹான் காதலா... எங்கிட்ட எப்போவாது நீங்க உங்க காதலை சொல்லி இருக்கீங்களா? என்னோட மனசுல என்ன இருக்குன்னு அறிஞ்சுக்க முயற்சி பண்ணீங்களா? "

" ...... "

" இப்போ தாலிய கட்டிட்டீங்க, எனக்கு இதில விருப்பம் இல்லன்னு சொன்னா, இந்த தாலியை என்ன பண்ண போறீங்க? கட்டினது போல நீங்களே கழட்டிடீங்க. " அவள் சொல்ல இயலாமையில் வர்ஷன் கண்களும் கலங்க தான் செய்தது.

" நீ அகி பேசாம இருக்க, உங்க பாஸ் சொன்னது போல என்னை கோயிலுக்கு கூட்டிட்டு வந்தாச்சு... அவரு என்னோட கழுத்துல தாலி கட்டியாச்சு.

ஏன் அகி இப்பிடி பண்ண? மதுக்கு தான் என்னைப் பத்தி எதுவும் தெரியாது. ஆனா உனக்கு தெரியும்ல. என்னோட வாழ்க்கைல நான் ஆசைப் பட்ட ஒரே விசயம் என்னோட கல்யாணம்.

தனிமையே துணையா இருந்து வளர்ந்த எனக்கு, எந்த சந்தோசத்தையும் பாக்காத எனக்கு... அட்லீஸ் என்னோட கல்யாணம் ஆவது நிறைய சொந்த பந்தங்களோட, எல்லா சடங்கு சம்பிரதாயங்களோட நடக்கணும்னு உங்கிட்ட எத்தனை தடவை ஆசையா சொல்லி இருப்பன்.

ஆனா அதை எல்லாம் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம, எதுக்காக இப்பிடி பண்ண அகி? ஒத்தை நிமிசத்துல இத்தனை வருசமா நான் கட்டி வைச்சு இருந்த கனவை சிதைச்சுட்ட அகி...

இல்ல என்னால இதை கல்யாணமா ஏத்துக்க முடியாது. இது கல்யாணமே கிடையாது. " என்றவள் கழுத்தில் இருந்த தாலியை கழட்ட போனாள்.

" அம்மு.... "
" யாழினி... "

என்ற குரல்கள் அதிர்ந்து போய் அவளை அழைத்ததை சட்டை செய்யாதவள், நொடியில் அந்த தாலியை கழட்டி அருகே இருந்த உண்டியலில் போட்டுவிட்டாள். அவளது மனது உடைந்து கண்ணீர் சொரிந்ததை மற்றவர்கள் பார்க்கும் முன் துடைத்துக் கொண்டவள், அவர்கள் புறம் திரும்பினாள்.

மது வர்ஷன் அவளை அடிபட்ட பார்வை பார்க்க,

" மது நீங்க என்னை லவ் பண்றது உண்மை தானா, உங்க வாழ்க்கைல உங்க பெண்டாட்டியா நான் வரணும்னு ஆசைப் பட்டது உண்மை தானா...

அப்பிடின்னா இப்போ நீங்க யாருக்கும் தெரியாம என்னோட கழுத்துல கட்டின தாலியை, இன்னும் மூணு மாதத்துக்குள்ள உங்க குடும்பத்துல எல்லாரு சம்பந்தத்தோட ஊரைக் கூட்டி, இதே கோயில்ல இதே சந்திதானத்துல வைச்சு மறுபடியும் கட்டுங்க.

வீட்டுக்கு மூத்த பையன் நீங்க, உங்க கல்யாணத்தை பத்தி உங்க வீட்டுல நிறைய கனவு இருக்கும். அதை எல்லாம் சிதைச்சுடாதீங்க. என்னோட நம்பிக்கையை உடைச்சது போல, அவங்க நம்பிக்கையை உடைச்சுடாதீங்க " இந்த நேரத்திலும் யாழினி தன் குடும்பத்தை பற்றி யோசித்து பேசுவதை கண்டவனுக்கு, தன் தந்தையின் மீது இன்னும் கோவம் கூடிச் சென்றது.

" என்ன மது அப்பிடி பாக்குறீங்க? என்னடா இவ கட்டின தாலியை கழட்டி போட்டுட்டு, இப்பிடி பேசிட்டு இருக்கான்னு வித்தியாசமா இருக்கா? ஒருவேளை நடந்த அதிர்ச்சில இவ பைத்தியம் ஆகிட்டாளான்னு பாக்குறீங்களா?

நீங்க என்னை லவ் பண்றது எந்தளவுக்கு உண்மையோ, அதே போல என்னோட மனசுலையும் நீங்க இருக்குறதும் உண்மை மது. ஆமா மது நானும் உங்களை காதலிக்குறன். ஆனா இப்போ உங்க மேல காதல் இல்ல, கோவம் மட்டும் தான் இருக்கு. " தன் காதலை அவள் சொல்லி விட,

அதுவரை நேரமும் தன் இயக்கத்தை நிறுத்தி இருந்த வர்ஷன் உலகம் அழகாக இயங்கத் தொடங்கியது.

" யாழினி... " வர்ஷன் எதையோ பேச வர,

" வேணாம் மது.. எங்கிட்ட நீங்க எதுவும் பேச வேணாம். எதையும் கேட்குற மனநிலைல நான் இல்ல. என்னை மொத்தமா உடைச்சுடீங்க மது, உங்க கையால என்னோட கழுத்துல தாலி ஏறாதான்னு ஏங்கின என்னையே அந்த தாலியை கழட்டி உண்டியல்ல போட வைச்சுட்டீங்க.

இப்போ இங்க நடந்த இந்த சம்பவம் மூணு பேரையும் தவிர, வேற யாருக்கும் எந்த சூழ்நிலையையும் தெரிய கூடாது. இது எம்மேல சத்தியம். அட்லீஸ் இதையாவது ரெண்டு பேரும் காப்பாத்துவீங்கன்னு நினைக்குறன்.

உங்களுக்கு மூணு மாசம் தான் மது டைம், அதுக்குள்ள நீங்க என்னை கல்யாணம் பண்ணியே ஆகணும். ஆனா அது வரை எங்கிட்ட பேச முயற்சி பண்ணாதீங்க " என வர்ஷனிடம் கூறியவள்,

" நீங்க என்ன மாதிரி ஸார், எங்கூட வர்றீங்களா? இல்ல அடுத்து என்ன பண்ணனும்னு ப்ளான் பண்ண உங்க பாஸ் கூட போகணுமா? " என அகியை பார்த்து கேட்டு விட்டு, உள்ளுக்குள் அழுது கொண்டு அந்த உண்டியலை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு, கோயிலை விட்டு வெளியே சென்றாள் அமுதயாழினி.