• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

15.Miss மானஷா சம்யுக்தா (முழுத்தொகுப்பு )

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
ஐந்து வருடங்களுக்கு பிறகு,

மீடியாக்கள் சுற்றி வளைத்து நிற்க உயர்ரக கார்கள் வருவதும் போவதுமாக இருந்து கொண்டிருந்தது அப்பெரும் ஹோட்டலில் இன்று தொழிலதிபர்களுக்கான விருது வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.

அச்சமயம் BMW கார் ஒன்று வந்து நிற்க அனைத்து கேமராவின் கண்களும் லைட்களும் அந்த காரின் மேல் விழுந்தது
அனைவரையும் காக்க வைக்காது அதில் இருந்து பட்டுபுடவையில் எழில் ஓவியமாய் இறங்கினாள் சம்யுக்தா வித விதமாக அவளை புகைப்படம் எடுத்து தள்ளினர் ஒரு புன்னகையுடன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கம்பீரமாக வரவேற்பரையை தாண்டி நடக்க தொடங்க அவளுக்கு பாதுகாப்பாக அரணாக சுற்றி வளைத்து அவளை அழைத்து சென்றனர் பாடி கார்ட்ஸ்....

நவ நாகரீக யுவதி ஒருவள் மேடையில் நின்று தே அவார்ட் கோஸ்டூ தே பிகஸ்ட் சக்ஸஸ்வுமன்
MISS மானசா சம்யுக்தா....
என்ற பெயர் அறை எங்கும் எதிரொளிக்க பலத்த கரகோசங்களுக்கு இடையில் மேடை ஏறினாள் பெண்ணவள் பிரபல தொழிலதிபர்களின் ஊடாக அந்த விருதை வாங்கியவளுக்கு மனதில் இனம் புரியா பரவசம் குடி கொண்டது....

அவளிடம் மைக் கொடுக்கப்பட நிமிர்ந்து கம்பீரத்துடன் நின்றவள் “எல்லாருக்கும் வணக்கம் இந்த அவார்ட் குடுத்த உங்களுக்கு ப்ஸ்ட் அ போfல் தாங்க்ஸ்
மிடில் க்ளாஸ் பெண்ணாலே பிஸ்னஸ்ங்கிற சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்புறது கனவுன்னு சொன்னாங்க ஆனா அப்போ என்னை நான் முழுசா நம்பினேன் அதே மாதிரி என்னோட நம்பிக்கை என்ன கை விடலே இங்க வர என்னை கூட்டிட்டு வந்து விட்டிருக்கு அட் தே சேம் டைம் இங்கே என் அம்மா பத்தி சொல்லனும்னு நினைக்கிறேன் சீ ஈஸ் சிங்கிள் மதர் எனக்கு அவங்க சொல்லி கொடுத்த விஷயங்களே ஒன்னு தான் இந்த தையல் கலை
என் மேல நம்பிக்கை வெச்சி இவ்வளவு தூரம் நான் வந்ததுக்கு பின்னாடி என்னோட ஃபேமிலியோட சப்போர்ட் முக்கியமா இருக்கு அவங்க இல்லன்னா மிஸ் மானசா சம்யுக்தாங்கிற அடையாளமே இல்லாம போயிருக்கும் தாங்க்யூ தாங்க்யூ ம்மா…” என்றவளிடம்,


“உங்களை மாதிரி சாதிக்க துடிக்கிற பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க…” என்று கேட்ட அந்த பெண்ணை பார்த்து மெலிதான புன்னகையுடன் “நோ வேர்ட்ஸ் அவங்களுக்கு என்னோட லைஃப் ஜேர்னியே முன்னுதாரணமா இருக்கும்னு நினைக்கிறேன்‌…” என்றவளுக்கு திரும்ப கைகள் தட்டும் சத்தம் கேட்க சிறு தலையசைப்புடன் அதை ஏற்றவள் கீழிறங்க அந்த இடத்தில் ஓரமாக நரைத்த முடியும் மெலிந்த உடற்தோற்றத்துடனும் நின்று கொண்டிருந்தான் அவளின் தகப்பன் வந்ததில் இருந்து மகளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து கொண்டிருந்தார் மனிதன் அன்று சிறு குழந்தைகளுடன் தன் கால் பிடித்து கெஞ்சிய மனைவி கண்ணுக்குள் வந்து நின்றாள் அவளுக்கு செய்த துரோகம் தான் இன்று யாருமற்றவனாக அடுத்தவர் கையை எதிர்ப்பார்த்து வாழும் வாழ்க்கை ஏற்படுத்தி இருந்தது.


இந்த ஐந்து வருடங்களில் நிறைய மாறி விட்டது அஷ்விதாவின் ஆடைகளுக்கு அடுத்து அவளது கம்பனியின் பெயரும் அவளும் பிரபலமாகி போனார்கள் ஆர்டர் வந்து குவிந்தது அதற்கு ஏற்றாற் போல் வருமானமும் கிடைத்தது முதலில் பேங்க் லோன்யை அடைந்திருந்தாள் அதே சமயம் அக்காவின் திருமணத்தையும் கோலாகலமாக நடத்தினாள் இப்போது அவர்களுக்கு இரண்டு வயது மகனும் இருக்கிறான் ரிஷிக்கும் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணிற்கும் திருமணம் நடந்து இன்று அவர்களுக்கு ஒரு வயது குழந்தையும் இருக்கின்றது அவர்களின் ஓட்டு வீடு இன்று மூன்று தளத்தை கொண்டு
உயர்ந்து நின்றது
அவளின் ஆபிஸ் இன்று சற்று விரிவாக்கப்பட்டு அவளின் கீழ் ஆயிரம் பேர் வேலை செய்யும் நிலையிற்கு வந்திருக்க நாடெங்கும் பல கிளைகளும் வேரூண்டி இருந்தது MISS FASHION கம்பெனியின் CEOவாக MISS மானசா சம்யுக்தா வலம் வந்து கொண்டிருந்தாள்....

இன்று அவார்ட் வாங்கிய தருணத்தை கொண்டாட பார்ட்டி போல் ஏற்ப்பாடு பண்ணியிருந்தது அவளின் ஊழியர்களினாள்.

குடும்பத்தோடு அனைவரும் வர அதில் சன்முகவேல் மற்றும் அகிலன் லில்லி தம்பதியினரும் அவர்களின் நான்கு வயது மகளும் அதில் அடக்கம்...

பங்சன் இனிதாக தொடங்க அவர்களுக்கு மனமார நன்றியை தெரிவித்தாள் சம்யுக்தா அதே சமயம் அவர்களும் சம்பள பணத்தையும் அதிகப்படுத்தியிருந்தாள் அனைவரும் அமர்ந்திருந்து ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டிருக்க லில்லி அவளருகில் வந்தமர்ந்தாள் “நீ நெனச்சதை சாதிச்சிட்ட ஓகே உனக்காக காத்திட்டிருக்கிற யுவாண்ணாக்கு என்ன பதில்? எல்லாரும் இருந்து தனியா போய் உட்கார்ந்துக்கிட்டு இருக்காரு ப்ரென்ட் எப்பபாரு‌ மகனை பத்தி நெனச்சி தான் கவலைப்பட்டுகிட்டு இருக்காரு…” என்று சொல்லியவள் அவள் பதிலுக்காக சம்யுக்தாவை காண அவளும் “என்னை சுத்தி சுத்தி வந்து காதலிச்சவரை கூட்டிட்டு வர நானே போறேன் பெரிய பெரிய வேலை எல்லாம் பார்த்திட்டு சார் போய் அமெரிக்காலே உக்கார்ந்துகிட்டு இருக்காரு அவரை நான் போய் கூட்டிட்டு வரது தானே முறை…” என்றவளை கண்கள் விரிய பார்த்தவள் உண்மையாவா?
என கேட்க.....

ஆமா என தலையசைத்தவளை பாய்ந்து கட்டிக் கொண்டாள் லில்லி “சூப்பர்டி எப்போ போற…”

“இன்னைக்கு இப்போவே ஏர்ப்போர்ட் போறேன் இயர்லி மார்னிங் ஃப்ளைட் சோ நாங்க திரும்பி வரும் போது கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றீங்க…” என்றவள் அனைவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள் அவளவனை காண்பதற்கு...

யுவா என்கிற யுவேந்திரன் அகிலன் கையில் இங்கிருந்த கம்பனி பொறுப்பை கொடுத்து விட்டு அமெரிக்காவில் உள்ள அவர்களின்‌ கிளை நிறுவனத்திற்கு பறந்து விட்டிருந்தான் அன்று அவனை கண்டது அஷ்விதா திருமணத்தில் மட்டுமே அதன் பிறகு கிடைத்த செய்திதான் அவன் போய்விட்டான் என்பது கேட்டதும் மனம் சுனங்கி போய் விட்டது பெண்ணவளுக்கு இருந்தும் அவளை நகர முடியாதபடி அடுத்து அடுத்து பொறுப்புக்கள் தலையில் வந்து நிற்க அதை கவனிக்க தொடங்கியவளின் மனதில் அவன் மட்டுமே....

தாயின் திருமண நச்சரிப்பு தாங்க முடியாது தன்னவனை பற்றி சொல்லி விட அதன் பிறகு அப் பேச்சை அவர் எடுப்பதில்லை....

அடுக்கு மாடிக் குடியிருப்பு அதில் ஐந்தாவது தளத்தில் அவன்
வீடு அவனின் அட்ரஸ் கண்டுபிடித்து வந்து சேர்ந்து விட்டாள் முழுவதாக ஒரு நாள் கழித்து அவள் வரும் விடயம் அவனுக்கு தெரியாது இன்று லீவ் எடுத்துக் கொண்டவன் சமையல் வேலையில் இறங்கியிருந்தான் தீவிரமாக அவன் சமைத்து கொண்டிருந்தாலும் அகிலனால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த அவள் அவார்ட் வாங்கும் காணொளியில் தான் கண்கள் பதிந்து இருந்தது.

காதலியையும் அவளின் வெற்றியையும் தூர நின்று இப்படி தான் மனமார கண்டு கொள்கிறான்.

விடாது அடித்த காலிங் பெல் சத்ததில் கோபம் கொண்டு கரண்டியை தூக்கி சிங்கில் போட்டுவிட்டு “இந்த எருமாடு பீட்டரை போட்டு மிதிச்சா தான் சரி அவனோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போய்ட்டு இருக்கு…” என அவனது பிஏ தான் வந்து கதவை தட்டுகிறான் என்று எண்ணியபடி வந்து கதவை திறக்க அங்கு ட்ராலியுடன் நின்று கொண்டிருந்த தன்னவளை கண்டு கண்கள் ரெண்டும் மகிழ்ச்சியில் தத்தளிக்க அவளை இறுக்கி அணைத்து கொண்டான் யுக்தாமா...... என்ற அழைப்புடன் ஐந்து வருட ஏக்கமும் காதலும் போட்டி போட உணர்வுகளை அடக்க வழியறியாது நிகழ்த்தி விட்டவனை கண்களில் வடிந்த கண்ணீருடன் அணைத்து கொண்டாள்‌.

“என்னை தேடி வந்திட்டியா யுக்தாமா…” என்ற குரலை ஆழமாக ஏற்று மனதினுள் புதைத்து கொண்டவள் குறும்பாக “இல்லையே நான் ஜஸ்ட் இங்கே ஒரு க்ளைன்ட் பார்க்க வந்தேன்
ப்ரென்ட் தான் சொன்னிச்சு எதுக்கு தெரியாத இடத்துலே போய் தங்கிட்டு அங்கே தான் என் பையன் இருக்கான் அவன்கூட தங்கிங்கோன்னு அதான் வந்தேன்..” என்று சீரியசாக பேசுவளை கண்டு உண்மையோ என்று நினைத்தவன்.

“ச்சே ச்சே… நீ பொய் தானே சொல்ற…” என்று சிறுபிள்ளையாய் கேட்டவனை கன்னம் கிள்ளி கொஞ்ச வேண்டும் போல் இருந்தது மனதை அடக்கி கொண்டு இல்லை என்றவளிடம் “அப்போ எதுக்கு என்னை கட்டிபிடிச்ச…” என்றவனிடம் “இது என்னப்பா இது அமெரிக்காலே எல்லாரும் ஹாய்ன்னு வெல்கம் பண்ணுறது இப்பிடி தானே இதே மாதிரி தான் ஏர்போர்ட்லே ஒருத்தங்க ஹக் பண்ணாங்க அதான் நீங்களும் செய்றீங்கன்னு நெனச்சேன்…” என்றவள் அவனை ஏற்றிவிட குபு குபுவென அவனின் அடி வயிறு பற்றி எரிந்தது எவன் அவன்? என்ற எண்ணத்தில் அவன் முகமாற்றத்தை கண்டு இதழை மடித்து சிரிப்பை அடக்கியவள் “உள்ளே வரவா யுவா சார் இல்ல ஹாட்டல்லே ரூம் எடுத்து தங்கிக்கவா…” என்றவளை அவசரமாக உள்ளே தள்ளி கதவை தாளிட்டு கொண்டான் பயத்தில் எங்கு போய் விடுவாளோ என்று.....

“அந்த ரூம் ஃப்ரீயா தான் இருக்கு போய் ரெஸ்ட் எடு..” என்று சொல்லி விட்டு அவன் கிட்ஷனுக்குள் நுழைய இவளோ அவனின் அறையை கண்டு அதற்குள் நுழைந்து கொண்டாள் குளித்து நார்மல் குர்தியில் ஈர முடியை டவள் கொண்டு சுற்றி கொண்டவள் கிட்ஷனுக்குள் நுழைந்தாள் அங்கு குர்மாவை கொலை செய்து கொண்டிருந்தான் ஆணவன் கோவத்தில் கண்களும் லேசாக கலங்கியிருந்தது இத்தனை வருஷம் அவளுக்காக காத்திருந்தும் அவள் மனதில் தான் இல்லையோ என்ற எண்ணத்தின் வெளிப்பாடு அது......
அக் கண்களை தெளிவாக கண்டு கொண்டவள் இதற்கு மேல் அவனை தவிக்கவிடாது பின்னால் இருந்து அவனை அணைத்து கொண்டாள் அப்படியொரு இறுக்கம் அந்த பிடியில் அதிர்ச்சியுடன் அவன் நிமிர்ந்தான்.

“சாரி சாரி சும்மா விளையாடினேன் உங்க கூட சாரி…”என்று மூக்கை உறிஞ்சினாள் அவன் கண்ணீர் பொறுக்காது..... அவளணைப்பில் திகைத்து திரும்பியவனின் கன்னம் கிள்ளி “எங்கே போனாலும் கிழவனுக்கு கோவம் மட்டும் போகலே..” என்று நக்கல் செய்தவளை இடையோடு வளைத்து பிடித்து தூக்கியவன் “யாரை பார்த்து மேடம் கிழவன்னு சொல்றீங்க…” என்று அவள் கன்னத்தை கடித்து வைக்க ஸ் ஆ... என துள்ளி விலகியவள்.

“பின்னே கிழவனை கிழவன்னு சொல்லாம மண்டையிலே பழுத்த முடி வேற ஆங்காங்கே எட்டிப் பார்க்குது பாரு..” என்று சொன்னவளை கண்டு பெருமூச்சு விட்டவன் “பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு கிழவன் பழுத்த முடின்னு கிண்டல் பண்றீயா? நீ என் லவ்க்கு க்ரீன் சிக்னல் காட்டியிருந்தா இன்னைக்கு ரெண்டு பிள்ளைக்கு அப்பனா மாறி இருப்பேன்…” என்றவன் சாப்பாடு எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருக்க அவனுடன் அனைத்தையும் எடுத்து வைத்தப்படியே “அதான் இனி எல்லாத்தையும் பொட்டி கட்டி இழுத்திட்டு போலாம்ன்னு வந்திட்டேன்‌‌…”. என்று கண்சிமிட்ட “ஹேய் அப்போ உண்மையா நீ…”என்று வார்த்தைகள் வராது தடுமாறியவனிடம் யெஸ் என்று கண் சிமிட்டி விட்டு….

“சரி எனக்கு பசிக்கிது சாப்பாடு கிடைக்குமா?...” என்றவளை இழுத்து கொண்டு இருக்க வைத்து சமைத்த உணவை பரிமாறினான் அந்த உணவின் மனத்தையும் ருசியை ரசித்து ருசித்து சாப்பிட்டவளை கண்டெடுக்காது காண அவளே உணவை பிசைந்து அவனுக்கு ஊட்டி விட்டாள் அதில் கண்கலங்கினாலும் வெளிக்காட்டாது “எங்கம்மாக்கு அப்பறம் நீதான் ஊட்டி விடுறே ரொம்ப நல்லயிருக்கு இந்த ஃபீல்…” என்று சாப்பிட்டவன் ஆனா “இன்னைக்கு தான் என் பக்கம் சூரியனோட முகம் திரும்பி இருக்கு போல அதிசயத்திலே அதிசயமா எல்லாம் நடக்குது…” என புலம்பிக் கொண்டிருந்தவனை புன்னகையுடன் பார்த்தவள் இரண்டு நாள் அங்கு இங்கு என்று சுத்தி பார்த்து மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கிளம்பி வந்திருந்தனர் தாயகத்திற்கு,

மகனை கண்டதும் சிறு குழந்தையாக மாறிய தந்தையை அணைத்து கொண்டான் “சாரிப்பா அவளை டிஸ்டர்ப் பண்ணிடுவேனோன்னு கிளம்பின நான் நீங்க கஷ்ப்படுவீங்கன்னு நினைக்காம போய்ட்டேன்..” என்றவனை தட்டிக் கொடுத்து “அதெல்லாம் ஒன்னுமில்ல நீ காலையிலே போட்டுக்குடுக்கிற டீ மாதிரி யாரு போட்டாலும் வராதா அதான் டீ கிடைக்கலேன்னு வருத்தம்…” என்றவரை பொய்யாக முறைத்தாலும் அவனுக்கு தெரியாதா? தந்தை பற்றி அதன் பிறகு குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டான்
முறையாக அனைத்து சம்பிரதாயமும் அவன் திருமணத்தில் நடந்தது பெண் பார்க்கும் படலத்தில் இருந்து.....

இரு தொழிலதிபர்களின் திருமணம் சொல்லவா? வேண்டும் கலை கட்டியது திருமண மண்டபம் அவன் வாங்கி கொடுத்த பட்டுப் புடவையில் வைர நகைகள் அணிந்து அன்னநடையிட்டு வந்த அந்த பிடிவாதகாரனின் முகத்தில் இன்று வெட்கமும் வந்து குடி கொண்டிருந்தது மந்திரங்களை சரியாக சொல்லிக் கொண்டிருந்தவன் தன்னவளை திரும்பி பார்த்து விழுந்து விட்ட இதயத்தோடு தப்பு தப்பாக சொல்லிக் கொண்டிருந்தான் எழுந்து சென்று கட்டிக் கொள்ள துடித்த கைகளை அடக்கி கொண்டு இருக்கவே சிரமமாக இருந்தது அவன் அவஸ்தையை கண்ட பெண்ணவளுக்கும் அந்த நிலை தான் பட்டு வேட்டி பட்டு சட்டையில் முறுக்கேறிய அவன் உடல் அவனை மேலும் கம்பீரமாக காட்ட இறுகிய முகத்தில் இன்று சிறு புன்னகை ஒட்டி இருக்க அதை எல்லாம் ரசித்தவண்ணம் அவளருகே அமர்ந்தாள் சம்யுக்தா.

அனைவராலும் ஆசிர்வதிக்கப்பட்டு வந்த தாலியை எடுத்து அவள் கண்பார்த்தபடியே “மிஸ் மானஷா சம்யுக்தா மிஸஸ் மானஷா சம்யுக்தா யுவேந்திரன் ஆவதற்கு சம்மதமா?...” என்று கேட்டவனை காதலோடு ஏறிட்டவள் தலையசைக்க அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டிருந்தான் யுவேந்திரன் குங்குமம் வைத்து நெற்றியில் அழுந்த முத்தமிட அதை கேமரா அழகாக உள்வாங்கி கொண்டது.

இரவு அவர்களுக்கான நேரம் தன்னவளுடன் கட்டிலில் விட்டத்தை பார்த்தப்படி அமர்ந்திருந்த யுவாவின் முகத்தை திருப்பிக் தன்னை பார்க்க வைத்தவள் “எதுக்காக யுவா அமெரிக்கா போனீங்க…” என்றவளிடம் “உனக்கிட்ட சொல்ல என்னடி உன்னை பார்க்கும் போதே என்னை மீறி வர உணர்வுகளை கட்டுப்படுத்த முடியலே அதோட நீ ஜெயிக்கனும் உன்னையும் டிஸ்டர்ப் பண்ண முடியாது அதே சமயம் இங்கே ஒருத்தன் இருக்கானே அகிலன் அவனுக்கு எனக்கும் ஒரு வயசு தான் என்ன மாச கணக்கு வித்தியாசம் அதுலே பெரியவன் வேற நான் தான் என் காதல் ஊசலாடிட்டு இருக்கும் போது அவன் மட்டும் கல்யாணம் பண்ணி பொண்டாட்டியை கொஞ்சிக்கிட்டு இருக்கிறப்போ கவலை வந்திடுதா அப்பறம் என்ன வெளியே சொல்ல முடியாம உள்ள வெச்சிக்கிட்டு உக்கார்ந்துக்கிட்டேன் அப்போ எல்லாம் உன்கிட்ட ஓடி வர எல்லாம் தோனும் எங்காச்சும் தூரமா
போய் இருந்தா
இதை எல்லாம் பார்க்க வேண்டி வராது அதே சமயம் உனக்கும் என்னாலே எந்த தொந்தரவும் இருக்க கூடாதுன்னு நினைச்சு தான் தள்ளிப் போனேன் இப்போ பார்த்தியா இங்கே வந்ததும் நாலு வயசு குழந்தையா அவன் பொண்ணு வந்து ஹாய் மாமான்னு கூப்பிடுறா இதுலே திரும்பவும் அப்பா போஸ்டிங் வாங்கிட்டான் நான் இன்னைக்கு கல்யாணத்தை பண்ணிட்டு மேலே பார்த்திட்டு உக்கார்ந்திட்டு இருக்கேன்…” என உதட்டை சுழித்து சோகமாக கூறி கொண்டிருக்க அவன் கன்னத்தில் முத்தமிட்டவள்.

“நான் என்ன புண்ணியம் பண்ணேன்னு தெரியலே உங்களை மாதிரி ஒருத்தர் கிடைக்க நீங்க காதலை ஆர்ப்பாட்டம் இல்லாம சொன்னதே எனக்கு ரொம்ப ஆச்சிரியமா இருந்திச்சு ஏன் படிக்கிற காலத்துலே உங்க காதலை சொல்லி இருக்கலாம் ஆனால் நீங்க பண்ணலே ஒதுங்கி நின்னு இருக்கீங்க அதே சமயம் என்னை அப்படியே ஏத்துக்கிட்ட ஒரே ஆள் உடம்பை வித்து...ன்னு பேசியவன் எங்கப்பன் எல்லாம் உங்க கால் தூசுக்கு பிறாதுன்னு நான் தெரிஞ்சிக்கிட்டப்போ தானாவே உங்க மேல எனக்கு மரியாதை கூடிச்சு என்னை அறியாமலே உங்களை காதலிக்க ஆரம்பிச்சேன் உங்களை எல்லாத்துக்கும் தேட ஆரம்பிச்சேன் எனக்கு உங்களாலே தான் அந்த அஷ்விதாவோட ஆர்டர் கிடைச்சது அது தான் என்னோட பிஸ்னஸ்லே சக்ஸஸ்னா என்னன்னு காட்ட ஆரம்பிச்சது அதுக்கு நீங்க தான் காரணம்ன்னு தெரிஞ்சதும் எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்திச்சு தெரியுமா?...” என்றவள்‌ அந்த நாட்களில் ஒன்றிப்போக "ஹேய் பொண்டாட்டி அது உன்னோட திறமையாலே கிடைச்சது அதுலே நான் ஒன்னுமே இல்ல…" என்றவனை கண்டு..

"பாஸ் திறமையிருந்து என்ன அதை காட்டுறத்துக்கு ஒரு சான்ஸ் கிடைக்க வேணாமா? அதை கொடுத்தது சார் தானே…" என்றவள் யுவா என ஆழ்ந்து அவனை அழைக்க திரும்பி அவள் கண்களை என்ன என்பது போல் பார்த்தவனிடம் ஐ லவ் யூ.. என்று சொன்னவளின் மேலேறி படுத்தவன் லவ் யூ டூ என்று அவளை முத்ததால் சிவக்க வைத்து காதல் யுத்ததை தொடக்கி வைக்க இருவரும் அதில் லயித்து தங்கள் வாழ்க்கையை தொடங்கி இருக்க நிலவு மகளும் வெட்கம் கொண்டு கார் முகில் எனும் திரையினுள் ஒளிந்து கொள்ள அவர்களின் வாழ்வில் காதலோடு கூடிய சந்தோஷம் நிறைந்து இருக்கும்
என எண்ணி நாமும் விடைபெறுவோம்...

முற்றும்.....
 
Top