• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

16. சமித்ரா - என் வானில் நிலா நீயடி.

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
71
28
Karur
என் வானில் நிலா நீயடி..

நாயகன்.. ஹரிவர்த்தன்

நாயகி .. ஹம்சவர்த்தினி..

''ஹரி,ஹரி கண்ணா'', என்று மகனை அழைத்தப்படி வந்த விசாலாட்சிக்கு தன் மகனின் கடுமையான முகத்தைக் கண்டு பற்கள் தந்தியடிக்க,

''கண்ணா'', என்று அழைத்தவரை உதாசீனமாக நோக்கியவனுக்கு இவர்களால் தன் வாழ்க்கை தலைகீழாக மாறி இத்தனை வருடங்களாக தன்னிச்சையாக வாழ வேண்டிய நிலையை எண்ணியவனுக்கு வெறுத்து ஒதுக்கிட இயலாத தன்னுடைய இயலாமை எண்ணி வருந்தினான்..

அதற்காகத் தன் தாய் தானகவே அழைக்கும் போது அவரிடம் நின்று நிதானமாகப் பேசணும் மனம் வற்புறுத்தினாலும் அவரை விட்டு விலகியே நடந்து விட்டான் ஹரிவர்த்தன்.

தன் மகனின் உதாசீனமான நடவடிக்கையில் மனம் நொந்தாலும் அதற்கு முக்கியமான காரணம் தானே என்பதை உணர்ந்தவர்க்கு உள்ளம் வலித்தது. அவனுக்கு நல்லது செய்வதாக நினைத்துத் தான் செய்த காரியம் வினையாகிப் போனதை எண்ணி மனம் மருகி நின்றார் விசாலாட்சி.

வீட்டை விட்டு வெளியே வந்தவன் தன் இரண்டு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்தவன் எங்கு செல்வது? என்று அறியாமலே கண் போன போக்கில் வண்டியை செலுத்தியவனின் மனதில் ஹம்சவர்த்தினியின் மென்சிரிப்பு அவனின் இதயத்தை வருடிச் சென்றது..

எவ்வளவு அழகான சிரிப்பு .. அத்தனையும் எங்கோ மாயமாக மறைந்து போய்விட்டதை எண்ணி அவளைத் தேடிச் சென்றான்..

எப்போ அவளிடம் தன் மனக்கிடங்கில் அடைந்து கிடந்த நேசத்தை அவளிடம் பகிர்ந்தோனோ அன்றிலிருந்து தன் வாழ்க்கை நீர்வீழ்ச்சியாகப் பொங்கிப் பெருகி பெரும் வெள்ளோட்டமாக மாறி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது ...

காலேஜில் அவளை முதல் முறையாகப் பார்த்த அந்த நிகழ்வு அவனின் கண்முன்னே காட்சியாக விரிந்தது..

இஞ்சினியரிங்க காலேஜ் முதல் வருடத்தில் அடியெடுத்து வைத்த ஹம்சவர்த்தினின் கண்களில் மிரட்சியும் மேனியில் சிறு நடுக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்..

அங்கே பிஜி கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்த ஹரி தன் இரண்டு சக்கர வாகனத்தில் வேகமாக காலேஜ்க்குள் நுழைய அவளை உரசிச் சென்ற வண்டியின் வேகமும் ஹார்ன் சத்தமும் மெல்லிய மேனியாளின் உள்ளம் அதிர அப்படியே பயந்து அச்சத்துடன் நிற்க, கண்களிலோ கண்ணீர் வடிந்தது ..

அவள் கற்ச்சிலையாக அழகின் திரு உருவமாக நிற்பவளைக் கண்டவன், வண்டியை நிறுத்திவிட்டு புவிஈர்ப்பு விசைப் போல அவளை நோக்கி இழுத்த விசைக்கு அவளிடம் அவனின் கால்கள் கொண்டு நிறுத்தியது ..

நீள் கூந்தலும் நுதலில் காற்றில் மோதும் மயிற்கற்றைகளின் அழகும், முல்லை பூ மூக்கில் கல் மூக்குத்தி மின்ன பவள வாயோ பயத்தில் கந்தசஷ்டி கவசத்தை முணுமுணுத்தப்படி, காது வரை நீண்ட பெரும் விழிகளோ இறுக மூடிக் கொண்டு பதுமையாக நிற்பவளைப் பார்த்தப் படியே நின்றான் ஹரிவர்த்தன்.

அவளின் அழகு அவனை ஆகாசிக்க, எத்தனையோ பெண்களை கடந்து வந்தவனுக்கு இவளின் பயம் கலந்த சுபாவத்தைப் பார்த்துப் புன்சிரிப்புடன் அவளின் எதிரே நின்றான் ஹரி ..

சில நிமிடங்கள் கழித்து விழி விரித்தவள், தன் முன்னே பனைமரம் உயரமாக ஒருவன் அவளை உற்று நோக்கியபடி நின்றவனைக் கண்டு அதிர்வுடன் பார்த்தவளைக் கண்ட ஹரி..

மென்மையான இதழ் வளைவுடன் சிரித்தவனின் கண்களும் சிரிக்க, ''ஹேய் சில் பேபி'',... என்று இதமான குரலில் இயம்பியவன், ''முதல் வருசமா'', என்று கேட்டவனிடம்..

திக்கித் திணறியபடி ''ஆமாம்'', என்று நாலா பக்கமும் தலையாட்டியவளைக் கண்டவன், ''எந்த கோர்ஸ்'', என்று கேட்க, அவளோ ''கம்ப்யூட்டர் சயின்ஸ்'', என்று சொல்ல,

''ஓ.. ஒகே .. அந்த பீல்டிங் தான் போ'', என்று சொல்லிய ஹரி, ''ஹேய் உன் பெயர் என்ன? சொல்லிட்டுப் போ'', என்றவனிடம் ''ஹம்சவர்த்தினி'', என்று குயலின் குரலில் சொல்லியவளை இவளைப் போல இவள் குரலும் மென்மையாக இருக்கிறது என்று நினைத்த ஹரி, ''வண்டி சத்தத்திற்கு எல்லாம் பயந்துக்குவீயா'', என்று சிரிப்புடன் கேட்டவனை அசட்டு சிரிப்புடன் ஏறிட்டவள்,

''இ..இல்..இல்லை .. கொஞ்... கொஞ்சம்..பயந்து வந்திருச்சு'', என்று சொல்லியவள் அவனிடமிருந்து தப்பியது போல ஓடினாள்..

ஏனோ அவனின் கண்ணைப் பார்த்து அவளால் பேச முடியவில்லை .. 'காந்தம் போல இழுத்து அவனுள் மூழ்கச் செய்யும் வசீகரமிகுந்த கண்', என்று நினைத்தபடி தன் கிளாஸை தேடிச் சென்றாள் ஹம்சவர்த்தினி.

அவள் ஓடிய வேகத்தைக் கண்டு சிரித்தவன், தன் கிளாஸ்க்குச் செல்ல அங்கே தன் நண்பர்களுடன் அரட்டை மீதி நேரம் ஹெச்.ஆர் வருகை என்று அன்றைய நாள் ஓடியது.

இப்படியே பத்து நாட்கள் செல்ல.. அன்றைக்கு தனக்கு வகுப்பு இல்லாதால் வெளியே வந்த ஹரி, மரத்தடியில் அமர்ந்து தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க, அப்போது தன் நண்பன் பரத், ''டேய் ஹரி.. நம்ம காலேஜ்க்கு பஞ்சவர்ணக்கிளி ஒன்று வந்திருக்கு சொன்னேன்ல அங்கே பாரு'', ..என்று கையைக் காட்ட திரும்பிப் பார்த்த ஹரி அதிர்ந்தான் .. அங்கே ஹம்சவர்த்தினி பச்சை பாவாடை தாவணியில் கூந்தலில் வெள்ளை ஜாதிப் பூ சூடி அப்ரசஸாக வந்து கொண்டிருந்தாள்..

அதைப் பார்த்தவன், ''டேய் பரத் வாயை மூடு'',.. என்று அதட்ட அவனை வினோதமாகப் பார்த்த பரத் ''ஏன்டா அது தான் உன் உள்ளம் கவர்ந்த பச்சைக்கிளியா .. அது தான் பையன் பத்துநாட்களாக மந்திரிச்சு விட்ட கோழியா சுத்திக்கிட்டு இருக்கானா'', என்று கலாய்க்க.. கூட இருந்தவர்களும் அவனோடு சேர்ந்து சிரிக்க ஹரியோ அவர்களை முறைத்து ''வேலையைப் பாருங்க டா'', என்று அதட்டிவிட்டு எழுந்து ஹம்சவர்த்தினி நோக்கி நடந்தான்..

அதைப் பார்த்த மற்றவர்கள் ''பச்சைக்கிளி ஓ.. பச்சைக்கிளி'', என்று கோரசாகப் பாடுவதைக் கேட்டு அதிர்ந்த ஹம்சவர்த்தினி கண்கள் விரிய திருதிருத்தாள்..

அவளின் பார்வையில் ஆழிப் பேரலையாகச் சுழற்றி அதனுள் மூழ்கச் செய்யும் வித்தையை இவள் எங்கே கற்றாள்? என்று எண்ணியபடி அவள் அருகில் சென்ற ஹரி, ''இங்கே எங்கே தேனு (ஹனி) '', என்று கேட்டவனைப் புரியாமல் விழிகள் படபடக்கப் பார்த்தவளைக் கண்டவன் தன் வசீகர சிரிப்பை உதிர்க்க அதில் உள்ளம் அதிர தலை குனிந்து நின்றவளுக்கு படபடத்துப் போனது.

''உன் பெயர் தானே கூப்பிட்டேன் செல்லமா'', என்று சொல்லிய ஹரி, அவளுடைய பாடச் சம்பந்தமாகச் சிலதைக் கேட்டவன் அவளுக்குத் தெரியாத சிலதை சொல்லிக் கொடுத்தவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஹம்சவர்த்தினி.

''என்ன தேனு என் முகத்தில பாடம் எழுதி ஒட்டிருக்கா'', என்று கேட்டவனுக்கு அவளுக்குப் புதியதாகத் தெரியவில்லை .. பல ஜென்மம்ங்கள் விட்டுப் போன பந்தம் கையில் வந்து சேர்ந்ததைப் போல தோன்றியது அவள் மனதில்..

சட்டென்று யாரிடமும் நெருங்காதவள் ஹரிடம் மட்டுமே பேசுவது பழகுவதும் எந்தவித அறுவெறுப்பு இல்லாமல் இயல்பான ஒன்றாக இருக்க அவனின் பேச்சும் சுவராசியமாக இருப்பதும், கேலியுடன் அவன் கண்கள் சிரிக்கும் அழகை மெய் மறந்து பார்ப்பாள் ஹம்சவர்த்தினி.

ஹரிக்கோ முதல் முறையில் பார்த்ததும் மனதிற்குள் 'பசக்' உட்கார்ந்து அவனை ஆட்சி செய்யும் தேவதை அவளாகிப் போனது தான் .. எப்பவும் மற்ற பெண்களிடம் இருக்கும் ஒதுக்கம் இவளைப் பார்த்தலிருந்து இவளிடம் நெருங்காமல் பேச முடியாமல் தவிப்பது தன் மனதின் நிலையை அறிந்தவனுக்கு உள்ளம் தடுமாறியது..

இது உறுதியா காதலா.. இறுதி வரை தன்னுடன் வரும் பேரன்பின் பொக்கிஷம் இவள் தானா என்று எண்ணி மனம் ஏங்கியவன் அவளிடம் இதைப் பற்றி பேச வேண்டி அதற்கான சந்தர்ப்பத்தாக காத்திருந்தான்.

ஹம்சவர்த்தினிக்கோ இவனைப் பார்த்தாலே மனமோ ஐஸ் மலையாய் உருகி அவன் மனதில் காதலின் ஊற்றை உருவாக்கதோ.. என்று ஏக்கமும்.. காலேஜில் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடி தன் முன்னே நின்றவனின் தோற்றத்தில் பாவையவள் மயங்கி போன மாயம் தான் என்ன.. அதன்பின் பலரைப் பார்த்தாலும் பழகினாலும் இவன் காலேஜ் டாப்பர், மற்ற எல்லா விஷயத்திலும் இவனிடம் ஏதோ ஒன்று ஈர்க்க அவள் மனமும் அவனிடம் தஞ்சமடைந்தது…

நாட்களோ ரெக்கைக் கட்டிப் பறக்க வருடத்தின் இறுதியில் அவன் கேம்பஸ்ஸில் பெரிய கம்பெனி அவனை அப்படியே தூக்கிக் கொண்டு செல்ல ரெடியாக இருந்தது..

அவனைக் காண்பது இனி அரிதான ஒன்றாகத் தோன்றியதிலிருந்து முகம் வாடி வதங்கி நின்றவளுக்கு அன்று காலேஜ் கல்ச்சரலில் அவள் குரலில் பாட்டு பாட அழைப்பு விடுக்க.. தன் தேன் குரலில் அவன் விழிகளைப் பார்த்தபடியே அவள் பாடிய பாட்டில் மெய்மறந்து நின்றான் ஹரிவர்த்தன்…

''சிநேகிதேன சிநேகுதனே

ரகசிய சிநேகிதனே..

சின்ன சின்னதாய்

ரகசிய கோரிக்கைகள் செவிக்கொடு சிநேகிதனே''! ..

என்ற பாடல் வரிகளை உருகிப் பாடியவளைக் கண்டவனுக்கு அப்படியே மேடையிலிருந்து யாருமில்லாத தேசத்திற்கு அவளை அள்ளிச் சென்று விடமாட்டாமா என்று மனம் ஏங்கினான் ஹரி.

மேடையில் பாடிவிட்டு கீழே இறங்கியவளை யாருமில்லாத இடத்திற்கு இழுத்துச் சென்றவன் அவளை இறுக்கித் தனக்குள் புதைத்துக் கொண்டான்.

எங்கே விட்டால் தொலைந்து விடுவாளா என்ற பயமும் அவனை ஆட்க் கொள்ள விடாமல் பற்றிக் கொண்டவனின் இறுக்கத்தில் மூச்சு திணறியவளோ ''விடுங்க'', என்று திணறியபடி சொல்லியவளை ..

''ம்ஹூம் விடமாட்டேன்'', என்று சொல்லிய ஹரியை அவன் கைக்குள் இருந்தே முறைத்த ஹம்சவர்த்தினி ''விடுங்கோன்னா… யாரவது பார்த்தால்'', அவனின் பார்வையில் பாதியிலே பேச்சை நிறுத்தியவள், ''யார் பார்த்தா எனக்கென்ன, நீ என்னில் சரிபாதி'', என்று சொன்னவன், அவளை அழைத்து அங்கிருந்த பெஞ்சில் அமர வைத்து பேசினான்..

சொல்லாமலே அங்கே உணர்வுகளோடு உணர்ந்த காதலில் இருவரிடம் மௌனம் குடிக் கொள்ள, அவளோ ''நா கிளம்பிட்டா'', என்று மெதுவாகக் கேட்டாள்..

''ம்ஹூம்'',.. என்று விடாமல் கையை பற்றியவனிடம் தன் இன்னொரு கையால் அழுக்கியவள், ''நா எங்கே போக போறேன்.. நாளை இங்கே தானே வருவேன்'', என்று சொல்லியவளை, ''மாமி நீ வருவ.. நா இன்னும் சில நாட்கள் தான் அப்பறம் வேலையிலே பிஸி ஆகிவிடுவேனே'', என்று வருந்தி பேசுபவனிடம்…

''தினம் பார்க்கல என்றாலும் வாரம் ஒருமுறை பார்க்கலாம்'', என்று சொல்ல ''ம்ஹீம்'', என்றவன், அதன்படி வாரம் வாரம் பார்க்க நாட்களோ பறந்தது.

ஹம்சவர்த்தினி அவனின் அன்பில் உருகிக் கரைந்தவள் அவனை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்வதைக் கண்டவனுக்குச் அவள் படிப்பு எப்ப முடியும் என்று காத்திருந்தான் ஹரி.

பல முறை இப்படி சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் சில நாட்களாக ஹம்சவர்த்தினி சோர்வுடன் காணப்பட அவளோ காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி என பலதை சொன்னாலும் அவள் மெலிந்து கொண்டே வந்தது ஹரிக்கு உறுத்தியது ..

''டாக்டரிடம் போனீயா'', என்று கேட்டால் ''அப்பா கஷாயம் வச்சு தந்தாங்க சரியாகிடும்'', இதேப் பதிலைச் சொல்லிக் கொண்டே இருக்க,

அவனோ ''நாளை காலையில் சீக்கிரம் வர .. நாம் ஒரு இடத்திற்குப் போகணும்'', என்று சொல்லியவனை தன் வட்ட விழியால் ''எங்கே?'' என்ற கேள்வியை எழுப்பினாள் ஹனி.

அவனோ அவளின் விழி ஆழத்தில் விழந்தாலும் கண்களில் மென்மையாக பூவிதழ் ஒத்தடமிட்டவன் ,அப்படி கன்னங்களில் அழுந்த முத்தமிட அவள் முகமோ செந்தாமரையாக மலர்ந்து சிவந்தது.

அடுத்த நாள் அவனின் தலையில் இடியாக விழும் செய்தியை அறியாமல் இருவரும் அவர்களுக்குள் உள்ள உலகத்தில் வரைமுறை மீறாமல் இருந்தனர்.

மறுநாள் ஹாஸ்ப்பிட்டலில் டாக்டரைப் பார்க்க, அவரோ பல டெஸ்ட்களை எடுக்கச் சொன்னார்..

ஹம்சவர்த்தினியோ அலுத்துக் கொண்டே எல்லா டெஸ்ட்களும் எடுக்க, அவளைக் கேலி செய்த ஹரி ''என்ன மாமி இதுக்கு எல்லாம் பயந்து வருதா'', என்று சொல்லிச் சிரித்தான் .. அவனின் தோளில் அடித்தவள் அப்படியே அவன் மேல் சாய்ந்து கொண்டாள் அவனுடைய ஹனி..

எல்லா டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் டாக்டரைப் பார்க்க அவரோ மெல்லாமல் முழுங்காமல் பட்னு விஷயத்தைப் போட்டு உடைத்தார்.

அதில் அதிர்ந்த ஹம்சவர்த்தினி மயங்க, அவளைத் தாங்கியவன் ,அவர் சொன்னதை தன்னாலும் ஜீரணிக்க முடியாமல் முழித்தவனைக் கண்ட டாக்டர் .. ''ஆமாம் அந்தப் பெண்ணுக்கு இரண்டு கிட்னியும் பெயிலியர். கிட்னி டிரான்ஸபிரான்ட் பண்ணாலாம்.. ஆனால் அதற்கும் பல லட்சங்கள் செலவு, அது இவர்களின் உடல் நிலையும் அதன் தாக்கமும், அதைவிட இவர்களின் பிளட் குரூப்க்கும் உடல்நிலைக்கு மேட்ச்சாக கிட்னி கிடைக்க வேண்டும்'', என்று சொல்வதைக் கேட்டவனுக்கு செத்த பிணத்திடம் டாக்டர் பேசுகிறார் என்பது அவர் உணரவில்லை என்றே தோன்றியது..

அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு அவளுக்கான மருந்துகளை வாங்கியபடி அவளைத் தோளில் சாய்த்தபடி வெளியே கூட்டிக் கொண்டு வந்தான் ஹரி.

ஹாஸ்ப்பிட்டல் விட்டு வெளியே வரும் வரை அவள் தோள் சாய்ந்து தன் மனதிற்குள் அழுது தீர்த்தவள் வெளியே வந்ததும் அவனை விட்டு விலகி'' நா…நான் . வீட்டுக்குப் போறேன்'', என்று சொல்லிவிட்டு அங்கே இருந்த ஆட்டோவில் ஏறி போய்விட அதைப் பார்த்தவன் திகைத்தான்.

தன்னவளின் உடலில் இருக்கும் நோய் எதுவென்று அறிந்து அதிலே மனம் புண்ணாகி இருப்பவனுக்கு ஹம்சவர்த்தினியோ அதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறாளோ என்று பதைபதைத்துப் போனவனுக்கு அவளின் செயலைக் கண்டு மெல்லிதான கோபம் உண்டானாலும் தனியாகப் போகிறாளே இவ்வளவு பெரிய விஷயத்தைக் கேட்டும் என்று மருகியவன் அவன் ஆட்டோ பின்னாலே தன் வண்டியை எடுத்து விரைந்தான்.

அவள் வீட்டுருகே நிற்க அவள் வந்த ஆட்டோவிலிருந்து இறங்கியவள் அவனை ஒருமுறை அழுத்தமாகப் பார்த்துவிட்டு தன் வீட்டுக்குள் போய்விட்டாள் ஹம்சவர்த்தினி.

தன்னவளின் பார்வையில் இருந்த இயலாமையும் அதன் வலியும் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தவன் இனி அவளை எப்படி சந்திப்பது என்று தெரியாமல் திகைத்தும் போனான்.

வீட்டிற்கு வந்ததும் இரவில் போன் பண்ணினால் அவள் போன் சுவிட்ச் ஆப் என்று வர அவளுக்கு இது அதிர்ச்சியான விஷயத்தை தனியாக தாங்குகிறாளே.. மடி கொடுப்பவனை ஒதுக்கித் தள்ளுகிறாளே என்று ஆயாசமாக உணர்ந்தான் ஹரி.

ஒரு வாரமாக அவளைச் சந்திக்க முயற்சி பண்ணினாலும் சந்திக்க முடியாமல் தவித்தவன் அன்று அவளுடைய வீட்டுக்குப் போக, அங்கே ஹம்சவர்த்தினியின் அப்பா ராஜசேகரன் இடிந்து போய் அமர்ந்திருந்தார்..

தன் மகளின் நிலையை எண்ணி அதற்கு என்ன செய்வது என்று புரியாமல் கண்ணீர் உகுத்தபடி மகளை மடியில் சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

வீட்டினுள் போன ஹரி ஹம்சவர்த்தினின் கண்ணீரைக் கண்டு இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்க அவர்கள் அருகில் போய் ''அங்கிள்'', என்று கூப்பிட, அவரோ நிமிர்ந்து பார்க்க, வர்த்தினியோ வேகமாக அப்பாவின் மடியிலிருந்து எழுந்து அமர்ந்து அவனைப் பார்த்துத் திகைத்தாள்.

ஹரி தான் யார்? என்று ராஜசேகரிடம் சொல்லியவன் அவளின் சிகிச்சைக்கு எங்கே செல்வது என்ன என்பதைப் பற்றி பேசியவன், ''அங்கிள் நா ஹனியை எப்பவும் விடமாட்டேன்.. அவள் தான் என் உயிர் அவள் இல்லை என்றால் நான் சவத்துக்குச் சமானம்'', என்று இயம்பியவன், ''அவளை எந்த நாளிலும் எந்த நிலையிலும் அவளைப் பிரிய மாட்டேன், அதை நீங்க நம்பணும்'', என்று சொல்லிவிட்டு ஹம்சவர்த்தினியை அருகே இழுத்து ''இதற்காக உன்னை விட்டு விடுவேன் நினைக்கிறாயா… அந்தக் காலத்தில் சாவித்திரி தன் கணவனுக்காக எமனிடம் போராடினாளாம்.. இப்ப நான் உனக்காக அந்த எமனிடம் போராட போகிறேன் அவ்வளவு எளிதா உன்னை விட்டு விட மாட்டேன் '', என்று தழுதழுத்தக் குரலில் அணைத்துக் கொள்ள அவளோ ஒரு கேவலோடு அவன் மார்பில் சாய்ந்தாள்.

''நாளை எனக்குத் தெரிந்த என் நண்பனின் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிப் போகலாம் அங்கிள்.. அங்கே என்ன ஒபீனியன் சொல்றாங்களோ அதை வைத்து மற்றதை பேசிக் கொள்ளலாம்'', என்று சொல்லியவன், ''நான் ஹனி கூட கொஞ்சம் தனியாகப் பேசணும்'', என்று சொல்லியவனின் குரல் ரொம்ப இறங்கி கண்ணீரோடு இருப்பதைக் கண்டவர்,''ம்ம்'', தலையாட்டி விட்டு மகளிடம் அறைக்குள் அழைத்துச் செல்லச் சொன்னார் .

அவனை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றவளின் நலிந்த தோற்றமும் பொலிவிழந்த முகத்தையும் கண்டவனுக்கு உள்ளத்தில் சம்மட்டையால் அடித்தது போல பெரும் வலி உண்டாகிற்று.

அவள் பின்னே போனவன் அவளை அருகிலே இழுத்து அமர வைத்து, ''ஹனி.. தேனு இங்கே பாருடா'', தலை குனிந்து கண்ணீர் உகுத்தவளை நிமிர வைத்தவன் அவள் கண்ணீர் கறைகளை துடைத்து, ''இப்ப என்ன நடந்தது இப்படி இருக்க.. ஊரில் இருக்கும் யாருக்கும் வராதா வந்திருக்கு.. இதை எல்லாம் சரி பண்ண முடியாத ஒன்று அல்லவே. இப்ப இருக்க டெக்னாலஜி முறைகள் எத்தனையோ இருக்கு.. உன்னை கண்டிப்பாக காப்பாற்றி விடுவேன் கண்ணம்மா .. என்னை நம்புடா தேனு'', என்று அவளை அணைத்துக் கொண்டு பேசியவனைக் கட்டிக் கொண்டவள் கதறி தீர்த்தாள்..

அவள் அழுது முடியும் வரை நெஞ்சாங்கூட்டில் முகத்தை அழுத்திக் கொண்டு கட்டிக் கொண்டவன் அழுகை விசும்பாலாக மாறியவுடன் முகத்தை தன் கைகளில் தாங்கிக் கண்ணீர் கறைகளை துடைத்துவிட்டு ''இனி உன் கண்ணில் கண்ணீரை நான் பார்த்தால் நான் இறந்தற்குச் சமானம்'', என்று சொல்லியவனின் வார்த்தைகளிலிருந்த வலியை உணர்ந்தவள் அவனுக்குத் தன் மேல் கொண்ட அளவில்லாத காதலில் நெஞ்சுருகிப் போய் நின்றாள்..

மறுநாளிலிருந்து ஹாஸ்பிட்டல் டெஸ்ட் என ராஜசேகரனை அழைத்துக் கொண்டு அழைந்தவர்களுக்குக் கிடைத்த ஒரே வழி கிட்னி டிரான்ஸ்பிளான்ட் மட்டுமே …

அதற்காக கவுர்மென்ட்டில் அதற்கான பார்மால்ட்டீஸ் என எல்லாவற்றையும் அலைந்து திரிந்து பார்த்த ஹரி.. யாராவது தானம் பண்ணினால் தான் கிடைக்கும் சூழலில் கிடைக்கும் வரை ஹம்சவர்த்தினி டயாலிசீஸ் மாத்திரை மருந்து அவள் அவஸ்தை படுவதும் உணவின் அளவாக உப்பில்லாமல் சாப்பிட என அவள் கஷ்டப்படுவதைப் பார்த்துத் தாங்க முடியாமல் தவித்தான் ஹரி..

இதற்கு ஒரே வழி தன்னோடு அவளுக்கு ஒத்து வருமா என்று நினைத்து ஆயிரம் தெய்வங்களை வேண்டிக் கொண்டு டெஸ்ட்க்குக் கொடுத்தவன்.. அதற்கான ரிசல்ட் வந்ததும் அவனால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை …

தனக்கானவளுக்கு இதயத்தில் இடம் கொடுத்தவன், அவள் உயிரை காக்க தன் உறுப்பினை தானம் கொடுக்கும் பாக்கியத்தை கிடைத்ததை நினைச்சு மனம் உருகியவன் அதைத் தன் அம்மா விசாலாட்சியிடம் சொல்லும் போது தான் எதிர்ப்பு கிளம்பியது…

அவன் ''கண்டிப்பாக ஹம்சவர்த்தினிக்குக் கிட்னி கொடுப்பேன்'', என்று சொல்ல, அதைக் கேட்டவர் இவனிடம் பேசுவதை விட அந்தப் பெண்ணிடம் பேசிவிடலாம் என்று நினைத்து ஹம்சவர்த்தினிடம் பேச அவளால் எதுவும் பேச முடியாமல் கண்ணீர் உகுத்தவள், ''அவருக்காக நான் அவரை விட்டு விலகிப் போகிறேன்.. இங்கே இருந்தால் தானே அவர் எனக்காக இத்தனை கஷ்டப்படுகிறார். விலகிச் சென்று விடுகிறேன் ஆன்டி'', என்று சொல்லியவள் தன் அப்பாவோடு கண் காணாத இடத்திற்குச் சென்று விட்டாள் ஹம்சவர்த்தினி.

அதை அறிந்தவன் பல இடங்களில் தேடி அலைந்து படாத பாடு பட்டவன், தன் அம்மாவிடம் காய்ந்தான். ''உங்கள் மகனுக்காக உடம்பு முடியாதவளை துரத்தி விட்டீங்களே .. இனி உங்களுக்கு நானும் இல்லை நினைச்சுக்கோங்க'', என்றவன் அதன்பின் அம்மாவிடம் பேசுவதில்லை..

அதன்பிறகு தினமும் அவளைத் தேடுவதை வாழ்க்கையின் லட்சியமாக மாற.. சில நேரங்களில் சோர்ந்து போனது அவன் மனது.. தேடியும் கிடைக்காமல் அவள் மரணித்துப் போய் இருந்தால் என்று நினைக்கும் போதே அவன் இதயம் துடிப்பை நிறுத்தி அதன்பின் துடிக்க மூச்சுக் காற்றுக்கே தவித்துப் போனான் ஹரி..

நாட்களும் செல்ல ஒரு முறை கம்பெனி விசயமாக பெங்களூர் வந்தவன் அங்கே ராஜசேகரன் சோர்ந்த நடையோடு ஒரு ஆட்டோவில் ஏறுவதைக் கண்டவன் அவரைத் தொடர அவரோ ஒரு சிறு வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கி சிறு பையோடு உள்ளே போக அவனும் பின்னால் போனவன் அங்கே ஹம்சவர்த்தினி இருந்த கோலத்தைக் கண்டு தனக்கு இதயம் நின்று விடாதா என்று நினைக்குமளவுக்கு ஆள் மெலிந்து நீண்ட கூந்தலோ உதிர்ந்து கண்கள் உள்ளடங்கிப் போய் இருப்பதைக் கண்டு ஓடிப் போய் கட்டிக் கொண்டுக் கதறிவிட்டான் ஹரி…

எதிர்ப்பாராத விதமாக தன்னவனைக் கண்டவளுக்கும் பேச்சும் வரவில்லை,

அவளும் அவனைக் கட்டிக் கொண்டு அழுவதைப் பார்த்த ராஜசேகரன் வெளியே போய்விட்டார்..

இத்தனை நாட்கள் அவனுக்குத் தெரியாமல் ஓடிய ஓட்டம் இன்று முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணி ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

அவளைத் தன் கையணைப்பிலே வைத்திருந்தவன் ''ஹனி ஏன்? இப்படிச் செய்தே.. நீயில்லாத இத்தனை நாள் நடைபிணமாக இருப்பேன் உனக்குத் தெரியாதா.. நீ இல்லை என்றால் நானும் இல்லை .. அந்தளவுக்கு உன்னை உயிருக்கு மேலே காதலிக்கிறேன் என்று தெரியாதா'',.. என்று சிறு கோபத்துடன் கேட்டவனிடம்..

''உங்க அம்மா தன் மகனை இதைச் செய்ய கூடாது என்று சொல்லச் சொல்லி வற்புறுத்தும் போது என்னால் என்ன செய்ய முடியும் ஹரி.. அப்படியே கிட்னியை நீங்கள் தானமாக கொடுத்து நாளைக்கு உங்களுக்கு ஒன்று என்றால் யாரால் தாங்க முடியும்'', என்று அவள் சொல்வதைக் கேட்டவன்..

''அது எனக்குத் தெரியாதா… உன் உயிரை விட இந்த உறுப்பு தருவது பெரிய விஷயமா எனக்குப் படல'',… என்றவன் ''இனி எதற்கும் தாமதிக்கக் கூடாது .. உடனே டாக்டர் போகிறோம் எல்லா டெஸ்ட் எடுத்து ஆப்ரேஷன் ரெடி ஆகுகிறோம்.. அப்பறம் நம் வாழ்க்கையை தொடங்கப் போகிறோம்'', என்று அவன் முடிவாகச் சொல்ல..

அவளோ ''அப்படி ஆப்ரேஷன் நடந்தபிறகு குழந்தை'', என்று திக்கித் திணற .. ''முடிந்தால் பெத்துக்கலாம் இல்லையா தத்து எடுத்துக்கலாம், ஒகே இதை எல்லாம் இந்த குட்டி மூளைக்குள் போட்டு யோசிக்கக் கூடாது.. இனி நீ நாம் வாழும் வாழ்க்கை பற்றி மட்டும் தான் யோசிக்கணும்.. அப்ப இந்த ஹரியை எப்படி சந்தோஷமாக வைச்சுக்கலாம் அதற்கு என்ன என்ன செய்யலாம் மட்டுமே உன் யோசனை இருக்கணும்'', சொல்லிக் கண்ணைச் சிமிட்டியவனை விழி விலகாமல் பார்த்தபடி இருந்தவளின் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

அடுத்த நாளிலிருந்து விரைவாக ஆப்ரேஷன் வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் நடக்க ஹரியின் கிட்னி ஹம்சவர்த்தினிக்குப் பொறுத்த அது சரிவர வேலை செய்ய என்று ஹாஸ்பிட்டலில் மூன்று மாதங்கள் கழிந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்..

ஹரிக்கு ஆரோக்கியமான உடம்பு என்பதால் ஒரு மாதத்திலே அவன் மற்ற வேலைகளை மெதுவாக செய்துக் கொண்டிருக்க, ஹம்சவர்த்தினிக்கு நார்மல் ஆகி வருவதற்கு கிட்டதட்ட ஆறு மாதங்கள் ஆனது..

இடையில் விசாலாட்சி வர அவரிடம் முகம் கொடுத்து பேசாத மகனைக் கண்டு ஹம்சவர்த்தினிடம் புலம்ப அவளோ ஹரிடம் பேசி சமாதானம் படுத்தி வைக்க.. ஒரு சுபநாளில் ராஜசேகரனிடம் விசாலாட்சியும் பேசி முடிவெடுத்துக் திருமணத்தை முடித்து வைத்தனர்.

திருமணநாளில் ஹம்சவர்த்தினியின் முகமோ பொன்முகமாக ஜொலிக்க, ஹரிக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் அவள் பின்னாலே சுற்றியவன் அவர்களுக்கான தனிமைக் கிடைத்தும் அவளை அணைத்துக் கொண்டு ''என் வாழ்க்கை இன்று தான் முழுமை அடைந்தது தேனு.. இப்ப நீ என் கைக்குள்ள நினைக்கும்போது என்னால் இதை நம்ப முடியவில்லை தெரியுமா.. இனி என்று என்னை விட்டு பிரியணும் நினைக்காதே..

''மற்றவர்களுக்காகக் கூட என்னை விட்டு பிரிந்தால் அதன் பின் என்னை நீ உயிரோடு பார்க்க முடியாது'', என்று சொல்லியவனை இறுக்கிக் கொண்டவளுக்கு ''இனி என்றும் உன்னைப் பிரிய மாட்டேன்.. என் உயிர் பிரியும்போது கூட உன்னையும் கூட்டிப் போவேன்'', என்று சொல்லியவளின் காதலில் மெய்மறந்தவன்..

''இப்பவும் உனக்குப் பயந்து வருதா'', என்று கண் சிமிட்டியவனை விழிகளை விலக்காமல் பார்த்தவள்

''இனி தினமும் உன்னுடன் சண்டை போடுவேன்! கோவப்படுவேன்!

அடுத்த நாள் உன் I Love You என்ற

வார்த்தை கேட்க உன்னிடமே வருவேன்,என் அன்பு கணவனே!

காற்றுக்கு கூட நமக்கிடையே அனுமதி கிடையாது என்னவனே!

என்று சொல்லி அவனை அணைத்துக் கொண்டாள் அவனுடைய தேன்….
received_5733294226736097.jpeg

சமித்ரா..

ஹாய் மக்கா .. ஊடல் முதல் காதல வரை தலைப்புக்கு ஒரு சிறுகதை எழுதிருக்கேன் படித்துப் பாருங்கள் மக்கா.. உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள் ..😍 😍 😍 😍 😍
 
திவ்யதுர்ஷி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 28, 2022
461
21
43
Sri Lanka

View attachment 880
சமித்ரா..

ஹாய் மக்கா .. ஊடல் முதல் காதல வரை தலைப்புக்கு ஒரு சிறுகதை எழுதிருக்கேன் படித்துப் பாருங்கள் மக்கா.. உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள் ..😍 😍 😍 😍 😍
அருமையான கதை அக்கா😍😍 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍😍
 
  • Love
Reactions: Samithraa

ஆனந்த ஜோதி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 14, 2022
108
41
43
Chennai
#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : சமீரா ரைட்டர்ஸ்

படைப்பு : என் வானில் நிலா நீயடி

வெளியீடு : வைகை சிறுகதைப் போட்டி

லிங் :

உயிராக நேசத்தை கொட்டி காதலித்த நாயகி, எங்கு போகிறேன் என்று சொல்லாமல் விலகிச் சென்று விட்ட ஏக்கத்தில், அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற அச்சத்தில் அவளைக் காணாமல் தேடி அலைகிறான் நாயகன். அப்படி பிரியும் விதமாக இருவருக்கும் இடையில் நடந்ததென்ன? அவனது தேடலின் முடிவு கூடலா என்பதை அழுத்தமான களத்துடன் சொல்லியிருக்காங்க.

நாயக நாயகியின் பிளாஸ்பேக் அருமையாக இருக்கிறது. அவனது காதலும், அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்ற நாயகன் பாத்திரமும் அழகாக மனதில் பதிகிறது.

தன்னை காதலித்தவன் தனக்காக எப்படியெல்லாம் நடந்து கொள்கிறான் என்று நினைத்து கண்ணீர் வடிக்கும் நாயகி, திடீரென்று அவனைப் பிரிந்து செல்ல காரணமாக அமைந்த பாத்திரம், நிஜ உலகில் நடப்பது தான். அதற்கான நாயகனின் மாற்றமும், விடாமல் தேடி அலையும் இடமும் 👌👌👌👌

சிறுகதை வாசித்து முடிக்கும் போது ஒரு நாவலை சுருக்கமாக வாசித்த அனுபவத்தை கொடுத்தது. அருமையான அழுத்தம் நிறைந்த களம்.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
 
மிக்க நன்றி சிஸ்டர் 😍
 
Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
59
27
18
Deutschland
இருவரின் காதலும் சூப்பர் தான் அதுவும் அவனின் காதல் செம 😀
அவளை அவளுக்காகவே காதலித்தான் .....அவனுக்காக பிரிந்து சென்றவளை .....தேடி கண்டுபுடிச்சு அவள உயிர்ப்புடன் திரும்ப மீட்டெடுத்த சிறந்த காதலன் 😀
சூப்பர் ❤️
வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
 
Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
71
28
Karur
இருவரின் காதலும் சூப்பர் தான் அதுவும் அவனின் காதல் செம 😀
அவளை அவளுக்காகவே காதலித்தான் .....அவனுக்காக பிரிந்து சென்றவளை .....தேடி கண்டுபுடிச்சு அவள உயிர்ப்புடன் திரும்ப மீட்டெடுத்த சிறந்த காதலன் 😀
சூப்பர் ❤️
வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
நன்றி மா
 
Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
17. என் வானில் நிலா நீயடி

சமித்ரா....

நாயகன்.. ஹரிவர்த்தன்
நாயகி .. ஹம்சவர்த்தினி..

மறைந்து சென்ற காதலியை
நினைத்து வாடும் ஹரி..
தாயின் வார்த்தையில்
தன்னை விட்டுச் சென்ற
தன் காதலியை
முதல் பார்வையிலேயே
மனதில் பதிந்தவள்
பல ஜென்மம் பழகியது போல்
மனசுக்குள் நிறைய
பாட்டாலே காதலை உரைத்து
சந்தோஷமாக வலம் வர
விதி வலியது.....
உடல்நிலை காரணமாக
உயிரானவனை விலகி செல்ல
உயிரையே உனக்காக தர இருக்க
உறுப்பு தானம் செய்ய மாட்டேனா??
உன்னில் நானும்
என்னில் நீயும்
காதலாய் கலந்த பிறகு
இரு உடல் ஓர் உயிராய் இருக்க
உயிர் வலி தந்து
காணாமல் சென்ற காதலியை
கண்டு பிடித்து உறுப்பு தானம் செய்து....
காதலியை மீட்டு
கரம் பிடித்து
கல்யாண வாழ்வில் நிறைவாக வாழும் ஹரி ஹனி......

வாழ்த்துக்கள் சகி
👏👏👏👏💐💐💐👍👍👍👍
 
வித்யா வெங்கடேஷ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 8, 2022
239
209
63
USA
காதலுக்கு இதயம் தான் பரிமாற்றிக்கொள்ள வேண்டுமென்றில்லை,
கிட்னியும் கொடுக்கலாம்னு பக்குவமான சிந்தனை சொல்லிட்டீங்க ஆத்தரே!!!
ஆத்மார்த்தமான காதல் கதை!!!
💕💕💕💕💕💕💕
 
மிக்க நன்றி மா