• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

17.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
124
88
28
Salem

17.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே​



இரண்டு நாட்கள் தாண்டி விசாரனை ஆரம்பித்து இருந்தது. இங்கே ஒரு பக்கம் விசாரணை என்று நடந்தாலும் இன்னொரு பக்கமோ ராமைய்யா நியாயவாதி அதனால் தான் தன் பக்கத்தில் நடந்த தவறு நிறுபிக்கபடும் முன்பே ராஜினாமா செய்து இருக்கிறார். தவறு நிருபிக்க பட்டால் இனி எந்த காலத்திலும் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிக்கை வேற வந்து இருக்க.. டேய் இது கூட ஒரு அரசியல் தான் என்று ஒரு பக்கம் இளைஞர்கள் மீம்ஸ் போட்டு தள்ளி இருந்தனர்‌.

பல்லவி உங்க காலேஜ் ல இருந்து தான் அந்த பொண்ணை நீங்க வெளியே அனுப்பி இருக்கீங்க அதுக்கான ஆதாரம் எல்லாம் இருக்கு ..

சாரி சார் என் பக்கத்தில் எந்த தவறும் இல்லை நீங்க வேணும் ன்னா அந்த ரிஜிஸ்டரை நல்லா பாருங்க அவங்க தேவைக்கு தான் வெளியே போய் இருக்காங்க நாங்க அனுப்பல என்று வாதிட..

உங்க காலேஜ் அவுட்டிங் டைம் என்ன?

அது ஈவினிங் ஏழு மணிக்கு எல்லாம் உள்ளே இருக்கனும் ..


ம்ம்ம்…

விசிட்டிங் டைம்…

அது எட்டு மணிவரை அலோவ் பண்ணுவோம்.

ஓஓஓ …

அப்ப இந்த பொண்ணு ஒன்பது இருபதுக்கு வெளியே போய் இருக்கா எப்படி அனுப்புனீங்க?

சில எமர்ஜென்சி ல அனுப்புவாங்க என்று பதில் தர…

இதுல அப்படி எந்த குறிப்பும் இல்ல என்று நீதிபதி சொல்ல அடுத்த அடுத்த விசாரணை நடந்து முடிந்து இருந்தது.

அன்றைய விசாரணையில் அந்த புகைப்படங்கள் மற்றும் பென்ட்ரைவ் அனைத்தும் ஒரு காபி சமர்ப்பிக்கப்பட்டது.



எதையும் ஆராயும் நிலையில் இல்லை பகலவன், மாலினி ஒருபக்கம் பகலவனுக்கு தன் தரப்பில் இருந்து விவாகரத்து பத்திரத்தை தயார் செய்து இருந்தாள். அதில் மொத்தமாக அவனுக்கு வரவேண்டிய சொத்துகளை மையமாக வைத்தே விவாகரத்து பத்திரம் தயாராகி இருந்தது.

கோர்ட் வாசலில் வாகியை பார்த்த தாரா நெருங்கி வந்து நீ தானே லண்டன் ல வர்மா மாமா கூட இருந்தது என்று கேட்க அவளை மறைத்து நின்றனர் இரு பாதுகாவலர்கள்.

தள்ளி நில்லுங்க எங்க வந்து யார் கிட்ட பேசுறீங்க என்று மறைக்க..

தாரா புருவமுடிச்சுடன் வாகியை பார்க்க…

பதிலே சொல்லாமல் கடந்து சென்று இருந்தாள் வாகி…

தாரா வை பார்ப்பதை மொத்தமாக தவிர்க்க அவளோ அவள் கண் முன்னே வந்து வந்து சென்றாள்.


அங்கேயே நின்ற தாரா எப்படி நீ இந்த வீட்டுக்குள்ள வரேன்னு பார்க்கிறேன் நான் மட்டும் தான் இந்த வீட்டு வாரிசு என்று மனதில் குமைந்து கொண்டு இருக்க, இங்கே மாலினியோ இந்த குடும்பத்திற்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மொத்தமாக முடிக்க பார்த்து கொண்டு இருந்தாள்.

பகலவன் எந்த பக்கமும் செல்லாமல் தன் வேலை வீடு என்று சென்றவர் ஒரு வார விடுப்பு எடுத்து கொண்டு ரிஷி வாகியை பார்ப்பது அவர்கள் வெளியே வந்தாள் தள்ளி நின்று ரசிப்பது என்று நாட்களை கடத்தி கொண்டு இருந்தார்.

எப்படி மா ஒரு பொண்ணா இருந்துட்டு இப்படி ஒரு வேலையை செய்ய முடியுது அதுவும் நல்ல நிலையில் இருக்க இவங்களுக்கு எதுக்கு இந்த வேலை என்று விது கேட்க…

எல்லாத்துக்கும் ஒரே பதில் ஆசை தான்.

என்ன பொல்லாத ஆசை அதுக்கு இப்படியா..

இருக்காதா ஆசை எந்த இடத்தில் தெரியுமா நான் தான் எல்லா இடத்திலும் முதல் அப்படின்னு போதையை தர ஆசை அப்ப எந்த இடத்துக்கும் போகச் சொல்லும் அப்படித்தான் பல்லவி இந்த வேலையை செய்தது என்று வாகி சொல்ல…

வாகி என்று அதட்டினார் ரிஷி…

ப்ச் என்ன மா…

அவங்க உன் அத்தை அப்படிங்கிறது எல்லாம் இல்ல உன்னையே விட வயசில பெரியவங்க என்று ரிஷி சொல்ல

ம்மா என்று கத்தி இருந்தாள் வாகி…எப்படி மா எப்படி உங்களால் இப்படி பேச முடிஞ்சது அந்த லேடி ஒரு நம்பிக்கை துரோகி நம்பவச்சு கழுத்து அறுத்த அந்த ஜென்மத்தை எப்படி மரியாதையோட நடத்தனும் ன்னு சொல்லுறீங்க என்று கேட்டதும்.,

உலகம் ஆதாரம் கேட்கும் வாகி என்ன சொல்லுவ..


இங்க முழு உருவமா நாம இருக்கோமே போதாதா…என்றாள் வாகி…

இருந்து என்ற பண்ண முடியும் எதையும் பண்ண முடியாது என்று சொன்ன ரிஷி அந்த மாலை வேளையில் வரும் பேப்பரை எடுத்து போட ராமைய்யா பேட்டி தந்து இருந்தார்.

என் மகனின் மனைவி இறந்துவிட்டதாக நினைத்து இருந்தோம் இத்தனை வருடங்களுக்கு பிறகு எங்கள் வீட்டு மகாலட்சுமி இளவரசி உயிரோடு இருப்பதை உணர்ந்து மகிழ்ந்த தருணத்தை அளவிட முடியாது அதே நேரம் என் மகள் தவறான விஷயங்களை செய்பவர் அல்ல ஏன் இப்படி என் மருமகள் புகார் தந்து உள்ளார் என்று புரியவில்லை கூடிய விரைவில் நல்ல விஷயங்களே நடக்கும் என்று சொல்லி முடித்து இருக்க,அப்புறம் இன்னொரு விஷயம் என் பேத்தி வாகி…அதாவது நிமாவாகினி ஒரு நல்ல கல்வியாளர் நாட்டின் மொத்த மாநிலங்களும் திரும்பி பார்க்க வைத்தவர்.,இதோ இப்போது கூட அந்த அந்த மொழி முக்கியம் என்று முன்னெடுத்து உள்ளார் அதில் ரொம்ப பெருமை எனக்கு ,நம் மாநில கல்வி நிறுவனங்களில் எப்போதும் நம் மொழிக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம் என்று பக்கம் பக்கமாக பேசி இருக்க..

வாலண்டியரா வந்து சிக்கிட்டாரு கோவாலு…

என்னடி என்று ரிஷி கேட்க..

நான் பாட்டுக்கு ஒரு வழியில் போய்ட்டு இருந்தேன் இதோ இப்ப குறுக்காக மறுக்கா இந்த பைத்தியம் வேற என்றவள் பரத்தை அழைத்து விஷயத்தை சொல்ல..

என்ன பண்ணலாம் அடுத்த வெடி ரெடி ஆகுது பரத் நீங்க ஏற்கனவே இது சம்பந்தமா சின்ன சின்ன கிளிப்பிங் வந்தது இல்லையா அதை எல்லாம் எடுங்க அப்புறம் இங்க இருக்க எல்லா ஸ்கூலையும் ஒரு சர்வே எடுக்க ஆர்டர் பாஸ் பண்ண சொல்லாம் என்றவள் அடுத்த கல்வி நிறுவனங்கள் பக்கம் செல்ல ஏழரையை தன்னால் இழுத்து கொண்டார் ராமைய்யா…

அடுத்த ஒரு வாரத்தில் பல்லவி செய்த விஷயங்கள் எல்லாம் வெளியே வர ஆரம்பித்து இருந்தது ஒவ்வொரு கல்வி நிறுவனங்கள் திறப்பு, கட்டிடங்கள் கூடுதல் புதிய விஷயங்கள் அதோடு என்னென்ன கவர்மெண்ட் கான்ட்ராக்டர் எடுக்கப்படுகிறதோ அவர்கள் மேலே கீழே என்று ஒவ்வொரு ஆட்களுக்கும் ஏற்ற பண பரிவர்த்தனை மட்டும் அல்லாமல் ஒவ்வொரு இடத்திலும் பெண்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றனர் அதுவும் அந்த பெண்களுக்கே தெரியாமல் இப்படி மொத்தமாக இதுவரை இருபத்தி நான்கு பெண்கள் இதில் பாதிக்கப்பட்டு அதில் இருபது பேர் இறந்தும் விட்டார்கள் இதோ இப்போது அந்த பெண்களே சிலபல விஷயங்களுக்காக முன் வருகிறார்கள் என்ற தகவல் வரை இப்போதைய பிரச்சனையை எடுத்து சொல்லி இருந்தாள் நிமாவாகினி.


என்ன சொல்லுறீங்க உங்க தரப்பில் என்று கேட்க… சார் நாங்க இன்ஸ்டிடியூட் நடத்த தான் செய்யுறோம் ஆனா இந்த மாதிரி விஷயங்கள் இவர்கள் போய் பண்ண அவசியம் இல்ல சார் . ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தனும் நினைக்கிற நாங்க தவறான செயலை செய்ய எப்படி நினைப்போம் . நாங்க ஹாஸ்டல் வார்டன் ல இருந்து எல்லாரையும் கண்காணிக்க தான் செய்யுறோம் அதையும் தாண்டி சிலர் செய்யுற தவறுகளுக்கு நாங்க எப்படி ரியாக்ட் பண்ணுறது ன்னு தெரியல நீங்களே எங்க காலேஜ் ஸ்கூல் எல்லாத்தையும் பாருங்க ஆறு மாசத்துக்கு ஒரு முறை எல்லாருடைய இடத்தையும் மாத்திட்டே தான் இருக்கோம் ஒரே இடத்தில் யாரையும் வேலை செய்ய அனுமதிக்கிறது இல்ல என்று பக்கம் பக்கமாக பேச…

நீங்க எவ்வளவு சொன்னாலும் உங்க கல்லூரி வாகனத்தில் தான் இந்த பிள்ளைங்க போய் இருக்காங்க அதுவும் இரவு நேரத்தில் திரும்பவும் அந்த வண்டி எப்ப வந்தது எப்படி என்ன ஏதுன்னு எதுவும் தெரியல அந்த காலகட்டத்தில் படிச்சவங்க லிஸ்ட் இல்லன்னு சொல்லுறீங்க கம்ப்ளீட் டா பையர் ஆக்ஸிடென்ட் ல போய்டுச்சு ன்னு அப்ப அந்த ஆக்ஸிடென்ட் கூட நீங்களே பண்ணதா என்று கேட்டு வைக்க…


நாங்க எதுவும் செய்யவில்லை என்று வாதாட…

கடைசி ஆயுதமாக அந்த வருடத்தில் படித்த மாணவியை கோர்ட்டில் நிறுத்தி இருந்தார் சாமியப்பன். யார் இறந்ததாக சொன்னார்களோ அந்த பெண்.பல்லவியின் மொத்த நம்பிக்கையும் ஆட்டம் காண ஆரம்பிக்க ஒவ்வொருவராய் பல்லவியை கை காட்ட ஆரம்பித்து இருந்தனர். அதில் சம்பந்தபட்ட ஆட்கள் என்று மொத்தமாக ஒன்பது பேரை பிடிக்க அவர்கள் அனைவரும் தற்போது அறுபது வயதுகளில் இருக்க பார்த்தவர்கள் அனைவரும் கடுப்பாகி இருந்தனர்.தப்பு செஞ்சுட்டு அப்ப தெரியாம ஏதோ தப்பு நடந்துடுச்சு எங்களுக்கு வயசு இல்ல அது இருக்கு இது இருக்கு என்று காரணம் சொல்ல அனைவரையும் மொத்தமாக அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர் இனி அங்கே சேவை செய்ய மட்டுமே இவர்கள் இருக்கவேண்டும் என்று …

பல்லவிக்கு மட்டும் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது தீர்ப்பு எழுதி இருந்தார் பழனி..

பல்லவி ரிஷியை பார்க்க … ரிஷி எந்த எதிரி வினையும் காட்டாமல் நகர்ந்து விட்டாள்.

உள்ள வச்சுட்டேன்னு நினைக்குறியா உன்னையே சும்மா விடமாட்டேன் என்று கருவி கொண்டு செல்ல..

ராமைய்யா மொத்தமாய் முடங்கி விட்டார் வீட்டில் .மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். நம்பிக்கையை உடைத்து விட்டார் என் மகள் அவரை நம்பி பாரம்பரிய மிக்க எங்கள் குடும்ப தொழில் கல்வி நிறுவனங்களை தந்து எங்கள் குடும்ப நம்பிக்கையை உடைத்து விட்டார் என்று தவறே தன்மீது இல்லை என்பது போல் உருகி உருகி பேசிவிட்டு இனி எக்காலத்திலும் நான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று சொல்லி முடித்து இருக்க…

அடுத்த முதல்வர் யார் என்று கேள்விக்கு பதில் தராமல் சென்றுவிட்டார் ராமைய்யா…

இங்கே அகத்தியனோ… என்ன மாப்ள பண்ணலாம் என்று ராமைய்யாவின் மூத்த மகனை கேட்க..

இதுல நான் என்ன பண்ண போறேன் மாமா எனக்கும் அரசியலுக்கும் ஆகாது எதுக்கு அந்த பிரச்சினை என்று ஒதுங்கி விட..

பகலவனை வரச் சொல்லி இருந்தார் அகத்தியன். வீட்டுக்கு வந்துட்டு போங்க பகலவன்.

என்ன விஷயம்

நேர்ல வாங்க பேசனும்.

இல்ல நான்..

வந்துட்டு போங்க என்றவர் போனை அணைத்து விட…

வீட்டிற்கு வந்தார் பகலவன்.

சொல்லுங்க என்ன விஷயம்.?

அடுத்த சிஎம் யாருன்னு இப்ப பிரச்சினை?

அதுக்கு என்றான் பகலவன். நீங்க தான் நிற்கனும் உங்க அண்ணன் அதுக்கு சரி வராதுன்னு…

நானும் சரிவரமாட்டேன் ..

அகத்தியன், “ அப்படி சொன்னா எப்படி உங்களுக்கு தான் அனுபவம் இருக்கே என்று சொல்ல..

இல்ல எனக்கு விருப்பம் இல்ல..

பகலவன் சூழ்நிலையை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க அந்த பதவி ரொம்ப முக்கியம் என்று அகத்தியன் பகலவனை மாற்ற முயற்சிக்க விறுவிறுவென கீழ் இறங்கி வந்தாள் மாலினி வந்த வேகத்தில் பகலவன் முகத்தில் பேப்பரை தூக்கி எறிந்து இதோட எல்லாத்தையும் முடிச்சிக்கலாம் என்றவளை இருவரும் நிமிர்ந்து பார்க்க இந்த உறவு இனி செல்லா காசு ….



தொடரும்