• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

17. காற்றோடு கலந்த விதையவள்

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
வேலையில் கவனமாக இருந்தவள், திடீர் என்று நினைவு வந்தவளாய், ரதனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனும் இவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளது கவனம் தன்னில் பதியவும்,

""என்ன...?"" என்பதுபோல் புருவம் உயர்த்தி கேட்டான்.
அவன் செயலில் தலை குனிந்தவள், 'இவன் பாத்தாலே ஏதோ ஆகுது. இப்ப எப்பிடி கேட்கிறது...? கேப்பமா வேண்டாமா? நாளைக்கு சைலுவோட பிறந்தநாளாச்சே!
எப்பிடியாவது அரை நேர விடுப்பு கேக்கோணும்.

இப்ப கொஞ்ச நாள் முன்னம் தான் அரை நேரம் எடுத்தன். தருவானோ தெரியேலையே!

எதுக்கும் கேட்டு பாக்கலாமா? இன்டைக்கே கேட்கலாம் தான், ஆனா எப்பிடி கேட்கிறது.?

சைலுவோட பர்த்துடே என்டு கேட்கலாம் தான்.... அன்டைக்கு அதை சொல்ல தான், கழுத்தை பிடிச்சான்..
இப்ப கேட்டாலும் கழுத்தை பிடிப்பானோ?
வேண்டாம்... என்னால பசி எல்லாம் இருக்கேலாது. ரெண்டு நாள் அனுபவிச்சதே ஜென்மத்துக்கு மறக்காது.


இன்டைக்கு நான் கேட்டா... நாளைக்கு அண்ணாவும் கேட்க வசதியா இருக்கும்... சந்தேகமும் வராது.


எப்பிடியாவது கேட்டுப்பம்' என்று நினைத்தவள், மீண்டும் அவன் நல்ல மூடில் தான் இருக்கிறானா? என்று நிமிர்ந்து பார்த்தாள்.
அவனும் இவளை தான் பார்த்த படி இருந்தான்.


'இவன் இப்பிடி பார்க்கேக்க, இந்த இதயம் வேற, குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடுறது மாதிரி, வாய் வழியா வந்து விழுந்திடும் போலயே! இதுல எப்பிடி கேக்கிறது..?'

"கன நேரமா... எதையோ சொல்ல வாற மாதிரி இருக்கு... பிறகு ஏன் முண்டி விழுங்கோணும்
அப்பிடி என்ன சொல்லோணுமோ, சொல்லு! நானும் அத கேட்க்க ஆவலாக இருக்கன்" அவன் எதிர் பார்பு வேறாக இருந்தது.

"அது.... நாளை ஒரு பார்ட்டி இருக்கு... ஈவ்னிங்க் போகோணும்... அதான் லீவ் கேக்கலாம் என்டு" முடிக்காமல் இழுத்தாள்.


"அவ்ளோ தானா? நானும் வேற ஏதோ தான் சொல்ல போறாயோ என்டு நினைச்சன்" என்றவன்

"ஓகே... பர்மிஷன் கிறாண்டேட்! யாருக்கு என்ன விசேஷம்?" என்றவனது கேள்வியில் முழித்தவள் சொல்ல தயங்க.

"அது என்ன, நான் என்ன கேட்டாலும் பூதத்திட்ட பதில் சொல்லுறாமாதிரியே முழிக்கிறது?
இப்பவ அந்த பயத்தை குறைச்சிடு! இல்ல என்டா பிறகு எனக்கு தான் கஷ்டம்... இந்த பயத்தால கிட்ட கூட விடமாட்டா போலயே.!" என்றவனை முறைத்தாள்.

"என்ன கதைக்கிறீங்கள்? இதுக்கு தான் இந்த அறைக்குள்ள வேலை போட்டிங்களா?" கோபமாக இரைந்தாள்.

ஒரு மாதிரியாக பார்துக்கொண்டே அவள் அருகில் வந்தவனை கண்டு பயந்து எழுந்தவள், அன்று போல் கழுத்தை தான் நெரிக்க வருகிறானோ என நினைத்து, கதவுப்பக்கம் நகர்ந்தவள், வெளியேறுவதற்கு முன்னர் நெருங்கிவிட்டான்.

பயத்தில் கதவோடு பல்லி போல் ஒட்டி நின்றவளது இரு புறம் தன் கையினை ஊன்றியவன்,
உதட்டை குவித்தவாறு முகத்துக்கு நேர வருபவனை கண்டதும் இதயம் படபடக்க, கண்களை இறுக மூடிக்காெண்டவள், எங்கு தன் உடல் அவன் உடலோடு முட்டிக் கொள்ளுமோ என்று, மூச்சை இறுக்கிப்பிடித்து, குறுக்கிக் கொண்டவள் அழகை அசையாது சிறிது நேரம் ரசித்து நின்றான்.


அவன் அருகாமை உணர்த்தும் அவனது மூச்சு காற்றும் முகத்தில் மோத, மெதுவாக ஒரு கண்களை மட்டும் திறந்தாள்.


விழிகளுக்கு மிக அருகில் அவன் முகம் தெரிய, அவன் விழிகளையே பார்த்தவாறு நின்றவள், அவன் விழிகள் அவளது உதட்டில் நிலைத்திருப்பதை கண்டாள்.

ஆம்... மேற் பற்களால் கீழ் உதட்டினை பயத்தில் அழுத்தமாக சிறை செய்திருந்தாள் அவள்.


மெதுவாக அதற்கும் பற்களிடமிருந்து விடுதலை அளித்தவள் இதையமே, பந்தய குதிரையையும் தோற்கடிக்கும் வேகத்தில் செயற்பட, சற்றே விழிகளை அசைத்து மீண்டும் அவன் விழிகளை ஏறிட்டாள்.


அவனும் அவள் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டான்.
நான்கு விழிகளும் ஒன்றுடன் ஒன்று சங்கமமாகி, காதல் கடலில் முத்தொடுக்க, தன்னை மறந்து சில நொடிகளே...

நிலமை புரிந்தவள் விலக நினைக்கையில், அவள் அசைவில் சுயத்திற்கு வந்தவன்.

விலக விடாமல் இன்னமும் நெருங்கி நின்றவன்,

"ஏற்கனவே எச்சரிச்சன்.... இப்பிடி முறைக்காத என்டு, இப்ப பாரு... மாமாவுக்கு எப்பிடி தப்பு தப்பா மைண்ட் போகுது என்டு.
உரிமையோட தான் நீ முறைக்கிறியோ என்டு நினைச்சு, இப்ப நானும் உரிமை எடுத்திருந்தா... தப்பாகி இருக்காது..

இனிமேல் இப்பிடி முறைக்காத, எப்பவும் இதே தெளிவோட இருக்கிறனோ தெரியாது." என்றவன் விலகிச்சென்றான்.

அவன் சென்றும் அதே நிலையில் நின்றவளளுக்குத்தான், பழைய நிலைக்குத்திரும்ப, சில நிமிடங்களானது.

இருக்கையில் வந்து அமர்ந்தவள்,


'நீ மட்டும் சுதாரிக்கேல என்டா என்னாகி இருக்கும்' என்று தன்னை தானே திட்டியவள், அவனையும் திட்ட மறக்கவில்லை.

முடிஞ்சளவு அவனிட்ட பேசுறத குறை... இல்லை என்டா அப்பாவாேட ஆசைய நிறைவேற்றேலாம போயிடும்...
அவன்ர கண்ணை பாக்காம இருந்தாலே பாதி பிரச்சினை தீர்ந்திடும்.' என நினைத்தவள் ஏனோ, தன் மனம் அவனிடம் எப்போதோ சென்றுவிட்டதை சிறிதும் கருத்தில் எடுக்கவில்லை.







பல ஆண்டுகள் தவமிருப்பதை போல, மாலை ஆறுமணிக்காக தவமிருந்தாள் துஷா.

எப்படா ஆறு மணி ஆகும் என்று காத்திருந்தே நிமிடங்கள் யுகங்களாக கடந்தது.

இதுக்குள்ளயே இருக்க மூச்சு முட்டுற மாதிரி இருக்கு. இன்டைக்கு பார்த்து அசையிறான பாரு! இருக்கி கதிரையில் பெவிக்கால் ஊத்தின மாதிரி அந்த இடத்திலே அசையாம இருந்திட்டு. அதை வாயிலையும் ஊத்திருந்தா நாங்க சந்தோஷமா இருந்திருப்போம்"


அவளும் எவ்வளவு நேரம் தான் இயற்கை உபாதைகளை அடக்க முடியும்.?
அவன் இருக்கும் போது எழுந்தால், எங்கே போகிறாய் என கேப்பான். அதற்கு குழந்தை போலவா பதில் கூறமுடியும் என்ற சங்கடத்தினாலேயே அவன் எப்போதாவது எழுவாம், அந்த நேரம் சென்று வருவோம் என காத்திருந்தாள்.


வேலையில் கவனமாக இருந்தவனோ, விருட்சிய ராசி அனுச நச்சத்திரம் என்றான் அவளை நிமிர்ந்து பார்க்காமலே.

திடீர் என்று ராசி நச்சத்திரத்தை கூறவும், புரியாது அவனை ஏறிட்டாள்..



நமட்டு சிரிப்போடு நிமிர்ந்து அவளை ஏறிட்டன்,

"ஏன் இந்த ராசி நட்ச்சதிரம் என்டு தானே பாக்கிற.?
மனசுக்குள்ள எனக்கு நிறைய அர்ச்சனை பண்றியே! ராசி நட்ச்சத்திரம் தெரிஞ்சா, இன்னும் சிறப்பா செய்யலாம் என்டு தான் சென்னன்." எனறதும் இன்னும் விழிக்க ஆரம்பித்தாள்.

'திட்டுறதை கூட முகத்த வைச்சு கண்டு பிடிக்கிறானோ. ஆனா என்னை தான் இன் பாக்கவே இல்லையே!'


"என்ன துஷா! மனசுக்க திட்டினது எனக்கு எப்படி தெரியும் என்டு தானே இந்த யோசனை?"
ஆம் என்றதை போல் சலையசைத்தவள், பின் தவறை உணர்ந்து இல்லை என்றபதாய் அவசரமாய் தலையசைத்தாள்.

"ஒரு பொய்ய கூட சரியா சொல்ல தெரியேல" என்றவன். மீண்டும் தனது வேலையில் மூழ்கினான்.

'தேவையில்லாதது எல்லாம் கண்டுபிடிக்கிறது... தேவையானது மட்டும் விளங்காது....' புழுங்கி முடிக்கவில்லை..


"எல்லாத்துக்கும் பர்மிஷன் கேக்க முடியாது துஷா...." என்றவன் இருக்கையிலிருந்து எழுந்து வேகமாக வெளியேறினான்.

அவனது வார்த்தைகளில் தெறித்த கோபம் புரியாதவளோ,

"ஏன் இப்ப இது கத்திட்டு போகுது." என்று வாய்விட்டே புலம்பியவள், போன வரைக்கும் சந்தோஷம் என்று தனது கடமை அழைக்க அவளும் சென்றாள்.


அவள் வரும் போது அறையில் இருப்பவனை கண்டவள்,

'அதுக்குள்ள வந்திட்டானா?' என்றிருந்தது. அவனோ அவளை கண்டு கொள்ளவில்லை.

மாலை ஆறு மணி ஆகவும் அனைத்தையும் ஒதுக்கி விட்டு வெளியே வர எத்தணிக்க,


"துஷா..." என்றான்..
நின்று என்ன என்பது போல் பார்க்கவும்.

"எதாவது அவசரம் என்டா, தாராளமா வெளியே போகலாம்... குழந்தைங்க போல என்னட்ட சொல்லோணுமே என்டு நினைக்காத... சில விஷயம் சொல்ல முடியாது எனக்கும் தெரியும்.... அதுக்காக இன்டைக்கு போல இருக்காத.... புரியுதா...?" என்றதும் அவன் எதை சொல்கிறான் என்பது புரிய, சரி என தலையசைத்தாள்..


வர்னுக்காக வாசலில் காத்திருந்தவளை பத்து நிமிட தாமதத்திற்கு பின்னே அழைத்தான்.

"நேரம் போட்டுதே... நிறைய வேலையோ...?"


"உன்னை போலவாம்மா....? ஒவ்வொரு பகுதிய போயி, என்ன நடக்குது என்டு பாக்கணும்" என்று சலித்துக்கொள்ள,

ஏண்ணா உள்ள வேலை போட்டாரு எனக்கு? நான் இருந்த இடத்துக்கு ஆள் தேவையே! என்ன செய்ய போறீங்க.?"

"எதுவும் தெரியேல.. ஏதோ செய்யட்டும்..... நீ முதல் ஏறு! ஏற்கனவே லேட்... இன்னும் பிந்தீச்சு... உன்ர ஃப்ரெண்ட் சாமி ஆடிடுவா" என்றான்..

"இப்பவே இப்பிடி பயபிடுறீங்கள்... கல்யாணத்துக்கு பிறகு பத்திரகாளி சிலையின்ர, கால்ல மிதுபடுற அரக்கன் மாதிரி மிதிப்பாள் போலயே" என்று அவள் சிரிக்கவும்.


" இப்ப மட்டும் சாந்த செரூபமாவா இருக்கிறாள் என்டா நீ நினைச்சுக்கொண்டிருக்கிற? கையில திரிசூலம் தான் இல்லை.... மற்றம்படி காளி தான்" என்றவும், அவன் சொன்ன விதத்தில் பெரிதாகச் சிரித்தாள்.



தனதறையில் இருந்து அத்தனையையும் பார்த்த ரதனால் தான் எதுவும் செய்ய முடியவில்லை.

அவர்கள் சென்ற திசையை வெறித்தபடி நின்றவன்.


'இதுகள் ரெண்டும் அடங்க மாட்டுதுகள் போலவே.
என்னமா பல்லை காட்டுறாள்? ஏதோ கொஞ்சநாள் அவன் கூட பைக்கில போகட்டும், பாதுகாப்பா இருக்கும் என்டு பாத்தா, இதுகள் பழகிறவிதத்தை பார்க்க எனக்கு பயமாவே இருக்கே!

நாளைக்கு வாடி! உன்னைய வச்சுகிறன்." தனக்குள் கருகிக்கொண்டான்.

மணி இரவு பண்ணிரண்டை நெருங்க, ஐந்து நிமிடங்களே எஞ்சி இருந்தது.


"நான் தான் முதல்... இல்லை நான் தான் முதல்..." என்று அந்த இரவில் மைனாவும் துஷாவும் சத்தம் வராமல் சண்டை போட்டனர்.

அதாங்க சைலுவோட பிறந்தநாளுக்கு, வாழ்த்து தெரிவிக்கிறதுக்காகவே மைனா இரவு இங்க தங்கிட்டா... அதனால தான் இப்போ, யாரு முதல்ல வாழ்த்துறது என்ட போட்டி நடக்குது.


இவர்கள் சண்டை முடிவிற்கு வந்ததோ இல்லையோ! கடிகாரம் தன் பணியை சிறப்பாக செய்தது.

அவள் போனும் விடாமல் அடிக்க, இருவரும் தங்கள் பேச்சை நிறுத்தி விட்டு, அமைதியானார்கள்.


தூக்க கலக்கத்தில் தடவியே போனை எடுத்தவள், காதில் பொருத்திகொண்டாள்.
அங்கும் அவளை வாழ்த்தி இருப்பார்கள் போல.


"நானே மறந்திட்டன்... தேங்க் யூ சோ மச்" என்றவள்,


"தூக்கம் வருது... நான் மோர்ணிங்க் கதைக்கிறன்" என்றவள் வைத்து விட.

"எல்லாம் உன்னால தான்.. நானே முதல்ல வாழ்த்தி இருப்பன்.... இப்ப பாரு யாரோ முந்தீட்டானுங்கள்" சத்தம் போட ஆரம்பித்தாள் துஷா.

"ஏன்டி! நீ பேசாம இருந்திருந்தா... நான் பண்ணியிருக்க மாட்டேனா? என்னை குற்றம் சொல்லுற... நீ தான்டி காரணம்.." நடு இரவென்றும் பார்க்காமல், அவளை வாழ்த்த மறந்து இருவரும் சண்டை போட, இவர்கள் சத்தத்தில் முழு தூக்கமும் கலைந்தது சைலுவுக்கு.


"என்னங்கடி! மீன் சந்தையில கிழவிங்க சண்டை போடுற மாதிரி சாமத்தில உயிரை வாங்கிறீங்கள்" சலித்தாள் அவள்.


"நீயே கேளு! இவ என்ன பண்ணாள் என்டு" மைனா குற்றம் சாட்டா

"நான் என்ன செஞ்சன்? உன்னால தான் நான் அவளை முதல்ல விஷ் பண்ண முடியேல.... தப்பு நீ பண்ணீட்டு என்னை கற்றம் சொல்லுறியா?"


"அட லூசுங்களா... இதுக்கும் சண்டையா? நான் எழும்பி வந்து விளக்கம் கேக்கிறனே! இப்ப யாருக்காச்சும் என்னை விஸ் பண்ண தோன்டுதா.? என்றவும் ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டு வாழ்த்து சொன்னவள், கையில் மறைத்து வைத்திருந்த சின்ன பெட்டியை கொடுத்தாள்,

அதை திறந்து பார்த்த சைலு, அதிலிருந்த தங்க மோதிரத்தை கண்டு,

"எனக்கு ஏன் இவ்ளோ பெரிய கிஃப்ட்" என்று அவளை கட்டி கொள்ள.

அவளை தள்ளி விட்டவள், "யாருடி அது? எங்களையும் முந்திக் கொண்டு முதல்ல வாழ்த்து சொன்னது" கேள்வி கேட்டவளை தள்ளி விட்ட மைனா, தான் பங்குக்கு வாழ்த்து கூறியதும்..

"உன்ர அண்ணன் தான்." என்றாள்.

"அப்ப சொல்லத்தான் வேணும்... இல்ல என்டா நாளை பெரிய சம்பவம் நடந்திருக்கும்" என்றவள் படுக்க போக, சைலுவை தள்ளி விட்டு, துஷாவிற்கு நடுவில் தான் படுத்துக்கொண்டாள் மைனா.

"இந்த லூசு இதுக்கு தான் நைட் தங்கிச்சுதா?"

"ம்ம் பெரிய இம்சை!" என்றவள் அவளை தள்ளி விட்டு தானும் படுத்து கொண்டாள்.

முகில் கூட்டங்களை பஞ்சனையாக்கி, மஞ்சம் கொண்டுறங்கும் வான்மதியை, தன் செங்கதிர்களாள் தட்டி துயில் எழுப்பிய கதிரவனவன், தன்பணியை சிறப்புற செய்ய ஆரம்பித்தான்.


"சைலு இன்டைக்கு மைனா எங்க கூப்பிட்டாலும் என்ன ஏது என்டு கேட்காம, கூட போ!" என்றவள் மைனா புறம் திரும்பி, கட்டை விரலை உயர்த்தி காட்டி விட்டு, அவரவர் பணிக்கு செல்ல துவங்கினார்கள்.


நேரமும் தன் பணியை செய்ய, எதையும் கண்டு கொள்ளாது சாதாரணமாக வேலையில் ஈடுபட்டான் ரதன்.

மதியம் ஒரு மணி இருக்கும், அவன் அறை கதவு தட்ட படவே,


"வரலாம்..." என்றதும் ரதன் முன் வந்து நின்றான் வர்மன்.
வர்மனை கண்டதும் அவனது பார்வை துஷாவிடம் திரும்பியது.

அவளது பார்வையும் வர்மனையே மேய்வதை கண்டதும் உச்சியில் கோபம் ஏறியது.

"சொல்லுங்கள் வர்மன்" என்றான் அழுத்தமாக.
வர்மன் தயங்க நிற்க,


"உங்கள தான் கேட்கிறன்... செல்லுங்க என்ன விஷயம்"

"அது... எனக்கு நாலு மணியப்பிடி போகோணும்... அதான்...."


'இவளுமே லீவு கேட்டாளே! ரெண்டு பேருமா ஏதோ பிளான் போடுறாங்களோ!'

"ஏன் திடீர் என்டு....? அவசர வேலை ஏதுமா...?" என்றார் ஒனஞற்றை புருவ உயர்வில்.

தெரிஞ்சவங்களுக்கு ஒரு பங்ஷன்.... அது தான்" என்று இழுத்தான்..

"ஓகே வர்மன்... வேலைய முடிச்சிட்டு போங்கோ..." என்றவனுகனகோ வேறு எண்ணம்.

'எங்கே என்னை தாண்டி நீ போய் பார்' என்பது தான்.
மூன்று மணியளவிலேய துஷாவை அனுப்பி வைத்து விட்டான்.


'நாலு மணிக்கு தானே வர்மன் லீவ் கேட்டான்' செல்லை எடுத்தவன் ரவிக்கு அழைத்து உடனே வர சொன்னான்.

அரைமணி நேரத்துள் அவனும் வந்து விட.

"என்னடா திடீர் என்டு என்னை வரச்சொன்ன?" என்றவனிடம்,


"அது ரவி! இந்த வர்மனும் துஷாவும் எங்கயோ போக, திட்டம் போட்டிருக்கினம் போல... நேற்று அவள் லீவ் கேட்டாள்... இன்டைக்கு இவன் கேட்கிறான்...
நீ என்ன செய், என்னோட தொழில் சம்மந்தமா கதைக்கறது போல நடி! மீதியை நான் பார்க்கிறன்." என்றதோடு நில்லாது, வர்மனுக்கு அழைத்து,

பெரிய அளவிலான பொருட்கள் இறக்குமதி செய்வதால், அதனை சரி பார்க வேண்டியது உங்கள் பொறுப்பு! தான் முக்கியமான விஷயமாக ரவியுடன் பேசிக்கொண்டிருப்தாகவும், இதை கவணிக்க முடியாது என்று ,அவன் லீவ் கேட்டதை மறந்தவனைப் போல் சொல்லி விட்டு, போனை ஆஃப் செய்தான்.

வர்மனுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை... போட்ட பிளான் சொதப்ப போகிறதே என்று.


ஆம் இன்று சைலுவின் பிறந்த நாளுக்காக, அவளுக்கு தெரியாமல் ஒரு பார்ட்டி கடற்கரையில் மூவுமாக சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சைலு கல்லூரியில் இருந்து வந்ததும், அவளை டவுன் அழைத்து வருவது மைனாவின் பொறுப்பாக இருக்க, துஷாவும், வர்மனும் அவர்களுடன் இணைந்து கடல்கரைக்கு செல்வது தான் அவர்கள் திட்டம்.


'இப்பவே நாலாகிட்டுது... முக்கியமா ரவி சாரோட கதைக்கிறதா சொன்னாரே! வேறை யாரையாச்சும் இந்த வேலைய பாக்க சொல்லி கேட்பமா?' என்று நினைத்து அவனுக்கு அழைத்தால், போன் ஆஃப் என்று வந்தது..

லேன் நம்பர் அழைத்தால், அது எங்கேஜ் ஆக இரக்க..
'என்ன செய்யலாம்...' என்று யோசித்தவனது செல்போணும் சிணுங்கியது..


"அண்ணா... நான் துஷா... வேலை முடிஞ்சுதா?" என்றாள்.
அவனும் நடந்ததை கூறினான்.


"அண்ணா... இவள் என்னை எங்க கூடப்பிடுறீங்கள் என்டு படுத்துறாள்"


"கொஞ்சம் சாமாளி... அரைமணி நேரத்துக்குள்ள வந்துடுறன்" என்றவன் முடிந்த அளவு வேகமாக தன் வேலையை செய்தான்.

இங்கு சைலுவோ துஷவிடமும், மைனாவிடமும் ஆட்பாட்மே பண்ண ஆரம்பித்தாள்..

"எவ்வளவு நேரம் தான்டி? அந்த லூசு வரச்சொல்லீட்டு வேலை பாக்கிறானா?" என்று சாப்பாட்டு கடை ஒன்றில் இருந்து புலம்பியவள்,

"இரு இவனை' என்று போனை எடுத்து அவன் இலக்கத்திற்கு அழைத்தாள். அவன் எங்கே எடுத்தான்.

வேலையை முடிக்க வேண்டும் என்று சைலண்ட் மூடில் போனை போட்டிருக்க, அவள் பல முறை அழைத்ததை அவன் கவனிக்கவில்லை.

கோபம் கொண்டவள், துஷாவிடம்,

"வாடி நேர போய் என்ன என்டு கேட்பம்" என்றாள்.


"நான் வரேல வேணும் என்டா நீ போ!" என்றாள்.

இவள் எங்கே போவாள் என்ற அசட்டுத்தனத்தில் தான் கூறினாள்.


அவளோ மைனாவை இழுத்துக்கொண்டு அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தாள்.

கவுண்டரில் நின்ற பெண்ணிடம்,
"நான் ரவிய பாக்கேணும்"

"ரவியா?" குழம்பிப்போன அந்த பெண்,


"ஓ.... ரவி சாரா? அவர் பகீரதன் சாரோட கதைச்சுக் காண்டிருக்கிறார்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க." என்க.

'இவனை எல்லாம், சாரு மோரு என்டு கொண்டு... அவசராம அவர பாக்கோணும்.. கூப்பிடுங்க..." என்றாள் கோபமாக.

"நீங்க"; யாரென் சொல்ல முடியுமா?" என்றாள் அவள்.


"நான் அவரோட கேள் புட்பி என்டு சொல்லுங்கோ" என்ற நேரம் பார்த்து, அந்த நேரம் பார்த்து வெளியே வந்தான் ரதன்.

"இதோ சாரே வந்திட்டார்... அவரோட ஃப்ரண்ட் தான் ரவி சார்.. கோளுங்க.." என்றாளன அவள் நழுவலாக.



இதுவரை சைலு ரதனை பார்த்ததில்லை. ரதனுமே தான்... அதோடு அங்கு வேலை செய்பவர்களுக்கு ரவி என்றால் ரவிராஜ் தான்.

பழக்க தோஷத்தில் ரவி என்றுவிட்டாள் சைலு.


இவள் அவனைத்தான் கேட்க்கிறாள் என்று நினைத்து ரதனை கை காட்டி விட்டாள்.
ரதனை கண்டதும் மைனா அரண்டு நிற்க.

அருகில் வந்த ரதனிடம், "நான் ரவிய பாக்கோணும்" என்றாள் சைலு.

"ரவியை நீங்கள் ஏன் பாக்கோணும்? முன்னால் நின்றவளை அவன் விழிகள் அளவிட்டது.


"என்னை வர சொல்லீட்டு, இங்க என்ன பணியாரம் சுடுறான் என்டு பாக்கோணும்" முன்னால் நிற்பவன் யார் என்று அறியாமல் பொரிந்தாள்.


நீங்கள் அவனுக்கு யார் என்டு தெரிஞ்சு கொள்ளலாமா?" என்று கேட்டவன் எண்ணமும் தன் நண்பன் ரவியைத்தான் கேட்கிறாள் என்று..

"அவன்ட வருங்கால பொண்டாட்டி? வரச்சொல்லுங்கோ" எனறாள்.


"ஓ...." என்றவன் தனது போனை எடுத்து ரவியை வெளியே வர சொன்னான்.


"என்னடா" என்று வந்து நின்றவனிடம்,


"உன்ர வருங்காலம் உன்னை கூப்பிடுது.. என்னன்டு கேள்!" என்றான்.

"யாருடா அது..." அவன் எதிரே நின்ற இருவரையும் மாறி மாறிப் பார்த்தவன்,

"யாரு இந்த குட்டைச்சியா? எனக்கு ஓகேடா..." என்று மைனாவை அவன் நெருங்க..

"டேய்....! அவள் இல்லா... இதோ இவள் தான்" என்றான்.



"என்னது...! இவங்களா?
எனக்கு இவள் வேண்டாம்... அந்த குட்டைச்சி என்டா சொல்லு... மறு பேச்சு பேசாம கட்டிக்கிறேன்." என்றவனை பார்த்து முறைப்பது மைனாவின் முறையானது.

'இவனுக்கு தான் நான் யாரென்டு தெரியாது... இந்த நெட்டாங்குக்குமா என்னை மறந்திட்டுது..?' என்றே நினைத்தாள் மைனா.


உண்மையில் ரதனுக்கு அன்றிருந்த நிலையில், மைனாவை நினைவில் இல்லை. அதனால் தான் இவ்வளவும்.





"யாரு... இந்த குண்டன் ரவியா?" என்றாள் சைலு நக்கலாக.


சைலுவின் கையை பிடித்து தடுத்தாள் மைனா.
அவள் அந்த குண்டனை ரவி என்று சொன்ன கோபத்தில் இருக்க, மைனாவோ தடுத்ததும் கோபமாய்,

"என்னடி...?" என்று அவளிடம் திரும்பியவளிடம், வேண்டாம் என்பதாய், தலையசைத்தாள் மைனா.

'இவர் இவனை ரவி என்டுறார், பார்த்து கொண்டு இருக்க சொல்லிறியா?
அதை கூட தாங்கிப்பன்.. நான் என் ரவியை தேடுறேன்... இவன் என்னடா என்டா.. நான் வேண்டாம் நீ என்டா ஓகேவாம்.. இதோ இந்த வளர்ந்து கெட்டவனை கேட்டு சொல்லட்டாம்.


நாங்க என்ன இங்க பெண்ணுங்க விற்கப்படுமென்டு பலகையா போட்டிருக்கம்." சைலு பொங்க.


"யாருடா இது?" என்று ரதன் காதில் கிசுகிசுத்தவன்,,


"பஜாரியா இருப்பா போல... உன்ர இடத்துக்கே வந்து உன்னையும் உன் நண்பனையும் கலாய்கிறாள். பாத்துக்கொண்டிருக்கிற..."


"உண்மைய தானே சொல்லுற...விடு!" என்றான்.


'நீ எல்லாம் நண்பனாடா?' ரவியின் அடிபட்ட பார்வையில் பாவமாகி போக.

"அழாத கேட்கிறன்... இந்த பாவமான மூஞ்சிய எங்க வாங்கினியோ?" என்று பேச தயாராகவும்,

"சாரி சார்.... நடந்த குழப்பங்களுக்கு நான் தான் காரணம்." எங்கிருந்தோ ஓடி வந்தான் வர்மன்.