• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

17. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
சாருபாலா பொதுவாகவே அமைதியான பெண்! வீட்டிலும் வெளியிலும் அவளது குரல் ஓங்கி ஒலித்ததே இல்லை ! கணவன் ஊருக்கு சென்றது முதல் அவளால் எதிலும் ஈடுபாட்டோடு செயல்பட முடியவில்லை! இந்த உணர்வு அவளுக்கு புதிது! மனம் எப்போதும் கணவனிடம் போய் நின்றது!

ஆனந்தன் சென்ற வேலை ஒரே நாளில் முடிந்துவிட்டது! ஆனால் அவன் இப்போது முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாக உணர்ந்தான்! அவனுக்கு அவகாசம் தேவைப்பட்டது! ஆகவே மேலும் அங்கேயே தங்கியிருந்து யோசித்தான்! இதற்கிடையில் ஒருபுறம் சாரு, ஒருபுறம் அனிதா அவனை கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள்! அனிதா தினமும் பேசுகிறவள்! ஆனால் சாரு இப்போது தான் பேசுகிறாள்! சாப்பிட்டிங்களா? எப்ப வருவீங்க? என்ற கேள்விகள் அவளிடம் எப்போதும் இல்லாதது! குட்மார்னிங், குட்நைட் தான் தகவலாக வரும்! ஆனால் இப்போது நேரடி தொடர்பு கொள்கிறாள்! ஒரு மனைவியின் உணர்வோடு அவள் நடந்து கொள்ள முயற்சி செய்வது தெளிவாக புரிந்தது! ஆனால் இப்போது அவனால் அனிதாவை விலக்க முடியாது !

ஆனந்தனுக்கு குற்றவுணர்வு உண்டாக ஒரு அழுத்தமான காரணம் இருந்தது!

அனிதாவுடன் வெளியே போய் வருவதும், வீட்டில் அவள் கையால் உணவருந்துவதும் பிடித்திருக்கிறது தான்! கண்களால் சிரிப்பதும், காரில் பயணிப்பதும், என்று விடலைப் பருவக்காதல் போலத்தான் சில வாரங்களுக்கு முன்பு வரை நிகழ்ந்து கொண்டிருந்தது! அந்த நிலையிலேயே தொடர்ந்திருந்தால் அனிதாவிடம் நண்பனாக பழகினேன் என்று எளிதாக விலகிக் கொண்டிருக்கலாம்! ஆனால்.. அவர்கள் அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டிருந்தனர்! ஆம்! தொட்டுப் பழகும் நிலைக்கு வந்திருந்தனர்! அது வெறுமனே கைகோர்த்து கடற்கரையில் நடப்பது போன்ற பழக்கம் அல்ல!

அன்று இரவு வேலைக்கு சாரு சென்றிருந்தாள்! ஆனந்தன், அனிதாவையும் குழந்தை ரிஷியையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றிருந்தான்! கோவிலுக்கு சென்றுவிட்டு, ஹோட்டலில் உணவை முடித்து வெளியே வந்த வேளையில் எதிர்பாராதவிதமாக சடசடவென்று மழை பொழிய தொடங்கிவிட்டது! குழந்தையோடு ஆனந்தன் பின்னால் வந்ததால் அவன் தாழ்வாரத்தில் நின்று கொண்டான்! ஆனால் முன்னதாக சென்ற அனிதா அங்கிருந்து திரும்ப ஓடி வந்து அவனருகில் நிற்பதற்குள் முழுதுமாக நனைந்து போனாள்! மெல்லிய வெள்ளையில் கருநீல பூப்போட்ட சேலையும், கருநீல பிளவுஸும் அணிந்திருந்தாள்! நனைந்ததில் அவளது சேலை உடம்போடு ஒட்டிக்கொண்டது! ஆனந்தன் அந்த நிலையில் அவளை பார்த்ததும் சற்று தடுமாறிப் போனான்! அது பொது இடம் என்பதால் தன்னை கட்டுப்படுத்தி, பார்வையை விலக்கிக் கொண்டு நின்றான்!

அப்போது அங்கே, கையில் குடைகளோடு வந்தான், உணவகத்தின் செக்யூரிட்டி ஆள்! ஆனந்தனிடம் ஒரு குடையை கொடுத்தான்! இருவரும் அந்த ஒற்றைக் குடையில், ஒருவரை ஒருவர் உரசியபடி நடக்க வேண்டிய நிலை! அவர்கள் ஏறும்வரை உடன் நின்று குடையை அந்த ஆள் திரும்ப பெற்றுக் கொள்ளவும், ஆனந்தனின் கார் சீறிப் பாய்ந்தது!

காரில் ஒரே நிசப்தம்! குழந்தை தூங்கிவிட்டான்! வெளியே மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது! அவர்கள் வீடு போய் சேர்ந்த பின்னும் தொடர்ந்தது! வீட்டுக்குள் நுழையவும் மின்சாரம் சட்டென்று தடைப்பட்டது! அடுத்த கணமே இன்வெர்ட்டர் உதவியுடன் சில இடங்களில் மட்டும் ஒளி பரவியது!

பணிப்பெண்ணை விளித்து குழந்தையை கொடுத்து அனுப்பிய ஆனந்தன் தங்கள் அறைக்கு விரைந்து விட்டான்! அனிதா, ஆனந்தனின் பார்வையிலும், சிலகணங்கள் நேர்ந்த நெருக்கத்திலும், ஒருவிதமாக பாதிக்கப்பட்டிருந்தாள்!

தன் அறைக்கு சென்றவள் குளியலறையில் நுழைந்து ஷவரின் அடியில் குளிர் நீரில் சற்று நேரம் நின்றபோது, அழுகை வெடித்தது! சற்று நேரம் அழுகையில் கழிய, ஒருவாறு சுதாரித்தாள்! அதன்பின் உடை மாற்றிவிட்டு, சமையலறைக்கு சென்று பால் காய்ச்சி எடுத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்றாள்!

ஆனந்தன் உடை மாற்றிவிட்டு, நிற்கவும் முடியாது, உட்காரவும் முடியாது, நடை பயின்று கொண்டிருந்தான்! அனிதா உள்ளே வர தானியங்கி கதவு மூடிக் கொண்டது!

அவள் தலையை குனிந்தபடி பாலை அங்கே இருந்த குறுமேசை மீது வைத்து விட்டு, திரும்பிச் செல்ல எத்தனித்தாள்!

"அனு! " ஆனந்தனின் கரகரத்த குரல் அவளை தேக்கியது!

அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் அப்போதும் கண்ணீர் நிரம்பியிருந்தது!

"அனிதா! என்னம்மா? ஏன் அழற?" என்று பதறிப்போனவனாக அருகே சென்றான்!

"அத்தான்! இனியும் என்னால உங்களை பிரிஞ்சு வாழ முடியும்னு தோனலை! ப்ளீஸ் அத்தான்! என்னை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்!"

"அனிதா! எனக்கும் உன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் மனம் துடிக்கிறது! ஆனால் சாருபாலா ? "

"அக்காவும் இருக்கட்டும் அத்தான்! எனக்கு உங்களை பார்த்துக் கொண்டு, பணிவிடை செய்து கொண்டு இருந்தால் போதும்! அதற்கு மேலாக வேறு எதுவும் வேண்டாம்! நமக்கு பிள்ளையாக ரிஷி இருக்கிறான்! எனக்கென்று ஒரு பிள்ளைகூட வேண்டாம் அத்தான்! என்னை நீங்க ஏற்றுக்கொள்ளாவிட்டால், நான் நிச்சயமாக உயிரோடு இருக்க மாட்டேன்!"

"ஏய்.. என்று அதட்டியவாறு அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான் ஆனந்தன்! "எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறே அனு? உன்னை இனிமேல் என்னாலும் பிரிந்து வாழ முடியாது! சாருவை நான் விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டேன்! ஆனாலும் ஏனோ எங்கள் வாழ்வு தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டாத வாழ்வாக போயிக் கொண்டிருக்கிறது! உன் அன்பிலும் அக்கறையிலும் நான் என் மனதை உன்னிடம் இழந்து வெகுநாட்கள் ஆகிறது! ஆனால் சாருவுக்கு எப்படி துரோகம் இழைப்பது என்ற தவிப்புடன் நடமாடிக் கொண்டிருக்கிறேன்! இந்த விஷயத்தை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்று என்னால் கற்பனை செய்ய முடியலை! நீ சொல்வது போல எல்லாம் அவள் ஒப்புக்கொள்வாள் என்று எனக்கு தோன்றவில்லை! நான் உன்னை கைவிட மாட்டேன்! ஆனால் அதற்காக நீ கொஞ்சம் காத்திருக்கணும்! நான் சமயம் பார்த்து சாருவிடம் பேசி இதற்கு ஒரு முடிவு செய்கிறேன், சரிதானா?"

"உங்கள் வாக்கை நான் நம்புகிறேன் அத்தான்! இது போதும் எனக்கு! எத்தனை காலம் என்றாலும் நான் காத்திருப்பேன்!" என்றவள் தன்னை மெல்ல அவனிடமிருந்து விடுவித்து கொண்டாள்!

ஆனந்தனும் தடுக்கவில்லை!

அன்றைக்கு பிறகு, இருவருக்குமான நெருக்கம் கூடுதலானது! தனிமை கிடைக்கையில் அணைத்து கொண்டு பேசுவதே வழக்கமும் ஆகிவிட்டது! இருவரும் தடையை உடைத்து எரியும் நாளுக்காக காத்திருந்தனர்! அதற்கு விசாலமும் ஊக்கமளிக்கும் விதமாக நடந்து கொண்டது அவர்கள் எதிர்பாராதது!

இப்போது அவனுக்கு இந்த பிரச்சினையை எப்படி கையாள்வது என்று புரியவில்லை! யாரிடமும் யோசனை கேட்கும்படியான விஷயமில்லையே! சாருவிடம் இருந்து சுமூகமாக விலக வேண்டும்! ஒரு வேளை அனிதா சொன்னது போல, நூற்றில் ஒரு வாய்ப்பாக அவளும் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டால்.. ? ம்ஹூம் அதில் நம்பிக்கை இல்லை அவனுக்கு!

சற்று நேரம் தீவிரமாக யோசித்தவன், இறுதியாக.. அவளாக விலகும்படி செய்வது தான் இதற்கு ஒரே தீர்வு! என்ற முடிவிற்கு வந்தான்! அதற்கான வழிமுறையையும் தீர்மானித்த பிறகே அவன் மனம் சற்று அமைதியானது!

ஆனந்தனைப் பொறுத்தவரை அந்த வழி எளிதாக தோன்றியது! ஆனால் கத்தியின்றி ரத்தமின்றி கூட காயம் ஏற்படும்! அப்படியான நிலையில் உண்டாகும் வலிக்கு மருந்தே இல்லை என்று அவன் உணரவேயில்லை !

சில காயங்கள் காலத்தின் போக்கில் ஆறிவிடலாம்! காயம் உண்டாக்கியவரை ஒருபோதும் மனது மன்னிக்காது !
 

Attachments

  • CYMERA_20240326_172924.jpg
    CYMERA_20240326_172924.jpg
    67.9 KB · Views: 14

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ஆனந்தன் சாருவை காதலித்தது உயிரே இல்லாத ஜீவன் போல ஆகிடுச்சு சாரு நிலைமை