• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

18. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
"சாரி சார்.... நடந்த குழப்பங்களுக்கு நான் தான் காரணம்." எங்கிருந்தோ ஓடி வந்தான் வர்மன்.

"இவள் என்னை தான் தேடி வந்தாள்" என்றவன்.

"இவங்க தான் சார் துஷாவோட தோழி" என்றான்.

'அப்ப அன்டைக்கு அங்க பார்த்த' என நினைத்தவனுக்கு, அப்போது தான் அருகில் நின்ற மைனாவே நினைவில் வந்தாள்.


"அன்டைக்கு நின்டது நீ தானே!"
ஆம் என மைனா தலையசைக்க..


"நீயாவது சொல்லி இருக்கலாமேம்மா. இவன் இல்லை என்டு." என்றான் ரதன்.

அவள் என்ன சொல்ல மாட்டேன் என்டா சொன்னாள்.

ரதனை பார்த்ததில் இருந்தே அவள் வாய் தான் திறப்பேனா என்றல்லவா அடம் பிடித்தது.

அதோடு சைலு வேறு பெரிய ஓனார் போல சண்டை போட்டால், வேடிக்கை தான் பார்க முடியும்.
அவளுக்கென்ன... தேவையில்லாமல் வாயை கொடுத்து, வாங்கி கட்ட வேண்டுமென்று விதியா என்ன?
யாரென்று தெரியாத போதே றோட்டு என்றும் பாரமல், துஷாவோடு அந்த கத்து கத்தியவன், இங்கு இவ்வளவு பேர் மத்தியில் கத்தினால்.


துஷா வேறு இவனுடன் சண்டை போட்டு, இவன் கோபத்தை வேறு சம்பாதித்திருப்பாள்.


அந்த ஆத்திரத்தில், தன்னோடு சத்தம் போட்டால் மானமே போய் விடுமே!
அது தான் சைலுவை பேசாதே என்று செய்கை செய்தாள்.


அவள் கேட்டாள் தானே! அது தான் பேசாமலே இருந்து விட்டாள்.

"இவங்க என்னை ரவி என்று கூப்பிடுறதனால தான் இத்தனையும்... சாரி சார்" என்றவன்.

ரவியிடமும் மன்னிப்பு வேண்டினான்..

"பரவாயில்லை வர்மன்.. ஆனா இவங்கள யாரென்டு சொல்லலாமே!" என்றான் அறியும் ஆவலில்.

முதலில் சொல்ல தயங்கியவன், சைலுவை காட்டி,


"இவங்க தான் சார்... என் வருங்கால மனைவி"
அவன் கூறியது தான் தாமதம், ரதனை திரும்பி பார்த்து முறைத்தான் ரவி.

"அப்ப பக்கத்தில நிக்கிறது...?' ஆர்வமாக ரவி வினாவ.

'இது பக்கத்து வீட்டு பொண்ணு... சைலுவுக்கு நல்ல தோழி"

"ஹாய்......" என்ற ரவியை முறைத்தவாறு திரும்பி நின்றாள்..



"துஷாவை எப்படி உங்களுக்கு தெரியும்?" கேட்டது ரதன்.


"சைலு தான் அறிமுக படுத்தி, அவளக்கு வேலை தேவை என்டு கேட்டா" என்றான். தனது பாதை கிளியர் ஆனதில் பெரும் சந்தோஷம்.

"ஓகே வர்மன்! நீங்க நாலு மணிக்கு போகோணும் என்டீங்களே! போகலையா?"


"அது சார்.... வேலை முடியலையே"


"பரவாயில்லை வர்மன்! எங்களோட வேலை முடிஞ்சுது.
நானும் ரவியும் பாக்கிறம்... நீங்க போங்கோ" என்றவன்.

"ஏன் வர்மன்... ஒரு விஷயம் கேட்கலாமா" என்றான்.

"சொல்லுங்க சார்"


"இப்பயாவது சொல்லலாமே! என்ன பங்ஷன் என்டு"


"அது இவளோட பர்த்டே.. அது தான்" இழுத்தான்.


"ஓ...... என்றவன், சைலுவின் முன் கை நீட்டி "ஹாப்பி பர்த்டே" என்றான்.
அவளும் கைகுடுத்து நன்றி கூறி செல்ல.

ரதனை இழுத்துக்கொண்டு அவன் அறை சென்ற ரவி.

"ஏன்டா! உனக்கு நான் என்ன வேலைக்காரனா?
அவனை அனுப்பிவிட்டுட்டு, நான் உன்னோட வேலை செய்யானுமாே? என்ர கடையில நிம்மதியாய் வேலை பாத்துட்டிருந்தன், போனை போட்டு கூப்பிட்டுட்டு, அந்த பொண்ண இவனோட சேர்த்து பேசி என்ர வேலையையும் கெடுதிட்டியேடா?


இவன மட்டும் இல்லடா... உன்னை கூட அவ விரும்ப மாட்டா.... அந்த பொண்ணை பார்கவே தெரியுது.. நல்ல புள்ளை என்டு. நீ என்னடா என்டி, உன்ர நாடகத்தில என்னையும் ஒரு கதா பாத்திரமாக்கி, நடிக்க வைச்சிருக்கிற..


இதில அந்த பஜாரிட்ட, நடிப்பின் பெரிய விருதா, குண்டன் என்டு அவார்ட் வேற" பொருமினான்.

" சும்மா புலம்பாத... அவங்க பழகினதை பாக்க அப்பிடி தெரிஞ்சிது... அதான் அப்பிடி நடந்துட்டன்" என்றவன்,

'இன்டைக்கு என்ன கிழமைடா" என்றான்.

"ஏன் கிழமை தெரிஞ்சு, என்ன பண்ண போறீங்க சார் ஓ...... துஷாவை உன்னட்டயே தந்ததுக்கு சாமிக்கு, காவடி எடுக்க போறீங்களோ!" என்றான் நக்கலாக.

"உன்னட்ட கேட்டன் பாரு!" கதவோரத்தில் மாட்டபட்டிருந்த நாள் கலண்டரில் பார்த்தான். அது வெள்ளி என்று காட்டியது.


"அப்ப அவ அன்டைக்கு உண்மையை தான் சொல்லி இருக்கிறாள்.. நான் தான் தேவையில்லாம என்னை நானே குழப்பினது போதாது என்டு, அவளையும் கஷ்டப்படுத்தீட்டேன்."

"என்னடா சொல்லுற"


"அன்டைக்கு வர்மனோட இவள் சிரிச்சு கதைச்சாள் என்டு, கோபபட்டேனே! அப்ப சொன்னா... தன்னோட தோழிக்கு பிறந்தநாள் என்டு.. நான் தான் இருந்த கோபத்தில, அவளை நம்பாம, ராமா நடிப்பு என்டு, ஏதேதோ சொல்லி கழுத்தை..... பிடித்து" என்று வருந்தியவன் மனம் சோர்வுற, இருக்கையில் அமர்ந்தான்.

அவனை அந்த நிலையில் பார்க விரும்பாதவனும், சற்று முன் அவனை திட்டியதை மறந்து.

" நீ என்ன தெரிஞ்சா செய்த... இல்லை தானே? எங்க உன்ர ஆளை யாரும் பறிக்க கூடாது என்டு பண்ண? இவ்ளோ நாள் அவளை கஷ்டப்படுத்தினதுக்கு, பரிகாரமா, இனி எந்த வித கஷ்டமும் அவளை நெருங்காம பாத்துக்கோ" என்றான்..

"அவளே நொந்து போய் இருக்கா....
நானும் சேர்த்து.... ச்சே..... இனி அவளை எந்த கஷ்டமும் நெருங்க விட மாட்டன்" என்றவன்.


"நீ போட... நான் வேறை யாரையாவது வைச்சு என்னோட வேலையை பாத்துக்கிறன்" என்றவும்.

"சாரிடா! எனக்கும் வேலை நிறைய இருக்கு... உனக்கு மாட்டேன் என்டு சொல்ல முடியாம தான், நீ கேட்டதும் வந்தன்" என்றவனை.

"நீ ரொம்ப நல்லவன் என்டு தெரியும்..." என்றவன் "எதுக்குடா அந்த பெண்ணை சீண்டின" என்றான்.


"யார?" என்றவன் அவன் யாரை கேட்கிறான் என்றது நினைவு வர.

"ஓ..... அவளையா? அது சும்மா விளையாடினேன்டா" என்றான்.


"நிக்நேம் எல்லாம் வைச்சு கூப்பிடுற ..சும்மா என்டா நான் நம்பிட்டேன்டா"

"நீ வேறடா! அவ பக்கத்தில நின்ட பஜாரி என்ன சொன்ன பாத்தியா? குண்டனாம்.
எனக்கு அவளை புடிச்சா போதுமா? அவளுக்கும் பிடிக்கனுமேடா! சைலு நினைச்சத போல தானே அவளும் நினைப்பாள்..?
ஆனா ஒன்டுடா கடைசி வரை வர்மன் அவள்ர பெயரை மட்டும் சொல்லவே இல்லையே!" கவலை காண்டான்.

"உனக்கு என்னடா குறை? அந்த பொண்ணுக்கு தான் குடுத்து வைக்கேல.. விடு உனக்கென்டு இருந்தா நிச்சயமா அவ கிடைப்ப"

"எனக்கு தான் குடுத்து வைக்கேல" என்றான் ரவி.

அவனை அலட்சிய பார்வை பார்த்தவன். " சோகம் போல நடிக்காத அவ்ளோ சீன் எல்லாம் இங்க உனக்கில்லை"
அவன் சொன்னதில் சிரித்தவன்,


"நீ உன்ர கனவை ஆரம்பிச்சுக்கோ!

சரி மச்சான்! நான் வாரேன்டா" என்றவன் சென்று விட, ரதன் அளவில்ல சந்தோஷத்தில் காற்றில் மிதந்தே கனவு காண தொடங்கினான்.


இங்கு இவர்கள் இன்னும் வரவில்லை என்றதும்,


'என்ன வில்லங்கத்தை இழுத்து விட்டுதுங்களோ! அண்ணா வேற பார்கிறன் என்டாரே, அவரையுமே காணேலயே' தனியே புலம்ப ஆரம்பித்தாள்.


நல்ல வேளை போகும் போது தனது போனை துஷாவிடம் குடுத்து சொன்றாள் சைலு.


மைனாவை அவள் அழைத்து செல்ல, நடக்கப்போகும் விபரீதம் அறிந்தவளாய்,
வர்மனுக்கு அழைத்து காதில் வைத்தவள் நேரம் நன்றாக இருந்தது போல, உடனேயே எடுத்து விட்டான்.


"அண்ணா சைலு உங்களை தேடி தான் அங்க வாறாள்.
என்னையும் கேட்டாள் வா என்டு... நான் வரேல நீ போ என்டு சும்மா தான் விளையாட்டா சொன்னன்.. உடனயே மைனாவ இழுத்துக்கொண்டு வாறாள்ண்ணா..." என்று படபடக்க.

"நீ ரென்ஷன் ஆகாத துஷா... நான் பாக்குறன்..
ஏதோ நினைவு வந்து போனை எடுத்து பார்த்தான், அந்த நேரம் நீயும் கூப்பிட்டா.. அதுவும் நல்லதா போச்சு.. சரி நீ வை!" என்றவன் அங்கு போக தான் தெரிந்தது. ரவி என்ற பெயரில குளறுபடி நடப்பதே.


விழியை உறுட்டியவாறு நின்றவளை நோக்கி வந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவள், அருகில் வந்தது..

"என்னண்ணா... ஏதும் பிரச்சினை ஆச்சோ...?" கலக்கம் தான்.


"நல்ல காலம்... என் நல்ல நேரம் போனை பாத்தன்...
இல்லை என்டா, நாளைக்கு உனக்கும் எனக்கும் வேலை இல்லாம பண்ணி வைச்சிருக்கும்கள்.." என்றான் வர்மன்.

"என்னாச்சுண்ணா...?" பதட்டமாய்.


"இந்த லூசு இருக்கே! ரதன் சாரோட சண்டை போடுது. அது பேயறைஞ்சா மாதிரி நின்டு வேடிக்கை பாக்குது.


எனக்கென்னடி தெரியும்...? அவன் தான் ரதன் என்டு. அவன் அந்த குண்டன ரவி என்டவும் கோபம் வந்திட்டுது.
இதுக்கு தெரியும் தானேடி!" என்று மைனா தலையில் தட்டியவள், இதாவது சொல்லி இருக்கலாம் தானே, அவன் தான் ரதன் என்டு."

"நான் தான் கண்ணை காட்டினேனே! பேசாம இரு என்டு.
அதையும் தாண்டி வாயாடினா... நல்ல வேளை துஷா! அவன் வாய திறக்கிற நேரம், அண்ணா வந்தார்.. இல்லை என்டா மச்சி... இவள் இன்டைக்கு சம்பல் தான்"

"நீ கண்ண காட்டினா, எனக்கென்ன தெரியும்? நான் என்ன மந்திரக்காறியே!" என்றாள் கோபமாய்.


"சும்மா இருங்கோடி" என்றவள்

"இப்ப பிரச்சினை இல்லையே."


"அதை ஏன் கேக்கிற.... இதுகள் போய் ரவிவை பாக்கோணும் என்டிருக்குதுக். அங்க நின்ட ரிஷப்ஷனிஸ், ரவி என்டதும், சாரோட ஃப்ரெண்ட தானெட்டு நினைச்சு, சாரையே கேக்க சொல்லி இருக்கு.

சார் அவரை கூப்பிட்டு விட்டா.... இந்த லூசு" என்று சைலுவை காட்டியவன், 'அவரை இந்த குண்டன் எல்லாம் ரவியா...? அது இது என்டு சொல்லீட்டுது.
நல்ல நேரம் துஷா... நான் அங்க போனன்.

இல்லையா இவள் சார்ட்ட அடி வாங்கி இருந்தாலும், ஆச்சரிய படுறதுகில்ல" என்றான்.

அந்த நேரம் ஏனோ அவன் கழுத்தை நொடி கண்முன் வந்து போனது.


"ஏன்டி! உனக்கு எங்கையாச்சும் போன வாயை அடக்க தெரியாதா?
ரவி என்டு நூறில ஐம்பது பேருக்கு பேர் இருக்கும்.... ஏதோ உலகத்தில அண்ணாக்கு தான் இருகென்டு நினைச்சியா? இனியாவது கொஞ்சம் அடங்கு" என்றவள்,

" இப்ப எந்த பிரச்சினையும் இல்ல தானேன்னா... உங்களை ஏதாச்சும் சொன்னாரா?"

"இல்லம்மா... எல்லாம் ஓகே தான்.
இவள்ர வாயை பாத்திட்டு பயந்திட்டார் போல. தந்த வேலையையும் தானே பாக்கிறன் என்டு என்னை விட்டுடார்" என்றதும் வர்மனை முறைத்தாள் சைலு.

" சண்ட முடிஞ்சா வாங்கோ போகலாம்" என்றதும்.
ம்ம் என்றனர். தன் கைபையில் இருந்த ஒரு கறுப்பு துணியை எடுத்தவள், சைலுவை திரும்ப சொல்லி கண்ணை கட்டிவிட்டு, ஆட்டோவில் ஏறியவர்கள், இடையில் இரண்டு மூன்று முறை ஆட்டோ சில கடைகளில் நின்று போனது.


"என்னை கடத்த திட்டம் போடுறீங்களாே?" என்று சைலு கேட்க.

"உன்னை கடத்தி கொண்டு போறவன் சாகிறதுக்கா? நாங்க கண்ணை அவுக்குற வரை பேசம வா!" என்றாள்.

ஒர் இடத்தில் ஆட்டோ நின்றது. இறக்கியவர்,
கடையில் வாங்கிய ரோஜா மலர்களையும், இதய வடிவிலான பலூன்களையும் ஊதி அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து அவர்ளிடம் கொடுத்து,

அந்த அக்காக்கு பிறந்த நாள்... நாங்க அங்க கேக் வெட்ட போறோம்... நீங்களும் வாங்கோ" என்று அவர்களையும் அங்கு அழைத்து சென்றாள்.

அவள் கொடுத்த பொருட்களை பார்த்த சந்தோஷத்தில், அவள் காட்டிய இடம் ஓடி சென்றார்கள் அவர்கள்.

சைலுவின் கண்ணை கட்டி துணியை அவிழ்த்து விட்டாள் மைனா.

முதலில் மங்கலாக தெரிந்த அனைத்தும் சற்று தெளிவாக தெரிந்ததும் ஆச்சரியத்தில் விழிகளை விரித்தவளிடம்,
ஓர் கத்திகை கொடுத்தவள்,

"இப்ப வெட்டு" என்றாள்.
ஆம் அவள் முன்னால் அலங்கடிக்கப்பட்ட மேசையில் சிவப்பு நிறத்தில் இதய வடிவிலான கேக் ஒன்று இருந்தது.

அவளை சுற்றி ரோஜாக்களோடும் பாலூன்களோடும் நின்ற சிறுவர்களை கண்டவள், இதுவரை தான் அனுபவித்திராத இனிமையான தருணம் என்பதால் ஆனந்தத்தில் கண்கள் கசிய,.

"பர்த்டே பேபி இன்டைக்கு அழ கூடாது." என்று கட்டிக்கொண்ட துஷா.

"மெழுக ஊதி கேக்க முதல்ல கட் பண்ணு." என்றாள்.
கேக்கை வெட்டியதும் தான், முந்திக் கொண்ட வர்மன் சைலுவுக்கு ஊட்டி விட்டான்.


பின் ஒவ்வொருவராக ஊட்டி விட,

சிறுவர்கள் எல்லோரும் "ஹாப்பி பர்த்டே அக்கா" கையில் இருந்த மலர்களை கொடுக்க, சந்தோஷ மிகுதியில் அனைவருக்கும் கேக்கை ஊட்டி விட்டவள்,
அந்த ரோஜாக்களையும் பலூன்களையும் அவர்களிடமே கொடுத்து, விளையாடும்படி அனுப்பி விட்டு, மீதமிருந்த கேக்கை, நண்பர்கள் முகங்களில் பூசி விளையாடி, சந்தோஷமாக அந்த நாளை கழித்தார்கள்.



நேற்றைய இன்பமான நினைவுகளுடன் வேலைக்கு சென்றாள் துஷா.


அவன் இருக்கும் இடம் வெறுமையாக இருந்தது. அதை அவள் பெருது படுத்தாமல், வேலையை கவனித்தவள், நேரம் ஆக ஆக, தன்னை அறியாமலே அவனை தேட ஆரம்பித்தாள்.

அவன் தான் வந்த பாடில்லை.

'மதியமும் ஆச்சு.. இன்னும் இவனை காணேலயே.! உடம்பு ஏதாவது சரியில்லையோ!
யாராவது ஏதுவும் வேற சொல்லேல' தனிமையில் புலம்ப ஆரம்பித்தாள்.

அவன் இல்லாமலும் அவன் சீண்டல்களும் இல்லாமல் அந்த அறை அவளுக்கு சிறையாக தோன்ற,

வெளியே சென்றால் யாராவது அவன் வராத காரணம் கூறுவார்கள்" என்று அந்த இடம் பூரகவும் ஒரு சுற்று சுற்றி வந்தாள். யாரும் அவளை கவனிக்கவில்லை.. கவனிக்கும் நிலையிலும் இல்லை.

'இதுக்கு உள்ளயே இருந்திருக்கலாம்' என்று நினைத்தவாறு கதவை தள்ளியவள் உள்ளே இருந்தவனை கண்டு அதிர்ந்தாள்..



'இவன்எப்பிடி? நான் வெளிய தானே நின்டன்'

"என்ன டார்லிங்க்! ரொம்ப மிஸ் பண்ணின போல. முகத்தில ஓடின சோக ரேகை... என்னை பாத்ததும் சந்தோஷமா மாறிட்டுது." வம்பிழுத்தான்.

அவனை காணுமுன் அவதிப்பட்டவள், இப்போதைய அவனது பேச்சில் எரிச்சல் எழ, முகத்தை திருப்பி கொண்டாள்.

"உன்னை கண்டு பிடிச்சிட்டன் என்டு, முகத்தை திருப்புற போல..."

அவன் பேச்சு பிடிக்கவில்லையோ, இல்லை அவன் பேசும் விதம் பிடிக்கவில்லையோ, மறுமொழி பேசாது அமைதியாக நின்றாள்.

"என்ன மேடம் பேச மாட்டீங்களோ, ஊருக்கு எல்லையில் இருக்குற கிளையில, சின்ன பிரச்சினை! அது தான் அங்க போக வேண்டியதா போச்சு.

வேளையோடயே வந்த என் டார்லிங்க பார்த்திடலாம் என்டு தான் நினைச்சன்.
ஆனால் அங்கு போனதும் தான் தெரிஞ்சிது, அது சின்னதில்லை பெரிய பிரச்சினை என்" சொன்னவனை.

"என்ன பிரச்சினை" என்று கோபம் விலகிப்போக அக்கறையாய் வினவினாள்

"சுகாதாரத்துறை வந்து சோதனை நடத்தினதில, நிறைய காலவதியான பொருட்கள் பிடி பட்டிருக்கு.... அங்க வேலை பாக்கிறவ அதை கவனிக்கிறதில்ல போல.... நான் இங்க இருக்கிறதால, அங்க நெடுவ போமாட்டன்... மாதம் ரெண்டு வாட்டி போவன். போற நேரத்தில இதை கவனிக்க ஏலுமா...

அவரவர் வேலைய சரியாக செய்வினம் என்டு நினைச்சுட்டு இருந்த... யாரும் சரிய இல்லை.
இந்த சாேதனையால தானே, அங்கட திருட்டுத்தனமும் பிடிபட்டுது.


சரியா வேலை செய்யாத இருபது பேர வேலையால அனுப்பிட்டன்." என்றான் சாதரணமாக .

"என்னது! இருபது பேரா?" என்று அவள் அதிர,

"பயப்படத டார்லிங்க்.... நீ தான் பிழையே செய்யலயே.. அப்பிடியே சொய்தாலும், வேலையால நிப்பாட்ட மாட்டன்.. உனக்கென்டா தண்டனை வேற மாதிரி தான் இருக்கும்" என்றான் உதட்டில் மர்ம புன்னகையினை தவள விட்டு.

புரிந்து விட்டது அவளுக்கு. இதற்குமேல் பேசிடுவாளா...?

"என்ன தண்டனை என்டு கேளு துஷி!" என்றான்.

தலையை ஆட்டினா தானேடா வெட்டுவ... என்பது போல், தன் இருக்கையில் சென்று அமர்ந்து வேலையில் கவனமாவது நடித்தாள்.

'ரொம்ப விவரம் தான்... இது எனக்கு நல்லதில்லையே' என நினைத்தவன்.

"ஏதாவது வேலையா நிக்கிறியா துஷி.?" என்றான் சீரியஷாக கேட்பது போல்.



"இல்ல சொல்லுங்க சார்! உங்களுக்கு அவசரமா ஏதாவது செய்து தரோணுமா"

"ஒன்டும் இல்லை... சும்மா கேட்டன்" என்றான் அவளை சீண்டி விட்டேன் என்ற சந்தோஷத்தில் மீண்டும் நமட்டு சிரிப்பை உதிர்த்து.


'சரியான லூசு' வாய்விட்டே புலம்பிவிட்டாள்.

இவர்கள் சீண்டலிலும் வேலையிலும் அன்றைய நாள் கழிந்தது.


விடிந்து காலை பத்து மணி ஆகியும் தோழிகள் இருவரும் எழுந்த பாடில்லை.
வாயில் கதவு தட்டும் சத்தம் வரவும், சைலுவை தட்டி விட்டவள்.

"ஏய் போய் கதவை திற எனக்கு தூக்கம் வருது."

"ஏன் நீ போய் திற... நானும் தூங்கோணும்" என்றாள் அவள்.

"மாடு... ஞாயிறில தான் நிம்மதியா படுக்கிறது... எப்பவும் படுக்கிற உனக்கு என்னடி கும்பகர்னி!
வர்றதுகளுக்கும் அறிவில்லை.... ஒரு நாளாவது நிம்மதியா விடுதுகளா?" பொரிந்தவாே கதவை திறந்தாள்.

"கதவை திறக்க இவ்வளவு நேரமா?" என்றவாறே உள்ளே வந்தவள்,

"இன்னுமா எழும்பேர".

"பாத்தா எப்பிடி தெரியுது? மனிஷியாடி நீ? ஒரு நாளைக்காவது நிம்மதியா விடுறியா? காலங்காத்தால உயிரை எடுக்கிற."

"என்ன மேடம் சொல்லுறீங்கள். இது காலங்காத்தலையா? அவனவன் மதிய சாப்பாட்டுக்கு எந்த கடையில சாப்பிடலாம் என்டு யோசிக்கிறான்... இதுகளுக்கே காலங்காத்தாலையாம்....'

சைலு படுத்திருந்த தலகணியை உருவி, அதாலேயே சைலுவை அடித்து எழுப்பினாள்.


"விடுடி கொலை காறி!" என்று அவள் அடித்த தலைகணியை பிடித்தவள்.

"ஏன்டி....! இந்த பரதேசி தான் வருதென்டு தெரிஞ்சிருந்த கதவை பூட்டிட்டு வந்திருக்கலாமேடி. இப்ப பாரு பைத்தியம் முத்தினா மாதாரி அடிக்கிறா..." என்றாள் துஷாவை குற்றம் சாட்டும் பாணியில்.

"எனக்கு பைத்தியம் தான்" என்று அவள் பிடித்த தலகணியை இழுத்து இன்னும் ரெண்டு சாத்து சாத்தினாள்.

நடுவில் போனால் சேதாரம் தனக்குத் தான் என்பதை உணர்ந்த துஷா, காலை கடங்களை முடிப்பதற்காக உள்ளே சென்று வந்தவள், அறை இருந்த நிலையை கண்டே அதிர்ந்தே விட்டாள்.