• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

18.நவிலனின் கோதையானாள்

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem

18. நவிலனின் கோதையானாள்​




நான்கு நாட்கள் கடந்து இருந்தது. நவிலன் இங்கிருந்தே ஆபிஸ் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தான் .

பனி, “இப்படி ஆபிஸ் போகாம எப்படி வீட்டில் இருந்து எல்லா வேலையும் சரியா நடக்கும்?


நவிலன், “அதான் மலர் இருக்காளே அவ பார்த்துப்பா”

ஓஓஓ அப்ப சீனியர் கிட்ட குடுத்துட்டு வந்து இருக்கீங்களா..

ஆமா அம்மு நான் வெளி வேலையா போகும் போது எல்லாம் மலர் தான் பார்த்துப்பா அதான் ரிலாக்ஸாக வேலை பார்க்கிறேன் என்றவன் எதாவது விஷயமா டா

இல்ல நவிலா வீட்டையே சுத்தி சுத்தி வரது ஒரு மாதிரி இருக்கு..

அதுக்கு தான் ஹனிமூன் போகலாம் ன்னு சொல்லுறேன் நீ கேட்டா தானே என்று நவிலன் சிரிக்க..,

அவனை விழி அகல பார்த்தவள் பட்டென ஒரு முறைப்பை தந்து விட்டு அங்கிருந்து நகர..

நவிலன், ‘என்ன பனி பதிலே சொல்லாம போற?


அதுக்கு பதில் இன்னும் தயார் ஆகலன்னு அர்த்தம் என்றவள் இறங்கி சென்று விட..,

நவிலன், “ மலர்..

சொல்லுங்க அண்ணா..

நான் இன்னும் இரண்டு நாள்ல ஆபிஸ் வந்துடுவேன் சைன் பண்ண வேண்டிய பைல்ஸ் மட்டும் தயாரா இருக்கட்டும் மத்தது எல்லாம் நீ பார்த்துக்க…

சரிங்க அண்ணா..அண்ணா என்று சற்றே தயங்கி நிறுத்த…

என்ன மலர்…

நேத்து சாயந்திரம் போல அக்கா வந்து இருந்தாங்க…

கவியா?


ஆமா அண்ணா..

ஏன் நேத்தே சொல்லல

அண்ணா அக்கா கிளம்பவே நைட் எட்டு ஆகிட்டாம் என்னைய ஐஞ்சு மணிக்கே கிளம்புன்னு சொல்லிட்டாங்க..


ஓஓஓ…

அண்ணா….என்று தயங்கியவளை எதுவா இருந்தாலும் சொல்லு மலர் என்றான் நவிலன்..

அக்கா கம்பெனி அக்கவுண்ட்ஸ் அப்புறம் முக்கியமான ஃபைல் எல்லாத்தையும் உங்க ரூம்ல செக் பண்ணதா சொன்னாங்க அப்புறம் ஏதோ பேப்பர்கள் எல்லாம் எடுத்துட்டு போனதா சொன்னாங்க நீங்க லாக்கர் கீ இங்க வச்சுட்டு போறீங்களா என்று மலர் கேட்க..


சிரித்தான் வீட்டில் இருந்தது டா நீ எதுவும் வொர்ரி பண்ணிக்க வேண்டாம்..

இல்லன்னா இன்னைக்கு காலைல எனக்கு மெஸேஜ் பண்ணாங்க இனி நீ இங்க வேலைக்கு வர வேண்டாம் ன்னு அதான் நான் இன்னைக்கு இன்னும் ஆபிஸ் கிளம்பல அங்க பெரிசா எதுவும் இன்னைக்கு சாம்பிள் அனுப்புற வேலையும் இல்ல அதான் என்றவளை நினைத்து பெருமூச்சுடன் சாரி மலர் என்றான் நவிலன்..

அச்சோ என்ன இது நான் தகவல் தந்தேன் அவ்வளவு தான்..

இல்லடா அக்கா பனியை பார்த்ததில் இருந்து இப்படி தான் பண்ணுறாங்க..

மலர், “இது எதிர்ப்பார்த்து தானே இருப்பீங்க அப்புறம் என்ன”?


அது இல்ல ப்ச் உன்னையும் அக்கா அங்க வந்து என்ன நினைச்சான்னு புரியல

மலர், “ அக்கா தானே ண்ணா விடுங்க ஒன்னும் இல்ல பெரிசா எதையும் யோசிக்க வேண்டாம் நீங்க என்று அவள் போனை வைக்க.. கண்மூடி சாய்ந்து அமர்ந்து விட்டான் தப்புபண்ணிட்ட நவிலா, அக்கா இப்படி நடந்துட்டே இருந்தா பிரச்சினை பெரிசாகிட்டே போகும் இதுக்கு எதாவது செஞ்சே ஆகனும் என்று நினைத்து கொண்டு இருக்க..


பனி, “ ஏங்க… ஏங்க…

ம்ம் என்ன அம்மு…

வசந்த் அண்ணா வந்து இருக்காங்க..

புருவ முடிச்சுடன் வரேன் அம்மு…

ம்ம் ம்ம் என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க அண்ணா வந்து இருக்காங்க ன்னு சொல்லுறேன் இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..

ஒரு அர்த்தமும் இல்ல வேலை இருக்கும் போல என்ன பண்ணலாம் ன்னு யோசனை…

இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வேலை எல்லாம் மலர் சீனியரை பார்க்க சொன்னதா சொன்னீங்க என்றாள் பனி

சொன்னேன் தான் ஆனா புதுசா ஒரு ட்ரக் ட்ரையல் கேட்டு மெயில் வந்து இருக்கு..

ஓஓஓ…

என்ன பண்ணனும்

எப்பவும் போல தான் அதோட வேலியூஸ் எல்லாம் செக் பண்ணனும் என்றான் நவிலன்

நான் ஹெல்ப் பண்ணவா..

எழுந்தவன் பனியை இமைக்காமல் பார்க்க..

என்னப்பா இப்படி பார்க்குறீங்க…

பின்ன பார்க்காம நீங்க தான் ஸ்கூல் பக்கம் இருக்கீங்களே உங்களை எப்படி‌..

அதனால் என்ன என்னால வேலை செய்ய முடியாது ன்னு நினைக்குறீங்களா..

ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லை நீங்க யாரு திறமை க்கு தலைமை இல்ல உங்களை போய் அப்படி நினைப்பேனா..

போதும் என்னைய கலாட்டா பண்ணது வாங்க அண்ணா வந்து ரொம்ப நேரம் ஆச்சு…


ம்ம் என்றவன் பல யோசனைகளுடன் வெளியே வந்தவன் வாங்க மாமா என்ன இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கீங்க அப்ப அங்க எப்ப கிளம்புனீங்க என்று சாதாரணமாக பேச…

வசந்த், “ பனிம்மா எனக்கு ஒரு இஞ்சி தட்டி டீ வேணும் தலைவலியா இருக்கு அக்கா தப்பியோட போட்டுட்டு வாடா…

பனி , “ சரிங்க அண்ணா என்றவள் நவிலனை பார்த்து கொண்டே உள்ளே செல்ல..

என்னாச்சு மாமா..

இன்னும் என்ன ஆகனும் நவிலா என்னால் சமாளிக்க முடியல என் கம்பெனியை கை மாத்த சொல்லுறா அதோட என்றப் கவிதா சொல்லியதை சொல்ல அதிர்ந்து தான் போய் இருந்தான் நவிலன்..

என்ன மாமா இது நீங்க என்ன சொன்னீங்க ..

நான் என்ன சொல்லனும் ன்னு சொல்லு

ஏன் மாமா இப்படி கேட்கிறீங்க நீங்க உழைச்சு உருவாக்கின கம்பெனி அதுக்கு முழு உரிமையும் முடிவும் நீங்க தான் எடுக்கனும்..

என்னனு எடுக்க சொல்லுற நேத்து நைட் என்ன பண்ணா தெரியுமா என்றவன் சொன்னதை பார்த்து மொத்தமாய் உடைந்து தான் போய் இருந்தனர் இரு ஆண்களும்..

தளர்ந்து சாய்ந்து அமர்ந்த வசந்த் இப்ப நான் என்ன பண்ணுவேன் நவிலா எங்கேயாவது போய்டலாம் ன்னு இருக்கு …


நவிலன், “என்ன மாமா இதுக்கெல்லாமா தளர்ந்து போறது”… ?


வசந்த், “நான் இன்னும் முடிக்கலை இதைவிட ஹைலைட் ஒன்னு இருக்கே”

என்ன மாமா என்றான் நவிலன்


இது தான் கடைசி ஆயுதம் என்று சொன்னதும் அதிர்ந்து போனவன் என்ன மாமா சொல்லுறீங்க என்று கூறலாம் கேட்க..

என்னைய என்ன பண்ண சொல்லுற அதான் பிடிச்சுப் விடியாததுமா கிளம்பி வந்துட்டேன்.என்ன நினைக்குறா எதுக்கு இந்த பாடுன்னு தெரியல முதல்ல மஞ்சுவை டார்கெட் பண்ணா சரி இது சாதாரணமா பொண்ணுங்க குடும்பத்தில் நினைக்கிறது ன்னு நினைச்சேன் ஆனா ஒவ்வொரு விஷயமும் அவ பண்ணும் போது எனக்கு எதுக்கு இந்த வாழ்க்கை ன்னு இருக்கு நவிலா., அவளை இதுக்கு மேல எப்படி திருப்திபடுத்துறதுன்னு புரியல எல்லாமே அவ விருப்பத்திற்கு தான் செஞ்சேன் ஆனா அது தப்புன்னு இப்ப தான் புரியுது நானும் சராசரி புருஷனா இருந்து இருக்கனும். பெண்களை பொருளா பார்க்கக்கூடாது அவளும் நம்மை போல் தானே ன்னு நான் நினைச்சது தப்பா போய்டுச்சு..


மாமா…

ப்ச் இப்ப இதை சரி பண்ண முடியாம அதை விட்டு விலக முடியாம தவிக்கிறேன் நவிலா பையன் தோளுக்கு மேல் வளர்ந்து நிக்குறான். இப்ப இந்த மாதிரி வீட்டில் நடக்குதுன்னு தெரிஞ்சா அவன் எதிர்காலம் நம்மளை பார்த்து தானே குழந்தைக்கு வாழ்க்கையை கத்துக்கிறாங்க நாமளே நல்ல உதாரணமா இல்லமா போய்ட்டா அது தான் எனக்கு கலக்கமா இருக்கு என்று வசந்த் புலம்ப

அண்ணா இந்தாங்க டீ என்று வந்தாள் பூம் பனி

வசந்த், “குடு டா என்றவன் சூட்டை கருத்தில் கொள்ளாமல் மடமடவென அருந்த …அண்ணா பொறுமை சுடசுட இருக்கு..அதை விட கொதிச்சிட்டு இருக்கு டா மனசு என்று வசந்த் பனியை பார்க்க..

அண்ணா என்ன இது எதுக்கு இவ்வளவு …என்று முடிக்காமல் வசந்த்தை பார்க்க..

முடியல பனிம்மா பொழுது விடிஞ்சு பொழுது போனா என்ன இன்னைக்கு நடக்குமோ ன்னு பயந்துட்டே இருக்க வேண்டியதா இருக்கு?

எதுக்கு பயம்? எதை கண்டு பயம்? அதான் இத்தனை பேர் இருக்கோமே எதுவா இருந்தாலும் சமாளிக்கலாம் விடுங்க…


அப்படி சொல்லு அம்மு


நல்லா சொல்லுடா அக்காவும் தம்பியும் சேர்ந்துட்டு என் உசுரை வாங்குறீங்க…

ஹாஹாஹா என்று சிரித்த பனி…அண்ணா விடுங்க..

வசந்த், “என்ன சிரிப்பு உன் புருஷனை எனக்கு தீர்வு சொல்ல சொல்லு…?

பனி, “நான் சொல்லவா அண்ணா?

சொல்லு பனி பிரச்சினை சமூகமா முடிஞ்சா சரி..

இது பிரச்சினை இல்ல அண்ணா அது விதமான உரிமை…

என்ன உரிமை பனி? என்ன செய்யல, யாரு அவளை கண்டுக்கல, இல்ல அவளை யார் தான் ஒதுக்கினாங்க..

அண்ணா…

பின்ன என்னம்மா எவ்வளவு வார்த்தை தெரியுமா இந்த பத்தொன்பது வருஷ வாழ்க்கையில் நான் ரொம்ப அதை எப்படி சொல்ல என்னால் முடியல பனி இதுக்கு மேல் வாழனுமான்னு நிறைய யோசிச்சு இருக்கேன் ஆனா என் பையனுக்காகவும் என் அம்மா தங்கைக்காக எல்லாத்தையும் கடந்து வரனும் ன்னு மனசை தேத்திட்டு இருக்கேன்.


பனி, “ அண்ணா அண்ணியை தப்பா நினைக்காதீங்க அவங்க நல்லவங்க..

பனி என்று வசந்த் அதிர்ச்சியாய் கேட்க ..

என்ன அண்ணா நான் சொல்லுறது உண்மை தான் அவங்க நல்லவங்க தான் உலகத்தில் இருக்க எல்லாரும் நல்லவங்க தான் அவங்க சந்திக்கிற மனுஷங்களும் சூழ்நிலையும் தான் அவங்களை தவறா காமிக்கும் நீங்க பொறுமையா அவங்க கிட்ட பேசி பாருங்க அவங்களோட நல்ல விஷயங்கள் தான் உங்களுக்கு தெரியும்.


எப்படி இப்படி ஒரு ஏமாளியா இருக்க பனி என்றான் வசந்த்..

ஏன் அண்ணா இப்படி சொல்லுறீங்க?

பின்ன அவ குழி பறிக்க நினைக்கிறேன் உன் வாழ்க்கையில் தான் அதுவும் அது தன் தப்பியோட வாழ்க்கை ன்னு கொஞ்சம் கூட அவ உணரல…

அண்ணா அண்ணி அவங்க தேவைக்கு ஏதோ செய்யுறாங்க நாம நம்ம வாழ்க்கையில தெளிவா இருந்தா எவ்வளவு பெரிய குழியா இருந்தாலும் தாண்டிடலாம்..

டேய் நவிலா நல்ல பொண்ணு டா இப்படியே சந்தோஷமா இருங்க அப்படியே எனக்கும் சந்தோஷத்தை வாங்கி தாங்க..

அட நீங்க வேற மாமா எல்லாம் பேச்சு மட்டும் தான் செயல்ல ஒன்னுமே இல்ல இங்க என்றவன் பனியை ஓரப் பார்வை பார்க்க..

எதுவுமே நடவாது போல் பனி அமைதியாக நின்றாள்..

வசந்த், “ இந்த பஞ்சாயத்தை அப்புறம் பார்க்கலாம் இப்ப உங்க அக்கா க்கு என்ன பதில்‌.


நீங்க வாங்க மாமா அந்த கம்பெனியை நீங்க வித்துட்டேன்னு ஷேர் எவ்வளவு ன்னு சொல்லுங்க நான் தரேன் அதை அவ கிட்ட குடுங்க அப்புறம் பேசிக்கலாம்..

நவிலா வேணாம் டா ஏற்கனவே நிறைய இழந்துட்ட..

பார்த்துக்கலாம் மாமா நார் சொல்லுவதை செய்யுங்க..

பனி, “ அப்படியே நான் சொன்ன பேப்பரை ரெடி பண்ணுங்க நவிலன்..

சொல்லிட்டேன் அம்மு…


வசந்த், “என்னடா பேப்பர் ?

ஸ்கூல் பத்தினது மாமா ..

வசந்த், “என்ன விஷயம்?


அண்ணா இனி அண்ணி ஸ்கூல் பார்த்துக்க போறாங்க என்ற நொடி என்னது என்று அலறி எழுந்து விட்டான் வசந்த்……




தொடரும்











 

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem
அருமை சகி ❤️❤️❤️❤️❤️❤️❤️நவிலன் அக்கா ஒருத்தரையும் நிம்மதியா இருக்க விடப்போறதில்லை 🙄🙄🙄🙄🙄🙄
மிக்க மகிழ்ச்சி சகோதரி