19. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை
பாலதர்ஷா.
ஜாலங்க காட்டும் மாய உலகம். இங்கு மர்மங்களுக்கா பஞ்சங்கள்..?
வாழ்க்கை என்பதே தடத்திற்கு தடம் திகில் நிறைந்த பயணம் தானே! எது எப்போது நடக்கும் என்பதை யாராலும் அறிந்திட முடிவதில்லை.
அப்படி அறிந்து விட்டால் அவர்களால் நிம்மதியாக இருந்திட முடியுமா?
சிவராமன் செல்லும் வேகத்தில், அந்த நொடி கொஞ்சம் ஆசுவாமானவளால் அறையின் உள்ளே வந்ததும், ஏனோ அதே மனநிலையுடன் இருக்க முடியவில்லை.
குட்டி போட்ட பூனை போல், பெட்டுக்கும் கதவுக்கும் இடையே நூறு தடவைக்கு மேல் நடந்திருப்பாள். ஆனால் ஏனோ அதை அவள் தான் உணரும் மனநிலையில் இல்லை கால்களும் வலி காணவில்லை.
பற்கள் நொருங்கும் அளவுக்கு உதட்டை நெருக்கிக்கொண்டு மெத்தையில் தொம்மென அமர்ந்தவள்,
"இல்லை இல்லை இல்லை....." என பெரிதாக கத்தி, பொத்தியிருந்த கையினால் மெத்தையில் ஓங்கி ஓர் குத்து விட்டாள்.
"எனக்கு நீ வேணும் வர்ஷன்.... எனக்கு நீ வேணும்...
உன்னை நான் கட்டிக்கிட்டா தான், நான் நினைச்சதை எல்லாம் என்னால சாதிக்க முடியும்.
இல்லை.... இதுக்கு மேல பெறுமையா இருந்தா, அந்த பிச்சைக்கார நாய்க்கும் நான் இழக்காரமா போயிடுவேன். என்கிட்ட இல்லாதது என்னடா இருக்கு அந்த நாய்ங்க கிட்ட...? ஆளாளுக்கு என்னை உதறி தள்ளிட்டு போறிங்க. அவ்வளவு கேவலமாவா போனேன்.
முடியாது.... இதுக்குமேல என் தோள்வியை என்னால ஏத்துக்க முடியாது. என் தோள்வியை ஏத்துக்கிட்டேன்னா... என்னோட எந்த எண்ணமும் நிறைவேறாம போயிடும்.
போதும்... எல்லாத்தையும் அப்பாவே பார்த்துப்பார்ன்னு அமைதியா இருந்த வரை போதும். இப்பிடியே அமைதியா இருந்தேன்னா அப்புறம் யாருமே என்னை மதிக்க மாட்டாங்க. அதுவும் அந்த கவிநிலா.....?" என்றவள் கண்களோ கொதி நிலையின் உச்சமாய், கண்கள் சிவந்து, மூக்கு விடைத்து சூடான காற்றினை வெளியேற்றியது.
அவள் ஒன்றும் வர்ஷன்மேல் மோகம் கொண்டு அவன் வேண்டுமென்று அடம் பிடிக்கவில்லை.
எல்லாம் வர்ஷனின் தங்கையான கவிநிலாவை, தன் எண்ணப்படி ஆட்டி வைப்பதற்கான முதல் படி தான் இந்த திருமணம்.
வர்ஷனின் மனைவி என்ற அந்தஸ்தோடு அந்த வீட்டுக்குள் நுழைந்தால் மாத்திரமே, அவளால் தன் திட்டத்தை நிறைவேற்றிட முடியும்.
ஆம்... மாயா சாதராணமானவள் கிடையாது. எதை நினைக்கிறாளோ அதை அடைந்து விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். அப்படி நினைத்தது கிடைக்கவில்லை என்றால், அது யாருக்குமே கிடைத்தும் விடக்கூடாது என்று நினைப்பவள்.
அப்படித்தான் பாரினில் இருந்து வந்த கையோடு, தன் சிறு வயது தோழனான நிக்கிலை காண அவனை தேடி அவன் வீட்டுக்கு சென்றாள்.
காண என்பதை விட, தன் காதலை கூற என்பது தான் சரியாக இருக்கும்.
ஆம் அவளது குணத்திற்கும் திமிருக்கும் அவளுடன் யாரும் நட்பு பாராட்டிட மாட்டார்கள். அவளைப்போல் சம அந்தஸ்தில் இருக்கும் பலர் அவளுடன் நட்பு கொள்ள வருவார்கள் தான், ஆனால் இவளது எடுத்தெறிந்த பேச்சும், தான் என்ற அகங்கார குணமுமே அவர்கள் நட்பை தக்க வைக்க விடவில்லை.
இப்படியானவளை சகித்து, நட்பு பாராட்டித்தான் ஆகவேண்டும் என்ற வேண்டுதல் அவர்களுக்கு இல்லையே!
ஆனால் இதெற்கெல்லாம் விதிவிலக்காக இருந்தவன் தான் நிக்கில்.
எப்போதும் தனிமையே துணையென இருப்பவளை பார்க்கும் போது பாவமாகிப்போக, தானாகச்சென்று அவளுடன் பேச ஆரம்பித்தான்.
அவனோடு மட்டும் அவள் நல்ல முறையில் நடந்து கொள்ளவில்லை. அந்த வயதிலேயே அவனையும் இவள் படாத பாடு தான் படுத்துவாள்.
முதலில் ஆத்திரம் வந்து விலகிப்போபவன், பின் அவளது தனிமையும், வாடிய முகத்தையும் கண்டு மீட்டும் பேச ஆரம்பிப்பான்.
நாளடைவில் அவள் குணம் பழகிப்போக, அவனும் அவளது சில் வண்டு குடைச்சல்களை பெரிதாக எடுப்பதில்லை. பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பதை விட, இது இப்படித்தான் என்று அவள் போக்கிலேயே விட்டுவிட்டான். நாளுக்கு நாள் இவர்கள் நட்பு வலுப்பெற்றே வந்தது.
பள்ளி முடிந்து கல்லூரி என்று அவர்கள் கற்கும் கல்லூரி மாறினாலும், தொலைபேசி வழியே தொல்லைகள் மட்டும் குறையவில்லை.
காலையில் சுவாரசியமாக ஆரம்பிக்கும் பேச்சானது, தூங்குகையில் சண்டையுடனே முடிவடையும். மறு நாள் எல்லாவற்றையும் மறந்து நிக்கில் தான் அவளை அழைக்க வேண்டும். இல்லை என்றால் எத்தனை தொலைவில் இருந்தாலும், நேரே வந்து அவன் சட்டையை பிடிப்பாள் எத்தனை பேர் கூடியிருப்பினும்.
அதற்கு பயந்தே எழுந்ததும் அவளுக்கு காலை வணக்கம் வைக்காமல் அவன் காலை விடிந்ததும் இல்லை.
இப்படி இருக்கையில் தான் கல்லூரி படிப்பு முடிந்து, தொழில் படிப்புக்காக அவளது தந்தை அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு சென்றும் நாள் கணக்கில் அவனுடன் பேசுவாள். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நன்றாக பேசிக் கொண்டிருந்தவனிடமிருந்து சிறிது சிறிதாக அழைப்பு வருவது குறைந்து போனது.
அவன் அழைத்து அவள் பேசிய காலம் போய், அவளாக அழைத்தால் தான் பேசுவான் என்றானது.
எத்தனையோ முறை அதற்கான காரணம் கேட்டு சண்டையிட்டு விட்டாள். அதற்கு அவன் வேலை அது இது என்று நேரத்திற்கு ஏற்ற காரணம் கூறு நழுவி விடுவான்.
ஆனால் அவன் காரணங்களை தான் அவள் மனம் ஏற்க மறுத்தது.
'எப்பிடியும் என்கிட்ட வந்து தானே ஆகணும், அப்போ வச்சுக்கிறேன்.' என்று அந்த கூல் பாரில் இருந்து தனியே புலம்பியவள் மனம் ஏனோ, அவன் அழைப்பையே எதிர் பார்த்து நொடிக்கு ஒரு முறை என தொலைபேசியையே ஆராய்ந்தது.
அதற்கு அவன் அழைக்க வேண்டுமே...! பாவம் அவன் அங்கு என்ன பிஸியோ..!
திடீரென எங்கிருந்தோ ஓர் வித்தியாசமான சத்தம் வர, பக்க வாட்டில் திரும்பிப் பார்த்தாள்.
சுவற்றுடன் இருந்த கேபினிலிருந்த ஒரு ஜோடியர், தங்கள் காதலை பரிமாறிக் கொள்ளும் விதமாய், யார் உதட்டை யார் வாயுக்குள் முதலில் சமாதி செய்வது என்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது போல,
நிதானமற்ற அவர்கள் முத்தத்தில் வந்த சத்தம் தான் அது.
இதெல்லாம் அவள் கல்வி கற்க சென்ற நாட்டில் சாதாரணமானது தான். இதே போல் பலவற்றை சாதாரணமாக கடந்து வந்தவளுக்கு, இன்று ஏனோ அவர்களில் நிலைகுத்த விட்ட விழிகளை எடுக்க முடியவில்லை.
அவர்கள் இடத்தில் தான்னையும் நிக்கிலையும் நினைத்து பார்த்தவள் அதிர்ந்தே போனாள்.
'என்னது நான் அவனை விரும்புறேனா...?' சில நிமிடங்கள் நிதானமாக சிந்தித்தவளுக்கு, அது தவறு போல் தோன்றவில்லை.
தன்னை புரிந்து கொண்டவன் கணவனாக வருவதில் தவறில்லையே!
முடிவே செய்து விட்டாள். திருமணம் ஒன்று நிகழ்ந்தால் அது நிக்கிலுடன் தான் என்று.
அதை முதலில் அவனிடம் கூற வேண்டும்.
'என் காதலை கூறினால் ஏற்பானா...? ஏற்காமல் விட்டு விடுவானா..? விட்டால் தான் விடுவேனா...?
ச்சே ச்சே... அப்படி ஒன்றும் நேராது.. இந்த அழகியை அவனுக்கு பிடிக்கலன்னு சொல்லுவானா...? சொல்லப்போனா அவன் மனசிலயும் இந்த எண்ணம் இருக்கும்... எப்படா என்கிட்ட காதலை சொல்லுறதுன்னு ஏங்கிட்டு இருப்பான். நானே காதலை சொன்னா.... வேண்டாம்ன்னு சொல்லுவானா...?' தனக்குள் எண்ணிக்காெண்டவள், தன் காதலை சொல்வதற்கான நேரத்தை எதிர் பார்த்து காத்திருந்தாள்.
அதற்கு அவன் இடம் தர வேண்டுமே! அவன் தான் அவளுடனான உரையாடலை, நாளுக்கொன்று என குறைத்து வாரத்துக்கொன்று என மாற்றிக்கொண்டு விட்டானே!
அந்த நேரத்திலும் சாதாரண நல விசாரிப்பு முடிந்த கையோடு, ரொம்ப வேலை மாயா! நான் வைக்கிறேன்... அது இது என்று சப்பை காரணம் காட்டி அழைப்பினை துண்டிக்கும் போதெல்லாம், தன் காதலை கூற வருபவளுக்கு ஏமாற்றமாக இருக்கும்... கூடவே இவனுக்காக எல்லாம் ஏங்க வேண்டி இருக்கிறது என்ற ஆனவமும் வந்து ஒட்டிக்கொள்ளும்,
'இவனை நான் விரும்பிறதே அதிகம்... இதில என்னை அவைட் பண்ணுவானா..? அவனா தன்னோட காதலை சொல்லுற வரைக்கும், நானா என் காதலை சொல்ல மாட்டேன்.' என தனக்குள் முடிவெடுத்து கொண்டவளுக்கு, நாளுக்கு நாள் அவனை காணும் ஏக்கம் கூடிப்போயிற்று.
அதனால் தான் படிப்பு முடிந்த கையோடு அவனுக்கு கூறாமலே ஊருக்கு வந்துவள், அவனுக்கு இன்ப அதிர்ச்சி தர ஓடியே வந்து விட்டாள் நேராக அவன் வீட்டிற்கு.
ஹாேலிங்க் பெல்லினை அழுத்திவிட்டு, பொறுமை காக்க முடியாதவளாய், உள்ளே நுழைந்தவள், அங்கு கண்ட காட்சியில் உறைந்தே போனாள்.
ஆம் அவள் கண்டது இது தான்.
நிக்கலை பெற்றவர்கள் ஓர் சோபாபில் அமர்ந்திருக்க, எதிரே இருந்த ஒற்றை சோபாபில் அமர்ந்திருந்த பெண்மேல் தன் முழு பாரத்தையும் பொறுப்பதுபோல், சோபாபின் கை பிடியில் சாய்ந்து அமர்ந்திருந்த நிக்கலின் வலது கையோ அவளது கழுத்தை சுற்றி மாலையாகி இருந்தது.
"இந்த நேரம் யாருன்னு தெரியலையே...! இருங்க யாருன்னு பார்க்கிறேன்." என அவசரமாக எழுந்து திரும்பிய நிக்கலின் அன்னை வாசலில் நின்றவளை கண்டதும்,
"அடடேய்... நீ எப்பம்மா நாட்டுக்கு திரும்பினா....?" என ஆச்சரியமாய் கேட்டவர் கேள்வியில், தன் உறை நிலையினை கழைந்து, தன்னை இயல்பு போல் காட்டிக்காெள்ள போலியாய் புன்னகைத்தவள் பார்வையை அவர்கள் இருவரிடமிருந்து மீட்காமலே.
"இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஆன்ட்டி!" என்றாள் உணர்சி துடைத்தெடுக்கப்பட்ட குரலில்.
அதே நேரம் அன்னையின் உரிமையுடனான பேச்சில் வாசலை பார்த்தவனும்,
"ஏய் மாயா....! வா வா.... என்ன சொல்லாம கொள்ளாம ஊர்ல இருந்து கிளம்பி வந்திட்ட...!" என அவனும் ஆர்ப்பரித்து வினவ.
அவனுக்கு பதில் சொல்ல பிடிக்காதவள் பார்வையோ, அங்கு அமர்ந்திருந்தவளையே வெறித்தது. அவள் பார்வையின் போக்குணர்ந்த நிக்கல்,
"இவ பேரு கவிநிலா...." என்றான் வெட்கத்தில் நெளிந்தவாறு.
ஏனோ அது அவளுக்கு ரசிக்கவில்லை. அவனை துளையிடும் பார்வையால் மேய்ந்தவளின் விழிகளில் இருந்தது என்னமோ, கவிநிலான்னா அவ என்ன ரஸ்யா ஜனாதிபதியா? நான் தெரிந்து கொள்வதற்கு.
அதை அவன் புரிந்து கொண்டானோ என்னமோ!
"நானும் கவியும் ஒருதருக்கொருத்தர் விரும்பிட்டிருக்கோம் மாயா... நேத்து தான் இவங்களுக்கு சொன்னேன்.
நான் விரும்புறேன்னதும் உடனேயே கவியை கூட்டிட்டு வா பார்க்கணும் எண்டாங்க. அதான் கூட்டிட்டு வந்தேன். அவங்களுக்கும் கவியை பிடிச்சு போச்சு." என்றான் சந்தோஷமாக.
இருக்காத பின்னே!
அவர்கள் பயந்தது என்னமோ நிக்கலதும், மாயாவினதும் நட்பை பார்த்து, எங்கு என்றோ ஒரு நாள் இவள் தான் மனைவி என கூறிவிடுவானோ என்று தான்.
அவர்களுக்கு தெரியும்... மாயா ஒரு திமிர் பிடித்தவள், யாரையும் மதிக்க மாட்டாள். தனக்கேற்றது போல் மற்றவர்களை வளைப்பாளே தவிர, சற்றும் வளைந்து போகாதவள் என்று. நிக்கலது இத்தனை வருட நட்பினால் பாதிக்கப்பட்டவர்களுள் அவர்களும் உள்ளடக்கம்.
நிக்கலுடன் அவள் சண்டையிட்டால், அந்த கோபத்தை பெற்றவர்களிடம் தானே அவனாலும் காட்ட முடியும். இதனாலேயே அவனை அவளுடனான நட்பினை துண்டிக்கும் படி எத்தனையோ தடவை கூறியிருந்தனர். ஆனால் நிக்கல் தான் தன்னை விட்டால் அவளுக்கு யாருமில்லை என மறுத்து விடுவான்.
நிக்கல் கூறியதும் "ஓ..." என்றவளுக்கு, நிக்கல் கூறக்கூற வெட்கத்தில் தலை கவிழ்ந்திருந்தவளை பார்க்க ஆத்திரமாக வந்தது.
"நான் உன்கூட பேசணும் நிக்கல்.. கொஞ்சம் தனியா வரியா...?" என்றாள் வார்த்தயைில் சற்று அழுத்தத்தை கூட்டி.
"கவி நீ அம்மாகூட பேசிட்டிரு.. இதோ வந்திடுறேன்." என அவள் பின்னால் சென்றவளை தோட்டத்துப்பக்கம் அழைத்து சென்றவள், அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து,
"இதெல்லாம் எத்தனை நாள் நடக்குது நிக்கல்? ஏன் என்கிட்ட எதுவும் சொல்லல...? இதனால தான் என்னை இத்தனை நாள் அவைட் பண்ணியா?" என்றாள் அழுத்தமாக.
தன்னிடம் மறைத்ததற்குத்தான் இத்தனை கோபம் கொள்கிறாள் என நினைத்தவனோ,
"அது மாயா....? நீ நேர வந்ததும் உனக்கு இன்ப அதிர்சி தருவோம்ன்னு தான் சொல்லல.." என பின்னந்தலையை சொறிந்தவன் மேல் ஆத்திரம் மேலிட,
"சட் ஆஃப் நிக்கல்..... உன் மனசில நீ என்ன நினைச்சிட்டிருக்க...? அவளை உன் பேரன்ஸ் கிட்ட இந்த மாதிரி அறிமுகப்படுத்தி, அவங்க மனசில அவதான் இந்த வீட்டு மருமகன்னு பதிஞ்சிட்டா, நாளைக்கு எப்பிடி என்னை அவங்க ஏத்துப்பாங்க" என்றாள் அதிகாரமாக.
அதுவரை இயல்பாக இருந்த நிக்கல், அவளது இறுதி வார்த்தையில் புரியாத மொழியினை கேட்பவனாட்டம், இமைகள் முடிச்சிட அவளை நோக்கியவன்,
"என்ன உளர்ற...? இத்தனை நாள் ஏத்துக்கிட்டவங்களுக்கு நாளைக்கு ஏத்துக்க என்ன வந்திச்சு...?" அவனும் புரியாமல் தான் வினவினான்.
"ஓ.... அப்பிடியா...? அப்போ என்னை ஏத்துப்பாங்க என்கிற... அப்பிடின்னா வா...! வந்து நான் மாயா இல்லாத நேரத்தில, எனக்கு டைம் பாஸ்க்கு யாருமே கிடைக்கல, அதனால இவளை உங்க மருமகள்ன்னு அறிமுகப்படுத்திட்டேன்.
இப்போ மாயா வந்திட்டா... அவ தான் உங்க மருமகள்ன்னு என் முன்னாடியே சொல்லு.." என்று அவன் கை பிடித்து இழுத்தவள் இழுவைக்கு அசையாது நின்றவன் பார்வையே, அவள் பற்றியிருந்த கையிலேயே நிலைத்திருந்தது.
தன் இழுவைக்கு அசையாது நின்றவனை திரும்பி பார்த்தவள்,
"வாடா..! வந்து சொல்லு.." என அதிகாரப் பேச்சோடு வெறிகொண்டு இழுத்தவள் கையினை, மிக இலகுவாக தன் கையிலிருந்து விடுவித்து, அவள் கண்களை நேராகப்பார்த்தான் நிக்கல்.
"நீ இப்போ என்ன பேசிட்டிருக்கன்னு தெரிஞ்சு தான் பேசுறியா மாயா...? விளையாட்டுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு. உன் விளையாட்ட என் வாழ்க்கையில காமிக்காத..." என்றான் கோபம் வந்தாலும், குரலை உயர்த்தாது எச்சரிப்பதைப் போல்.
அவ்வாறு அவன் சொன்னதும் தான்,
"யார்றா விளையாடிட்டிருக்கா...?" என அவன் நெஞ்சில் கைவத்து தள்ளியவள்,
"நீ.... நீ தான் விளையாடுற... எத்தனை நாள் உன்னை நினைச்சு தூங்காம, சாப்பிடாம தவிச்சிருக்கேன் தெரியுமா உனக்கு...? ஆனா நீ இவளை பார்த்ததும் என்னை விட்டுட்டல்ல...
இப்பல்லாம் என்னை விட அவ தான் பெருசா போனால்ல.. அதனால தானே , சில மாசமா என்னை வேணும்னே அவைட் பண்ணிட்டு போன.." என்று முதலில் ஆதங்கமாய் ஆரம்பித்து, அழுகையில் முடித்தவள் கண்ணீருக்கு, தான் காரணமாய் போனேன் என்ற குற்றவுணர்வில் நெருங்கியவன்,
"மாயா....." என்றான் அவள் கைகளை பற்றி.
அவன் பற்றிய கைகளை தானும் இறுகப்பற்றி கொண்டவளோ,
"உனக்கு அவ வேண்டாம்டா... நான் இல்லாத இடத்தை நிரப்பத்தானே அவளை நீ லவ் பண்ண..
இப்போ தான் நான் வந்துட்டேனே! அவகிட்ட போய் சொல்லிடு.. உன்னால சொல்ல முடியலன்னா, நானே சொல்லிக்கிறேன்." என திரும்பியவள் கையினை அவசரமாக பற்றியவன்,
"மாயா! நீ தப்பா புரிஞ்சுக்கிட்டேன்னு நினைக்கிறேன். நட்பு வேற, காதல் வேற மாயா...!
உன்கிட்ட நான் நடந்துக்கிட்டதுக்கு பேரு நட்பு! காதல் இல்லை. நட்பில உரிமை இருக்கலாம்.... எல்லை மீறல் இருக்காது.
எப்பவாச்சு உன் எல்லையை கடந்து நீயும், என் எல்லைய கடந்து நானும் பழகி இருக்கோமா...? உரிமையா அடிச்சிப்போம் புடிச்சுப்போம். இதில காதல் எங்க இருந்து வந்திச்சு மாயா...?" தன்மையாக தான் அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.
"ஆனா எனக்கு வந்திடிச்சே! உனக்கும் என்மேல வந்திருக்கும்ன்னு தானே இத்தனை நாள் நம்பிட்டு இருந்தேன்." என்றாள் அழுபவளாட்டம்.
"ஆனா வரலையே மாயா..?"
"இதுவரைக்கும் வரலன்னா என்ன...? இப்போ தான், நானே என் காதலை சொல்லிட்டேனே..! இனிமே காதலிச்சுக்கோ...!"
லூசு போல பேசாத மாயா...? காதல் அனுமதி தந்தோ கட்டாயத்தினாலயோ வரது கிடையாது. அதை பீல் பண்ணணும்.
அந்த பீலிங்க் உன்கிட்ட எனக்கு வரல, இனியும் வராது. ஏன்னா நான் இன்னொருத்திய உயிரா நேசிக்கிறேன். அதனால லூசு மாதிரி பேசிட்டிருக்காம, என்னையும் புரிஞ்சுக்கோ" என்றான்.
"ஓ.... அந்த பீலிங்க் இத்தனை வருஷம் பழகின என்கிட்ட வரல... ஆனா புதுசா வந்த சிரிக்கிக்கிட்ட வந்திடிச்சோ..
அப்பிடி என்னடா என்கிட்ட இல்லாத ஒன்னை அவகிட்ட பார்த்துட்ட...? நான் காமிக்காத எதையாவது காமிச்சு மயக்கிட்டாளா என்ன..?" தன்னை யாரோ ஒரு பெண்ணிற்காக தாழ்த்தி விட்டான் என்ற கோபத்தில், உள்ளே உறங்கிக்கொண்டிருந்த மிருகம் வெளியே எட்டிப்பார்த்தது.
"இனாப் மாயா...! இதுக்கு மேல என் கவிய பத்தி தப்பா ஒரு வார்த்தை பேசினேன்னா... நான் மனுஷனா இருக்க மாட்டேன்.
அவளை பத்தி தப்பா பேச உனக்கு என்ன தகுதி இருக்குன்னு அவளை பத்தி பேசுற..?
என்னை தவிர எவனாச்சும் உன்கூட பேசிருப்பானா முதல்ல....? பேசுறது என்ன நெருங்கி இருப்பானா...?
உடம்பு பூர அவ்ளோ திமிரு...!
எல்லாரையும் வாயில வரமாதிரி, வயது வித்தியாசம் இல்லாம எடுத்தெறிஞ்சு பேசுறது.. இல்லன்னா எது கிடைக்குதோ அதை கொண்டு அடிக்கிறது. மத்தவங்களும் உன்னை போல மனுஷங்க தான்னு மதிக்கிறது கிடையாது.
எல்லாரும் உன்கூட நட்பு வைச்சிருக்கவே யோசிக்கிறப்போ, இத்தனை வருஷம், உன் நட்பே வேண்டாம்... அவளை தூரவே வைன்னு என்னை பெத்தவங்க சொல்லுறப்போ, அவங்களை மீறி, என்னை விட்டா உனக்கு யாருமில்லன்னு, உன் காெடுமை எல்லாம் சகிச்சிட்டு போனா...., என் கவியையே கேவலமா பேசுவியா?
ஆமா நான் உன்னை அவைட் பண்ணேன் தான். உன் கூட பேசினா.... என் மனநிலையே கெட்டு போயிடுது.
அப்புறம் என் கவியோட என்னால நல்ல படியா பேச முடியுதில்ல என்கிறதனால தான் உன் கால்ஸ்ஸ அவைட் பண்ணேன். இனிமே உன் கால் மட்டுமில்ல... உன்னையுமே அவைட் பண்ண போறேன்." என்றவனை பார்த்து வஞ்சமாய் உதட்டினுள் சிரித்தள்.
"ஓ... அந்தளவுக்கு ஆகிடிச்சா...? சூப்பர்... என்னை ரொம்பவே புரிஞ்சு வைச்சிருக்க.... அதனால தான் என் லைப் பார்ட்னரா நீ வந்தா நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன்.
பரவாயில்லை... என்னை வேண்டாம்ன்னு சொன்ன நீயும் எனக்கு வேண்டாம் நிக்கில். அதே சமயம் யாருக்காக என்னை வேண்டாம்ன்னு சொன்னியோ, அவ கூட நீ சேர்ந்துடுறியான்னு நானும் பார்க்காறேன்.
அப்பிடி உன்னை சேர நான் விட்டுட்டேன்னா மாயான்ன என் பெயரை மட்டுமில்ல.... என்னையே அழிச்சுக்கிறேன்." என்றவள், வீட்டினுள்ளே போகாது அப்படியே திரும்பி விட்டாள்.
இதை எதையும் அறியாத கவியோ மாயா இல்லாது தனியே வந்தவனை கேள்வியாய் நோக்க,
"ஏதோ பக்கத்தில அவசரமான வேலை இருக்காம்... அதான் என்னையும் பார்த்து பேசிட்டு போகலாம்ன்னு வந்தா..." என சமாளித்தான்.
ஒரு வாரம் எப்படியோ ஓடியிருக்க, நிக்கலை கவியோடு சேர விடக்கூடாது. அதற்கு என்ன வழியென சிந்தித்தவளுக்கு, நிக்கல் குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்த முடியாது என்பது நன்கு புரிந்தது.
அவன் தான் தன் காதலை கூறி அவளையும் அறிமுக படுத்தி விட்டானே!
அப்படி என்றால் இனி கவி குடும்பம் தான் அவள் ஆதாரம். ஆனால் அவர்களை பற்றி அவளுக்கு தெரியாது. அவளது காதல் விவகாரம் அவர்களுக்கு தெரியுமா என்பதும் தெரியாது.
அவசர அவசரமாக அவளது தகவல்களை சேகரித்தவளுக்கு கிடைத்த ஓர் நம்பிக்க, அவள் குடும்பத்துக்கு அவளது காதல் விவகாரமும் தெரியாது என்பது தான்.
அது தெரிவதற்குள் அந்த குடும்பத்துக்குள் நுழைந்து, ஆட்டத்தை கலைக்க வேண்டும். அதற்கு மதுவர்ஷன் தான் ஆதாயமாகிப்போனான்.
மாயாவின் நல்ல காலமோ, வர்ஷனின் கெட்ட காலமோ, இருவரது தந்தையும் தொழில் பார்ட்னர்ஸ் ஆகிப்போனது.
அதை காரணம் காட்டியே திருமணத்திற்கு அவன் தந்தையை உடன் பட வைத்து விட்டனர்.
நடந்தவற்றை நினைத்து சுவற்றினை வெறித்திருந்தவள் உதட்டினுள் மாட்டியிருந்த பற்கள் தான் நொருங்கி மாவகிப்போயிருந்தது.
"போனா போகுது... கவியையும் நிக்கலையும் புரிச்சிட்டா போதும்ன்னு தான் நினைச்சேன்.
ஆனா பப்ளிக்குன்னு கூட இல்லாமா நடு றோட்டில, அந்த மாதிரி... என் கண்ணு முன்னாடியே...!
என்கிட்ட இல்லாதது அவளுங்ககிட்ட அப்பிடி என்னடா இருக்கு..?
கவி நிக்கல் மட்டும் என் எதிரி இல்ல வர்ஷன்..... இனிமே அந்த லிஸ்ல உன்கூட அந்த பிச்சைக்காரியையும் சேர்த்துக்கிட்டேன்.
இந்த மாயா குணத்த நீ பார்த்ததில்லல்ல.... இனி பார்ப்ப.... இதோ இப்பா பார்ப்ப.." என அருகிலிருந்த பூ ஜாரை சுவற்றோடு அடித்துடைத்தவள், செல்போனை எடுத்து, யாரிடமோ தொடர்பு கொண்டு பேசிவிட்டு, அதை வைத்தவள் உதடுகளோ வஞ்சமாய் புன்னகைத்தது.