• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

19.நவிலனின் கோதையானவள்

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem

19. நவிலனின் கோதையானாள்​



காலையே இந்த மனுசன் எங்க போனாரு இவ்வளவு தூரம் சொல்லியும் அவர் பாட்டுக்கு போய் இருக்காருன்னா எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும் என்று புலம்பிய படி பின்பக்கம் வந்தவள், மஞ்சு மஞ்சு என்று கவிதா ஏலமிட…

என்ன அண்ணி…

உங்க அண்ணா எங்க?

என்கிட்டே கேட்டா என்று கேள்வியோடு தெரியலையே என்று நிறுத்த…

என்ன மஞ்சு பேச்சு இவ்வளவு வேகமா வருது..

அச்சோ அண்ணி அண்ணனை தேடவும் பதட்டமாகி டென்ஷன் ஆகிட்டு…

ஓஓஓ என்றவள் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே செல்ல ,அண்ணா எங்கே இருக்க என்று மஞ்சு போனை காதில் வைக்க..

வசந்த், “ஏன் மஞ்சு மா?

சுனாமி வரப்போகுது அதான் கேட்டேன்..

என்ன சொல்லுற..

அட நீ வேறன்னா அண்ணி வந்து உன்னையே காணோம் ன்னு கேட்டுட்டு போறாங்க..


ஓஓஓ நான் வேலை விஷயமா வந்தேன் டா நான் பார்த்துக்கிறேன் விடு…

அப்படியா அண்ணா ஒன்னும் பிரச்சினை இல்லையே?

அதெல்லாம் இல்லடா நீ விசா பிராசஸ் என்னனு பார்த்தியா என்று வசந்த் கேட்க இரண்டு நாள்ல போகனும் அண்ணா…ஓஓஓ சரிடா மஞ்சு நீ பாரு நான் அப்புறம் பேசுறேன் என்று போனை வைக்க போக..,அண்ணா என்று நிறுத்தி இருந்தாள் மஞ்சு..

என்னடா…

நான் கிளம்பும் போது அம்மாவையும் அழைச்சிட்டு போகலாம் ன்னு இருக்கேன்..

என்ன திடீர்னு அது என்னனு நான் நேர்ல பேசுறேன் மஞ்சு ..

அண்ணா என்று மஞ்சு குரல் இறங்க, நான் வரேன் வை மஞ்சு என்று துண்டித்தவன் தலையை பிடித்து கொண்டு அமர..

அண்ணா என்ன இப்படி இருக்கீங்க என்ன சொன்னா மஞ்சு என்று பனி கேட்க..

அங்க உன் அண்ணி தேட ஆரம்பிச்சு அடுத்த பிரச்சினை தொடங்கி இருப்பா என்றவன் எழுந்து கொண்டு சரி நவிலா நான் கிளம்புறேன்.


மாமா..

விடுடா பார்த்துக்கிறேன்..

அண்ணா நாளைல இருந்து அண்ணி ஸ்கூல் போய்ட்டு வருவாங்க நீங்க எதையும் யோசிக்க வேண்டாம் என்று அவள் பங்கிற்கு அவள் சொல்ல..

வசந்த், “ என்னம்மோ சொல்லுற பார்க்கலாம் என்றவன் நவிலா நான் இன்னைக்கு ஆபிஸ் போகல டா என்று அவனை நிமிர்ந்து பார்க்க..

இல்ல மாமா நீங்க ஆபிஸ் தான் போகனும் அப்புறம் டாக்குமெண்ட் ரெடி பண்ணுங்க நான் வக்கீலை வரச் சொல்லுறேன் அப்படியே இன்னைக்கு ஆடிட்டர் வர நாள் தான் எல்லாத்தையும் அவ சொல்லுற மாதிரி ரெடி பண்ணுங்க உங்க கம்பெனி ஷேர் வித்த மாதிரியே இருக்கட்டும் அதை எவ்வளவு என்னனு பாருங்க நான் மதியம் போல வரேன் மாமா கவலையை விடுங்க..

அடப் போடா இப்படியே ஒவ்வொரு முறையும் நீ அவளுக்காக யோசிச்சு தான் இவ்வளவு தூரம் வந்து நிற்குது…

மாமா என் வாழ்க்கையின் ஒரே ஒரு இரத்த உறவு அவ மட்டும் தான் அவ செய்யுறது தப்பு தான் அதுக்காக அவளை ஒதுக்க முடியாது அவளை கண்டிக்க கண்டிக்க இன்னும் பிரச்சினை பெரிசாகிடும் அதனால் அவளை எப்படி கட்டிப்போடனுமோ அப்படி பண்ணலாம் நீங்க இனி எதுக்கும் கவலைப்படக் கூடாது என்று நவிலன் சொல்ல…

வசந்த், “நீ என்ன முடிவு எடுத்தாலும் சரி ஆனா அது நிரந்தர முடிவா இருக்கனும்

செஞ்சுடலாம் மாமா … மூவரும் ஒரு முடிவில் இருக்க இங்கே வீட்டில் கணவனை காணவில்லை என்று உணர்ந்த கவி இப்ப அந்த ஸ்கூல் ஆபிஸ் எல்லாத்துலையும் இவளை பங்குதாரரா இருக்க விடக் கூடாது நாம் எதாவது பண்ணனும் என்று யோசித்தவள் எதைபற்றியும் நினைக்காமல் போனை எடுத்து நம்பரை அழுத்திவிட்டு காத்து இருக்க..

யாரு என்ன வேணும் என்ற குரலில் … நான் கவிதா பேசுறேன்..

எந்த கவிதா…

அதான் உங்க மருமகளை என் தம்பி தலையில் கட்டி இருங்கீங்களே அந்த கவிதா என்று நறுக்கென பேச…

ராணி, “என் நம்பர் உனக்கு எப்படி தெரியும்?

இதென்ன பெரிய விஷயமா? அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு சில விஷயங்கள் தெரியனுமே?

உனக்கு தெரியனும் ன்னா என்கிட்டே தெரிஞ்சுக்க என்ன அப்படி உனக்கும் எனக்கும் சம்பந்தம்..?

இருக்கே…

நீங்க தான் பனிக்கு அத்த அப்ப நீங்க உடைச்சு பேசுவீங்கன்னு நினைக்கறேன்.

ராணி, “உன்கிட்டே உடைச்சு பேசுற அளவுக்கு எனக்கு எந்த விஷயமும் இல்ல”

அதெப்படி இல்லன்னு சொல்லுவீங்க உங்க தம்பி பொண்ணுக்கு இங்க சொத்து வந்து இருக்கு அது என் தம்பி கஷ்டப்பட்டது அதை எடுத்து உங்க தம்பி பொண்ணுக்கு தந்துட முடியுமா ஏற்கனவே அவளை பைத்தியக்கார ஹாஸ்பிடல் ல வச்சு இருந்து இருக்கீங்க அது உங்களுக்கும் தெரியும் தானே அப்புறம் அவ பேர்ல எப்படி சொத்து வைக்கிறது நாளைக்கே எதாவதுன்னா எப்படி அவகிட்ட கையெழுத்து வாங்குறது இது என்னோட வீட்டு சொத்துக்காக மட்டும் சொல்லல இதே விஷயம் உங்க தம்பிக்கும் உங்களுக்கும் உள்ள சொத்துலையும் வரும் இல்லையா என்று தூண்டில் போட…

ஒரு நொடி அமைதியாக இருந்தாள் ராணி..

கவி, “என்ன நான் சொல்லுறது சரி தானே?


ராணி, “என் சொத்துத் அவ தலையிட முடியாது பொண்ணே நீ உன் வேலையை என்கிட்ட காட்டாதே?

தலையிட முடியாது தான் ஆனா உங்க தம்பிக்கு பங்கு போகும் இல்லையா இப்ப இவளுக்கு என்னென்ன பிரச்சினை ன்னு சொன்னீங்கனா அதை வச்சு நாளைக்கு உங்க தம்பி அவங்க பொண்டாட்டி கங்கு அப்புறம் அது உங்களை வந்து சேருர மாதிரி பண்ண முடியும் இல்லையா என்று கவி அடுத்த கொக்கியை போட..

அதை நான் பார்த்துக்கிறேன் உன் வேலையை நீ பாரு என்று வைத்து விட்டாள் ராணி…

ச்சே என்ன இந்த அம்மாகிட்ட இருந்து எதையும் வாங்க முடியல பார்க்கலாம் இப்ப தானே ஆரம்பிச்சு இருக்கு என்று நினைத்தவள் அடுத்து என்ன அடுத்து என்ன என்று யோசித்து கொண்டு நவிலனின் ஆபிஸ் கிளம்பி இருந்தாள்..

நவிலன், “அம்மா நான் ஆபிஸ் கிளம்புறேன் என்று வந்து நின்றவனை பார்த்து,என்ன நவிலா நீ தானே ஒரு வாரம் இருக்கலாம் ன்னு சொன்ன..

ஆமா அம்மா ஆனா கொஞ்சம் வேலை நீங்க பனியை அழைச்சிட்டு வீட்டுக்கு போய்டுங்க இன்னொரு முறை பீரியா வரலாம் என்றவன் பனியை பார்த்து கண்காட்டிவிட்டு கிளம்பிட,

என்னம்மோ போங்க ஆள் ஆளுக்கு எதோ முடிவு பண்ணிட்டு இருக்கீங்க காலைல மாப்ள வந்து இருக்கார் அதையும் இந்த நிமிஷம் வரை சொல்லல என்று பனியை பார்க்க


அத்த சொல்லக் கூடாதுன்னு இல்ல உங்களை எந்தவிதத்திலும் காயப்படுத்த வேண்டாம் ன்னு நினைச்சு இருப்பாங்க..

மங்கை, “அப்படி என்ன பிரச்சனை பனி?

எப்பவும் போலத்தான் அத்த அண்ணி ஏதோ அண்ணா கிட்ட கேட்குறாங்இ போல ஆபிஸ் விஷயமாக அதான்…

ப்ச் அவளுக்கு சேரவேண்டியதை பிரிச்சு அடுத்த வேலையை பாருன்னு உன் புருஷனுக்கு பலமுறை சொல்லிட்டேன் அவன் காதுல வாங்குற மாதிரி தெரியல அவ என்னென்ன பண்ண போறாளோ ஒன்னும் புரியல இவ எப்படி என் வயித்துல பொறந்தான்னு புரியல போ


அத்த…

பின்ன என்ன பனி தினமும் ஏதாவது ஒரு இழுவை எப்பவும் தான் மட்டுமே ன்னு ஒரு எண்ணம் இதெல்லாம் நல்லதுக்கா இப்படி ஒரு மாப்ள அமைஞ்சதால் பிரச்சினை இல்லை ஆனா இவரும் இன்னும் எத்தனை வருஷம் பனி பொறுத்து போக முடியும் ஒரு மனுஷனை கொஞ்சமாவா பாடுபடுத்துறா? இவளுக்கு செல்லம் கொடுத்து அவர் போய் சேர்ந்துட்டார் இருக்கிறவங்க தானே அல்லாடுறாங்க…

அத்தை…

ப்ச் என்னால் முடியல அவ புருஷனும் உன் புருஷனும் அவளுக்கு ஏத்த மாதிரி தாளம் வேற… நீயாச்சும் இழுத்துபிடி பனி..

இங்க அவ்வளவு சீன் எல்லாம் இல்ல அத்த நீங்க நிம்மதியா இருங்க வாங்க சாப்பிட்டு கிளம்பலாம் எனக்கு ஸ்கூல் ல வேலை இருக்கு இன்னைக்கு அண்ணி வரேன்னு சொல்லி இருக்காங்க..

அங்கயுமா என்று மங்கை அலுத்து கொள்ள..

அங்க தான் இனி முழுநேர வேலை அண்ணிக்கு என்றவள் சிரிக்க..பனி சிரிப்பதை பார்த்து மங்கை அமைதியாக அமர்ந்து விட்டார்…


நான்கு மணி நேரமாக அமர்ந்து இருக்கிறாள் பனி கவிதா இன்னும் வந்து சேரவில்லை…

மீனா, “ என்ன பனி பயங்கர யோசனையில் இருக்க?

சும்மா தான் க்கா..

அப்படியா..?

அப்படித்தான் மை லார்ட்..

ஹேய் என்று மீனா சிரிக்க..

நான் இனி கிளாஸ் மட்டும் வாரம் ஒரு முறை வருவேன் மீனா க்கா… நீங்க தான் இதெல்லாம் எனக்கு ஹெல்ப் பண்ணனும்..

என்ன பனி…

நான் அவரோட ஆபிஸ் போகப் போறேன் இங்க இனி சும்மா விசிட் தான்..

நடத்து நடத்து உன் ஸ்கூல் உன் விருப்பம் தான் என்று மீனா சொல்ல..

இல்லக்கா இனி இங்க ஒரு ஆளை போடப் போறேன் அவங்களை வாட்ச் பண்ணி அவங்களுக்கு எல்லா அலாட்மென்ட்டும் நீங்க தான் பண்ணனும்..

அது யாரு பனி…

சொல்லுறேன் இன்னும் அவங்க வரல வந்ததும் நேர்லையே பாருங்க…


என்ன பனி பில்டப் பயங்கரமா இருக்கு…

விஷயமும் அப்படித்தான் என்று சில கோப்புகளை எடுத்து தர…

என்னது பனி..

பாருங்க…

அது மொத்தமும் எகனாமிக்ஸ் மத்திய விஷயங்கள் அடங்கிய புத்தகமும் இங்கே இருக்கும் பாடப்பிரிவின் மாணவர்களை பற்றியும் இருக்க…,அடி ஆத்தி இந்த டிபார்ட்மெண்ட் ஆ இங்க யாரும் நிரந்தரம் இல்லையே அங்க எப்படி வர ஆளு எப்படி அது மொதல்ல சொல்லு பனி என்று மீனா அதிர…

அட ஏன் க்கா இவ்வளவு பதட்டம் அதெல்லாம் அவங்க பார்த்துப்பாங்க இனி டிபார்ட்மெண்ட் சூப்பரா இருக்கும் பாருங்க என்றவள் வாசலையே பார்த்து கொண்டு இருந்தாள்…

மீனா தான் என்ன நடக்குது ன்னு தெரியலையே என்று யோசனை செய்ய..,வரவேண்டிய ஆளோ என்ன நவி நான் சொல்லிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு எதுவும் சொல்லாம இருக்க ?


அக்கா இப்ப உனக்கு எதுக்கு இந்த ஆபிஸ் டாக்குமெண்ட்?

ஏன் நான் கேட்க கூடாதா?

அப்படி சொல்லல நான்..

பின்ன நீ கேட்குறதுக்கு என்ன அர்த்தம்?

கவி, “என்ன நவி இப்படி மட்டும் படாம பேசுற?

அக்கா என்ன பிரச்சினை உனக்கு நான் இதை லோன் போட்டு அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணிட்டு வந்து இருக்கேன் நீ ஏன் இதையெல்லாம் கேட்டு உன்னையும் கஷ்டப்படுத்திக்கனும் சொல்லு?

என்னடா என்னைய ஒதுக்குறியா?

அக்கா..

பின்ன என்ன பேச்சு எல்லாம் வேற மாதிரி இருக்கு என்று அவள் கேட்டு கொண்டு இருக்க, கவிதாவின் போன் வைப்ரேட் ஆகி இருந்தது…

என்ன நான் இங்க இருக்கிறது உனக்கு மூக்கு வேர்க்குதோ என்று போனை எடுத்த எடுப்பில் கேட்க…மறுமுனையில் பேசியதை கேட்டு சற்றே அமைதியானவர் சரி வை என்று வைத்தவள் எல்லாத்தையும் எடுத்து வை நவிலா சாயந்திரம் வீட்டில் பார்க்கலாம் என்று கிளம்பி விட்டாள் கவிதா…



தொடரும்


 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,769
536
113
45
Ariyalur
அருமை அருமை சகி ❤️❤️❤️❤️❤️❤️❤️கவிதா பண்ற அலம்பளை சமாளிச்சே புருசனுக்கும் தம்பிக்கும் ஆயுஷு குறைஞ்சிடும் போல