வெற்றிகரமாக...அவர்கள் அந்த மிகப் பெரிய நகரத்தின் மத்தியில் வந்து இறங்கினார்கள்.
இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த, வாகனத்தில் ஏறி பயணம் தொடர்ந்தார்கள். இந்த பயணத்தோடு சேர்ந்து, இவர்களின் புது வாழ்க்கை பயணமும் தொடர்ந்தது.
ஆரத்தி எடுத்து விடுபட்டு, போன சில சம்பிரதாயத்தை முடித்துக்கொண்டு, அவரவர் வேலையை துவங்கினார்கள்.
எப்போது தனிமை கிடைக்கும். அப்போது பேசிக்கொள்ள முடிவு செய்து சாரா அத்தை பின்னாலே சுற்றிக்கொண்டு இருந்தாள்.
அர்ஜூனோ அவள் சாப்பிடும் அழகை விழுங்குவதைப் போல பார்த்துக் கொண்டு இருந்தான்.
அர்ஜுனின் பார்வையை பார்த்து சாரா பொத்திக்கொண்டு வந்தது ", அத்தை அவருக்கு ஏதோ வேணும் போல என் சாப்பாட்டை பார்த்துக்கொண்டு இருக்கிறார்" என்று தன் அத்தையிடம் அவனின் செயலை சபையிலே சுட்டிக்காட்டினாள்.
"என்னடா வேண்டும்....?" என்று மீரா கேட்க.
"எதுவும் வேண்டாம் மா...போதும்." என்று அர்ஜுன் சமாளித்தவாறு சாப்பிட ஆரம்பித்தான்.
அன்னை சொன்னதும் அடங்கிவிடுபவனா அவன்... என்று சாரா புரிந்துகொண்டாள். சாராவை விட்டு நகரமாட்டேன் என்று அடம்பிடித்தது, அவனது கண்கள்.
சிறிது நேரம் அனைவரும் பேசி கொண்டிருந்தார்கள்.
அர்ஜுனின் பார்வை அவளிடமே பதிந்து நின்றது.
"அர்ஜுன் கொஞ்சம் இங்கவா.....", என்று அர்ஜுனின் அம்மா அவனை தனியே அழைக்கவும் அவர் அருகில் சென்றான்.
"சொல்லுமா...." என்று தன் அம்மாவிடம் கேள்விக் கேட்க... கண்களோ தன் மனைவியையே விட்டு அகலமா இருந்தது.
"டேய் கல்யாணம் ஏதோ அவசரத்தில் நடந்தது. அதனால் இன்று எதுவுமில்லை... சும்மா வெறிக்க பார்த்துக்கொண்டு இருக்காதே".என்று கடித்துவிட்டு சென்றார்.
சிரித்தவாறு அர்ஜுனின் அன்னை மிக பெரிய சத்தம் இல்லாத குண்டை அவன் மீது வீசினார் ...
"நீ உன் அறைக்கு சென்று தூங்கலாம்" என்ற அவன் தாயின் வார்த்தைகள் அவனுக்கு புரியாமல் போகவே.. சற்று விழித்தப்படி.
"அம்மா! அதனால் என்ன? பாவம் அவளுக்கு ரூம் இங்கு இல்லை நான் அட்ஜஸ்ட் செஞ்சிக்கிறேன்". என்று அர்ஜுன் கூறிய விதத்தில் அவன் அம்மாக்கு சிரிப்பு வர, அதனை அடக்கிக்கொண்டு, முறைப்பை பரிசளித்தார்.
"டேய் நான் சொல்றது புரியுதா இல்லையா....? நீ போ உன் அறைக்கு... மொரடா.....", என்று கூறியபடி தன் மகனின் தோளில் செல்லமாக அன்னை அடித்து விரட்டினர்.
"சரி சரி..... போறேன்" என்றவன் அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு.... முடிந்த அளவு அவளை அவன் கண்களில் நிறப்பிச் சென்றான்.
மணி இரவு பத்து ஆனது, சாரா அமைதியாக ஏதோ யோசித்தவாரு அமர்ந்து இருந்தாள்.
அவனை ஒருவழியாக அனுப்பிவைத்து விட்டு.... மீரா சாராவிடம். "வாமா நம்ம தூங்கலாம்...." , என்று தன் அத்தை கூறுவதை புரிந்துகொண்டு.
ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசாத அர்ஜுனை மனதில் திட்டிக்கொண்டு தூங்கச்சென்றாள்.
இவளுக்கு கோபத்தால் தூக்கம் வரவில்லை என்றால்... அவனுக்கோ தன்னவளை பிரிந்து இருக்க இயலவில்லை.. உரிமை இருந்தும் ஏன் இந்த பிரிவு.....
"இந்த வயதானவர்களை வைத்துக்கொண்டு நிம்மதியா ஒரு வார்த்தையும் பேச முடிகிறதா " என்று புலம்பியவாறு அவனது அறைக்கு சென்றான்.
காலையில் இருந்து அர்ஜுன் அவளிடம் பேச முயற்சி செய்து தோற்றது தான் மிச்சம். அவன் அன்னைதான் சாராவிடம் பேசி கொண்டே இருந்தார் நாள் முழுவதும்.
"சாரா ஏதாவது காலை உணவு சமைத்துவிடு" என்று மீரா கூறியதும் அவரின் முகத்தை கலவரத்தோடு பார்த்தாள்.
"என்ன சாரா டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ் ஆ நீ" என்று சொல்லியவாறு மீரா சிரித்துவிட்டார்.
சாராவிற்கு பதட்டம் கொஞ்சம் குறைந்தது.... சிறிது பதட்டம் அவளிடம் இன்னும் மிஞ்சி இருக்கதான் செய்தது.
"சொல்லித்தாங்க அத்தை இனி கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கொள்கிறேன்" என்று அத்தையிடம் சரணடைந்தாள்.
"அதுஎல்லாம் பெரியவிஷயம் இல்லை... இன்னைக்கு முதல் வகுப்பு, இந்த காய்கறி கொஞ்சம் நறுக்கி வை.... பக்கத்துவீட்டு மாமி அதிரசம் சுடுவதற்கு பதம் எடுக்க வரசொன்னாங்கள்" என்று கூறியவாறு மீரா சென்றுவிட்டார்.
இதை அனைத்தும் அர்ஜுன் தன் அறையிலே இருந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தான்....
"இதற்கு தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா........" என்று பாடிக்கொண்டே சமையல் அறையை நோக்கி சென்றான்.
மீரா வெளியே சென்ற நேரம் பார்த்து அர்ஜுன் மெதுவாக சாரா என்ன செய்கிறாள் என்று ரகசியமாக பார்க்க.... அவன் பார்த்தது அதிர்ச்சியோ அதிர்ச்சி!
அவன் வந்தது கூட தெரியாமல்.... கேரட் எடுத்துவைத்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தாள்... எந்த பக்கத்தில் இருந்து இதை நறுக்கவேண்டும்? என்று குழம்பிக்கொண்டு இருந்தாள் சாரா.
வடிவம் கோணலாக வர, வடிவம் முக்கியமில்லை டேஸ்ட்தான் முக்கியம்.
"முதலில் அத்தை கொடுத்த வேலை.. குட் கேர்ள்" என்று பெயர் வாங்கவேண்டும் என்ற முனைப்பில் யோசித்துக்கொண்டு இருந்தாள் நம் சாரா.
"கட் செய்ய போறேன்.... கேரட் உன்ன கட் செய்ய போறேன்.... ராகம் இழுத்து பாடினாள் ".
அர்ஜுனுக்கு காதை பொத்திக்கொண்டான் அவளின் சமையல் திறமை ஓரளவுக்கு தெரியும்...
இப்போதுதான் இவளின் பாட்டு திறமை கண்டு பதறினான்.... 'வாழ்க்கை முழுக்க இதை நீ அனுபவிக்கனும் அர்ஜுன் அவ்வ்வ்' அவளை சற்று அதிர்ச்சியோடு சாராவின் பின்னால் நின்று பார்த்துக்கொண்டு இருந்தான் அவள் செய்வது அனைத்தும்.
சாரா கேரட் காட்செய்ய முடியவில்லை. கேரட் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு பீன்ஸ் எடுத்து நறுக்க ஆரம்பித்தாள் அதும் முடியவில்லை ... "கத்தி சரி இல்லை " என்று சாரா கத்தியை குறை சொல்ல..."
'ஆட தெரியாதவளுக்கு மேடை சரி இல்லயாம்' அர்ஜூன் நினைத்துக்கொண்டான்.
"இதை கட் செய்ய ஷார்ப் தேவை இல்லையே..." அர்ஜுன் யோசித்தவரு அவளின் கைகளை எட்டி பார்க்க அதிர்ச்சி கத்தியை கூடவா பிடிக்கக்கூட தெரியாது இவளுக்கு என்று குழம்பினான்.
சாரா கத்தியை திருப்பி பிடித்துக்கொண்டு காய்களை அடித்துக்கொண்டு இருந்தாள்.
'அடியே இது பேரு அடிக்கிறது.. கட்டபண்றது இல்லை'.இவள வச்சிட்டு வாழ்க்கைல ஒரு நேரம் கூட சாப்பாடு கிடைக்காது என்று எண்ணி... இன்னும் என்ன என்ன சேட்டை செய்யப்போறா என்று ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்தான்.
சாரா அவன் வந்தது கவனிக்காமல்... காய்கறியை காசாப் போட்டுகொண்டு இருந்தாள். கத்தியக்கி திருப்பி பிடிப்பா என்று நினைத்தவன் பொறுமை இழந்து அதை சொல்லியே விட்டான்.
"சாரா முதலில் கத்தியை திருப்பி பிடி....அப்போ தான் கட் செய்யமுடியும்."திடீர் பின்னே வந்த குரலில் கையை சரியாக வெட்டிக்கொண்டாள்.
"கையை கட் செய்ய தெரிஞ்சவளுக்கு காய்கள் வெட்ட முடியவில்லையா?" அவளை திட்டியவாறு முதலுதவி செய்தான்.
மஞ்சள் தூள் வைத்து... விட்டு விலகவும்.
அவனின் அன்னை வரவும் சரியாக இருக்க.."என்னாச்சி? அர்ஜுன் நீ இங்க என்ன செய்கிறாய்? "
"அத்தை இவர் கட் செய்ய சொல்லி தரேன்னு கையை வெட்டிவிட்டார் "என்று அர்ஜூன்மீது குற்றம் சுமத்தினாள்.
'இவளை பற்றி தெரியாமல் வழியே வந்து மாட்டிக்கிட்டானே' என்று அர்ஜூன் நினைத்தான்.
"அர்ஜுன் வெளிய போ....? "
அர்ஜுன் இங்க வா... "சொல்லுங்கமா மீரா எதாவது உதவி வேணுமா? சாராவை பார்த்தவாறு வினவினான்".
"அர்ஜுன் கொஞ்சம் கீழ குனிஞ்சி நில்லு ..."
"அம்மா என் மேல அவளோ பாசமா... முத்தம் எல்லாம் கொடுக்க போகிறாயா?
அம்மாவிடம் கன்னத்தை காட்டியவாறு சற்று குனிந்து நின்றான் அர்ஜுன்.
நறுக்குகென்று நன்கு குட்டு வைத்தார்கள்...." அம்மா இது ஓவர்.... அவளை வெட்டிக்கிட்டு என்னை மாட்டிவிட்டுட்டா என்னை அடிக்கிறது."
"அத்தை நானும் அடிக்கணும்..." சாரா பாவமாக முகத்தை வைத்து அத்தையிடம் ஆசையாக கேட்க...
"நீ கேட்டு இல்லாமையை சாரா அவனை பெத்ததே நீ அடி கொடுக்கத்தான்.... அர்ஜுன் செல்லம் அம்மாவிடம் வாடா கண்ணா...."
"மா திஸ் நாட் fair. அடி வாங்கத்தான் என்னை வளர்த்தீர்களா?"
அர்ஜுன் சினிங்கியவாறு சாரா முன்பு சற்று குனிந்தான்.... அர்ஜுன் சற்று குனிந்தான்... அடுத்த நொடி சாரா அவனின் தலையிலே இருந்த முடியை பிடித்து இழுத்துவிட்டாள் நன்கு வலிக்குமாறு.
சாராவின் கையோடு சில முடிகள் வந்துவிட்டது.... சாரா அவனிடம் அதை காண்பித்து ஊதி தள்ளினாள்... வெற்றி சிரிப்போடு.
அதான் பிறகு அவனுக்கு நன்கு கொட்டுக்கள் தலையே கொட்டிவிட்டு அனுப்பினார் இருவரும்.
அவன் சென்றபிறகு மாமியார் மருமகள் சிரித்து பேசிக்கொண்டு இருந்ததை பார்த்தவன்.
'உங்க இருவரையும் பிரிக்காமல் விடமாட்டேன் சபதம் எடுத்து அந்த இடத்தை விட்டு அகன்றான்'.
அர்ஜுன் வாங்கிய அடி.... கொஞ்சம் பலம்... சிறிதுநேரம் அவனே ஆசுவாசம் படுத்திவிட்டு.
மறுபடியும் சமையலறை நோக்கி அர்ஜுன் பாட்டு பாடியவாறு நுழைந்தான்...
"உன் சமயலறையிலே நான் உப்பா ? சர்க்கரையை?"
அவனுக்கு எதிர் பாட்டு பாடியது என்னவோ... மீரா தான்...
"அஹ்ஹ்ஹ கறித்தூணி..." பதில் அளித்தது மட்டுமின்றி அர்ஜுன் மீது கறித்தூணி முகத்தில் தூக்கி எறிந்தார்....
"மம்மி ஓவர் இது எல்லாம் " முகத்தில் விழுந்த கரித்துணியை கீழே வீசிவிட்டு மீராவை திட்டிவிட்டு சென்றான்.
2 பிசாசும் நன்றாக உயிர் வாங்குகிறார்கள். மெல்லிய சிரிப்போடு, மனம் முழுவதும் திருப்தியோடு சென்று அவன் வேலையை கவனித்தான்.
அர்ஜுனிற்கு பிடித்து இருந்தது சாரா மீரா ஒன்றிப்போனது.
அடுத்த இரண்டு நாட்களும்....அர்ஜுனின் அன்னை அவனை சாராவிடம் பேசிக்கொள்ள கூட அனுமதிக்கவில்லை.
இந்த விசயம் அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை அவன் அன்னை தான் பார்வையில் அல்லவா அவனை விரட்டினார்...
'அவனாக வந்து பேசுவான்...நடந்ததற்கு ஏதாவது சமாதானம் கூறுவான்' என்று எதிர்பார்த்து சாரா துவண்டுதான் போனாள்.
சாராவிற்கோ மூன்று நாட்களிக்கு மேல் வீட்டில் இருக்க முடியவில்லை.
இந்த மூன்று நாட்களில் அவனிடம் பேச அவள் முயற்சி செய்தாள்.
ஆனால், அவன் அவளின் நோக்கம் புரிந்து விலகி சென்றது வெளிப் படையாகவே தெரிந்தது அதான் பிறகு சாராவும் அர்ஜுன் பேச முயற்சி செய்யவில்லை.
அவளை தவிர்த்தது வேறு காரணம் ஆனால் அவள் புரிந்துக்கொண்டாள் வேறு விதமாக. அர்ஜுன் மீது கோபத்தை உரம் போட்டு வளர்த்துக்கொண்டு இருந்தாள்
'அத்தையிடம் கூறவேண்டும் நான் வேலைக்கு செல்வதை பற்றி.' என்றெண்ணியவள் மீராவின் அறையை நோக்கி சென்றாள்.
' இப்போதே சொல்லிவிடலாம், நாளைக்கு திங்கள்கிழமை வேலைக்கு செல்வதற்கு சரியாக இருக்கும்.'
'அவனாக வந்து பேசிவிடுவான்' என்று எதிர்பாத்தவள், அவன் இந்த மூன்று நாளும் ஒரு வார்த்தைக் கூட பேசாதது அவளுக்கு மேலும் மனச்சோர்வை ஏற்படுத்தியது.
இந்த யோசனையை சுமந்து வந்தவளின், பாதையை தடுத்தது அவள் கணவனின் கரம்.
'இவன் எதுக்கு பாதையை மறைக்கிறான்?அதுவும் திடீரென்று!' என்று எண்ணியவள் அவனை, "என்ன?" என்பது போல் பார்த்தாள் சாரா.
"மாலை தயாராகி இரு", என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் கூறிச்சென்றான் அர்ஜுன்.
'இப்படி புரியாதது போல பேசும் அர்ஜுனை மனதில் வறுக்க தொடங்கினாள்'.
எதற்கு வந்தோம் என்பதை மறந்துவிட்டு அவன் பின்னால் சென்ற மனதிற்கு ஒரு கொட்டு வைத்துவிட்டு, 'முதலில் இவனைப்பத்தி யோசிப்பதை நிறுத்தவேண்டும்'.