• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

2 மனைவியின்...காதலன் !

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
2...காதலன்

மீண்டும் அறைக்குள் வந்த ராதாவை பார்த்த கிருஷ்ணன்.


"உன் இஷ்டம் இதுல என் மண்டையை உருட்டாத, ஏதோ உன் மேல இருக்க கொஞ்ச நஞ்ச நம்பிக்கையில் உன்னை விடுறேன் எதாவது குடும்ப மானத்தை வாங்கிடாத.


"உன்மேல் சத்தியமா உன் பெயர் கலங்க படுத்தமாட்டேன் மாமா" எப்போதும் அவளை நம்பாத பார்வை பார்க்கும் கிருஷ்ணன் இந்த விஷயத்தில் முழுதாக நம்பினான்.


அவனுக்கு தெரியும் அவளை பற்றி சிறுவயதிலிருந்தே அவளது ஒவ்வொரு அசைவும் அவனுக்கு அத்துப்படி.


'எதுக்கு ராதா இப்படி' வாய்வரை வந்ததை அடக்கிக் கொண்டான் கேட்டாலும் அவளிடமிருந்து பதில் வராது.


'கிருஷ்ணா உன்னை வெறுப்பேற்ற செய்யறா போல' அவனுக்கு தோன்றியது, அத்தோடு விட்டவனுக்கு அங்கிருக்க கொஞ்சமும் பிடிக்கலை.


கிருஷ்ணாக்கு கொஞ்சம் தனிமை தேவைப்பட்டது.


வீட்டில் இருந்தால் மண்டை வெடித்து சாவது நிச்சயம் என்று தெரிந்துகொண்ட கிருஷ்ணா.


எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாமதமாக வீட்டுக்கு வந்தான்.


"இவன் கிட்ட ஒண்ணு சொன்னா காதில் வாங்குரானா? இன்னைக்கு எவ்வளவு லேட்டா வந்தாலும் வச்சி செஞ்சிட வேண்டியது தான்" அடுத்த கட்ட நடவடிக்கையை செயல் படுத்த வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள் ராதா.


ஊர் முழுவதும் சுற்றி முடித்து வந்தவனுக்கு கண்கள் இறுகியது. சூடாக எதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்று தோன்றியது.


ஆனா டயார்டா இருக்கே யார் எழுவது என்ற சோம்பேரித்தனத்தால் காலை அங்கொன்றும் இங்கொன்றும் சோப்பாவில் பரப்பிட்டு படுத்து கிடந்தான்.


'எருமை எப்படி படுத்து கிடக்குது பாரு வயசு பொண்ணு இருக்கும் இடத்தில்' மனதில் ராதா அவனை அர்ச்சித்தாலும் இந்த முறை வாய்விட்டு திட்டவில்லை.


அவனால் ஆக வேண்டிய காரணம் இருந்ததால் அமைதி காத்தாள்.


"மாமா...ஆஆஆ மாமா...ஆஆஆ"


'கிருஷ்ணன் அபாய ஒலி ஒலிக்குது. இப்போ இவளுக்கு என்ன வேணும்'ன்னு தெரியலையே, ஆவூன்னா... மாமா ஓமான்னு வந்து நின்னுடுறா'


கிருஷ்ணா காது கேட்காதது போல படுத்திருக்க, மீண்டும் அதே ராகத்தோடு, கிருஷ்ணா காதுக்கு அருகில் வந்து கத்தினாள் "மாமா....ஆஆஆ, மாமா..ஆஆஆ"


"ஆஆஆஆஆ....! காது போச்சி இப்போ என்ன வேணும்"


"டயார்டா இருக்கிங்க இந்தாங்க காபி"


'எதே!!!!! காபியா? இவளுக்கு காபி எல்லாம் போடத்தெரியுமா?'


சூடச்சுட காப்பியை பார்த்தவனுக்கு பாதி களைப்பு நீங்கியது போல இருந்தது. அவள் கொடுப்பதை மறுக்காமல் வாங்கியவன் சிறு பயம் இருக்கத்தான் செய்தது. அது காபியா இருக்குமா? இல்லை மிளகாப்பொடியா இருக்குமா' யோசனையில் குடித்தவன் மெச்சும் அளவுக்கு இல்லாவிட்டாலும் அவசரத்துக்கு இந்த காபியை குடிக்கலாம் என்ற அளவுக்கு இருந்தது.


"காபி நல்லா இருக்கு" முடித்துக்கொண்டான், எங்கே பேச்சை வளர்த்தால், எதாவது எடக்குமுடக்காக கேட்டு வைப்பாள் என்று அமைதியாக சோபாவில் சாய்ந்து அமர்ந்தவாறே தூங்கிட்டான்.


சிறிது நேரம் கழித்து வந்த ராதா.


"ஏங்க எந்திரிங்க டைம் ஆச்சி"


"அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா" அவதியாக நேரத்தை பார்க்க மணி 12 காட்டியது.


"எதுக்கு இப்படி பேய் மாதிரி எழுப்புற" மீண்டும் சோபாவில் முடங்கி படுத்த பார்த்தவனின் சட்டையை இழுத்து அமர வைத்தவள்.


"நைட்டு சாப்பிடாம படுத்துட்டிங்க எழுந்து சாப்பிடுங்க"


'இவ பேச்சே தினுசா தெரியுதே' பசித்த காரணத்தால் கிருஷ்ணாவும் அவளது போக்கை கவனிக்காமல் சாப்பிடும் இடத்தில் அமர்ந்து சாப்பிடத் துவங்கும் போது உண்மையிலேயே அதிர்ந்து தான் போனான்.


தட்டில் இருப்பது இட்லியா? இல்லை மல்லிப்பூவா? என்று பிரித்து காணாத வகையில் இருந்தது இட்லியின் மென்மை.


'இறைவா இன்னும் எத்தனை சோதனை எனக்கு தருவதாக இருக்க இவளுக்கு சமைக்க கூட தெரியுமா. நடு ராத்திரியில் சுடச்சுட இட்டிலி' இங்கு நடப்பதை பார்க்க ராதிகா ரஜினி காமெடிதான் நினைவுக்கு வந்தது, என்ன ராதிகா.. அந்த காலத்து பேய் போல இருப்பாங்க இவ மாடர்ன் பேய் போல இருக்கா'


சாப்பிட்டு முடித்து கைகழுவும் போது மணி மூன்றை தொட்டிருந்தது.


கிருஷ்ணா கையில் ஒரு பெரிய பேகை கொடுத்தாள் ராதா.


"என்ன இது?"


"கண்ணு தெரியலையா பேக்"


'கடுப்பு அடிக்குறா', "அது தெரியுது இது எதுக்கு என்ட கொடுக்கற"


"அதுவா.. என் எக்ஸ்'யை கண்டு பிடிக்கனும்"


"அவன் என்ன தொலைந்த குழந்தையா கண்டுபிடிக்க"


"அப்படியும் வச்சிக்கலாம், நான் பேபி'ன்னு தான் அவனை கூப்பிடுவேன்"


"அதுக்கு!"


"போய் கண்டுபிடிச்சி கூட்டிட்டுவாங்க ஒருமாசம் கழித்து அனுப்பிடலாம்"


"ஏதோ என்னை வெறுப்பேற்ற சொல்லுற'ன்னு நினைச்சா உண்மையா சொல்லிட்டிருந்தியா"


"ஆமா, பேசி டைம் வேஸ்ட் செய்யாதீங்க கிளம்புங்க"


"ராதா இது எல்லாம் சரியில்லை"


"என்ன மாமா வாக்கு மாறுறிங்க.. உங்க அப்பா உங்களை போல இல்லை பாரியின் பேரன்"


"போதும்... பழைய புராணத்தை கிளராத கடுப்பா இருக்கு"


"சரி அப்போ கிளம்புங்க"


"ராதா நீ லூசா, உன் எக்ஸ்க்கு போன் செஞ்சி வரசொல்லு"


"செஞ்சென், இந்த ஒரு மாசம் டீலிங்க் பத்தி பேச, என் குரலை கேட்டதும் நெம்பர் பிளாக் செஞ்சிட்டான் கடன்காரன்"


"நெம்பர் கொடு நானே கூப்பிடுறேன்"


"மாமா பிளாக் செஞ்சதே உங்க நெம்பரில் இருந்து கூப்பிட்டதால தான்"


'ஆஆஆஆ! நான் மென்டல் ஆஸ்பிட்டலுக்கு போரது உறுதி'


"சரி உன் போனில் இருந்து போடலாம் போன் கொடு"


"என்னை அவன் பிளாக் செய்து ஒருவருசம் ஆகுது. அதுக்கு தான் உன் நெம்பரிலிந்து கூப்பிட்டேன், அகெய்ன் பிளாக்" ராதா சோகமாக சொல்ல.


"ராதா போனாங்கனா விட்டரனும் சும்மா தொந்தரவு செஞ்சிட்டு இருக்க கூடாது"


"முடியாது, இப்போ நீ போய் கூட்டிட்டு வரலை நான் எங்க அம்மா அப்பா கிட்ட"


"போதும்.. போய் தொலையறேன். கழுதையை கட்டிக்கிட்டா ஒதை வாங்கத்தானே வேணும்"


"மாமா இதா போட்டோ.. அட்ரஸ் பின்னாடி எழுதி இருக்கேன்" அந்த போட்டோவில் தன் புது மனைவி வேறுவொருவனுடன் பல்லை காட்டி சிரித்திருப்பதை பார்த்த கிருஷ்ணாவுக்கு கட்டிங் பிளேடை வைத்து, ராதாவின் ஒரு ஒரு பல்லையும் பிடிங்கி எடுக்கும் ஆத்திரம் பொங்கியது.


விடியல் காலையில் அனுக்கு போன் போட்டு சுருக்கமாக அவள் தோழி செய்யும் சேட்டையை சொல்ல.


"அட கேட்குவது செய்து கொடுப்பது தானே சார் புருஷன் லட்சனம்"


"அவ கூட சேர்ந்த நீ மட்டும் எப்படி என்னை புரிஞ்சிக்க முடியும். சரி கிளம்பு அங்க ஒரு பிசினஸ் மீட் அரேஞ்ஜ் செஞ்சி கிளம்பு"


"சார் சம்மர் லீவ் கேட்டு இருந்தனே,"

"நோ லீவ் ஒன்லி டிரிப், அந்த வீனாப்போனவனை வேற கண்டு பிடிக்கனுமாம்"


"சரி சார்" சோர்வாக சொன்ன அனு தயாராகினாள், மாதவ கண்ணனை தேட.


ராதாவை ஒருவார்த்தை பேசவிடலை கிருஷ்ணா.


"நீ ஒன்னும் பேசாத தாயே அட்ரஸ் வச்சி நானே பாத்துக்கறேன்" கும்பிடு போடாத வகையா அவளை அடக்கினான்.


'எப்படி இருந்தாலும், நீயா போன் போடுவ அப்போ பாத்துக்கிறேன்' மனதில் நினைத்தாள்.


"அனு பத்திரமா போய்யிட்டு வா.. சொன்னது எல்லாம் மறந்திடாத"


"சரி ராதா.. பாய். இரண்டு பேரும் சேர்ந்து என் சம்மர் லீவுக்கு சூனியம் வச்சிட்டிங்க"


"போய்யிட்டு வா நிறைய லீவ் கொடுக்க சொல்லுறேன்" என்றாள் ராதா.


"அப்போ சரி... டா டா"


முன் சீட்டில் கிருஷ்ணன் ஏறிக்கொள்ள அனு பின் சீட்டில் காலையில் விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்.

சிட்டியை தாண்டும்போது, "சார் எங்க போறோம்?"


"இருங்க பார்க்கறேன்"

பேக்கட்டில் இருந்த போட்டோவை எடுத்து முறைத்தவன் திருப்பி பார்த்தால் அட்ரஸ் அருமையாக இருந்தது.


படத்தில் துபாய் வடிவேலே கொஞ்சம் தெளிவாக அட்ரஸ் சொல்லி இருப்பார்.


மொட்டையாக... ஆக்ரா, தாஜ் மஹால் அருகில் என்று போட்டிருந்தது.


"ஆஆஆஆஆ.... அண்ணா வண்டியை நிறுத்துங்க" என்று கத்தியவன்.


கீழே சிறிது தொலைவில் தள்ளி நின்றவன் ராதாக்கு போன் போட்டான்.


"ஏய்... என்னடி அட்ரஸ் இது மொட்டையா"


"எனக்கே அவ்வளவு தான் தெரியும்"


"சரி அதை விடு... காரில் எப்படி டெல்லிக்கு போவது அதை சொல்லு"


"அதுதான் சொல்ல வருவதற்க்குள் மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்ட. உங்க பேகில் டிக்கட் முதற்கொண்டு தேவையானது இருக்கு."


"சரி போனை வை" அவன் சொல்ல துவங்கும்போதே வேலை முடிந்தது என்று போனை வச்சிட்டா ராதா.


"இவளை பல்லை கொறித்தவன்"


"ஏர்போர்ட்டுக்கு போங்க அண்ணா" கருஷ்ணாவின் தேடுதல் பயணம் தொடர்ந்தது.


அனுவோ, சார் எங்கே பக்கத்து ஊருக்கு கூப்பிட்டிங்கன்னு வந்தா டெல்லிக்கு கூட்டிபோறேன்னு சொல்லுறிங்க" சோர்வாக சொன்ன அனுவை பார்த்து.


"எனக்கே இப்போ தான் அனு தெரியும் உன் பிரண்டு என்னை எப்படி அழைய விடுறா பாரு. என்னால முடியலை அவளுக்கு உதவி செய்ய போய் இப்போ நான் நடு ரோட்டில் பைத்தியம் போல அலசஞ்சிட்டு இருக்கேன்"


"சரி விடுங்க சார் வாழ்க்கையில் இஷ்டம் வருவது சகஜம் தானே"


"கஷ்டம் வாழ்க்கையில் வரலாம்.. இவளாள வாழ்க்கையே கஷ்டமா போச்சி. இப்போ எதுக்கு இந்த தேவையில்லாத வேலை பார்க்கறான்னு தான் புரியலை"


"சரியா போய்யிடும் சார். காரணம் இல்லாம எதும் அவ செய்ய மாட்டா"


"அந்த நம்பிக்கையில் தான் அனு இருக்கேன்"


வெற்றிகரமாக வந்து தரை இரங்கியவர்கள்.


ஊர் பெயர் புகைப்படம் மட்டும் வைத்து, நடு ரோட்டில் நாயாக திரிந்தான் அவனது அசிஸ்டன்ட் அனுவோடு.



ஆபிசில் பயபக்தியாக வேலை செய்யும் அனு.. வெளி ஊருக்கு வந்ததும் ராதாவைவிட மோசம். எதாவது கடை பார்த்தா அப்படியே நின்னுடறா. அவள் கைக்காட்டியதை வாங்கி கொடுத்தால் தான் அடுத்த அடி எடுத்து வைக்கிறா.


வழிமுழுவதும் சரியான இம்சை திட்டிக்கொண்டே வந்தான்.


ராதா அருகில் இல்லாத குறையை சிறப்பாக நிரப்பினாள் இந்த அனு.



"இவளை கட்டிக்கிட்டதுக்கு ஒரு கழுதையை கட்டி இருக்கலாம். பிச்சைக்காரன் போல, இந்த நாயை தேடி அழஞ்சிட்டிருக்கேன், பெயரை பாரு கண்ணன். வாழ்க்கைக்கு போட்டியாக வந்தது பத்தாது'ன்னு பெயரில் கூட போட்டிக்கு வந்து நிக்கிறான்"



கையிலிருந்த போட்டோவில் ராதாவும், முன்னால் காதலனுமான மாதவ கண்ணனுடன் சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்தால் எரிச்சலாக வந்தது கிருஷ்ணாவுக்கு.



இன்றோடு ஒருவாரம் ஆச்சி... அவனை தேடவும் அனுப்பிட்டு. அந்த ஊரில் எது ஸ்பெஷல் என்று நெட், ஃபேஸ் புக், இன்ஸ்டா என அலசி தேடி கண்டு பிடித்து.



"ஹாலோ மாமா... இது வேணும் அது வேணும்" என்று ஒருபக்கம் ராதா வைத்து செய்தாள்.



அவள் செய்யும் சேட்டைக்கு நடுவில் இந்த டுபாக்கூர் மாதவகண்ணனை வேறு தேடனும்.


மாதவ கண்ணனை கிருஷ்ணா கண்டுபிடிப்பானா? இல்லை ராதாவிடம் மிதி வாங்குவானா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Top