• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

20. இனிதே முடிந்தது

Dharshinichimba

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
76
41
18
Chennai
அவளை விட்டு பிரிந்து தனியாக நின்றவன், "போய் பார்." என்றான்.

அவன் கண்களில் சிறிது ஏமாற்றம் தெரியவே அதை தாங்க முடியாமல், "இதோ வரேன்!" என்று கதவிருக்கும் திசைநோக்கி குரல் கொடுத்தாலும் அவன் கன்னத்தில் அவனே எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு சின்னத்தை பதித்து விட்டு ஓடிவிட்டாள்.

"அடிப்பாவி இவ்ளோ நேரமா நான் கெஞ்சிட்டு இருக்கேன். அப்போல்லாம் தராம... ஹம் இவ என்னை விட பாஸ்ட் போல இருக்கே?" என்று தலை ஆட்டியபடி தன் முன் நெற்றியில் இருந்த முடியை சிலுப்பிவிட்டுக் கொண்டு சிரித்தான்.

"அண்ணி! அம்மா உங்கள கூப்பிட்றாங்க. அங்க மோதிரம் மாத்த போறாங்க வாங்க." என்ற சுபா ஷக்தி உள்ளே இருப்பதை பார்த்ததும், "ஓ! அண்ணா இங்க தான் இருக்கீங்களா? நீங்களும் வந்துருங்க. உங்களை அங்க காணம்னு ரொம்ப நேரமா தேடிட்டு இருக்காங்க." என்றவள் மஹாவின் காதருகில், "பரவால்ல அண்ணி. நீங்க பொறுமையா வாங்க. நான் சமாளிச்சிக்குறேன்." என்று கண்ணடித்தாள்.

"சுபா! உனக்கு வாலுத்தனம் அதிகமாகிடுச்சு. நான் வரேன் போ." என்று கன்னத்தை மெதுவாக கிள்ள.

"ஐயோ மேக்கப் கலஞ்சிடும் அண்ணி. விடுங்க அண்ணி." என்று திரும்பி போனாள்.

சுபா சென்ற பின் கதவை சாத்திய மஹா, "நாம வெளிய போலாமா? நம்மள கூப்பிட்றாங்க" என்றாள் சக்தியிடம்.

"போலாம். ஆனால் நிச்சயம் முடிந்தவுடன் என்னுடன் கண்டிப்பாக வெளியே வர வேண்டும்." என்றான் கேள்வியாய்.

"அது எப்படி முடியும் எல்லோரும் இருக்கிறார்கள்?" என்றாள்.

"அதெல்லாம் உனக்கு ஏன்? நான் பார்த்துகிறேன் டார்லி." என்று அவள் மூக்கோடு தன் மூக்கை உரச.

"உனக்கு ஒன்னு வாங்கிட்டு வந்துருக்கேன்." என்று அவளுக்காக தான் பார்த்து பார்த்து வாங்கிய மொபைலை கொடுத்தான்.

"இந்தா இது உனக்காக நான் வாங்கிய மொபைல். சிம் எல்லாம் போட்டு பக்காவாக ரெடி. இனி நீ நினைக்கும் பொழுது என் கூட பேசலாம்." என்று குறும்பாக சிரித்தான்.

அங்கே வெளியே சக்தியின் அம்மா,

"நிலா அண்ணன் எங்கே காணோம் ?"

"ஹ்ம் அவன் பிரென்ட் வந்தான்னு சொல்லிட்டு போனான்." என்றாள்.

"சுபா எங்க மஹாவ காணாம?" என்றார் சுரேஷின் அம்மா.

"மா நீங்க தானே போய் ரெஸ்ட் எடுக்க சொன்னிங்க."

உள்ளே ஷக்தி மஹாவிடம்,

"அன்னைக்கு நீ கட்டி இருந்த புடவை உன் நகைகள் எல்லாம் மிகவும் அழகாக இருந்தது."

"அம்மா தான் கொடுத்தார்கள்." என்ற மஹாவிடம்.

"ஹ்ம் அப்படியா? அதெல்லாம் நான் உனக்காக பார்த்து பார்த்து ஆசையாக வாங்கி கொடுத்தது." என்று குறும்பாக சிரித்தான்.

"நிஜமாவா?" என்றாள் அப்பாவியாய்.

'ஐயோ இவ்ளோ க்யூட்டா பேசி கொல்றியேடி. ஷக்தி இதுக்கு மேல இங்க நின்ன, நீ அவ்ளோ தான் உஷாராயிடு!' என்று மனதிற்குள் பேசினான்.

"உன்
கள்ளங்கபடம் அற்ற
செயல்களால்
உன்னையும் அறியாமல்
என்னை கவர்ந்து சென்ற
கள்ளியடி நீ!

இன்னும்
போக போக
குழந்தையின் மனம்
கொண்டு துறுதுறுவென்று
என்னை சுற்றிவர
உனக்கே தெரியாமல்
அதுவே என்னை
நெருங்க சொல்லுதடி உன்னிடம்!"

"ஆமாம்! சரி வா போகலாம் இதற்கு மேல் இங்கு இருந்தால் என்னால் அமைதியாக இருக்க முடியாது." ஷக்தி

"ஏன்?" என்றவளை ஷக்தி பார்த்த பார்வையில் எல்லாம் புரிந்து விட,

"ஆமாம் டைம் ஆகுது போலாம்." என்று நழுவி சென்றாள்.

ஷக்தி முதலில் வெளியே செல்ல சிறிது நேரம் கழித்து மகா வெளியே வந்தாள்.

சுரேஷுக்கும் ஜனனிக்கும் வாய் போர் நடந்து கொண்டிருந்தது.

"ஏ வேணாம் என் கைல மோதிரம் போட்ட உன் விரல் எல்லாத்தைம் வெட்டிருவேன்." என்று முறைக்கும் ஜனனியை பார்க்காமல் மோதிரம் போட்டான்.

"ஹேய் மோதிரம் போடக் கூடாதுன்னா எதுக்குடி இங்க வந்த? உங்க வீட்லயே இருக்க வேண்டியது தானே. நீ மட்டும் அமைதியா நல்ல பொண்ணா நிப்ப, நான் மோதிரம் போடாம திட்டு வாங்கணுமா? போடி வேற வேல இல்ல." என்று கிசுகிசுத்தான் சுரேஷ்.

"இருடா உனக்கு இருக்கு?" நறுக்கென்று அவன் இடுப்பில் கிள்ளிவிட்டாள் ஜனனி.

"ஆ பிசாசு அறிவுக்கெட்ட முண்டம் எதுக்குடி கிள்ளிவிட்ட ?" என்று கோவத்தில் கத்துபவனை பார்த்து பதில் இல்லாமல் சிரித்தாள்.

"பத்திரிக்கை வாசிக்கிறேன். எல்லோரும் அமைதியா இருங்க உங்க ரெண்டு பேர் சண்டையை அப்புறம் வச்சுக்கோங்க." என்ற ஐயர் பத்திரிக்கையை படித்து காட்டினார்.

இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நிச்சயிக்கப்ப்பட்டு இருந்தது.

ஷக்தி மஹாவை நோக்கியவாறே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான்.

சுரேஷின் அன்னை தன்னை நோக்கி வருவதை கண்டவன் சற்று முகத்தை திருப்பினான்.

"ஷக்தி எல்லோரும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். தாம்பூல பை இரண்டு மூட்டை தான் வந்திருக்கிறது .இன்னும் ஒரு மூட்டை வரணும் கொஞ்சம் போய் வாங்கி கொண்டு வந்து விடு." என்றார்.

"சரி ஆன்ட்டி"

"மஹாவையும் கூட கூட்டிட்டு போ." என்று மஹாவை அழைத்து சக்தியுடன் சென்று வருமாறு கூறிவிட்டு போனார்.

"வா போலாம்." என்று காரை நோக்கி நடந்தான்.

போகும் வழி முழுதும் இருவரும் பேசாமலே நிமிடங்கள் கழிந்தது.

தாம்பூல பை வாங்கி வந்து விட்டார்கள்.

இருவருக்குள்ளும் மௌன போர் நடந்து கொண்டிருந்தது.

எல்லோரும் கிளம்பி விட்டனர்.

சக்தியின் குடும்பமும் கிளம்பினார்கள். "அம்மா நீங்கள் கிளம்புங்கள். எனக்கு இங்கே வேலை இருக்கிறது." என்றான்.

சக்தியின் அம்மா, "சரி டா இங்கே வா." என்று தனியாக அழைத்தவர்.

"உனக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கிறது அல்லவா நான் அப்பாவிடம் பேச போகிறேன்." என்றார்.

"அம்மா நான் தான் உன் இஷ்டம் சொல்லிட்டேன்ல எதுக்கு திரும்பி கேக்கற கிளம்புங்கள்." என்று அனுப்பி வைத்தான்.

"ஆண்ட்டி நான் மஹாவை கொஞ்சம் வெளிய கூட்டிட்டு போயிட்டு வரேன்." என்றான் ஷக்தி.

"சரிப்பா சீக்கிரம் வந்துடுங்க. மழை வர மாதிரி இருக்கு." என்றாள்.

"சரிங்க ஆண்ட்டி." என்று மஹாவின் அறையினுள் நுழைந்து "போலாமா?" என்றான்.

சற்று தயங்கி "யாரவது பார்த்துட்டாங்கன்னா? "

"அம்மா கிளம்பிட்டாங்க. வேற யார் பார்த்தாலும் எனக்கும கவலை இல்ல. என் பொண்டாட்டிகூட நான் வெளிய போறேன் வா." என்று கூட்டி சென்றான்.

காரில் வெகு தூரம் சென்றார்கள்... .