20.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே
அபார்ட்மெண்ட் வாசலில் வண்டி வந்து நிற்கவும் பரத் வாகியை ஒரு பார்வை பார்க்க…
வாகி, “என்னாச்சு இங்க நின்னுட்டு இருக்கீங்க ?
எங்க கிளம்பிட்டீங்க சொல்லாம கொள்ளாம என்று பரத் கேட்க..அம்மாக்கு வாக் போகனும் ன்னு அதான்..
ப்ச் இருக்கிற என்று ஆரம்பிக்கும் போதே அடுத்த வண்டியாக பாதுகாவலர்களும் ரவியும் வர ,ரிஷியும் இறங்கி வர அமைதியாக வாகியை பார்த்து கொண்டு நின்றான் பரத்.
ரவி, “ என்ன என்று புருவம் உயர்த்த எந்த பாவனையையும் காட்டாதவன் என்னம்மா இந்த நேரத்துக்கு வெளியே என்று ரிஷியிடம் பேச…
சும்மா தான் பரத் அங்க ஃப்ரியா சுத்திட்டு இங்க ஒரு மாதிரி அடைஞ்சு இருக்க ஃபீல்..
அதுக்கு இன்னேரத்துக்கா ஏற்கனவே இங்க நமக்கு பாதுகாப்பு இல்ல உங்களுக்கு தெரியும் தானே அம்மா? என்று பரத் கேட்டதும் புரியுது பரத் ஆனா என்றவர் அமைதியாக இருக்க..
ஓகே மா நீங்க தூங்குங்க என்று அனுப்பி விட..
டேய் என்ன ரகசியம் வச்சு இருக்க என்று ரிஷி சிரிக்க.. அப்படி ஒன்னும் பெரிய ரகசியம் எல்லாம் இல்ல பகலவன் பொண்ணு அதாவது மாலினியோட பொண்ணு ட்ரக்ஸ் யூஸ் பண்ணிட்டு பசங்களோட கும்மாளம் ன்னு ப்ளாஷ் நியூஸ் என்று நிறுத்த தாயாக பதறியவர் என்ன சொல்லுற அந்த பொண்ணு..
ம்மா அது பொண்ணா … அடங்கா பிடாரி..
அப்படி சொல்லாதே பரத் எல்லா குழந்தையும் நல்ல குழந்தை தான் சுற்று சூழல் தான் அவங்களை மாத்திடுது என்று ரிஷி சொல்ல..அதுக்கு என்ன வேணும் ன்னாலும் பண்ணலாமா?
வயசும் அந்த நிமிட தாக்கமும் தான் காரணம் பரத்..
அம்மா அதுக்காக எந்த எல்லைக்கும் …என்று முடிக்கும் முன்பே.. நாம் எல்லாம் சாதாரண மனுசங்க தான் பரத் மகானா மாறிடலையே அப்புறம் என்ன?
அப்ப எல்லாத்தையும் மறந்து மன்னிக்கனுமா..
நான் அப்படி சொல்லலையே…
சரி சரி போலாம் தூங்க என்று பரத்தை ஒரு பார்வை பார்த்தாள் வாகி…
ரிஷி, “ இதுல உங்க பங்களிப்பு என்ன?
நாங்க எதுவும் பண்ணல..
நிஜமாவா…
ஆமா
நம்பிட்டேன் என்றவர் விதுரிஷியை ஒரு அழுத்தமான பார்வை பார்க்க அம்மா அவளை வாட்ச் பண்ண மட்டும் தான் என்று தடுமாற..
அடக்கடவுளே என்று தலையில் கை வைத்து கொண்ட வாகி நீயெல்லாம் எப்படி டா ஐபிஎஸ் ஆன…?
போடி என்றவன் தாயின் அருகில் வந்து சாரி மா வாட்ச் மட்டும் தான் வேற எதுவும் என்றதும் அது எப்படி அவ்வளவு பெரிய ஆளோட பொண்ணு பட்டுன்னு மாட்டு வா விது அந்தளவுக்கு யோசிக்காம இருப்பேனா என்ன பண்ணிங்க..
நாங்க எதுவும் பண்ணல மா அவ தான் சேரக்கூடாத ஆட்களோட சேர்ந்து இன்னைக்கு ஒரு வழி ஆகி இருப்பா ஆனா இன்னைக்கு சேஃப்டி பண்ணி இருக்கோம்.
எப்படி போலிஸ் ஸ்டேஷன் ல வச்சா..
அம்மா…
ஆமா டா அம்மா தான் உனக்கு எனக்கு ஏன் இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும் கதையை எப்படி வேணும் ன்னாலும் எழுத முடியும் ன்னு என்றவர் என்னம்மோ இதெல்லாம் எனக்கு விருப்பம் இல்ல அவரைப் பத்தி உங்களுக்கு தெரியல எதாவது பண்ணிட்டே இருப்பார் யார் வேணும் ன்னாலும் மாட்டலாம் ஆனா அவர் மாட்ட மாட்டார் என்று உள்ளே சென்றுவிட
அதையும் பார்க்கலாம் என்று நினைத்து கொண்டாள் வாகி..
அந்த வீட்டு ரத்தமாச்சே யோசிக்காமல் இருப்பாளா…
ராமைய்யா, “ டேய் எங்கடா போய் தொலைஞ்சீங்க என்று போனில் கத்த..
சார் இங்க தான் என்று நிறுத்த..
எனக்கு தெரியாது என் பொண்ணு எப்படியாவது வெளியே வரனும் ஆட்களை ரெடி பண்ணு என்று சொல்ல..
பண்ணிடலாம் சார் இது ஒன்னும் பெரிய வேலை இல்ல என்றவன் துண்டித்து விட…
அறைக்குள் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தார் ராமைய்யா ஏற்கனவே வீட்டில் நடந்த கலவரங்கள் போதாது என்று இதோ இப்போது இவ்வளவு பெரிய விஷயத்தை போட்டு குடும்பத்தின் மானத்தை கப்பலேத்தி விட்டுவிட்டார்களே என்று யோசிக்க யோசிக்க அடுத்து என்ன என்று புரியவில்லை இதை கூட விசாரைணையில் என் மகள் தவறு இல்லை இடைப்பட்டவ்களால் நேர்ந்தது என்று அதற்கான வேலைகளை ஏற்கனவே முடுக்கி விட்டு விட்டார். ஆனால் தாரா விஷயம் என்ன செய்வது என்றே புரியவில்லை. பகலவன் வேறு எதையுமே கேட்காமல் வெளியேறி இருந்தான் எல்லாமும் சேர்ந்து அடுத்து என்ன நடக்கும் என்று அவர் ஒரு கணக்கு போட்டு கொண்டு இருக்க..
அப்போது தான் வர்மன் பகலவனை அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான். அகத்தியன் முதல்கொண்டு அனைவரும் இங்கே தான் இருந்தனர்.
என்ன பகலவன் யாருக்கோ நடந்தது மாதிரி நீங்க வெளியே போய்ட்டீங்க ..
என்ன சொல்லனும் அகத்தியன் சார் ..
பகலவன்…
எல்லாத்துக்கும் ஒரு முடிவை உங்க பொண்ணு சொல்லிட்டாங்க இல்ல அதை செயல்படுத்துங்க ..
என்ன பேசுறீங்க சின்ன பசங்க மாதிரி உங்களுக்கு சாதாரணமா இருக்கலாம் ஆனா இது குடும்ப கௌரவ பிரச்சினை
ஓஓஓ அப்படியா..உங்க கௌரவத்துக்கு தான் எங்களை ச்சே ச்சே என்னை பலி ஆக்கிட்டீங்க என்று மாலினியை பார்க்க.
பகலவா என்று மூத்தவன் அழைக்க..
அண்ணா ப்ளீஸ் உன்னோட வாழ்க்கை முறை வேறன்னு ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன் எதையும் என்கிட்டே எதிர்பார்க்காதே என்றவன் அறைக்குள் செல்ல பார்க்க…
நில்லுங்க ..
ப்ச் என்ன வேணும் மாலினி..
உங்க முடிவு ..
அதான் நீ முடிவு பண்ணிட்டியே அப்புறம் என்ன?
ஓஓஓ அப்ப அந்த அநாதையை தேடி போகனும் ன்னு முடிவு பண்ணிட்டீங்க போல…
நிறுத்து மாலினி நான் இருக்கும் போது அவ எப்படி அநாதை அதுவும் என்னைய விடு அவளுக்கு இரண்டு பிள்ளைங்க இருக்காங்க அப்புறம் எப்படி அவ அநாதை ஆவா…
அதான் நானும் கேட்கிறேன் அந்த இரண்டாவது என்று நக்கலாக பார்க்க
எங்க பையன் தான் விதுரிஷி என்று பகலவன் சொல்ல..
என்ன என்று அனைவரும் ஷாக் ஆகி நிற்க..
உங்க பையனா அவன் வயசு என்ன?
ஏன் அவன் வயசுக்கு என்ன என்று பகலவன் எகிற…
இன்னொரு குழந்தைக்கு வாய்ப்பு இல்லன்னு தானே சொன்னாங்க என்று மாலினி அக்கா கேட்க..
போதும் நிறுத்துறீங்களா ….என்று கத்தியவனை பார்த்து....
வர்மா ..
மாமா தேவையில்லாத ஆர்க்யூ வேணாம் விது, ரிஷி அத்த பையன் தான் அதுல எந்த மாற்றமும் இல்லை அதேநேரம் அவன் பகலவன் மாமாக்கு பையன் தான் இதோட இந்த பேச்சை விடுங்க என்றவன் பகலவனை பார்க்க அறைக்குள் செல்லாமல் ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்து விட..
வர்மன், “ மாமா வாங்க கொஞ்ச நேரம் தூங்கி எழுங்க..
எழுந்ததும் எனக்கு முடிவை சொல்லிட்டு அடுத்த வேலையை பாருங்க என்று மாலினி மீண்டும் பேச…
என்ன வேணும் உனக்கு என்று சரியாய் கேள்வியை வைத்தார் பகலவன்
நான் என்ன ஒன்னு இல்லாதவளா? உங்க கிட்ட கையேந்த..
ஓஓஓ …
சரி காலைல பேசிக்கலாம் என்று எழுந்து வர்மன் அறைக்குள் சென்று விட்டார் பகலவன் ..மற்றவர்களும் அங்கே இருக்கும் ஒவ்வொரு அறைக்குள் நுழைந்து கொள்ள விடியல் அடுத்த டாஸ்க்கை தயாராக வைத்து இருந்தது…
இரவு முழுவதும் யோசித்து ஒரு முடிவை எடுத்துவிட்டு விடியும் நேரம் உறங்கிவிட்டார் பகலவன்.
நல்ல உறக்கத்தில் இருந்த வர்மனை அவன் போன் விடாமல் ஒலிக்க ப்ச் நிம்மதியே போச்சு என்று எழுந்தவன் போனை எடுக்க வர்மனின் பிஏ தான் அழைத்து கொண்டு இருந்தான்.
என்ன விஷயம் என்று எரிந்து விழ…
சார் நம்ம ஸ்கூல் ல பிரச்சினை
என்ன பிரச்சினை?
மத்த ஆக்டிவிடிஸ் ன்னு ஒருத்தருக்கும் தமிழ் ஒழுங்கா சொல்லித்தரல எங்க குழந்தைக்கு ஒரு எழுத்தும் சரியா தெரியல இத்தனை வருஷமா இந்த ஸ்கூல் ல தான் படிக்குறாங்க அப்ப எல்லாம் சரியா திருத்தாம இப்ப ஒன்பதாவது ல வந்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் அது இதுன்னு மார்க் இல்ல என்று சொன்னதை எல்லாம் சொல்லியவன் கூடவே ஒரு லிங்க் அனுப்பிவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட…
புகார் அளித்த பெற்றோர் நேரடியாக கல்வித்துறை அமைச்சருக்கே சொல்ல வேண்டும் என்று பேட்டி தர…
வர்மன், “ப்ச் கண்ணா லட்டு தின்ன ஆசையா ன்னு வேற இப்ப குதிப்பாளே என்று நினைத்தவன் அடுத்த நொடி அடியேய் இது உன்னோட வேலையா என்று யோசித்து கொண்டு அமர்ந்து இருக்க..
ராமைய்யா, “ வர்மா என்று வீடே அதிரும்படி கத்த…
படக்கென எழுந்து வெளியே வந்தவனிடம்…. என்ன வர்மா எல்லாம் கை மீறி போய்ட்டு இருக்கு இன்னும் எத்தனை நாளைக்கு இதே விஷயமா பேசிட்டு இருக்கிறது என்று எரிந்து விழ…
என்னாச்சு தாத்தா…
ஸ்கூல் ல இருந்து போன்…
அதை நான் பார்த்துக்கிறேன் தாத்தா…
ப்ச் இப்ப இதுக்கு என்ன பதில் தரது…
பார்க்கலாம் பைன் போடுவாங்க அதை பார்த்துக்கலாம் விடுங்க என்று சொல்ல அடுத்து அடுத்து போன் வந்த வண்ணமாகவே இருக்க. அவசரமாக குளித்து கிளம்பியவனை அமைதியற்று, கட்டிலில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தான் பகலவன்.என்ன மாமா பார்வை பலமா இருக்கு…
வாகியை உனக்கு முன்னாடியே தெரியுமா வர்மா..
ம்ம்ம்…
என்ன விதத்தில் வர்மா..
மாமா…
சொல்லு வர்மா…
லண்டன் ல…
ஓஓஓ அது வாகி தான் இல்ல நான் தான் மறந்துட்டேன் என்றவர் பெருமூச்சுடன்…,அவளை மறந்துடு வர்மா.. அவ உயிரோட மட்டுமாச்சும் இருக்கனும் ன்னு நினைக்கிறேன் என்றவர் எழுந்து வெளியே வர மாலினி தாராவை அழைத்து கொண்டு கிளம்பி தயாராகி வர…
பகலவன், “ உனக்கு என்ன தேவைன்னு நோட்டீஸ் ல இருக்கு அது மட்டும் போதும் தானே வேற எதுவும்..
வேண்டாம் என்று பட்டென சொல்ல..
ஓஓஓ டாக்குமெண்ட் ரெடி பண்ணுறேன் வாங்கிக்கோ என்றவர் திரும்பி ராமைய்யா வை பார்த்து எனக்கு வரவேண்டிய பங்கை நீங்க மாலினி தாரா பேர்ல எழுதிடுங்க என்று சொல்லிவிட்டு வெளியேறி விட..
ராமைய்யா, “ என்ன மாலினி ..
என் வாழ்க்கை நாசமா போனதுக்கு உங்க மகன் தர நஷ்ட ஈடு..
என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா…
ஆமா தெரிஞ்சு தான் சொல்லுறேன் எனக்கு இருக்க சொத்தே போதும் தான் ஆனா எந்த காலத்திலும் இந்த சொத்தை அந்த அநாதைங்க அனுபவிக்க விடமாட்டேன் இதுக்கான அதிகாரம் என்னைய மட்டும் தான் சார்ந்து இருக்கனும் அது தான் எனக்கு மரியாதை என்றவள் தாரா போகலாம் என்று நடக்க..
நில்லுமா…
சொல்லுங்க என்று ராமைய்யாவை நேருக்கு நேர் பார்க்க..
இந்த சொத்து தான் உனக்கு முக்கியமா?
அப்படி எதுவும் இல்ல ஆனா இது எனக்கான உரிமையா மாற்றனும் ன்னு நினைக்கிறேன் ..புரியலம்மா…
என் வாழ்க்கை அர்த்தமே இல்லாதது ன்னு உங்க எல்லாருக்கும் நான் சொல்லனும் ன்னு அவசியம் இல்ல அது எல்லாருக்கும் தெரியும் . சூழ்நிலை சந்தர்ப்பம் ன்னு இந்த கல்யாணம் ஆனா எந்த விதத்திலும் எனக்கான வாழ்க்கையா மாறவே இல்லை . உலகத்துக்கு நான் இரண்டாவது மனைவி ஆனா இப்ப அதுக்கும் அர்த்தம் இல்ல அட்லீஸ்ட் இந்த சொத்தில் ராமைய்யா குடும்பத்து வாரிசுகளுக்கானதுன்னு உலகம் பேசுற இடத்தில் என்னோட பெயரும் என் பொண்ணு பெயரும் இருக்கனும் அவ்வளவு தான் என்றவள் வெளியேறி இருந்தாள்.
தொடரும்