மகாபலிபுரம் கடலில் தண்ணீருக்குள் மூழ்கிய சத்யபாரதியை கிருஷ்ணா காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து, மருத்துவர் அவளது உயிருக்கு அபாயம் இல்லை என்று கூற நிம்மதியடைந்தான். ஆனால் அதே சமயம் அத்தை கனகவல்லி தொலைபேசியில் கணவனுக்கு உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறவும்,அங்கே கிளம்பிச் சென்றால்...
தர்மலிங்கம் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கனகவல்லி அவனைக் கண்டதும் பெரிய குரலெடுத்து அழ ஆரம்பிக்க அந்தப் பக்கமாய் வந்த செவிலிப் பெண், "இந்தாம்மா இது ஆஸ்பத்திரி சத்தத்தை குறைச்சுக்கோ"என்று அதட்டிவிட்டுப் போக வாயைப் பொத்திக் கொண்டு அழலானாள்.
"என்னாச்சு அத்தை? செக்கப் எல்லாம் சரியாக போய் வருகிறீர்கள் தானே? என்று வினவினான்.
"அதெல்லாம் தவறாம போய் வந்து இருக்கிறோம் கண்ணா. போன தடவை வந்தப்பவே மாமாவுக்கு பிபி அதிகமாக இருக்குனு டாக்டர் சொன்னாரு. நானும் பத்தியமாதான் சாப்பிட கொடுக்கிறேன். மாத்திரை மருந்தெல்லாம் சரியா தான் கொடுக்கிறேன். என்ன செஞ்சு என்ன கண்ணா? எனக்கு தெரியாமல் வெளியே போய் எண்ணெய் பலகாரம் சாப்பிட்டு வந்துடறார். அன்னிக்கு டிரைவர் வந்து சொன்னான். நான் கேட்டால், ‘’வாழறதுக்காக உப்பு சப்பில்லாமல் சாப்பிடறதை விட, நாக்கு ருசியா சாப்பிட்டு சாகலாம்டி. இப்படி கேள்வி கேட்கிற வேலை வச்சிக்காதேன்னு சண்டைக்கு வர்றார், நான் என்ன செய்வேன்" அழுகையுடன் சொல்லி முடித்தபோது அனிஷாவுடன் ரவி அங்கே வந்து சேர்ந்தான்.
"அத்தான் அப்பாவிற்கு என்னாச்சு?? என்று பதற்றமாக வினவினாள்,
இன்னும் டாக்டர் செக்கப் முடிஞ்சு வரலை அனி, அவர் வந்தால்தான் என்ன ஏதுன்னு விவரம் தெரியும்"என்றவன் நீங்கள் எனக்கு முன்பே கிளம்பி விட்டீர்களே ? ஏன் இவ்வளவு லேட்?? என்று வினவினாள்.
"நாங்க வீட்டுக்கு போற வழியில் இருந்தோம், உங்கள் போன் வந்ததும் திருப்பி வர்றப்போ வழியில் ட்ராபிஃக் அதான் அத்தான்".
“ஓ! சரி என்றவன் யோசனையில் ஆழ்ந்தான். கிருஷ்ணா. அவன் அறிந்தவரையில் மாமா அப்படி பொறுப்பில்லாதவர் இல்லை. அவருக்கு அனிஷாவின் எதிர்காலம் பற்றிய கவலையில் தானே அவர் அன்றைக்கு அவனை வந்து சந்தித்து பேசியதே அதற்கு சாட்சி. அப்படியிருக்க இது ஏன் ? ஆனால் இப்போது அவரது நடவடிக்கைக்கு காரணம், வேலை எதுவும் செய்யாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்து கண்டதை எண்ணி குழப்பிக் கொள்கிறார் என்று புரிந்தது.
மருத்துவர் சிகிச்சை அறையில் இருந்து வெளிப்பட்டு, மிஸ்டர் கிருஷ்ணா நீங்க என்னோடு கொஞ்சம் வாங்க" என்று தன் அறைக்கு செல்ல, தானும் வருவதாக சொன்ன கனகவல்லியை இருக்கச் சொல்லி அவன் மட்டுமாக மருத்துவருடன் சென்றான்.
சத்யபாரதி கண்விழித்த பின் மருத்துவர் அலோசனையை கேட்டுவிட்டு ரூபா வீட்டிற்கு அழைத்து வந்தாள். மகாபலிபுரத்தில் இருந்து கிளம்பியது முதல் வீடு வந்த பிறகும், சத்யபாரதி பேசவில்லை. ரூபா சொன்ன விபரங்களை கேட்டதில் அவள் மனம் கிருஷ்ணாவை பற்றி ஏதேதோ யோசனையில் ஆழ்ந்து போயிற்று. வரும் வழியில் வாங்கி வந்த சாப்பாட்டை சாப்பிட்டு முடித்ததும் மருத்துவர் தந்த மாத்திரையை சத்யபாரதிக்கு கொடுத்த ரூபா, "சத்யா என்னாச்சு ஒன்னுமே பேசமாட்றே?? ரொம்ப சோர்வாக இருக்கிறதா?" என்று வினவினாள்.
"இல்லை என்று தலையசைத்துவிட்டு "என்னை தண்ணியில இருந்து காப்பாத்தி தூக்கி வந்தப்போ, கிருஷ்ணா சொன்னதை மறுபடியும் சொல்லு ரூபா ".
"அவளுக்கு தான் தண்ணீர் என்றாலே பயம் என்று தெரியாதா ரூபா? அப்புறமும் ஏன் தண்ணிக்குள்ளே கூட்டிட்டு போனேனு கேட்டார். அவர் குரலில் ரொம்ப கோவம் பதற்றம் தெரிஞ்சது". அவரோட மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று அத்தை போன் பண்ணலைன்னா கிருஷ்ணா சார் கிளம்பியிருக்கவே மாட்டார் சத்யா, அவருக்கு இரண்டு மாசம் முன்னாடி தான் அறுவை சிகிச்சை நடந்துச்சாம். பாவம் இப்ப மறுபடி என்ன பிரச்சினையோ? என்ற ரூபா, "அடடா நாம வந்ததை சொன்னப்போ அதை விசாரிக்காம விட்டு விட்டேனேமா" என்று வருந்தினாள்.
அவள் அப்படி சொல்லவும் சத்யபாரதிக்கு ஏதோ பொறிதட்டியது. அது என்ன என்று யோசித்தவாறே, "ஆமா அவர்கூட ஒரு பொண்ணு இருந்தாளே அவள் பெயர் என்னனு உனக்கு தெரியுமா?" என்று வினவினாள் சத்யபாரதி.
"தெரியும். கிருஷ்ணா சார் அவர்கிட்ட "அனிஷாவை கூட்டிட்டு கிளம்பு ரவி" ன்னு சொன்னதை கேட்டேன்
“ஓ! என்ற சத்யபாரதி மேலே பேசவில்லை. அவளுக்கு தண்ணீர் என்றால் பயம் என்று அறிந்தவர்கள் அவளது குடும்பத்தினர் தான். அவர்களை தவிர்த்து அதை அறிந்தவர்கள் வசந்தியும் கண்ணனும் தான். கிருஷ்ணாவிற்கு அது எப்படி தெரியும்? கண்ணனுடைய மாமன் மகள் பெயரும் அனிஷா தான். அப்படி என்றால் அன்றைக்கு தர்மலிங்கம் காண வந்த போது அவள் அதை அறிந்து விடாமல் இருக்கத்தான் இல்லாத கதை சொல்லி தொழிற்சாலை பக்கம் அனுப்பியிருக்கிறான். அதுபோலத்தான் அன்று ஜவுளிக்கடையில் புடவை தேர்வு செய்தபோது ஏதோ சொல்ல வந்துவிட்டு சொல்லாது விட்டான்.
சில தினங்களுக்கு முன் ரவி அவளை சந்தித்தது நினைவுக்கு வந்தது. அன்று புரியாதது இன்று புரிந்தது. ரவியை தற்காலிகமாக வேலையை விடச் செய்து அவளுக்கு வேலை கொடுத்து இருக்கிறான். ஏன்?
எல்லாவற்றையும் விட முதல் நாள் அந்த "பாரதி" என்ற அழைப்பு என்று ஒவ்வொன்றாக நினைவிற்கு கொணர்ந்து கோர்த்து பார்த்த சத்யபாரதி அந்த கணத்தில் உண்மையில் உணர்ந்தது பெரும் ஏமாற்றமே. ஆனாலும் அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. சட்டென்று அவளுக்கு கிருஷ்ணா கொடுத்த பரிசுப் பொருள் நினைவு வர எழுந்தோடி சென்று எடுத்து வேகமாக பிரித்துப் பார்த்தவளுக்கு அழுகை தான் முட்டிக் கொண்டு வந்தது. சில நிமிடங்களில் பாலை சுடவைத்து எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்த ரூபா, கட்டிலில் விழுந்து அழுகையில் குலுங்கியவளை பார்த்து அதிர்ந்து நின்றாள்.
சத்யபாரதி, கிருஷ்ணா கொடுத்த பரிசுப் பொருளைப் பார்த்ததும் திகைத்துதான் போனாள். அது அவளது அண்ணனின் குடும்பத்துடன் கிருஷ்ணா எடுத்துக் கொண்ட புகைப்படம். திருமண நாளுக்காக அவள் தேர்வு செய்த உடைகளில் அண்ணனும் அண்ணியும் காட்சி அளித்தனர். கூடவே அவனும் அவளுமாக சிறுபிராயத்தில் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் இருந்தது. அவன் தான் கண்ணன் என்பதை தெளிவாக சொன்னது படம். சின்ன குறிப்பும் வைத்திருந்தான்.
"பிரியமான பாரதிக்கு" என்று ஆரம்பித்து, இப்போது புரிந்திருக்கும் பாரதி. நான் உன் நண்பன் கண்ணன் தான் என்று. நான் ஏன் மறைத்தேன் என்று உனக்கு விளக்கம் சொல்ல காத்திருக்கிறேன்
இப்படிக்கு
உன் நண்பன் கண்ணன்
எல்லாமும் பார்க்க பார்க்க அவளுக்கு அழுகைதான் வந்தது.
சத்யபாரதி பாதி பேச்சில் எழுந்து ஓடவும் ரூபா, அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது அவள் அப்படித்தான் ஏதேனும் நினைவு வந்துவிட்டால் பாதிப் பேச்சில் ஓடுவாள். அப்புறமாக இன்ன விஷயம் என்று சொல்லுவாள். அதுபோலத்தான் இதுவும் என்று எண்ணியவளாக பாலை சுடவைத்து எடுத்துக்கொண்டு சென்றால், அங்கே கண்ட காட்சியில் அதிர்ச்சியடைந்தாள். அவளுக்கு விஷயம் தெரியாத போதும், சத்யாவின் அழுகையை நிறுத்த வகை தெரியாமல் செய்வதறியாது நின்றவளுக்கு கையில் இருந்த பால் நினைவுக்கு வர, மெல்ல நகர்ந்து வாயிற்புறம் சென்று நின்று, சத்யா, பால் கொண்டு வந்திருக்கிறேன்" என்றவாறு அப்போதுதான் உள்ளே வருபவள் போல குரல் கொடுத்தபடி உள்ளே சென்றாள். அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டவள், சட்டென எழுது குளியலறைக்குள் புகுந்து முகத்தில் நீர் அடித்து கழுவி துடைத்துக் கொண்டு வெளியே வந்தபோது ரூபா கூடத்தில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பது தெரிய, பாலை குடித்துவிட்டு டம்ளரை சமையலறையில் கொண்டு கழுவி வைத்துவிட்டு திரும்பினால் சோபாவில் தலை சாய்ந்து அறைகுறையாய் தூங்கிக் கொண்டிருந்தாள் ரூபா.
வெளியில் சென்று வந்ததில் அவளும் களைத்திருந்தாள். இவள் சங்கடப்படக்கூடாது என்று அவள் டிவி பார்க்கும் பாவனையில் விலகி வந்திருக்கிறாள் என்று புரிய, குற்ற உணர்வில் குன்றியவளாய், மெல்ல தொட்டு எழுப்ப திடுக்கிட்டு விழித்தவள் அசட்டு சிரிப்புடன்," எப்படியோ கண் அசந்துட்டேன் சத்யா" என்றவளை அணைத்துக் கொண்டு, "நன்றி ரூபா" என்ற சத்யபாரதியின் குரல் கரகரக்க....அவளது முதுகை ஆறுதலாக வருடியவாறு, "நமக்குள் நன்றி சொல்லக கூடாதுன்னு சொல்லிட்டு அதை மீறலாமா?" என்றுவிட்டு அவளை கூட்டிப் போய் படுக்கையில் விட்டு தானும் அடுத்த கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
சற்று நேரத்தில் ரூபா தூங்கிவிட சத்யபாரதிக்கு உடலின் அசதியையும் மீறி மனதில் நினைவுகள் அலைக்கழித்தது. ஆனால் மருந்தின் வீரியத்தால் ஒருவாறு விடியும் தருவாயில் கண்ணயர்ந்தாள்.
மருத்துவமனையில்... தர்மலிங்கத்தின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்து, இன்னும் இரண்டு தினங்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் இனி அவருக்கு பூரண ஓய்வு தேவை. உணவு கட்டுப்பாடு மிகவும் தேவை. அதை அலட்சியம் செய்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஆலோசனை வழங்கினார் மருத்துவர்.
இரண்டு பெண்களையும் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு அவனும் வீட்டிற்கு சென்று வரும் வரை ரவியை மருத்துவமனையில் இருக்க சொல்லிவிட்டு கிருஷ்ணா கிளம்பினான். அவன் வீடு சேர்ந்தபோது ரூபா நல்லபடியாக வந்து சேர்ந்ததாக விவரம் தெரிவித்தாள். சத்யபாரதியை அந்த நிலையில் விட்டு வந்தது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. கூடவே மாமாவின் உடல்நிலை இப்படி ஆனதில் இங்கிருந்து உடனடியாக அவளை பார்த்து மனதில் இருப்பதை சொல்ல வழியின்றி போனதை எண்ணி வருந்தினான். கைப்பேசியில் அவனால் பேசமுடியும் தான் ஆனால் அவள் முகம் பார்த்து பேச விரும்பினான் கிருஷ்ணா.
ஆனால்... அவன் சொல்ல நினைத்து அவளை தேடும்போது மிகவும் தாமதமாகிவிடும் என்று அப்போது அவன் அறியவில்லை.
அனிஷா ரவியுடன் வந்தது கனகவல்லிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கணவனின் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் வைத்து அதுபற்றி அவள் ஒன்றும் கேட்கவில்லை. கூடவே அவன் மருமகளின் அலுவலகத்தில் வேலை பார்க்கிறவன் என்பதாலும் வீடு திரும்பும் வழியிலும் பேசமுடியவில்லை. வீடு வந்ததும் தன் அறையை நோக்கி செல்ல முயன்ற மகளை பிடித்து கொண்டாள்.
"ஏய் நில்லுடி"
தாயின் கோபம் புரியாமல் நின்றாள் அனிஷா.
"யாருடி அந்த ரவி? "
"இதைக் கேட்கவா கூப்பிட்டே? ? அவரைப்பற்றி தான் அங்கேயே சொன்னேன்ல அத்தானோட பி.ஏ."
"ஏய், நான் அதைக் கேட்கலை. அவன்கூட நீ எதுக்கு வந்தே? உனக்கும் அவனுக்கும் என்னடி சம்பந்தம்? வயசுப் பொண்ணு இப்படி கண்டவனோட சுத்தினா ஊர் உலகம் என்ன நினைக்கும்?" என்று படபடத்த தாயின் பேச்சில் குறுக்கிட்டு
"அத்தான் தானே அனுப்பி வைச்சார்" என்றாள்
"அடுத்தவன்கூட உன்னை அனுப்பிவிட்டு அப்படி என்ன உன் அத்தான் வெட்டி முறிக்கிற வேலையை பார்த்துக்கிட்டு இருந்தான்??" கோபம் கொஞ்சமும் குறையாமல் கனகவல்லி வினவினாள்.
அனிஷா நம்பி காதலித்த தேவராஜ் அன்றைக்கு மருத்துவமனையில் கருவை கலைத்த பிறகு அவளை வீட்டில் விட்டுப் போனவன் அப்படியே அந்தர்த்தனம் ஆகிவிட்டான். அவனை உடனே தேடுவதற்கு உடல்நிலையும் அப்போதைக்கு ஒத்துழைக்கவில்லை. ஒருவாறு அவள் மீண்டும் அவனைத் தேடி அலைந்த போதுதான், அவள் ஏமாந்துவிட்டது புரிந்தது. கூடவே அவமானமாக இருந்தது. தன்னை பெற்று வளர்த்தவர்களை ஏமாற்றியதற்கு உயிர் வாழவே தனக்கு தகுதியில்லை என்று அவள் உயிரை மாய்த்துக்கொள்ள தேர்வு செய்த இடம் மகாபலிபுரம். ஆனால் கிருஷ்ணாவின் வேண்டுகோளின்படி அவளை தொடர்ந்து வந்திருந்த அந்த ரவி அவளை சரியான தருணத்தில் காப்பாற்றி விட்டான். நடந்ததைச் சொன்னால் தாய் அவளை கொன்று போட்டு விடுவாள் என்று அஞ்சிய அனிஷா, வேகமாக யோசித்துவிட்டு, சற்று மாற்றி சொல்லத் தொடங்கினாள்....

☆☆☆