• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

20. வித்யா வெங்கடேஷ் - மறுகும் நீ! உருகும் நான்!

வித்யா வெங்கடேஷ்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 8, 2022
Messages
239
மறுகும் நீ! உருகும் நான்!
-வித்யா வெங்கடேஷ்

ஊடலும் காதலும் நிரம்பிய தங்களுடைய ஐம்பது வருட இல்லற பயணத்தின் பொன்விழா நன்னாளை கோலாகலமாகக் கொண்டாட திட்டமிட்டிருந்த மூர்த்தியின் பொறுமையைச் சோதித்தாள் அவருடைய அன்பிற்கினிய மனையாள் திருமதி.சுதா மூர்த்தி.

பிரபல சர்வதேச நிறுவனத்தின் தலைமை அதிகாரியான அவரும், திருமண ஆலோசகரான அவளும், தங்கள் அன்றாட பணிகளைப் புறம்தள்ளி வைத்து, அன்றைய தினம் முழுவதும் தங்களுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

காலை ஏழு மணியளவில் புது மாப்பிள்ளை கணக்காக முகத்தில் பூரிப்பும், மனத்தில் காதலும் வழிய பட்டு வேட்டி சட்டையில் புறப்பட்டவரை அவர் சரிபாதி அழைத்து சென்ற இடமோ தன் அலுவலகத்திற்கு.

பெருமாள் கோயிலுக்குப் போகும் வழியில், அலுவலகத்தில் அரை மணி நேரமே வேலை என்றவள் அவரைக் கணக்கே இல்லாமல் காக்கவைத்தாள்.

விவாகரத்து செய்ய விரும்பும் தம்பதிகள் நீதிமன்றத்தின் படிக்கட்டுகள் ஏறும் முன் கவுன்சிலிங் என்ற பெயரில் ஆலோசனைகள் அளித்து அவர்களை நல்வழியில் நடத்தும் உன்னதமான சேவை செய்து வந்த தன் மனையாளின் பணியில் அவருக்கு அத்தனை பெருமிதம். எதற்கு எப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நன்கு உணர்ந்து செயல்படும் மனைவியின் குணம் அறிந்தவர் அவள் பேச்சுக்கு மறுபேச்சே சொன்னதில்லை.

அன்றும் அப்படித்தான்.

இருபதின் பிற்பாதியில் பயணித்த தம்தியரை அவள் சந்திக்க வேண்டியிருந்தது. தன் விசாலமான அலுவலக அறையின் பின்புறத்தில் மறைவாக இருந்த சிறிய அறையில் கணவரைக் காத்திருக்கச் சொல்லி, அவள் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

ஐந்து ஆண்டு தாம்பத்தியத்தில் வராத புரிதல் இனியா வரப்போகிறது என்று சலித்துக்கொண்ட இருவரும் அவள் ஆலோசனைகள் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

“வரவு செலவுகளை இழுத்துப் பிடிக்கும் நடுத்தர வர்க்கம்னு தெரிஞ்சுதானே என்னைக் கல்யாணம் செய்துகிட்ட! என்னம்மோ நான் உன்னை ஏமாத்திட்டா மாதிரி கண்ணீர் வடிக்கற!” சரவணன் ஏச,

“உங்க பணச்சுமை குறைக்கத்தானே நானும் வேலைக்குப் போகுறேன்னு சொல்றேன்! வீட்ட பார்த்துக்கோ, அம்மா அப்பாவுக்குத் துணையா இருன்னு என்னை முடக்கி வெச்சிருகீங்க! தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்று என்ன பிரயோஜனம்!” இடித்துக்காட்டினாள் மேகலா.

“நான் என்னமோ உன்னை அடிமையா நடத்துற மாதிரி பேசுற!” என்றவன், சுதா பக்கம் திரும்பி,

“வீண் மனவுளைச்சல் எதுக்குன்னு தான் அம்மா அவளை வேலைக்குப் போகவேண்டாம்னு சொல்றாங்க. எனக்கும் அதுதான் சரின்னு பட்டுது. அதுமட்டுமில்ல! என் ஒருத்தன் சம்பாத்தியத்தில் எங்களால நிறைவான வாழ்க்கை வாழமுடியுது. ஆனால் இவளுக்குப் பகட்டு வாழ்க்கை மேல ஆசை இருந்தால் நான் என்ன செய்யமுடியும்?” என்றவன் மனைவியைப் பார்வையால் சுட்டெரித்தான்.

“அத்தியாவசிய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகிட்டு வாழ்ந்தால் போதும்னு சொல்ற இவருக்கு, வாரத்துக்கு ஒரு நாள் வெளியே போயிட்டு வரணும், நாலு கதை புத்தகங்கள் வாங்கி படிக்கணும், நடுகூடத்தில் பெருசா ஒரு டி.வி மாட்டணும்னு கேட்கும் என்னுடைய சின்ன சின்ன ஆசைகள் எல்லாம் பகட்டுத்தனமா தான் தோணும்!” கொந்தளித்தவள்,

“சமையல் அறையிலேயே என் காலத்தை ஓட்டணும்னு தலைவிதி இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்!” சலித்துக்கொண்டாள்.

“பார்த்தீங்களா பார்த்தீங்களா மேடம்! சமையல் செய்யும் அடிப்படையான விஷயத்தையே குறையா சொல்றா!” துள்ளினான் சரவணன்.

“கணவன், குழந்தைகள், மாமியார் மாமனாருக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடுறதுல எனக்கொரு கஷ்டமும் இல்ல மேடம். ஆனால் இவங்க வீட்டுல அடுப்பை அணைக்கவே முடியாது. பொழுதுக்கும் விருந்தாளிகள் வந்து போயிட்டே இருப்பாங்க.” என்று கழுத்தை நொடித்தாள்.

“என் அக்காவும் தங்கையும் உனக்கு விருந்தாளிகளா டி!” பொங்கியவன்,

“எனக்கு இருக்கும் எல்லா உரிமையும் அவங்களுக்கும் நம்ம வீட்டில் இருக்கு!” அழுத்திக்கூறினான்.

“அது சரி! கல்யாணமான பெண்கள் நாள் கிழமையில் பிறந்த வீட்டுக்கு வந்தால் அவர்களைச் சீராட்டிப் பாராட்டலாம்! விடிஞ்சதும் விடியாததுமா வந்து இதைச் செய் அதைச் செய்ன்னு அதிகாரம் செய்யவேண்டியது. போதாக்குறைக்கு அவங்க பிள்ளைகளை என் தலையில் கட்டிட்டு ஊர் சுற்றவேண்டியது!” புகார் வாசித்தாள் மேகலா.

“ஊர் சுத்தறாங்களா! அவங்க அலுவலகத்தில் வேலை செய்யறது போதாதுன்னு நம்ம வீட்டுக்குத் தேவையான வெளி வேலைகளையும் சேர்த்தில்ல செய்யறாங்க!” எகிறினான் அவன்.

“யார் செய்யச் சொன்னா! என் வீட்டு வேலையை நான் பார்த்துக்கறேன்; அவங்க வீட்டு வேலையை அவங்க பார்த்துக்கட்டும்னு தானே சொல்றேன்!” மேகலாவும் சளைக்காமல் எகிறினாள்.

“மேடம்! எங்களுக்குக் கல்யாணமாகி அஞ்சு வருஷமாகியும் குழந்தை இல்லை. கடவுள் புண்ணியத்தில் ரெண்டு பேருக்கும் உடல்ரீதியாகவும் எந்தப் பிரச்சனையும் இல்ல; மனச லேசா வெச்சுக்கிட்டாலே எல்லாம் நல்லபடியா நடக்கும்னு டாக்டர் சொல்லிருக்காங்க! அதனால்தான் அவளை வெளிவேலைகளைச் செய்யாதேன்னு அக்கா சொன்னாங்க. அவங்க குழந்தைகளை விட்டுட்டுப் போறது கூட மேகலாவுக்கு ஒரு மாறுதலா இருக்குமேன்னு தான்!” சரவணன் தன்மையாகப் பேச,

“போதுமே உங்க சகோதரிகளின் அக்கறை.” என்று உதட்டைச் சுழித்தவள்,

“அவங்களால தான் எனக்கு மனவுளைச்சலே மேடம்! அக்கறைன்ற பேருல அவங்க எங்க அந்தரங்கத்தில் தலையிடுறது எனக்குச் சுத்தமா பிடிக்கல. ஓவுலேஷன் நாள் சரியா கணக்கிட்டையா! இந்த டாக்டர்கிட்ட போக சொன்னேனே...இந்தச் சிகிச்சை எடுத்துட்டியா; நாள் தள்ளி போச்சான்னு பொழுதுக்கும் எங்க தனிப்பட்ட விஷயங்களைக் குடையுறதே அவங்க வேலை!” மூக்கை உறிஞ்சியவள்,

“அவங்க பேச்சும் பார்வையும் எப்படி இருக்கும் தெரியுமா! கேமரா வெச்சு எங்க படுக்கை அறையை சதாசர்வகாலமும் கண்காணிக்குறா மாதிரியே இருக்கும்!” என்று கண்கலங்கி போனாள்.

திஸ் இஸ் தி லிமிட்! எல்லாத்தையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் உன்னைத் திருத்தவே முடியாது. வெளியே போய் பாரு. இந்த மாதிரி அன்பும் அக்கறையும் காட்டும் புகுந்த வீட்டு சொந்தங்கள் இல்லாத பெண்களின் அவலநிலை அப்போதான் புரிஞ்சுப்ப!” என்று ஆக்ரோஷமாக உறுமியவன்,

“விவாகரத்து படிவங்களை எனக்கு அனுப்புங்க. கையெழுத்து போட்டு தரேன்!” தீர்க்கமாகக் கூறி வெளியேறினான்.

“என் உணர்வுகளைப் புரிஞ்சுக்க முடியாத ஒருத்தரோட வாழுறதுல எந்தப் பயனுமில்லை மேடம். மேற்கொண்டு என்ன செய்யணும்னு சொல்லுங்க!” கம்மிய குரலில் உரைத்தாள் மேகலா.

தலைகுனிந்து கண்ணீர் சிந்தும் பதுமையின் தலையில் ஆதுரமாய் வருடிய சுதா,

”என்னால உன் உணர்வுகளைப் புரிஞ்சுக்க முடியுது மா. உன் எதிர்பார்ப்புகள் ரொம்ப நியாயமானது. சரவணனும் உன் பக்கத்து நியாயத்தை ஒருநாள் கட்டாயம் புரிஞ்சுப்பார்.” என்றவள்,

படிவங்களைத் தயார் செய்துவிட்டு அழைப்பதாகக் கூறி வழியனுப்பி வைத்தாள்.

வெளியே வந்த மூர்த்தியிடம் நேரமானதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, கோவிலுக்குப் புறப்படலாம் என்று மலர்ந்த முகத்துடன் வண்டிச்சாவியை நீட்டினாள் சுதா.

அதை வாங்கும் சாக்கில், மனையாளின் விரல்களை ஒன்றுசேர குவித்தவர்,

“விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யறேன்னு பொய் சொல்லிட்டு அவங்கள சேர்த்துவைக்க போகுற! அப்படித்தானே!” குறும்பாகக் கண்சிமிட்டினார்.

“கண்டுபிடிச்சுட்டீங்களா!” உதடு பிரியாத புன்னகையுடன் அவள் வினவ,

“இந்தப் பெண்ணோட ஐம்பது வருடங்கள் குடும்ப நடத்திருக்கேன் மா!” மனைவியின் தோளினை சுற்றி அணைத்தவரின் முகத்தில் பெருமிதம் மின்னியது.

“அவங்கள சேர்த்து வைக்கணும்னா எனக்கு உங்க உதவி ரொம்ப முக்கியமுங்க! அதுக்காகத் தான் உங்களையும் இன்னைக்கு அழைச்சிட்டு வந்தேன்!” அவள் குழைய,

ஆச்சரியமும் ஆர்வமும் தலைக்கேறியவராய் மனையாளை ஏறிட்டார்.

மதிய உணவிற்குப் பின் மடித்த வெற்றிலை பாக்குடன் கோப்புகளையும் சேர்த்து நீட்டினாள் சுதா.

புளியோதரை, சக்கரை பொங்கல், நெய் முறுக்கு எனக் கோவில் மடப்பள்ளியில் இருந்து வாங்கிவந்த பிரசாதங்களை வயிறார புசித்தவரோ,

“உண்ட மயக்கம் கண்ணைக் கட்டுது! குழந்தைக்குக் கதை சொல்ற மாதிரி நீயே எல்லாத்தையும் சொல்லிடுமா!” எனக் கண்கள் சுருக்கி செல்லம் கொஞ்சி, தன்னருகில் அமரும்படி அவள் கரம் பிடித்து இழுத்தார்.

நாணமும் மிதப்பும் நிறைந்தவளாக அவர் அருகில் அமர்ந்தவள்,

“சரவணன் நம்ம அடையார் கிளையில் தான் மேற்பார்வை அதிகாரியாக வேலை செய்யறார்!” அவள் தொடங்கியது தான் தாமதம்.

“அப்படியா!” வாய்பிளந்தார் மூர்த்தி.

“ம்ம்!” என்று மென்மையாகத் தலையசைத்தவள், இரண்டு நாட்களில் நடக்கவிருக்கும் செயல்திறன் மதிப்பிடுதலில்(Performance Appraisal) அவன் விவாகரத்தை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி அவன் பணி உயர்வையும் வெளிநாட்டு பயணத்தையும் ரத்து செய்யுமாறு பரிந்துரை செய்தாள்.

“அது எப்படி மா ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து திறமைகளுக்கு முட்டுக்கட்டை போடுறது!” அது தொழில் தர்மம் இல்லை என்று மறுத்தார்.

“தெரியும் பா! அவருடைய பிழைகளைச் சுட்டிக்காட்ட இதைவிட வேற சிறந்த வழியில்லை.” என்றவள்,

தன்னுடைய குடும்ப வாழ்க்கையையே சமாளிக்க முடியாத ஒருவனால், பணிச்சுமைகளையும் அதிலுள்ள நெருக்கடிகளையும் கூடத் தன்னம்பிக்கையுடன் சமாளிக்க முடியாது என்று காரணம் சொல்லி அவன் தன்மானத்தையும் அடிமனத்தில் மறைந்திருக்கும் பிரியத்தையும் தூண்டிவிடுமாறு உரைத்தாள்.

“அது சரி! அப்போ தவறு எல்லாம் அவன் மேல மட்டும்தான்னு சொல்றியா!” மனைவி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வினவினார்.

“அவகிட்டயும் தப்பு இருக்கு! ஒண்ணொண்ணா சரி செய்யலாம்!”

“அப்போ உன் சிகிச்சையை அந்தப் பொண்ணு கிட்டேந்து ஆரம்பிக்க வேண்டியது தானே!” மடக்கினார் மூர்த்தி.

“லேடீஸ் ஃபர்ஸ்ட் எல்லாம் காதலில் தான்! ஊடலில் ஆண்கள் தான் முதலில் இறங்கி வரணும்!” என்று அவள் குழையவும்,

தங்கள் இல்வாழ்க்கையின் சுவாரசியமான சண்டைகளையும் சமாதானங்களையும் நினைவுகூர்ந்தவர் அசடுவழிந்து மனையாளின் கள்ளாட்டத்திற்குச் சம்மதித்தார்.

அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியே தன்னை நேரில் சந்திக்கப் போவதை அறிந்த சரவணனுக்குக் கரைகாணா இன்பம். தன் உழைப்புக்குத் தக்க அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையுடன் காத்திருந்தான்.

பல கனவுகளோடு மூர்த்தியைச் சந்திக்க வந்தவன், அவர் அடுக்கிய புகார்கள் கேட்டு கோபாக்கினியாக மாறினான். சுதா கணித்த மாதிரியே தன் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட அவருக்கு உரிமை இல்லையென்று தகராறும் செய்தான்.

“வீட்டுப் பிரச்சனையையே தீர்க்க முடியாத உங்களை நம்பி இத்தனை பெரிய பொறுப்பை எப்படிக் கொடுக்கமுடியும்னு நீங்களே சொல்லுங்க சரவணன்!” விளக்கம் கேட்டார் மூர்த்தி.

மனம்விட்டு பேச வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவன்,

“என் மனைவியை விவாகரத்துச் செய்துடக்கூடாதுன்னு தான் சார் இந்த வெளிநாட்டு வாய்ப்பு தரும்படி கெஞ்சி கேக்குறேன்!” மனமுருகி உரைத்தான்.

சுதா சொன்னதைப் போலவே தேக்கிவைத்த காதல் எட்டிப்பார்ப்பதைக் கண்டுகொண்டவர்,

“இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?” புருவம் வளைத்தார்.

“சம்பந்தம் இருக்கு சார்!” என் மனைவியின் எதிர்பார்ப்புகளை குறை சொல்லவே முடியாது. என் பெற்றோரின் விருப்பங்களை மீறி நடந்துக்க முடியாத என் சூழ்நிலை புரிஞ்சுக்கிட்டு அவங்க காலம் வரைக்கும் அனுசரிச்சு போன்னு தான் சொன்னேன் சார்!” என்று விரக்தியில் இடவலமாகத் தலையசைத்தவன்,

“ஆனால் இருபக்கமும் அடிவாங்கும் மத்தளம் மாதிரி சிக்கித் தவிக்கிறேன். தனிக்குடித்தனம் போகும் அளவுக்கு மனசுல தைரியமில்ல; அதனால தான் இப்படியொரு வழியில் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுபிடிக்க நெனச்சேன்.” நொந்து பேசினான்.

சுதா சொன்னது எவ்வளவு உண்மை என்று அசைப்போட்டவர், அவன் கோரிக்கையை மறுபரிசீலனை செய்துவிட்டு தொடர்புகொள்வதாகக் கூறினார்.

அன்று மாலை வீடு திரும்பியர், சரவணனின் தர்மசங்கடமான நிலையை எடுத்துரைத்து, அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சிந்திக்கும் அவன் பக்குவத்தை மெச்சி வெளிநாட்டு வாய்ப்பை அவனுக்குத் தரப்போவதாகக் கூறினார்.

அவர் வியக்கும் வகையில், மனையாள் தீர்க்கமாக மறுத்துப் பேசினாள்.

“இப்பவும் அவன் பிரச்சனையின் பிடியிலிருந்து ஓட நினைக்கிறானே தவிர, அதை எப்படிச் சரி செய்யலாம்னு யோசிக்க மாட்டேன்றான்!” என்றாள்.

“வேற என்னம்மா செய்யணும்னு எதிர்பாக்குற!” முகம் சுருக்கினார் மூர்த்தி.

“எனக்கும் அத்தைக்கும் இல்லை எனக்கும் உங்க அருமை தங்கைக்கும் இடையில் மனஸ்தாபம் வந்தால் என்ன செய்வீங்க?” மார்பின் குறுக்கே இருகைகளையும் கட்டிக்கொண்டு அதிகாரமாய் கேட்டாள்.

“நியாயம் யார் பக்கம் இருக்கோ அவங்களுக்கு ஆதரவா பேசுவேன்!”

கணவரின் பதிலில் நெகிழ்ந்தவள், “அதே தான் நானும் சொல்றேன்! சரவணனும் வழவழ கொழகொழன்னு மேகலாவை எல்லாத்துக்கும் அனுசரிச்சு போன்னு சொல்றதுக்குப் பதிலா, அவளுக்காகப் பேச வேண்டிய இடத்துல வெளிப்படையா தலைநிமிர்ந்து பேசணும். அவன் அப்படிச் செய்யும்போது அவளும் அனுசரித்துப் போகவேண்டிய இடத்துல அனுசரிச்சுப் போவா!” விரிசல் எதனால் ஏற்படுகிறது என்று விளக்கினாள்.

“சொல்வது சுலபம் சுதா. ஒவ்வொருத்தர் வாழ்க்கை முறையும் வேற. நம்ம வீட்டுல எல்லாரும் நட்பின் வழியில் பழகினதால, சண்டை சச்சரவுகள் கையாள்வதில் சிரமம் இருந்தது இல்லை. ஆனால் சரவணன் வளர்ந்த சூழ்நிலை வேற!” ஒப்பிட்டவர், சரவணன் சொல்வது போல அப்பெண் அவர்கள் காலம்வரை அனுசரித்துப் போவதுதான் சரி என்றார்.

“என்னுடைய பெற்றோர் மறைவுக்கு அப்புறம் உன்னை உள்ளங்கையில் வெச்சு தாங்குறேன்னு அவன் சொன்னா, அப்போ அந்தப் பெண்ணுக்கு ‘என் மாமியார்’, ‘என் மாமனார்னு’ புகுந்த வீட்டுச் சொந்தங்களோட ஆசையா ஒட்டி உறவாட தோணுமா; இல்லை எப்போடா இவங்க மண்டைய போடுவாங்க, நமக்கு விடிவுகாலம் பிறக்கும்னு வெறுப்பு வளருமா?” சிந்திக்கச் சொன்னாள்.

அவரிடம் அதற்குப் பதிலேதும் இல்லை.

ஆழ்ந்த சிந்தனையில் சஞ்சரித்து இருந்தவரின் கைகோர்த்து, “புரிஞ்சுக்கோங்க பா! காலம் யாருக்கும் காத்திருக்கிறது இல்ல. அந்தந்த நேரத்தில் வரும் சந்தோஷம், சோகம், பாசம், கோபம் எல்லாம் மகிழ்ந்து அனுபவிக்கறதும் கடந்து போகுறதும் தான் வாழ்க்கை.

ஆசை யாருக்குத்தான் இல்லன்னு சொல்லுங்க. ஒருத்தரோட ஆசை நியாயமானதாக இருந்தால் அதை நிறைவேற்றி வைக்க குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் தங்கள் கோட்பாடுகளைத் தளர்த்திக்கணும்.” மென்மையாக எடுத்துரைத்தாள்.

“என் மனைவியின் ஆசை நிறைவேற்ற இந்தக் காதல் பித்தன், சரவணன் கிட்ட என்ன சொல்லணும்!” என்று வாஞ்சையாகக் கேட்டு கண்சிமிட்டினார் மூர்த்தி.

“எல்லார்கிட்டயும் உண்மையா இருக்கச் சொல்லுங்க!” மென்னகையுடன் உரைத்தாள்.

அவள் உள்நோக்கம் உணர்ந்த மூர்த்தி சம்மதம் என்று தலையசைத்தார்.

மறுநாள் காலை பெரும் நம்பிக்கையுடன் தன்னைச் சந்திக்க வந்த சரவணனிடம் பல நிபந்தனைகள் இட்டு அவன் பொறுமையைச் சோதித்தார் மூர்த்தி.

“ஐயோ சார்! நீங்க வெளிநாட்டு வாய்ப்பு உறுதி செய்துகொடுங்க. அடுத்த நிமிஷம் அவளே விவாகரத்தை ரத்து செய்துடுவா!” அவன் புலம்ப,

“அப்போ காசு பணம், பதவி அந்தஸ்து வைத்துதான் உன் அன்பை அவள் எடை போடுறான்னு சொல்றீயா!” எரிச்சல் கொண்டார் மூர்த்தி.

“அப்படியில்ல சார்! அவள் எதிர்பார்க்கும் சுதந்திர வாழ்க்கை கிடைக்கப் போகுதுன்னு தெரிஞ்சா சந்தோஷப்படுவான்னு சொல்றேன்!” என்றான்.

“தனிக்குடித்தனம் போகுறதுக்கும் தள்ளி நின்று உறவாடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு சரவணன். உங்க மனைவியின் எதிர்பார்ப்புகளை நீங்க சரியா புரிஞ்சு வெச்சிருக்கீங்களான்னு சிந்திச்சு பாருங்க!” அழுத்திக் கூறினார் மூர்த்தி.

பணி நிமித்தமாகப் பேசாமல் தன் தனிப்பட்ட விஷயங்களில் வரம்பு மீறி மூக்கை நுழைக்கிறாரே என்று தோன்றியது அவனுக்கு. அவன் உடல் மொழியிலேயே அதை உணர்ந்தார் மூர்த்தி.

“பிரச்சனையைக் கண்டு பயந்து ஓடாமல் நிமிர்ந்து எதிர்க்கணும்னு சொல்றேன். குடும்பத்தினரிடம் நேர்மை கடைப்பிடித்தால் தானே பணியிலும் அதைக் கடைப்பிடிப்பீங்க!” நயமாகக் கேட்டார்.

சிந்தனையில் சஞ்சரித்தவனாக அவன் வெளியேற,

சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம், சரவணன்!” உரக்கக் கூறி நிதர்சனத்தை வலியுறுத்தினார்.

வித்யா வெங்கடேஷ்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 8, 2022
Messages
239
அன்று மாலை வீடு திரும்பியவனுக்கு, மேகலா எப்போதும் போல தன் பணிவிடைகளைச் செய்து கொண்டிருப்பதைக் கண்டு உறுத்தலாக இருந்தது.

“சரவணா! உங்க அக்கா நேற்று பிறந்தநாள் விழாவில் சாப்பிட்ட பலகாரத்தை மேகலாகிட்ட செய்யச் சொன்னா டா. இதைச் சாப்பிட்டு பாரேன்!” என்று அம்மா அவனுக்கு ஊட்டிவிட,

அதை மென்று விழுங்கியவன் சுவையாக உள்ளது என்று கூறி நகர்ந்தான்.

“மேகலா கைப்பக்குவமே தனி டா சரவணா! விழாவில் சாப்பிட்டதை விட ருசியாக இருக்கு!” என்று உணவு மேஜையில் அமர்ந்திருந்த தமக்கை ஒத்தூதி, மேகலாவை மெச்சுதலாகப் பார்த்தாள்.

நாத்தனாருக்கு மென்னகையுடன் தலையசைத்தவள் அனைவருக்கும் தேநீர் தயாரிப்பதாகக் கூறி சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

உடை மாற்றி வருகிறேன் என்று சென்றவன் குற்றவுணர்ச்சியில் தவித்தான்.

விவாகரத்து கேட்ட பின்னும் மனஸ்தாபங்கள் மறைத்து அனைவரிடமும் சகஜமாக உறவாடும் மனைவியின் சகிப்புத்தன்மை கண்டு தன் தவறுக்காக வருந்தினான்.

தனிக்குடித்தனம் போவதற்கும் தள்ளி நின்று உறவாடுவதற்கும் உள்ள வேற்றுமையை உணர்ந்தான்.

குளித்து முடித்து வந்தவனின் மனத்தில் இருந்த மாசும் நீங்கி புத்துணர்ச்சி பெற்றான்.

குடிப்பதற்குத் தேநீர் கொண்டு வந்த மனையாளை தன்னருகில் அமரும்படி இழுத்தவன்,

“அம்மா! மேகலாவும் இனி வேலைக்குப் போயிட்டு வரட்டும் மா!” தெளிந்த குரலில் அறிவித்தான்.

“வேலைக்கா! அதெல்லாம் வேண்டாம்…அவளுக்குத் தேவையில்லாத மனவுளைச்சல்…” அம்மா எதிர்க்க,

“ஆமாம் டா தம்பி! ஏற்கனவே கருத்தரிக்காமல் அவஸ்தைப்படுறா!” அக்கா தன் பங்குக்கு நினைவூட்ட,

“எனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவர் கிட்ட அண்ணியை அழைச்சிட்டுப் போறேன் அண்ணா!” இளையவள் ஆலோசனை கூற,

“இல்லமா! மேகலா வேலைக்குப் போகுறதுல எந்த மாற்றமும் இல்லை! குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும்!” அழுத்தமாகக் கூறி அவர்கள் வாயடைத்தான்.

“என்னடா திடீர்னு இவ்வளவு தீர்மானமா சொல்ற! பணம் பற்றாக்குறை ஏதாவது…” அப்பா தயங்க,

“பணம் எப்ப வேணும்னாலும் சம்பாதிக்கலாம்….மனவுளைச்சல் அதிகரிச்சதுனால தான் உன் அத்தைக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் போச்சுன்னு மருத்துவர் சொன்னாங்களே! மறந்துட்டயா டா சரவணா…” அம்மா பயமும் கவலையும் கலந்தவளாக நினைவூட்டினாள்.

“தேவையில்லாததை எல்லாம் நெனச்சு பயப்படாதீங்க மா! போன வாரம் நாங்க சந்திச்ச ஒரு நண்பர்கிட்ட உன் மருமகள் பதற்றத்தில் பேசத் தெரியாமல் பேசி ஏதேதோ உளறினாள். நாலு சுவற்றுக்குள்ளே அடைஞ்சு கிடக்குறதுனால, அவளுக்கு வெளி மனிதர்களிடம் எப்படிச் சகஜமா பேசிப்பழகணும்னு தெரியல. அதான் வேலைக்குப் போகட்டும்னு சொல்றேன்!” என்றவன்,

“சுதா மேடம் கிட்ட உளறியது எல்லாம் ஞாபகம் இருக்கா மேகலா!” என்று மனையாளிடம் ஜாடையாக வினவினான்.

முன்னறிவிப்பு இல்லாமல் கணவர் பேசும் விஷயங்களைக் கேட்டு பேதலித்து நின்றவள் எல்லா திசையிலும் தலையாட்ட,

அதிருப்தியுடன் தன்னையே ஏறிடும் அன்னையின் முகத்தை அன்புடன் கையில் ஏந்தி,

“வீட்டுலே இருக்குறது தான் மா அவளுக்கு மனவுளைச்சல். பொழுதுக்கும் குழந்தை பொறக்கலயேன்னு யோசிச்சிட்டு இருப்பா; அதே வேலைக்குப் போனான்னா அவள் சிந்தனை திசைதிரும்பும்; மனவுளைச்சலும் குறையும்” என்றான்.

“சரி டா சரவணா! வேலை பளு அதிகம் இருக்கிற மாதிரி இடத்துக்கு எல்லாம் அனுப்பாத!” அக்கறையுடன் அவள் பேச,

அதைக்கேட்ட மேகலாவின் கண்கள் குளமானது. அத்தையின் அதிகாரத்திற்குப் பின் ஒளிந்திருந்த அக்கறையை உணர்ந்தாள்.

அன்றிரவு உறங்க வந்தவள் அமைதியாகப் படுத்துக்கொண்டிருக்கும் கணவனை கட்டியணைத்து, “தாங்க்ஸ் பா!” என்று அவன் கன்னத்தில் இதழ்கள் பதித்தாள்.

“விவாகரத்து கேட்க மாட்டியே!” முகத்தைத் திருப்பாமல் அவன் கசந்த குரலில் கேட்கவும், பேதையின் கண்களில் நீர் கட்டிக்கொண்டது.

“ம்ஹூம்!” எனத் தலையசைக்கும் மனையாளின் விழி நீர் அவனை நனைக்க, வெடுக்கென்று எழுந்து அமர்ந்தான்.

“உன் எதிர்பார்ப்புகள் தவறில்லை மேகலா! அம்மா சொல்றது சரியோ தவறோ, எனக்கு எதிர்த்துப் பேசி பழக்கமில்ல!” என்று அவள் கண்களைத் துடைத்துவிட்டவன்,

“உன் விருப்பங்களை எடுத்துச்சொல்ல கொஞ்சம் கொஞ்சமா பழகிக்குறேன்!” மென்மையாகக் கூறி,

அவளை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல, தான் செய்துவரும் ஏற்பாடுகள் பற்றியும் விவரித்தான்.

தனக்காக இத்தனை தூரம் யோசித்திருக்கிறான் என்று எண்ணும்போதே அவளின் கோபமும் வெறுப்பும் இருக்குமிடம் தெரியாமல் போனது.

“எனக்கு வெளிநாட்டுக்குப் போகணும்னு எல்லாம் ஆசை இல்லைங்க! அத்தை மாமாவை பக்கத்துல இருந்து பார்த்துக்கறதுல எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல. உங்க சகோதரிகள்…அது…அது வந்து….” அவள் மென்றுவிழுங்க,

“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுமா!” அவள் கரத்தைத் தன்னுள் அடக்கி நம்பிக்கை கொடுத்தான்.

“அவங்களுக்கும் பிறந்த வீடுன்னு இங்க வந்துட்டுப் போக எல்லா உரிமையும் இருக்கு…ஆனால்…ஆனால்…” மீண்டும் தயங்கினாள்.

“மனசவிட்டு பேசுன்னு சொல்றேன்ல!” சற்று அதிகாரமாகவே உரைத்தான்.

“அவங்க எப்போ வேணும்னாலும் வந்துட்டுப் போகட்டும். ஆனால் நம்ம வீட்டு வேலைகளை நானே செய்யணும்னு விரும்பறேன். இன்னைக்கு என்ன சமைக்கணும், வீட்டுக்கு எந்த அலங்காரப் பொருள் வாங்கணும்… அதை எங்க மாட்டணும்; பீரோவில் துணிமணிகளை எப்படி அடுக்கணும், மின்சார கட்டணம் ஆன்லைனில் கட்டணுமா, நேரில் போய் கட்டணுமான்னு எல்லாமே நானே சிந்திச்சு செய்யணும்னு ஆசைப்படுறேன்ங்க!” படபடவென அவள் அடுக்க,

“ம்ம்” என்று உச்சுக்கொட்டினான் அவன்.

“அதுமட்டுமில்லீங்க….” மீண்டும் அவள் எச்சில் விழுங்க,

அவன் பார்வையே தயங்காமல் சொல் என்றது.

“குழந்தை விஷயத்தில் அவங்க தலையிடுவது எனக்குச் சுத்தமா பிடிக்கல. என்னதான் இருந்தாலும், இது நம்ம ரெண்டு பேருடைய தனிப்பட்ட விஷயம். ஒரு மருத்துவர் கிட்ட பேசுறதுக்கும் வீட்டுல இருக்குறவங்க கிட்ட பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க!

அன்னைக்குக் கோபத்துல சொன்னாலும் அது தான் உண்மை. அவங்க நல்லக்கறையிலேயே விசாரித்தாலும், அறிவுரை சொன்னாலும், நம்ம அந்தரங்கத்தை நடுகூடத்துல விமர்சிக்குறா மாதிரி அருவருப்பா இருக்கு!” என்று அவன் தோள் சாய்ந்து கதறினாள்.

அவன் எதுவும் பேசவில்லை என்றாலும் ஆறுதலாய் வருடிய விதத்திலேயே தன் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டான் என்று தோன்றியது. வெகுநாட்களுக்குப் பிறகு ஒருவரின் ஒருவர் அணைப்பில் நிம்மதியாக உறங்கினர்.

மறுநாள் காலை சுதாவை அழைத்த மேகலா, அனைத்தையும் பகிர்ந்துகொண்டு, நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாகவும் தெரிவித்தாள்.

அன்றுபோல தன் சரிபாதியை அறையில் ஒளித்து வைத்து, இளையவர்களுடன் கண்ணாமூச்சி ஆடினாள் சுதா.

தனக்காகப் பேசிய கணவரின் வீர சாகசத்தைப் பற்றி பெருமையடித்துக் கொண்ட மேகலாவின் கண்களில் பூத்த காதலை உளமாற ரசித்தாள். சரவணனும் அதைக் கவனிக்க மறக்கவில்லை.

அவளுக்காக ஒரே ஒருமுறை ஆதரவாகப் பேசியதற்குத் தன்னைத் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறாளே என்று பிரமித்தான் சரவணன்.

“சரி! தேனிலவுக்கு லண்டன் போகணுமா; சிங்கப்பூர் போகணுமா!” குறும்பாகக் கேட்டாள் சுதா.

“மேடம்!” என்று இருவரும் கண்கள் விரிக்க,

“தேனிலவுக்கு லண்டன் போகணுமா; சிங்கப்பூர் போகணுமான்னு கேட்டேன்!” அழுத்திக் கூறினாள்.

“ஏன் மா அவங்கள இப்படி ஓட்டுற!” என வினவிக்கொண்டே புன்னகை ததும்ப வெளியே வந்த மூர்த்தி, மனையாள் அருகே அமர்ந்தார்.

“சார் நீங்களா!” என்றவன் தன்னிச்சையாக எழுந்து நிற்க,

“உட்காருங்க மிஸ்டர்.சரவணன்!” என்று நட்புடன் கூறி மேகலாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நடந்த அத்தனையும் விவரித்தார்.

அதைக்கேட்ட மேகலாவின் கண்கள் குளமாகின.

“என்னால தானே உங்களுக்கு அலுவலகத்துல இத்தனை அவமானம்!” என்று தலைகுனிந்து வருந்தினாள்.

“பார்த்தீங்களா பா! இந்த நாடகத்தை அரங்கேற்றினால், மேகலாவும் அவள் தவறை தானாக உணருவான்னு சொன்னேன்ல!” என்று மூர்த்தியிடம் ஜம்பமடித்துக் கொண்டவள்,

“இப்போ புரியுதா! கணவன் மனைவிக்குள்ள ஏற்படும் மனஸ்தாபங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் மனசவிட்டு பேசாமல், மூன்றாவது மனிதர்களிடம் புலம்புவதால் எத்தனை பின்விளைவுகள் இருக்குன்னு!” என்று சுட்டிக்காட்டினாள்.

ஆம் என்று மட்டும் அவள் தலையசைக்க, சுதாவே மேலும் பேசினாள்.

“புருஷன்கிட்ட நமக்கில்லாத உரிமையான்னு கர்வத்தோடு நாம நம்ம உணர்வுகளை எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்லணும்; அதற்கு அவங்க தீர்வு கொடுக்கிறதும் கொடுக்காததும் அடுத்தபடி; ஆனால் நம்மளுடைய விருப்பு வெறுப்புகளை உடனுக்குடன் பகிர்ந்துக்கும் போது நம்ம மனபாரம் குறையும்.

சகிச்சுக்குறோம்ன்ற பேருல நாம மனசுக்குள்ள போட்டு புழுங்கும் கவலைகள் தான் ஒன்றுசேர்ந்து, கொதிக்கும் எரிமலையாக ஒருநாள் மொத்தமா வெடிச்சு அது விவாகரத்துல போய் முடியுது.” என்றவள்,

சரவணன் பக்கம் திரும்பி, “நீங்க வளர்ந்த சூழ்நிலை, உங்க வீட்டு பழக்க வழக்கங்கள் எல்லாம் புரியுது. ஆனால் உங்களை மட்டுமே நம்பி வந்தவள் உங்க மனைவி. எந்த எந்த இடத்துல அவளை அனுசரிச்சு போக சொல்லணும், எந்த இடத்துல நீங்க அவளுக்காக முன்னே வந்து நிமிர்வா பேசணும்னு புரிஞ்சு செயல்படணும்.” என்றாள்.

இருவரும் மௌனமாக இருந்த விதத்திலேயே இல்லறத்தின் தர்மத்தைப் புரிந்துகொண்டார்கள் என்று உணர்ந்த சுதா, அதைப்பற்றி மேலும் பேசி அவர்கள் மனத்தைப் புண்படுத்த விரும்பவில்லை.

“சரி! தேனிலவுக்கு எங்க போகணும்னு சொல்லுங்க!” இலகுவாகப் பேச்சை திசைதிருப்பினாள்.

“வெளியூருக்கு எங்கேயும் போக விருப்பமில்லன்னு என் மனைவி நிர்தாட்சண்யமாகச் சொல்லிட்டா; அதனால உள்ளூரிலேயே வேற கிளைக்கு பணிமாற்றம் செய்து தர முடியுமா சார்?” என்றவன்,

தன் சகோதரிகள் அக்கறை என்ற பெயரில் தங்கள் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவே வேறு இடத்திற்குச் செல்ல விரும்புவதாகவும் கூறினான்.

“சவால்களைக் கண்டு ஓடக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்னா இல்லையா மிஸ்டர்.சரவணன்!” மூர்த்தி நினைவூட்ட,

“அதெல்லாம் எதுக்குங்க….” மேகலா குறுக்கிட, அவளை அமைதி காக்கும்படி கண்ணசைத்தவன்,

“புரியுது சார்! மேடம் சொல்ற மாதிரி, “என் மனைவி! எங்கள் அந்தரங்கம்னு!” நிமிர்வா பேசி இந்த விஷயத்தை முளையிலேயே கிள்ளி விட்டிருக்கணும்! இத்தனை வருஷமா அவங்க மனசு புண்படும்படி பேசாததுனால திடீர்னு எங்க விஷயத்துல தலையிடாதன்னு எடுத்தோம் கவுத்தோம்னு சொல்ல சங்கடமா இருக்கு. அதான் தள்ளி இருந்தால், சந்திப்புகளும், சச்சரவுகளும் குறையும்னு….அதுவும் இல்லாமல் எங்களுக்குக் குழந்தை பிறந்துட்டா இந்தப் பேச்சுக்கே இடமில்லையே….” என்று அவன் தயங்க,

மேகலா முகத்தில் தான் சுரத்தே இல்லை. தன் பிரச்சனையைப் பூதாகரமாக்கியதன் பின்விளைவு என்று குற்றவுணர்ச்சியில் தத்தளித்தவள்,

“உங்களுக்கு எவ்வளவு தர்மசங்கடமா இருக்கும்னு யோசிக்காம என் மனசுல பட்டதை எல்லாம் சொல்லிட்டேன்! மன்னிச்சிடுங்க! நாம எங்கேயும் போக வேண்டாம்; ” முகம் சுருக்கினாள்.

மனைவியின் வாடிய முகத்தை நிமிர்த்தியவன்,

“இதுல நீ வருந்த ஒண்ணுமே இல்லமா; நாம தனிக்குடித்தனம் போகப்போறது இல்ல; தள்ளி நின்று உறவாடப்போகுறோம்! நாள் கிழமையில் அவங்க பிறந்த வீட்டுக்கு வரும்போது நீ சீராட்டிப் பாராட்டி உறவாடலாம்!” என்று கூறி மனைவியின் முகத்தில் சிரிப்பை வரவைத்தவன்,

“என்ன சார்! நான் சொல்றது சரிதானே!” என்று கண்சிமிட்டினான்.

தான் சொன்ன அறிவுரைகளை உள்வாங்கி செயல்படுகிறான் என்று பூரித்தவர்,

“என்னம்மா! பெருங்களத்தூர் கிளை நிர்வாகிக்கும் பொறுப்பை சரவணனுக்குக் கொடுக்கலாமா!” என்று சுதாவிடம் கேட்டார்.

“எங்க எதைப் பேசணும்; எதைக் கண்டும் காணாமல் போகணும்னு தெளிவா புரிஞ்சுக்கிட்டு செயல்படும் சரவணனை விட வேற யாரு அந்தப் பதவிக்குப் பொருத்தமா இருப்பாங்க! மனப்பூர்வமான சம்மதம் என்றாள் சுதா.

அன்பும் புரிதலும் வேண்டும் என்றாய் நீ;

அனுசரித்து போ என்றேன் நான்;

தள்ளி நின்று உறவாடலாம் என்றாய் நீ;

தழைந்து போ என்றேன் நான்;

சண்டைகளும் சமாதானங்களும் நிறைந்த

சம்சார சாகரத்தில் அனுதினமும்

மறுகும் நீ! உருகும் நான்!

பின்குறிப்பு:
பிரபல எழுத்தாளரும் சமூக சேவகியுமான திருமதி சுதா மூர்த்தி அவர்கள் புரிதல் நிறைந்த இல்லறத்தின் வலிமையை உணர்த்தும் பல நேர்மறையான காணொளிகள் பதிவிட்டுள்ளார். அவற்றைப் பார்த்து நான் பிரமித்த தருணங்கள் ஏராளம். அந்தத் தாக்கத்தில் தான்(Inspired from...) இக்கதையில் நல்வழி போதிக்கும் அன்யோன்யமான தம்பதியருக்கு அப்பெயர்கள் தேர்ந்தெடுத்தேன்.
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
சூப்பர் சூப்பர் சூப்பர் சகி 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍பெரும்பாலான குடும்பங்களில் இதே சூழ்நிலை தான் ஓடிக்கிட்டு இருக்கு 😊😊😊😊. புரிதலில் வாழ்க்கை நகருவதை விட வேற வழி இல்லாம பொறுத்து போகுறதில் தான் வாழ்க்கை நகர்ந்து முடிஞ்சிருது.
சுதா மூர்த்தி அவர்களின் அணுகுமுறை மிக மிக சிறப்பு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 
நன்றிகள் பல நட்பே!
எதை நினைத்து இக்கதைக்கரு தேர்ந்தெடுத்தேனோ அதையே நீங்களும் உங்க கருத்தில் சொன்னதில் ரொம்ப மகிழ்ச்சி நட்பே!!
💞💞💞💞💞💞💞
 
வித்யா வெங்கடேஷ்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 8, 2022
Messages
239
கவிதை அருமை..
கதையும் தான்.
போட்ட்யில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா
கவிதை, கதை இரண்டையும் குறிப்பிட்டு பாராட்டும் உங்கள் அன்பிற்கு என் அன்பு கலந்த நன்றிகள் தோழி!
💞💞💞💞💞💞💞
 
manjula Muralidharan

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 31, 2023
Messages
1
கவிதை, கதை இரண்டையும் குறிப்பிட்டு பாராட்டும் உங்கள் அன்பிற்கு என் அன்பு கலந்த நன்றிகள் தோழி!
💞💞💞💞💞💞💞
kavithai மிக அருமை. கதை excellent. Very crisp. என் பாராட்டுக்கள்
 
Thani

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 2, 2023
Messages
59
அழகான கதை ❤️வாழ்த்துக்கள் சிஸ்💐
கதையின் தலைப்பே கதையின் சாராம்சத்தை சொல்லுதே...😀நான்என்ன எழுத 🤔
"ம்"...ஆதர்சதம்பதிகள் தான் திரு .திருமதி மூர்த்தி சுதா 😍
மூர்த்தி சார் சைக்கிள் கேப்ல ரொமான்ஸ் பண்ண தவறவில்லை ....அதைவிட முக்கியமானது அவரே தன்னை காதல் பித்தன் என்றேல்லாம் கூறி பிதற்றுகிறார் 😜இந்த வயதில் காதல் பண்ணி நம்மள கடுப்படிக்கிறார் "யுவர் ஆனர் .".😜எல்லாத்தையும் விட அந்த மனுஷன் தன்ஜோடிப் புறாவை பாத்து கண்ணடிச்சு மயக்குகிறார்😀
சுதா மேடம் நல்ல பக்குவப்பட்ட இல்லத்தரசி தான்... அதுக்கப்புறம் தான் அவங்க வேலை ......கணவர் சரவணனுக்கு சார்பாக பேசும் போது எடுத்து கூறிய அனைத்தும் செம ...விளக்கங்களும் அருமை .....👏

அப்புறம் சரவணன் ,மேகலா..இருவரும் காதலை தொலைத்து கடமைக்காகவா ஐந்து வருடம் வாழ்ந்தாங்க ..???
இத்தனை வருடத்தில் புரிதல் வரவில்லையா .??அல்லது புரிந்து கொள்ள முயற்சி எடுக்கவில்லையா..???? ...
இவங்க இருவரும் ஒர்தர் மாத்தி ஒர்தர் மேல பழியை போடுறாங்களே தவிர சிந்திக்க மறுக்கிறாங்கப்பா என்ன பிள்ளைங்களோ....😥
அவளின் ஆசைகளை நிறைவேத்த என்ன தயக்கம் சரவணா இதெல்லாம் சின்ன சின்ன ஆசைகள் .
உனனால முடிஞ்சா செய் இல்லாது போனால் பக்குவமா ..சொல்லி புரிய வை .இதோ சுதா அவங்க சொன்னவுடன் புரிந்து கொண்டாளே..😍
சரவணன் போல் பிரச்சனைகளை கண்டு ஓடி ஒழியாமை....அதற்கு என்ன தீர்வு என்பதை ஒரு நிமிடம் சிந்தித்தாலே அதற்குரிய தீர்வு நம்ம கண்முன்னாலே விரியும்....அழகா😀
சரவணன் கெட்டவன் இல்ல ஓவர் பாசம் கண்ணை மறச்சிடுச்சு ...சரியான சந்தர்பத்தில் அவனுக்கு வாழ்க்கையை புரிய வைக்க மூர்த்தி சார் இருந்தார் ..... ஆனால் நமக்கு ..???நமக்கு நாமே தான் வழிகாட்டி ...மூளை சொல்வதை விட மனசு சொல்வதை கேட்டாலே நல்ல முடிவு கிடைக்கும் .....😍
சரவணன் ,மேகலா போல் எத்தனை தம்பதியினர் வாழ்க்கையை தொலக்க இருந்து இருப்பாங்க ..????
அவங்க வாழ்க்கையை புரிந்து ,ரசிச்சு வாழ்ந்து பாத்தா தானே தெரியும் வாழ்க்கை எவ்ளோ அழகானது என்று ....
அப்புறம் கவிதை செம👏💐
கதைக்கு கவிதை மெருகேற்றியது..👏
சூப்பரா எழுதுவீங்க என்று தெரியும் ..👏😍இந்த கதையில் இன்னும் எழுத்து நடை சூப்பர் டூப்பரா இருக்கு 😍
சூப்பர் ❤️❤️❤️❤️❤️
போட்டியில் வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சிஸ்😍❤️❤️❤️❤️❤️
 
வித்யா வெங்கடேஷ்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 8, 2022
Messages
239
kavithai மிக அருமை. கதை excellent. Very crisp. என் பாராட்டுக்கள்
கதை, கவிதை இரண்டையும் பாராட்டி ஊக்கமளிக்கும் உங்கள் அன்பிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் மா!:love::love:
 
Thani Ji உங்களை நான் இங்கு எதிர்பார்க்கவே இல்லை; Thank you so much for your unconditional love & encouragement.
:love::love::love::love::love:
நான் என்ன எழுதன்னு சொல்லிட்டு, ஒரு குட்டிக் கதையே எழுதிட்டீங்களே! உங்கள் கமெண்ட் பார்த்து, மீ சோ ஹேப்பி ஜி!🤗🤗🤗🤗🤗🤗🤗

மூர்த்தி அவரின் காதல் உங்களைக் கடுப்பேத்துகிறதா....அறுபதிலும் (Actually he is 70+) ஆசை வரும்னு நிரூபிக்கறார் அவர்....🤣🤣🤣🤣🤣

ஆமாம் ஜி! மேகலா சரவணன் கடனே என்று தான் வாழ்ந்திருக்கிறார்கள். மனம்விட்டு பேசாதது தான் பிரச்சனை.🥺🥺🥺🥺

இன்றைய தேதியில் தொட்டத்துக்கு எல்லாம் விவாகரத்து செய்யும் தம்பதிகளின் மனநிலை கருத்தில் கொண்டு எடுத்த சிறு முயற்சி தான் இந்தச் சிறுகதை. 😏😏😏😏

அளவிடமுடியாத உங்கள் அன்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நட்பே!🥰🥰🥰🥰🥰🥰
 
ஆனந்த ஜோதி

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
91
#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : வித்யா வெங்கடேஷ்

படைப்பு : மறுகும் நீ! உருகும் நான்!

வெளியீடு : வைகை சிறுகதைப் போட்டி

லிங் :

கணவருடன் கவுன்சிலிங் கொடுக்கும் இடத்திற்கு சென்று அங்கு வந்த தம்பதியரின் பிரச்சனைகளை கேட்டுக்கொண்டு விவகாரத்திற்கு ஏற்பாடு செய்துடலாம் எனும் இடத்தில் இருந்தே கதையின் ஓட்டம் நம் வாழ்க்கையில் நடப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது.

கணவன் மனைவி இருவரும் மாறி மாறி குற்றங்களை சுமத்த, அதற்கான கவுன்சிலிங் கொடுக்கும் அப்பெண்மணியின் பதில் நடவடிக்கை என்ன? குடும்பத்து நபர் மீதான கோபத்தில் அவள் கணவனை பிரிந்து சென்று விடுகிறாளா? அந்த அளவிற்கு நடந்ததென்ன என்பதை சிறுகதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

திருமணமாகி கணவன் வீட்டிற்கு சென்றிருக்கும் ஒரு பெண் கணவனிடமும், அவன் வீட்டாரிடமும் எதிர்பார்ப்பது பாசத்தையும், அக்கறையையும், தன்னையும் அவர்களில் ஒருவராக ஏற்று வாழும் வாழ்க்கையும் தான். அதே அவர்களிடமிருந்து கிடைக்ககூடிய அளவுக்கு மீறிய அந்தரங்க தலையீடுகள், புதியதாக வாழ வந்திருக்கும் பெண்ணின் வாழ்க்கையில் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ரொம்ப அழகாக சொல்லியிருக்காங்க.

அதேநேரம் நாயகன் பாத்திரமும் மனதில் அழுத்தமாக பதிகிறது. பாவம் தான் பெற்று வளர்த்தவரையும், உடன் பிறப்புகளையும் பிரித்து பார்க்க முடியாமல், தன்னுடைய ரத்த உறவு எனும் எண்ணத்தில் எதிர்த்து பேசவோ, அவர்களை கஷ்டப்படுத்தவும் செய்யாமல், மனையாளுக்காக பேசவும் முடியாமல் திண்டாடிய இடமும், அவரது பதிலும்👌👌👌

முடிவு செம...

சிறுகதை சமூகத்தில் நடந்த நிஜ சம்பவத்தை அப்படியே கண்முன்னே வாசித்த அனுபவத்தை கொடுத்தது.

எழுத்தாளரின் எழுத்துக்களில் இது எனது முதல் வாசிப்பு. அழகான எழுத்து நடையில் அருமையான நகர்வுகள். சிறுகதை வாசிக்க நன்றாக இருக்கிறது. நீங்களும் வாசித்து மகிழுங்கள் தோழமைகளே...

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐
 
ஆனந்த ஜோதி

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
91
அழகான கதை ❤️வாழ்த்துக்கள் சிஸ்💐
கதையின் தலைப்பே கதையின் சாராம்சத்தை சொல்லுதே...😀நான்என்ன எழுத 🤔
"ம்"...ஆதர்சதம்பதிகள் தான் திரு .திருமதி மூர்த்தி சுதா 😍
மூர்த்தி சார் சைக்கிள் கேப்ல ரொமான்ஸ் பண்ண தவறவில்லை ....அதைவிட முக்கியமானது அவரே தன்னை காதல் பித்தன் என்றேல்லாம் கூறி பிதற்றுகிறார் 😜இந்த வயதில் காதல் பண்ணி நம்மள கடுப்படிக்கிறார் "யுவர் ஆனர் .".😜எல்லாத்தையும் விட அந்த மனுஷன் தன்ஜோடிப் புறாவை பாத்து கண்ணடிச்சு மயக்குகிறார்😀
சுதா மேடம் நல்ல பக்குவப்பட்ட இல்லத்தரசி தான்... அதுக்கப்புறம் தான் அவங்க வேலை ......கணவர் சரவணனுக்கு சார்பாக பேசும் போது எடுத்து கூறிய அனைத்தும் செம ...விளக்கங்களும் அருமை .....👏

அப்புறம் சரவணன் ,மேகலா..இருவரும் காதலை தொலைத்து கடமைக்காகவா ஐந்து வருடம் வாழ்ந்தாங்க ..???
இத்தனை வருடத்தில் புரிதல் வரவில்லையா .??அல்லது புரிந்து கொள்ள முயற்சி எடுக்கவில்லையா..???? ...
இவங்க இருவரும் ஒர்தர் மாத்தி ஒர்தர் மேல பழியை போடுறாங்களே தவிர சிந்திக்க மறுக்கிறாங்கப்பா என்ன பிள்ளைங்களோ....😥
அவளின் ஆசைகளை நிறைவேத்த என்ன தயக்கம் சரவணா இதெல்லாம் சின்ன சின்ன ஆசைகள் .
உனனால முடிஞ்சா செய் இல்லாது போனால் பக்குவமா ..சொல்லி புரிய வை .இதோ சுதா அவங்க சொன்னவுடன் புரிந்து கொண்டாளே..😍
சரவணன் போல் பிரச்சனைகளை கண்டு ஓடி ஒழியாமை....அதற்கு என்ன தீர்வு என்பதை ஒரு நிமிடம் சிந்தித்தாலே அதற்குரிய தீர்வு நம்ம கண்முன்னாலே விரியும்....அழகா😀
சரவணன் கெட்டவன் இல்ல ஓவர் பாசம் கண்ணை மறச்சிடுச்சு ...சரியான சந்தர்பத்தில் அவனுக்கு வாழ்க்கையை புரிய வைக்க மூர்த்தி சார் இருந்தார் ..... ஆனால் நமக்கு ..???நமக்கு நாமே தான் வழிகாட்டி ...மூளை சொல்வதை விட மனசு சொல்வதை கேட்டாலே நல்ல முடிவு கிடைக்கும் .....😍
சரவணன் ,மேகலா போல் எத்தனை தம்பதியினர் வாழ்க்கையை தொலக்க இருந்து இருப்பாங்க ..????
அவங்க வாழ்க்கையை புரிந்து ,ரசிச்சு வாழ்ந்து பாத்தா தானே தெரியும் வாழ்க்கை எவ்ளோ அழகானது என்று ....
அப்புறம் கவிதை செம👏💐
கதைக்கு கவிதை மெருகேற்றியது..👏
சூப்பரா எழுதுவீங்க என்று தெரியும் ..👏😍இந்த கதையில் இன்னும் எழுத்து நடை சூப்பர் டூப்பரா இருக்கு 😍
சூப்பர் ❤️❤️❤️❤️❤️
போட்டியில் வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சிஸ்😍❤️❤️❤️❤️❤️
Hai Sis நான்தான் வாகைப் பூ காதல் சதுரங்க ஆட்டம் எழுத்தாளர். நலம் தானா? உங்களை எப்படி முகநூலில் தொடர்பு கொள்ளுவது?
 
Thani

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 2, 2023
Messages
59
Hai Sis நான்தான் வாகைப் பூ காதல் சதுரங்க ஆட்டம் எழுத்தாளர். நலம் தானா? உங்களை எப்படி முகநூலில் தொடர்பு கொள்ளுவது?
நான் நலம் சிஸ்😍நீங்கள் தானா 😍ரொம்ப மகிழ்ச்சி சிஸ்❤️❤️
நீங்கள் இந்த தளத்தில் எழுதுறீங்களா..????போட்டிக் கதையில் உங்க கதையை பாத்தேன் காணல ...
நேற்று தான் நான் முதன் முதலா இங்கு வந்தேன் 😀
முகப்புத்தகத்தில் நான் இல்லை சிஸ்😞மன்னிக்கணும்
உங்கள் தளம் பெயர் என்ன ....அல்லது வேறு தளத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறீங்களா அதை குறிப்பிட்டால் அங்கு நான் தொடர்பு கொள்கிறேன் 😀
 
Last edited:

Thani

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 2, 2023
Messages
59
#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : வித்யா வெங்கடேஷ்

படைப்பு : மறுகும் நீ! உருகும் நான்!

வெளியீடு : வைகை சிறுகதைப் போட்டி

லிங் :

கணவருடன் கவுன்சிலிங் கொடுக்கும் இடத்திற்கு சென்று அங்கு வந்த தம்பதியரின் பிரச்சனைகளை கேட்டுக்கொண்டு விவகாரத்திற்கு ஏற்பாடு செய்துடலாம் எனும் இடத்தில் இருந்தே கதையின் ஓட்டம் நம் வாழ்க்கையில் நடப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது.

கணவன் மனைவி இருவரும் மாறி மாறி குற்றங்களை சுமத்த, அதற்கான கவுன்சிலிங் கொடுக்கும் அப்பெண்மணியின் பதில் நடவடிக்கை என்ன? குடும்பத்து நபர் மீதான கோபத்தில் அவள் கணவனை பிரிந்து சென்று விடுகிறாளா? அந்த அளவிற்கு நடந்ததென்ன என்பதை சிறுகதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

திருமணமாகி கணவன் வீட்டிற்கு சென்றிருக்கும் ஒரு பெண் கணவனிடமும், அவன் வீட்டாரிடமும் எதிர்பார்ப்பது பாசத்தையும், அக்கறையையும், தன்னையும் அவர்களில் ஒருவராக ஏற்று வாழும் வாழ்க்கையும் தான். அதே அவர்களிடமிருந்து கிடைக்ககூடிய அளவுக்கு மீறிய அந்தரங்க தலையீடுகள், புதியதாக வாழ வந்திருக்கும் பெண்ணின் வாழ்க்கையில் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ரொம்ப அழகாக சொல்லியிருக்காங்க.

அதேநேரம் நாயகன் பாத்திரமும் மனதில் அழுத்தமாக பதிகிறது. பாவம் தான் பெற்று வளர்த்தவரையும், உடன் பிறப்புகளையும் பிரித்து பார்க்க முடியாமல், தன்னுடைய ரத்த உறவு எனும் எண்ணத்தில் எதிர்த்து பேசவோ, அவர்களை கஷ்டப்படுத்தவும் செய்யாமல், மனையாளுக்காக பேசவும் முடியாமல் திண்டாடிய இடமும், அவரது பதிலும்👌👌👌

முடிவு செம...

சிறுகதை சமூகத்தில் நடந்த நிஜ சம்பவத்தை அப்படியே கண்முன்னே வாசித்த அனுபவத்தை கொடுத்தது.

எழுத்தாளரின் எழுத்துக்களில் இது எனது முதல் வாசிப்பு. அழகான எழுத்து நடையில் அருமையான நகர்வுகள். சிறுகதை வாசிக்க நன்றாக இருக்கிறது. நீங்களும் வாசித்து மகிழுங்கள் தோழமைகளே...

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐
எழுத்தாளருக்கு ரிவ்யூ கொடுக்க சொல்லியா தரணும் சூப்பரா எழுதி இருக்கீங்க 👏❤️செம சிஸ்💐
 
ஆனந்த ஜோதி

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
91
நான் நலம் சிஸ்😍நீங்கள் தானா 😍ரொம்ப மகிழ்ச்சி சிஸ்❤️❤️
நீங்கள் இந்த தளத்தில் எழுதுறீங்களா..????போட்டிக் கதையில் உங்க கதையை பாத்தேன் காணல ...
நேற்று தான் நான் முதன் முதலா இங்கு வந்தேன் 😀
முகப்புத்தகத்தில் நான் இல்லை சிஸ்😞மன்னிக்கணும்
உங்கள் தளம் பெயர் என்ன ....அல்லது வேறு தளத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறீங்களா அதை குறிப்பிட்டால் அங்கு நான் தொடர்பு கொள்கிறேன் 😀
இங்கு சிறுகதைப் போட்டியில் கலந்துக்கல. 7 கதை படித்து விமர்சித்தேன். இன்னும் சிலரது வாசிக்கணும்.

நான் என்னுடைய ஆனந்த ஜோதி தமிழ் நாவல்ஸ் blog -ல் எழுதி வருகிறேன் சிஸ்டர். உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி.

Google -ல் தட்டினால் Jothi novels முகநூல் குழுவும், என்னுடைய பிளாக்கும் தொடர்பில் கிடைக்கும்.

நன்றி
 
Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
மறுகும் நீ....
உருகும் நான்.....

வித்யா வெங்கடேஷ்... சூப்பர் டா💐👏👍

( சுதா மூர்த்தி _ நிஜத்தில் இவர்களின் வாழ்க்கை எண்ணம் புரிதல் பற்றிய பேச்சுக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்)

மனம் முறிவு பண்ண வரும் மணமானவர்களின்
மனதில் உள்ள பாசத்தை புரிய வைத்து
மனம் திருந்தி அனுப்பி வைக்கும் கதை......

திருமணமாணவர்களின் தன்னம்பிக்கையான வாழ்க்கை திருமதி கையில் மட்டுமே அல்ல
திரு கைகளிலும் இருக்கிறது....

மதிகொண்டு
மாது நடந்து கொண்டால் திருமதியின் மதியில் மயங்காதோ
மன்னன் மனது....

வாழ்க்கையின் சூட்சமத்தை வாழ்ந்து பார்த்தவர்களின் வழியில் கேட்கும் பொழுது வழிகாட்டியாய் இருக்கிறது..... உறவுகளின் அத்தியாவசியத்தையும்
உணர்வுகளின் முக்கியத்துவத்தையும்
அழகாக புரிய வைத்து விட்டீர்கள்.....
வாழ்த்துகள் டா 👏👏💐💐🤩🤩
 
வித்யா வெங்கடேஷ்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 8, 2022
Messages
239
#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : வித்யா வெங்கடேஷ்

படைப்பு : மறுகும் நீ! உருகும் நான்!

வெளியீடு : வைகை சிறுகதைப் போட்டி

லிங் :

கணவருடன் கவுன்சிலிங் கொடுக்கும் இடத்திற்கு சென்று அங்கு வந்த தம்பதியரின் பிரச்சனைகளை கேட்டுக்கொண்டு விவகாரத்திற்கு ஏற்பாடு செய்துடலாம் எனும் இடத்தில் இருந்தே கதையின் ஓட்டம் நம் வாழ்க்கையில் நடப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது.

கணவன் மனைவி இருவரும் மாறி மாறி குற்றங்களை சுமத்த, அதற்கான கவுன்சிலிங் கொடுக்கும் அப்பெண்மணியின் பதில் நடவடிக்கை என்ன? குடும்பத்து நபர் மீதான கோபத்தில் அவள் கணவனை பிரிந்து சென்று விடுகிறாளா? அந்த அளவிற்கு நடந்ததென்ன என்பதை சிறுகதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

திருமணமாகி கணவன் வீட்டிற்கு சென்றிருக்கும் ஒரு பெண் கணவனிடமும், அவன் வீட்டாரிடமும் எதிர்பார்ப்பது பாசத்தையும், அக்கறையையும், தன்னையும் அவர்களில் ஒருவராக ஏற்று வாழும் வாழ்க்கையும் தான். அதே அவர்களிடமிருந்து கிடைக்ககூடிய அளவுக்கு மீறிய அந்தரங்க தலையீடுகள், புதியதாக வாழ வந்திருக்கும் பெண்ணின் வாழ்க்கையில் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ரொம்ப அழகாக சொல்லியிருக்காங்க.

அதேநேரம் நாயகன் பாத்திரமும் மனதில் அழுத்தமாக பதிகிறது. பாவம் தான் பெற்று வளர்த்தவரையும், உடன் பிறப்புகளையும் பிரித்து பார்க்க முடியாமல், தன்னுடைய ரத்த உறவு எனும் எண்ணத்தில் எதிர்த்து பேசவோ, அவர்களை கஷ்டப்படுத்தவும் செய்யாமல், மனையாளுக்காக பேசவும் முடியாமல் திண்டாடிய இடமும், அவரது பதிலும்👌👌👌

முடிவு செம...

சிறுகதை சமூகத்தில் நடந்த நிஜ சம்பவத்தை அப்படியே கண்முன்னே வாசித்த அனுபவத்தை கொடுத்தது.

எழுத்தாளரின் எழுத்துக்களில் இது எனது முதல் வாசிப்பு. அழகான எழுத்து நடையில் அருமையான நகர்வுகள். சிறுகதை வாசிக்க நன்றாக இருக்கிறது. நீங்களும் வாசித்து மகிழுங்கள் தோழமைகளே...

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐
கதையை கருத்தூன்றி படித்து, ஆக்கப்பூர்வமான விமர்சனம் எழுதி தளத்திலும் முகநூலிலும் பகிர்ந்த உங்கள் அன்பிற்கு என் பணிவான நன்றிகள் மா.

உங்கள் விமர்சனத்தில் கதையின் முக்கிய அம்சங்களை மிக மிக அழகாக எடுத்துச் சொல்லிருக்கீங்க ஜி. நன்றிகள் பல பல!!!:love::love::love::love::love:
 
வித்யா வெங்கடேஷ்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 8, 2022
Messages
239
மறுகும் நீ....
உருகும் நான்.....

வித்யா வெங்கடேஷ்... சூப்பர் டா💐👏👍

( சுதா மூர்த்தி _ நிஜத்தில் இவர்களின் வாழ்க்கை எண்ணம் புரிதல் பற்றிய பேச்சுக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்)

மனம் முறிவு பண்ண வரும் மணமானவர்களின்
மனதில் உள்ள பாசத்தை புரிய வைத்து
மனம் திருந்தி அனுப்பி வைக்கும் கதை......

திருமணமாணவர்களின் தன்னம்பிக்கையான வாழ்க்கை திருமதி கையில் மட்டுமே அல்ல
திரு கைகளிலும் இருக்கிறது....

மதிகொண்டு
மாது நடந்து கொண்டால் திருமதியின் மதியில் மயங்காதோ
மன்னன் மனது....

வாழ்க்கையின் சூட்சமத்தை வாழ்ந்து பார்த்தவர்களின் வழியில் கேட்கும் பொழுது வழிகாட்டியாய் இருக்கிறது..... உறவுகளின் அத்தியாவசியத்தையும்
உணர்வுகளின் முக்கியத்துவத்தையும்
அழகாக புரிய வைத்து விட்டீர்கள்.....
வாழ்த்துகள் டா 👏👏💐💐🤩🤩
வாவ்! எப்போதும் போல மிக அழகான கவிதை கருத்து தோழி!!!!

சிறுகதையின் சாரம்சத்தை சூப்பரா சொல்லிட்டீங்க. நன்றிகள் பல பல!!!:love::love::love::love:
 
Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
ஹாய் ஜீ 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

முதல் பந்தியை பார்த்ததும் நம்ம சதா பூரணி தான் வந்துட்டாங்களோன்னு நினைச்சேன் 🤭🤭🤭

காதல் அளவில்லாம இருக்க, விவாகரத்து வரை எப்பிடி போக முடிஞ்சது 😏😏😏

சூப்பர் ஜீ 😍😍😍
 
ஆனந்த ஜோதி

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
91
கணவருடன் கவுன்சிலிங் கொடுக்கும் இடத்திற்கு சென்று அங்கு வந்த தம்பதியரின் பிரச்சனைகளை கேட்டுக்கொண்டு விவகாரத்திற்கு ஏற்பாடு செய்து விடலாம் எனும் இடத்தில் இருந்தே கதையின் ஓட்டம் நம் வாழ்க்கையில் நடப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது.

கணவன் மனைவி இருவரும் மாறி மாறி குற்றங்களை சுமத்த, அதற்கான கவுன்சிலிங் கொடுக்கும் பெண்மணியின் பதில் நடவடிக்கை என்னவாக இருக்கும்? குடும்பத்து நபர் மீதான கோபத்தில் அவள் கணவனை பிரிந்து சென்று விடுகிறாளா? அந்த அளவிற்கு இருவருக்கு இடையிலும் நடந்ததென்ன என்பதை சிறுகதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

திருமணமாகி கணவன் வீட்டிற்கு சென்றிருக்கும் ஒரு பெண் கணவனிடமும், அவன் வீட்டாரிடமும் எதிர்பார்ப்பது பாசத்தையும், அக்கறையையும், தன்னையும் அவர்களில் ஒருவராக ஏற்று வாழும் வாழ்க்கையும் தான். அதே அவர்களிடமிருந்து கிடைக்ககூடிய அளவுக்கு மீறிய அந்தரங்க தலையீடுகள், புதியதாக வாழ வந்திருக்கும் பெண்ணின் வாழ்க்கையில் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ரொம்ப அழகாக சொல்லியிருக்காங்க.

அதேநேரம் நாயகன் பாத்திரமும் மனதில் அழுத்தமாக பதிகிறது. பாவம் தான் பெற்று வளர்த்தவரையும், உடன் பிறப்புகளையும் பிரித்து பார்க்க முடியாமல், அவர்களை எதிர்த்து பேசவும் முடியாமல், மனையாளுக்காகவும் பேச முடியாமல் திண்டாடுகிறார்.

முடிவு செம... சிறுகதை சமூகத்தில் நடந்த நிஜ சம்பவத்தை அப்படியே கண்முன்னே வாசித்த அனுபவத்தை கொடுத்தது.

Top