• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

21. காற்றோடு கலந்த விதையவள்

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
நாட்க்கள் ஓட, நடந்ததை அறியதா சுதாகரன், அவளை காணாது தவித்துப் போனான்.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் ,பொறுமை இழந்தவனாய்,

'இன்டைக்கு எப்படியும் அவள்ன்ர ஃப்ரெண்டுட்ட கேட்டே ஆகோணும்' ஒரு முடிவோடு கல்லூரி விட்டது அவர்கள் முன் நின்றான்.

மல்லிக்கு புரிந்துவிட்டது. முதலில் தயங்கியவள்,
"சொல்லுங்கண்ணா" என்க.
"உன்ர ஃப்ரெண்ட்டு கன நாள் காலேஜ் வரேலயே! ஏன்" என்றான்.
தேவியின் வீட்டில் நடந்தவற்றை, தந்தை வழி கேட்டறிந்தவளன, அதையே அவனிடமும் கூறினாள்.

"படிப்ப நிப்பாட்டிட்டினம்.. இன்னும் பதினைஞ்சு நாள்ல கல்யாணமாம்..."

இவற்றை கேள்வி பட்டதும் அதிர்ந்தவன், பின் சுதாரித்து..


"எனக்கு ஒரு உதவி செய்வியா?" பாவமாக கேட்டவனுக்கு மறுக்க மனம் ஒப்பவில்லை. சரி என்று சம்மதித்தாள்.

வாசலில் நின்ற அன்னாமாவை கண்டு பயந்தாள் மல்லி.
ஆம் மல்லி இப்போது இருப்பது தேவி வீட்டில் தான்.
"வா மல்லி... ஏன் அங்ஓயே நிக்கிற" அவளை கண்டு அழைத்தார் காந்தி.
ஒரு மாதிரி பார்த்த அன்னம்மாவையே பார்த்தவாறு உள்ளே சென்றாள் மல்லி.

"என்னம்மா திடீர் என்டு"

"அது.... தேவியை பார்த்து, அவள்ர நோட்டு வாங்க வந்தன். அவள் தான் இனி படிக்க மாட்டாளே! எதுக்கு அது அவளுக்கு"

"அப்பிடியா...? அறையில தான் இருக்கிறாள், போய் வாங்கு" என்று அறைய காட்டி சென்றுவிட்டார்.

உள்ளே வந்தவள் கையோடு கதவையும் பூட்டினாள்.

"தேவி?" என்றதும் தான்..
இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த கண்ணீர், தோழியை கண்டதும் அருவியாக கொட்டியது.

ஆதரவாக அவளை வருடிக் கொடுத்தவறோ,
"எனக்கு தெரியும்டி! நீ மறைச்சாலும், அண்ணன்களுக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்து கொண்டாலும், உன் மனசு எஙக இருக்கென்டு" மறைத்து வைத்திருந்த கடிதத்தை அவளிடம் எடுத்து கொடுத்தவள்.





"பிரிச்சு படி!" என்றதும் அதை வாங்கி படிக்க ஆரம்பித்தாள்.


"என் இதயக்கோட்டையில் அனுமதியின்றி நுழைந்து, என் அரியாசனையினை அபகரித்து, மனம் தனில் கொடுங்ககோள் ஆட்ச்சி புரியும் என் இதய ராணி சாந்திக்கு...

பார்த்தாயா? இதுவரை உன் பெயர் கூட அறியாது இருந்திருக்கிறேன்.
இப்போது கூட உன் தோழி கூறித்தான் அறிந்தேன்.

நான் அறியேனடி! என் குடும்பத்தால் நீ இத்தனை துன்பம் அனுபவிப்பாய் என்று. என் அண்ணன் என் நல்லது என்று நினைத்து செய்த செயலால் தான் இது நேர்ந்திருக்கலாம்.
இது வரை என்னிடம் இத்தகவல் சொல்ல படவில்லை. என்னால் உன் படிப்பு இடையில் தடைப்பட்டதற்கு நான் வருந்துகிறேன்.
இன்னும் பதினைந்து நாட்களில் உனக்கு திருமணம் என்று உன் தோழி சொன்னாள்.
இதற்கு நீ ஏன் சம்மதித்தாய்.? என் குடும்பம் செய்த தவறுக்கு தண்டனையை எனக்கா கொடுக்கின்றாய்..?
நாம் இருவரும் உருகி உருகு காதலிக்கவில்லை என்றாலும், உன்னை என் மனைவி ஆக்கிக்கொள்ள ஆசைப்பட்டது உண்மையே. நீயும் என்னை நேசித்ததை, நீ என்னை பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும் உணர்நதேன். நீ உன் குடும்பத்திற்காக எடுத்த முடிவு, உன் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை நினைத்து பார்க்கவில்லையா?
நாளை நம் விஷயம் ஏதோ ஓர் வகையில் உன் கணவனுக்கு தெரிய வரும்போது, உன் வாழ்க்கை சரியாக அமையும் என நினைக்கிறாயா?
அவன் பார்வை எப்போதும் உன்னை சந்தேகத்தோடு நோக்கும். இல்லை என்றால், உன் மனசாட்ச்சியே இருவருக்கு நீ துறோகம் செய்து விட்டதாக நினைத்து, எந்த வாழ்க்கையையும் சரியாக வாழமுடியாமல், உன்னை நீயே குழப்பி உன் வாழ்வை நீயே அழித்து காெள்வாய்.
உன் மனதை மாற்றுவதற்காக இந்த கடிதத்தை நான் எழுதவில்லை. நீ எனக்கு கிடைத்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, காலம் முழுவதும் உன்னையே நினைத்துக்கொண்டு இருப்பேன். அது தான் நான் என் பெற்றோர்களுக்கும் தரும் தண்டனை.
என்மேல் உனக்கு நம்பிக்கை இருந்தால் என்னோடு வா! உன்னை நான் கலங்காமல் காத்துக் கொள்வேன்.
இல்லை... என் பெற்றோர்கள் போல என்மேல் நம்பிக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை. உன் குடும்பம் அமைத்து தரும் வாழ்க்கையையே ஏற்றுக்கொள்!

எதுவாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.
உன் திருமணத்திற்கு முன் கூட்டைய வாழ்த்துக்கள் என்று எழுதி.
இப்படிக்கு
உன்னையே நினைத்திருக்கும் சுதாகரன் என்று இருக்க.
கடிதத்தை மடித்தவள் சொல்ல வார்த்தைகள் இன்றி கதற தொடங்கினாள்.

"அழாதையடி...
அழுது ஒன்டும் ஆகாது. நல்லா யோசிச்சு பாரு... அண்ணா சொல்லுறது தான் எனக்கும் சரி என்டு படுது.
உன்ர லைப்பையும் கெடுத்து, அவற்ர வாழ்க்கையும் நாசமா போகோணுமா? இப்பிடி யோசிச்சு பாரேன்......

வீட்டுக்கு முன்னம் ஒருதங்க வந்து சத்தம் போட்டுட்டு போனது உங்க வீட்டை தாண்டி போகேல என்டு நினைக்கிறியா?

நிச்சயமா இல்லை... தின்னைக்கு ரெண்டு கிழவிகள், இதுகென்டே இருக்குங்கள்.. நீயும் நீ கட்டிக்கிட்வனும் ஒன்டா போகேக்க, உங்க காதுபடவே பேசுங்கள்.
நிம்மதியில்லாத வாழ்க்கை வழப்போறியா நீ....?
அண்ணா எழுதி இருக்கிறதை பார்த்தா, அவர் உன்னை தவிர யாரையும் கட்டிக்க மாட்டார். பேசாம நீ எல்லாருக்கும் சொல்லித்தான் பாரேன்" எடுத்துச் சொன்னாள் மல்லி.
"இல்ல மல்லி! அவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்கினம் என்னில. அதவிட இதை சத்தம் போட்ட அப்பவே சொல்லி இருந்திருக்கோணும், பதினைஞ்சு நாள்ல கல்யாணத்தை வைச்சுக்காண்டு, இதை போய் சொன்ன அவங்க நாளைக்கு ஊர்சனம் மத்தியில தலை காட்ட முடியாதுடி."

"சரி நடந்தது நடந்துட்டுது... இனியாவது நல்ல முடிவா எடு!
உன்னை நம்பினவக்கு துறோகம் செய்ய கூடாது என்று தானே நினைக்கிற...?
உன்னை கட்டிக்க போறவனும் உன்னை நம்பி தானே வாறான். வாழ்க்கையில் சரி பாதி ஆக போகிறவனுக்கே நீ உண்மையாக இல்லயே! அவனுக்கு நீ துறோகம் தான் செய்ய போகிற.

அண்ணன மனசில் வைச்சுக்கொண்டு, எல்லாருக்குமே துறோகம் செய்கிற. இது உனக்கு ஏன் விளக்கேல..

நல்லா யோசித்து பார்! எது சரி என்று உனக்கு தோன்டுதோ அதை செய்.! கடைசியாக ஒன்டு மட்டும் சொல்கிறன்.... குடும்பத்துக்கு உன்மேல் தவறு இல்லை என்டுறத பொறுமையாகவும் நிறுபிக்கலாம்.
வாழ்க்கை அப்படி இல்லை. காலம் கடந்து போனா, திருத்துறதுக்கு சந்தர்ப்பம் வராது. நேரமாகுது. நான் வரேன்டி"என்றவள் கையை பிடித்தவள்,

"நன்றிடி! தெளிவில்லாம இருந்தன். நீ சொல்லுறது சரி தான் .. வாழ்க்கை போனா திரும்ப வராது...
அதே சமயம் வீட்டிலயும் இதை சொல்ல ஏலாதே! என்ன செய்றது...? என்றாள்.
நாளான்டைக்கு ஊர் எல்லையில இருக்குற அம்மன் கோவிலுக்கு அண்ணா வர சொல்லிருக்கிறார்.... போய் பாரு எல்லாம் சரியாகும்.." என்றவள் ஏதோ ஒரு நோட்டை வாங்கிக்கொண்டு வெளியேறினாள்.

அவள் அறை தாண்டவில்லை...

"என்ன நரியாரே..! என்ன இந்த பக்கம்? என்ன தந்திரவேலை செய்ய வந்த" என்றான் இளா மல்லியை பார்த்து நக்கலாக கேட்க.

அவனை முறைத்தவளோ,
"எத்தனை தடவைடா உன்னட்ட அப்பிடி கூப்பிடாத என்டு சொல்லுறது.? நிம்மதியா கோவிலுக்கு போக முடியேல உன்னால. கோவில் முடக்கில நிக்கிற எல்லாப் பாடியளும், நரியாரேன்டுதுகள்.

இனி அப்பிடி கூப்பிடடு, கல் எடுத்து மண்டைய உடைச்சிர்றன்" என்றாள் கோபமாக.


"சரி சரி கோவிக்காத.. என்னத்துக்கு வந்த?"

"நோட்டு வாங்க வந்தன்"

"நோட்டு வாங்க வந்தியா? இல்ல நோட்டம் பாக்க வந்தியா?
என் செல்ல அக்கா கல்யாணத்தை ஊரே மெச்சிற்றா மாதிரி செய்ய போறம்... நீயும் ஒரு வாரத்துக்கு முன்னமே வந்து கொட்டிக்கோ" என்றான் மீண்டும் வம்பிழுப்பதாய்.

அந்த நேரத்திலாவது மல்லி சொல்லி இருக்கலாம். தன்னல் முடியாவிட்டாலும், நூற்றில் ஒரு பங்காவது தமக்கைக்கு சாதகமாக நடந்திருப்பான். அவளும் குடும்பத்தையும் பிரிந்திருக்க மாட்டாள்.

மல்லி சொன்ன நாளும் வந்தது.
"அம்மா கோவில் போய் வரவா....?"
இத்தனை நாட்கள் அறையிலே அடைஞ்சு கிடந்தவள், இன்று தானாக வந்து கேட்க்கவும். மனமாறுதலுக்காக அனுமதி தந்தார்.

அங்கு சுதாகரன் அவளுக்காக காத்திருந்தான்.
இவ்வளவு நேரமாக இருந்த பதட்டம், வெட்க்கமாக மாறியது.
தலை கவிழ்ந்து நின்றவள் எதிரில் வந்தவன்,

"நல்லா இருக்கிறியா?" என்றான்.

ஆம் என தலையசைத்தவளையே பார்த்தவாறு, அமைதியாக நின்றவனிடமிருந்து பேச்சு வராமல் போகவே, நிமிர்ந்து பார்த்தாள்.

"தேடினது கிடைச்சுட்டுது போல?" குறும்பே தான்.

"என்ன தேடினன்?" புரியவில்லை அவளுக்கு.

"அதை நான் தான் கேட்கோணும். வந்ததில இருந்து நிலத்தையே பாக்கிறியே! ஏதாவது துளைஞ்சிட்டுதோன்டு நினைச்சன்."
அவன் பேச்சை கேட்டதும் சிரிப்புத்தான்.. எங்கே வெட்கம் அதற்கு தடை போட,
மீண்டும் அவள் குனிந்து கொண்டாள்.

"ப்ளீஸ் சந்தி.... இத்தனை நாள் தான் பாக்க முடியேல. இப்பவும் குனிஞ்சா எப்பிடி.? எவ்ளோ வேதனை பட்டன் தெரியுமா?

எனக்கே ஆர்ச்சரியம் தான். சரியாக கூட பேசிபழகாத உன்னில இவ்ளோ அன்பா என்டு. ஆனா உண்மை இது தானே." என்றவன்,

"சரி சொல்லு என்ன முடிவெடுத்திருக்கிற?.
வீட்டு காறர் சொல்லுற மாதிரி என்னை விட்டு போக போறியா?" என்றான் ஆற்றாமையோடு.

அவனையே பார்த்திருந்தவள்,
"இல்ல... நான் உங்களோடயே வந்திர்றன்.. இப்பவே என்ன கூட்டிக் கொண்டு போயிர்றிங்களா?.
ஏன் இப்பவே அவசரப்படுறன் என்டா,

இதே மன நிலையில இருப்பேனோ என்டு எனக்கு தெரியாது.
எந்த குறையும் இல்லாம வளர்த்தவங்களுக்கு என்னால கெட்டது நினைக்க முடியேல... வீட்ட போன முடிவு மாறிடும்.... அதே போல உங்களோட இருக்கேக்க,
அவயல் பெருசா தெரியேல..... இப்பிடி இருதலை கொள்ளியா இருகிறதை பார்க்க, இப்பவே எனக்கு தாலி கட்டிடுங்கோ" என்றாள் இருந்த மனநிலை மாறி அழுபவளாட்டம்.

அவனும் தன்னை விட்டு போய் விடுவாளோ என்ற பயத்தில் அருகில் இருந்த மரத்தில் கட்டியிருந்த தாலியை எடுத்தவன், அம்மன் சன்னிதானத்தின் முன் நிறுத்திக்கட்டியவன், ஐயர் கொண்டுவந்து கொடுத்த குங்குமத்தையும் அவள் நெற்றியிலும் வகிட்டுலும் வைத்து கண்மூடி நின்றான்.


அடுத்து செய்வதறியாது தேவி முழித்திருக்க, அவள் கையை ஆதரவாக பற்றியவன், நான் இருக்கின்றேன் என விழிகளை மூடி திறந்தான்.

"முதல்ல என்ர வீட்ட போட்டு, பிறகு உன்ர வீட்டிற்கு போய் சமாதானம் செய்யலாம்" என்றதும் ஆமோதிப்பதாய் தலையசைத்தவள், அவனுடன் செல்லலானாள்.

தூரத்தல் வரும்போதே அந்த வீட்டின் அமைப்பே சொன்னது... அவனது செல்வ செழிப்பை.

பல்கனியில் நின்று தலை துவட்டிக்கொண்டிருந்த கலா, இவர்கள் மாலையும் கழுத்துமாக தூரத்தே வரும் போதே பார்த்து விட்டாள்.

தன் திட்டம் யாவும் தவிடு பொடியாக ஆனதை ஏற்றுக்கொள்ள முடியாதவள், இவர்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். என்ற நினைப்போடு, ஈரத்தலை என்று இல்லாது முடிச்சிட்டவள், அவரசமாக இறங்கி வந்து, அவர்கள் வருவது தெரியாதது போல் நின்று கொண்டாள்.


வீட்டிலிலேயே மாமன் மாமியர் நிற்பது வசதியாக போனது.
அதே நேரம் மாலையும் கழுத்துமாக உள்னுபவர்களை, அப்போது தான் பார்ப்பதை போல் பார்த்தவள்,

"நில்லுங்ககோ...." என்றாள் சத்தமாக.

அவளின் அலறல் கேட்டுத்தான் தம்பதிகள் இருபவரும் வெளியே பார்த்தார்கள்.

"என்ன நினைச்சிக்கொண்டு இருக்குறீங்கள் சுதாகர்? இது வீடா? வேற எதுவுமா? எல்லாரையும் கூட்டிக் கொண்டு வர" என்றாள்.

"அண்ணி....! அவள் என்ர பொண்டாட்டி!" என்றான் அவனும் விடாது.

"ஓ.... உங்கட கல்யாணம், பெரியவன்ர சம்மதத்தோட, அவயல் ஆசீர்வதிச்சு நடந்த கல்மாணம் பாருங்கோ... ஆலாத்தி சுத்தி கூப்பாட...
ஆரோ ஒரு பிச்சைகாரி கழுத்தில, ஏதோ ஒரு மூலையில் திருட்டு தனமாக கயித்த கட்டி கூப்பிட்டு வந்தா, இதுக்கு பேரு கல்யாணம்... இதில சத்தம் வேற...

அது தான் இவளை அன்டைக்கோ வேண்டாம் என்டுறா மாதிரி, மாமா இவள்ன்ர வீட்டுக்கு போய், காறி துப்பாத குறையா, சத்தம் போட்டுட்டு வந்தும், இந்த மானங்கெட்டவ பணத்துக்காதத்தான் உன்னோட வந்திருக்கிறாள் தெரியுமா உனக்கு..." என்றாள் கேவலமாக.



அவளிடம் ஏனோ சுதாகருக்கு பேசத்தோன்றவில்லை. ஆனால் அவன் விழிகள் பெற்றவர்களை மேய்ந்தது. எதுவாக இருந்தாலும் அவர்கள் கூறட்டும் என்பது தான் அந்த பார்வையின் அர்த்தம்.

எப்படி பேசுவார்கள் அவர்கள்.? அவனது அந்த முடிவுக்கு அவர்கள் மாத்திரம் தானே காரணம். மௌனமாக தலை கவிழ்ந்து கொண்டார்கள் இருவரும்.


அவளை பேச விட்டு, அமைதியானவர்களின் செயலை தவறாக நினைத்து விட்டான் அவன்..


யாருக்கு வேணும் உங்கட காசு. இவளை இதை விட, பலமடங்கு வசதியாக வழ வைக்க எனக்கு தெரியும்... இவங்கள விட, உங்கட மகன் கேவலமா போயிட்டனா?

என்னை என்ன வேணும் என்றாலும் சொல் உங்களுக்கு உரிமை இருக்கு. அவளையோ... இல்லை அவள் சம்மந்த பட்ட எதை பற்றியும் கதைக்க, யாருக்கும் இங்க உரிமையில்லை.

கண்டவேன்ர பேச்சை கேட்டு, ஒரு நாள் நடு தெருவில நிக்கேக்க என்ர அருமை தெரியும். இனமே உங்கள தேடி நான் வரமாட்டான்.. தேவை என்டா என்னை தேடி நீங்கள் வாங்கோ..." என்றவன் தேவியையும் அழைத்து கொண்டு சென்றான்.

"என்னங்க... அவன் ஏதேதோ சொல்லீட்டு போறான்... அவன பாேக வேண்டாம் என்டு சொல்லுங்கோ" என்றார் விஜயா பதறி.

"என்னத்தை சொல்லோணும் என்டுறீங்கள்..? போகட்டும் விடுங்கோ! இதுகள் இங்க இருந்தா, எங்களுக்கு தான் அசிங்கம்" என்றாள் முகத்தை சுருக்கி கலா.

"நான் உன்னோட கதைக்கேல என்ர புருசனிட்ட கதைக்கிறன்" ஆதங்கமாய் விஜயா கத்த,

"இன்னும் உனக்கு என்னம்மா வேணும்.? நீ நினைச்சது நல்லபடியா நடந்துட்டுது தானே... பேசாமல் போ" என்ற கணபதியும், உடைந்து போய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

க்ஹும் என்றவள் தன் தாடையை தோளில் இடித்துவிட்டு மாடி ஏறி சென்றாள்.

"அவனை சமாதானம் பண்றதை விட்டுட்டு, இப்பிடி இடிஞ்சுபோய், இருந்தா எப்பிடி?"

"என்ன செய்ய சொல்லுற நீ....? நீ என்ன சொன்னாலும் அவன் நம்பமாட்டான்மா... அப்பிடி ஒரு காரியம் பண்ணி இருக்கோம். விடு! அவனே மனசு மாறி வருவான்" என்று மனைவியை தேர்றினார்.


"எனக்கென்னமோ இப்போதைக்கு உன்ர வீட்டுக்கும் போகவேண்டாமோ என்டு தோணுது. ஆம்பளை எனக்கே இந்த கேவலம் என்ட.

இன்னும் பன்னிரண்டு நாள்ல கல்யாணத்த வைச்சிருக்கிற உன்ர வீட்ட போன, அசிங்கமாயிடும்.
கொஞ்ச நாள் போகட்டும்மா... நிலையை புரிய வச்சுக்கலாம்" என்றான். அவளுக்கும் அவன் கூறுவதே சரி என பட்டது.


எங்கு செல்வாேம் என நினைத்து அவர்கள் எங்கேயாவது, யார் கண்ணிலும் படாத ஊர் செல்லலாம் என முடிவெடுத்தவர்கள்,
ஓட்டோவை அழைக்க, டிரைவராக வாசன் தான் வந்தான். அவனை கண்டதும் தேவி தடுமாற, என்னவென்று சுதாகர் கேட்டதற்கு வாசனைபற்றி கூறினாள்.

அவனுக்கும் அன்று வாசன் அவளை தங்கை என்றது அப்போது தான் நினைவே வந்தது.
இருவரையும் மாலையும் கழுத்துமாக பார்த்த வாசன்,

"என்னம்மா இந்த கோலம்.?" என அதிர்ந்தவன் அப்போதுதான் அருகின் நின்றவனை கண்டான்.

நீ... நீங்கள் தானே தேவிக்கு உதவி செய்தீங்கள்" என சந்தேகமாக வினவ, ம்ம் என்று நடந்ததை கூறியவள்,

ப்ளீஸ் அண்ணா..... நான் பெரிய தப்புத்தான் செய்திட்டன், ஆனா எனக்கு வேற வழி தெரியேல... வீட்ட இப்ப தெரிய வேண்டாம்.... இன்னொருநாள் நானே நேரில் வந்து அவயல சமாதாணம் செய்யிறன்.. பளீஸ்..." என்றவளிடம்,

"சரி நான் எதுவும் சொல்லேல.. ஆனா நீங்கள் எங்க போக போறீர்கள்?"

"எங்கயாவது போய், வாழ்கையை தொடங்கிடலாம் என்டு நினைக்கிறம்." என்றவன் மேல் ஏன்றே தெரியாத நம்பிக்கை உருவாக,

"அம்மான்ர சொந்த ஊர்ல அவாவுக்கு ஒரு வீடு இருக்கு.... இப்ப அது சும்மா தான் இருக்கு. .. அங்க எவ்வளவு காலம் என்டாலும் தங்கலாம்.' என்றவன், அவர்களுடன் ஊருக்கு உடனேயே கிளம்பினான்.

மதிய சாப்பாட்டிற்காக வீடு வந்த சுந்தரத்தான் அன்னை ஓயாமல் அழுவதை கண்ட அவன் உடன்பாறப்பு,

என்னனெறு என்று கேட்க்க. நடந்த அனைத்தையும் கூறிய விஜயா,

"நீயாவது அவனை கூட்டிக்கொண்டு வாடா.!

"எல்லாருமா சேர்ந்து என் பையனை என்னட்ட இருந்து பிரிச்சிடாதிங்க" என்று அழ.

"எல்லாத்துக்கும் இந்த ராட்சஷி தான் காரணம்மா... இவளை முதல்ல வீட்டுக்கு துரத்தோணும். இப்ப எங்கம்மா அவ" என்றான் கோபமாக.

"மாடியில தான்டா இருக்கா... அவளை விட்டுட்டு என் புள்ளைய முதல்ல கூட்டி வா!" என்றார்.
அவனும் எங்கே போவதென்று தெரியாமல், கால்போன திசை எல்லாம் தேடியவன். கடைசியில் ஏன் அவன் தேவி வீட்டிற்கு போய் இருக்க கூடாது என்று நினைத்து அங்கு செல்லலானான்.

காந்தியோ வீட்டுக்கும் வாசலுக்கும் என்று மாறி மாறி நடந்து கொண்டிருந்தார்.
கோவில் சென்று வருவதாக கூறிசென்ற மகளை, மூன்று மணிநேரமாக காணவில்லை என்றால் பதட்டம் வரத்தானே செய்யும்.
சாப்பாட்டு நேரம் வேறு, எல்லோரும் வந்து, தேவி எங்கென கேட்டால், என்ன பதில் கூறுவது. தனியாக அவளை விட்டதற்கே திட்டு தான் கிடைக்க போகிறது.

இதில் இத்தனை மணி நேரம் என்றது. ஏதோ தவறு நேர்ந்து விட்டது போல் பதட்டம் காந்தியை தொற்றிக் கொண்டது.

அதே நேரம் புதிதாக பைக் ஒன்று வீட்டிற்குள் நுழைவதை பார்த்தாள்.

'யாரா இருக்கும்?' என்ற யோசனையோடு வெளியே வர, அதே நேரம் சாப்பிடுவதற்காக வந்த ஆண்களை கண்டவனுக்கு, அவர்களது கலவரம் இல்லாத தோற்றத்தை கண்டு, யோசனையுடனே.

"வணக்கம்" என்றான்.

அவர்களும் பதிலுக்கு வணக்கம் வைத்து விட்டு,
"யாரு நீங்க....? என்ன விஷயமா வந்திருக்கீங்க?" என்றனர்.

"எதுவா இருந்தாலும் உள்ளே வந்து பேசுங்கோ" என்று காந்தி அவர்களை அழைக்க.
அவர்களும் அவனை அழைத்து, இருக்க சொன்னவர்கள்..

"பதில் சொல்லலாமே" என்றார் மூத்தவர்.

"அது... என தடுமாறியவனோ,

"உங்கட பொண்ணும் என்ர தம்பியும், கல்யாணம் பண்ணீட்டு வீட்டுக்கு வந்தீச்சினம்..." என்று நடந்ததை கூறியவன்,

" உங்கட வீட்டுக்கு தான் வந்திருப்பினம் என்டு தெரியும் கூப்பிடுங்கோ..." என்றான்
அவன் பேச்சை கேட்டதும் அதிர்ச்சியில் அனைவரும் உறைந்திருக்க மணிவண்ணன் தான், அன்னையிடம்,

"அம்மா.... தேவி எங்க?"

"அவ அவ காலமயே கோவிலுக்கு போனாள்.. இன்னும் வரேல" தயக்கமாகவே பதிலளித்தார் காந்தி.

"என்னம்மா சொல்லுறீங்க...? அப்ப இவர் சொன்னதெல்லாம் உண்மையா? என்றான் அதிர்ச்சியாகி.

"அவன் தான் வேணும் என்டு எங்களிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா.. யாரின்ர கால்ல விழுந்தாவது, இவர்ர தம்பியையே கட்டி வைச்சிருப்பமே!

இப்பிடி மூஞ்சேல கரிய பூசிட்டு போயிட்டாளே!" என்று தந்தை புலம்ப.

ஆத்திரமா எழுந்த மணிவண்ணனோ,

"விடுங்கப்பா... தன்ர வாழ்கையை தானே அமைச்சிட்டா... இனி அவளுக்கு நாங்கள் தேவையில்ல... விடுங்கோ இனி இப்பிடி ஒரு தங்கச்சி எங்களுக்கில்லை என்டு, தலை முழுகிட்டு, உங்கட உங்கட வேலையை பாருங்கா" என்று சாப்பிடாமலே சென்று விட்டான்.


அவளை நினைத்து எல்லோர் மனதில் கவலை இருந்தாலும், யாரும் வெளிகாட்டிக் கொள்வதில்லை.
சுந்தரமும் தேடி களைத்துப் போனவர், ஒரு கட்டத்தில் எங்கிருந்தாலும் சந்தேஷமாக வாழ்ந்தால் போதும் என விட்டு விட்டார்.