விருதுநகரில் சுரேந்திரனுக்கு விபத்து நேர்ந்ததும் அருகில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்! அங்கே முதலுதவி செய்த மருத்துவர், ஸ்கேன்,எக்ஸ்ரே போன்ற வசதிகள் இங்கே இல்லை! இந்த நேரத்தில் வேறு மருத்துவமனைக்கு செல்வதை விட, மதுரை அரசினர் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்!
அதன் அடிப்படையில், ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து, சுரேந்திரனை மதுரைக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்த பிறகே , சுரேந்தினுடன் பணிபுரியும் சக ஆசிரியர், சாந்திக்கு அழைத்து விபரம் சொன்னது!
சாரு, அவரிடம் தான் கிளம்பி வரும் விபரத்தை தெரிவித்து,அவர்கள் வரும்வரை துணைக்கு இருக்கும்படியும் கேட்டுக் கொண்டிருந்தாள்!
மதுரையை சென்றடையவே அதிகாலை மணி நாலாகிவிட்டது!
சுரேந்திரனின் வீட்டிற்கு சென்று, குளித்து, உடை மாற்றிவிட்டு, சாந்தி கொடுத்த இட்லியை சாப்பிட்டு, அவளையும் சாப்பிட வைத்து, இருவருமாக கிளம்பி மருத்துவமனைக்கு சென்றனர்
சாரு எவ்வளவோ எடுத்துச் சொல்லி அவளை திடப்படுத்தியிருந்த போதும்,
அவ்வளவு நேரம் நின்றிருந்த கண்ணீர், மீண்டும் உடைப்பெடுக்க "அண்ணி, அவருக்கு ஒன்றும் ஆகியிருக்காதுல்ல? எனக்கு ரொம்ப பயமா இருக்கு!" என்று தழுதழுக்க கேட்டாள் சாந்தி!
"சுரேனுக்கு கையில் தான் அடிபட்டிருக்குனு டாக்டர் சொன்னார்! தம்பிக்கு துணைக்கு இருக்கிற வாத்தியாரும்,வேற பயப்படறாப்ல ஏதும் இல்லை என்று சொல்லிட்டார்! அதனால, நீ அழாமல் இரு சாந்தி! " என்று அவளை ஆறுதல் படுத்தினாள்!
அவர்கள் மதுரை அரசினர் மருத்துவமனைக்கு சென்றபோது..
சுரேந்திரனுக்கு முன் தினம் இரவே அறுவை சிகிச்சை முடிந்திருந்தது! தனி அறைக்கு மாற்றியிருந்தனர்! பெண்கள் இருவரும், முதலி்ல் அவனைப் பார்க்கச் சென்றனர் ! அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்! அவனது முழங்கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது! வேறு எங்கும் அடிபட்டதற்கான அடையாளம் காணப்படவில்லை! துணைக்கு இருந்த ஆசிரியர் லேசான தூக்க கலக்கத்தில் இருந்தார்!
"நன்றி என்பது ரொம்ப சின்ன வார்த்தை சார்! சமயத்தில் இவ்வளவு பெரிய உதவி செய்திருக்கீங்க சார்!
"அவருக்கு உதவுவது என் பாக்கியம் சிஸ்டர்! சார் ரொம்ப நல்ல மனிதர்! அவருக்கு இப்படி அடிபட்டது தான் ரொம்ப வருத்தமான விஷயம்! எனக்கு இங்கே மதுரையில் தான் வீடு! அதனால நான் கிளம்பறேன்!" என்றார் சகாயம்!
"என்ன இது? சிஸ்டர்னு சொல்றீங்க? அப்புறம் இப்பவே கிளம்பறதா சொல்றீங்க,இந்த நேரத்தில் தூக்க கலக்கத்தில் நீங்க போக வேண்டாம்! பேசாமல், நீங்க அங்கே இருக்கும் கட்டிலில் படுத்து தூங்குங்க! நல்லா விடிஞ்சதும் கிளம்பலாம் அண்ணா! " என்று அவரை வற்புறுத்தி தூங்க சொன்னாள்!
அதன் பிறகு, சாந்தியை ஒரு இருக்கையில் அமர செய்து விட்டு, சாரு ஒரு மருத்துவராக,சுரேந்திரனின் சார்ஜ் சீட்டைப் பார்த்தாள்!
கண்ணீருடன் கணவனின் அருகில் செல்ல முயன்ற சாந்தியிடம்," இப்ப எதுக்கு நீ அழறே? அவன் தூங்கட்டும், இப்ப அவனுக்கு நல்ல ரெஸ்ட் தேவை! அவனாக எழறவரை தொந்தரவு செய்யக்கூடாது! பயப்படாதே நான் ரிப்போர்ட் பார்த்துட்டேன்! அவனுக்கு ஒன்றும் இல்லை! சின்ன அடி தான்! நல்ல வேளையாக பிளேட் ஏதும் வைக்கும் நிலை ஏற்படவில்லை! இன்னும் இரண்டு மாசத்துக்கு ஓய்வா இருந்தால் போதும்! பழையபடி மாறிடுவான்! சரி, நீ இங்கேயே இரு..! நான் போய் டாக்டரைப் பார்த்துப் பேசிட்டு வர்றேன்!"என்று சாந்திக்கு தைரியம் சொல்லிவிட்டு மருத்துவர் அறைக்கு சென்றாள் சாருபாலா!
சாரு கணித்தபடி தான் மருத்துவர் சொன்னார்! இன்னும் ஒரு நாள் மருத்துவமனையில் அப்சர்வேசனுக்காக இருக்க வேண்டும் என்றும் கையை அலட்டாமல், பத்திரமாக இரண்டு மாதங்களுக்கு பார்த்துக் கொண்டால் போதும்!மருத்துவரின்
ஆலோசனைப்படி, உணவு, மற்றும் மருந்துகளை பின்பற்றி, பூரண ஓய்வு எடுத்தால் விரைவாக தேறிவிடுவார்" என்றார்!
மருத்துவருக்கு நன்றி சொல்லிவிட்டு, வெளியே வந்த சாருவின் உடம்பு ஓய்வுக்கு கெஞ்சியது! ஆனால் அங்கே அது முடியாது என்று தோன்ற, வராண்டாவில் கிடந்த பெஞ்சில் அமர்ந்தாள்! சாந்தியையும் அழைத்து பக்கத்தில் அமர்த்திக் கொண்டாள்! சுரேனை பார்த்து கொள்ள நியமித்திருந்த டூட்டி நர்ஸிடம், எதுவானாலும் தங்களிடம் சொல்லும்படி தெரிவித்தாள்!
அத்தனை நேரமாக பதற்றத்தில் பரிதவித்து இருந்தவள், கணவனுக்கு ஆபத்து இல்லை என்பதில் மனம் ஆசுவாசமாக, அப்படியே நாத்தனார் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள் சாந்தி! சிறு புன்னகையுடன் அவளது தலை கோதிவிட்டாள் சாருபாலா!
அதன் பிறகு, கணவனுக்கு வந்து சேர்ந்த விபரத்தை தெரிவிக்க, தொடர்பு கொள்ள நினைத்தாள்! ஆனால், அவன் எழுந்திருப்பானோ , மாட்டானோ என்ற தயக்கம் உண்டாக, தகவல் அனுப்பினாள்!
கணவனின் நினைவு வேறு ஒன்றை ஞாபகப்படுத்தியது! அது அவள், முன்தினம் புறப்பட்ட பிறகு,
இடையில் அவள் அனிதாவிடம் தொடர்பு கொண்டு பேசும்போது உண்டான ஐயம்!
சாரு, பிள்ளை தூங்கிவிட்டானா என்று விசாரிக்கையில், அங்கே ஆனந்தனின் குரல் சற்று தள்ளி கேட்டது! இத்தனை வருடங்களில் அவனது குரல் அவளுக்கு நன்கு பரிச்சயம் தான் என்றாலும், இப்போது கணவன் என்ற உணர்வு ஏற்பட்ட பிறகு, அவன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் தீவிரமாக கவனிக்க வைத்தது!
"அனிதா,ஆனந்த் வந்திருக்கிறாரா ? அவர் குரல் போல இருக்கிறதே என்று கேட்டேன்" என்றாள்!
"இல்லையே அக்கா! அத்தான் பெங்களூர் போனவர் இன்னும் வரவில்லையே! ஓ.. அதுவா அத்தை டிவியில் ஏதோ படம் பார்த்துட்டு இருக்காங்க! நான் ரிஷியை தூங்க வைக்கிறேன்!"
"என்ன சொல்றே அனிதா? அத்தை இந்த நேரத்தில படம் பார்க்கிறார்களா? என்னால நம்பவே முடியலை! மணி பத்தாகப் போகுது! அத்தை வழக்கமாக சாப்பிட்டதும்,கொஞ்சம் நேரம் தோட்டத்தில் நடக்கப் போவாங்க, அப்புறமா அறைக்குள் போயிடுவாங்க! பிறகு காலையில் தான் அவங்களை பார்க்க முடியும்!"
"ஆமா.. அத்தை வழக்கமாக, நீங்க பகல் ஷிஃப்ட் போயிட்டு வந்தால் அப்படித்தான் செய்வாங்க அக்கா!
நைட் ஷிஃப்ட் அப்போ, ரிஷி உங்களை தேடுவான்! அதனால அத்தை அவனுக்கு சாப்பாடு கொடுத்துட்டு, கொஞ்ச நேரம் விளையாடுவாங்க, அவன் தூங்க ஆரம்பிச்சதும் தான் அவங்க சாப்பிடப் போவாங்க! அப்ப டிவி பார்க்கிறது பழக்கமாகிட்டுது!"
மகன் அவளை தேடுகிறான் என்பதில் அவ்வளவு நேரம் ஏதோ பறிகொடுத்த உணர்வில் இருந்தவளது மனது குளிர்ந்து போயிற்று! மகன் தன்னை நினைக்கிறான் என்றால் அதை விட தாய்க்கு என்ன வேண்டும்? மனம் நெகிழ, மகனின் நினைவில் மூழ்கிப் போனாள்!
ஆனால் இப்போது, அவளது உடல், சோர்வில் இருந்தபோதும், அனிதாவின் பேச்சை மனம் மீண்டுமாக அசைப்போட்டது!
ஆனந்தனின் குரலா அது என்று சாரு கேட்ட மாத்திரத்தில், அனிதா பதில் சொல்ல தொடங்கவும், எதிர்முனையில் முழு நிசப்தமாகிப் போனதை மூளை பதிவு செய்திருந்தது! ஆம், அதன்பிறகு,பிண்ணனியில் எந்த சப்தமும் எழவில்லை! டிவி என்றால் தொடர்ந்து அந்த சத்தம் வருமே?? ஒருவேளை அவள் பேசுவதை கேட்டு மாமியார் நிறுத்திவிட்டாரா? அப்படிப்பட்ட பழக்கம் அவருக்கு கிடையாதே! "
பொதுவாக பெண்களின் இயல்பு சட்டென்று எதையும் நம்பிவிடாது!
சாரு இயல்புக்கு மாறாக நல்லது செய்வதும், நல்லது மட்டும் நடக்கும் என்று நம்பிக்கையுமாக வாழ்ந்திருந்தாள்! ஆனால் இப்போது அவள் மனதால் மனைவியாக, தாயாக, முழுமையான பெண்ணாக மாறியிருக்கிறாள்!
அவளது மனதுக்குள், அவளுக்கு மறைத்து ஏதும் நடக்கிறதோ என்ற ஐயம் முதல் முறையாக தோன்றியது! சாருவுக்கு இப்போது அனிதாவின் செயல்பாடுகளில் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது!
மாமியாரும்,அனிதாவும் இணக்கமாக இருக்கிறார்கள்! அவர்கள் தான் ஏதும் சூழ்ச்சி செய்ய எண்ணுகிறார்களோ? ஒருகணம் பதறிய மனதை நிலைப்படுத்தியவள், முன் தினம் அவள் எண்ணியதைப் போல அவளை முதலில் கிளப்பிவிட்டால் போதும்! ஆனால் அது எளிதான காரியமா? அவளால் முடியுமா?
அவளது ஆனந்தனை மீறி அப்படி என்ன செய்து விடப் போகிறார்கள்? சொல்லப்போனால் அவன் இருக்கும்போது அவள் ஏன் கலங்க வேண்டும்? எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்! என்று திடமான நம்பிக்கையோடு அமைதியானாள் சாரு!
எந்த ஒரு உறவும் நிலைப்பதற்கு நம்பிக்கை முக்கியம்! அது ஆட்டம் காணும் போது.. எத்தகைய மனிதனும் உடைந்து போவான்!