• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

21.நவிலனின் கோதையானவள்

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
65
59
18
Salem

21.நவிலனின் கோதையானவள்​




அம்சா, “வாங்க அண்ணி… நல்ல இருக்கீங்களா?

என்ன நக்கலா கேட்குறியா என் வீட்டுக்கு வரதுக்கு என்ன என்ன எல்லாம் எல்லாரும் பார்க்க வேண்டியதா இருக்கு என்று சாலித்து கொண்ட ராணி… எங்க என் தம்பி?

அவரு இன்னும் வேலை முடிச்சு வரல அண்ணி…

ஓஓஓ…

இங்க எல்லாம் கஷ்டப்பட்டு சொத்து சேர்க்கவும் தூக்கி விடனும் நீயும் உன் பொண்ணும் ஹாயா உட்கார்ந்துட்டு இருக்கீங்க

ப்ச் என்ன அண்ணி இப்ப பிரச்சினை?

என்ன சலிப்பு தட்டுதோ…

ராணி கேட்ட கேள்வியில் அதுல என்ன தப்பு என்று முணுமுணுத்தாள் அம்சா..

என்ன அங்க பேச்சு சத்தமில்லாமல்…

ஒன்னு இல்ல அண்ணி அவரு வர நேரம் அதான் வாசலை பார்த்துட்டு இருக்கேன்

என்ன அம்சா நக்கலா நான் வந்து இங்க உட்கார்ந்து இருக்கிறது உனக்கு அவல் மெல்லும் மாதிரி இருக்கா?

அண்ணி ஏன் நீங்க ஏதேதோ நினைக்குறீங்க?

பின்ன நான் தானே நினைக்கனும் ஏன்னா எனக்கு தானே அவமானம் நான் பார்த்து வளர்ந்து நான் எல்லாம் கையில் வச்சு பார்த்து பார்த்து செஞ்ச பையன் இன்னைக்கு எடுத்து எரிஞ்சு பேசும் போது வலி எனக்கு தானே?

அண்ணி அப்படி எல்லாம் இல்லை..

என்ன இல்ல அதனால் தானே கொண்டு வந்து முகத்துல வீசி எறிய வந்த..

அச்சோ அண்ணி தப்பு தான் நான் அப்படி பண்ணி இருக்க கூடாது..

ஓஓஓ தப்புன்னு இந்த ஒரு வாரமா தோணல வந்து பேசனும் ன்னு புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் தோணல ஆனா பாரேன் வளர்ந்த பாசம் எனக்கு மாறல நானே வந்து நிற்குறேன் மானம் ஈனம் இல்லாம..

ஏன் அண்ணி இப்படி பேசுறீங்க..

வேற எப்படி பேசும் இதோ நான் வந்து பத்து நிமிஷம் ஆகுது ஆனா பாரேன் ஒரு தண்ணி கூட இல்ல ஏன் வந்து இருக்கா அப்படின்னு தானே நினைச்சுக்கிட்டு இங்கனவே நின்னுட்டு இருக்க..

சத்தியமா அப்படி எல்லாம் இல்லை அண்ணி என்றவள் வேகமாக அடுப்படிக்குள் சென்று டீயுடன் வந்து இந்தாங்க அண்ணி டீ…

கழுத்தை திருப்பிய ராணி எனக்கு கேட்டு வாங்கி குடிக்கிற அளவுக்கு இன்னும் நிலைமை வரல எனக்கு வேணாம் நான் என் கூடப் பொறந்தவனை பார்த்து வந்தேன் வரட்டும் நான் பேசிட்டு கிளம்புறேன் என்று அமர்ந்தாள் வாசலை பார்க்க…

கார்த்திகேயன் வரும் வழியை தான் காணவில்லை அடுப்படிக்குள் சென்ற அம்சா கார்த்திகேயனை அழைத்து,உங்க அக்கா வந்து இருக்காங்க சீக்கிரம் வீட்டுக்கு வாங்க சரி எங்க இருக்கீங்க?

மால்ல..

சரி சரி பார்த்து பொறுமையா வாங்க…

ம்ம்ம விக்னேஷ் கூட தான் இருக்கேன் வரேன் என்றவர் கிளம்பி இருந்தார்.


வீட்டிற்குள் வந்து மூவரையும் பார்த்து இதோ வந்துட்டாங்க உன் அருமை புள்ளையும் மருமகளும் என்று கவிதா சொல்ல…,மங்கை தான் பனியை கண்களால் எரித்து கொண்டு இருந்தார் பனியை பார்த்து வேகத்தில் எழுந்தவர் பனி என்னோட வா என்று அறைக்குள் செல்ல,நவிலனை பார்த்தவள் என்னாச்சு ன்னு தெரியலையே என்று கேட்க..,இதோ இங்க புகை இருக்கு இல்ல அது புகைஞ்சு புகைஞ்சு நெருப்பை உண்டாக்கி இருக்கும் அந்த நெருப்பு பொறி பறக்க வேண்டாம் போ போ என்று வசந்த் மெல்ல உதட்டசைத்து சொல்ல,பக்கென சிரித்து விட்டான் நவிலன்.

ஏய் என்ன அங்க உள்ள வரலாமா வேண்டாமா என்று மாநாடா என்ற கவிதா நவி வா டீ வச்சு தரேன் என்று எழுந்து கிட்சன் செல்ல..

மச்சான் அடுத்த வெடி, லெட்ஸ் என்ஜாய் என்றவன் சோஃபாவில் சென்று அமர,ஏங்க உங்களுக்கு டீயா காப்பியா?

வசந்த், “எதுவா இருந்தாலும் சரிம்மா..

நவிலன் புருவம் உயர தன் மாமனை பார்த்து கொண்டே அவன் அறைக்குள் நுழைந்து பிரஷ் ஆகி வர,இங்கே அறைக்குள் என்ன பனி பண்ணிட்டு இருக்க கவிதாவை எதுக்கு ஸ்கூல் வரச் சொன்ன..? அதுவும் இன்னைக்கே..

அத்தை


பேசாத பனி நீ முடிவு பண்ணியே ஒரு வார்த்தை நவியை கேட்டியா..

அவருக்கு தெரியும் அத்த..

என்ன

ஆமாம் என்று தலையாட்ட..

அப்ப புருஷனும் பொண்டாட்டியும் அடுத்தவங்க கையை எதிர்ப்பார்த்து நிக்கலாம் ன்னு முடிவு பண்ணிட்டீங்க…

எதுக்கு அத்த அப்படி நிற்க போறோம்.

பின்ன இங்க பாரு என்று சில பேப்பர்களை எடுத்து நீட்ட..

என்னது அத்த..

நீ படிச்சவ தானே படிச்சு பாரு நானும் சொல்லி பார்த்துட்டேன் எதுவும் உசனங்க இரண்டு பேர் மண்டையிலையும் ஏறவே இல்ல இப்ப மாப்ளை வந்து இருக்கார் அவர் முன்னாடி எப்படி பேசுறது அவர் என்ன நினைப்பார் என்னத்தையோ பண்ணி தொலைங்க அவ பண்ணுற ஒன்னு ஒன்றுக்கும் நீங்க தான் காரணம் அவன் தான் புரியாம பேசினா நீ அதுக்கு மேல இருக்க பனி… அன்பு பாசம் எல்லாம் சரி தான் ஆனா அதுவும் ஒரு அளவுக்கு மேல் போனா கசந்துடும் அதுக்கு வழி நீங்க தான் ஏற்படுத்தி தரீங்க

அத்தை…

வேண்டாம் பனி என்னால் இதை கிரகிக்கவே முடியல எப்படி இதை நவி எடுத்துப்பான்னு தெரியல..

ஏன் என்னத்த அண்ணி எழுதி இருக்காங்க..

நீயே பாரு என்றவர் தலையில் கை வைத்து கட்டிலில் சாய்ந்து விட..

சரி இருக்க வரேன் அவரும் வரட்டும் டீ தரவா அத்த..

பனி இப்படி கேட்டதும் விழிகளை திறந்து முறைத்தவர் அவ வந்து பேசினது மே வயிறு குளிர்ந்து இருக்கு நீ இன்னும் அதுல டீயை ஊத்து எரியட்டும்.

அத்த

போ என்னால முடியல என்று கண் மூடி விட..


அம்மு அம்மு…

வரேன் ங்க என்றவள் வெளியே வர ஹாலில் வசந்த் நவி கவி என மூவரும் அமர்ந்து இருக்க..கவிதா தான் சாரங்கன் பங்கை வாங்க சொல்லி நவிலனை சாட்டை போல் சுழட்டி கொண்டு இருந்தாள்.

அக்கா அப்படி வாங்க முடியாது அந்த ஸ்கூல் 70%அவரோட ஷேர் நான் 30%ஷேர் தான் வாங்கினேன் .

அதான் சொல்லுறேன் அதை வாங்கி போடு அதுவும் நம்ம குடும்பத்து பேர்ல..

அக்கா..

ஆமா டா என்ன இது பேசுறாரு பாரு மதிக்க தெரியுதா அப்படி ஒரு அலட்சியம் அவர் முகத்தில்..


பனி அமைதியாக இருக்க..

என்ன நவி நீ அவ முகத்தை பார்த்துட்டு இருக்க..


அதெல்லாம் எதுவும் பண்ண முடியாது அக்கா அங்க நமக்கு இருக்க ஷேர் வேல்யூ அப்படி அப்புறம் என்னால் முழு ஷேரையும் வாங்க முடியாது இப்ப தான் ஹாஸ்பிடல் ல இருக்க சில பல டிபார்ட்மெண்ட் க்கு மெஷின் எடுத்தேன் அதோட அப்பா கம்பெனி ல நிறைய வேலை அதை நீயும் என்னனு பார்க்க மாட்டேங்குது மாமாவை நான் பாடாபடுத்த முடியாது அவரோட கம்பெனியும் இருக்கு இல்ல அப்ப அதையும் பார்க்கனும் இல்லையா…

அதைத்தான் விக்க சொல்லிட்டேன் நவி இனி இங்க இருக்க கம்பெனியை பார்க்கட்டும்..

என்னக்கா சொல்லுற நல்லா போய்ட்டு இருக்க கம்பெனி எதுக்கு?


ஆமா என்னத்த பண்ண சொல்லுற அதையும் இதையும் அவரால் பார்க்க முடியல அதான்.

இல்லக்கா அது சரி வராது

ஏன் டா சரி வராது..

அக்கா சொன்னா புரிஞ்சுக்க நல்ல லாபம் வர கம்பெனி அது..

வந்து என்ன பண்ண என்று அவள் முணுமுணுத்தாள்..வசந்த் அவள் முகத்தை தான் பார்த்து கொண்டு இருந்தான் ஏதோ யோசனை பலமா பண்ணுறா என்னத்த பண்ண இருக்கிறாளோ நாம பண்ண போற வேலை தெரிஞ்சா என்ன பண்ணுவாளோ என்று பார்த்து கொண்டு இருக்க,என் மூஞ்சுல என்ன இருக்கு அங்க இருக்கிறது வித்து இங்க கம்பெனி ல போடுங்க இங்கேயே இருந்து பார்த்துக்கோங்க என்று பேச..

போதும் நிறுத்துக்கா ..

என்னடா சத்தம் போடுற..


பின் என்னக்கா அதை கொண்டு வந்து இங்க போட சொல்லுற அது மாமாவோட சொத்து அதனால் என்ன நவிலா என்றாள் கவிதா..

அக்கா புரியாம பேசாத மஞ்சு க்கு செய்ய வேண்டியது பார்க்க வேண்டியது ன்னு நிறைய விஷயங்கள் இருக்கு..

ஏன் அதை செய்ய மாட்டோம் ன்னு சொல்லலையே அவளுக்கு எங்க செலவில் தான் கல்யாணம் பண்ண போறோம் அப்புறம் நல்லது கெட்டதுன்னு அவளுக்கு நாங்க செய்யலாமா போகப் போறோம்..

ஓஓஓ அப்படியா நீ செல்சு தான் அவ வாழ்க்கையை வாழ வேண்டிய இடத்தில் இல்லக்கா அவளுக்கும் அந்த சொத்தில் உரிமை இருக்கு …

என்னடா பேச்சு இது என்ன உராமை இருக்கு அது என் வீட்டுக்காரர் சம்பாத்தியம்..

ஓஓஓ அப்படி வரியா ஆமா என்றாள் கவிதா..

அப்ப இந்த ஸ்கூல் விஷயத்தில் நீ எப்படி தலையிடலாம் அது என்னோட சுய சம்பாத்தியம்..

என்ன பெரிய இவனாட்டும் பேசுற எங்க இருந்து வந்தது எல்லாம் எங்க அப்பா காசு அதுல இருந்து தானே இப்படி வளர்ந்து வந்து இருக்க..

ஆமா இல்லன்னு சொல்லல ஆனா அதை நான் கடனா தான் வாங்கினேன் அதை திரும்ப தந்துட்டேன் அதுக்கு கணக்கு டாக்குமெண்ட் எல்லாமே இருக்கு..


பரவாயில்ல நிலா கணக்கு நல்லா சொல்லுற உன் பொண்டாட்டி சொல்லி தந்தாளா நான் என்னவோ இது மனநலம் சரியில்லாதது காலம் போன் காலத்தில் நாம் தான் பார்க்கனும் போலன்னு இல்ல நினைச்சேன்..

அக்கா என்று நவிலன் அதட்டி

அட நிறுத்து டா நீ எதை மறைச்சாலும் சில விஷயங்களை மறைக்க முடியாது அவ வைத்தியம் தானே அப்படி தானே அவளை நீங்க படிச்ச காலேஜ் லயே வச்சு டீரிட்மெண்ட எடுத்தீங்க உனக்கு நான் சொல்லனுமா என்ன?

என்ன பேசிட்டு இருக்க இப்ப எதுக்கு இந்த விஷயம் உனக்கு..

இருக்கே எங்கப்பா கஷ்டப்பட்டு சேர்த்து வச்சதை நீ அவளுக்கு எழுதி வச்சு நாளைக்கு அது பொது சொத்தா எவனுக்காவது போகவா அவ என்ன நல்ல மனநிலையிலா இருக்கா அப்படியே இருந்தாலும் நாளைக்கு அவளுக்கு பிறக்க போறது மட்டும் நல்லவிதமாக இருக்க போகுது என்று சொல்லி முடிக்கையில் தரையில் சுருண்டு விழுந்தது இருந்தாள் கவிதா.


தொடரும்