மருத்துவமனையில் இருந்து கிருஷ்ணா அவனது அத்தையையும் அனிஷாவையும் கொணர்ந்து வீட்டில் விட்டு சென்ற பிறகு கனகவல்லி மகளிடம், அவள் ஏன் ரவியுடன் அங்கே வந்தாள் என்று விசார்த்தாள்..
நடந்ததை அப்படியே சொன்னால் நிச்சயம் அம்மா அவளை கொன்று போட்டு விடுவாள் என்று அஞ்சிய அனிஷா, வேகமாக யோசித்துவிட்டு,"நான் மகாபலிபுரம் போயிருந்தேன் அம்மா என் பிரண்ட்ஸ் கூட, அங்கே அத்தான் இந்த ரவிகூட தன்னோட வெளிநாட்டு நண்பர்களுக்கு காட்டேஜ் புக் பண்ண வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் சாப்பிட கூட்டிட்டுப் போனார். அப்புறம். .."
"ஏய்....! என்னடி கதை விடறே? உன் அத்தான் ஒரு போன் போட்டால் எத்தனை காட்டேஜ் வேணும்னாலும் புக் பண்ணிக்கலாமே? அதுக்கு ஏன் நேர்ல போகணும் ?"
"நானும் அதைத்தான் கேட்டேன்மா. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. கூட்டம் அதிகம். அதோடு அவரோட வெளிநாட்டு நண்பர்களுக்கு ஏற்றார்போல அறைகள் வசதியாக இருக்கிறதா என்று பார்த்து புக் செய்ய வந்ததாக அத்தான் சொன்னார்".
"ம்ம் சரி என்னவோ அப்புறம்னு சொல்ல வந்தியே., என்ன அது?"
"அது... ஆமா... அப்புறமா, இன்றைக்கு லீவுதானே,வேற முக்கியமான வேலை ஒன்றுமில்லைனு கொஞ்ச நேரம் கடற்கரையில் இருந்துவிட்டு கிளம்பிடுவேன்னு அத்தான் சொன்னார். நானும் அவர்கூட போனேன். அத்தான் கொஞ்சம் நேரம் தண்ணியில நின்னுட்டு கரையில் அந்த ரவிகூட பேசிட்டு இருந்தார். நான் இன்னும் கொஞ்சம் நேரம் நின்னுட்டு வர்றேன்னு சொல்லி தண்ணில கால் நனைச்சுட்டு இருந்தப்போ வழுக்கி விழுந்துவிட்டேன். அந்த நேரம் ஒரு பொண்ணு ஓடி வந்து என்னை தூக்கி விட்டாள். அது யாருன்னு பார்த்தா நம்ப சத்யபாரதி அக்கா" என்று அனிஷா சொல்லிக்கொண்டே வர கனகவல்லி அதிர்ந்து,
"அவளா? அவள் எங்கே அங்கே வந்தாள்? கூட யார் வந்திருந்தாங்க? உன் அத்தான் அவளைப் பார்த்துட்டானா? என்றாள் பதற்றமாக..
தாயின் பதற்றத்திற்கு காரணம் புரியாமல் குழம்பியவளாய், தொடர்ந்தாள் அனிஷா, "இரும்மா முழுசா சொல்றேன், என்றுவிட்டு, தொடர்ந்து "அவளோட ஒரு பொண்ணு வந்திருந்தாள், அவள் தண்ணியில நிற்கலாம்னு சத்யாக்காவை இழுத்துட்டுப் போனாள். நான் அத்தான்கிட்டே போய் மிளகா பஜ்ஜி சாப்பிடலாம்னு கூப்பிட்டேன். சரின்னு எழுந்தப்போ அந்த பொண்ணு ரூபா காப்பாதுங்கனு கத்தினா, என்னடான்னு பார்த்தா சத்யாக்காவை அலையடிச்சுட்டு போயிட்டு இருந்துச்சு. நல்ல வேளையாக அத்தான் அவளை காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்த்துட்டு, அவளுக்கு ட்ரீட்மெணட் முடியறதுக்கு நேரமாகும்னு டாக்டர் சொன்னதால், அத்தான் என்னை ரவி கூட அனுப்பிவிட்டார். இதுதான் நடந்தது" என்று அவள் முடித்தபோது கனகவல்லி,
"அலையோடு போய் தொலைச்சிருக்கலாம் என்று தனக்குள் பொருமியவள், "கண்ணனுக்கு அவள் சென்னையில் இருக்கிறது தெரியுமா? " என்று அவசரமாக கேட்டாள்.
"தெரியும்னு தான் நினைக்கிறேன் அம்மா. அவளோட வந்த பெண்ணை பெயர் சொல்லி கூப்பிட்டு அத்தான் சத்தம் போட்டாரு. அப்போதான் அவ பெயர் ரூபானு தெரிஞ்சது, "என்றவள் "அம்மா எனக்கு ரொம்ப பசிக்கிறது. நான் பிரஷ்ஷப் பண்ணிக்கிட்டு வர்றேன்" என்று தன் அறைக்கு விரைந்த மகளை பார்த்த கனகவல்லியின் மனம் கொதித்தது.
"ஆமா, இவ வாழ்க்கையை எவளோ பறிக்க காத்திருக்கா, இவளுக்கு இப்ப சாப்பாடு ரொம்ப முக்கியம்தான், என்று எண்ணியவளுக்கு ஒரு யோசனையும் ஓடவில்லை. ஆனால் ஏதேனும் செய்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் அவள் கட்டிய கோட்டை சரிந்து தரைமட்டமாகிவிடும்". கனகவல்லி தீவிரமான யோசனையில் ஆழ்ந்தாள்.
மறுநாள்..
கனகவல்லி ஒருபுறம் தீவிரமாக சத்யபாரதியை விலக்குவதற்காக திட்டம் போட்டுக் கொண்டிருக்க.. மறுபுறம் சத்யபாரதியும் தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள்.
காலையில் தாமதமாக எழுந்ததும் பணிக்கு செல்லவேண்டுமே என்று பரபரத்தவளை "டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கிறார் சத்யாம்மா. அதனால் இன்னிக்கு ஒரு நாள் லீவு எடுத்துக்கோ" என்று அவளை அமைதி படுத்தினாள் ரூபா. மதிய உணவை இருவருமாக சாப்பிட்டு முடித்தபின் "சத்யாமா மளிகை சாமான் கொஞ்சம் வாங்கணும். நான் போயிட்டு வந்திடுறேன். நீ பேசாமல் டிவி பாரு இல்லாவிட்டால் பேசாமல் தூங்கு" என்று ரூபா கிளம்பிச் சென்றாள்.
சத்யபாரதிக்கும் இடையூறு இல்லாது சிந்திக்க வேண்டியிருந்தது. முன்தினம் கிருஷ்ணா தான் கண்ணன் என்ற உண்மையை அறிந்தபின் அவளது மனது ஒரு நிலையில் இல்லை. அன்று கண்ட கனவிற்கு இன்றைக்கு அர்த்தம் புரிந்தது. மகிழ்வதற்கு முடியாமல் கண்கள் கலங்கியது. ஆயுள் இல்லாத இந்த காதல் வராமலே இருந்திருக்கலாம். யாரோ ஒரு கிருஷ்ணாவாக இருந்தபோதே அவனது பிரிவை தாங்க முடியவில்லை.
இப்போது அவனை அறிந்து விட்ட பிறகு வேதனை அதிகமாயிற்று. அதிலும் அவன் விரும்பும் பெண் யாரென்று தெரியாத வரையில் இருந்த ஒருவகை அமைதியும்கூட இப்போது காணாமல் போயிற்று.
அண்ணி வசந்தியின் உறவு என்ற வகையில் இனி கிருஷ்ணாவை சந்திக்கும் தருணங்கள் அதிகமாகக்கூடும். அன்றைக்கு திருமணநாள் வாழ்த்து சொல்ல அண்ணியிடம் பேச முயன்றபோது அவள் விருந்தினர் என்றாளே, தவிர தன் தம்பி வந்திருப்பதாக தெரிவிக்கவில்லை என்பது நினைவிற்கு வந்தது. ஆக சத்யபாரதி எந்த வகையிலும் தன் தம்பியுடன் பேசிப் பழகுவதை வசந்தி விரும்பவில்லை என்பது புரிந்தது. முன்பெல்லாம் இதே அண்ணிதான் வாய் ஓயாமல் தம்பி புராணம் பாடியதும் நினைவில் ஓடியது. கூடவே அன்று அருணவ்விடம் பேசியதும் அப்புறம் அண்ணன் பேசியதும் ஞாபகம் வர, அண்ணனும் சேர்ந்து மறைத்தான் என்பதை நினைக்கையில் வருத்தம் உண்டாயிற்று. ஆனாலும் ஏன் என்று காரணத்தை ஆராய முற்படவில்லை. மாறாக மொத்தமாய் விலகிப்போய்விட முடிவு செய்தாள் சத்யபாரதி.
ஆனால்...
சத்யபாரதி விலகிப் போக நினைப்பதற்கு இன்னொரு காரணம் கிருஷ்ணாவின் மாமா உடம்பிற்கு முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் நிச்சயமாக அண்ணி வருவாள். மரியாதை நிமித்தம் அவளோடு போயாக வேண்டும் இல்லாவிட்டால் அது தவறாகிப்போகும். கிருஷ்ணா கூட அக்காவை காண என்று வரலாம் இப்படி எத்தனையோ சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது அவள் விலகிச் செல்வது சாத்தியமே கிடையாது. யார் கண்டது மாமாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் திருமணத்தை சீக்கிரத்தில் முடிக்கவேண்டும் என்று நடத்த திட்டமிட்டக் கூடும். அதை எல்லாம் காணும் தெம்போ திடமோ அவளுக்கு இல்லை.
சத்யபாரதி விலகிப்போக முடிவெடுத்துவிட்ட போதும் எங்கே எப்படி என்று புரியவில்லை. முன்பு ராஜேந்திரன் அங்கிள் உதவி செய்தார். அதிலும் கூட ஏதோ மர்மம் இருப்பதாக இப்போது தோன்றியது. அதைப்பற்றி இப்போது கிளறி ஆகப்போவது ஏதுமில்லை. திடுமென அவள் நடுத்தெருவில் யாருமற்று விடப்பட்டாற் போன்ற உணர்வு உண்டாக ஒருகணம் மனது பதறிப்போயிற்று. ஒருநிமிடத்தில் எத்தனையோ விஷயங்களை கற்பனை செய்யும் வல்லமை படைத்தது நம் மனது. தலையை உலுக்கிவிட்டு நிகழ்விற்கு வந்தபோது அழைப்பு மணி ஒலிக்க திடுக்கிட்டுப் போனாள். சுதாரித்துக்கொண்டு எழுந்தவளுக்கு ரூபா என்றால் அவளிடம் ஒரு சாவி இருக்கும். இவளை தொந்தரவு செய்யக்கூடாது என்று எடுத்துப்போவது வழக்கம். அப்படி என்றால் வந்திருப்பது யாராக இருக்கும் என்று யோசித்தவாறே சென்று மேஜிக் ஐ( Magic eye) மூலமாக பார்த்தவளுக்கு குப்பென்று வியர்க்க, பதற்றம் உண்டாக நடுங்கும் கரத்தால் கதவைத் திறந்தாள். அதற்குள் நாலு தடவை அழைப்பு மணி ஒலித்துவிட்டது.
"கதவை திறக்க இவ்வளவு நேரமா? அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை? என்று சிடுசிடுத்தவாறு நுழைந்த கனகவல்லியின் விழிகள் நிதானமாக வீட்டை அளவெடுத்தது. உள்ளே சென்று தண்ணீர் கொணர்ந்து கொடுத்து அமரச் சொன்னாள் சத்யபாரதி.
"ம்ம்.. நீ வேலை பார்த்து இவ்வளவு பொருளும் தவணையில் வாங்கினியா? என்றபடி ஒரு சோபாவில் அமர்ந்தாள்.
"இல்லை எல்லாம் அண்ணா அண்ணிதான் வாங்கி போட்டாங்க".
"ஓ! மகாராணி வேலைக்கு போயி சம்பாதிக்க இத்தனை சொகுசுகளும் செய்து கொடுத்திருக்காளா உன் அண்ணி ? பொழைக்க தெரியாதவள். ஏன் ஒரு ஹாஸ்டலில் ரூம் எடுத்து தங்கினால் போதாதா? இந்த வீட்டுக்கு வாடகை கரண்ட் பில் இன்னும் உனக்கு சேவகம் செய்ய ஒருத்தி, அடேயப்பா இதுக்கு நீ பெங்களூரில் வேலை பார்த்திருந்தால் இந்த செலவாவது மிஞ்சி இருக்கும். நானும் வேலைக்கு போறேன் பேர்வழினு இதென்னடி கூத்தால்ல இருக்கு??" அவள் பேச பேச கூனிக்குறுகிப் போனாள் சத்யபாரதி.
கனகவல்லி சொன்னது எல்லாமும் சரிதானே?. அவள் காலில் நிற்க வேண்டும் என்று எணணியதற்கு மாறாக அவள் ஏதோ பொழுது போக்க வேலைக்கு சென்றது போல் அல்லவா ஆகிவிட்டது.
"அது எல்லாம் கிடக்கட்டும் வயசுப் பொண்ணு தனியா இப்படி இருக்கிறது நல்லாவா இருக்கு? ஊர் உலகம் என்ன பேசும்? பெத்தவங்க இருந்தாக்க உன்னை இப்படி விட்டுருப்பாங்களா? இந்நேரம் உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிவச்சு நீயும் குழந்தை குட்டினு இருந்திருப்பே. உன் அண்ணனுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது. இல்லன்னா உன்னை இப்படி அனாமத்தா அனுப்பி வச்சுட்டு அவன் பாட்டுக்கு குடும்பத்தோடு ஜாலியா இருப்பானா?" என்று அவள் தொடர்ந்து சொல்ல,
அதற்குள்ளாக தன்னை திடப்படுத்திக் கொண்டு, "அண்ணி செய்துக்க சொன்னாங்க தான். நான்தான் கொஞ்சம் நாள் போகட்டும்னு சொன்னேன் ஆன்ட்டி", என்றவள் என்ன சாபாபிடுறீங்க கூல் ட்ரிங்க்ஸா காபி டீ? என்று விருந்தோம்பலை தொடங்கி அவள் வாயை அடக்க முயன்றாள் சத்யபாரதி.
கனகவல்லி அதெற்கெல்லாம் அசைகிறவளா என்ன? "ம்ம் வெயிலில் வந்தது, தொண்டை காஞ்சுதான் இருக்கு. ஜில்லுனு கொஞ்சம் ஜுஸ் கொண்டு வா" என்றுவிட்டு, ஆமா உனக்கு சேவகம் பண்ண வந்தவ எங்க காணோம்? உன்னை தனியா விட்டுட்டு ஊர் சுத்தப் போயிட்டாளா? என்று தொடர்ந்து வினவியதை கேளாததுபோல் பாவித்து குளிர்பானத்தை கொணர்ந்து கொடுத்தாள் சத்யபாரதி.
"அங்கிள் எப்படி இருக்கிறார் என்று தொண்டை வரை வந்துவிட்டதை விழுங்கி, "என்ன விஷயம் ஆன்ட்டி? ஒரு போன் பண்ணியிருந்தால் நானே வந்திருப்பேனே"
"என்ன செய்ய? எனக்கு ஆத்திரம் என்றால் நான்தானே வந்தாகணும்? நான் நீ வேலை செய்ற இடத்துக்கு தான் போனேன். அங்கே இன்னிக்கு நீ வரலைன்னு சொன்னாங்க. அதுவும் வசதிதான்னு உன் விலாசத்தை வாங்கிக்கினு வந்துட்டேன். அப்பவும் உன்கூட இருக்கிறவளை என்ன பண்ணுறதுனு கொஞ்சம் யோசனையாதான் வந்தேன். இப்ப அவளும் இல்லைங்கிறது இன்னும் வசதிதான்" என்று ஏதோ கொள்ளைக்காரன் சே சே கொள்ளைக்காரி ரேஞ்சில் பேசவும் சத்யபாரதி உண்மையில் சற்று கலங்கித்தான் போனாள்.
யாருமில்லாத தனிமையில் அவளிடம் இந்த அம்மாள் அப்படி என்னத்தை பேசப் போகிறாள்??
"எ..என்ன ஆன்ட்டி சொல்லுங்க." என்று திடத்தை வரவழைத்தவாறு வினவினாள்..
" சுத்தி வளைச்சு பேசுகிறது எனக்கு புடிக்காது. அதனால வந்த விசயத்தை நேராவே சொல்லிடுறேன். என் பொண்ணு கல்யாணம் இப்ப உன் கையில்தான் இருக்கு சத்யா" என்று எடுத்த எடுப்பில் சொல்ல சத்யபாரதி திகைத்துப் போனாள்.
"எப்படினு நினைக்கிறியா? இந்த குடும்பத்துல இப்ப நீயும் ஒருத்தியா இருக்கிறதாலதான். விவரமாவே சொல்றேன். என் பொண்ணுக்கு மாப்பிள்ளை ரெடியா இருக்கான். என் நாத்தனார் மகன் கண்ணனைத்தான் சொல்றேன். என் வீட்டுக்காரர் உடம்பும் சரியில்லை. அவருக்கு ஒரே ஆசை மகளோட கல்யாணத்தை கண்ணால பார்க்கணும்கிறதுதான். சரி அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு வசந்திக்கிட்ட சொன்னா, மூத்தவள் சத்யா இருக்கிறாள் அவளுக்கு முடிக்காமல் எப்படி அத்தை என்று கேட்கிறாள். இங்கதான் நீ இந்த குடும்பத்துல ஒருத்தியா என் மகள் கல்யாணம் தடைபட காரணமா நிற்கிறே. இப்ப சொல்லு நான் தப்பா சொல்லலைதானே?" அதனாலதான் என் பொண்ணு கல்யாணத்தை நடத்த உன்கிட்ட உதவி கேட்டு வந்திருக்கிறேன்".
உண்மையில் சத்யபாரதி வாய் பேச முடியாமல் விக்கித்துப் போய் நின்றிருந்தாள்.
கனகவல்லி மேலும் பேசினாள், "அது எப்படின்னுதானே யோசிக்கிறே? நானே சொல்றேன். நீ உடனே கல்யாணம் பண்ணிக்கணும் என்று அதிரவைத்தாள்.
"அது.. திடீர்னு எப்படி. .. வார்த்தை வராமல் தடுமாறினாள் சத்யபாரதி.
"ம்ம்... எனக்கு உன் தயக்கம் புரியுது.. சத்யா. பெத்தவங்க உசிரோட இருந்திருந்தால் உன்னை தனியா அனுப்புவாங்களா? நீ என்னதான் கல்யாணம் இப்போது வேணாம்னு சொன்னாலும் விட்ருவாங்களா? உன்கிட்ட கேட்காமல் சம்பந்தமே பேசி முடிச்சிருப்பாங்க. நீயும்தான் பெத்தவங்களை மதிக்காத பெண்ணா? அவங்க சொன்னதும் சரின்னு ஒத்துக்கிட்டுதான் இருப்பே. அதுக்கு தான் கொடுப்பினை இல்லாம போச்சு". கனகவல்லி பேச பேச சத்யபாரதிக்கு மனம் வலித்தது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், "அதெல்லாம் விடுங்க ஆன்ட்டி, உங்க மகள் திருமணம் நல்லபடியா நடக்கும். நான் அண்ணிக்கிட்டே பேசுகிறேன்." என்றாள்.
"ம்க்கும்... நான் சொல்லியே உன் அண்ணி வசந்தி கேட்கலை. நீ சொன்னா உடனே கேட்டிருவாளாக்கும்?? "
"ஆன்ட்டி??.. சத்யபாரதி திகைத்து நின்றாள்.