• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

212 (9)

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
212

9

எதிர்பார்த்த நேரத்திற்கு முன்னதாகவே துருவ் மற்றும் திலீப் கேட்ட கெமிக்கல் மாத்திரைக் கிடைத்துவிட்டது. துருவின் நல்ல நேரம் போலும் அன்று மதியம் மாடியில் யாரும் இல்லை. மயூரி அறை அருகே சென்றான். மயூரி ஆன் லைன் வகுப்பிற்கு தயார் செய்து கொண்டிருந்தாள். துருவைக் கவனிக்கவில்லை.

துருவ் தன் செல்போனில் சத்தத்தை ஒலிக்க அதற்கு கட்டுண்டாள் மயூரி. உடனே அவன் “இந்த மாத்திரையை முன்ன வெச்ச மாத்திரையோடு சேர்த்து வை” என ஆணையிட்டான்.

அவளும் மாத்திரையை அவனிடமிருந்து வாங்கி இல்லாத மாத்திரையுடன் வைத்தாள். பின்பு சத்தத்தை ஒலிக்க வைத்துவிட்டு வந்துவிட்டான். அவளுக்கு துருவ் வந்ததும் சொன்னது போனது எதுவும் தெரியாது.

அன்று மாலை“ துருவ் இந்தா காபி?“ என அவன் அறைக்கே கொண்டு வந்து கொடுத்தாள் மயூரி. இதற்கு முன்னும் வந்திருக்கிறாள் ஆனால் இன்று அவனுக்கு மிக முக்கியம்.

முதல் முறை மாத்திரை எப்படி வேலை செய்கிறது எனப் பார்க்க வேண்டும். அதிக நாட்கள் கையில் இல்லை. பதட்டமாய் இருந்தான்.

எப்படி அவளைச் சந்திக்கலாம் என எண்ணியவனுக்கு அவளே தரிசனம் கொடுத்துவிட்டாள்.

“தேங்க்ஸ்” புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.

ஒரு மடக்கு பருகியவன் “அன்னிக்கு கண்ணாடி கிழிச்சி விரல் காயம் ஆச்சே .. இப்ப எப்படி இருக்கு?” என அக்கறையுடன் வினவினான்.

“ம் .. சரியாகிடுச்சி” என்றாள்.

துருவின் திட்டம் மயூரியின் ஆழ்மனதில் சில கட்டளைகளைப் பதிய வைக்க வேண்டும். தேவைப்படும் தருணத்தில் அவள் அவனின் கட்டளைக்கு ஏற்ப நடக்க வேண்டும் என்பதுதான்.

விரலில் காயம்பட்ட அன்றே அவளின் மென்டல் வேவ்லென்த்தை சோதித்துவிட்டான். இப்போது அவனுக்கு அவளின் மன அலைவரிசையை தனக்கு ஏற்றபடி மாற்ற வேண்டும்.

அன்று அவளை ஹிப்னடிஸ் செய்தது அவளுக்கு நினைவில் இல்லை. மாத்திரையை அவள் மூலம் வைத்ததும் நினைவில் இல்லை. அவையெல்லாம் வெறும் டிரைலர்தான் என்று தனக்குள் தானே சிரித்துக் கொண்டான்.

அவன் மனதில் இப்படியான எண்ணவோட்டங்கள் ஓட மயூரி துருவ் செல்போனில் படித்துக் கொண்டிருந்த திரையின் மேல் பார்வை விழுந்தது. அதில் “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” என்றிருந்தது.

“ஆழ்மனதிற்கு அத்தனை சக்தியா?” என செல்போனைக் கையில் எடுத்துப் பார்த்தாள்.

அவளிடம் அதிகமாகப் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்பதால் “ஆமாம் .. படித்துக் காட்டவா?” எனக் கேட்டான். துருவிடம் உள்ள திறமை பேச்சு மற்றும் குரல் வளம். அவன் சிறுவயதில் புத்தகத்திலிருந்து கதையைப் படிப்பான். மற்றவர் அவனைச் சுற்றி அமர்ந்து கேட்பார்கள். அதே நினைவில் அவன் கேட்க அவளும் இசைந்தாள்.

“ஷ்யூர்”அவளும் ஆவலாகப் பதிலளித்தாள்.

செல்போனில் இருந்ததை அப்படியே படித்தான்“ஆழ்மனதை நாம் அனைவரும் மிக எளிதாக அறியலாம், அணுகலாம், அடையலாம், அனுபவிக்கலாம் பயன்களும் பெறலாம்.”

“சுவாரஸ்யமா இருக்கே” வாயைப் பிளந்தாள்.

“ மனம் ஒரே மனம்தான் அதாவது ஒரே ஒரு மூளைதான். மூளைதான் மனம், மனம்தான் மூளை. இரண்டும் வேறு வேறு கிடையாது. அந்த மூளையின் சிந்தனை ஓட்டம் எந்த இடத்தில், எந்த ரீதியில், எந்த நிலையில் இருக்கிறது என்பது மட்டும்தான் வேறுபடுகிறது. அதாவது ஒரு மனிதன் பல முகமூடிகள் அணிந்தாலும் முகம் ஒன்றுதான்.

நம்மிடம் மூன்று விஷயங்கள் இருக்கு.
ஒன்று நமது உடல், இரண்டு நமது மனம், மூன்று நமது உயிர். இதில் மனம் என்பது உடலுக்கும், உயிருக்கும் நடுவில் ஊசலாடக்கூடியது. அந்த மனமானது உடலின் பக்கம் சார்ந்து இருந்தால் அது மேல் மனம், அதுவே உயிரின் பக்கம் சார்ந்து இருந்தால் அது ஆழ்மனம், இரண்டும் பக்கம் பேலன்ஸ் செய்தபடி இருந்தால் அது நடுமனம். எந்தப்பக்கம் எவ்வளவு தீவிரமாகச் சார்ந்து இருக்கிறதோ அந்த அளவிற்கு அதன் செயல்பாடுகள் இருக்கும்.

“ வாவ் .. சூப்பர்” என்றாள்

மேல்மன எடுத்துக்காட்டுகள்
கான்சியஸ் மைண்ட்டில் நாம் இருக்கும் அனைத்து நேரமும் மேல் மனதில்தான் இருக்கிறோம். உதாரணமாக வகுப்பறையில் பாடங்களைக் கவனிக்கும் மாணவன், கேமராவின் முன் நடிக்கும் நடிகன், மேடையில் பேசும் பேச்சாளர்கள், போர்க்களத்தில் நிற்கும் வீரன், சமையல் செய்யும் கலைஞர், தன் நண்பனின் காதலியை காணும் இளைஞன் என்று பலபல சொல்லாம்.

நடுமன எடுத்துக்காட்டுகள்
இதில் மனமானது உடலையும் உயிரையும் ஏறத்தாழ சம அளவில் சார்ந்து இருக்கும். எ.கா. சாலையில் வாகனங்களை செலுத்துபவர், மிக முக்கியமாக சைக்கிள் ஓட்டுபவர், சாப்பிடுபவர், குளித்துக்கொண்டிருப்பவர், முக்கியமாக பற்கள் தேய்த்துக்கொண்டிருப்பவர், தன்னுடைய காதலியை காணும்போதோ அல்லது அவருடன் நடக்கும்போதோ, இதுபோல நிறைய இருக்கிறது. இதில் மனம் சப்-கான்சியஸ் நிலையில் இருக்கும். அதாவது நடுமனம்.

ஆழ்மன எடுத்துக்காட்டுகள்
அடுத்தது சூப்பர் கான்சியஸ் (ஆழ்மனம்) இது பெயருக்கு ஏற்றார்போல் உண்மையிலேயே சூப்பரோ சூப்பர் கான்சியஸ். இந்நிலைக்கு நாம் தினந்தோறும் செல்கிறோம், வருகிறோம் ஆனால் கண்டுணர்வதில்லை.

இதில் நாம் இந்த உலகத்தையே துறந்துவிட்டு, மறந்துவிட்டு, அனைத்தையும் தூக்கி கடாசிவிட்டு அழகாக ஆழ்மனதில் செட்டில் ஆகிவிடுவோம். அதில் நாம் இருக்கும்போது நமக்கு தெரியவே தெரியாது, அதுபோல் உள்நுழையும்போது அவ்வளவாக தெரியாது. ஆனால் ரிடர்ன் வரும்போது மிகநன்றாக தெரியும் ஆனால் இதுவரை புரிந்திருக்காது, இனிமேல் புரியும்.

அது தூக்கம், ஆம் தூக்கத்தின்போது நம் மனமானது நமது உயிருடன் மிகவும் ஒன்றிப்போய்விடும். அந்நிலையில் நாம் நமது எண்ண ஓட்டங்களை அறியமுடியாது. அதாவது கான்சியசும் இல்லாமல், சப்-கான்சியசும் இல்லாமல் சூப்பர் கான்சியஸ் இருப்பதுதான் ஆழ்மன நிலை. அந்நிலைக்கு நாம் போகும்போது ஒரு சில நொடிகள் மட்டுமே நம்மால் புரிந்துகொள்ள முடியும், அந்நிலையில் இருக்கும்போது நம்மால் எதுவும் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் தூங்கி விழிக்கும்போது (டீப் ஸ்லீப் முடிந்து விழிக்கும்போது) அவரவர் எண்ண ஓட்டங்களுக்கு தகுந்தாற்போல் நீண்ட நேரமோ அல்லது குறைந்த நேரமோ ஆழ்மனதின் பிடியில் இருப்போம்.

“கட்டுரையை எழுதியவருக்கு மனமார்ந்த நன்றியை சொல்லணும். மிகப் பெரிய விஷயத்தை எல்லாருக்கும் புரியும்படி எளிதா கூறியிருக்கார்” என வியந்தாள் மயூரி.

“ஆமாம். ” துருவ் ஆமோதித்தான்.

வீட்டில் அவரவர் தங்கள் வேலையில் முனைப்பாக இருந்தனர். யாரும் மயூரியை தேடியதாக தெரியவில்லை.

துருவ் தன்னிடம் உள்ள சங்கிலி போன்றதை கைகளில் நிதானமாக மயூரி முன் ஆட்டினான். மெல்ல மெல்ல மயூரி கண்கள் வலையில் சிக்கிய மீனைப் போல சங்கிலியில் சிக்கியது. அவள் கவனம் சிதறாமல் கதவை தாழிட்டான்.

‘1 .. 2 ..3 .. 9 .. 10” என எண்ணி முடித்தான்.
கண்கள் மீளவில்லை. மீட்டவும் மனமில்லை. கண்திறந்து உறக்கத்தில் திளைத்தாள்.

“மயூரி நான் சொல்ல போறதை அப்படியே செய்யணும்.. செய்வ தானே?“ கட்டளையான குரலில் அவள் ஆழ்மனம் ஏற்றது.

“செய்வேன்” என்றாள்.

“இன்னிக்கு ராத்திரி தாத்தா குடிக்கிற தண்ணில உன் ரூம்ல வெச்சிருக்கிற மாத்திரையை கலக்கணும் .. யாரும் பார்க்காத சமயத்தில்”

“சரி”

“இந்த சத்தம் கேட்கும் போது மருந்தை கலக்கணும்” என தன் செல்போனில் அந்த வித்தியாசமான ஒலியை மீண்டும் அவள் கேட்கும் வண்ணம் காதருகில் வைத்தான். அந்த சத்தம் அவள் ஆழ்மனதில் மீண்டும் ஸ்திரமாகப் பதிந்தது.

“இந்த சத்தம் கேட்டதும் .. தாத்தாக்கு ராத்திரி சுடுதண்ணியை பிளாஸ்கல கொண்டு குடுப்ப .. அதுல மாத்திரையை கலக்கணும் .. தாத்தா தினமும் உறங்கும் முன் சூடா தண்ணீர் குடிப்பது வழக்கம் இல்லையா?”

“ஆமா .. ” எந்திரத்தைப் போலக் கட்டளையை ஏற்றாள்.

இந்த சத்தம் அவள் செயலுக்கான சாவி. சத்தம் கேட்டால் அவளின் ஆழ்மன நினைவுகள் விழித்துக் கொள்ளும்.

துருவ் மெல்ல அதே ஒலி மூலம் மயூரியை தன்னிலைக்குக் கொண்டு வந்தான். அவள் எதுவுமே நடக்காத்துப் போல அறையிலிருந்து நகர்ந்தாள்.

அன்று இரவு துருவ் மாடியில் உள்ள மயூரி அறை அருகே அந்த சத்தத்தை ஒலித்தான். அவன் சும்மா வராண்டாவில் உலா வந்தான். சித்துவுடன் பேசி சிரித்து வம்புக்கு இழுத்தான். ஆனால் மயூரியை கவனித்தபடி. அவள் நொடியில் அந்த ஒலியினால் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவள் போல விறைப்பாக நின்றாள். தன் அறையில் உள்ள மாத்திரையைச் சரியாக எடுத்தாள்.

அங்கு தொலைக்காட்சி செல்போன் என வெவ்வேறு ஒலிகள் கலந்திருந்தால் மற்றவருக்கு இந்த சத்தம் வினோதமாக கேட்கவில்லை. ஆனால் மயூரி அதன் பிடியில் இருந்தால் அவள் கட்டுண்டாள்.

அனைவரும் அவரவர் அறையில் முடங்கிக் கொண்டிருந்தனர். பார்த்திபன் மட்டும் தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார். மயூரி பிளாஸ்கில் சுடுதண்ணீரை நிரப்பி அதில் ஒரு மாத்திரையைக் கலந்தாள்.

பின்பு தாத்தா அறையில் வைத்தாள். “மயூரி பெட் பக்கத்து டேபிள்ல வைம்மா” எனத் தாத்தா குரல் கொடுக்க .. மயூரி எதையும் காதில் வாங்காது நடந்து சென்றாள்.

“மயூரி .. மயூரி” என மீண்டும் தாத்தா அழைக்க

துருவ் “மயூரிக்கு போன் வந்திருக்கு” என நிலைமையைச் சமாளித்தான். மீண்டும் அந்த ஒலியினால் மயூரி தன்னிலை அடைந்தாள்.

இரவு தாத்தா தண்ணீரைக் குடித்துவிட்டு உறங்கினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அழுகை சத்தம் கேட்கத் தாத்தா விழித்தார். அன்றைப் போலவே அழுகை சத்தம்.

தாத்தா அறையைவிட்டு வெளியே வர அன்று போலவே வரவேற்பறையில் தான் எப்போதும் அமரும் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார் வள்ளி.

கண்ணை இடுக்கி தாத்தா பார்க்கச் சட்டென அங்கு யாருமில்லை. “வள்ளி .. வள்ளி” என அழைத்தபடி நாலா பக்கமும் பார்த்தார்.

“என்னங்க .. ” எப்போதும் அழைக்கும் அதே கொஞ்சலான தோரணை

“வள்ளி .. வள்ளி வந்திட்டியா?” நெகிழ்ந்த குரலில் குழந்தையை போலத் தாத்தா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

சற்று தள்ளி வள்ளியின் உருவம் மசமசவெனத் தெரிந்தது. முகம் சரிவரத் தெரியவில்லை.

தாத்தா இரண்டடி முன்னே வைக்க “நில்லுங்க பக்கத்துல வராதீங்க .. நான் உங்க மேல கோபமா இருக்கேன்” என்ற வள்ளியின் குரலில் சீற்றம்.

பதறிப்போன தாத்தா “நான் என்ன தப்பு செய்தேன் வள்ளி?”

“ம்கூம் .. நான் போனதும் நீங்க ஓடிப்போன சிவா குடும்பத்தை சேர்த்துகிட்டிங்க அத்தோட சொத்தில் வேற பங்கு கொடுக்க போறீங்க .. நல்லவா இருக்கு? என் ஆன்மா சாந்தி அடையவே அடையாது” என விசும்பினார்.

“இல்ல கஷ்டபடற குடும்பம் அதான்” எனத் தாத்தா இழுக்க

“நாம அவனால் கஷ்டப்பட்டு அவமானப்படும் போது அவன் வந்து காப்பாத்தினானா? அவனுக்குக் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து வைத்திருந்தோம் ..ஆனா அவன் சுந்தரியோடு ஓடிப்போயிட்டான். நமக்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு” எனக் கேள்வி கேட்க

“இப்பவே சொல்லிட்டேன் நம்ம நிலம் எல்லாத்தையும் விக்ரமனுக்கு கொடுங்க .. நம்ம மத்த வீட்டை விஜயனுக்கு கொடுங்க .. பார்த்திபனுக்கு நகை. மயூரிக்கு மிச்சமிருக்கிறது. அவ எதையும் எதிர்பார்க்க மாட்டா”

“ஆனா வள்ளி சில பிரச்சனை இருக்கு .. அதுவுமில்லாம கணபதி” எனத் தாத்தா முடிக்கும் முன்

“நான் சொன்னதை செஞ்சா தான் என் ஆத்மா சாந்தியடையும்” எனச் சொன்ன அடுத்த நொடி வள்ளி காணாமல் போய்விட்டார்.

தாத்தா ஸ்தம்பித்து இரண்டு நொடி நின்றார் பின் தன் அறைக்கு மனச்சோர்வுடன் வந்து உறங்கிவிட்டார்.

அடுத்த இரண்டு நாட்கள் இதே போல வள்ளி தாத்தாவிற்குக் காட்சி அளித்தார். தாத்தா தன் வள்ளி வந்ததை எவரிடமும் சொல்லவில்லை. யாரும் நம்ப மாட்டார்கள் இல்லையேல் தன்னை பைத்தியம் என்பார்கள் அதனால் தன் மனதோடு புதைத்து விட்டார்.

துருவ் மற்றும் திலீப் பாட்டியின் விசும்பல் சத்தம் மற்றும் தாங்கள் பேசினால் அதைப் பாட்டியின் குரலில் பேசும் ஏப் மூலமாக தங்களுக்கு வேண்டியவற்றைப் பாட்டி கூறுவது போலத் தாத்தாவிடம் கூறிவிட்டனர்.

தாத்தாவும் உண்மையில் தன் மனைவிதான் வந்துக் கூறினார் என உறுதியாக நம்பினார். அதன் விளைவாக நிலங்களை விக்ரமனுக்கு வீடுகளை விஜயனுக்கு நகைகள் பார்த்திபனுக்கு என்று தர முடிவெடுத்தார்.

வள்ளிக்கு சிவநேசன் மேல் உள்ள கோபம் குறையவில்லை அதனால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க சொல்லவில்லை என எண்ணினார். இறந்தவரின் பிரிவின் தாக்கத்தினால் வள்ளியின் வார்த்தையை மீற அவருக்கு முடியவில்லை.



தொடரும் …












 
  • Like
  • Love
Reactions: Kameswari and ADC

ADC

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
8
8
3
Bangalore
Ada pavingala 😲😲 mayuri scapegoat aga use panamal irundhu irukalame...eppadi ellam orutharodu weekeness vachi play panuranga 😡😡 Interesting update ma'am 👏 👏 👏 👏 matravangalukku idhu theriyavara vaippu irukka?? Waiting for next update.
 
  • Love
Reactions: MK12

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
Eppadi ellam irukanga 😡 parunga
Ella kelvikum last episodeil vidai teriyavarum
Thank you so much sis ❤️ 🙏
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
டெக்னாலஜியை அவங்களோட கெட்ட எண்ணத்துக்கு பயன்படுத்தி இருக்காங்க 😠

இந்த மாதிரியான இவங்க எண்ணத்துக்கு சரியான தண்டனை கிடைக்கணும் 😬
 
  • Love
Reactions: MK12

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
டெக்னாலஜியை அவங்களோட கெட்ட எண்ணத்துக்கு பயன்படுத்தி இருக்காங்க 😠

இந்த மாதிரியான இவங்க எண்ணத்துக்கு சரியான தண்டனை கிடைக்கணும் 😬
Very much true
Thanks a lot sis