• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

22. காற்றோடு கலந்த விதையவள்

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
வாரம் ஒரு முறை வந்து வாசன் தேவியையும், சுதாகரனையும் பார்த்து செல்வது வழமையானது.
அன்றும் வாசன் வரவே,

"யாரிட்டயாவது கொஞ்ச கடன் மாறலாமா வாசன்? இங்கு அவ்வளவா பெரிய அளவில கடை இல்லை. கடை போட்டா நல்லா ஓடும்" என்றவும் தான்,

அந்த ஊரில் வசதியாய் இருக்கும் மூர்த்தியை அறிமுக படுத்தினான் வாசன்.


வட்டிக்கு அவனிடம் வாங்கிய வாசனின் கடை பெரிய அளவு ஓடவும், கூடிய விரைவில் அவன் கடனும் அடைந்தது.
அவன் உழைப்பையும், கெட்டித்தனத்தையும் பார்த்த மூர்த்தி , இதை விட பெரிய அளவில் வசதியாவர்களை கவரும் வகையில் கடை திறக்கலாம், இருவரும் அதில் பங்கு தாரராக தங்கள் நட்பையும், வளர்த்து கொள்ளலாம் என்றவும்,
அவனும் அதற்கு சம்மதித்தான்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகளிலேயே துஷா பிறந்தாள்.


அவள் பிறந்து அவனது நிறுவனங்கள் மூன்றாக மாறியது.
அனால் ஒரு நிறுவனம் மாத்திரமே மூர்த்தி பங்குதாரராக இருந்தான்.

என்னதான் குடும்பத்தை பிரிந்து வந்தாம், தேவியின் மனதில் வீட்டினரை மறக்க முடியவில்லை.
வாசன் வரும் போதெல்லாம் அவர்களைப் பற்றியே கேட்ப்பாள். எல்லோரும் உன்மேல் கோபமாக இருந்தாலும், இப்போதெல்லாம் உன் பேச்சை எடுப்பதில்லை.

சாதாரணமாக தான் இருக்கிறார்கள். ஆனால் முன்னாடி நீ இருக்கும் போதிருந்த சந்தோஷம் இப்போதில்லை என்பான்.
துஷா பிறந்திருந்த சமயம், குழந்தையுடன் அவர்களை போய் பார்ப்போம் என்று முடிவு செய்து, வாசனுக்காக காத்திருக்க, அழைத்து செல்ல வருகிறேன் என்ற தேதியிலிருந்து, இரண்டு நாட்க்கள் கழித்து வந்த வாசன், சொன்ன காரணத்தை கேட்டு அதிர்ந்தனர்.

அதாவது தேவி மீதிருந்த பாசத்தினால், அவனை நினைத்து நினைத்து ஏங்கியே உடல் நலம் பாதிக்கபட்டு, அன்னம்மா இறந்து ஒருவாரம் ஆகியிருந்தது.

வாசன் கூட அவளுக்கு தகவல் வழங்கவில்லை.
அவனும் பாவம் என்ன செய்வான்? அவள் குடும்பம் தான் இப்போது அன்னம்மா இறந்ததும், தேவி தான் காரணம் என்று அவள் மேல் இருந்த கோபம் இருமடங்கானதை எப்படி கூறுவான்.

இன்நிலையில், அவள் கணவனுடன் அங்கு வந்தால், இருக்கும் துக்கத்தில் இது வேறு பிரச்சினை ஆகி விடும் என்று வாசனும் மறைத்து விட்டார்.

இனி தன்மேல் இருக்கும் கோபம் தீராது என நினைத்த தேவி, அவர்களிடம் போய் நிற்பது சரி என்று படாததா,ல் இனி தனக்கு தன் கணவரும் பெற்ற மகளும் பெரிதாக பட, அவர்களுக்காகவே வாழ பழகிக் கொண்டாள்.

துஷா வளர வளர, பல தடவை கேட்டு விட்டாள்.
'என்ர ஃப்ரெண்டுகளுக்கு நிறைய சொந்தக்காரங்க இருக்கினம் எனக்கு மட்டும் ஏன் இல்லை" என்று
"எங்களுக்கு யாருமே இல்ல துஷா... உனக்குத்தான் நானும் அப்பாவும் இருக்கிறமே" என்று வருத்தமாக சொல்லுபவளிடம், மீண்டும் எப்படி கேட்பாள் அவள்.


படிப்பில் படு சுட்டி, எப்போதுமே முதல் மாணவியாகத்தான் வருவாள். உயர்தரத்தில் தேசிய ரீதியில் நான்காவது மாணவியாக வரவும்,
அவளை மருத்துவராக ஆக்கி பார்க்க வேண்டும் என்ற தந்தையின் ஆசைக்காக, கொழும்பு பல்கலை கழகத்தில் இடம் கிடைக்கவே. அதில் தனக்கு விருப்பம் இல்லை என்றாலும், தந்தையின் ஆசைக்காக படித்தாள்.





என்னதான் செல்வ செழிப்போடு சுதாகர் குடும்பம், வசதியாக வாழ்ந்தாலும், ஏதோ ஒன்று பெரும் குறையாகவே இருந்தது.

தங்கள் திருமணம் காதல் திருமணம் என்று கூறிய பெற்றோர், இது தான் தங்கள் கதை என்று இது வரை கூறாததும், பின் இறுதி நேரத்தில் அன்னை தன்னிடம் கூறிய தகவல்களையும், தோழிகளுக்கு கூறியவள்.

"இப்ப சொல்லு சைலு! அவயல் செய்த அதே பிழைய நானும் செய்யோணுமா?

என்னதான் அம்மா அப்பாவா இருந்தாலும், அவயல் செய்தது எவ்ளோ பெரிய துறோகம். அப்பா பக்கம் இருந்து பாத்தா... அவர் செய்தது சரியா தான் படுது.

ஆனால் அம்மா செய்தது...."?
தன்ர நிலமையில இருந்து மட்டும் தான் யோசிச்சிசாங்களே தவிர, கூட பிறந்தவையளயோ, நம்பினவையளயோ கொஞ்சம் கூட நினைக்கேல.


இனி எந்த நிலமையிலையும் யாரையும் அவயளால நம்ப ஏலாதே!.

அந்த வீட்டில் இனி இருக்கிற பெண் சந்ததியோட நிலம, ஜெயில் கைதிய விட மோசமா இருக்கும்.
தப்பு சைலு...! காதலிக்கிறது இல்ல... அது கிடைக்குற வரை, யாருக்கும் பாதிப்பில்லாம போராட தெரியோணும்..

எனக்கு போராட தெரியாது..... அவயல் செய்த பாவம் தான் நான் இந்த நிலமையில இருக்கிறன்.
வேண்டாமே... இன்னுமாரு அநாதை' என்று மேலே பேசமுடியாது கதறுபவளை தேற்றுவது அறியாமல், ஓடி வந்து அவளை அணைத்த சைலு,

" சாரிடி சாரி........ ஏதோ மனசில பட்டதை சொல்லிட்டன். உன்ர நிலமை எனக்கு விளங்குது.. எல்லாம் வேளைக்கு சரியாகு..
எல்லாருமே உன்னை எங்கட துஷா என்டு, தாங்குவினம் பாரு" என்றாள்..

கண்களில் கண்ணீரோடு, தோழியில் தோளில் இருந்து எழுந்தவள் உதடுகளோ விரத்தியாய் புன்னகைத்தது..

" எப்பிடிடி தங்குவினம்?
அவயல்ன்ர ஆசை தங்கை மகள் நான் தான் என்டு தெரிஞ்சாலே, என்ன எப்பிடி பாப்பினம் என்டு யோசிச்சுபாரு.....!
அசிங்கத்தை பாக்கிற போலத்தான் பாப்பாங்க சைலு. நான் என்ன நல்லது செய்தாலும், இவளும் கரிய பூசிட்டு தனே போக போறா என்டு நினைப்பினம்..
இல்லை சைலு! எனக்கு எல்லாற்ற அன்பும் வேணும். அம்மாவ எப்பிடி எல்லாரும் தாங்கினவயோ, அதே அன்பு எனக்கு வேணும். ஆனா அது எனக்கு தேவியோட மகளா போன, சுத்தமா கிடைக்காதுடி........
அங்கிள் என்னை மாமா வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கு முன்னம், நான் ஏதாவது யோசிக்கோணும்." என அவள் சொல்லிக் கொண்டிருந்தவள்,

தன்னையே கண் இமைக்காது பார்த்துக்கொண்டிருந்த தோழிகளை பார்த்து விட்டு, திடீர் என சிரித்தாள்.

சைலுவுக்கு எதுவும் புரியவில்லை.

நடந்து முடிந்த கதையினை சொல்லி அழுநவள், வயித்தை பிடித்துக் கொண்டு சிரிப்பதன் காரணம் புரியாமல்,

"என்னடி திடீர் என்டு சிரிக்கிற, எல்லாத்தையும் யோசிச்சு பைத்தியம் ஏதாவது புடிச்சிட்டுதா?" என்றாள் பயந்து போய்..

அவள் சிரிப்பு கூடியதே தவிர குறையவில்லை.
"எனக்கென்னமோ பயமா இருக்கு மைனா! வா இவளை கூட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு போவம்" என்று அவள் புறம் திரும்பியவளுக்குமே ஏனோ சிரிப்பினை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆம்... துஷாவின் சோக கதையை இருவரும் கேட்டார்கள் தான், ஆனால் சைலு வருத்தப்பட்டாளே தவிர, கலங்கவில்லை.
ஆனால் மைனாவோ மதியம் சாப்பாட்டிற்கு பின்னர், துஷா வாங்கிவந்த மரவள்ளி பொரியலை சிறிய கிண்ணதில் எடுத்து வந்து, கதையை கேட்டவாறு, கண்ணில் அருவியை திறந்து விட்டிருந்தவள், அந்த மரவள்ளி கிழங்கு பொரியலையும், உள்ளே தள்ளிக்காெண்டிருந்தாள்.

இருவரும் அவளை பார்த்து சிரிக்க. அவர்களின் அந்த சிரிப்பின் காரணம் புரியாதவளோ,

"ரெண்டு லூசுகளும் ஏன்டி சிரிக்கிறீங்கள்" என்க.

"மச்சி... இப்ப நீ என்ன செய்யிற?" என்றாள் சைலு.
"நீ என்ன செய்தியோ அதை தான் நானும் செய்தன்." கடுப்பாகவே வந்தது பதில்.


"எரும.... ஒன்டில் அவள்ர கதையை கேட்டு அழு..... இல்ல என்டா இதை...." என்று அவள் கையில் இருந்த கிண்ணத்தை காட்டியவள்,

"நல்லா மொக்கு..
ஒரேமிக்க ரெண்டையும் செய்யாத.... இப்பிடி பாக்க, பிச்சைக்காரி சாப்பாட்டை பாத்துட்டு ஆனந்தக்கண்ணீர் சிந்தினது போல இருக்கு." என்றாள் சிரித்தவாறு.

"ஓவரா பண்ணாத சரியா... அவள் அழுதோன்ன எனக்கும் கண்ணீர் வந்திடுது... அதுக்கு பெருசா பண்ற... உனக்கே சாப்பாடு போடுறது நாங்கள் தான்.... நினைவிருக்கட்டும்." என்றான் கெத்தாக.

"ம்ம்... நல்லா போடுறீங்க...... அத சாப்பிட்டு தான் நாக்க அடக்கம் பண்ணிடற நிலைக்கு போனன்.. இப்ப தான் அதுக்கும் ஏதோ நல்ல காலம் புறந்திருக்கு..." என்றாள் மைனா காலை வாரிவிடுவது போல.

"இருடி...! இவள் போனா, எங்களிட்ட தானே வரோணும்.. அப்ப கவனிக்கிறன்" என்றவள்.

துஷாவை இறுக கட்டி அணைத்து விலகியவள்,

இவ்ளோ பிரச்சினைய வைச்சுக்கொண்டு, எங்களுக்கு முன்ன சந்தோஷமா இருக்கிற போல நடிச்சிருக்கிற.." என்று ஆறுதல் கூறியவள்,

"அது ஓரமா இருக்கட்டும், இனி என்ன பிளான்" என்றாள் கதையை மாற்றுவது போல்.


"இனி என்ன? உன்னை இங்கயிருந்து துரத்துறது தான்" என்று இருவரும் சேர்ந்து கொள்ள,

"ஓகே....! உங்களுக்கு ஏன் சிரமம்...?
இந்த பொரியல் முடிய, நானே போயிடுவன்" என்றவள், அதை இரண்டு கைகளிலும் அள்ளிக்கொண்டே ஓடினாள்.

நாட்க்கள் அதன் பாட்டில் நகர்ந்தது. முடிந்த வரை ரதனிடம் இருந்து விலகியே இருந்தள். அவனாக இவளை சீண்டினாலும் இவள் அதை தன் மௌனத்தால் தட்டிக்களித்துக், கொண்டிருந்தாள்.

அவனும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவளாக உதாசினம் செய்தாலும், மனம் தளராத விக்கிரமாதித்தியன் போல தன் செயலிலே குறியாக இருப்பான்.

அன்று முக்கிய வேலையாக, வெளியூர் செல்லப்போவதாக கூறியவன்,

"நான் வர ரெண்டு நாளாகும், நீயும் வர்மனும் தான் எல்லாத்ததையும் பாெறுப்பா கவனிக்கோணும்." என்று சென்றுவிட்டான்.

என்ன தான், தன் உணர்வுகளை அவனிடமிருந்து மறைததாலும், அவன் சீண்டுகையிலும், அருகாமையிலும் தடுமாற்றம் உண்டாகத்தான் செய்தது.

அதை அவளால் கூட தடுக்க முடியவில்லை.
இவன் இங்கில்லாதது நல்லது தான். அதற்குள் அவன் மேல் உண்டான சலனமும் மறைந்து போகும் என்றே நினைத்தாள்.

முதல் நாள் சற்று கடினமாக இருந்தது உண்மை தான். ஆனால் பழகிக் கொண்டாகவேண்டுமே! நிமிடங்களை நாட்க்களாகவே தள்ளினாள்.

ரவியின் பயணத்தை குழப்புவது போல் வகையில் அவனது போனும் சிணுங்கியது.
எடுத்து நம்பரையும் பாராமல் காதில் வைத்தவன்,
எரிச்சலுடன் "ஹலோ.." என்றான்.

"என்னடா என்ன ? குரல் பலமாக இருக்கு" என்று வந்த பெண் குரலில் யார் என்று உணர்ந்தவன். நாக்கை கடித்துக்கொண்டு.

"சொல்லுங்கம்மா....." என்று பணிவாக கேட்டவன்,

"உங்களுக்கு மட்டும் எப்படித்தான் ரைவிங்க் பண்றது தெரியுதோ!
இப்ப உங்கட மகன்ர மெயின் ப்ராஞ்ச் தான் போறன். சொல்லுங்கோ என்ன விஷயம்" என்றான்.

"டேய் ...... உனக்கு என்னடா சொன்னன்.? என்ர மருமகளை காட்டு என்டு சொன்னன் தானே! அதை கினத்தில போட்ட கல்லாட்டம், இந்த காதால கேட்டு, அந்த காதால தள்ளிட்டியா என்ன?

உன்னையெல்லாம் நம்பி கேட்டன் பார்... கறட்டி ஓனான் போல தலையை மட்டும் ஆட்டத்தெரியுது.. அதை செய்யிறேல.." என்றார் மருமகளை காட்டாது ஏமாற்றியவனிடம் கோபமாக.

அவர் குரலில் தெரிந்த அனலே கூறியது, அவரின் கோபத்தை.

' ஐயோ... இதை எப்பிடி மறந்தன்...? இப்ப மறந்துட்டன் என்டா காது கிழிஞ்சிடுமே! சரி சமாளிப்பம்'

"இப்ப நான் அதை தான் நினைச்சன்.
கடைக்கு போட்டு, உங்கள போன் பண்ணி கூப்பிடுவம் என்டு,

ரதன் இப்ப ஊர்ல இல்லை... இதுதான் நல்ல சந்தர்ப்பம்... இப்பவோ வெளிக்கிட்டு வாங்கோம்மா......

மருமகளை பார்கிறது என்ன? மதிய சாப்பாட்டை அவளோட சேர்ந்தே சாப்பிடலாம்." என்றான்.

"உண்மையா தான் சொல்லுறியா?" என்றவர் குரலில் அத்தனை ஆனந்தம்.

"உண்மையா தான்ம்மா...." என்று கூறி முடிப்பதற்குள், மறு பக்கத்தில் இருந்து வந்த சத்தமே சொன்னது. போன் துண்டிக்கப்பட்டது என்று.


'இதுக்கு கேட்கமலே வைச்சிருக்கலாம்... ஆளாலுக்கு என்னை டைம் பாஸ்க்கு வைச்சிருக்குதுங்களோ! சரி எனக்கும் டூயட் பாட சந்தர்ப்பம் வராமலா போகும்...? அப்ப மொத்த பேரையும், நான் காமடியனாக்கிறன்' என்றவன் காரை கடையை நோக்கி செலுத்தினான்.

"எப்பிடிம்மா வேலை எல்லாம் போகுது. இதுக்குள்ளவே இருக்காம, வெளியேவும் வா! இதுக்குள்ள அப்பிடி என்ன பெரிய வேலை இருக்க போகுது?" என்று சத்தமாக சென்னவன்,

"உன்னை சைட் அடிக்க தானே இதுக்கயே கூட்டிவந்தான்" என்று அவளுக்கு கேட்க்காமல் முணுமுணுத்து,

"சரிமா.... நான் மற்ற பகுதிகய பாக்க போறன். இல்லாட்டி நூறு தடவை, போன் போட்டு, கடைக்கு போணியா? பாத்தியா? என்டு கொல்லுறான்.... இன்னு......... " சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவன் போன் ஒலித்தது.

"சொன்னன் பாத்தியா?" ரிசீவ்ட் பண்ணியவன்,

"சொல்லுடா... அங்க தான் நிக்கிறன்."

"......... .......... ....."

" நம்புடா...! அம்மா சத்தியமா கடையில தான்"

"........ ........."

"சரி நீ நம்பாட்டி, துஷா பக்கத்தில தான் நிக்கிறன். கதை.....!" என்று அவளிடம் கொடுக்க.

"என்னண்ணா....!" என்றான் அப்பாவியாய். இதை அவள் எதிர் பார்க்கவில்லை.

"நம்புறான் இல்லம்மா...... இங்க தான் நிக்கிறன் என்டு, ஒரு வார்தை சொல்லு..." மறுக்க மனம் வராமல் வாங்கியவள்.

"ஹலோ..." என்றாள்.

"துஷி....." பல வருடங்களாக அவளை காணாதவன் ஏக்கமாக அவன் குரலில்... அவளுமே அதை புரிந்து கொண்டாள். சற்று தடுமாறவும் செய்தாள்.
எதிரே நின்று தன்னையே பார்த்திருப்பவன் நினைவில் வர,

"அது... அண்ணா இங்க தான் இருக்கிறார்" என்று விட்டு அவனிடம் போனை நீட்ட... வாங்கியவன், ஓரமாக வந்து.

"சொல்லுடா மச்சான்! இப்ப சந்தோஷமா? ஏன் உனக்கு உன்ர ஆள்ர குரல் கேக்கோணும் என்டா, வேன் லைன்க்கு, கூப்பிடுறது தானே!

என்னை ஏன்டா வறுக்கிற?" என்றன் அப்பாவியாக.

"நான் அவளை பிரிஞ்சு ஏங்குற மாதிரி, அவள் என்னை பிரிஞ்சு ஏங்கிறாளோ என்டு தெரிய வேண்டாமா?

சொல்லு... என்ர குரை கேட்டதும் அவள்ர ரிஜாக்ஷன் எப்பிடி இருந்தது?"

"டேய் ..... டேய்.....! இது உனக்கே அடுக்குமாடா? ஏதே ஒரு நாள் பாக்காம இருந்திட்டு, பல வருஷம் பிரிஞ்சிருந்தவன் மாதிரி, அவ ரிஜாக்ஷன் எப்பிடி இருக்கு என்டு கேக்கிற."

"லவ்ல ஒரு மணித்தியாலம் என்டாலும் பல வருஷம் போல தான்டா! உனக்கு அதெல்லாம் விளங்காது.

நான் கேட்டதுக்கு பதிலை சொல்லு" என்றான்.

"நீ சொல்லுறதும் என்னமோ உண்மை தான். உன்ர குரலை கேட்டதும், கொஞ்சம் அவள்ர முகத்தில எது என்டே சொல்ல முடியாத ஒரு ரிஜாக்சன்.
ஆனா என்னை பாத்திட்டு, உடனமே மாத்திட்டா... உன் காட்டில செம்ம மழை தான்.... நீ கலக்கு மாப்பிள்ளை!} என்றவன்,

"வேறடா...." என்க.

"ஓகே மச்சான்! பிறகு கதைப்பம்" என்ற போனை துண்டித்தான்.

சிறிது நேரத்தில் வந்த வசந்தா, அங்கு ரவியை காணாது தேடியவர்,
போன் போட்டு,

"எங்கயடா இருக்க? என்னை வர சொல்லீட்டு, நீ போட்டியா?"

"மேலே தான் நிற்கிறன். வந்துடுறன்" என்றவன், போனை வைத்து இரண்டாவது நிமிஷத்தில் வசந்தா முன் நின்றான்.

"வாங்கோ... உங்கட மருமகளை காட்டுறன்" என்று அவன் அறை நோக்கி சென்றவனை தடுத்தவர்.

"அவளை பார்க்கத்தான் வந்தன்டா. எதுக்கு அவன்ர அறைக்கு கூட்டிக்கொண்டு போற?" என்றார் கோபமாக.

"இங்க தான் உங்கட மகன், அவளுக்கு வேலை போட்டு தந்திருக்கிறான்" என்றதும்,

"இதுக்குள்ளவா? இதுக்க என்னடா வேலை இருக்க போகுது?"

"என்னை கேட்டா.... பச்சமண் எனக்கென்னம்மா தெரியும்?" என்றான் உதட்டை பிதுக்கி பாவமாக.

"ஓவரா நடிக்காத... உனக்கு தெரியாம அந்த திருடன் எதுவும் செய்ய மாட்டான்... முதல்ல மருமகளை பாத்திட்டு வந்து உன்னை கவனிக்கிறன்" என்று அவனை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தவர், துஷாவை கண்டதும்

"இவள் எங்க இங்க?" சத்தமாகவே அதிர்ந்தார்.
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
என்ன ஆச்சு துக்ஷாவை வசந்தாவுக்கு முன்னமே தெரியுமா 😲😲😲😲😲😲😲என்ன வில்லங்கம் இருக்கோ 🙄🙄🙄🙄🙄🙄