• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

23. அபிதா - உயிரும் உனதே

Abitha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
13
11
3
Sankarapuram
உயிரும் உனதே

‘டிசம்பர் 25, 2004

"பிரஜின்… நாளைக்கு நான் உன்னை பார்க்க மெரினா பீச்சுக்கு வரேன். ஜாகிங் முடிச்சிட்டு எனக்காக வெய்ட் பண்ணுங்க."

"எதுவும் பிரச்சனையா நிலா?"

"நான் கடையிலிருக்கிற காயின் ஃபோனிலிருந்து பேசிட்டிருக்கேன். நாளைக்குப் பார்க்கலாம்."

"சரி‌… நாளைக்கே பேசிக்கலாம்‌, நான் இருக்கேன். நீ எதுக்கும் கவலை பட வேண்டாம்." என்றான்.

கண்ணீரை கடைக்காரருக்கு தெரியாமல் துடைத்தவள், வீட்டிற்கு செல்ல. அவளை ஒருவர் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தது அவளுக்கு தெரியாமல் போனது.

மறுநாள் காலை, "அம்மா… என்னால் எதையும் மறக்க முடியலை. கொஞ்சம் என்னை அமைதிப்படுத்திக்க கடற்கரை வரை போயிட்டு வரவா?" என்றாள் பிறைநிலா.

"சரி போயிட்டு வா" என்றார் அவளின் அம்மா கலை.

*****
அவளே ஆரம்பிக்கட்டும் என்று அமைதியாக இருந்தான் பிரஜின்.

"என்னை மறந்திடுங்க பிரஜின். உங்களுக்கு என்னை விட நல்ல பொண்ணு கிடைப்பா." என்றாள் பிறை நிலா.
கடலின் மீதே பார்வை வைத்திருந்தவன் , அவளின் சொற்களால் அவளின் பக்கம் திரும்ப, அவனின் விழி நீர் அவளை மங்கலாக்கியது.

"உனக்கு ஏதோ பிரச்சினைனு தெரியும். எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம்னு இருந்தேன். இன்னைக்கே நம்ம கல்யாணம் செய்யக்கூட நான் ஏற்பாடு செய்துட்டேன். ஆனால், நீ என்னையே பிரச்சினைனு சொல்லுவேன்னு நினைக்கலை."

"பிரஜின்…"

"நீ எதுவும் சொல்ல வேண்டாம். நீ என்னை நம்பலை. நம்பிக்கை இல்லாத உறவுக்கு அர்த்தம் இல்லை. இவ்வளவு நாட்களாக நம்ம காதலிச்சதுக்கு சாரி. சாரி அதுக்கு என்ன பேருனு தெரியலை‌. நான் வரேன்." என்றவன் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றான்.

"பிரஜின்… நான் சொல்லறதை கேட்டுட்டு போங்க" என்று பிறை நிலா சத்தமாக சொல்ல.

அவன் காதில் விழுந்தாலும் திரும்பாமல் சென்றான். வண்டியில் ஏறியவன் வாட்சை பார்த்தான், அதுவோ நேரம் காலை ஏழு என்று மட்டும் சொல்லாமல் நிலாவை நினைவுப்படுத்தியது. அது அவள் வாங்கித் தந்தது.

அதை வேகமாக கழட்டியவனின் கை தூக்கி போட உயர பின் என்ன நினைத்தானோ அதை சட்டை பாக்கெட்டில் வைத்தவன். கோபத்தை எல்லாம் வண்டியின் மேல் காண்பித்தவன் இலக்கு இல்லாமல் பாதை சென்ற வழியில் சென்றுக் கொண்டிருந்தான்.

அவளை விட்டு பல கிலோமீட்டர் தூரம் வந்தாலும் மனசு அவளை விட்டு வரமறுத்தது. டீ கடையில் வண்டியை நிறுத்தி, டீ ஒன்றை வாங்கி குடித்தான்.

மணி 8,

இதற்கு முன் ஒருமுறை நிலாவோடு சண்டை போட்ட போது பிரஜின் கோபத்தில் அவளை அங்கே விட்டுட்டு வந்ததும். அவள் அவன் வரும்வரை அதே இடத்தில் இருந்ததும் நினைவுக்கு வந்தது.

"ஷிட்" என்ற பிரஜின் வண்டியை எடுக்க போக, அப்போது அந்த டீ கடையில் ஓடிக்கொண்டிருந்த ரேடியோ சத்தம் இவன் கவனத்தில் வந்தது.

"சுனாமி எச்சரிக்கை. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள். கடற்கரைக்கு செல்ல வேண்டாம். கடற்கரை அருகில் உள்ள மக்கள் அனைவரும் உயரமான இடத்திற்கோ அல்லது பாதுகாப்பான இடத்திற்கோ செல்லுங்கள்." என்று அறிவிப்பு வந்துக் கொண்டிருந்தது.

"அச்சோ!" என்றவன் பதட்டமாக
மெரீனா பீச்சை நோக்கி சென்றவனின் மனதோ நிலா அப்பொழுதே பீச்சிலிருந்து சென்றிருக்க வேண்டும் என்று வேண்டியது.

மெரீனா செல்லும் வழியில் பேரி கார்டு வைத்து போலீஸ் அதிகாரிகள் பொதுமக்கள் ஆபத்தான இடத்திற்கு செல்லாமல் தடுத்துக் கொண்டிருந்தனர்.

பலரின் கதறல் குரல் பிரஜினின் பதட்டத்தை அதிகமாக்கியது.

"நீங்க பதட்டமா உங்க உறவை காப்பாற்ற நினைக்கிறீங்கனு புரியுது. ஆனால், நீங்க இப்போ அங்கு போவது ஆபத்து‌. மீட்பு பணியாளர்கள் அனைவரையும் காப்பாற்றிட்டு தான் இருக்காங்க. ப்ளீஸ் எங்களை வேலை செய்ய விடுங்க." என்று அதிகாரி ஒருவர் மக்களிடம் சூழ்நிலையை புரிய வைக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தார்.

வண்டியை வேறு வழியில் செலுத்தினான் பிரஜின்‌. எந்த வழியிலும் மெரினா கடற்கரைக்கு செல்ல முடியாத படி வழி அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது.

வீட்டிற்கு சென்றான் பிரஜின்.

"டேய் கண்ணா வந்துட்டியாடா. உனக்கு என்ன ஆனதோனு பயத்தில் நான் செத்துட்டேன்." என்றார் பிரஜினின் அம்மா லலிதா.

அவர் கண்ணிலிருந்த நீரை தாண்டி தன்னை பார்த்த சந்தோஷமும், நிம்மதியும் தெரிந்தது. தனக்கும் இந்த நிம்மதி வேண்டும் என்று நினைத்தவன், " அம்மா… எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் ஏழு மணிக்கே கடற்கரையிலிருந்து வந்துட்டேன். நான் தூங்கணும் என்னை தொந்தரவு செய்யாதீங்க." என்றவன் தன் அறைக்குள் சென்றான்.

அவன் மனது,'நிலா… நிலா… அவளுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது. நான் ஏன் இவ்வளவு கோபப்படுகிறேன். என்கிட்ட ஏதோ சொல்ல நினைத்தாளே. நான் முழுதாக கேட்காமல் வந்தேனே.' என்றவனது கண்கள் கலங்கியது.’

"நிலா… நிலா…" என்று பிரஜின் கத்த.

"டேய் மச்சான்… என்ன டா?" வசந்த்.

"ஒன்னுமில்லை டா…"

"என்ன ஒன்னுமில்லை? நிலா சுனாமியில் இறந்துட்டா. மூன்று வருஷமாகுது, இன்னும் மறக்காமல் அதையே நினைச்சிட்டு இருந்தால் என்ன அர்த்தம்."

"கனவு தான் டா." பிரஜின்.

"சரி போய் ரெடியாகிட்டு வா. ரவி கல்யாணத்துக்கு போகணும்‌."

"நான் வரலை, நீ போ டா."

"இன்னைக்கு ஆஃபீஸ் லீவு, நாள் முழுக்க இந்த ரூமிலே உட்கார்ந்து நிலாவை பற்றியே யோசிச்சிட்டு இருப்ப. நீ கண்டிப்பா வந்து தான் ஆகணும்‌."

"சரி டா வரேன்."

"அம்மா… ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு போயிட்டு வரேன்." என்ற பிரஜின் முன்னே செல்ல அவனை வருத்தமாக பார்த்துக் கொண்டிருந்த லலிதாவிடம் வசந்த்,

"எல்லாம் சரியாகிடும் மா. நீங்க வருத்தப்படாதீங்க."

"சுனாமியிலிருந்து தப்பிச்சி வந்தானு சந்தோஷமா இருந்தது‌. ஆனா, அன்னையிலிருந்து அவன் முகத்தில் சிரிப்பு தொலைந்து போயிடுச்சு. இவனை இப்படி பார்க்கும் போது கஷ்டமா இருக்கு. கலகலப்பா இருந்தவன் ஏன் இப்படி ஆனானு புரியலை. சரி, நீ போ பா" லலிதா.

"மச்சான்… இவனை ஏன் டா கூப்பிட்டு வந்த? பங்க்ஷன் மூடையே கெடுத்துடுவான்." மாயா.

"மாயா… நானே அவனை கஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்திருக்கேன். நீ கெடுத்துடாத." வசந்த்.

"நிலா நிலா ஓடி வானு பாடிட்டிருந்திருப்பான். அவனை ஏன் டா இங்க கூட்டிட்டு வந்த?" மாயா.

"இதுக்கு தான் டா, நான் வரலைனு சொன்னேன்." பிரஜின்.

"பின்ன என்ன டா வசந்த் நான் எவ்வளவு அழகா இருக்கேன்‌. நான் லவ் ப்ரொபோஸ் செய்தும். சார் நோ சொன்னா, நான் சும்மா இருப்பேனா? அதுவும் இறந்த பெண்ணை நினைச்சிட்டு."

"என்னால நிலாவை மறக்க முடியலை. எங்க காதல் அப்படிபட்டது. நான் அவளை மறந்தா தான் வேற யாரை பற்றியும் என்னால் யோசிக்க முடியும். அது இந்த ஜென்மத்தில் நடக்காது."

"ஆமா… இவனை வேண்டாம்னு சொன்ன பொண்ணை இவரால் மறக்க முடியலையாம். இது எப்படி பட்ட காதலோ?" மாயா.

"ஹே மைண்ட் யுவர் டங். நான் ஒரு நாள் நடந்ததை தான் உன்கிட்ட சொன்னேன். எங்க காதலை பற்றி உனக்கு என்ன தெரியும். அவ உன்ன மாதிரி கிடையாது, அமைதியான பொண்ணு. அவ என் மேல் கொண்ட காதலை உன்னால் அளக்க முடியாது. அவ எங்க காதலை புதைக்க சொல்ல தான் அன்னைக்கு வர சொன்னா. ஆனா, கண்டிப்பா அதுக்கு ஒரு காரணம் இருக்கும். எங்க காதல் என்னோட பொக்கிஷம், அதை உன் கிட்ட சொல்லி தான் எங்க காதல் உயர்ந்ததுனு நிரூபிக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை." என்ற பிரஜின் பால்கனி போல் இருந்த இடத்திற்கு சென்றுவிட்டான்.

பிரஜின் கோபத்தை கண்டு பிரம்மை பிடித்தது போல் உட்கார்ந்திருந்தாள் மாயா.

"சரி விடு மாயா. அவன் கோபக்காரன், இனி அவன் கிட்ட கவனமா பேசு."

"நான் அவரை நிலா நினைவில் இருந்து வெளி கொண்டுவர தான் அப்படி பேசினேன். இப்படியே எவ்வளவு நாள் இருப்பார்? என்னை கல்யாணம் பண்ணிக்கலைனாலும் வேறு பெண்ணை செய்துக்கணுமே அதுக்காக தான் நான் இப்படி பேசினேன்." மாயா.

"சரி விடு மா." வசந்த்‌.

பார்வை தொலைவிலிருந்தாலும் பிரஜினின் கவனம் நிலாவை முதல்முறை சந்தித்த நாளிற்கு சென்றது.

'இவன் கல்லூரி மூன்றாம் ஆண்டு அடிவைத்த போது ஃபிரஷராக வந்தாள் நிலா.

பிரஜினின் நண்பர்கள் வரும் புது மாணவர்களை கலாய்த்து ராகிங் செய்துக் கொண்டிருந்தனர்.

நிலாவை நிறுத்தியவன் அவளிடம்," உன் பேர் என்ன?"

"பிறைநிலா"

"ஓ… நிலா நிலா ஓடி வா பாடிட்டு போ" என்றான் வசந்த்.

"டேய் பார்க்க பாப்பா மாதிரி இருக்கா. அழுதுடப் போறா, விடுடா" பிரஜின்.

"பாப்பா மாதிரி இருக்க போய் தான் டா இந்த பாட்டு பாட சொன்னேன்."

நிலாவோ அவளுக்கு தெரிந்த நான்கு வரியை பாடினாள்.

"அப்புறம்."

"அண்ணா… எனக்கு அவ்வளவு தான் தெரியும்."

"சரி… நாளைக்கு வரப்ப முழு பாட்டையும் படிச்சிட்டு வரனும்." வசந்த்.

"சரிங்க அண்ணா."

"சரி போ"

பிரஜின் அவள் அழவில்லை என்பதை மட்டும் கவனத்தில் கொண்டான்.

மறுநாள் பிரஜினின் நண்பர்கள் கூப்பிடாமலே அவர்கள் அருகில் வந்தாள் நிலா.

நேற்றே தலைமை ஆசிரியரிடம் வாங்கிய திட்டில் இன்று அமைதியாக இருக்க. இவள் ஏன் வருகிறாள் என்பது போல் அனைவரும் பார்க்க நிலாவோ,

"அண்ணா… நான் நல்லா படிச்சிட்டு வந்திருக்கேன். நான் பாடட்டா?"

"அம்மா… தாயே… அதெல்லாம் வேண்டாம் நீ போமா"

"முடியாது நான் இன்னைக்கு பாடுறேனு சொன்னேன்ல பாடிட்டு தான் போவேன்." என்றவள் முழு பாட்டையும் பாடினாள்‌.

"சரி அண்ணா… நான் வரேன்."

"இனி வந்துடாத, இல்லைனா எனக்கு டீசி தான்." வசந்த்.

ஏனோ இன்று தனி ஆளாக நிலா அவர்களை கலாய்த்துவிட்டு சென்றது போல் இருந்தது.

'பார்க்க அப்பாவி போல் இருக்கா ஆனா, தைரியம் தான். நைஸ்.'

நாட்கள் வேகமாக ஓடியது. பிரஜினின் பார்வையில் எல்லா விதத்திலும் தனியாக தெரிய ஆரம்பித்தாள் நிலா. அவளை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அது காதலாக அவனுள் மலர ஆரம்பித்தது.

டிபார்ட்மென்ட் பங்க்ஷன் நடந்த போது பிரஜின், "வெண்ணிலவே வெண்ணிலவே... விண்ணை தாண்டி வருவாயா?.. விளையாட.. ஜோடி தேவை…" என்று அவளை பார்த்துக் கொண்டே பாடினான்.

'இனி தன் பக்கம் கூட வரமாட்டாள்' என்று பிரஜின் நினைத்திருக்க மறுநாளே அவனை பார்க்க வந்தாள் நிலா.

"என்ன பாட்டு எல்லாம் பலமா இருக்கு?"

"எஸ்."

"ஏன் என்ன பார்த்து பாடுனிங்க?"

"ஆமா, உன்னை லவ் பண்ணா உன்னை நினைத்து, உன்னை பார்த்து தான பாட முடியும்."

‘உன் பேர் மட்டும் தான் நிலாவா? நான் பொதுவா பார்த்தேன் நீ அங்க தான் இருந்தீயா? இப்படி தான் ஏதாவது சொல்லுவான்’ என்று நிலா நினைத்திருக்க அவனோ,

"ஐ லவ் யூ நிலா. நான் நல்லா படிக்கிறேன்‌, கண்டிப்பா கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சிடும், உன்னை நல்லா பார்த்துப்பேன். எனக்கு கோபம் அதிகமா வரும்
மற்றப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்லை. உன்னோட பதிலை நல்லா யோசிச்சு சொல்லு. நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். உனக்கு பிடிக்கலைனா நான் ஒதுங்கிடுவேன்." என்றவன் சென்றுவிட்டான்.

ஒரு வாரம் கண்ணில் சிக்காமல் ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த பிரஜினை பார்த்த நிலா," நான் ரொம்ப அழுத்தமான பொண்ணு, பிடிவாதம் அதிகம்."

"தெரியும். அதுக்கு என்ன இப்போ?"

"அம்மா… ரொம்ப ஸ்ட்ரிக்ட், கண்டிப்பா லவ் மேரேஜ்க்கு ஒத்துக்க மாட்டாங்க‌. ஆனா, அப்பா பிராட் மைண்ட், கண்டிப்பா காதலுக்கு சம்மதிப்பார். சோ…"

"சோ???"

"ஐ லவ் யூ" என்றாள் அவனின் கண்களை பார்த்து.'

இன்னும் அவளின் அந்த பார்வையை அவனால் மறக்க முடியவில்லை. அந்த பார்வையில் தான் எத்தனை உறுதியான ஆழமான காதல் நம்பிக்கை இருந்தது.

"நிலா… அன்னைக்கு உன்னோட பிடிவாதத்தை விட்டு, நான் போனதும், நீயும் போயிருக்கணும். ஏன் போகம இருந்த? இந்த பிரஜின் வருவானு காத்திருந்தியா? உன் நம்பிக்கையை உடைச்சிட்டேன். நான் துரோகி. ஆனா, அன்னைக்கு நீ பீச்சில் இருந்து போயிருக்கணும்னு எவ்வளவு வேண்டினேன்."

'டிசம்பர் 28 2004,

நிலா வீட்டிற்கு அருகிலிருந்த டீ கடைக்கு வந்திருந்தான் பிரஜின்‌.

டீ கடைக்காரரிடம் சும்மா பேச்சை ஆரம்பிக்க பிரஜின், "அண்ணா… இங்க வீடு எதுவும் காலியா இருக்கா?"

"இரண்டு மூன்னு நாள்ல அந்த வீடு காலி பண்ணிடுவாங்க."

"அந்த வீட்டில் என்னோட காலேஜ் பொண்ணு தான் இருக்காங்க."

"ஆமா பா. நிலாவை தான சொல்லுறீங்க?"

"ஆமா அண்ணா"

"உங்களுக்கு விஷயமே தெரியாதா? சுனாமில அநியாயமா அந்த பொண்ணும் அவங்க அம்மாவும் இறந்துட்டாங்க. அதான் வீட்டை காலி பண்ணிட்டிருக்காங்க."

"சரிங்கண்ணா" என்றவன் வேகமாக அந்த இடத்திலிருந்து வண்டியை எடுத்தான்.

கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் வண்டியை ஒரமாக நிறுத்தியவன், ரோட்டில் உட்கார்ந்து அழ. அவனை கடந்தவர்கள் அவனை பார்த்துக் கொண்டே சென்றனர்.'

"பிரஜின்…" வசந்த்.

கண்ணை துடைத்துக் கொண்டே திரும்பி வசந்தை கேள்வியாக பார்க்க.

"வா டா… போய் கிப்ட் கொடுத்துட்டு வரலாம்."

மேடையை நோக்கி செல்லும் போது ஏதோ தோன்ற திரும்பி பார்த்தவன் அப்படியே நின்றுவிட்டான்.

"டேய் பிரஜின்… ஏன் டா அப்படியே நிக்குற?" வசந்த்‌.

"டேய்… அந்த பொண்ணை பார்த்தா நிலா மாதிரி இருக்கு?"

"உன்னை டைவர்ட் பண்ண தான் இங்க கூட்டிட்டு வந்தேன். மாயாவால் திரும்பவும் நிலாவை பற்றியே யோசிச்சிட்டு இருக்க. மேடைக்கு வா டா."

திரும்பியவன் மேடை ஏறினான். வசந்தின் பட்டன் ஃபோன் அழைக்க, "மச்சான்… முக்கியமான ஃபோன் டா. பேசிட்டு வரேன்."

"சரி டா… " என்ற பிரஜின் ஓரமாக நின்றான்.

வெளியே சென்ற வசந்த் பேசிக் கொண்டே பார்க்க, அங்கு நிலா நின்றுக் கொண்டிருந்தாள்.

அவள் அருகே சென்ற வசந்த்,"நிலா…"

"அண்ணா…"

பேசவே வார்த்தைகளை தேடியவன்," நிலா… நீ உயிரோட தான் இருக்கீயா? உன்கிட்ட பேசணும். கொஞ்சம் அந்த காஃபி ஷாப்ல வெய்ட் பண்றீயா ப்ளீஸ். நான் மேடையில் கிப்ட் கொடுத்துட்டு உடனே வரேன்."

"அண்ணா… டைம் இல்லை…" நிலா.

"ப்ளீஸ் நிலா… அஞ்சு நிமிஷத்தில் வந்துடுவேன். எனக்காக ப்ளீஸ் வெய்ட் பண்ணு."

"சரிங்கணா…"

உள்ளே சென்றவன் உடனே வேலையை முடித்து பிரஜின் மற்றும் மாயாவோடு வெளியே வந்தான்.

"வா டா… அங்க காஃபி ஷாப்ல காஃபி குடிச்சிட்டு போகலாம்." வசந்த்.

"வேண்டாம்டா, வீட்டுக்கு போகலாம்."

"சும்மா வா டா. எல்லாத்துக்கும் உன்னோடு போராட முடியாது. மாயா நீயும் வா"

காஃபி ஷாப்பில் நிலா உட்கார்ந்திருந்த டேபிளில் போய் உட்கார்ந்தான் வசந்த், அவனை குழப்பமாக பார்த்துக் கொண்டே மாயாவும், பிரஜினும் அந்த டேபிள் அருகே வந்தனர்.

பிரஜின் எதையும் கவனிக்காமல் வசந்த் அருகில் உட்கார்ந்துக் கொண்டான். ஆனால், நிலா அவனை தான் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அப்புறம், நிலா… எப்படி இருக்க?" என்றான் வசந்த்.

பிரஜின் அதிர்ச்சியாக நிலாவை பார்க்க. அவளோ இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். மாயாவிற்கும் எல்லாம் புரிந்து போனது. வசந்த் தன்னை என்றும் இல்லாமல் இன்று காஃபி ஷாப் அழைத்ததற்கான காரணமும் தெரிந்தது.

"நிலா… எப்படி இருக்கனு கேட்டேன்?" வசந்த்.

"ஹான்…" என்றவளின் கவனம் வசந்த் பக்கம் திரும்ப," நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?" நிலா.

"நான் நல்லா தான் இருக்கேன். நீ சுனாமில இறந்துட்டதா சொன்னாங்க" வசந்த்.

"ஆமா அண்ணா. அப்படி தான் எல்லாரும் சொன்னாங்க. என்னோட போதாத காலம் நான் கடற்கரையிலிருந்து பத்து நிமிஷம் முன்னாடி கிளம்பினேன். அதான் என்னை ஈஸியா காப்பாத்திட்டாங்க. ஒரு வாரம் முகாம்ல இருந்துட்டு தான் வந்தேன். அதுக்குள்ள எங்க வீட்டையே காலி பண்ணிட்டாங்க."

பிரஜினுக்கு புரிந்தது, இப்போது அவனின் பார்வை மாறியது.

"உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?" மாயா.

நிலா அவளை கேள்வியாக பார்க்க.

"ஐ எம் சாரி. நான் மாயா இவங்க ஆபீஸ் கொல்லீக்."

"ஹாய். நான் நிலா இவங்க என்னோட காலேஜ் சீனியர். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. உங்களுக்கு?"

"இல்லை. யாரையாவது லவ் பண்றீங்களா?" மாயா‌.

"எஸ்" என்றவளின் பார்வை பிரஜின் மீது இருந்தது.

"ஓ! அப்படியா… அதான் அன்னைக்கு பிரஜின் கிட்ட உங்களை மறந்துட சொல்ல காரணமா?"

நிலாவின் பார்வையில் மாற்றம்.

"நீ யார் கிட்டையும், எதுக்கும் காரணம் சொல்ல தேவை இல்லை." என்றான் பிரஜின் அழுத்தமாக.

"அதான் இவ்வளவு தெரிஞ்சிருக்கே நான் ஏன் அப்படி சொன்னேனு தெரிஞ்சுக்கட்டுமே." நிலா.

"மாயா என்னை காதலிப்பதாக தொல்லை செய்துட்டே இருந்தாங்க. உங்க காதலி இறந்துட்டா அவளையே நினைச்சுட்டே இருக்கணுமானு கேட்டாங்க. அப்போ தான் நான் சொன்னேன், என் நிலாவே சாகுறதுக்கு முன்னாடி என்னை மறந்துடுங்கன்னு சொல்லிட்டு போறதுக்கு தான் வந்தா. ஆனால் என்னால அவளை இந்த ஜென்மத்தில் மறக்க முடியாதுனு சொன்னேன். நான் உன் மேல வச்ச காதல்ல கொஞ்சம் கூட உனக்கு என் மேல இல்லை. இல்லைன்னா என்னைத் தேடி இந்த மூன்று வருஷத்துல என்னைக்காவது வந்திருக்க மாட்டியா? நீ இல்லாத உலகத்தில் நடைபிணமா நான் வாழ்ந்தது உனக்கு எங்க தெரியப்போகுது?" பிரஜின்.

நிலா டேபிளில் சாய்ந்து அழ. அவள் அருகே வந்த பிரஜின், அவளின் முகத்தை அழுத்தமாக பிடித்து தன்னை பார்க்க செய்தவன்,"ஏன் டி என்னை தேடி வரலை? "

"உன்னோட காதல் ஒன்னும் விலைமதிப்பில்லாத பொருள் இல்லையே. என்னோட சூழ்நிலைக்கு ஏற்ப உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு உடனே நீ வேணும்னு வந்து நிற்க‌. நீ என்னை மறக்க முயற்சி செய்துட்டு இருப்ப மறுபடியும் உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான். நான் உன்னை தேடி வராததற்கு காரணம். காலம் முழுக்க உன்னை நினைத்துக் கொண்டே வாழ்ந்திடலாம்னு நினைத்தேன்." நிலா.

அவளின் கண்களை துடைத்தான் பிரஜின்.

"இன்னும் என்னோட கேள்விக்கு பதில் வரலை" மாயா.

"அது உனக்கு தேவை இல்லாதது." பிரஜின்.

"நீங்க உட்காருங்க. எல்லாரும் தெரிஞ்சிக்கட்டும்‌." நிலா.

"எங்க அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அவர் இருந்த தைரியத்தில் தான் நான் லவ் பண்ணேன். அவர் இறந்த கையோட எங்க அம்மா என்கிட்ட அவங்க அண்ணன் பையனை கல்யாணம் செய்துக்க கேட்டாங்க.

எங்க அம்மா என்னை கட்டாயப்படுத்தினாலோ இல்லை மிரட்டி இருந்தால்கூட, நான் என் காதலுக்காக அவங்க கூட போராடியிருப்பேன். ஆனா, அவங்க என்கிட்ட பிச்சையா கேட்டாங்க. அதான் என் காதலை மண்ணில் புதைக்க நான் முடிவெடுக்க காரணம்."

அங்கு அமைதி நிலவியது. 'இதை சொல்ல தான் அன்று நிலா தன்னை கூப்பிட்ட காரணமா. நானும் கோபத்தில் கேட்காமல் வந்தேனே.' பிரஜினின் மனம் வருந்தியது.

"உங்க அம்மாவுக்கு என்ன ஆனது? நீ இப்போ எங்க இருக்க?" வசந்த்.

"நான் பிரஜின் கிட்ட ஃபோன் பேசினதை எங்க அம்மா தூரத்திலிருந்து பார்த்துட்டாங்க. நான் வீட்டுக்கு வந்ததும், அவங்க அந்த கடைக்கு போய், நான் என்ன பேசினேனு கேட்டாங்க. அவரும் எங்க அம்மாவோட நிலையை நினைத்து நான் பேசுனதை அப்படியே சொல்லிட்டார்.

டிசம்பர் 26 என்னோடு எனக்கே தெரியாம எங்க அம்மா வந்திருந்தாங்க. சுனாமியில் எங்க அம்மா உயிர் பிரிந்தது. எங்க அம்மா இறந்தது கூட எனக்கு தெரியாது. சின்னதா அடிப்பட்டதுக்கு எனக்கு முகாம்ல ஒரு வாரம் ட்ரீட்மென்ட் பாத்தாங்க.

ஒரு வாரம் கழிச்சி வீட்டுக்கு போனா, வீட்டையே மாமா காலி செய்துட்டு போனதா சொன்னாங்க. அப்போ தான் அந்த கடைக்காரர், நீங்க ஃபோன் பேசினதை பற்றி அம்மா கேட்டாங்க. நான் சொல்லிட்டேனு சொன்னார்.

சரி எதுவா இருந்தாலும் அம்மா கிட்ட பேசிக்கலாம்னு ஊருக்கு போனேன். அங்கு தான் அம்மா பீச்சுக்கு வந்ததே எனக்கு தெரிந்தது. அம்மா இறந்துட்டதா சொன்னாங்க.

இல்லை, அம்மா என்னை மாதிரி முகாம்ல எங்காவது உயிரோட இருப்பாங்கனு சொல்லி நான் அழுதேன்.

உங்க அம்மா உடலை பார்த்தோம். அதுக்கு அப்புறம் உன்னையும் தேடினோம். நீ கிடைக்கலை. உன்கிட்ட இருந்தும் எந்த தகவலும் வராததால் நீயும் இறந்துட்டனு நினைத்தோம்னு சொன்னாங்க.

ஒரு வாரம் அங்கிருந்தேன், மாமா அவங்க பையனை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டாங்க. எனக்கு விருப்பம் இல்லைனு சொன்னேன். சரி கல்யாணம் பண்ணிக்கலைனாலும் இங்கே எங்க பாதுகாப்பில் இருன்னு சொன்னார் மாமா.

நான் தான் பிடிவாதமா அப்பா சேமித்த பணத்தோடு சென்னை வந்தேன். லேடிஸ் ஹாஸ்டல்ல தங்கிட்டே வேலை தேடினேன், வேலையும் கிடைச்சது அதை செய்துட்டு இருக்கேன்."

மூவரின் கண்களும் கலங்கி இருந்தது.

"இவ்வளவு கஷ்டத்தையும் தாண்டி, வலியிலும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து, மாறாத காதலோடு காத்துட்டிருக்கீங்க. உங்க காதல் உண்மையானது. யூ வார் மேட் ஃபார் இச் அதெர்." மாயா.

"சரி… நாங்க கிளம்புறோம். நீ பார்த்துக்கோ டா." என்ற வசந்த் மாயாவோடு சென்றான்.

"ஏன் டி என்னை தேடி வரலை?"

"அதான் சொன்னேனே பிரஜின்."

"உன்னோட பிடிவாதத்தை இந்த விஷயத்தில் காட்டாமலே இருந்திருக்கலாம் நிலா."

"சரி விடுங்க. என்ன நடக்கணும்னு இருக்கோ, அது தான் நடக்கும். அம்மா இறந்ததுக்கு நான் தான் காரணம்னு நினைக்கும் போதெல்லாம் தற்கொலை செய்துக்க தோன்றும்.

சுனாமியில் என் கண் முன்னாடி பல உயிர்கள் போனது. ஆனால், கடவுள் நான் வாழணும்னு நினைத்து தான் என்னை காப்பாற்றினார்‌. அந்த காரணத்துக்காக தான் நான் வாழ்ந்துட்டு இருந்தேன். இப்போ தான் புரியுது இந்த உயிரும் உங்களுக்கானதென்று. அதான் பிறவி எடுத்து வந்தேன் போல்."

இனி அவர்கள் வாழ்வில் இன்பம் மட்டுமே.
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
40
18
Deutschland
இந்த சுனாமி எத்தனை உயிர்களை பலிவாங்கியது....
நிலாவின் உயிரை எடுக்க அந்த கடவுளுக்கே புடிக்கல 😀
அதான் காதலனிடம் வந்து சேர்ந்தாள்❤️
சூப்பர் ❤️
வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
 
Last edited:
  • Like
Reactions: Abitha

Abitha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
13
11
3
Sankarapuram
இந்த சுனாமி எத்தனை உயிர்களை பலிவாங்கியது....
நிலாவின் உயிரை எடுக்க அந்த கடவுளுக்கே புடிக்கல 😀
அதான் காதலனிடம் வந்து சேர்ந்தாள்❤️
சூப்பர் ❤️
Thanks 😊
 
  • Love
Reactions: Thani

ஆனந்த ஜோதி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 14, 2022
108
28
43
Chennai
சிறுகதை வாசித்தேன். ரொம்ப நன்றாக இருந்தது.

நாயக நாயகி பாத்திரம் அழகாக வடிவமைத்து இருக்கிறீர்கள். பிளாஸ்பேக் அருமை. முடிவு சூப்பர்.

எழுத்து நடையும், கதையோட்டமும் வெகு சிறப்பு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐
 
  • Like
Reactions: Abitha

Abitha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
13
11
3
Sankarapuram
சிறுகதை வாசித்தேன். ரொம்ப நன்றாக இருந்தது.

நாயக நாயகி பாத்திரம் அழகாக வடிவமைத்து இருக்கிறீர்கள். பிளாஸ்பேக் அருமை. முடிவு சூப்பர்.

எழுத்து நடையும், கதையோட்டமும் வெகு சிறப்பு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐
Thank u 😊
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
உயிரும் உனதே.....
காதலியின் பிரிவில்
கடந்த செல்ல முடியாமல்
காதலின் நினைவுகளில்
காலம் கடத்தும் காதலன் பிரஜன்.....
பிரகாசமாய் தோன்றும் நிலா போல
பளிச்சென்று தெரியும் பிறை நிலா
பாதியிலேயே காதலை விட்டு
பறந்து செல்ல.....
நிலாவின் நினைவில்
மதி மயங்கி
தன்னிலை மறந்து
தவித்தவனுக்கு
திடீரென்று காட்சி அளிக்கும் நிலா ...
காதல் பிரித்தாலும்
காலம் கடந்தாலும்
காதலர்களை சேர்த்து விட்டது....
உடலும் உள்ளமும்
உயிரும் உனக்கே சொந்தம்.....
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐
 

ஆனந்த ஜோதி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 14, 2022
108
28
43
Chennai
#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : அபிதா

படைப்பு : உயிரும் உனதே

வெளியீடு : வைகை சிறுகதைப் போட்டி

லிங்:

https://vaigaitamilnovels.com/forum/threads/23-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%87.5526/


இறந்து விட்ட காதலியை நினைத்து ஏக்கத்தில் தவிப்பவன், தன்னை ஒரு தலையாக விரும்புவளை ஏற்க மறுத்து அவளது நினைவில் வாடுவதும், கோபப்படுவதும், முன்கதை சுருக்கமும் அருமை👌👌👌அவனுக்கு இணை யார்? அவனை ஒரு தலையாக காதலிப்பவளா அல்லது கடந்த கால நினைவுகளுடன் வாழ்ந்து விடுவானா? என்பதை தெரிந்து கொள்ள சிறுகதையை வாசியுங்கள்.

தன்னை வேண்டாம் என்று மறுத்தவளை, அவள் மீதான உண்மையான நேசத்தில் மறக்க முடியாமல் தவிப்பவன் முன்பு, அவளைத் தவறாக பேசிய மாயாவை எதிர்த்துப் பேசிய இடமும், அவள் மீதான காதலும், நண்பனின் ஆதரவும், தாயாரின் வருத்தமும் வாசிக்க அருமையாக இருக்கிறது.

நிலா எனும் அவள் பெயரை வைத்தே பாட்டு பாடி காதலை சொன்ன இடம்👌👌 ரசனையாக இருந்தது. சிறுகதை வாசிக்க நன்றாக இருக்கிறது.

எழுத்து நடை, கதையோட்டம் வெகு சிறப்பு.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐
 

Abitha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
13
11
3
Sankarapuram
#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : அபிதா

படைப்பு : உயிரும் உனதே

வெளியீடு : வைகை சிறுகதைப் போட்டி

லிங்:

https://vaigaitamilnovels.com/forum/threads/23-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%87.5526/


இறந்து விட்ட காதலியை நினைத்து ஏக்கத்தில் தவிப்பவன், தன்னை ஒரு தலையாக விரும்புவளை ஏற்க மறுத்து அவளது நினைவில் வாடுவதும், கோபப்படுவதும், முன்கதை சுருக்கமும் அருமை👌👌👌அவனுக்கு இணை யார்? அவனை ஒரு தலையாக காதலிப்பவளா அல்லது கடந்த கால நினைவுகளுடன் வாழ்ந்து விடுவானா? என்பதை தெரிந்து கொள்ள சிறுகதையை வாசியுங்கள்.

தன்னை வேண்டாம் என்று மறுத்தவளை, அவள் மீதான உண்மையான நேசத்தில் மறக்க முடியாமல் தவிப்பவன் முன்பு, அவளைத் தவறாக பேசிய மாயாவை எதிர்த்துப் பேசிய இடமும், அவள் மீதான காதலும், நண்பனின் ஆதரவும், தாயாரின் வருத்தமும் வாசிக்க அருமையாக இருக்கிறது.

நிலா எனும் அவள் பெயரை வைத்தே பாட்டு பாடி காதலை சொன்ன இடம்👌👌 ரசனையாக இருந்தது. சிறுகதை வாசிக்க நன்றாக இருக்கிறது.

எழுத்து நடை, கதையோட்டம் வெகு சிறப்பு.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐
Thank you so much.
 

வித்யா வெங்கடேஷ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 8, 2022
239
209
63
USA
Simply superb story. சொல்ல வார்த்தை இல்லை. இருவரின் காதலும் அழகோ அழகு. சூழ்நிலை கைதியாக மாறும் காதலின் வலியை ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க ஆத்தரே!

அதுவும், நிலா கடைசியில் சொன்ன வார்த்தைகள் ... simply wow...

Hats off to your writing💕💕
 
  • Love
Reactions: Viswadevi