• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

23. காற்றோடு கலந்த விதையவள்

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
வசந்தாவை விசித்திரமாக பார்த்தவன்.
"அம்மா கொஞ்சம் மெதுவா கதையுங்கோ... துஷாவுக்கு நீங்கள் ஆரென்டு தெரிய வேண்டாம்" என்றவன்,


"துஷா...! இவா எனக்கும் ரதனுக்கும் முக்கியமானவா, பேரு வசந்தா" என்று அறிமுகப்படுத்தியவன்,


வசந்தாவிடம், "இது.....' என்பதற்கு முன்னர்,

"இருடா... எனக்கு தெரியும்... நான் சொல்லுறன்" என்றவர்,

"இவ துஷாந்தினி.... அப்பா சுதாகரன், அம்மா சாந்தி சரிதானேம்மா?" என்றார் துஷாவிடம்.


முதலில் விழித்தவள் பின்பு,
"என்னை ஏற்கனவே தெரியுமா ஆன்ட்டி?" என்றாள்.

"உன்னை தெரியாது..... அம்மாவையும் அப்பாவையும் நல்லா தெரியும். உன்னை போட்டோவில பாத்திருக்கிறன். போட்டோவ விட நேர்ல, இன்னும் வடிவா இருக்கிற" எனன்றவர்,


'அம்மாவும் அப்பாவும் நல்லா இருக்கினமா? நீ எப்பிடி இங்க? என்றவரை கேள்வியாக நிமிர்ந்து ஏறிட்டவள்,


'அப்ப இவங்களுக்கு நடந்து தெரியாதா? அவங்களோட நல்லா பழகின மாதிரி விசாரிச்சாங்களே!


சரி பொதுவா சொல்லுவம்.... அவாவையும் ஏன் கஷ்டபடுத்தோணும்... உண்மைய சொல்லுறதால நடந்தது மாற போகுதா என்ன?' என எண்ணியவளை,

"பிளையா ஏதன் கேட்டுட்டனோ? இப்பிடி யோசிக்கிற." என்றவரிடம்,


"அது வந்து.. அவயளுக்கு என்ன? நல்லாத்தான் இருக்கினம்... .
இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னம் தான், வெளியூர் போனவ. அதால தான், நான் இங்க என்ர சினேகிதியோட இருக்கிறன்" என்றாள்.


ஓ..... சரி சரி...! அப்பா ஊரில இருந்து வந்தா, நான் கேட்டன் என்டே சொல்லுறியா" என்றதும் அவள் தயங்க.

"என்னம்மா?"

"உங்கட பெயர சொல்லேலயே ஆன்ட்டி!"

"இதை மறந்துட்டன் பார்... வசந்தா என்டு சொல்லு....

ஆமா... நீ மெடிசின்ஸ் படிக்கிற என்டு தானே உங்கப்பா சொன்னார்... படிப்பெல்லாம் முடிஞ்சுதா? பிறகு ஏன் இந்த வேலை?"

"அது.... ஆன்ட்டி! படிப்ப சின்ன பிரச்சினையால நிப்பாட்டிட்டன்" என்றவள் தலைகுனிந்தாள்.


அதுவே சாந்தியை உறுத்த, கேட்ப்பதற்கு நிறைய கேள்விகள் இருந்தாலும், இதற்குமேல் அவளை கேள்வி கேட்ப்பது சரியில்லை என்று நிறுத்தியவர்,


"அதெல்லாம் விடும்மா...! என்னை பற்றி உன்னட்ட சொன்னானா உங்கப்பன்?"

இல்லை என்பதாக தலையாட்டினாள் துஷா.

ரவிக்கோ இவர்கள் பேச்சு எல்லாமே குழப்பமாக இருந்தது.

'என்ன இந்த அம்மா... அறிமுகப்படுத்தினா, அவள்ர முகத்த பாத்து, ஜாதகமே சொல்கிறாங்கள்.' என எண்ணியவாறே, நடப்பவற்றை வேடிக்கை பார்த்தான்.


"சரி... நேரம் போச்சு நான் வாறன்ம்மா." என்றவரிடம், தலையசைத்து விடை காெடுத்தாள்.

வசந்தாவின் மனதிலோ நிறைய குழப்பங்கள். அவள் கூறுவது ஒன்றுமே உண்மை போல் தெரியவில்லை.


மெடிசின்ஸ் படித்தவளளக்கு எதற்கு இந்த வேலை?
இதே போல் நிறைய பேரிற்கு வேலை கொடுக்கும் இடத்தில் இருப்பவள், மகனிடம் ஏச்சு பேச்சுக்களை வாங்கி வேலை செய்கிறாள் என்றால், நிச்சயமாக சொந்தங்களுடன் சேர்வதற்கு தான் வந்திருக்கிறாள்.


ஆனால் நேராகவே சென்று, நான் தான் உங்கள் பேத்தி என்றாலே, அவர்கள் ஏற்று கொள்வார்களே!' என்றே தோன்றியது.

"அவளை குழப்பீட்டு.. உங்களுக்கு என்ன யோசன...? அவள முன்னயே தெரியுமாே? அப்பிடி சொன்னீங்கள்" என்றான் சந்தேகமாய்.


"தெரிஞ்சதை சொன்னன்டா" அவனையும் குழப்பியவர்,

"அது சரி... உனக்கு இவளை யாரென்டு தெரியுதா...?" என்றார்.


"அவளை உங்களுக்கு அறிமுகம் செய்தது நான் தான்... இப்ப என்னட்டயே இந்த கேள்வி கேட்க்கிறீங்கள்..."


"அட போட லூசா....." திட்டியவர்,

"சரி நான் வெளிக்கிடுறன்... ரதன் நாளை தானே வாரன் என்டான்?" சந்தேகமாகத்தான் வினவினார்.

"நாளைக்கு வந்திடுவானம்மா..."


"ம்ம்... தங்கச்சிய பத்திரமாக பார்" என்றவர் வெளியேறினார்.

"அது சரி...! மகன் என்னடா என்டா.... என்னை மச்சன் என்டுறான். அம்மா இவளை எனக்கு தங்கச்சியாம்..

ம்ம்... இப்படியாவது எனக்கு தங்கை கிடைச்சுதே!" என்றவனும் காரை நோக்கி நடையை கட்டினான்.

இரண்டு நாட்களாக துஷாவை காணாது, முடிந்த அளவு வேக வேகமாக தனது வேலையை முடித்தவன்.

இரவவோடு இரவாக துஷாவை காணும் அவலில், விடியலில் அவள் முன் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில், தனது ஊரை நோக்க பயணமானான்.

வசந்தாவிற்கும் தீர்க்கபடாத குழப்பங்கள் அவர் அமைதியை குளைக்க, அன்றைய தூக்கத்தை தொலைத்தவர்.
மார்களிக் குளிரில் தனது அறையில் இருந்து வெளியே வந்து, அங்கும் இங்குமாக நடந்தார்.

நேரமே அதிகாலை நான்கு என்றானது.


இப்போதிருக்கும் நிலையில் தூங்குவதும் சாத்தியமில்லை. குளிர் வேறு அவர் உடலை நடுங்க வைக்க, சூடாக ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தவர், குளியலறை சென்றவர் கீற்றரின் உதவியுடன் குளித்து விட்டு, சமையலறையில் சூடான காபியை தயாரித்து வெளியே வந்து அமர்ந்தவர் அதை குடித்துக் கொண்டிருக்கும்போதே கார் சத்தம் கேட்டது.


வந்தது ரதன் தான் என உணர்ந்தவர், வரட்டும் என இன்னொரு காபியை, கலந்து கொண்டு வந்து டீப்பாவின் மேல் வைத்தார்.


காரை நிறுத்தி விட்டு வாயில் மணியை அழுத்த, கதவை திறந்த அன்னையை கண்டவன்.


"என்னம்மா.... நீங்க கதவை திறக்கிறீங்கள்...! வேலையாட்கள் எங்க?"


"படித்திட்டாங்கள்டா..... வெளில தான் நான் இருந்தன்... அது தான் நானே திறந்தன்" என்றவரை சந்தேகமாய் நோக்கியவன்,


"ஏன்? என்னாச்சு? உடம்புக்கு ஏலாதா?" அக்கறை தான்.


முதல்ல உள்ளே வா! குளிர்ல நின்டு கொண்டு கேள்வி கேட்க்காம" என்றவர் முன்னே நடக்க பின்னே வந்தவன்.

நீண்ட தூரம் காரோட்டிய களைப்பினால் தொம்மென சோபாவில் அமர்ந்தான்.

அவன் முன் கப்பை நீட்டியவர்,
"இதை குடி! என்க.

"வரவேற்பு பலமாக இருக்கு" என்றவன் அதை வாங்கி பருகியவாறே.

"நான் வருவன் என்டு முன்னமே தெரியுமாம்மா" என்றான்.


"இல்லடா... எனக்கும் நித்திர வரேல. சரி குளிருக்கு... சூடா ஏதாச்சும் குடிப்பம் என்டு, காபி கலந்தன்... கார் சத்தம் கேட்டுது.. அதான் உனக்கும் கலந்தன்" என்றவர் மீண்டும் யோசனைக்கு தாவ.

"ஏன் நித்திர வரேல. ஏதாச்சும் யோசிக்கிறிங்களாம்மா?" என்றதும் தான் தாமதம்.


"நிறைய இருக்குடா... ஆனால் என்ர குழப்பங்களுக்கு, சரியா விடைய யாரிட்ட கேக்குறது என்டு தான் விளங்கேல" என்றார் உதட்டை பிதுக்கி.

"என்ன குழப்பம் என்டு சொல்லுங்கோ, நான் சொல்லுறன்" என்றவனிடம்.

"என்ர குழப்பத்தை விடு! உன்னை சில கேள்வி கேக்கோணும்... அதுக்கு பதிலை சொல்லு" என்றவர்.


"நேற்று கடைக்கு போயிருந்தன்... அங்க ஒரு புள்ள உன்ர அறையில இருந்தாளே! யாரு அது?" என்றார் நெரிந்து தெரியாதவரை போல. அதில் முகம் வெழுறியவன்.


"நீங்க எதுக்கு அங்க போனிங்கம்மா?"


"எதுக்கு என்டா கேக்கிற? என்ர புள்ளைக்கு மோகினி அடிசிட்டுதாம்.... அதான் அந்த மோகினி யாரென்டு பாக்க போனன்" என்றவர் அவனையே ஆராய்ச்சியாய் நோக்கினார்.

அன்னை தன்னை கண்டு கொண்டது புரிந்தது. யாரால் தகவல் போய் இருக்கும் என்று ரெியாமலும் இல்லை.

தன் திருட்டை கண்டு கொண்டவரை நோக்கி மர்மமாய் புன்னகைத்தவனை செல்லமாய் தள்ளி விட்டவர்,


"கள்ள சிரிப்பு சிரிச்சது காணும்... நேர விஷயத்துக்கு வாறன்.

அவ யாரென்டு தெரியுமா?" என்றார்.


அவரது கேள்வியே சொன்னது... அவருக்கு அவளை தெரிந்திருக்கிறது என்று.


"தெரியும்மா..... ரவியோட சித்தப்பா மகள்.
நீங்கள் கேக்கிற கேள்வியிலே உங்களுக்கும் அவளை தெரிஞ்சிருக்கு என்டு தெரியுது." என்றவனிடம்,


'ம்ம்.. தெரியும்.. ஆனா அவள் இங்க வந்து வேலை செய்யோணும் எனனட அவசியம் என்ன?

இதே போல மூன்டு மார்க்கெட்டுக்கு ஓனர்டா! அவள்..... அப்படி இருக்கேக்க இது என்ன புது குழப்பம்?" என்று குழம்பிய தாயின் கையை ஆதரவாக பற்றியவன்,

"எனக்கு தெரியும்மா!..." என்றவன் தான் அறிந்த விஷயங்கள் அனைத்தையும் ஒன்றும் விடாமல் ஒப்பித்தான்.

இதுக்கெல்லாம் அந்த மூர்த்தி தான் காரணம் என்டு அவளுக்கே தெரியாதும்மா.


ஆனா அவனை நான் சும்மா விட்டுட்டன் என்டி நினைக்கிறீங்கள்?

அவனுக்கு என்ன மரியாதை செய்யோணுமோ, அதை அவனுக்கும் அந்த முத்துக்கும் சிறப்பா செய்துட்டன்" என்று தன் புகழை பாடியவன் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தவருக்கு மனம் கனந்து போனது.

"என்னடா...! இவ்ளோ பெரிய உண்மையை எப்பிடி தனிய ஒரு பொண்ணா தாங்குறாள்..?" அவளுக்காக வருத்த பட்டார்.

"அது தான்ம்மா அவள். தனக்காக யாரும் இரக்கபடுறது பிடிக்காது. எங்க அந்த இரக்கமே தன்ர தைரியத்தை கெடுத்திடுமோ என்ட பயம் அவளுக்கு.
முடிஞ்ச அளவு எல்லா உண்மையும் எனக்கு தெரியாமல் மூடித்தான் வைச்சிருந்தாள்..


பாவம் ஒரு வீடியோ...! அவள்ர உண்மையை படம் போட்டு காட்டீட்டுது" என்க.

"அதெல்லாம் சரி! இன்னொரு முக்கியமான விஷயம் உனக்கு தெரியாதே!" என்றவரை கேள்வியாக நோக்கியவன்,

"அது என்ன உண்மை?"

"அவளின்ர அம்மா அப்பா, அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திச்சினம்... அது தெரியுமா?"

"அத்தனை நேரம் இருந்த உற்சாகம் அவரது ஒரே கேள்வியில் வடிந்தவனாய்,

ம்ம் என்றான் சுருதியற்று.


"அது எப்படி உனக்கு தெரியும்? இது அவள பெத்தவங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயமாச்சே!" என்றார் வசந்தி இமைகளை சுருக்கி.

அன்று சீசீடீவி வீடியோவை பார்த்தவன், அவளுக்கும் அந்த ஆணுக்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாக தோன்றவே, அவர் போட்டோவை தன் போலீஸ் நண்பனுக்கு அனுப்பி,

அவரை பற்றிய தகவல் தனக்கு வேண்டும் என கூறி வைத்து இரண்டு மணித்தியாலங்கள் ஆகவில்லை.


அரைநேர விடுப்பு வேண்டும் என கேட்டு வந்தவள்,
தன் தோழிக்கு திடுமென காய்ச்சல் அது இது என உளறவும், ஏதோ களவு செய்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு.

அவள் முன்னே செல்ல, அவளை பின் தொடர்ந்து அவளுக்கே தெரியாமல் அவள் இருந்த மரத்தின் பின் புறம் அமர்ந்து எல்லாவற்றையும் கேட்டான்.


அப்போது தான் அவள் தந்தை அவளுக்கு மாப்பிள்ளை பார்த்த தகவலும் வாசன் வாய்மாெழி அறாந்தான்.


அதை கேட்டதில் இருந்து அவனது தூக்கம் தொலைந்து போனது.

நடந்ததை கூறியவன் உடைந்த பார்வையோடு அவரை நோக்கினான்.



"அது சரி!. தொழில்லயே அவ்வளவு ஈடுபாடு காட்டுறவன், வாழ்க்கை என்டு வாரப்ப ஆராய மாட்டியா?" என்றவர்.


"எனக்கு தெரியும்டா... அவளுக்கு பாத்த மாப்பிள்ளை யாரென்டு! என்னட்டையும் ஒரு போட்டோ இருக்கோணும்.. இரு!" என்று தனது போனை எடுத்தவர், அதில் தேடி ஒரு போட்டோவை எடுத்து காண்பித்து,

"இவன் தான்... பார்" என்றார்.

பார்க்க விருப்பம் இல்லை என்றாலும், அன்னை காட்டும் போது மறுக்க மனம் வரவில்லை.


அதில் தெரிந்த உருவத்தை பார்த்ததும், விழிகள் அகல விரிய,

"அம்மா......" என்றான் ஆச்சரியமாக.

"உண்மையாவாம்மா.... அது நான் தானா?

எப்பிடி எப்பிடி...? எனக்கே தெரியாம..." சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை அவனுக்கு.



"டேய்.... டேய்... காணும்டா..." அவனை அடக்கியவர்.


"தொழில் விஷயமா ஒரு மீட்டிங்க் இருக்கு என்டு, எட்டு மாசத்துக்கு முன்னம் ஒரு கல்யாணத்தை அட்டன் பண்ண சொல்லிட்டு போனியே......! அப்ப தான்...

அதுவும் ஒரு சூப்பர் மார்க்கெட் ஓனாரின் மகன் திருமணம் தான்.

தொழில் முறை நற்பு என்றதனால், தாயை அனுப்பி விட்டு, தனக்கு வேலை என்று போய் விட்டான்.


சாதாரணமாக கணவர் இறந்த பின்னர், நல்ல காரியங்களுக்கு போகதவர், மகனின் இக்கட்டான சூழ்நிலையால் தான் சென்றார்.


தனக்கு அருகில் இருந்த நபரை தன் கணவரின் நண்பன் தம்பி சுதாகர் போல் இருக்கவும், கேட்டால் அவன் இல்லை என்றால் ஏதாவது நினைப்பார்களோ! என்று பேசாமல் இருக்க, அவரும் வசந்தாவை அடையாளம் கண்டு கொண்டார் போல.


"நீங்கள் வசந்தா தானே!
என்னை தெரியுதா" என்றார்.


"நீ சுதாகர் தானே!" என்றார் அவரும்.

"பரவாயில்லையே! இவ்வளவு வருசம் ஆகியும் நினைவு வைத்திருக்கிறீர்களே!" என்று தங்கள் குசல விசாரிப்புக்கள் முடிய, தனது தாய் தந்தையை பற்றி வினாவினான் சுதாகர்.

"அத ஏன் சுதாகர் கேட்கிறீங்கள்?" என்று தொடங்கிய வசந்தா.


"உன்கட அண்ணி செய்த காரியத்தால, அவயல் இப்ப தனியாக பண்ணை வீட்டில் தனியாக தங்கி இருக்கினம்...


தேவையில்லாத விடயத்திற்கெல்லம் வயது வித்தியாசம் இல்லாம விவாதம் பண்ணுறாள் அந்த கலா.


இதால குடும்பத்தில நெடுவ சண்டை, சுந்தரத்துக்கும் நிம்மதியில்லாம போச்சு...

கலாவை கண்டிச்சிசும் பார்த்துட்டார்.. கேக்கோணுமோ....!

ஒரு நாள் அடிக்கிற அளவுக்கு பிரச்சினை போட்டுது...
தங்களால ஏன் பிரச்சினை என்டு, அப்பாவும் அம்மாவும், தனியா போட்டினம்.

அடிக்கடி சுந்தரம் போய் பார்ப்பார்.. அவர்ர மகன் ரவிக்கும் கலாவிற்கும் சுத்தமாக ஆகாது..

அவயலோடயே அவனும் தங்கீட்டான்" என்று அவர்கள் குடும்ப விஷயம் பேசியவர்.

"அது முடிஞ்சு போன கத.. அதை விடுவம்... உங்கட பிள்ளைகள் என்ன செய்யினம்? "என்றார்.


"பிள்ளைகள் எல்லாம் இல்லக்கா... ஒரே ஒரு பொண்ணு...
இப்ப கொழும்பு பல்கலைகழகத்தில மெடிசின் படிக்கிறாள்... இந்த வருஷம் தான் கடைசி ஆண்டு தேற்வு" என்றார்.

அவரும் தனது மகனை பற்றி கூற,
முந்திக் கொண்ட சுதாகர்,

"அக்கா ஒன்டு கேட்டா... தப்பா எடுக்காதங்கோ...

"விட்டு போன எங்கட சொந்தம் திரும்ப சேர வேணும்ம் என்டா, உங்கட பிள்ளைய, என்ர பிள்ளைக்கு கட்டி வைச்சிடலாமா? என்றார் சுதாகர் தயங்கியவாறு.



"இதை தான் நானும் கேட்கோணும் என்டிருந்தன்." என்ற வசந்த தனது பர்சை தடவி, ஒரு படத்தை எடுத்தவர், இது என்ர புள்ளேன்ர படம்... உங்கட பொண்ணிட்டயும் காட்டுங்ககோ" என்று கொடுத்து விட்டு, துஷாவின் படத்தை கேட்டார்.

தனது போனில் இருப்பதாக கூறி, வசந்தா நம்பருக்கு அனுப்பி விட்டவனின், தொழில் முறை நண்பர்கள் வருவதை கண்டு விட்டு,


"அக்கா....! இதைபத்தி பிறகு கதைக்கிறன்" என்று மனைவியை அழைத்துக்கொண்டு அவர்களிடம் சென்ற பின்பே தான் துஷாவின் படத்தை பார்த்தார் வசந்தா.


வடிவா தாற் இருக்கிறாள்....
இவன் சம்மதிக்கடகோணுமோ!" என நினைத்து வீடு வந்து விட்டார்.


பிறகு ரதனை திருமணத்திற்கு கேட்க, அவனோ மறுக்க... அந்த பேச்சையும் அவர் மறந்து விட்டார்.


கடவுள் இது தான் முடிச்சு என்டு போட்டா யாரால தடுக்கேலும்...?
அதான் உன் கண்ணிலயே விழுந்து. அவளை உனக் பிடிக்க வைச்சிருக்கிறான்." என்றவர் பேச்சையே கேட்டிருந்தவனும் சொல்லவா வேண்டும்.

"ஏதோ நல்லதாக முடிஞ்சா சரி தான்" என்று சந்தோஷத்தில் உல்லாசமாக விசில் அடித்தபடியே தனதறைக்குள் சென்றான்.