ஆனந்தன் அன்று இரவும் தூங்குவதற்கு அறைக்கு வரவில்லை! சாருபாலாவுக்கு அழுகை வந்தது, கணவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்?
கைப்பேசியை எடுத்து கணவனை அழைத்தாள்! அது உடனே எடுக்கப்பட்டது! " சொல்லு சாரு? என்ன இந்த நேரத்தில் போன் பண்ணியிருக்கிறே?" என்றான் மிகவும் இயல்பாக!
"நீங்க எங்கே இருக்கீங்க ஆனந்த்?" என்றாள்
"நான், இப்பத்தான் பெங்களூர் ரீச் ஆகிட்டு இருக்கிறேன்! மதியம் ரூமுக்கு வந்தேன் நீ நல்லா தூங்கிட்டு இருந்தே! அதனால உன்னை தொந்தரவு செய்ய வேண்டாம்னு, பேப்பரில் எழுதி வச்சிட்டு கிளம்பிட்டேன்! ஏன் என்னாச்சு?" நீ அதைப் பார்க்கலையா?"
"அதுவரை தொண்டையை அடைத்திருந்த துக்கம் சட்டென்று விலகியதைத் போல உணர்ந்தாள்!
"ஆமா நான் இன்னும் அதைப் பார்க்கவில்லை! ஏன் ஆனந்த், சுரேன், பத்தி ஒரு வார்த்தை விசாரிக்கணும்னு உங்களுக்கு தோனவே இல்லையா? அட்லீஸ்ட் நான் போய் நல்லபடியாக சேர்ந்தேனா இல்லையானு கூட விசாரிக்க தோனலை இல்லை? இன்னிக்கு நான் வந்தப்புறமாகூட என்கிட்ட பேசவில்லை! அப்படி நான் என்ன தப்பு செஞ்சுட்டேன்?"
ஆனந்தனுக்கு மனைவி இப்படி உரிமையாக பேசுவது இதமாக இருந்தபோதும் காலம் கடந்துவிட்ட இந்த சமயத்தில் அதில் குளிர்காய்வது தவறு என்று தோன்றியது! அதனால் மனதை, கல்லாக்கிக் கொண்டு,"எப்படி பேசுவேன்னு நீ எதிர்பாத்தே சாரு? நீ கிளம்பற அன்னிக்கு நான் பேசிட்டு இருக்கும் போதே போனை கட் பண்ணிட்டு போயிட்டியே? அப்புறமாக நான் என்னவென்று உன்னிடம் பேசுவது? மேனர்ஸ் இல்லாமல் நீ நடந்துக்கிட்டது சரியா சொல்லு! வேற ஒருத்தனா இருந்தால் உன்னை போகக்கூடாதுன்னு தடுத்திருப்பான்! ஆனால் நான் அப்படி செய்கிறவன் இல்லை! எனக்கும் மனிதாபிமானம் இருக்கு! அதனால தான், என் கோபத்தை காட்டி உன்னை நிறுத்தவில்லை! "
சாருபாலா வாயடைத்துப் போனாள்! அவள் ஏதோ நினைக்க, இது வேற ஏதோவாக இருக்கிறதே!
ஏனோ, அதுவரை இருந்த மன பாரம் நீங்கிவிட," தப்புத்தான் ஆனந்த், மன்னித்துவிடுங்கள்! எனக்கு அப்போது இருந்த பதற்றத்தில் நான் என்ன செய்கிறேன் என்று உணராமல் அப்படி செய்துவிட்டேன்!" என்றாள் இறங்கிய குரலில்!
"மன்னிப்பெல்லாம் எதற்கு சாரு? சரி, இப்ப சொல்லு சுரேன் எப்படி இருக்கிறான்?
சாரு விபரமாக அனைத்தும் சொன்னாள்!
"சாந்தி, தனியக எப்படி சமாளிப்பாள் ? நீ இன்னும் இரண்டு நாட்கள் தங்கியிருந்து வந்திருக்கலாம்ல?"
"ரிஷியை நான் பிரிஞ்சு இருந்ததே இல்லையே ஆனந்த்! அத்தோடு சுரேனோட வேலை செய்ற வாத்தியார்கள் உதவி செய்ய இருக்கிறார்கள்! அவர்கள் பார்த்துக் கொள்வதாக சொன்னார்கள்! எப்படியும் அடுத்த மாசத்துல இருந்து அவனுக்கு லீவு தொடங்கிடும்! சாந்தியோட தூரத்து சொந்தக்காரங்க, எல்லாம் கேரளா பக்கம் இருக்காங்க, அவங்க வர்றதா சொன்னாங்க!
அதனால பிரச்சினை இல்லை! என்றவள்," ஆனந்த் மறுபடியும் வெரி ஸாரி!"
"அதை விடு, நான் ரூமுக்கு வந்துட்டேன்! இனிமே தான் குளிச்சிட்டு சாப்பிடணும்! இன்னும் இரண்டு நாள் இங்கே! அப்புறமா மகாபலிபுரத்தில் வேலை! நேரம் கிடைக்கிறப்போ பேசுறேன்! வச்சுடட்டுமா?"
"சரி ஆனந்த், குட் நைட் ! ஸ்வீட் ட்ரீம்ஸ்!" என்று தொடர்பை துண்டித்தாள் சாரு!
ஒரு நிம்மதி பெருமூச்சுடன் கட்டில் படுத்துக் கொண்டாள்! சற்று நேரம் ஏதேதோ பழைய நினைவுகளில் ஆழ்ந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்!
🩵🩷
அடுத்து வந்த நாட்கள் இயல்பாக சென்றது! அந்த வார ஞாயிற்றுக்கிழமை, காலையில் அனிதாவின் தந்தை தனுஷ்கோடி, ஊரில் இருந்து வந்திருந்தார் ! மகளை கொணர்ந்து விட்டதோடு சரி, தாயும், தந்தையும் இந்தப் பக்கமே தலை காட்டவில்லை!
இப்போது திடுமென அவர் வந்து நிற்கிறார்! என்ன காரணம்?
சாருபாலா, உரிய விதமாக அவரை வரவேற்று, உபசரித்தாள்! அவருக்கான அறையை காட்டிவிட்டு, அவள் அன்றைய சமையலை கவனிக்கச் சென்றாள்!
பணியாளிடம் உணவை கொடுத்தனுப்பிவிட்டு, சாரு, அன்றைய மதிய சமையலுக்கான தேவைகளைப் பற்றி சொல்லிக் கொண்டு அங்கேயே நின்று கொண்டாள்! அவள் பரிமாறுவதை விசாலாட்சி, விரும்புவதில்லை! அதுவும் யாரும் வெளியாட்கள் வந்திருக்கும் வேளையில் அவள் போகவே மாட்டாள்! அவர்கள் முன்னிலையில் ஏதாவது பேசி வைப்பார்! இவரோ உறவுக்காரர்! கேட்கவே வேண்டாம்! ஆகவே அவள் சமையலறையின் பின் வாசல்புறமாக வெளியேறி தோட்டத்திற்கு சென்றுவிட்டாள்!
விசாலாட்சி, காலை பலகாரத்தின் போது தான் தனுஷ்கோடியை சந்தித்தார்! "என்ன, தம்பி , சொல்லாம கொள்ளாம வந்திருக்கிறே? வத்சலா எப்படி இருக்கிறாள்? "
"என் மகள் இங்கன வந்து ஆறு மாசத்துக்கு மேல ஆகப் போகுது அக்கா! நம்ம ஊரைப் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே, பொம்பளைப் பிள்ளை என்றால் கண்ட கதை கட்டி விட்டுருவாக! இதுக்காகன்னு தான் நானும், என் வீட்டுக்காரியும், ஊரில் தங்காமல், கோயில் குளம்னு, ஒவ்வொரு ஊரா சுற்றப் போயிருந்தோம்! என் வீட்டுக்காரி,ரொம்ப நாளா மைசூர், பெங்களூர், ஏற்காடு எல்லாம் சுற்றிப் பார்க்கணும்னு கேட்டுட்டே இருந்தா! இந்த சந்தர்ப்பத்தை அதுக்கு பயன்படுத்திக்கிட்டேன்!
"என்ன தம்பி சொல்லுறே? கொசுவுக்கு பயந்து கோட்டையை கொளுத்துன கதையாவுல இருக்கு? எத்தனை தடவை நாம போன்ல பேசியிருக்கோம்? நீ இந்த விசயத்தை பத்தி எனக்கு சொல்லவே இல்லையே? ஏன்?"
"அனிதா தான், நான் இங்கே வந்தப்புறம் கொஞ்சம் பழசெல்லாம் மறந்து நிம்மதியாக இருக்கேன்! இந்த விசயம் அத்தைக்கு தெரிஞ்சா, நாம பிள்ளையை கூப்பிட்டதால தான் தம்பி, இப்படி ஊரை விட்டு கிளம்பறாப்ல ஆகிடுச்சுன்னு வருத்தப்படுவாக அப்பா! அப்புறம் உடனே என்னை திருப்பி அனுப்பிடுவாக! ரிஷி பையன் என்கிட்டே நல்லா ஒட்டிக்கிட்டான்! என் மனசுக்கு ஆறுதல் அவன்தான்னு சொன்னா!" எங்க மகளோட சந்தோசம் தானே எங்களுக்கு முக்கியம்? அதாலதான் உங்களுக்கு சொல்லாம விட்டேன்! மன்னிச்சிடுங்க அக்கா!"
"பரவாயில்ல தம்பி, நானும் அனிதாவை எதுக்கு கூப்பிட்டேன்! அவள் பழசை மறந்து, வாழ்க்கைல ஒரு பிடிப்பு உண்டாகணும்னு நினைச்சுத்தான், என் கால்வலியை காரணம் சொல்லி அழைச்சேன்! இதுதான் சாக்குனு ஜோடி போட்டுட்டு ஊர் சுற்றிப் பார்த்துட்டு வந்ததுல எனக்கு சந்தோசம்தான் தம்பி! அது சரி நீ இப்படி தேசாந்திரம் போயிட்டா, உன்னோட தொழிலை எல்லாம் யார் பார்த்துக்கிறது?"
"என் மச்சினன் பார்த்துக்குவார்!
மாசம் இரண்டு நாள், ஊர் பக்கம் வந்து, வீட்டையும் சுத்தம் பண்ணிட்டு, அப்படியே தொழிலைப் பற்றின விவரத்தை மச்சினர்கிட்ட கேட்டுக்குவேன்! சும்மா செல்லக்கூடாது அக்கா, ரொம்ப தங்கமான மனுஷன், கணக்கு வழக்கு எல்லாம், கனகச்சிதமாக வைத்திருப்பார்! அவர் இருக்கிற தைரியத்தில தான் நாங்க நிம்மதியா நாலு இடம் போக முடிஞ்சது! இரண்டு நாள் முந்திதான், எங்க ஊருக்கு வந்தோம், பாப்பாவுக்காவும், உங்க எல்லாருக்காகவும் வேண்டிக்கிட்டோம்! எல்லா ஊர் கோயில் பிரசாதமும் கொண்டு வந்திருக்கேன்! இந்தாங்க உங்க கையால எல்லாருக்கும் கொடுங்க"
"சரி தம்பி! நீ முதல்ல சாப்பிட ஆரம்பி! சோலை என்ன வேடிக்கை பார்த்துட்டு நிற்கிறே? பரிமாறு! என்று பணிப்பெண்ணை அதட்டினார்!
"சாப்பிடுறேன் அக்கா! சாப்பாடு எங்கே போயிடப் போகுது? நான் வந்த விசயத்தை இன்னும் சொல்லவே இல்லையே! ஒரு வாரம் முன்னாடி மலை ஏறும்போது வத்சலா மயக்கம் போட்டுட்டாள்! அங்கே இருந்த சின்ன கிளினிக்ல அப்போதைக்கு மருத்துவம் பார்த்துட்டு, ஊருக்கு திரும்பினோம்! போன் போட்டு சொல்ற அளவுக்கு சீரியஸா இல்லைனு தான் நான் அனிதாவுக்குக்கூட தகவல் சொல்லை! முந்தா நாள் எதுக்கும் ஒரு செக்கப் பண்ணிடலாம்னு தூத்துக்குடிக்கு போய் பெரிய ஆஸ்பத்திரில காட்டினோம்! அங்கேயும் அது ரத்த அழுத்தம் அதிகமாகிட்டு, பத்தியமா சாப்பிட்டு, மாத்திரை எடுத்துக்கிட்டா சரியாப் போகும்னு சொல்லிட்டாக! ஆனால் வீட்டுக்கு வ்நததும், வத்சலா மகள் நினைப்பாவே இருக்கிறாள்! அவளைப் பார்க்கணும் போல இருக்காம்! அதான் என்னை அனுப்பி கூட்டிட்டு வரச் சொன்னாள்! இதெல்லாம் எதுக்கு போன்ல பேசிட்டு இருக்கணும்? அதான் நேரிலே போறோமே, சொல்லிக்கலாம்னு தான் கிளம்பி வந்துட்டேன்!"
விசாலாட்சியும் அனிதாவும் ஒருங்கே திடுக்கிட்டு நிமிர்ந்தனர்!இருவருமாக பார்வைகளால் சம்பாஷணை நடத்திக் கொண்டிருக்க.. வாய் பாட்டுக்கு தன்னிச்சையாக பதில் சொன்னது!
"அட, மகளைப் பாரக்கணும்னா அவளையும் கூடவே கூட்டிட்டு வரவேண்டியதுதானே தம்பி? இங்கே ஒரு நாலு நாள் இருந்துட்டு போகலாம்ல? அனிதாவை உடனே அனுப்பறதுல ஒரு சின்ன பிரச்சினை இருக்கு தம்பி! அது என்னான்னா, வந்ததுல இருந்து ஆனந்தன் மகனை அனிதா தான் பார்த்துக்கிறாள்! இப்ப திடும்னு அவள் கிளம்பிட்டா பிள்ளை ஏங்கிடுவான்! குழந்தையை பார்த்துக்க ஒரு மாற்று ஏற்பாடு செய்துட்டு நானே அவளை அனுப்பலாம்னு தான் நினைச்சிட்டு இருந்தேன்! அதுக்குள்ள நீயே வந்து நிற்கிறே! என்றவர்," சரி நீ முதல்ல சாப்பிடு, அப்புறமாக என்ன செய்யறதுன்னு யோசிச்சு முடிவு செய்யலாம்!" என்று விசாலம் முடிக்கவும்..
தனுஷ்கோடியும் அதை ஏற்றவராக மேற்கொண்டு, அந்த பேச்சை தொடரவில்லை!
விசாலாட்சி, அனிதாவை அனுப்பி வைப்பாரா? அல்லது வத்சலாவை வரவழைப்பாரா?