கிருஷ்ணா வீட்டை அடைந்ததும் இரு பெண்களுக்கும் அவர்களுக்கான அறையை காட்டி விட்டு தனது அறைக்கு சென்று உடை மாற்றிவிட்டு சமையல் அறைக்கு திரும்பி மூவருக்கும் பால் எடுத்துக்கொண்டு கூடத்திற்கு வந்து இருவரையும் அழைத்தான்.
உடை மாற்றிக்கொண்டு வந்த இருவரிடமும் பால் எடுத்துக் கொள்ள சொல்லி தானும் ஒரு குவளையை எடுத்துக் கொண்டு அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர, அவர்கள் எதிர் சோபாவில் அமர்ந்தனர். சற்று நேரம் அமைதி கழிய, "இருவரும் ரொம்பவும் களைத்து தெரிகிறீர்கள். பேசாமல் போய் படுத்து ஓய்வெடுங்கள். எதுவானாலும் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று குவளைகளை எடுத்துக் கொண்டு எழுந்தவன், பாரதி கண்டதையும் போட்டு மனதை குழப்பிக் கொள்ளாமல் நிம்மதியாக தூங்கு" இருவருக்கும் குட் நைட்" என்று விலகிச் சென்றுவிட, சிலகணங்கள் தாமதித்து இருவரும் அறைக்கு திரும்பி கட்டிலில் படுத்தனர்.
சத்யபாரதிக்கு மனதில் ஏதேதோ சிந்தனைகளின் தாக்கத்தால் அன்று இரவு தூங்கமுடியாது என்றுதான் தோன்றியது. ஆனால் மிருதுவான மெத்தையில் படுத்ததும், தாய் மடி சேர்ந்த கன்றாக, கண்கள் சொருக அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.
மறுநாள் காலையில் அவள் துயில் கலைந்து எழுந்த போது காலை மணி ஒன்பது. சுற்றுப்புறம் வசப்பட சிலகணங்கள் ஆயிற்று. தான் இருக்கும் இடம் புரியவும் பதறியடித்து எழுந்து அமர்ந்தாள் சத்யபாரதி.
கிருஷ்ணா அவளை பற்றி என்ன நினைப்பான் என்று எண்ணும்போதே முகம் சூடாயிற்று. பல்துலக்கிவிட்டு அப்படியே குளியலையும் முடித்துக்கொண்டு அவள் கூடத்திற்கு வந்த போது நல்ல வேளையாக கிருஷ்ணா அங்கே இல்லை. சாப்பாட்டு மேசையில் காய் நறுக்கிக் கொண்டு இருந்த ரூபா, அவளுக்காக காபி கலப்பதற்காக எழப்போனாள்.
"நீ இரு ரூபா. நானே கலந்துகொள்கிறேன் என்று தனக்கு காபியை கலந்து வந்து அவள் எதிரில் அமர்ந்தவள்," நல்லா தூங்கிட்டேன். நீயாவது எழுப்பக்கூடாதா ரூபா? "
"அண்ணா தான் எழுப்ப வேண்டாம் என்று சொன்னாங்க. நானும் லேட்டாதான் எழுந்தேன் சத்யாம்மா".
"ம்ம்.. ராத்திரியே கேட்கனும்னு நினைச்சேன். அதென்ன திடீர் சமையல் மாதிரி திடீர் அண்ணா?" என்றாள் கேலியாக
"அன்றைக்கே ஆஸ்பத்திரியில் சொன்னார் சத்யாம்மா. எனக்கு மனதில் நிற்கவில்லை. நேற்று நான் போன் பண்ணினப்போ நீ என்னை உன் அண்ணனாக ஏற்கவில்லையா என்று கேட்டுவிட்டார். அப்படியே கூப்பிட தொடங்கிவிட்டேன்".
"ஆக, அது உன் வேலைதான் இல்லையா?" என்ற சத்யபாரதியின் குரலில் வருத்தம் தெரிய..
"முகம் வாட, என்னை மன்னித்து விடு சத்யா’’
"எனக்கு அந்த நேரத்தில் என்ன செய்யறதுன்னு தெரியவில்லை சத்யாம்மா, என்றவள் விவரம் சொன்னாள்."
அண்ணாக்கிட்ட மதியம் தான் சொன்னேன். அவரோட மாமாவின் உடல்நிலை பற்றி மருத்துவர் உறுதி தராத நிலையில் அவரால் உடனே கிளம்பி வரமுடியாத சூழல். உங்களையும் தடுக்க எனக்கு வழி தெரியவில்லை. ஒருவழியாக கடவுள் புண்ணியத்தால் மாலையில் மாமாவிற்கு இனி ஆபத்தில்லை என்றானதும் அலுவலகத்தில் இருந்த ரவியை வரவழைத்து பொறுப்பை ஒப்படைத்து விட்டு வந்து சேர அவ்வளவு நேரமாகிவிட்டது" என்று சொன்னார்.
"ம் ம்.. விடு ரூபா. எனக்கு நல்லது என்று நினைத்து செய்திருக்கிறாய். ஆனால் இது எந்த அளவுக்கு நல்லது என்றுதான் எனக்கு தெரியவில்லை என்றவள்
"ஆமா துரை எங்க காணோம்? டிபன் சாப்பிட்டாரா இல்லையா?
"நானும் தாமதமாக தான் எழுந்தேன். அப்படியே குளியல் போட்டு வந்தால் அண்ணா கிளம்பிட்டு இருந்தார். மாமாவை தனி அறைக்கு மாற்றுகிறார்களாம். கூடவே ரவியையும் அனுப்ப வேண்டுமே. "செல்லோவில் டிபன் வைத்திருக்கிறேன் சாப்பிடுங்க, நான் டிபன் சாப்பிட்டேன்னு சொல்லிட்டு தான் ஆஸ்பத்திரிக்கு கிளம்பி போனார்."
"ஓ! சரி நீ சாப்பிட்டியா?" என்ன டிபன்?
"என்ன டிபன் என்று நான் இன்னும் பார்க்கவில்லையே. உனக்காக காத்திருந்தேன் சத்யாம்மா. அதற்குள்ளாக காயை நறுக்கி வைத்துவிடலாமென்று நினைத்தேன்.
"ஓ! அப்போ ப்ரட் சான்ட்விச் தான் இருக்கும். எனக்கு காய்ச்சல் வந்தாலும்கூட பிரட்.. என்று அவள் சொல்லும்போதே
"பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியுமே. அதனால் தான் இட்லி தக்காளி சட்னி பண்ணினேன்" என்றவாறு கிருஷ்ணா அங்கே வந்து ஒரு இருக்கையில் அமர்ந்தான்.
அதெல்லாம் கூட இவன் நினைவு வைத்திருக்கிறானா என்று எண்ணும்போதே மனது ஒருவித பரவசத்துடன் துள்ள, அவனை ஏறிட்டாள். ஒற்றை புருவம் உயர்த்தி எப்படி? என்று சைகை செய்ய, முகம் சிவக்க எழுந்து காபி கோப்பையுடன் சமையலறைக்குள் சென்று மறைந்தாள்.
தன் வேலையிலேயே கவனமாக இருந்தபடி,"மாமா எப்படி இருக்கிறார் அண்ணா? சீக்கிரமே திரும்பி வந்துட்டீங்களே ? கூட யார் இருக்காங்க?" என்று ரூபா வினவினாள்.
பக்கத்தில் நடந்து செல்லும் தூரத்தில் தான் ஹாஸ்பிடல் இருக்கிறது ரூபா. அத்தைக்கு காலில் வலி என்று அனிஷா வந்திருந்தாள். அவளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வந்தேன்." என்றதும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சத்யபாரதிக்கு அனிஷாவின் பெயரால் வேதனை உண்டாயிற்று. கூடவே அத்தைக்கு கால்வலி என்றால் அவளால் வெளியே வர முடியாது என்று தோன்ற,
சாப்பாட்டு மேசைக்கு வந்து, "நாம் நம் வீட்டிற்கு கிளம்பலாம் ரூபா" என்றாள்.
"நேற்று யாரோ அங்கே பேய் இருக்கிறாற்போல போக வேண்டாம்னு அலறுனாங்களே ரூபா. அது யாருன்னு உனக்கு தெரியுமா? ? என்றான் கிண்டலாக.
ரூபா பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "உஷ் அண்ணா சும்மா இருங்கள்" என்று அவனை அமர்த்திவிட்டு,"சரி சாயந்தரமா கிளம்பலாம் சத்யாம்மா. அதுக்கு முன்னாடி மாமாவை ஒரு நடை போய் பார்த்துவிட்டு வந்துவிடலாமா" என்று கேட்க,
சத்யபாரதி பதில் சொல்லுமுன்," அதெல்லாம் எங்கேயும் போக வேண்டாம் ரூபா. நான் பாரதிகிட்ட இன்னிக்கு இப்பவே பேசணும் அதுக்காகத்தானே இங்கே அழைத்து வந்ததே".
"சரி அண்ணா பேசுங்கள் நான் போய் தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு வர்றேன்."என்று எழமுயன்றவளை,
"முதலில் இரண்டு பேரும் சாப்பிடுங்கள். அதற்குள் நான் கொஞ்சம் அலுவலக வேலையை முடித்துவிட்டு வருகிறேன்" என்று மாடிக்கு சென்றான் கிருஷ்ணா.
சத்யபாரதி செய்வதறியாது திகைத்து நிற்க ரூபாவிற்கு விஷயம் புரிந்துவிட்டது... ?? உங்களுக்கும்தானே??
கிருஷ்ணா மாடிக்கு சென்றபின் இருவரும் சாப்பிட்டுவிட்டு மதிய சமையல் வேலையில் ஈடுபட்டனர். அதே சமயம் அங்கே கனகவல்லி கொதித்துப் போயிருந்தாள். முன் தினம் கால் கடுக்க ஒவ்வொரு கடையாக ஏறி திருமணத்திற்கு தேவையான துணிமணிகள் தாலி இன்னும் மாப்பிள்ளைக்கு மோதிரம் என்று எல்லாமும் வாங்கிக்கொண்டு சத்யபாரதி வீட்டிற்கு சென்றால் பெரிய பூட்டு அவளை வரவேற்றது. அக்கம்பக்கத்தில் விசாரித்தால் யாருக்கும் தெரியவில்லை. கடைசியாக காவலாளியிடம் விசாரிக்க அவன் ஊருக்கு போயிருப்பதாக சொன்னான். சரி போனில் பிடிக்கலாம் என்றால் அதுவும் உபயோகத்தில் இல்லைனு சொல்ல கடுங்கோபத்துடன் வீட்டிற்கு வந்தபோது நல்ல விஷயமாக தர்மலிங்கம் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கண்ணன் போனில் தெரிவித்தான். காலையில் இருந்து ஒரே அலைச்சலில் உடம்பு அசதியாக இருந்ததால் அதை மறைத்து கால் வலி என்று சொல்லி வைத்தாள்.
ஆனால் மனம் ஆறவே இல்லை. பெங்களூர் போயிருக்ககூடுமோ என்ற சந்தேகம் எழ வசந்தியை தொடர்பு கொண்டு பேசினாள்.
தர்மலிங்கத்திற்கு உடல்நலம் சரியின்றி போனதும் தற்போது நலமாக இருப்பதையும் தெரிவித்துவிட்டு, அப்படியே சத்யபாரதிக்கு மாப்பிள்ளை ஏதும் பார்த்தாளா? ஊருக்கு வந்து போகிறாளா இல்லையா என்று விசாரித்ததில் அவள் சென்னைக்கு சென்றது முதல் ஒரு முறை கூட வரவில்லை என்றாள் வசந்தி.
ஆக, அங்கே போகவில்லை. வேறு எங்கே சென்றிருக்ககூடும். அந்த வேலைக்காரியும் கூடப் போயிருக்கிறாளாமே? எங்கேயோ போய் ஒழிந்தால் அவளுக்கும் நல்லதுதான்.
அன்று காலையில்
கிருஷ்ணா அவளை காண வந்தபோது அவனது முகத்தில் என்றுமில்லாத ஒரு மாற்றம் காணப்பட்டது. அது என்னவென்று மனதில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.
இருக்கட்டும் இந்த மனுஷன் வீட்டிற்கு வந்த்ததும் முதல் வேலையாக வசந்தியிடம் கல்யாண பேச்சை தொடங்கி குறைந்த பட்சமாக ஒரு பரிசமாவது போட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் தினம் தினம் இந்த அவஸ்தை பட்டுக்கொண்டிருக்க முடியாது என்று ஒரு முடிவை எடுத்தபிறகே சற்று மனம் அமைதியாயிற்று.
☆☆☆
மதிய சமையலை முடித்து விட்டு வரவேற்பறையில் இருந்த நூல்களில் ஒரு கதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு ரூபா படிக்க போவதாக அறைக்கு சென்றுவிட..
சத்யபாரதி சமையலறையின் பின்புறம் இருந்த தோட்டத்திற்கு சென்றாள். பலவகையான பழமரங்கள் அந்த இடத்தை குளுமை ஆக்கிக் கொண்டிருந்தது. மழை வரும்போல மேகம் இருட்டிக் கொண்டு வந்தது. பழமரங்களின் நடுவே நடந்தாள். மரங்கள் முடியும் இடத்தில் மதில்சுவரோடு பின்பக்க கதவு இருந்தது. .மரங்கள் ஊடாக ஓர் இடத்தில் அமர்வதற்கு கல்பெஞ்சு போடப்பட்டிருப்பதை பார்த்ததும் அதில் போய் அமர்ந்தாள். இதேபோல் வசந்தியின் வீட்டிலும் இருந்தது நினைவுக்கு வந்தது. அவளுக்கு அண்ணன் வீட்டில் பிடித்த இடம் அதுதான். பறவைகளின் ஒலிகளும் பழங்களின் மணமுமாக மனதை மயக்கும். சாய்ந்து அமர்ந்தவளுக்கு பெற்றோரின் நினைவில் கண்கள் கலங்கிற்று. அவர்கள் மட்டும் இருந்திருந்தால் மேலே சிந்திக்க முடியாமல் சிந்திய கண்ணீரை துடைத்தது ஒரு கைக்குட்டை. திடுக்கிட்டு திரும்பியவள், கிருஷ்ணா நிற்பதை காணவும் எழமுயல, அவளின் கரம் பற்றி அமரச் செய்தான் அவன்.
"யாரேனும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்" என்று முணுமுணுத்தாள்.
"மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு இருந்தால் நாம் வாழமுடியாது பாரதி. தவிர இங்கே யாரும் வரப் போவதில்லை. ரூபா காவலுக்கு இருக்கிறாளே, தாழ்ந்த குரலில் சொல்லி சிரிக்க, சத்யபாரதிக்கு குழப்பமாக இருந்தது.
கல்யாணம் செய்யப்போகிறவளை விட்டுவிட்டு தன்னிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? ?
"வந்து என்னிடம் என்னவோ பேசணும் சொன்னீங்களே ? என்ன விஷயம்? என்று அவனது அருகாமை தந்த தவிப்பை மறைக்க முயன்றவாறு கேட்டாள்.
"அதென்ன தேவைப்படும் போது மட்டும் கண்ணன் வருகிறது. இப்ப ஏன் வாயில் வரமாட்டேங்குது?" என்று அவன் கேட்க, சத்யா
உதட்டை கடித்தபடி மௌனமாக தலை கவிழ்ந்து இருந்தாள்.
"இனிமேல் கூப்பிட்டு தானே ஆக வேண்டும் என்று புதிர் போட்டுவிட்டு, " கண்ணன் என்று அறிந்த பிறகு ஏன் என்னை தேடி நீ வரவில்லை. உனக்கு விளக்கம் தருவதற்கு காத்திருப்பதாக எழுதியிருந்தேனே? ஏன் பாரதி? என்னை நீ மனதார நண்பனாக ஏற்கவில்லையா? கண்ணன் என்று எப்போது தெரிந்தது ? சொல்"
"என்னை கடலில் இருந்து காப்பாற்றிய அன்றைக்கு"
"ஓ! அதற்காகத்தான் ஊரைவிட்டு ஓடும் திட்டமா?? ம்ம்.. நான் அப்படித்தான் இருக்கும் என்று யூகித்தேன், "என்றவனின் குரலில் என்ன இருந்தது வருத்தமா ஏமாற்றமா தெரியவில்லை.
" அது மட்டுமில்லையே...
என்ற பிறகே அவள் அதை வாய்விட்டுச் சொன்னது புரிய சட்டென்று உதட்டை கடித்து பேச்சை நிறுத்தினாள்.
"வேறு என்ன?" என்றான் உணர்ச்சியற்ற குரலில்
"ஒன்றுமில்லை கண்ணன் " என்றாள் அவசரமாக.
கிருஷ்ணாவின் உதட்டில் கீற்றாய் ஒரு கசந்த புன்னகை நெளிந்து மறைய,
"நான் கண்ணன் என்றதும் ஏன் ஊரைவிட்டு போகவேண்டும்? என் மீது உனக்கு அப்படி என்ன கோபம்? அதை முதலில் சொல் பாரதி. அடுத்த காரணத்தை பிறகு கேட்கிறேன்"
"அது கோபம் ஒன்றும் இல்லை. ப்ளீஸ் அதை மட்டும் கேட்காதீங்க கண்ணன். வே. ..வேண்டாம் கண்ணன். தயவுசெய்து என்னை போகவிடுங்கள்".
பொறுமை இழந்த ஒரு வேகமூச்சுடன், அவளது தோள்களை பற்றி எழுப்பி, "ஏய்.. கீறல் விழுந்த ரிக்கார்டு போல போறேன் போறேன்னு சொல்லிட்டு என்று அதட்ட, அவள் ஓர் எட்டு எடுத்து வைக்கவும்.... தொடர்ந்து, "சரி போ, அதுக்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் விஷத்தை கொடுத்துவிட்டு போ" ஆத்திரமாய் சொல்லி முடிக்குமுன், "ஐயோ கண்ணன்"என்று அவசரமாய் அவனது வாயை பொத்தியவளின் கண்களில் அருவியாய் கண்ணீர் வழிய, அதை காணப் பொறுக்காமல் சட்டென்று அவளை இழுத்து இறுக அணைத்தான். அவன் மார்பிலேயே புதைந்து விடுவாள் போல முகத்தை அழுத்திக் கொண்டவளுக்கு அதுவரை இருந்த கலக்கமெல்லாம் நீங்கி மனதில் ஒருவித அமைதி குடிகொள்வதை உணர்ந்தாள் சத்யபாரதி.
முதலில் சுதாரித்து கொண்ட கிருஷ்ணா கையணைப்பை சற்று தளர்த்தி,"இவ்வளவு அன்பை வைத்துக்கொண்டு என்னை விட்டுப் போக உனக்கு எப்படி மனசு வந்தது பாரதி??" என்றவனின் குரல் கரகரத்தது.
சத்யபாரதிக்கு சட்டென்று காரணம் நினைவுக்கு வர, விலக முற்பட்டாள். "இன்னமும் என் மனம் புரியவில்லையா பாரதி?" என்றதும் விழிகளில் வியப்பும் கலக்கமுமாக அவனை ஏறிட்டாள்.
"என்னம்மா? எதுவென்றாலும் என்னிடம் மறைக்காமல் சொல்லு ரதிம்மா" என்று கனிவாக கேட்டு அவளது தலை கோதிட..
சத்யபாரதிக்கு தான் காண்பது கனவா நினைவா என்று புரியாத நிலை. ஆனால் கிருஷ்ணாவின் கையணைப்பும் மென்குரலும் மெய் என்றது.
ஆனால் அவனது கேள்விகளுக்கான பதில்களை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் தவித்தாள் அந்த பேதை...