• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

24. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
கை கடிகாகத்தையும் வாசல் கதவையும் பார்த்தவாறு இருந்தவள்,


'ரெண்டு நாள் தானே வெளியூரில வேலை என்டான்... பத்துமணிய தாண்டீட்டுது... இன்னமும் காணேல...

ஒருவேளை வர்ற வழியில ஏதாவது நடந்திருக்குமோ!

ச்சே.... ச்சே... அப்படி ஏன் நினைப்பான்...? நல்லதைய நினைப்பம்... ஆனா ஏன் இவ்வளவு நேரம் ஆகுது...? சரி அவன் வந்தா என்ன? வராட்டிக்கு எனக்கென்ன? உதட்டை பிதுக்கிக் கொண்டவள், மனமோ அவனை காணாதே இருதலை கொள்ளியானது.



அவள் நிவைுகளுக்கு சொந்த காரனோ, காலையிலேயே அவள் முன் சென்று, அவளை கண்களாலே களவாட வேண்டும் என்பதற்காகவே வேலை களைப்பை கூட பொருட்படுத்தாது, இரவோடு இரவாக வந்து சேர்ந்தவன்,

அன்னை சொன்ன வார்த்தையினை கேட்டதும், இத்தனை நாள் தொலைத்த உறக்கத்தை இன்றோடு தீர்த்து விடவேண்டுமென நினைத்தவன் போல், தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

தலையணையின் அருகில் இருந்த அவனது செல்போனானது பல முறை அடித்து, அதுவும் உறங்க போக, மீண்டும் வந்த சத்தத்தில்.

"இப்ப தான் வந்து படுத்தன். அதுக்குள்ள யாரு?" புலப்பலுடன், தடவி எடுத்து காதில் வைத்தவன்,

"ஹலோ..." என்றான் சினந்தவனாய்.


"டேய் மச்சான்.... எங்கடா நிற்கிற? வந்திட்டியா?" என்ற குரலில் யாரென்பதை உணர்ந்தவன்,

"நினைச்சன்... நீயாத்தான் என்டு. உனக்குத்தான் நான் நின்மதியா நித்திரை கொண்டா பொறுக்காதே!"


"ஓ..... வந்திட்டியா? வந்திட்டன் என்டு போன் போட்டு சொன்ன செத்தா போயிடுவ!" இம்முறை கோபம் கொண்டது ரவி தான்.


இப்பதான்ட வந்தன். எதுக்கு நாலு மணி அதுவுமா உன்னை எழுப்புவான் என்டு விட்டுட்டன். சாமத்தில நீ கூப்பிட்டுட்டு என்ன திட்டுறியா?

"அது சரி! நீ தான்டா உண்மையான முதலாளி. எந்த கவலையும் இல்லாம தூங்குற பாரு.... எனக்கும் இருக்காரே அப்பா.....

அசதியா இருக்கு பத்து நிமிசம் படுத்துக்கலாம் என்டே கண் அயந்தா காணும்... உடனம் போன் பண்ணி செத்துப்போன தலைமுறை எல்லாம் தோண்டி எடுத்து, காலங்காத்தால சிறப்பா கும்பாபிஷேகம் செய்துடுவார்." என்றான் சோகமாய்.


"எதுக்கு காலங்காத்தால போனை போட்டு புலம்புற? படுக்க போறன் வை!"


"என்னது! காலங்காத்தாலையா? ஐயா ராசா....... இப்போ மணி பதினொன்டரைடா"


"என்னடா சொல்லுற?
ஆஆ....... உன்ர பொண்டாட்டிக்கு மாப்பிள்ளை பாக்கினமாம்... விடிஞ்சது கூட தெரியாம நித்திரை!" என்று அவன் வைத்து விட.

"இவ்ளோ நேரமா...?" என்று அறக்க பறக்க எழுந்தவன்,

'என் டார்லிங்க் என்னை காணேல என்டு, வாசலையே பாத்துட் இருக்க போறாளே!' என்று அவசரமாக தயாரானான்.

மதியம் பன்னிரண்டை நெருங்கவும், வேகமாக கதவை தள்ளிக்கொண்டு வந்தவனை கண்டவள், தொலைந்த பொருள் கையில் வந்ததை போல், பெரும் மூச்சொன்றை விட்டு, நிம்மதியாக வேலையில் கவனம் செலுத்தினாள்.

கதவு திறந்ததில் இருந்து, அவளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தவன், இருக்கையில் அமர்ந்து, நாடிக்கு கை கொடுத்து, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வேலை செய்து கொண்டிருந்தவளுக்கு, ஏதோ குடைவது போல் இருக்க, அவன் புறம் திரும்பியவள், அவனது பார்வையின் வீச்சில், சில நிமிடங்கள் தான் தன்னை தொலைத்தாள்.

சட்டென மனதை அடக்கி, அவன் பார்வையை தவிர்த்து, கோப்பை பார்ப்பதை போல் பாவனை செய்தான்.

தன் பார்வையில் தடுமாறியவளை ரசித்தவன்.

சாதாரணமாக பேச்சை கொடுத்தான்.


"ரெண்டு நாளும் நல்லா போச்சா டார்லிங்க்?"

காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை அவள்.

"ஓனர் கேக்குறன்.. எந்த மரியாதைமும் இல்ல..?" அவனுக்கே உரிய பேச்சுடன் வினவினான்.


"மற்றவேட்ட கேட்கின்ற மாதிரி கேட்டா சொல்லலாம்... இதென்ன டார்லிங்க்? அது என்ர பெயர் இல்ல...?" என்றாள்.


"பரவாயில்ல.... ரெண்டு நாள்ல பழைய படி கதைக்கிற... ரெண்டு நாளா ஏங்கியிருந்தனா .. அதான் வாயில தானா வந்திட்டுது...
பாரு ரெண்டே நாள் தான், எவ்வளவு மெலிஞ்சிட்டன்." என்று கையிரண்டையும் இரண்டையும் உயர்த்தி தன் உடலை காட்டினான்.


அப்படி எதுவும் தெரியாமல் போகுவே.

"அப்பிடியா...? எனக்கு தெரியேல நல்லா தானே இருக்கிறீங்கள்...?" என்றவள் பேதிலில்,


"அப்பிடியா டார்லிங்க்..? அப்ப முதலே என்னை நல்லா கவனிச்சிருக்கிற" என்றவாறு எழுந்து அவள் அருகில் வந்தவன்,

"நான் அப்படியே தான் இருக்கிறன்.. ஆனால் பாவம்....! நீ தான் என்னை காணாம, ஏங்கியே மெலிஞ்சிட்ட.." என்றான்.

அவன் அருகாமயில் தடுமாறினாலும்,
"நா... நா..நான் ஏன் ஏங்கோணும்... எனக்கொன்டுமில்ல..." என்றாள் அவளும் விடாது.


"அப்படியா...? நம்பமாட்டேன்." புருவங்கள் விரிந்தது.

"நீங்க நம்பாததற்கு நான் ஒன்டும் பண்ணேலாது. ஆனா உண்மை அது தான்."


"நீ சொல்லுறது சரி என்டே வைப்பம்...
நீ என்னை நினைக்கல.. ஏங்கேல என்டா, சின்னதா ஒரு கேம்.....

நான் என்ன செய்தாலும்.... அதுக்கு ரிஜாக்ட் பண்ணக்கூடாது. அதில நீ வென்டுட்டா, நீ சொல்லுறது உண்மை என்டு நம்புறேன்."

யோசிக்கவில்லை அவள். இவனை நம்ப வைத்தால் போதும் என்று தோன்ற,

"ஓகே..." என்றாள் தோள்களை குளுக்கி.

இன்னும் அவன் அவளை நெருங்க, சட்டென எழுந்து விலக நினைத்தவளை நெருங்கிவிட்டான் அவன்.

அவள் இடையை தன் இரு கைகளாலும் வளைத்து, அருகில் இழுத்தான்.

அவன் செய்கையில் வெகுண்டவள், அவனிடம் இருந்து விடுபட, முடிந்த அளவு அவன் கைசிறையினை தளர்த்த போராடியதை உணர்ந்தவனோ,


"என்ன...! துஷா கேம் மறந்து போச்சா?" புருவம் உயர்த்தி எளளலாக வினவியவன்,
"என்ன செய்தாலும் அமைதியா இருக்கோணும். அப்போது தான் நான் நம்புவேன்" என்றான்.

"இது என்ன விளையாட்டா...? விடுங்க முதல்ல" நெளிந்தாள்.

"அப்ப உனக்கு பயம்.... எங்க என்ர அருகாமையில நீ சொன்னது பொய் என்டு, தெரிஞ்சிடுமோ என்டு" சவால் விடுத்தான்.


அவன் விழிகளை நிமிர்ந்து நோக்கியவள்,
"இப்பிடி நின்டா மட்டும் நம்பிடுவீங்களா?"

"கண்டிப்பா... ஆனா நீ என்ர நெருக்கத்தில தடுமாறக்கூடாது" என்றான்.

அவளும் தான் எதுவும் இல்லையே! எதற்கு தயக்கம்? ம்ம் என்றாள்.

ஒரு கையால் அவளை இடையை இறுக பற்றியவன், மற்றைய கையை அவள் முகத்திற்கு நேரே கொண்டு வந்து, கண்களை சுற்றி கோளம் போட்டவன்,


"ஏன்டி பொய் சொல்லுற? பாரு இந்த கண் என்னை காணாம, உறக்கத்தை தொலைச்சிருக்கு. அதுக்கு அடையாளமா... கரு வளையம் விழுந்திருக்கு பார்.." என்று கிறக்கமாக பேசியவன்,


அவள் உதடுகளுக்கு விரல்களை இறக்கியவன், அதை பிடித்திழுத்து,

"இதுக்கே பொய் மட்டும் தான் சொல்ல தெரியுமா?" என்று பார்வையை அதிலிருந்து விடுத்து, அவள் விழிகளை பார்த்தவன் விழிகளையே பார்த்திருந்தவளுக்கு, அவன் பார்வையை எதிர் கொண்டதும், என்னவோ போலானது.

அவனது நெருக்கத்திலும், தொடுதலிலும் இதயமோ தாறுமாறாக துடித்தது. விட்டால் வாய் வழியே வந்து விழுந்தாலும் அதிசயப்பதற்கில்லை.

எங்கு அவன் செய்கையை நிராகரித்தால், தன்னை பொய்க்காறி ஆக்கிவிடுவானோ என்ற பயத்தில், வைத்த கண் வாங்காமல் அவன் விழிகையே பார்த்திருந்தாள்.


அவள் விழிகளில் தன்னை தொழைத்தவன், பற்றியிருந்த இதழினை தன் இதழ்கொண்டு மூடியவன், அந்த இதழ்களின் மென்மையில் தன்வசம் இழக்கத்தொடங்கினான்.

அவன் செயலில் திகைத்தவள், அவனிடம் இருந்து தன்னை விடுவித்து கொள்ள, அவன் நெஞ்சின் மேல் இரு கைகளாலும் ஊன்றி தள்ளினாள்.


எங்கு அவன் சிறுதளவு கூட நகர்ந்தால் தானே! அவன் மற்றை கரம் அவள் இடையை பலமாக அல்லவா பற்றி இருந்தது.

தொடங்கிய வித்தை முடிக்காமல் விடமாட்டேன் என்பதை போல், அவள் இதழ்களை சுவைத்து கொண்டிருக்க, முதலில் திமிறியவள், பின் அவன் செய்கைக்கு தானுமே ஒத்துழைத்தாள்.

சில நிமிடங்களில் அவளை விடு வித்தவன், வெற்றிப் புன்னகையினை உதிர்த்து,

"இப்ப நம்புறன்டி செல்லம்... இந்த ரெண்டு நாள்ல கொஞ்சம் கூட என்னை நீ நினைக்கேல என்டு" என்றவன், நின்றால் அவள் தன்னை பார்க்க சங்கட படுவாள் என உணர்ந்து,

"எல்லா பகுதியையும் சுத்தி பாத்துட்டு வாறன்" என்று அதே புன்னகை மறையாமல் சொன்னவன் வெளியேறினான்.


வெளியே வந்தவனுக்கோ படு குஷி! கல்லூரி மாணவன் போல பேன்ட் பாக்கரினுள் கைகளை நுழைந்தவாறு விசில் அடித்தபடி, புது தோறதையுடன் நடந்து செல்லும் ரதனை பார்த்த, அத்தனை தொழிலாளியற்கும் ஆச்சரியம் தாளவில்லை.

அவன் சுயத்துக்கு வந்தவளுக்கு, அப்போது தான் புரிந்தது.

'ச்சே.. என்ன காரியம் பண்ணிட்டன்? அவன் என்னதான் முரண்டு புடித்தாலும் தள்ளி விட்டிருக்கோணும்.. எப்பிடி நீயும் இசைந்து போகலாம்....?' தன்னை தானே திட்டியவள்

அவன் பற்றிய இடம் இன்னமும் குறுகுறுக்க, அந்த இடத்தை தன் கரம்கொண்டு தேய்த்தாள்.

வேணும் என்டுதான் சவாலே விட்டிருக்கிறான்.. நான் தான் புரியாம...." என்று புலம்பியவள்~

அவன் மீண்டும் வருவதற்க்குள் சரியாக வேண்டும், இல்லை என்றால் அதற்கும் கேலி செய்வான். என நினைத்து, இரளக்கையிர் அமர்ந்தவள் பைலில் கவனத்தை செலுத்தினாள்.

அரைமணி நேரம் கழித்து வந்தவன், துஷாவையே பார்த்தபடி அமர. தன்னைத்தான் பக்கிறான் என்று தெரிந்ததால், அவன் பார்வையை தவிர்த்தாள்.

சிறிது நேரத்தில் கதவு தட்டு சத்தம் கேட்டது.

"யாரு...? வரலாம்..." என்றான். ரதன் குரல் கொடுக்க. உள்ளே வந்தான் தீபன்.


"துஷாவ பார்க்க, யாரோ வந்திருக்கினம்" என்றதும், ம யாரென யோசித்தவள்

"எனக்கு இங்க யாரையும் தெரியாது." என்றாள் ரதனம்.


"அது யாரென்டு விசாரிச்சீங்களா தீபன்? "


"பேரு வாசன் என்டு மட்டும் சொன்னார்.." என்றவும், ஒன்றை புரிவம் உயர்த்தி துஷாவை பார்த்தான்.


வாசன் பேரை கேட்டதுமே,

"ஆ.... அவர தெரியும்" என்றாள் அவசரமாய்.


"அப்ப இங்கயே கூப்பிட சொல்லவா?"

'இங்கவா? வந்தா என்னை பற்றி இவனுக்கும் தெரிஞ்சிடுமே!' அவசரமாய் எண்ணிக்கொண்டவள்,


"இல்ல.. நானே வெளிய போறன்.. கொஞ்ச நேரத்துக்கு, வெளிய போட்டு வரவா?" என்றாள்.


"தீபன்....! நீங்கள் போங்கோ... நான் அனுப்புறன்..." என்றவன், துஷாவிடம்,

"இன்டைக்கு என்னல்லாம் நீ தந்த... இதை தரமாட்டேனா?" என்றவன் விழிகளோ அவள் உதட்டிலம நிலைத்திருக்க, அந்த பார்வையே சொன்னது அவன் எதை கூறுகிறான் என்று.

நின்றால் பிரச்சினை என எண்ணியவள், ஓடாத குறையாக ஓடி மறைந்தாள்.

'செல்லம்.... எவ்வளவு தூரம் என்னை விட்டு உன்னால ஓட ஏலும்...? எங்க போனாலும் பின்னாலயே வருவன்.' என்று சொல்லிக்கொண்டவன், போகும் அவளையே கண்ணாடி வழியாக பார்த்தான்.

"அங்கிள்..... வெளியே போய் பேசலாம்" என்று ஒரு கூல்பார் கடையில் நுழைந்தனர்.

அங்கு சென்றமர்ந்தவர்கள், இரண்டு ஐஸ்கிறீமை ஓடர் கொடுத்து விட்டு,


"சொல்லுங்கோ அங்கிள்...!" என்றாள்.

"அது துஷிம்மா....! உன்னால வெள்ளிக்கிழமைக்கு லீவ் எடுக்க ஏலுமாடா?"

"ஏன் அங்கிள்?"

"இல்லம்மா.. உன்னை தேவின்ர மகள் என்டு சொல்லி, அங்க கொண்டு போய் விடேலாது. அது உனக்கும் நல்லதில்ல....


என்ர சொந்தக்காரங்களின்ர மகள் என்டு தான் உன்னை அறிமுக படுத்தோணும். அதுவும் எதார்த்தமா சந்திச்சு, அவேட்ட உன்னை ஒப்படைக்கிறமாதிரி இருக்கோணும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முருகன் கோவிலுக்கு உன்ர பாட்டி வருவா... அப்ப அவங்களை சந்திச்சா காணும்... அங்கிள் உன்னை அவட்ட சேத்துடுவன்..." என்றார்.



"அப்ப சரியங்கிள்... ரெண்டு நாள் தானே இருக்கு... வந்திடலாம்..." என்றவள்.

"எங்க நான் உங்களை சந்திக்கிறது? கோவில்லயேவோ?"

"அங்கிளே வந்து உன்னை கூட்டிட்டு போறன்.." என்றவர் அங்கிருந்து விடை பெற்றார்.








மனதின் சுமை குறைந்தாற் போல் தோன்ற, அதே உணர்வோடு பணியிடம் நுழைந்தவளை,

"என்ன துஷா...! சந்திச்சாச.? உனக்கு தான் யாருமே இல்லை என்டியே! இது யாரு புதுசா?" என்று தெரியாதவனை போல வினவினான்.


"அது.... ஊரில பக்கத்து வீட்டில இருந்தவர்.... இங்க வந்திருக்கேக்க சந்திச்சம்"

"ம்ம்...." உதட்டை பிதுக்கியவன், பக்கத்து வீட்டு காறங்களோட எல்லாம், தனியா சந்திச்சு பேச்சு வார்த்தை... அவ்வளவு முக்கியமானவராே?"


"அவேன்ர வீட்டில சின்ன விஷேசமாம்... எனக்கும் ஒரு வாரம் லீவு வேணும்.. தர ஏலுமா?"


"என்னது! ஒரு வாரமா? அவ்வளவு நாள் எல்லாம் என்னால இருக்க ஏலாது.
கொண்டாட்டம் அன்டைக்கு மட்டும் போட்டு வா!" என்றான்.


"லூசா இவன்? விசர் போல கதைச்சுக் கொண்டு" மனதில் தான் அர்சனை.

"ப்ளீஸ் சார்... நல்லா வேண்டப் பட்டவ.... கட்டாயம் போகோணும்... கடைசி மூன்டு நாளாவது தாங்கோ சார்." கெஞ்சலில் இறங்கினாள்.


"சரி... மூன்டு நாளுக்கு ஒரு நாள் கூடக்கூடாது." என்றவன் உத்தரவு வழங்கவும்,


"அப்பாடா...!" என்ற திருப்தியோடு இருக்கையில் அமர்ந்தாள்.
 

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
104
44
28
Trichy
மீ ஃபர்ஸ்ட்
எம்மா ரைட்டரே ஒருவழியா வந்தீங்களே, கதை ஞாபகம் இருக்கா
1680337110598.png
 

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
மீ ஃபர்ஸ்ட்
எம்மா ரைட்டரே ஒருவழியா வந்தீங்களே, கதை ஞாபகம் இருக்கா
View attachment 959
சாரி டியர்... ரொம்ப உடம்பு முடியல. இனிமே தினமும் வந்திடுறேன்
 
  • Love
Reactions: Vimala

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
104
44
28
Trichy
ஸுப்பர்... ஹெல்த் பார்த்துகோங்கமா அப்பப்ப கதையையும் கண்ணுல காட்டுங்க
வீ ஆர் ஹேப்பி
 
  • Love
Reactions: Balatharsha

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
Hai dharsh..
eppadi irukkeenka, health ok vaa..
eppadiyo marupadiyum vantheenkale santhosham.in gap vidama kodunkamma
romba mis pannom
 
  • Love
Reactions: Balatharsha

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
Hai dharsh..
eppadi irukkeenka, health ok vaa..
eppadiyo marupadiyum vantheenkale santhosham.in gap vidama kodunkamma
romba mis pannom
கண்டிப்பா இனிமே தினமும் வரேன் நன்றி சிஸ்