• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

25+ காதல் அதிகாரம்

Saranya writes

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
24
12
3
Virudhunagar
காதல் அதிகாரம்...!!
.....
காதல்....காதல்....காதல்....
அந்த மூன்றெழுத்தில் தானே....
இப்பிரபஞ்சம் கட்டுண்டு கிடக்கிறது...!
நான் மட்டும் அதில் விதிவிலக்கா....?
கால நேரம் பார்ப்பதில்லை....
வயதும் தோற்றமும் துச்சமாகிறது...
சூழ்நிலைகள் வெறுப்பை உமிழ,
உன் ப்ரியம் மட்டுமே மனதிற்குள்
மோடம் போட்டு இருக்கும் மேகத்தை..
தூரலுக்கு அழைக்கிறது..!!

வருடங்களை கடந்தும்....
உன் காதல் அப்படியே எனக்குள்
படிகமாகி கிடக்கிறது...!
அது உன்னுடன் தனிமையில் பேசி
சிரிக்கும் கணங்களில்...
வைரமாய் புதுவடிவம் பெறுகிறது...!!

நான் கழித்தொழிந்த என்
காலங்களை மீட்டியெடுத்து....
அதில் உன்னினைவு சுரங்களை
அழுந்த பதியவிட்டு....
மீண்டும் வாழா நேரத்தை உன்னுடன்
இசைமீட்டிட மனம் ஆசைபெறுகிறது...!!

என்ன நடந்தாலும்...
யார் என்ன சொன்னாலும்....
உன் புரிதலிலும்....
என் ப்ரியத்திலும் தானே...
இந்த காதலை மீண்டும் ஒருமுறை
உயிர்ப்பித்து பார்த்திட மனம் விருப்பம்கொள்கிறது....!!
என்னவளை பிரிந்த நானும்....
உன்னவனை பிரிந்த நீயும்....
காதலில் தானே மீண்டும்
இணைந்திட ஆசைகொண்டோம்...!!
அதற்கு சமூகம் மட்டுமின்றி
சார்ந்தோரும் மாற்றுப்பெயர் வைப்பதேனோ??
எனக்கிருக்கும் ஆசையெல்லாம்
ஒன்றே ஒன்று தான்...!
கடைசியாய் உன் ஒருகைப்பிடி சோறில்...
என் வயிறு நிறைந்து....
கழிந்தொழிந்த 25 வருடங்களை
உன்னிடம் மனதார சொல்லி....
உனக்கு மிக அருகில் அமர்ந்து
நான் எழுதிய எழுத்துகளுக்கு....
நீ உயிர்கொடுக்கும் ஸ்வரங்களை ரசித்து,
உன்னையும் ஆழமாய் யாசித்து,
இறுதியாய் நீ கொடுக்கும்
ஒரு படி தண்ணீரிலே....
இப்பிரபஞ்ச வாழ்வுக்கு விடைகொடுக்க
துடிக்கிறேன்...!!

நான் இறந்த பின்னும்...
உன் காதல் உனக்குள்ளே கிடக்கட்டும்...!
நானோ..எழுத்துகளில் கொண்டு
வந்து என்னாசைகளை தீர்த்துக் கொண்டேன்....
நீயோ,என்னையே நினைத்து அல்லவா
தீர்த்துக்கொண்டிருக்கிறாய்...!
என் காதலை அறிந்தது உலகம்....
எழுத்துகளில்...!
ஆனால்,உன் காதலை??
கொட்டும் மழையில்....
வாழ்க்கை வெறுத்து....
பூவுலகம் வெறுப்பை உமிழ
யாரும் அறியா வனாந்திரத்தில்
மிக சத்தமாக நீ கேவியழும்
அந்த கதறல்களில் ...
மின்னியது
வானம் மட்டுமல்ல....
என் ஆன்மாவும் தான்...!!
காதலின் அந்தரங்கம் புனிதமானது.
- எல்லா புகழும் இறைவனுக்கே!
 
  • Like
Reactions: Joss uby