• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

25. காற்றோடு கலந்த விதையவள்

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
ரதனுக்கா தெரியாது? என்ன காரணத்துக்காக துஷா லீவு கேட்கிறாள் என்று.

இவள் எவ்வளவு தூரம் தன்னிடம் எல்லாம் மறைப்பாள் என்று பார்க்கலாம்? என நினைத்தே, அவள் நடவடிக்கைகளையும், பொய்யையும் கண்டும் காணாதவாறு இருந்து விட்டான்.

பாவம் துஷாவுக்கு தெரிய வாய்பில்லை. இவனையும் இவன் காதலை தான் நிராகரிப்பதால், ஒரு நாள் அவன் காதலை உணர்ந்து,அவனுக்காக ஏங்கி அழப்போகும் நாள் மிக அருகில் நெருங்கிக் கொண்டிருப்பதை.

இரண்டு நாட்கள் அவனது, சீண்டல்கள், கொஞ்சல்கள் என கழித்தவள்,

மூன்றாம் நாள் வாசனை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

சொன்னது போல் வந்து அழைத்து சென்றவர், முருகன் கோவிலுக்கே அழைத்து சென்றான்.


அங்கு காந்தியை சுற்ற முற்றம் நேடியவர்,

"இன்னும் உன்ர பாட்டி வரேல போல"

"நிச்சயமா வருவா தானே அங்கிள்.!" என்றாள் ஏக்கமாக.

நிச்சயமா வருவாடா.....! வெள்ளிக்கிழமை ஆனா, இந்த முருகனை பாக்காம, பாட்டிக்கு விடியலே இல்ல.

எனக்கு புரியுது துஷி! உன்ர ஏக்கம்.... எல்லார்ட பாசமும் அன்பும் நிச்சயம் உனக்கு கிடைக்கும்டா....

அடிப்படையான உன்ர நல்ல குணமே, நீ யாரென்டு தெரிஞ்சாலும், அவயலால உன்னை விட்டு குடுக்க ஏலாது. யோசிக்காமாக, எல்லாம் நல்லதா நடக்கோணும் என்டு சாமிய கும்புடு!

அதுக்குள்ள எனக்கு தெரிஞ்சவர் பக்கத்து கடையில நிக்கிறத கண்டன், கதைச்சிட்டு வாறன்" என்று சென்றுவிட்டார்.

ஒவ்வொரு சன்னிதானாமாக வணங்கியவள், குருக்களிடம்

"சாமி பெயரில் அர்ச்சனையும் செய்து, அவர் தந்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு, அருகில் இருந்த தூணோடு அமர்ந்து கொண்டாள்.


வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது.

அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் துஷா.

நெய் தீபம் ஏற்றி கண்மூடி பிரார்த்தித்த ஒரு பெண், அடிமேல் அடிவைத்து, பரிகாரத்தை சுற்றிவர, கையில் இருந்த நெய் தீபத்தின் நெய் நிறைந்திருந்ததால், அது தளும்பி கீழே சிந்தியது.

அதை அவள் பெரிது படுத்தாமல் தன் நேர்தியை தொடர்ந்தாள்.

சிறிது நேரத்தில் வயதான பெண்மணி, அதை கவனிக்காது, அதில் காலை வைக்க போவதை கண்டு, ஓடி சென்று தடுப்பதற்கு முன்னர், அவர் அதில் காலை வைத்து விட்டார்.

நெய் சாெல்லவா வேண்டும்? கால் வழுக்கி கொண்டு போக, அவர் தரையில் விழுவதற்கு முன்னர் தாங்கி பிடித்து விட்டாள்.

அரை அழைத்து வந்து, ஓரமாக அமர்த்தியவள்,

"பாத்து வந்திருக்கலாமே பாட்டி! வயசு போன நேரத்தில, விழுந்திருந்தா என்னாயிருக்கும்?" அக்கறையாக வினவியவள்,

நேர்தி கடன் செய்யிறவ, இதுகள கவனிக்கிறதே இல்ல பாட்டி!

அதோ போறா பாருங்கோ, அவா தான் பாட்டி... நெய் சிந்துறத கூட கவனிக்காம போறது. ஒரு தட்ட கொண்டு வந்து, அதுக்கு மேல வைச்சுக்கொண்டு போனா, யாருக்கும் பாதிப்பில்ல" என்றார் அக்கறை கொண்டவளாய்.

யாரென்றே தெரியாதவள், தன்னிடம் உரிமை எடுத்து பேசவும், அவளை அவருக்கு பிடித்துப் போனது.

"இதெல்லாம் அவயவயல் தான் யோசிச்சு செய்யோணும்... எல்லாரையும் திருத்த எங்களால முடியுமே" என்றவரிடம்.

"முடியுமே... சின்னதா ஒரு பலகை வைச்சா முடியும்..." என்றாள்.

"புரட்சி பொண்ணா இருப்ப போலயே!" என அவள் கன்னம் கிள்ளி சிரித்தவர்,

"தனியவா வந்திருக்க?" என்றார்.


"இல்ல... அங்கிளும் சேந்து வந்தார்... கடையில தெரிஞ்சவ யாரோ நிக்கினம் என்டு போட்டார்."

"அது சரி! உன்னை இங்க நான் பாத்ததே இல்லையே!"


"ம்ம்... ஊருக்கு நான் புதுசு. அங்கிள்தான் கூட்டிக்காெண்டு வந்தார்"

"ஒரே அங்கிள் புராணமா இருக்கு... இப்ப அவரோடயா இருக்கிற? அப்பா அம்மா எங்க போட்டினம்?
படிக்கிறியா? இல்லை என்னடா வேலை செய்யிறியா?"


வேலை தான் பாட்டி! சூப்பர் மார்க்கெட் ஒன்டில வேலை செய்யிறன்.

முன்னம் அப்பா அம்மா ஊரில இருந்தினம். இப்ப யாரும் இல்ல.." என்றவள் விழிகளில் சிறிதாக கண்ணீர் எட்டிப்பார்த்தது.


அவளையே பார்த்துக் கொண்டிருந்தவர்.
"உன்னை கஷ்டபடுத்தோணு என்டு கேக்கேல... அங்கிள் அங்கிள் என்டு சொன்னதும்... கேட்கோணும் என்டு தோன்டினது. என்று அவரும் கவலை கொள்ள,


"பவாயில்லை பாட்டி! உங்களுக்கு முன்னமே தெரியுமா? என்னை விடுங்கோ.. நீங்கள் தனியேவா வந்தீங்கள்" என்றாள்.


"எனக்கென்னம்மா? வயசுபோனாலும்... இன்னும் தென்பு இருக்கே" என்றவர்,

"பக்கத்தில தான் வீடு! அதால தனியவே வருவன்...
பேத்திமார் இருக்கினம் தான். தாங்களும் வாறம் என்டு சொல்லுவினம்.. பிறகு சாமி நிம்மதியா கும்பிட விடாமல இழுத்துகொண்டு போடுவினம்..

அதால அதுங்களே வாறன் என்டா கூட, நான் கூட்டிக்கொண்டு வர மாட்டேன்" என்றவர் பேச்சில் துஷா சிரிக்கவும், அவளுடன் சேர்ந்து சிரித்தவர்,

"சும்மா தானே இருக்கிற... வாவேன் சுத்தீட்டு வருவம்" என்றதும். அவருடன் அவளும் நடக்கலானாள்.

இவர்கள் இருவரின் பேச்சை தூரத்தில் நின்று பார்த்து கொண்டிருந்த வாசன், ரத்த சொந்தம் என்றாலே இப்படித்தான் போல. இன்னார் என்று தெரியாமல பாசம் வந்திடும் என்று நினைத்துக்காெண்டான்.

ஆம் காந்தி வாசலில் ஏறும் போதே வாசன் கடையில் நின்றே கண்டுவிட்டார். துஷாவிடம் கூறலாம் என்று வருவதற்குள், அவரை அவள் விழவிடாமல் பிடித்ததை கண்டவன், நடப்பதை வேடிக்கை பார்க்கலானான்.

இருவரும் பிரகாரத்தை சுற்றி வரவும், காந்தியை கவனியாதது போல், துஷாவிடம் வந்தவர்,

"எங்கயெல்லாம் உன்னை தேடுறது....?" என கடிந்தவர், எதர்த்தமாய் பார்ப்பது போல் காந்தியிடம் திரும்பினான்.


"அம்மா நீங்களா? நீங்க எப்ப வந்தனீங்கள்?"


"எங்களை எல்லாம் உனக்கு எங்க தெரிய போது...?"

"அப்பிடி எல்லாம் இல்லம்மா..
இவளை நேரத்தோட விடுதியில விடேணும்... அந்த டென்ஷன்ல உங்களை கவனிக்கேல" என்க.

"விடுதியா? ஓ... நீ தான் இவள் சொன்ன அங்கிளா? எதுக்குட அவளை விடுதீல விட்ட?" பெண்களை அப்படி விடுவதில் பெரியவருக்கு உடன்பாடில்லை. அதனால் உண்டான கோபம் அது.

"எனக்கு முன்னமே அறிமுகமாயிட்டிங்களா?" தெரியாதவன் போல் வினவியவன்.

"துஷி நான் சொல்லுவேனே...! என்ன வளத்தவ இவ தான்" என துஷாவுக்கு கண்ணை காட்டியவர்,


"என்னம்மா இப்பிடி கேக்கிறீங்கள். இவள் என்ர சொந்தக்காரரோட மகள். ஊரில இருந்து சொந்தம் என்டு யாரும் இல்லை என்டதும் இங்க வந்திருக்கிறாள்.

என் பொண்டாட்டிய பற்றி தான் தெரியுமே. யரென்றும் பாக்காம முகத்துக்கு நேர வாயில வாறதெல்லாம் சொல்லிடுவாள்.

சின்ன பிள்ளை... அதையெல்லாம் அனுபவிக்கோணுமோ என்டு தான் விடுதியில சேர்த்து விட்டன். என்றார்.


"ஏன்டா உன்ர புத்தி இப்பிடி போகுது. பொண்டாட்டி திட்டுவாள் என்டா என்னட்ட கூட்டி வாறது.

இவளும் என் பேத்தி போலதானே! அங்க இருக்கிற வாலுகளோட இவளும் இருந்திட்டு போறாள். விடுதில போய் பொம்பிள புள்ளைய விட்டிருக்கிற.. நாளைக்கு இவளுக்கு கல்யாணம் என்டா, விடுதில தங்கின பொண்ண யாராவது கட்டுவினமா..?" கோபமாக கேட்க,


"அது..." என்று வாசன் தடுமாற,

"வாசா... மரியாதையா எந்த கதைக்கும் இடமில்லாம... நாளைக்கு என்ர பேத்திய வீட்டில கொண்டாந்து விடுற. என்ர புருஷனிட்ட நான் சொல்லிடுறன். விளங்குதா?" என்றவர்.

"நீ போம்மா... நாளைக்கு இவன் வா என்டா மாட்டன்னு சொல்லமா வாரேணும். அதுவும் உன்ர வீடு போல தான்... யாரும் ஏதன் சொல்லுவினம் என்டு பயப்பிடாத..

இப்ப நீ வெளிக்கிடு! விடுதிக்கு நேரமாகுது என்டான்" என்றவும்

ம் என தலையசைத்தவள் அவர் காலை தொட்டு வணங்க முயற்சிக்க, அவளை தடுத்தவர்,


"சாமி சன்னிதானத்தில மனுஷற்ற கால்ல விழக்கூடாது. சாமிக்கு முன்னாடி எதுவுமே பெருசில்ல. உன் நல்ல மனசுக்கு எப்பவுமே நல்ல இருப்ப.." என்றவர் வாசனிடம்,

"புள்ளைய பத்திரமா கூட்டிக்காண்டு போடா" என்றார்.

"சரிம்மா... நானும் வாறன்" என்றவன், துஷாவை அழைத்துக்கொண்டு கோவிலை தாண்டியதும்.


"என்னங்கிள்... முன்னமே இவா தான் பாட்டி என்டு சொல்ல மாட்டிங்களா?
நான் வேற... அம்மா அப்பா இல்ல என்டு சொல்லிட்டன்... உண்மை தெரிஞ்சா என்ன பாடு படபோறாங்களோ!

எல்லமே நல்லதுக்கு தான் துஷா.
நீ உன்ர வாயால சொன்னதனால தான், அவேன்ர வீட்டில தங்குறத்துக்கு சம்மதிச்சா.


எதையும் யோசிக்காம, ரூமுக்கு போன உடன பெட்டிய கட்டு.. இல்லை என்டா, என்னை அரிஞ்சிடுவா.." என்று அவன் சொன்ன விதத்தில் சிரித்தவாறு வீட்டின் முன் இறங்கினாள்.


வீட்டில் யாருமே இல்லை... பசிவேறு குடலை அரிக்க...விறுவிறுவென தன் உடைகளை மடித்து தன் பெட்டியில் அடுக்கியவள், அதற்குமேல் பொறுக்காமல் வெளியே வந்தாள்.


சிறிய சாப்பாட்டு கடை தான்.. அதுவும் மதிய சாப்பாடு அங்கு போடப்படுவதில்லை. சாதாரண தோசை, இட்லி, வடை போன்றன தான் அங்கு விற்கப்படும்.


அதனுள் நுழைந்து சர்வரை அழைத்தவள்,

"சாப்பிட என்ன இருக்கு?" என்றாள்.

"இங்க பிரியாணியும் கொத்து ரொட்டியுமே இருக்க போகுது.? எல்லாரும் வந்து இதையே கேக்கிறீங்கள். அங்க பாரம்மா உங்களுக்காகதானே போட்டே வைச்சிருக்கிறம்" என்று பின்புறம் காட்டினான்.

"அதை நான் கவனிக்ககேல." என்றவள், காதுக்குள்ளே ரெண்டு ரோல்ஸ்ம் டீயும் என்ற அவள் காதை கிழிப்பது போல் ஓர் ஆண் குரல் அருகே கேட்டது.


'யாரு இந்த கத்து கத்துறது? அந்த அண்ணா என்ன அவ்ளவு தூரத்திலயா நிக்கிறார்.? இருக்கிறதே பத்தடி கடை.. மெல்லமா சொன்னாலே விளங்கிடுமே! பக்கத்து தெருவுக்கு கேட்கிறமாதிரியா சொல்லோணும்?

கொஞ்சமும் டிசுப்பிளின் தெரியாதவன் போல' என குரல் வந்த பக்கம் யாரென ஆராய திரும்பினாள்.


அவள் இருந்த மேசையின் எதிர் இருக்கையிலிருந்து வந்த சத்தம் தான் அது.

'இவன் எங்க இங்க?' என்று குழம்பியவளால் நம்ப முடியவில்லை.




அவளையே தைத கண் வாங்காது பார்த்தவனோ,.

"என்ன செல்லம்... இப்ப தான் லஞ்ச் எடுக்கிறியாே? லேட்டா சாப்பிட்ட உடம்பு என்னத்துக்காகிறது?


எனிமேல் பிந்திச்சாப்பிட்டா, நானே வீடு தேடிவந்து ஊட்டி விட்டிடுவன்." என்று ஒற்றை கண் அடித்து அவன் கூற,


எதுக்கு இங்க வந்து சத்தம் பிரச்சனை பண்றீங்கள்? எல்லாரும் ஒரு மாதிரி பாக்கினம்..


நீங்க தான் இந்த மாதிரி கடைக்கு வர மாட்டிங்களே! பிறகு எதுக்கு இங்க வந்தனீங்கள்?" என்றாள் அவனது சத்தமான பேச்சில்.


"இங்க பார்றா... என் செல்லத்துக்கு என்னில அக்கறைய... பழக்கமில்லை தான்..... கெல்த்துக்கும் நல்லது இல்ல தான்..... என்ர லெவலுக்கும், இங்க வாரதும் கௌரவம் இல்ல தான்!

ஆனா என்ன செய்றது...? ஒரு நாள் உன்னை பாக்காமலோ பேசாமலோ இருக்க ஏலாம இருக்கே! என்ன செய்ய சொல்லுற.?

லீவ் போட்டமே! மாமா என்ன செய்றான் என்டு ஒரு போன் போட்டியா.?

ஆள் தான் வளந்திருக்கிற.. மாமா மனச புரிஞ்சுக்கவே மாட்டன் என்றியே!" என்றவன் பேச்சில், தலையில் கை வைத்தவள்,


"சார் கொஞ்சம் மெதுவா கதையுங்கோ! எங்களையே பாக்கினம்." என்றாள் அடக்கப்பட்ட குரலில்.


"இங்க இருந்து கதைச்சா எல்லாரும் பாக்கத்தான் செய்வினம். அப்பிடி பாக்க கூடாது என்டா, ரூம் போட்டுத்தான் கதைக்கோணும்" என்றவன்,
இருந்து இடத்திலிருந்து முதுகினை வளைத்து,

"என்ன.... ரூம் போடவா?" என்றான் கிசுகிசுப்பாக.

ஏனோ கோபம் வருவதற்கு பதிலாக சிரிப்பு தான் வந்தது, அதை அவனுக்கு காட்டாமல் மறைத்தவள், கோபம் பேலவே,

"என்ன கதைக்குறம் என்டு தெரிஞ்சு தான் கதைக்கிறீங்களா?
யாரும் கேட்டா... நான் தான் தப்பானவள் என்டு நினைப்பினம்"


"இதில என்ன இருக்கு துஷி....! இங்க கதைக்கேலாது... அதால அங்க போய் கதைப்பம் என்டன். அவ்ளோ தான்" என்றான் சாதாரணமாக தோள்களை குழுக்கி.

"இப்ப என்ன வேணும் உங்களுக்கு" என்றாள்.

கேட்டதும் தான் தாமதம்,
"என்ன கேட்கப்போறன் செல்லம்" என்றவன் விழிகளோ அவள் உதட்டிலேயே நிலைகுத்தி நிற்க,

"இப்ப எல்லாற்ர பார்வையும் எங்களிட்டத்தான். இன்னொரு நாள் கேட்காமலே எடுக்கிறன்" என்றவனை இங்கேவே கொன்றால் என்ன வென்றிருந்தது அவளுக்கு.

"அப்புறம் புதுசா உறவெல்லாம் கிடைச்சிருக்காம்... உண்மையா?"

'இத யாரு சொன்னது..? குழம்பியவளை பார்த்து சிரித்தவன்,


"என்ன டார்லிங்க் யோசனை... நீ தானே சொன்ன... தெரிஞ்சவங்க வீட்டில கொண்டாட்டம்.. போகோணும் என்டு. அங்க நிறைய பேர பாப்ப... பழகுவ... அவயல் சொந்தமாவினம்.. அதை சொன்னன்"


"ஓ..... அதுவா? ம்ம்"

"எப்ப ஊருக்கு வெளிக்கிடுறது?"

"நாளைக்கு..." என்றாள்.

"அப்ப இன்டைக்கு ஏன் லீவ்?"

"அது வந்து............ இன்டைக்கு தான் போறதென்டு இருந்தன். அங்கிள்ளுக்கு சின்ன வேலை வந்திட்டுது.. அதால நாளைக்கு போறன்.." என்றாள் தடுமாறி.

'நல்லா பொய் சொல்லு. ஒரு நாளைக்கு அந்த வாயை கடிச்சு வைக்கிறனா இல்லையா என்டு பாரு' உள்ளே தான் குமுறினான்,

"என்ன சாப்பாடுட்டுக்கு சொன்ன"

'எங்கடா சொல்ல விட்ட?' "இனித்தான் ஓடர் குடுக்கோணும்"

"நீ ஒன்டும் குடுக்க வேண்டாம்... வா என்னோட"


"எங்க வரோணும்..? எனக்கு பசிக்குது... நான் சாப்பிட்டு வாறன்.. நீங்கள் போங்கோ" என்றவள் கையை பிடித்தவன், தனக்கு வந்திருந்த றோல்ஸை காட்டி,

"இதை பாரு! எவ்ளோ எண்ணெய் என்டு... இதையா சாப்பிட போற? வயித்தில கோளாறு வந்திடும்... வா வேற எங்கயாச்சும் சாப்பிடலாம்" என்றவனிடன் இருந்து தன் கையை உருவ போராடியவள்,


"இங்க வேற கடை இல்ல"

"இப்ப நீ அடம் புடிச்சா, இத்தனை பேர் முன்னமே தூக்கிக் கொண்டு போயிடுவன். அது தான் ஆசை என்டா அடம்பிடி!" என்றான்.
எங்கு சொன்னதை செய்து விடுவானே என்று பயந்தவளாய், அமைதியாகவே அவனோடு சென்றாள்.