• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

25,26

Bindu sarah

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
65
14
8
Dharmapuri
ஹாஸ்பிடலுக்கு ஆதி சென்றதும் முதலில் பார்த்த முகம் மீரா..." என்னாச்சி மா சாராக்கு,?".

"டேய்ய் திரும்ப அப்பா ஆக போரடா". என்று மீரா குதூகலமாக சொல்ல...

"என்னது அப்பாவா?", குழப்பத்தோடு ரித்திகாவை நோக்கி சென்றவன்...' தூக்கத்துல ஒருவேள செஞ்சி இருப்பனோ, இருக்கும் இருக்கும், எப்படியோ இன்னொரு குழந்தையை பார்க்க போறேன்', என்று குதித்துக்கொண்டு இருந்தது, ஆதியின் மனது.

உள்ளே சென்றவன், பின் இருந்து ரித்திகாவை அணைக்க.

ரித்தி கைல ஒன்னு போட, "என்னடா இவ்ளோ தைரியமா, செருப்பு பிஞ்சிடும்" என்று ரித்திகா காலை காட்ட,

"பிஞ்சா விடுங்க குண்டு, வேற வாங்கிக்கலாம்" என்றாள், ஆதி திரும்ப கட்டிப்பிடிக்க....

"எதுக்கு டா சம்பந்தம் இல்லாம கட்டி பிடிக்கிற" என்று ரித்தி முறைக்க.

"அம்மாதான் சொன்னாங்க நான் அப்பா ஆக போறேன்னு".

"ஆமா அப்பாதான் ஆக போற, அதுக்கு எதுக்குடா என்ன கட்டி பிடிக்கற".

"அப்போ நீ கர்பமா இல்லையா, அப்போ நான் எப்படி அப்பா அவன்"

"நான் கர்பமா இல்லை, ஆனா நீ மறுபடியும் அப்பா ஆக போற", என்றாள் ரித்தி. அவன் குழம்பியது புரிந்து இன்னும் குழப்ப, சாரா மெதுவாக இருவர் விளையாடுவதை ரசித்துக்கொண்டு இருந்தாள்.

"ஏய்ய்ய் என்னாடி உளறுற, அப்போ நம்ம பாப்பா! நீ கர்பமா இல்லையா ".

'அறிவு கெட்டவன், ஒன்னுமே நடக்கல, பாப்பா இல்லன்னு பீல் பன்றான்' என்று நினைக்கும்போதே. ஆதி ரித்தி வயிரில் கை வைத்து, "என்மேல இருக்க கோபத்துல எதாவது செஞ்சிட்டியா? ரித்தி" என்று புலம்ப ஆரம்பிக்க.

ரித்திக்கு இந்த முறை சமாளிக்க முடியாமல் சாராவை பார்க்க, அவள் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி வைத்து இருந்தாள். "ஏய்ய்ய் அறிவு கெட்ட முட்டாள் கூமுட்டை, சித்தப்பா ஆக போரடா, அட அத்தை சந்தோஷத்துல சார்ட்டா சொல்லி இருப்பாங்க".

"ஐய்ய் அப்போ சாராதான் கர்பமா," என்று சந்தோஷத்தில் மீண்டும் ரித்தியை கட்டி பிடிக்க. "அவ தான் டா கர்பம், போ அவளை கட்டிப்பிடி, சும்மா சும்மா என் உயிர வாங்கிட்டு ".

ஆதி தயங்கிக்கொண்டே சாராவை பார்க்க, சாரா நன்றாக மெத்தைல உட்கார்ந்து, ஆதியை பார்த்து கையை தூக்க, அதை பார்த்த அடுத்த நொடி சாராவை ஆதி கட்டியணைத்து, ரொம்ப நேரம் அப்படியே இருந்தான். 'என்னாச்சி இவனுக்கு,' என்று சாரா நினைக்கும்போதே தோல்பட்டையில் அவனது கண்ணீரை நனைக்க.

சாரா அதிர்ச்சில், முகத்தை நிமிர்த்தி பார்த்தாள்.

"ஆதி‍, என்னாச்சி டா" என்று சாரா கேட்க.

ஆதி சிறு பிள்ளை போல, சற்று விசுபி கொண்டு இருக்க.

ஆதியை அப்படி பார்க்க, ரித்திக்கு ஏதோ போல ஆக.

ஆதி அமைதியாகும் வரை சாரா அவனது கையை ஆதரவாக பிடித்துக்கொண்டு இருந்தாள்.

மேஜை மீது இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து மூடியை துறந்து குடிக்க கொடுத்தாள் சாரா. ஆதி வாங்கி குடித்துவிட்டு, சாராவை பார்க்க.

சாரா என்ன என்பது போல ஆதியை பார்க்க, "சாரி" என்றான்.
"பரவால்ல, நீ தெரிஞ்சி செஞ்சி இருக்க மாட்ட" என்று சாரா சொல்ல. ஆதிக்கு ஆச்சரியம், உன்ன சின்னதுல இருந்து தெரியும் ஆதி",

ஆதி உடனே ரித்தியை பார்க்க.

"அவளை எதுக்கு பாக்கற, அவளும் நானும் எப்பவும் ஒன்னா ஆக முடியாது. என்னதான் பிரிண்ட்னாலும் பேமிலிக்கு அப்புறம்தான் புரியுதா," சாரா பேசுவது புரியாமல் ஆதி பார்க்க.

"நீ பிரிண்ட்க்கு கொடுத்த இம்பிர்ட்டண்ட்ட ரித்திக்கு கொடுக்கல, அதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம், நீ புரிஞ்சிட்டது போல, அர்ஜுனையும் ரித்தியையும் புரிஞ்சிக்கல, நீ அவங்கள வார்த்தையால தெரியாம ஹர்ட் செஞ்சிட்ட, அதனால அவங்களும் திரும்ப உன்ன ஹர்ட் செஞ்சிட்டாங்க".

ஆதி மண்டைய மண்டைய ஆட்ட, " அர்ஜுன மிஸ் பண்றயா?"

"ம்ம்ம், ஆனா நீதான் சீக்ரம் கண்டு பிடிச்சி தந்துடுவாயே எனக்கு" என்றாள் சாரா.

"நான் இப்போவே தேட போறேன்" என்று ஆதி எந்திரிக்க.

"நீ ஒன்னும் தேட வேண்டாம், இனி மூணு பேரோட சேத்து அஞ்சி பேத்துக்கும் சர்வண்ட்டா இரு, அர்ஜுன மெதுவா கண்டு பிடிச்சிக்கலாம்".

நல்லா வருவீங்க எல்லோரும், மீரா, ரித்தி, சாரா சிரித்துக்கொண்டு இருக்க.

தாரா வந்து, ஆதி காலை பிடித்து தொங்க... "ஏண்டி தங்கமே, என்ன சாக்லேட் வேணுமா" என்று ஆதி தூக்க.

அவனது கலங்கிய கண்களை பார்த்து, "அப்பா அழக்கூடாது, பாப்பா சாக்லேட் தரேன்னு", தாரா கொஞ்ச நேரம் முன்னாடி வாயில் போட்ட சாக்லேட்டை எடுத்து, ஆதிக்கு சாப்பிட கொடுக்க, 'என்னதான் நம்மை கொடுமை படுத்தினாலும், தனக்கு ஒன்னுனா இவங்க இருக்காங்க' என்று நினைத்த ஆதி,

ஆதி ஏதேதோ யோசிச்சிட்டு இருக்கும்போது தாரா கொடுத்த சாக்லேட்ட மறந்துட்டேன், தான் கொடுக்கும் சாக்லேட்டை வாங்காத ஆதியை பார்த்த தாராக்கு எங்கு இருந்து அவ்ளோ கோபம் வந்ததுன்னு தெரில. கையில் இருக்கும் சாக்லேட் ஐ ஆதி மூஞ்சில தூக்கி போட்டு... அவனது நீண்ட முடியை பிடித்து ஆட்ட தொடங்கினாள். அவன் வலியால் துடிக்க, குடும்பமே சிரித்துக்கொண்டு இருந்தது.

ஒருவழியா தாரா முடியை விட, தாராவை மீராவிடம் கொடுத்துவிட்டு... "இனி முடி இருந்தா தான பிச்சி எடுப்ப, மொதல்ல போய் மொட்டை அடிச்சிட்டு வரேன்" என்று ஆதி ஓடிவிட்டேன்.

போகும் ஆதியை பார்த்த தாரா..
"டுபுக்கு இடியட்" தாரா ஆதியை பார்த்து கத்த.

ஆதி சிரிச்சிட்டே போனது என்னவோ முடி வெட்டும் கடைக்கு. அவனது பழைய போட்டோ ஒன்னு காமிச்சு, அதுபோல முடி வெட்ட சொல்ல,
சிறப்பாக அவனுக்கு வெட்டி விட.
ஆதி வீட்டில் போய் குளித்துவிட்டு ஹாஸ்பிடல்ல இருக்கவங்கள கூட்டிட்டு வர போனான்.

ஆதியை பார்த்து அனைவரும் ஆச்சரியமாக பார்க்க... தாரா ஓடி வந்தாள் ஆதியை நோக்கி... 'ஐயோ வராளே, எதை பிடிச்சி இழுத்து கதற விடுவான்னு தெரிலயே '...

ஓடி வந்த தாராவை தூக்கி, எடுத்து முத்தம் கொடுக்க... தாரா ஆதி கன்னத்தை இருக்கைகளால் பிடிக்க... மூக்க கடிப்பாலா இல்லை வாயை பிடிச்சி கடிப்பாலன்னு தெரிலயே ' என்று ஆதியை தாரா நெருங்கும்போது கண்களை மூட.

முகம் முழுவதும் தாரா முத்தம் கொடுக்க ஆரம்பிக்க.

ஆதி ஆச்சரியமாக தாராவை பார்க்க. 'என்னாச்சி இவளுக்கு' ஆதி யோசிக்கும் போது, மூத்தத்தை கொடுத்து முடித்து.

அப்பா.... சொல்லி கட்டி பிடிச்சிட்டா... ஆதி அதிர்ச்சியில் ரித்தியை பார்க்க... 'ஐயோ மாட்டிவிட்டுட்டாலே'.

ஆதி ரித்திகாவிடம் தாராவை தூக்கிக்கொண்டு நெருங்க.

"அத்தை, சாரா வாங்க கிளம்பலாம்" என்று அவர்கள் பொருட்களை தூக்கிக்கொண்டு கார்ட போய் நின்னுட்டா ரித்தி.

ஆதி பில் கட்டிட்டு கார் எடுக்கவும், ரித்தியை பார்த்துட்டே கார் ஒட்டினான். செல்விக்கு விஷயம் சொல்லியாச்சி நேராக அர்ஜுன் வீட்டுக்கு வர சொல்லி. ரித்தி, தாராக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு சென்றார்கள்.

'நைட் பாத்துக்கலாம், அப்போதான் தனியா இருப்பா, இப்போ போனா கடிச்சு வச்சிடுவா '

26

அர்ஜுன் இல்லாதது தவிர அனைவருக்கும் மன நிறைவு, புதியதாக ஒரு உயிர் ஜீவணித்து உள்ளது என்று.

தாராவுக்கு தான் அதிக சந்தோசம்.... தம்பியா பாப்பவா என்று கேட்டு அனைவரையும் டார்ச்சர் செஞ்சிட்டு இருக்கா.

சாராக்கு அவ்ளோ ஹாப்பி, "அந்த கழுதைக்கு இருக்கு, நேர்ல பாக்கும் போது. பாவி பையன் என்ன இப்படி புலம்ப விட்டுட்டானே" என்னதான் அர்ஜுனை திட்டினாலும், அவனுக்கும் கொஞ்சம் தனிமை தேவைன்னு விட்டுட்டாங்க
எல்லோரும். ஒடனே சாப்டுட்டு ரூம்க்கு போறாங்க, செல்விக்கு ஒரு ரூம் ஒதுக்கி தராங்க மீரா.

தாரா இப்போலாம் மீராவ விட்டு பிரியரதே இல்ல, பாட்டி பாட்டின்னு முந்தானைய பிடிச்சிட்டு சுத்துவா.

ஆதிகிட்டயும் நல்லா ஒட்டிகிட்டா, ஆனா ரித்தி போலத்தான், எப்போ ஆசையா முத்தம் குடுப்பா, எப்போ காண்டுல மூக்கு வாய் காது எல்லாம் கடிச்சி வைப்பான்னு அவளுக்கே தெரியாது.

சாப்பிட்டு முடிச்சிட்டு டாடின்னு கையை தூக்க, ஆதியும் ஆசையா தூக்கி அணைக்க. அவன் எதிர்பாராத சமயம் மூக்கையும் கண்ணத்தையும் ஒரே கடி தான், ஆதி வீல்ன்னு கத்திட்டான்.

அவனை தவிர மற்றவர்களுக்கு ஒரே சந்தோசம். ஒருவழியாக எல்லாத்தையும் முடிச்சிட்டு அவர் அவர் அறையிலே அடங்கினர்கள்.

ஆதி வழக்கமாக கிட்சன் சுத்தம் செஞ்சிட்டு உள்ளே போனான். இன்று தாரா இருந்த இடத்துல ஒரு பேபி பொம்மை இருக்கா. 'அப்படியே பெரிய வேலி போடுறா, நான் நினைச்சா அத எப்போவோ தாண்டி இருப்பேன், அவ்ளோ நல்ல பையன இப்படி படுத்துறா' என்று நினைத்து கொண்டு, இன்று வழக்கத்துக்கு மாறாக ரித்தியை இடித்துக்கொண்டு படுக்க. கடுப்பாகிய ரித்தி, ஒரே இடி உருண்டு போய் கீழே விழுந்தான்.

'"ஆஆ என் இடுப்பு போச்சே!! என்று பெரும் கூவளோடு ஆதி கத்த.

"நாயே ஏன்டா கத்துற, வீட்ல எல்லோரும் தூங்கறாங்க" என்று அவன் வாயை கைகளால் மூட. இடுப்பு ஒடஞ்சும், ஆதிக்கு குசும்பு போகல, மூடிய கரங்களுக்கு முத்தம் கொடுக்க, ரித்திக்கு ஏதோ போல ஆனது, இப்போதுதான் ரித்தி உணர்ந்தாள். ஒரு வேகத்தில் ரித்தி மொத்தமாக ஆதி மீது இருந்தாள். ரித்தி நெளிந்துகொண்டே எந்திரிக்க பார்த்தாள், ஆனால் ஆதி விட்டாள்தானே.

"ரித்தி சாரி" என்றான்.

"ஒன்னும் தேவையில்ல" என்று ரித்தி முகத்தை திருப்ப.

"ரித்தி சாரி", ரித்தியின் வீராப்பு எல்லாம், விலகி இருக்கும் வரைதான் என்று ஆதிக்கு இன்றுதான் புரிந்தது. 'இது தெரியவே இவ்ளோ நாள் எடுத்துகிட்டயே ஆதி' என்று கொஞ்சம் முன்னேற.

"வேண்டா இப்போ", ஆதிக்கு பியூஸ் போக.

"அதான் கோபம் இல்லல," என்றான் ஆதி.

"கோபம் இல்லை லூசு நீ செய்றதுக்குலாம் கோப பட முடியுமா சொல்லு".

"அப்புறம் என்னடி?"

"அது அர்ஜுன் கிடைக்கட்டும்".

"அதுலாம் கிடைச்சிடுவான், அவன் ஒன்னும் என்ன போல லூசு இல்லை". ரித்திகா கண்கள் கலங்கியது.

"சாரி" என்று சொல்லி விலகினான். விலக சொன்னது ரித்தித்தான், ஆனால் அவன் விலகல் வலித்ததும் அவளுக்குத்தான்.

"என்னாச்சி" என்று கிழே குனிந்து இருக்கும் அவள் முகத்தை நிமிர்த்தினான் ஆதி.

ஒன்னுல என்று எந்திரித்த ரித்திகா, பெட்ல படுக்க.

ஆதி சிரித்துவிட்டு ரித்தியை பார்த்து, "ரித்தி" என்றான் மெதுவாக.

ரித்தி கண்களை மூடிக்கொண்டே "ம்ம்" என்றாள்.

"இனி என்ட நல்லா பேசுவயா?"
ம்ம் என்றாள் அதற்கும். "வாயை தொறந்து பேசுடி" என்றான் ஆதி கொஞ்சும் குறளில்.

"பேசுவேன் பட் பனிஷ்மென்ட் இன்னும் முடில,"

"என்னது முடிலயா?" என்று ஆதிக்கு சற்றுமுன் கிடைத்த ஆனந்தமும் மறைந்துவிட்டது.

"அர்ஜுன் கிடைக்கிற வரை, இனி ஹால் ல படு" என்று ரூமை விட்டு துரத்தினாள்.

ஆதி சிரித்துக்கொண்டே மீரா ரூம் போய், மா சமாதானம் ஆகிட்டோம்ன்னு மீராவ போய் கட்டி பிடிக்க.

"அதான் சமாதானம் ஆயிட்டீங்கல்ல இங்க எதுக்கு டா படுக்கையோட வந்து இருக்க?" நடந்ததை சொல்ல.

"அது தான் என் தங்கம் ஹால்ல படுக்க சொல்லிட்டால்ல போய் படு", என்று மீரா கலவர படுத்த. ஆதி "போ மா, சரியான அலுப்பு, புல் டே வேலை செஞ்சி" என்று ஆதி நீட்டி படுக்க.
மீரா ஆதி தலையை வருடி விட "அர்ஜுன் எங்கடா போய்ட்டான்".

"தேட அழு அனுப்பியாச்சு மா கிடைச்சிடுவான்".

மீராவும் அப்படியே படுத்து தூங்க.
வேறு பெட்டில் படுத்து இருந்த தாரா அம்மா மகனுக்கு இடையில் வந்து அமர்ந்து... பாட்டி வயிறுல தலைய வச்சி அப்பா கழுத்துல கால் வச்சு, கிராஸ் ஆ படுத்து தூங்க ஆரம்பிக்க.

ஆதி தாரா காலை பிடித்துக்கொண்டே தூங்கினான்.

கொஞ்ச நேரம் கழித்து எழுந்த மீரா, "இவளுக்கு கொழுப்ப பாரு, என் பையன் தலைமேல காலு போட்டு படுத்து இருக்க" என்று மீரா தாராவை தூக்கி நேராக படுக்க வைக்க, அவள் திரும்பி ஆதி மீது ஒரு காலை போட்டு தூங்க ஆரம்பித்தாள்..... இப்படியே நாட்கள் மாதங்களாக ஓடின. சாராவிற்கு ஒன்னு ஒன்னும் பாத்து பாத்து செய்தான், அவனுக்கு மட்டும் அல்ல, ரித்தி, மீரா, தாரா, செல்விக்கும் வேண்டாம் என்று சொன்னாலும், அவளையும் வேலை செய்ய விடாமல் ஆதி அருமையாக பார்த்துக்கொண்டன்.

ஆதி நிலைமைதான் பாவம் முழுதாக வேலைகாரணாக மாரிய நம்ம ஆதியை பாருங்கள்..... ஆதிக்கு ஒரு அழைப்பு வர, அதை சாராதான் எடுத்தாள்.

மறுமுனையிலே கேட்ட செய்தியை கேட்டு சிறு பிள்ளை போல கத்திக்கொண்டு குதிக்க ஆரம்பித்தாள்.

இவள் சத்தம் கேட்டு எல்லோரும் வெளியே வர, அவள் குதிப்பதை பார்த்து மீரா அவளை திட்ட, அப்போதுதான் சாரா அமைதியானாள்.

ரித்தி, சாரா, ஆதி
அர்ஜுனை தேடி பயணத்தை தொடர்ந்தார்கள்.