• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

26. காதல் சொல்ல வந்தேன்... !?

V Ramakrishnan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 4, 2023
6
5
3
Salem
சிறுகதை போட்டி 2023.



V Ramakrishnan



காதல் சொல்ல வந்தேன்... !?



காதல் சொல்ல வந்தேன்... !?


சிங்கார சென்னையில் இருக்கும் ஒரு புறநகர் பகுதி அது. காலை நேரத்திற்கே உரிய பரபரப்புடன் அந்த சாலை இருந்தது. பள்ளி செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்லும் ஆட்களுமாக அந்த சாலையில் வேக, வேகமாக சென்று கொண்டு இருந்தனர்.




இதில் ஆட்டோ வேறு பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு பறந்து கொண்டிருந்தது. அதுவுமில்லாமல் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் வாகனங்கள் வேறு சேர்ந்து கொண்டது.




காயத்ரி ஸ்கூட்டி பெப் ஐ வேகமாக ஓட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். அந்த வண்டியின் பின்புறம் உள்ள இருக்கையில் அவளுடைய ஃபிரெண்ட் லதா அமர்ந்து கொண்டு இருந்தாள்.




காயத்ரி ஏதோ புலம்பிக் கொண்டே அந்த வண்டி ஓட்டிக் கொண்டு இருந்தாள்.




அதைப் பார்த்த அவளுடைய ஃபிரெண்ட் லதா, " என்னடி இப்படி பொறிச்சு தள்ளரே ... என்ன ஆச்சு டி உனக்கு ... என கேட்க, அதற்கு அவள், காயத்ரி, " ஒன்னும் இல்லடி ... அந்த கொடுமையை ஏன்டி கேக்கறே... எங்க அப்பா இருக்கிறாரே... அவர் ஒரே டார்ச்சர் டி... என்ன கல்யாண பண்ணிக்கோ... கல்யாணம் பண்ணிக்கோன்னு... நான் என்ன பொண்ணு பார்க்க ஒத்துக் கொள்ள மாட்டேன்னு சொன்னாதாலே ... அவரே ஒரு மாப்பள பார்த்து இருக்காராம்... "




அவன போய் நான் காஃபி டே ஷாஃப் ல போய் பார்க்க சொல்ரார்டி என்ன ... உனக்கு மாப்ளய பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ ன்னு ஒரே நச்சுடி ... என்றாள், சலிப்பாக . அவளுடைய அப்பா சொன்னது அவளுக்கு பிடிக்கவில்லை என்பது அவளுடைய அந்த பேச்சில் இருந்தே லதாவுக்கு தெரிந்தது.




அதற்கு அவள் ஃபிரெண்ட் லதா, " நல்ல விஷயம் தானாடி... உனக்கு மாப்பள ய பிடிச்சா தானே கல்யாணம் பண்ணிகோன்னு சொல்ராரு... இதுல உனக்கு என்னடி இப்ப பிரச்சினை ... !? " என்று காயத்ரியை கேள்வி கேட்டாள் புரியாமல்.




அதற்கு அவள்," நான் சொல்லப் போறத முழுசா கேளுடி ... பிரச்சினை அவன போய் பார்க்கறத இல்ல டி... அவர் ஒரு கண்டிஷன் போட்டு இருக்கார்டி... என்னடி அந்த கண்டிஷன் !? என்று லதா கேட்க,அதற்கு அவள், " எனக்கு மாப்பிள்ளை ஐ பிடிக்கலேன்னு நான் போய் அந்த மாப்பிள்ளை ஐ பாத்து அவர்கிட்ட நேரா சொல்லணும் னு... கண்டிஷனர் வேற போட்டு இருக்கார்டி... அதை அதை நினைச்சா தான் எனக்கு கடுப்பா இருக்குடி ... என்னை பாடா படுத்தி எடுக்கிறர்டி இப்பெல்லாம் " என்றாள் வெறுப்புடன்.




மேலும், " நான் தான் கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்றேன் தானே ... என்ன அப்படியே வுட வேண்டியது தானே ...!? அது என்ன டி... மாப்பிள்ளை ய பாத்து வேண்டாம்ன்னு நேர்ல போய் சொல்லறது... !? ரொம்ப இம்சைடி... என்று அவளிடம் காயத்ரி சலித்துக் கொண்டாள்.




அதற்கு அவள் ஃபிரெண்ட் லதா, " சரிடி... உன் நிலைமை... உன் டென்ஷன் எல்லாம் எனக்கு புரியுதடி... இதெல்லாம் ஒரு பிரச்சினை யே இல்லடி... பிரச்சினை யை பிரச்சினை யா நினைச்சா தான் அது பிரச்சினை. நான் சொல்றது ஏதாவது புரியுதா காயூ ... !?





இப்ப கூட ஒன்னும் பிரச்சினை இல்லை டி... இப்ப நீ அதுக்குதான்டி பேற... !? நா சொல்லற மாதிரி செய் டி ... காஃபி டே க்கு போ... அந்த மாப்பிள்ளை பையனை பாருல... உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கல ன்னு அவன் மூஞ்சுக்கு நேரா சொல்லு... திரும்பி வந்துடு... அவ்வளவு தான்டி. இதுக்கு போய் யாராவது டென்ஷன் ஆவாங்களா !? அதுவும் நீ ... !? டென்ஷன் ஆகலாமா காயூ... !? நாமெல்லம் யாருடி... !? மத்தவங்களுக்கு, அலட்டிக்காமா பி. பி (டென்ஷன்) ஏத்திவிடற பார்டி டி... தெரியுமா !? இப்ப போடி... நான் சொல்லற மாதிரி பண்ணுடின்னு... " அவளுக்கு அசாம ஸ்குரூ ஏத்தி விட்டு, லதா அவளுடைய வண்டியில் இருந்து, வழியில் அலட்டிக் காமல் இறங்கிக்கொண்டாள்.





மேலும் மனசு கேட்காமல், லதா " நான் வேணும்னா உன் கூட இப்ப காஃபி டேக் வரட்டுமா என்று கேட்டால் அவள் காயத்ரியிடம். அதற்கு காயத்ரி, " இல்லடி நான் அங்க போயிட்டு, நீ சொன்ன மாதிரி மூஞ்சில அடிச்ச மாதிரி அவங்க கிட்ட சொல்லிட்டு வந்துருவேன் " என்றாள் இப்பொழுது சற்று கூலாக. இப்பொழுது அவள் சற்று தெளிவாக இருந்தாள்.





காயத்ரி அவள் ஸ்கூட்டி பெப்பை நிறுத்தி லதாவை அவள் சொன்ன இடத்தில் கீழே இறக்கி விட்டாள் இறக்கிவிட்டு, விட்டு அவள் வேகமாக போனாள், காஃப்பி டேக்கு, அந்த மாப்பிள்ளை பார்த்து 'நோ சொல்ல'. காஃபி டே இல் மாப்பிள்ளை என்று சொல்லப்பட்ட ராஜேஷ் ஒரு டேபிளின் எதிரில் அமர்ந்து இருந்தான் அவள் வருகை எதிர்பார்த்துக் கொண்டு.





சிறிது நேரத்தில் காயத்ரி வேக, வேகமாக காஃபி டே உள்ளே வந்தாள். அதன் பிறகு அங்கு சுத்தியும், முத்தியும் பார்த்தாள். அவளிடம் சொல்லப்பட்ட டேபிளுக்கு போய், அங்கு அமர்திருந்த அவன் மூஞ்சியை பார்த்து, " உங்களை எனக்கு சுத்தமாக பிடிக்கல... உங்க மூஞ்ச பாத்து சொல்ல சொன்னீங்க... நான் சொல்லிட்டேன்.. அவ்வளவுதான். சரியா... !? என்று சொல்லிவிட்டு வேகமாக கிளம்ப, அதற்கு அவன், " கொஞ்ச நேரம் இருங்க... முதல்ல உட்காருங்க இந்த நாற்காலில ... மத்ததெல்லாம் அப்புறம் சொல்லுங்க " என்றான்.





அதைக் கேட்ட அவளுக்கு பயங்கரமான கோவம் வந்தது அவனை எரிக்கிற மாதிரி பார்த்துவிட்டு, " என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல... !? நீங்க வா.. ன்னா வரணும். போ ன்னா போகணுமா... !? புடிக்கலேன்னு நேரா சொல்லணும்னு சொன்னீங்க.. சொல்லிட்டேன்...
அப்புறம் என்ன... !? ஹான்... என்று கோபமா பேச, அவன் உங்கள பாக்க நான் வரல... என் ஃப்ரெண்ட் ராம் தான் வந்திருக்கான்னுசொல்லி, அவன் பின்புறம் உள்ள இடத்தை பார்க்க, அங்கே அவளுடைய ராம், அவளுடைய முன்னாள் காதலன் உட்கார்ந்து இருந்தான் புன்சிரிப்புடன், அவளை கண்களால் இரசித்துக் கொண்டு. அவளைப் பார்க்க அவனுக்கு சிரிப்பு வந்தது.





அந்த இடத்தில் அவனை திடீரென்று பார்த்தவுடன் அவளுக்கு பயங்கரமாக ஷாக். அவள், அவனை அங்கு, அந்த இடத்தில் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடீரென்று அவனைப் பார்த்ததால் அவளுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அதனால் அவள் அங்கிருந்து கோபமாக கிளம்ப, அவன் அவளை வழிமறித்து, " காயூ... ஒரு நிமிஷம் இரு... நான் சொல்றத கேட்டுட்டு, அப்புறமா போ... என்று சொல்ல , அவள், அவனைப் பார்த்து அமைதியாக இருந்து விட்டு, எதுவும் சொல்லாமல் அங்கிருந்து அவள் கிளம்பி விட்டாள். அவளுக்கு அவன் மேல் அவ்வளவு கோபம் இருந்தது இருக்காதா பின்ன !? அன்று அவளை மதிக்காமல், ஒன்றும் சொல்லாமல் போனவன் தானே !? அவள் மனசு பழசை எல்லாம் நினைத்து அசை போட்டது.





ஃப்ளாஷ் பேக் ஆறு மாதங்களுக்கு முன்:




ஒரு நாள், ராம் மற்றும் ரமேஷ் இருவரும் பல்சர் வண்டியை வேகமாக ஓடிக் கொண்டு வந்த பொழுது, இவள் காயத்ரி ஸ்கூட்டியில் அந்த ரோட்டில் உள்ள திருப்பத்தில் மெதுவாக திருப்ப, பின்னால் வந்த ராம், அதை எதிர் பார்க்காத தால், அவனுடைய வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்த, அவர்கள் இருவரும் வண்டியிலிருந்து, தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்து விட்டார்கள்.





காயத்ரி அவர்களை பார்த்து, தான் எந்த தப்பும் செய்யவில்லை என்று சொல்ல, அதற்கு ராம் அவளை முறைத்து பார்த்துக் கொண்டு, " என்ன தப்பு செய்யவில்லை... !? ரைட்ல இண்டிகேட்டர் போட்டுட்டு லெப்ட்டுல வண்டி திருப்பிட்டு, தப்பு செயலேன்னு ஆர்க்யூ வேற செய்யறத பாரு... " என்று சொல்லி அவளை முறைத்து பார்த்தான்.





அப்பொழுது தான் அவளுக்கு அவளுடைய தப்பு புரிந்தது. இவர்கள் சொல்கிற மாதிரி தான் அவள் தப்பு செய்திருந்தாள். அதனால் அவள் 'ஸாரி' என்று கேட்க, ராம் மற்றும் ரமேஷ் மௌனமாக தரையில் இருந்து மெதுவாக எழுந்து, நொண்டி நொண்டி நடந்து அங்கிருந்து அவளையே முறைத்து பார்த்துக் கொண்டே, வலியுடன் சென்றார்கள்.





காயத்ரி திருவென்று முழித்துக் கொண்டு இருந்தாள், அந்த இடத்திலேயே சிறிது நேரம். அவள் இப்பொழுதுதான் வண்டி ஓட்ட பழகிக் கொண்டு இருந்தாள். இதற்கு அவள் மெதுவாகத்தான் போவாள். இன்னும் அவளுக்கு வண்டி சரியாக ஓட்டத் தெரியவில்லை. அதனால் அடிக்கடி அவளுக்கு இப்படி ஆகிவிடுகிறது.





அவள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், இப்படி விபத்து நடந்து விடுகிறது எப்படியாவது. இதுதான் அவர்களுடைய முதல் சந்திப்பு.






இரண்டாவது முறை, அதே மாதிரி அவள் ஒரு வண்டிக்கு பின்னால் வந்து கொண்டு இருந்த பொழுது அவளுடைய வண்டிக்கு எதிரில் வேகமாக வந்த அந்த வண்டியை பார்த்து அவள் தடுமாறி பேலன்ஸ் இல்லாமல், அவள் கீழே விழுந்து விட்டாள். அன்று ராம் மட்டுமே அவன் வீட்டில் இருந்து அவன் வண்டியில் வந்து கொண்டிருந்தான்.






இவள் பேலன்ஸ் தவறியதால் கீழே ரோடு ஓரம் விழுந்து விட, அவளுடைய ஸ்கூட்டி பெப் வண்டி, அவள் மேல் விழுந்து கிடந்தது கண்டபடி, அவள் மேல். அந்த பக்கமாக வந்தவன், அவளைப் பார்த்து, அவனுடைய வண்டியில் இருந்து இறங்கி வந்து அவளை பார்த்து, அவளை அவன் திட்டி, " கண்ண எங்கே வைத்திருந்த !? பின்னாடியா !? " என்று கேட்டான்.





அவள் கீழே விழுந்து கிடந்ததால் பரிதாபமாக அவனை பார்த்து, " என்ன கொஞ்சம் தூக்கி விடுங்க ப்ளீஸ்... ! கையில எனக்கு நல்லா அடிபட்டுருச்சு... வலி பொறுக்க முடியவில்லை " என்று அவனை பாவமாக பார்த்து சொல்ல, அவன் அவளை மேலும் திட்ட மனசு இல்லாமல், மெதுவாக அவள் எழுந்திருக்க, தன் கையை கொடுத்து அவளை மேலே எழுப்பி விட்டான், மெதுவாக.






அதன் பிறகு, அந்த வண்டியை கீழே இருந்து எடுத்து ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி விட்டு, அவளை அவனுடைய வண்டியில் அருகில் இருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு சென்று, அவளுக்கு கீழே விழுந்ததால், Septic ஆகாமல் இருக்க, T. T Injection ஒன்று போட்டு, அவளுடைய காயங்களுக்கு டிரஸ்சிங் செய்து கட்டு போட்ட வைத்து, பிறகு அவளை பத்திரமாக, அவளுடைய வீட்டுக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தான்.






அதிலிருந்து அவர்கள் இருவரும் அந்த ரோட்டில் நான்கைந்து முறை அடிக்கடி சந்தித்துக்கொள்ள, அவர்கள் இருவரும் நல்ல ஃபிரண்ட்ஸ் ஆகிவிட்டார்கள். பிறகு அவனே, அவளிடம் வண்டி ஓட்ட கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்லி, அவளுக்கு லீவு நாட்களில் வண்டி ஓட்டவும் கற்றுத்தந்தான்.






இப்படியே அவர்கள் இருவருடைய நட்பும் வளர்ந்து கொண்டு வந்தது நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக. கடைசியில அது காதலாகி மலர, அவர்கள் இருவரும் அதை வெளிப்படையாக அவர்களுடைய காதலை, இருவரும் சொல்லி கொள்ளவில்லை. ஆனால் அவர்களிடையே காதல் இருக்கிறது என்பது தெரிந்தும், முதல்ல அவள் சொல்லட்டும்னு அவனும், அவன் சொல்லட்டும் என்று அவளும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டு இருந்தார்கள் வெளியில்.






இதற்கு நடுவில் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினம் வந்தது. அன்று காதலர் தினம் மட்டும் இல்லை, அன்று அவளுடைய பர்த்டேவையும் கூட. அன்று அவள், அவனிடம் இருந்து காதலர் தின வாழ்த்தும், மற்றும் அவன் காதலையும் அவன் சொல்வான் என்று நினைத்துக் கொண்டு நன்றாக தன்னை அலங்காரம் செய்து கொண்டு இருந்தாள். அவன் அவளை, மெரீனா பீச்சுக்கு, அங்கு உள்ள ஒரு இடத்திற்கு வர சொல்லி சொன்னான். அவள் மனம் முழுக்க பல விதமான கலர், கலரான கனவுகளுடன், ஆசை ஆசையாக அவனைப் பார்க்க அவள் ஓடோடி சென்றாள். அங்கு பீச்சில் அவளை பார்த்தவன், அவளிடம் எதுவும் சொல்லாமல் அவளை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, பிறகு அவளிடம் தான் ஆன்-சைட் வேலையாக யூ. எஸ். ஏ போவதை கூறினான். பிறகு ஞாபகம் வந்தவன் போல அவளுக்கு பர்த்டே வாழ்த்து சொல்ல, அவளுடைய முகம் ஏமாற்றத்தில் சுருங்கி விட்டது. இருந்தபோதிலும் அவள் வேறெதுவும் சொல்லாமல், 'தேங்க்ஸ்' என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லி, மேலும் அங்கு இருக்க பிடிக்காமல், அவனிடம் வேலை இருக்கிறது என்று திரும்பி வந்துவிட்டாள் ஏமாற்றத்துடன்.






அவளை அறியாமல், அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருந்தது. காயத்ரி திரும்பினின்று, தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, நின்றிருந்த அவனை திரும்பிக் கூட பார்க்காமல் வேகமாக நடந்து அங்கிருந்து சென்றுவிட்டாள்.






அவனுக்கு அவள் காதலை விட, ஆன்-சைட் ஜாப் போவதுதான் பெருசாக இருந்தது என்று நினைத்துக் கொண்டு, அவள் அவனை ஒரே அடியாக மறந்து விட்டாள். அதன் பிறகு இன்று தான், இந்த இடத்தில் தான், அவனை பார்க்கிறாள். அவள் மனசு ஃபுல்லாக வலி இருந்தது அவளுக்கு. ஆனால் அதையெல்லாம் யாரிடம் போய் சொல்வாள் அவள் !? அவளுக்கு அவன் மேல் பயங்கரமாக கோபம் வந்தது.






இருந்தாலும் அவளுடைய மனம், அவன் மேல் கொண்ட காதலால், அவனை மறக்க மறுத்தது, சண்டித்தனம் செய்தது. அவளுக்கு அவனை அவ்வளவு சுலபமாக மறக்கவும் முடியவில்லை. அவன் செய்த தப்பை மன்னிக்கவும் முடியவில்லை அவளால்.






அதனால் அவள் வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ளமறுத்து வந்தாள். வருகின்ற மாப்பிள்ளை யை எல்லாம் தட்டிக் கழித்தாள், அவன் மேல் கொண்ட காதலால்.





ஆனால் அவள் மனது சொல்வதை கேட்க முடியாமல், அவளுடைய ஈகோ வந்து அவளை தடுத்தது. அவள் இரண்டிற்கும் இடையில் சிக்கிக் கொண்டு தடுமாறினாள். பார்ப்போம்
கடைசியில் எது ஜெயிக்கப் போகிறது என்று . அவளுடைய காதலா !? இல்லை அவளுடைய ஈகோவா !? என்று.





அவள் பின்னால் வேகமாக சென்ற ராம், அவள் வழக்கமாக போகும் வழி அவனுக்கு தெரியும் என்பதால், அவள் அங்கு வருவதற்கு முன்பு அங்கு அவன் வந்து காத்திருந்தான். நடுரோட்டில் வைத்து அவள் வண்டியை வழிமறித்து நிறுத்தினான். அவளும் வேறு வழி இன்றி வண்டியை நிறுத்த அவன் உடனே அவள் வண்டி சாவி திடீரென்று வண்டியிலிருந்து எடுத்து தன் கையில் எடுத்து வைத்துக்கொண்டான் அவள் அங்கிருந்து போகாமல் இருக்க.







பிறகு அவளிடம், " இப்ப உனக்கு என்ன காயூ பிராப்ளம்... நான் அன்னைக்கு உனக்கு காதல் சொல்லாம வந்ததா... !? இல்ல உன்ன விட்டுட்டு, ஆன்-சைட் ஜாபுக்கு யூ. எஸ் போனதா... !? என்ன பிரச்சனைன்னு சொல்லு காயூ ... !? இது எல்லாம் நான் ஏன் செய்தேன் தெரியுமா... !? எனக்கு ஆன்-சைட்க்கு யூ.எஸ் போகணும்னு ரொம்ப நாளா ஆசை காயூ ... சான்ஸ் அன்னைக்கு தான் கிடைத்தது. அதனாலதான் போக தீர்மானம் செய்து போனேன்.





உங்கிட்ட அன்னிக்கு நான் என் காதலை சொல்லிவிட்டு தான், நான் ஃபாரின் போகலாம் என்று நினைச்சேன். அதனால் தான் ஒன்ன உன்னை பீச்சுக்கு வரச் சொன்னேன். ஆனா, உன்ன அன்று பார்த்தவுடன், எங்க நான் என் காதலே உன்னிடம் சொன்னால், என்னால் ஃபாரின் போக முடியாதோ !? என்ன நினைச்சு, பிறகு மனதை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு, உன்னிடம் எதுவும் சொல்லாமல், என் காதலை கூட சொல்லாமல் மறைத்துக் கொண்டு திரும்ப வந்து விட்டேன்.






நான் யூ.எஸ் போனதுக்கு அப்புறம் நான் உனக்கு நிறைய தடவை ஃபோன் செய்தேன், என் நிலைமையை சொல்ல. நிறைய தடவை உனக்கு மேஜேஸ் கூட செய்தேன். ஆனால் நீ தான் என்மேல் கோபப்பட்டு என் காலை எடுக்கக் கூட இல்லை. அதுவும் இல்லாமல் என் நெம்பரையே ஃபிளாக் செய்திட்ட. நான் என்ன பண்ணட்டும் சொல்லு ... !? அதான் இங்கு வந்ததுக்கு அப்புறம் உன்னை பார்த்து உன்கிட்ட பேசிக்கலாம் விட்டுட்டேன் காயூ... " என்றான் அமைதியாக.






இதையெல்லாம் நான் ஏன் செய்தேன் தெரியுமா!? இதையெல்லாம் நான் என் ஆசைக்காக மட்டும் செய்யவில்லை. நம் எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் . நான் உன்னை நன்றாக, சந்தோஷமாக, மகாராணி மாதிரி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையால் தான். இதையெல்லாம் நீ புரிந்து கொள்ள வேண்டும் காயூ ! "






" இப்ப என்ன... நான் உனக்கு என் காதல, சின்ன பசங்க மாதிரி, நடுரோட்டில் முட்டி போட்டு, கத்தி சொல்லனுமா... !? நான் ரெடி என்றவன், திடீரென்று அவன் அவள் வண்டியின் முன் நடு ரோட்டில் முட்டி போட்டு, " காயூ ஐ லவ் யூ " என்று உரக்க கத்தி சத்தமாக சொன்னான். அவள் அதை வைத்த கண் வாங்காமல் ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டு இருந்தாள். அந்த ரோட்டில் வருவோர் போவோர் எல்லோரும் அதை பார்த்தார்கள். அன்று இந்த உலகம் இன்னும் ஒரு காதலை பார்த்தது.






அவன் அவளைப் பார்த்து, " நாம் கல்யாணம் பண்ணிக்க லாமா காயூ !? "என்று கேட்டான் காதலுடன்.





அதற்கு அவள் செல்ல கோபத்துடன், " என்னால் அரேஞ்ச் மேரேஜ் எல்லாம் பண்ணிக்க முடியாது " என்று சொன்னாள்.






அதற்கு அவன், " ஒன்றும் பிரச்சனை இல்லை... நம் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளலாம் " என்று புன்னகையுடன் மறைமுகமாக அவனுடைய காதலை சொல்லி, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டார்கள்.






(ஒரு வழியாக அவன் காதலை சொல்லி விட்டான் அவளிடம். அப்பாடி... ஒருவழியா கதையோட டைட்டில் வந்திடுச்சு. ஸ்... அப்பாடி முடியலடா சாமி என்னால் , மை மைண்ட் வாய்ஸ்.)






சரி நமக்கு இனி இங்க என்ன வேலை !? அவர்களுக்கு தான் நிறைய வேலை இருக்கு இனிமேல். அவர்கள் இருவரும் காதலிக்கணும். சண்டை போட்டுக்கணும். மறுபடியும், மறுபடியும் காதலிக்கணும். இப்படி நிறைய குட்டி, குட்டியா வேலை இருக்கு. நாம அங்கிருந்து கிளம்புவோம். அவர்கள் சந்தோஷமாக வாழட்டும். சண்டை போட்டுக் கொண்டு, வாழ்க்கை முழுவதும் நிறைவுடன். அன்புடன் . தீராத காதலனுடன். யுகம், யுகமாக. இந்த உலகத்தில்.






(V R K)


(முற்றும்)
 
Last edited:
  • Like
Reactions: Thani

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
59
27
18
Deutschland
காதல் அழகானது தான் 😀
அப்பா சரியா தான் சொல்லி இருக்கார் மாப்பிளைய பிடிக்கல என்று நேரில் பாத்து சொல்ல சொல்லி 😀
ஒரு வேளை மகளின் காதலன் ராம் தான் என தெரிந்து தான் அனுப்பினாரோ...??😀
இந்த ராம் பய செய்ததது சரிஎன்கிறீங்க ..???காதலுடன் பழகுவாராம் அப்புறம் அவள அம்போன்று விட்டு விட்டு யு.எஸ் க்கு போவாராம் ....நல்லாதான் பேசுறான் ... ஆள் மயக்கி இவன்😀திரும்ப வந்து என்னமா ஐஸ் மழையை பொழியுறான்😀
அடிப்பாவி ..!காயூ என்னா ..!ஓடிப்போயி கல்யாணம் செய்துக்கப்போகிறாயா....🤧நீ நடத்து ராசாத்தி நடத்து 😀
சூப்பர் சகோ😀
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
 
  • Like
Reactions: V Ramakrishnan

V Ramakrishnan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 4, 2023
6
5
3
Salem
காதல் அழகானது தான் 😀
அப்பா சரியா தான் சொல்லி இருக்கார் மாப்பிளைய பிடிக்கல என்று நேரில் பாத்து சொல்ல சொல்லி 😀
ஒரு வேளை மகளின் காதலன் ராம் தான் என தெரிந்து தான் அனுப்பினாரோ...??😀
இந்த ராம் பய செய்ததது சரிஎன்கிறீங்க ..???காதலுடன் பழகுவாராம் அப்புறம் அவள அம்போன்று விட்டு விட்டு யு.எஸ் க்கு போவாராம் ....நல்லாதான் பேசுறான் ... ஆள் மயக்கி இவன்😀திரும்ப வந்து என்னமா ஐஸ் மழையை பொழியுறான்😀
அடிப்பாவி ..!காயூ என்னா ..!ஓடிப்போயி கல்யாணம் செய்துக்கப்போகிறாயா....🤧நீ நடத்து ராசாத்தி நடத்து 😀
சூப்பர் சகோ😀
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐

இதெல்லாம் ராம் செய்த வேலை தான். அவன் செய்ததை நான் நியாயப் படுத்த வில்லை. ஆனால் பணம் 💸 என்பது தேவையாகத்தானே இருக்கிறது, வாழ்க்கை வாழ. அவன் யூ.எஸ் இல் இருந்து அவளை கான்டாக்ட் செய்தது பொழுது, அவள் அவனுடைய காலை அட்டென்ட் பண்ணாமல், அதை ப்ளாக் வேறு செய்து விட்டாள். அவனுக்கு ஆன்-செட்க்கு யூ.எஸ் போகவேண்டும் என்பது அவன் வாழ் நாள் கனவு. Passion. We can't tell he's wrong. காதலில் ஊடல் சகஜம் தானே !? உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நேர்மையாக, எதார்த்தமான உண்மை யான விமர்சனம்.
 
  • Like
Reactions: Thani