ஓடர் செய்த உணவுக்கு பணம் கொடுத்துவிட்டு, காரை நோக்கி அவள் கையை பிடித்தபடி சென்றவன், கார் முன் கதவை திறந்து அவளை ஏறு என்றான்.
அவளோ மறுக்க.
"உன்னை..." என்றவாறு, அவளை உள்ளே தள்ளி, கதவை அடைத்தவன், மறுபுறம் தான் ஏறிக்கொண்டு வண்டியை எடுத்தான்.
"உன்னோட பெரிய தொல்லை துஷி. இப்பிடித்தான் எதுக்கெடுத்தாலும் அடம் பிடிப்பியா? இப்பிடி இருந்தா எனக்கு ஆகாது.. மாத்திக்க பாரு" என்றவனை முறைத்தவள்,
"எனக்கும் தான் பிடிக்கேல.. எதுக்கு என்னை கட்டாய படுத்துறீங்கள்? அதாேட யாருக்காகவும் என்னை மாத்த மாட்டன்" என்றவளை திரும்பி பார்த்தவன்.
மாத்திக்காத... எனக்கென்ன? உன்னை எப்பிடி வழிக்கு கொண்டு வாறது என்டு தான், எனக்கு தெரியுமே! அதோட மற்றவங்க அடம் பிடிச்சா பிடிக்காத எனக்கு, நீ அடம் பிடிச்சா மட்டும், ஏதோ தெரியேல.. பிடிக்குது...
அப்ப தானே உன்னை அடக்கிற மாதிரி, அங்க இங்க தொட்டு ரொமான்ஸ் பண்ணலாம்" என்று கண்ணடித்தவன் பேச்சு கோபத்தை கூட்ட, பார்வையை கண்ணாடிக்குத் திருப்பினாள்.
சிறிது நேரத்தில் பெரிய கட்டிடத்தின் முன்பு கார் நிற்பதை கண்டவள், அந்த கட்டிடத்தை காரில் இருந்த படியே தலையை மட்டும் வெளியே நீட்டிப்பார்த்தாள்.
அது ஒரு பழம் பெரும் உணவகம் என்பதும், அதன் பவளவிழா மிக அருகில் தான் கொண்ட பட்டிருப்பது அங்கு அலங்கரிக்கபட்டு தங்க நிற எழுத்துக்காளால் காட்சிப் படுத்தப்பட்ட திகதியே சொன்னது.
அதை கவனித்தவள்,
"இங்க எதுக்கு வந்தம். வேற சின்னதாக இருக்கிற கடைக்குப் போகலாம்" என்றவள் காரை விட்டு அசையவில்லை.
காரிலிருந்து இறங்கியவன், கொஞ்சம் முன்னம் முரண்டு புடிச்சா, என்ன பண்ணுவன் என்டு சொன்னது மறந்தா பரவாயில்ல" என அவள்புற கதவை திறக்க போனவனை தள்ளி விட்டு, தானே இறங்கி கொண்டாள்.
"அப்பிடி வா வழிக்கு.." என்று புன்சிரிப்பொன்றை சிந்தியவன், முன்னே நடக்க, அவனை பின் தொடர்ந்தாள்.
முதலில் வரவேற்பறை சாதாரண கண்ணாடியினாலே ,பொருத்தபட்டிருந்தது. அதை தாண்டி உள்ளே அழைத்து சென்றான்.
உள்ளே வானம் தெரிவது போல் வெட்டை வெளி, கிராமத்தின் தொன்மையை எடு்த்து கூறும் விதாமாக, செயற்கையாய் வெளிநாட்டு பிரஜைகளை கவரும் விதத்தில், இரு புறங்களிலும் வயல்கள்... நடுவே மாட்டு வண்டிப்பாதை.. மாட்டு வண்டியின் மேல், உழவன் கலப்பையை தோளில் சுமந்து, மாடுகளை விரட்டுவது போலிருந்தது.
சற்று தள்ளி, பனை ஓலை குடிசை, குடிசை வாசலில் பெண் ஒருத்தி கோலம் போட்டுகொண்டு இருக்க, அருகே பெண்கள் உரல் இடித்துக்கொண்டிருந்தனர்.
வயலில் சில பெண்கள் களை பிடுங்குவது போலவும், மரக்கிளையில், உணவுபாத்திரம் தொங்க விட்டுருப்பது போலவும். இறுதியாக எண்ணெய் ஊற்றும் செக்கில், இரண்டு காளைகளை கட்டி, செக்கை இழுக்க விட்டு, அதை வயதானவர் விரட்டுவது போலவும், அனைத்துமே செயற்கையாக உருவாக்கியிருந்தனர்.
உண்மையில் ஒரு கிராமத்தில் நிற்கும் உணர்வை கொடுத்தது.
அனைத்தையும் ஒரு பிரமிப்புடனே பார்த்துக்கொண்டு வந்தவளிடம்,
"இடம் நல்லா இருக்கா?என்றான்.
"உண்மைக்கும் கிராமத்து மண்ண மணக்கிற மாதிரி இருக்கு."
"இதெல்லாம் வெளிநாட்டு காறங்கள கவர்றதுக்கு தான். அதுவுமில்லாம இங்க முழுசா கிராமத்து முறையில தான் சமையல் செய்வினம்.
வந்து சாப்பிட்டு பாரு!" என்றவன் அந்த வெளியை தாண்டி, சிறிய குடில்களாக, மேற்புறம் மாத்திரம் ஓலையால் வேயப்பட்டிருந்த, ஒற்றை மேசையுடைய குடிலுக்குள் நுழைந்தனர்.
"என்ன சாப்பிடுகிற?"
அவள் தான் அந்த உணவகத்தை தன்னை மறந்து ரசித்து கொண்டிருக்கிறாளே! எங்கு இவன் பேச்சை காதில் விழுத்தினாள்.
அதற்கு மேல் அவனும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அந்த உணவகத்தில் என்ன ஸ்பெஷலாே அதை ஆடர் கொடுத்தவன்.
"ஹோட்டல் பிடிச்சுருக்கு போல.
நாங்களும் இப்பிடி ஒரு ஹோட்ல் ஓபன் பண்ணிடலாமா?" என்றான்.
அவ்வளவு நேரமும் அழகினை ரசித்திருந்தவள், அவன் கேள்வியில் திரும்ப,
"என்ன பண்ணிடலாமா?" என்றான் மீண்டும்.
"என்னை ஏன் கேக்கிறீங்கள். உங்களுக்கு சரி என்டு பட்டா, செய்ய வேண்டியது தானே!" என்றாள் சாதாரணமாக.
"என்ன இப்பிடி சொல்லிட்ட? சேர்ந்து வாழப்போற உன்னை கேட்காம யாரை கேட்கிறு.?" என்றவனை ஒரு மாதிரியாக பார்த்தவள்,
"நீங்களா ஒரு கற்பனை பண்ண வேண்டாம்.
எனக்கு வீட்டில வேற மாப்பிள்ளை பாத்து வைச்சிருக்கினம். நான் அவரை தான் கல்யாணம் பண்ணப் போறன்" என்றாள் எடுத்தெறிந்து.
"ஓகே பண்ணு... கூடவே என்னையும் பண்றது." என்றான் மிக இலகுவாக.
"என்ன உளர்றீங்கள்? என்னை பாத்தா அப்பிடி பட்ட பொண்ணு மாதிரியா இருக்கு.? என்றாள் அவனது பேச்சில் கோபமாகி.
"இல்லைத்தான். அப்ப அவனை விட்டிடு!"
"முடியாது... அப்பா பாத்த மாப்பிள்ளையை தான் நான் கட்டிப்பேன்"
"சரி விடு! என் கேள்விக்கு பதில சொல்லு.
நான் உன்னை விரும்புறது உனக்கு தெரியுமா? தெரியாதா?"என்றான்.
அவளுக்கு தான் தெரியுமே! எப்படி அவனிடம் இல்லை என்பாள்.
பதில் கூறாது அமைதி காத்தாள்.
"சொல்லு துஷி! உனக்கு தெரியுமா இல்லையா?"
"அது அது..." தடுமாற,
"தெரியும்...... ஆனா அதை உன்ர வாயால சொன்னா தான்... உன்ர கௌரவம் என்னாகிறது. அது தான் அமைதியாயிட்ட.
ஓகே! இவ்ளோ நாள்ல ஒரு நாள் கூட என்னில உனக்கு காதல் வரேலயா?
சரி அப்பல்லாம் வர வேண்டாம்.... உன்னை கிஸ் பண்ணேக்க கூடவா உனக்கு அப்படி ஒரு எண்ணம் வரேல...
என்னில அந்த மாதிரியான எண்ணம் இல்லை என்டா அன்டைக்கே அடிச்சிருக்கலாமே! ஏன் என்ன நீ ஏசவோ அடிக்கவோ இல்லை?
உன்ர மனசில நான் இருக்கிறன். அப்பிடி தானே!" என்றான்.
எதுவும் கூறாது அமைதியாக, தலை குனிந்திருந்தவளை பார்க்ங கோபம் வந்தது அவனுக்கு.
"சொல்லு துஷா! ஏன் அமைதியா இருக்கிற?
"இல்லை இல்லை .......எனக்கு உங்கள்ல லவ் வரேல.
எல்லாத்தையும் கட்டாய படுத்தி செய்ய வைக்கிறவர் தானே நீங்கள். காதலையும் அப்பிடி நினைச்சிட்டீங்களோ!
மற்றவைக்கு இல்லாத எக்கிறிமெண்ட் சட்டம் எனக்கு மட்டும் ஏன் என்டு இப்பவரைக்கு தெரியேல..
என்ன செய்தாலும் குற்றம்...
வர்மன் அண்ணாவேட கதைச்சா குற்றம்.. சிரிச்சா குற்றம்... நீங்க சொன்னதை மட்டுந்தான் நான் கேக்கோணும்.
அப்பிடி இல்ல என்டா கழுத்தை பிடிச்சு நெரிக்கிறது.
இப்பிடித்தான் அன்டைக்கும்....." என்று மேல சொல்ல முடியாமல் தடுமாறியவள்,
கிஸ் பண்ணேக்கயும் எதாவது பண்ணிடுவீங்களோ என்டு தான் பேசாம இருந்தன்." என்று கண்களால் கண்ணீர் வடிய கூறியவளை கூர்ந்து நோக்கியவன்,
"உன்ர பார்வையில எந்தளவுக்கு மட்டமான ஆள் நான் என்டுறது விளங்குது." உடைந்த குரலில் கூறியவன் விழிகளில் அத்தனை வேதனை.
"சரி பசி என்ட.. சாப்பிடு போவம்." என்று யாருக்கே கூறுவதைப்போல் கூறிவிட்டு, உணவில் கவனமாக, கடமைக்கே என்று அவளும் சாப்பிட்டாள்.
அந்த உணவகத்தில் சாப்பாடு அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் இருவரும் இருந்த நிலையில், எதுவுமே ருசிக்கவில்லை.
உண்டு முடித்ததும், அவளை வீட்டில் இறக்கியவன், எதுவும் சொல்லாமலே வண்டியை எடுத்தான்.
அவளுக்குத்தான் ஏதோ போல் இருந்தது.
'எப்பயோ ஒரு நாள் இது தெரியத்தானே வேணும். இதுவும் நல்லதுக்கு தான்' என்று உள்ளே சென்றவளை வரவேற்றாள் சைலு.
"எங்க மேடம்... பெட்டியெல்லம் ரெடியா வைச்சிருக்கிற மாதிரி இருக்கு"
"நாளைக்கு பாட்டி வீடு போகிறன்.. அதுக்காக தான்" என்றவள் குரலில் தான் சுருதியே இல்லை.
"அதுக்கு ஏன் மூஞ்சியை தூக்கி வைச்சு சொல்லுற.?
இதுக்கு தானே இவ்வளவு போராடின... பிறகு எதுக்கு சோகம்?"
"எல்லாம் உன்னை பிரிஞ்சு போறதது தான்" என்றாள் மீண்டும் அதே போல்.
"ஆமாடியம்மா... நான் அவ்ளோ முக்கியமானவளா உனக்கு. எதையோ மறைக்கிற.... கத்தரிக்கா முத்தினா சந்தைக்கு வராமலா போயிடும். அப்ப கவனிக்கிறன்" என்றவள்,
"எல்லா பொருளையும் எடுத்து வைச்சிட்டியா?" என்று தன் அலுமாரியை திறந்தவள்,
"அடி பாவி! நீ படு வேகம் தான். வழிச்சு துடைச்சிட்ட" என்று தனது துணியை ஒதுக்கியவள் கண்ணில் பட்டது அந்த டைரி.
"எல்லாம் எடுத்திட்ட என்ட... இந்த டைரிய விட்டுட்ட.. அது சரி... நீ டைரி எல்லாம் எழுதுவியா?"
"எழுதுவனே...! கவிதை மட்டும் தான் எழுதுவன்" என்றவள் அதை வாங்கிக்கொள்ள கையினை நீட்டினாள்.
இருவரது பரிமாற்றத்தில் டைரி நழுவி கீழே விழுந்தது.
"சாரிடி... நழுவிடிச்சு" என்று அதை எடுத்து துஷாவிடம் கொடுத்தவள், தரையில் ஒரு படம் கவிழ்ந்திருப்பதை கண்டு,
"இது யாரு போட்டோ?" என்று அந்த படத்தை திருப்பினாள்.
"ஏய்...! எப்ப துவக்கம் இதெலலாம் நடக்குது? படம் பரிமாறிக்கொள்ளுற அளவுக்கு போட்டுதா?" என்றவள் பேச்சு
புரியாமல்,
"என்ன சொல்லுறா நீ?" என்றாள் துஷா.
"நான் சொல்லுறது இருக்கட்டும்... இது என்ன?" என்றாள் கையிலிருந்த போட்டோவை காட்டி.
அதை வாங்கி பார்த்தவள்,
"இது எப்பிடி என்ர டைரிக்க வந்திச்சு.?"
"ஆ..... காக்கா கொண்டுவந்து வைச்சிருக்குமோ?" என்று சைலு கேலி செய்ய.
"சீரியஸா எனக்கு தெரியேல." என அவள் குழம்பி நிற்க.
"மச்சி..! எனக்கொரு டவுட்!
என்ன பாத்தா உனக்கு லூசு மாதிரி தெரியுதா என்ன?
உன்ர ஆளோட போட்டோ, உன்ர டைரிக்க இருந்தா நீ தான் அதுக்கு பொறுப்பு!
நீயாவே கொண்டுவந்து வைச்சிட்டு, இப்ப நான் கண்டுட்டன் என்டு, ஒன்டுமே தெரியாத பாப்பா மாதிரி நடிக்கிற..
யார் யாருக்கோ ஆஸ்கார்... டாக்டர் .... நடிகர் திலகம் பட்டம் எல்லாம் தாராங்கள். உன்னை ஏமாத்திட்டாங்களே! என்னா நடிப்புடா சாமி!"
"நம்புடி...! சத்தியாமா நான் வைக்கேல... நம்பினா நம்பு... இல்ல என்டா போ!" என்றவள், அந்த போட்டோவை இருந்த டைரியில் வைத்து, தனது பெட்டியில் வைத்தாள்.
"கவனம்டி... ஆளு துளைஞ்சிட போராரு" என்றாள்.
'அது தான் அவன் மனம் நோகுறமாதிரி பேசியாச்சே! அப்புறம் என்ன என் ஆளு?' என நினைத்தவள். மீண்டும் தனது உடமைகளை சரி பார்த்தாள்.
விடிந்தால் பாட்டி வீட்டிற்கு செல்ல போகிறோம். என்ன வென்று தன் உறவுகளை எதிர்கொள்ள போகிறோம்.
பாட்டியைப் போலவே மற்றவங்களும் தன்னோடு சாதாரணமாக பழகுவார்களா? இல்லை வேற்று மனிதர் போல ஒதுக்கி வைச்சிடுவாங்களா?
பழக்க வழக்கங்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்குமே!
என்னால் அவர்களை சமாளிக்க முடியுமா?' என்று ஆயிரம் கேள்விகளை சைலுவிடம் திரும்ப திரும்ப கேட்டு, கடுப்பாக்கியவளை சினத்துடன் பார்த்தவள்.
"கொஞ்சமாவது மனசாட்சி இருக்காடி?" என்று இம்முறை அழாத குறையாக முகத்தை வைத்தவள்,
"நடு சாமம் ஆக அரை மணித்தியாலம் தான் இருக்கு.
நாளைக்கு என்னை பிரிஞ்சு போகோணுமே' என்ட எண்ணமோ கவலையோ மனசில வரலையா உனக்கு?
சரி வாராட்டிக்கும் பறவாயில்லை. கொஞ்ச நேரமாச்சும் தூங்க விடு! உனக்கு புண்ணியமா போகும்" என்றவளை முறைத்தவள்.
" என்னை விட நித்திரை தான் முக்கியமா உனக்கு"
"இவ என்ர லவ்வர்... விடிய விடிய ரொமான்ஸ் பண்றதுக்கு. போடி இவளே!
ரொமன்ஸ்கு கூட இவ்ளோ நேரம் முழிக்க மாட்டினம்டி... ரவியே ஒன்பது மணிக்கு மேல தொந்தரவு பண்ணேல.... ஆனா நீ....!" கொந்தளித்தவள்,
இதுக்குமேல இருக்க முடியாது என பெட்சீட்டை தலைவரை இழுத்து போத்தியவள்,
"இன்னும் பதினைந்து நிமிசம் வெயிட் பண்ணு. பேச்சு துனைக்கு சாம பேயி வரும், அத புடிச்சு உன் சந்தேகங்களை கிளியர் பண்ணு." என்றவள் படுத்து விட்டாள்.
பேய் என்றதும் துஷாவுக்கும் பயம் எட்டிப்பார்க்க, அவளும் படுத்து விட்டாள்.
விடியல் தன் கடமையை சரி வரவே செய்தது.
அன்று சனிக்கிழமையாகையால், சைலுவிற்கு கல்லூரி விடுமுறை. மைனாவும் துஷாவை வழியனுப்ப காலையிலே வந்து விட்டிருந்தாள்.
வாசன் அவளை அழைத்து செல்ல பதினொரு மணியளவிலே வந்தான்.
இவ்வளவு நேரம் இருந்த கலகலப்பு மறைந்தது.
துஷாவை அணைத்த தோழியர்கள் இருவரும்,
"புது இடம்டி... பாத்தி நிதானமா நடந்துக்கோ. யாராவது எதாவது சொன்னாலும், நீ கோபபடாத... பொறுமையா இரு துஷா. எப்பிடியும் இனி அவங்க மட்டும் தான் உனக்கு சொந்தம் என்டுதை மட்டும் நினைவில வைச. எதுக்கும் பயப்படாத.... இனி எல்லாம் நல்லதாவே நடக்கும்.
நான் அம்மாக்கு போன் பண்னேன் துஷா. எல்லாமே சொன்னா.... நானும் உன்னட்ட எனக்கு தெரியும் என்டு காட்டேல.... எங்க அத திரும்ப உனக்கு நினைவு படுத்த விரும்பேல.." என்று கண்கலங்கியவள்.
"நீயும் சால்லேலயேடி! அவ்வளவுக்கு நான் முக்கியமில்லாதவளா போயிட்டன்." என்றவளை இறுக அணைத்தவள்,
"அப்பிடி இல்லடி! உன்னட்டையும் இத சொல்லி.... நீ என்னை அனுதாபமா பாக்கிறத, என்னால ஏற்க முடியாது. முன்னம் எப்பிடி சாதாரணமா இருப்போமோ, அப்பிடி இருந்தா தான் என்னோட மனசு கொஞ்சமாச்சும் அந்த நினைவில இருந்து மீண்டுவரும் சைலு.
இது தெரிஞ்சா எப்பவும் சண்டை போட்டுட்டே சாதாரணமா இருக்கிற மாதிரி உன்னால இருக்க முடியாது. அதனாலதான் சொல்லேல... மன்னிச்சிடு சைலு" என்று அழுதவளை.
இழுந்து நிறுத்தியவள்,
"கண்ணால தண்ணிய திறந்து விட்டது காணும்... பேசாம நீ இடத்த காலி பண்ணு." என்றவள் வாசனிடம்,
"அங்கிள்.... இவள முதல்ல கூட்டிக்காெண்டு போங்கோ..
எதுக்கும் யோசிக்காம போயிட்டு வா! அடிக்கடி எங்களையும் கண்ணுக்குள்ள வைச்சுக்கோ" என்றாள்.
"ம்ம்... போயிட்டு வாறேன்டி" என்று மீண்டும் இருவரையும் கட்டி அணைத்து, இருவரிடமும் இருந்து விடைபெற்றாள்.
தென்னை மரத்தின் நிழலில் கயித்து கட்டில் போட்டு, அதில் அமர்ந்தவாறு, தோங்காய் உரித்து கொண்டிருந்த இரண்டு வேலையாற்களிடம் ஊர் புதினங்கள் புடுங்கிகொண்டிருந்தார் ராசா.
முன்பு விவசாயம் செய்து கொண்டிருந்தவர், வயது போய்விட்ட காரணத்தினால், பேர மக்களின் கண்டிப்பான வார்த்தைக்கு கட்டுப்பட்டு, வீட்டிலே இருந்து விட்டார்.
ஆனால் இடை இடை சென்று தன் மகன் மார்களுக்கு உதவிக்கொள்வார். அதுவும் பேரபிள்ளைகள் வீட்டில் இல்லாத சமயத்தில் மட்டும்.
மூத்தவன் மணிவண்ணன் புனிதா என்ற பெண்ணை திருமணம் செய்து காவியா, இலக்கியா ஜெகன் என்று அவனுக்கு மூன்று பிள்ளைகள்.
இரண்டாவது பொண்வண்ணனுக்கு மல்லியை திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு சாய்ஸ்ரீ, கௌதம் என இரு மகன்களும்.
இளவண்ணன் மனைவி ஊர்மிளா கற்பகம், ஸ்ரீநாத் என்ற பிள்ளைகளும் உண்டு.
"ஏன்டா முருகு.... உன்ர மச்சான், உன்ர காணி தனக்குத்தான் சொந்தம் என்டு கோட்ல வழக்கு போட்டானே... அது இப்போ எந்த நிலைமையில நிக்குது.?" கேட்டது ராசாவே தான்.
"அது தான் ஐயா! அந்த படுபாவிட்ட கொஞ்ச காசை கடனா வாங்கிப்போட்டு.... என்ன ஏது என்டு தெரியாம கையெழுத்து போட்டுடன்.
இப்போ வழக்கு போற போக்க பாத்தா.... அவன் பக்கம் தான் தீர்ப்பு வரும் போல இருக்கு என்டு வக்கீலே சொல்லிட்டாருய்யா! அது போனா போகட்டும். அது வெறும் கல்லு பூமிதானே. அதில விவசாயமும் செய்ய முடியாது... அவனே வைச்சிருக்கட்டும்...
சும்மா அந்த கணிக்காக திரும்ப வழக்கு போட்டு, வக்கீலுக்கு குடுக்கிற காசே காணும்... புதுசா நல்ல விளைச்சல் காணியா வாங்கிடலாம் என்டு விட்டுட்டேன்."
"அதுவும் சரிதான் முருகு! ஆனா நீ இப்பிடி விட்டுட்டா அவன் உன்னை இளிச்சவாயன் என்டு நினைச்சிடப்போறான்டா.... பாத்து நட" என்றார்.
"எப்ப என்ர காணிய தன்னோட நிலம் என்டானோ, அப்பவே எனக்கும் அவனுக்கும் இருந்த உறவ அறுத்து விட்டுட்டேன். இனி அந்த நாதாரி அது இது என்டு வரட்டும், என்ர அருவாள் தான் பேசும்" என்றவன் தேங்காயை உரிக்க தொடங்க.
வெத்தலை பெட்டியை திறந்து, அதில் இருந்து வெற்றிலையை எடுத்து கிழிக்கும் நேரம், வாசலில் கார் நுழைவதை கண்டவர், அதையே பார்த்திருந்தார்.
தூரல்தில் இருவர் காரிலிருந்து இறங்குவது தெரிந்தது. ஆனால் அந்த உருவம் தான் யாரென்று தெரியாததனால்,
"டேய் முருகு! கார்ல யாரு வாறதென்டு பாரு! எனக்கு தூரப்பார்வை தெரியிறது கொஞ்சம் குறைஞ்சிட்டுது" என்றார்.
"தூரத்து பார்வை மட்டுமில்லை தாத்தா! கிட்டப் பார்வையும் தான் குறைஞ்சிட்டுது. எங்க அதையும் சொன்னா கௌரவ குறைச்சல் என்டு தானே, சொல்லேல" என்று கற்ப்பகத்தின் குரல் அவர் பின்னால் இருந்து வர.
"வாடி வாயாடி! எங்க இம்மளவு நேரம் வீடு அமைதியா இருக்கே என்டு நினைச்சன்.
வந்திட்டியா? இனி அந்த பேச்சுக்கே இடமில்லை" என்று அவள் பின்னால் வந்த காந்தி சொல்ல.
அதற்கிடையில் காரிலிருந்து இறங்கிய வாசன், துஷாவை அழைத்துக்கொண்டு அவர்களை நெருங்கினான்.
காந்தியோ அவனை கண்டதும்,
"வாப்பா.... பறவாயில்லையே! அம்மா பேச்சையும் மதிச்சு பொண்ணை கூட்டியந்திருக்கிற" என்றவள் துஷாவை அருகில் வரும்படி அழைத்து.
"ஏங்க.... நேற்று சொன்னேனே. வாசன் சொந்தகார பொண்ணு.... விடுதியில தங்கி இருக்கா என்டு... அவ இவள் தான்" என்று அவளை காட்டினார்.