• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

27 காற்றோடு கலந்த விதையவள்

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
"ஓ... இவள் தானா? இங்க வாம்மா" என்று அழைத்து கட்டிலில் இருத்தியவர்.


"இவா எல்லாம் சொன்னா! இங்க இருக்கிறவங்க எல்லாருமே உனக்கு பாட்டி தாத்தா மாமா மச்சாள் முறை தான்." என்றவர் அன்பில் நெகிழ்ந்தவள், ம்ம் என தலையசைத்தாள்.
அவர் முன் வந்த கற்பகம்,

"யாரு தாத்தா இவா?" என்க.


"வாயடி நீ கொஞ்சம் பேசாம இருக்கிறியா? எப்ப பாரு பெரியவேன்ர கதைக்குள்ள மூக்க நூழைச்சிக்கொண்டு.... போய் படிக்கிற வேலையை பார்" என்று காந்தி அவளை விரட்டினார்.


"ஏய் கிழவி! நீ பேசாம போ! நான் ஒன்டும் உன்னட்ட கேக்கேல... நான் தாத்தாட்ட தான் கேட்டன்... நீ தான் என்ர கதையில தலையிடுற" என்றாள் அவள்.
அடிச்சனன்டா...!
வாய்.. வாய்... பூராவும் கொழுப்பெடுத்து திரியுது. எல்லாம் இவர் தாற இடமடி! உனக்கு முன்னுக்கு அவர் என் புருஷன்... அது நினைவில இருக்கட்டும்."


"ஆமா இவயள் இப்பத்தான் புது தம்பதி. அது அந்தக்காலம் கிழவி! இப்ப உனக்கு தாத்தா சொந்தமில்லை... பேர பி்ள்ளைங்க எங்களுக்கு தான் சொந்தம்.


பாருங்க தாத்தா! இந்த கிழவிக்கு நிறைய தடவை சொல்லிட்டன்... என்னை அந்த பெயர் சொல்லி கூப்பிட வேண்டாம்டு... யார் இவங்களுக்கு சொன்னது? எனக்கு இந்த பெயர் வைக்க சொல்லி... என்னோவ படிக்கிறவளுங்க எல்லாம் என்ன கறுப்பு கறுப்பு என்டு கூப்பிடுறாங்க.

எனக்கு தான் அந்த பெயர் வேண்டாம் என்டு மாத்தி வைச்சுகிட்டன் எல்லே."


"ஆமாடி! நீ பேரை மாத்தி வைச்சிட்டா சரியா? நீ கருப்பு தான். உன்னை எத்தினை வாட்டி சொன்னன்.. என்னை கிழவி என்டு சொல்லாதை என்டு.
ஒரு நாளைக்கு என் கையிலை மட்டும் மாட்டு.... வௌக்குமாத்தாலையே நாலு போடுறன்" என்றவளை முறைத்தவள்.

"தாத்தா!". என்றாள் சினுங்கலாக.


"நீ வாடா!" என்றவர்,


"எதுக்கு காந்தி சின்ன பிள்ளையோட மல்லுக்கு நிக்கிற? முதல்ல வந்தவயல வாசல்ல நிக்க வைச்சிட்டா, சண்டைய போடுவீங்க.? உள்ள கூட்டிட்டு போம்மா" என கடிந்து கொள்ள,
'எல்லாம் இந்த வாயாடியால தான்" என்றவர்,

"நீ வாம்மா உள்ள.... இது நெடுவ நடக்கிறது தான்.
அவளுக்கு என்னோட சண்டை போடட்டிக்கு நித்திரை வராது.
அப்பிடியே அவ அத்தைய உரிச்சு வைச்சிருக்கா!
அவளும் இப்பிடித்தான்.. அவ பாட்டியோட சண்டை போட்டுக்கொண்டே இருப்பாள்.

இவரும் அவளுக்கு பரிஞ்சு பேசிட்டே இருப்பார். இப்பவும் அதைத்தான் செய்யிது இந்த மனுசன்." என்று பெரும் மூச்சை விட்டவரை பார்த்தவள் மனதுள் கஷ்டமாக இருந்தாலும், வெளியே சிரித்து வைத்தாள்.
உள்ளே அழைத்து வந்து பேசிக்கொண்டிருந்தவர்கள், குடிக்க எழும்பிச்சம் சாறு கொடுத்து விட்டு,

"அடியே வாயாடி! இவளுக்கு அத்தை அறைய காட்டு" என்றார்.


"பாட்டி.." என்றாள் ஆச்சரியமாக.
"என்னடி?"

"நீ அத்தை ரூமை தானே சொல்லுற... அங்க தான் யாரையுமே விடமாட்டியே! இப்ப இதென்ன புது பழக்கம்"

"வேறை அறை இல்லை என்டு அர்த்தம். எல்லா அறையிலயும் ஆக்கள் இருக்கினம்... இவள் தங்க இடமில்ல. அதான்" என்றார்.

"எனக்கென்ன? நீ சொல்லுற என்டு, காட்டுறன், அவ்ளோ தான்.." என்றவள் அவளை அழைத்து சென்றாள்.
தேவி அறையை திறந்து விட்டவள்,
"இனி உங்கட ரூம் இது தான்"

"சூப்பரா இருக்கு" என்றாள் துஷாவும்.

"ஆமா... இந்த அறை பாட்டிக்கு எப்பவும் ஸ்பெஷல் தான். யாரையுமே உள்ள விடமாட்டுது. என்னை கூட வருஷம் தீபாவளிக்கு தான் சுத்தம் பண்ண விடும்" என்க.

"அப்பிடி இந்த ரூமிலல யாரு தங்கினது?" என்றாள்.


"அத்தை எல்லாருக்குமே ரொம்ப செல்லமாம்... பாக்க என்னை போலவே இருப்பாங்களாம். அந்த போட்டோவில இருக்கா பாரு" என்று தேவியின் படத்தை காட்டினாள்.
கிட்ட தட்ட கற்பகத்தை போல் தான் இருந்தாள் அவள் அன்னை.

"இப்போ அவா எங்க" என்றாள் அறியாதவள் போல.

"காதல் கல்யாணம் பண்ணீடமடு போயிட்டாவாம்.... எப்பவும் பாட்டியும் தாத்தாவும் அவாவை பற்றியே கதைச்சுக்கொண்டு இருப்பினம்"

"காதல் கல்யாணம் என்டா...... ஓடிட்டாங்களா?" என்றாள் மீண்டும் அதே போல்,

" அப்பிடி தான் பாட்டி சொல்லும்... அதனால தான் எங்கட அப்பாக்கள் அத்தையோட பேச்சை எடுத்தாலே கோபபடுவினம். ஆனா பாட்டி தாத்தா மட்டும் தான் கவலை படும். என்ர பெண்ணு மனச புரிஞ்சுக்காம, அவங்க ஓடி போய் யாருமில்லாத அனாதையா தவிக்க விட்டுட்டமே என்டு.

இப்ப பெரியப்பாக்களும் பெருசா அத்தையை பற்றி பேசினா, எதுவும் கதைக்கிறேல.... அப்பா மட்டுந்தான்.... அத்தை பெயர் எடுந்தாலே, வீடு ஆடுற மாதிரி கத்துவார்..."
என்று அத்தை கதை பேசியவள்,


"ஆமா.. உன்ர பேரு என்ன ?" என்றாள்.


"பாத்தியா.... அதை சொல்ல மறந்துட்டன். என்ர பேரு துஷாந்தினி. துஷா என்டு நெருங்கினவ கூப்பிடுவினம்.... உனக்கு எப்பிடி பிடிக்குதோ, அப்பிடியே கூப்பிட்டு!"


"உன்ர பேரை எப்பிடி கூப்பிட்டாலும் நல்லா தான் இருக்கு. என்ர பேரை பாத்தியா.?
கற்பகமாம்..... யாரு கேட்டா இவங்களை எனக்கு பெயர் வைக்க சொல்லி.? நானே வளர்ந்து வந்து வைச்சிருப்பன்" என்றாள் ஆதங்கமாக.


"யாரு உனக்கு இந்த பெயர் வைச்சாங்க.? கொஞ்சம் ஓல்ட் நேம் தான்" என்றாள்.


"கொஞ்சமில்லை துஷா! நிறைய.... இது என்ர அம்மாவோட பாட்டி பெயராம். அம்மா பிறந்து ரெண்டு வருஷத்தால அவங்க இறந்துட்டாங்களாம்... அதனால தாத்தாவுக்கு தனக்கு பிறக்கிற பேத்திக்கு அவங்க பெயர் தான் வைக்கிறதென்று சொல்லி இருக்காங்க.

அதனால தான் அந்த செத்து போன கிழவியோட பெயரை தோண்டி எடுத்து வைச்சிட்டாங்க.



சின்ன வயசில எனக்கு பெருசா தெரியேல. மூன்டாவது படிக்கேக்க, என்னோட படிக்கிற பொடியன், என்ன கறுப்புனு சொல்லிட்டான்... அப்பல இருந்து சண்டை போட்டன் பெயரை மாத்த சொல்லி.


யாரும் கண்டுக்கேல. சின்ன பிள்ளையில நான் நல்ல குண்டா அழகா இருப்பேனா.. அப்ப அண்ணா என்ன பப்ளு என்டு தான் கூப்புடும்... எனக்கும் அது புடிச்சு போச்சு.

அதனால எல்லாரையும் அப்பிடியே கூப்பிட சொல்லி அடம்பிடிக்க, இப்ப எல்லாருமே அப்பிடி தான் கூப்பிடுறாங்கள்.

ஆனா இந்த கிழவியும், கௌதம் அண்ணாவும் தான், கற்பகம் என்டு கூப்பிடுதுகள் "என்றாள்.


"ஓ.... அந்த பெயருக்கு பின்னாடி இவ்ளோ வரலாறு இருக்கா? நீ இவ்ளோ பெயர் சொல்லுறியே, இப்ப எல்லாரும் எங்க போயிட்டினம்? என்றாள்.


"கோவில் திருவிழா தொடங்க போகுது.. எல்லாருமே கோவில்ல திருபணி செய்ய போயிருக்கினம்.... நானும் அங்க தான் நின்டன். தூசி எனக்கு ஒத்துவரேல... பின்பக்கமா கலண்டுட்டன்" என்றாள் சிரித்தவாறு.


"சரி வா... வாசன் அங்கிள் வெளிய இருக்கிறார். அவரை அனுப்பி வைச்சிட்டு வரலாம்" என்று அழைத்துக்கொண்டு பெரியவர்கள் இருக்கும் இடம் நோக்கி சென்றனர்.


"அறை எல்லாம் பிடிச்சிருக்கா?" காந்தி வினவ,


"ம்ம்" என தலையசைத்தாள் துஷா.


"எனக்கு கொஞ்சம் வெளியில வேலை இருக்கு..
பாத்து பக்குமா நடந்துக்கோ! நான் வெளிக்கிடோணும்... பெட்டி கார்ல இருக்கு, என்னோட வா எடுத்து தந்திடுறன்" என்றவன்,


"அம்மா அப்பா நான் போய் வாரன்" என்று எழுந்து கொள்ள,


"ஏன்டா...! இருந்து பிள்ளைகள் வருவாங்கள்.. பாத்திட்டு போவன்"


"இல்லம்மா.... வர நேரமானா.. என்ர வேலை குழம்பிடும்... இவளை கொண்டுவந்து விட சொல்லி பயமுறுத்தினதால தான், என்ர உயிருக்கு ஆபத்தாகிடும் என்டு வந்தன்" என்று அவன் கூறிக்கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து, வீட்டிற்கு வந்த இளவண்ணன், வாசனை கண்டு விட்டு,


"வாங்கண்ணா. .... எப்பிடி இருக்கிங்கள்? என்றான் ஆர்வமாக.


"நான் நல்லா இருக்கேன்டா! நீயும் நல்லாத்தானே இருக்கா" என்றார் மறுவிசாரிப்பாக.


"எங்க.. வராதவ எல்லாம் இந்த பக்கம் திடீர் என்டு வந்திங்கள்" என்றான் நக்கலாக.
முந்திக்கொண்ட காந்தியாே,


"நான் தான்டா வர சொன்னன்...
இவ பெயர் துஷா! வாசனோட உறவுக்காற பொண்ணாம்.... இங்க சூப்பர் மார்க்கெட்ர வேலை செய்யிறாள். எங்கயா விடுதில தங்கி இருந்தாளாம்...

அது தான் நம்ம வாசன் சொந்த கார பெண்ணு நாங்கள் இருக்கேக்க விடுதில தங்கி, கெட்ட பெயரை வாங்கோணும்..
அதான் இங்க வந்து தங்க சொன்னன்" என்றார்.


அவர் காட்டியது அவளை திரும்பி பார்த்த இளவண்ணனான், அவ்வளவு நேரமும் இருந்த சாதாரணமான முகம் மறு நெடியே இறுகிப்போனது.


புருவத்தை உயர்த்தி துஷாவை வித்தியாசமாக நோக்கியவன்,

"எந்த விடுதியில தங்கி இருந்த" என்றான்.


அவள் தான் விடுதியிலே தங்கவில்லையே! எந்த விடுதி பெயரை சொல்லுவாள்? அவளுக்கு அங்கிருக்கும் விடுதி பெயர் தான் தெரியுமா என்ன?
சும்மா ஒரு பெயரை சொல்ல போய் ஏடா கூடாமாக மாட்டி விட்டால்...? என்ன சொல்வதென தெரியாது வாசனை பார்த்தாள்.


அவர்களுக்கு உதவும் விதமாக காந்தியே காப்பாத்தினார்.


"என்னடா நீ! ஏதோ புள்ளையை திருட்டு கேஸ்ல விசாரிக்கிற போல விசாரிக்கிற... எல்லாம் நம்ம வாசன் சொந்தம் தான்... போய் கைய காலை அலம்பிட்டு வா! சாப்பாடு எடுந்து வைக்கிறன்" என்று அவனை விரட்ட, துஷாவையும் வாசனையும் ஒரு வித பார்வை பார்த்தபடி சென்றான் இளா.


"சரிம்மா... நான் வாறன்" என நழுவ பார்த்தவனிடம்,


"சாப்பிட்டு போடா" என்றார் ராசா.


"இல்லப்பா.. அதான் சொன்னனே! அவசரமா வேலை இருக்கு... இன்னொரு நாள் வந்து சாப்பிட்டுகிறன்." என்றவன் ஒரு தலை அசைப்புடன் அனைவரிடமிருந்தும் விடை பெற்று,


"நீ வா துஷா!" என்று முன்னால் நடக்க, பின்னே சென்றவளை, கார் அருகில் சென்றதும் சுற்றி திரும்ப பார்த்தவன்,



"பாத்து நடந்துக்கோ.! இப்ப வந்தானே இவன் தான் சின்ன மாமா. இவனுக்கு தான் அம்மா மேல கோபம் இன்னும் போகேல.உன்னை வித்தியாசமா பாத்தான்.. நானும் கவனிச்சன். நீவேற அப்பாவை உரிச்சு வைச்சிருக்கிற... அதனாலையும் இருக்கும். கொஞ்சம் கவனமாய் இரு! அங்கிள் என் கடமைய முடிச்சிட்டன்.


இனி நல்ல விதமா நடந்துக்கிறது உன்ர பொறுப்பு" என்று பெட்டியை இறக்கி வைத்தவன், முன்பக்கம் சென்று ஒரு பார்சலை எடுத்து வந்து,


" இந்தா... இதில போன் இருக்கு.
என் நம்பரும் சேவ் பண்ணி இருக்கிறன். ஏதாவது என்டா அங்கிளுக்கு போன் பண்ணு! நான் வாறேன்" என்று அவர் கிளம்பி விட, துஷா தன் பெட்டியுடனும் பெரும் குழப்பங்களுடனும் தன் அறை நோக்கி புறப்பட்டாள்.


தனக்கென தரப்பட்ட அறைக்குள் வந்தவள், பெட்டியை ஓரமாக வைத்து விட்டு, கதைவை பூட்டாமல் சிறிது நேரம் கட்டிலில் இருந்து வாசன் சொன்ன வரிகளையே சிந்திக்க தொடங்கினாள்.


'அங்கிள் சொல்லுற பார்த்தா, இளா மாமாவுக்கு என்னில சந்தேகம் வந்திருக்க வாய்ப்பிருக்கு...


ஆனா அம்மா என்னை இங்கு அனுப்பேக்க, என்னில இருக்குற கோபத்தில, யார் உன்னை வெறுத்தாலும், உன்ர சின்ன மாமா என்னில உயிராக இருப்பான்... உன்னையும் அதே மாதிரி கவனிப்பான் என்டாங்களே!


இங்கு பப்லு சொல்லுறத பார்த்தா, மற்றவ மன்னிச்சாலும், இவர் மன்னிக்க மாட்டார் போலயே! ஒரு வேளை மாமா பெயரை மாத்தி சொல்லிட்டாங்களோ அன்னை என்றே தோன்றியது.


உண்மை தெரிய வரும் போது என்னவென்று சமாளிக்க போகிறேன் என்று மனம் கனக்க, தாயின் நினைவுவில் இருந்ததனாலோ என்னவோ!
சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அவள் அன்னையின் புகைப்படத்தை நோக்கி கால்கள் தன் போக்கில் செல்ல, அன்னையின் கன்னங்களை வருடினாள்.


கல்லூரி காலங்களில் எடுக்கப்பட்ட புகைபடமது. அவ்வளவு இளமையாகவும் அழகாகவும் இருந்தாள் தேவி.


"இவ்வளவு வடிவாம்மா நீ...? அதான் டாடி தூக்கிட்டே ஊரை விட்டே போனாரா?
ஆனாலும் நீ எவ்வளவு பெரிய சொர்கத்தை இளந்திருக்க கூடாது. அப்பாவும் இவயலுக்கு குறைஞ்சவர் இல்லை தான்.
எல்லாருக்கும் இணையா முழு பாசத்தை கொட்டினாலும்.

என்னாலையே நீ செய்த வேலையை ஏத்துக்க முடியலையேம்மா!
அவயல் மன்னிப்பினம் என்டு, எப்பிடி நீ இங்க என்னை அனுப்பலாம்.?
யாரென்றே தெரியாத என்னிலயே, எவ்ளோ பாசத்த காட்டினம்,

நீ அவங்க பொண்ணு... எவ்வளவு அன்பா இருந்திருப்பினம்...
இன்னொன்டு கவனிச்சியா நீ..... இருபத்தி மூன்டு வருசமா எனக்கு இப்படி ஒரு சொந்தம் இருக்கு என்று நீ கடைசியா தான் எனக்கு சொன்ன...


அதுவும் இனி என்னை கவனிச்சுக்க யாருமில்லை. எங்க உன்ர பொண்ணு அனாதையா, தனிய விட்டுட்டு போக போறியோ என்டு தான்.. அதிலயும் சுயநலமா நீ யோசிச்சிருக்க..


ஆனா இங்க இருக்கிறவங்களை பாத்தியா? நீ அவங்களுக்கு எவ்வளவு பெரிய துறோகம் செய்தும், ஊரில அவேன்ர பெயரை அசிங்க படுத்தியும், மூச்சுக்கு முன்நூறு தடவைு உன்னை பத்தியே யோசிச்சுக்காெண்டு இருக்கினம்.


பேர பிள்ளைங்களுக்கு கூட நீ செய்ய துறோகத்தை மறந்து, நல்ல விதமாக தான் உன்னை பற்றி சொல்லி வைச்சிருக்கினம்.
ஏன் உன்ர அறையில கூட, யாரையுமே விட்டது கிடையாதாம். அதையும் விட நீ ஓடி போய் கல்யாணம் கட்டிக்கிட்டதை கூட மன்னிச்சு, உன்ர மனச புரிஞ்சுக்காம, வேறு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டம் என்டு கவலை படுறாங்கள்.


நீ எவ்வளவு சுயநலமா இருந்திருக்கிறியேம்மா.... இதில எனக்கே தெரியாம என்னையும் கூட்டு சேத்திருக்கிறியே! உனக்கு இவயல் வேண்டாம் என்டா, எனக்காவது இப்பிடி உறவிருக்கு என்டு, முன்னமே சொல்லி இருந்தா, இவங்க அன்பு மட்டும் போதும் என்டே இங்கையே வந்திருப்பனே!


அப்பாவையும் சும்மா சொல்ல கூடாதும்மா... இவயோட மொத்த அன்பையும் தனி ஒருவனா, வேலையும் கவனிச்சு, உனக்கு இவேன்ர இழப்பு தெரியக்கூடாது என்டு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்.


உன்னை விட டாடி எப்பவும் கிறேட் தான்" என்று தந்தையை பாராட்டியவள், சிறிது நேரம் தாயை ரசித்து விட்டு, பெட்டியில் இருந்த தனது உடமைகளை பிரித்து அடுக்கலானாள்.