ஆனந்தன் வந்த மறுநாளே, வீட்டை விட்டு கிளம்பிப் போய்விட்டான்! தினமும் இயல்பாக மனைவியிடம் அவனால் பேச முடியவில்லை பெரும்பாலும் கைப்பேசியை அனைத்து போட்டிருந்தான்! ஏற்கனவே அவன் வேலை பற்றி குறிப்பிட்டிருந்த காரணமாக சாருவும் கணவனை வித்தியாசமாக நினைக்கவில்லை!
அனிதா பெரும்பாலும் அறைக்குள் அடைந்து கிடந்தாள்! கேட்டதற்கு மட்டும் பதில் சொன்னாளே தவிர,சாருவிடம் அவள் பேசவே இல்லை! ஆனாலும் அவளை பரிசோதித்து, தேவையான மருத்துவம் செய்தாள்! அந்த நேரத்தில் கூடவே நின்றார் விசாலாட்சி! சொல்லப் போனால் அவளுக்கு உணவை அவர்தான் கொண்டு போய் கொடுத்தார்! பணியாட்கள் அந்த அறையை சுத்தம் செய்ய வரும் சமயமும் அவர் அங்கே இருப்பார்! ஆதலால் அவர்களும் அவளுடன் பேச எத்தனிக்கவில்லை! அவர்களை பொறுத்தவரை அவள் பெற்றோரை இழந்த துக்கத்தில் இருக்கிறாள்!
அன்று பதிமூன்றாம் நாள், காரியம்!
ஆனந்தன் அன்று காலையில் தான் வந்திருந்தான்! சாருவும் விடுமுறை எடுத்து இருந்தாள்! அவளது மனது ஒருவித எதிர்பார்ப்புடன் இருந்தது!
காரியம் எல்லாம் முடிந்து, அன்னதானம் செய்து முடித்துவிட்டு,வீட்டிற்கு வந்துவிட்டனர்! அனிதா அவளது அறைக்கு சென்று விட, ஆனந்தனும் தங்கள் அறைக்கு செல்ல படிகளை நோக்கி நடந்தான்!
சாருபாலா எப்படி கேட்பது என்று தயங்கியபடி, கூடத்தில் அமர்ந்திருக்க, விசாலாட்சி, உடையை மாற்றிவிட்டு, அங்கே வந்து அமர்ந்தார்!
"நீ இப்பவும் உன் முடிவுல உறுதியாக இருக்கியா?"
என்றார்!
மாடிப்படிகளில் காலை வைக்கப்போன ஆனந்தன் அன்னையின் குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான்! அவரும் அவனைப் பார்த்தும் பாராதவராக, திரும்பிக் கொண்டார்!
"நிச்சயமாக அத்தை, சொல்லுங்க! யார் அந்த ஆளு?"
"இப்பவும் சொல்றேன்,நீ கேட்கிறதால தான் நான் சொல்றேன்! அதை மனசுல வச்சுக்கோ! அதே போல நான் சொன்ன பிறகு நீ வாக்கு மாறக்கூடாது!"
"அதெல்லாம் மாட்டேன்! நீங்க சொல்லுங்க!"
"ஆனந்தன் தான் அனிதாவோட பிள்ளைக்கு அப்பா!" அவள் விஷயத்தை உள்வாங்க அவகாசம் கொடுப்பது போல நிறுத்தி நிதானமாக உரைத்தார்!
சாரு, மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்வில், கண்கள் அகன்று நீர் கோர்த்துக்கொள்ள, முகமே சிவந்து விட்ட நிலையில்.. சிலகணங்கள் அப்படியே அசைவற்றுப் போனாள்!"
"என்ன பேச்சையே காணோம்?"
"Nooo...இருக்காது, நீங்க, நீங்க...பொய் சொல்றீங்க! என் ஆனந்த் அப்படிப்பட்டவர் இல்லை! உங்களுக்கு ஏனோ என்னை பிடிக்கலை ! அதுக்காக என்னை எவ்வளவோ பேசி காயப்படுத்தியிருக்கீங்க! அதை எல்லாம் நான் அவர்கிட்ட சொன்னதில்லை! இப்படி பேசுறதாலே உங்களுக்கு சந்தோஷம் கிடைக்குதுன்னு தோனினதாலே, அதை பெரிசு படுத்தாமல் தாங்கிக்கிட்டேன்! ஆனால் இப்ப ... அனிதாவை உங்களுக்கு பிடிக்கும் என்கிறது, எனக்கு தெரியும்! அவளை உங்க பிள்ளைக்கு கட்டி வைக்கணும்னு தான் இப்படி அவர் மேல வேணும்னே பழியை போடுறீங்க! உண்மையில் அவளோட இந்த நிலைமைக்கு காரணமான ஆளை உங்களுக்கு தெரியாது அப்படித்தானே?" என்று படபடத்தாள்!
ஆனந்தன் குற்றவுணர்வில் கண்கள் கலங்கிப் போய் நின்றிருந்தான்! விசாலாட்சியே கூட அவளது அசைக்க முடியாத நம்பிக்கையை பார்த்து உள்ளூர ஒருகணம் மிரண்டு போனார்! அவளது ஆழமான காதலையும் அப்போது தான் அவர் உணர்ந்தார்! அதுவரை, அவள் இந்த பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத்தான் மகனை வளைத்துவிட்டதாக எண்ணியிருந்தார்! ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சரியாகத்தான் சொல்லியிருக்காங்க! அதனால் அல்லவா, ஒருத்தியின் வாழ்வை அழித்து இன்னொருத்தியின் வாழ்க்கைக்கு வழி செய்துவிட்டேன்! காலம் கடந்த ஞானம்!
ஹூம்.. ஆனால் இப்போது அதனால யாருக்கு என்ன பயன்? நான் விதைத்தது தான் இப்போது அறுவடைக்கு காத்திருக்கிறது! வேறு வழி இல்லை! எந்தப் பெண்ணும் தன் வாழ்க்கையை இன்னொரு பெண்ணுடன் பங்கு போட முன் வரமாட்டாள்! அதற்கு இவள் மட்டும் விதிவிலக்கா என்ன?
ஒரு பெருமூச்சுடன்,"சாரு, நான் சொல்வது உண்மை!" என்றார் அன்றுவரை காட்டியிராத அமைதியான குரலில்!
"என்னால இன்னமும் நம்ப முடியவில்லை அத்தை!" என்று அழுகையில் குலுங்கினாள் சாருபாலா!
விசாலாட்சி கடுமையாக பேசுகிறவர் தான் என்றாலும் ஒருவரின் அழுகையை பார்த்து மகிழும் அளவுக்கு இரக்கமற்றவர் இல்லை! ஒரு நல்ல பெண்ணின் வாழ்வை கெடுத்த பாவத்திற்கு, என்ன மாதிரியான தண்டனை காத்திருக்கிறதோ? என்று உள்ளூர நினைத்துக் கொண்டார்!
"இதோ பார் சாரு, நடந்துவிட்டதை இனி மாற்ற முடியாது! ஏன்,எப்படி நடந்தது என்று ஆராய்ச்சி செய்வதால் எதுவும் மாறப் போவது இல்லை! இதற்காகத்தான் உன்னை மறுபடியும் மறுபடியும் கேட்டேன், வாக்கு தவற மாட்டியே, என்று! எந்தப் பெண்ணும் தன் உரிமையை விட்டுத்தர மாட்டாள்! இப்போது நீ சொல்லு! என்ன செய்யலாம்!"
"நீங்க, என் கையை வைத்தே என் கண்ணை குத்தப் பார்க்கிறீங்களே அத்தை? தப்பு உங்க யார் மேலேயும் இல்லை அத்தை! எல்லா தப்பும் என் மேல தான்! குடும்ப உறவுகள் எப்படி இருக்கும் என்று தெரியாமலே வளர்ந்தது என் தப்பு! உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்று தெரிந்தும் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே, அதுவும் தப்பு! நீங்க என்ன பேசினாலும் பொறுத்துப் போனேனே அதுவும் என் தப்பு! குடும்பம்னா இப்படித்தான் போல என்று என்னை நானே சமாதானம் செய்துட்டு, உங்க பிள்ளை சொல்படி வாழ்ந்தேனே அது நான் செய்த பெரிய முட்டாள்தனம்! என்றவள் சற்று நேரம் அழுதாள்! பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக கண்ணீரை துடைத்து விட்டு நிமிர்ந்து நின்றாள்!
"நீங்க சொல்லுங்க அத்தை, இப்ப நான் என்ன செய்யணும்? நான் வாக்கு கொடுத்திருக்கிறேன்! சொல்லுங்க! " என்றாள் திடமான குரலில்
"அனிதாவை ஆனந்தன் திருமணம் செய்து தான் ஆகணும், வேற வழி இல்லை!"
"சரி, பண்ணிடுங்க! ஆனால் அது சட்டப்படி செல்லாது அத்தை! "
"நீ விரும்பினால் இங்கேயே அவன் மனைவியாய் தொடரலாம்! நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு பதில் சொல்லு! இப்போது போலவே அவள் வீட்டை பார்த்துட்டு, நீ உன் வேலையை பார்த்துட்டு வாழலாம்! அது முடியாது என்றால், இந்த வீட்டை விட்டு போறதானால் உன் பிள்ளையை விட்டுட்டு தான் போயாகணும்! ஏன்னா அவன் எங்க வீட்டு வாரிசு!"
"அவன் நான் பெற்ற பிள்ளை இல்லை என்று ஆகிவிடுமா? எனக்கு என்று வேறு யாரும் இல்லையே! அவனை எனக்கு கொடுத்துடுங்க, ப்ளீஸ்!" கைகூப்பி கண்ணீருடன் கேட்டாள்!
"சாரு,உன்னோட பதிலில் நீ வீட்டை விட்டுப் போக நினைக்கிறேன்னு புரிஞ்சிடுச்சு! ஆனால் நீ ஒன்றை நன்றாக யோசித்துப் பார்! எங்க வீட்டு வாரிசு என்பதற்காக மட்டும் சொல்லவில்லை! நீ தனி ஆளாக பிள்ளையை வளர்க்கணும்னா ரொம்ப கஷ்டம்! ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் வாழ்றது கத்தி மேல நடக்கிறது மாதிரி! இப்போது அவனுக்கு மூன்று வயதாகப் போகுது! அடுத்து பள்ளியில் சேர்க்கணும்! வீட்டில் வேலைக்கு ஆளை வைக்கணும், வர்ற ஆள் நம்பகத்தன்மையுடன் இருக்கணும்! இல்லைன்னா கிரட்சில் விடணும்! இப்படி அவனுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்! ஆனால் ரிஷி, இங்கே சகல வசதியோட, நல்ல கவனிப்போட,வளர முடியும்! எல்லாவற்றையும்விட என்னோட கடைசி காலத்தில் என் பேரனுடன் கழிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படறேன்! அதுக்காக உன்கிட்டே மடிப்பிச்சை கேட்கிறேன்!" விசாலாட்சி கடுமை காட்டியிருந்தால் சாரு என்ன மாதிரி எதிர்வினையாற்றி இருப்பாளோ? ஆனால் அவர் அன்று வரை காட்டியிராத கனிவுடன் பேசினார்! கடைசியாக அவர் கேட்டதை அவளால் மறுக்க முடியவில்லை!
அது மட்டுமன்றி, அவர் சொன்ன அனைத்தும் நிதர்சனமான உண்மை! நிச்சயமாக, அவள் என்ன கஷ்டம் படவும் தயார்தான்! ஆனால் ரிஷி ரொம்பவே கஷ்டப்படுவான்! அவளது பிள்ளை அப்படி ஒரு நிலையில் வாழ்வதை விட, பாதுகாப்பாய் வாழ்வது முக்கியம்! தாயின் அரவணைப்பு அவனுக்கு அதிகமாக அவளும் தரவில்லை! அதற்கு தான் இந்த தண்டனை போலும்! என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டவளாக,
"நீங்க சொல்வதை நான் ஏற்றுக்கிறேன்! என் பிள்ளை கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தான் அவனை விட்டுட்டுப் போறேன்! அம்மா இருந்தும் என் பிள்ளை இப்படி ஒரு சூழலில் வாழ நானும் ஒரு காரணமாகிவிட்டேன்! எல்லாம் இருந்தும்,எதுவும் இல்லாத நிலை யாருக்கும் வரக்கூடாது! நான் இதற்கு மேல் இங்கே இருக்க விரும்பவில்லை! நான் போறேன்! என்ற சாருபாலா மாடிப்படிகளை நோக்கி ஓடினாள்!
வழியில் நின்ற கணவனை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை! பத்தே நிமிடத்தில் ஒரே ஒரு சின்ன பெட்டியும் ஒரு கைப்பையுமாக திரும்பி வந்தவள்,
" இதுல என் சம்பாத்தியத்தில் வாங்கிய உடைகள் தான் இருக்கு! என் வீட்டுல போட்ட நகைகள் மட்டும்தான் எடுத்துப் போறேன்! என்று அவள் பெட்டியை திறக்கப் போனாள்!
"சாரு, வேண்டாம்! நாங்கள் குற்றவாளிகள்! மன்னிப்பு கேட்கும் அருகதை கூட கிடையாது! ஆனாலும் நான் உன்னை பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறேன்! முடிஞ்சா என்னை மன்னிச்சிடு!"
பதில் சொல்லாமல் சாருபாலா, சில அடிகளை எடுத்து வைத்தவள்,
"விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறேன்! இதற்கு மேலும் என்னை கஷ்டப்படுத்தாமல், விவாகரத்து கொடுக்க சொல்லுங்க!"என்றுவிட்டு வெளியே வந்து,அவளது பணத்தில் வாங்கிய காரில் ஏறிக் கிளம்பிவிட்டாள்!
ஆனந்தன் அங்கே வெறும் பார்வையாளனாக நின்றிருந்தான்!
அந்த நாள் சாருபாலாவின் வாழ்க்கையில் கருப்பு நாள் எனலாம்!