• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

27. மீசை இல்லா பாரதியடி நீ... !?

V Ramakrishnan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 4, 2023
6
5
3
Salem
சிறுகதை போட்டி 2023.


V. Ramakrishnan

மீசை இல்லா பாரதியடி நீ... !?





இன்று சமுதாயத்தில் அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சி யை பற்றி தான் இங்கு, இந்த கதையில் நான் சொல்லப் போகிறேன்.

ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவர். காலை நேரத்தில், மனைவி எழுந்து, அவள் வேலைக்கு கிளம்புவதற்காக மிகவும் அவசர, அவசரமாக ரெடியாகிக்கொண்டு இருக்கிறாள். அவளுடைய கணவன் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டே மனைவியை பார்த்து, " நீ மிகவும் அழகாக இருக்கிறாய் டார்லிங்... உன்னைப் பார்த்தால் ஒரு கவிதை சொல்ல வேண்டும் போல இருக்கிறது ".

" இப்பொழுது நான் ஒரு
கவிதை சொல்கிறேன் என்று அவன் சொல்ல.
அவள், " காலங்காத்தாலேயே கவிதையா !? என்று பொய் கோபம் கொண்டு, அவனை சிரிப்புடன் முறைத்து ஒரு பார்வை பார்த்து விட்டு, " இப்படி கவிதை சொல்லி... சொல்லியே என்னை கவிழ்த்து, கல்யாணமும் செய்து கொண்டு விட்டீர்கள் " என்கிறாள்.


மெல்ல அவளுக்கு அருகில் வந்த அவன், அவளுடைய முகத்தை தன் இரு கைகளில் ஏந்தி, கவிதை சொல்ல ஆரம்பித்தான்.


அவள் அவனிடம், " இது என்ன முகநூலில் சுட்ட கவிதையா !? இல்லை சுடாத கவிதையா !? "என்று அவனை பார்த்து கேள்வி கேட்டாள் குறும்பாக.

அதற்கு அவன் " சுட்டும் சுடாத கவிதை " என்று சொல்ல , " புரியவில்லை " என்று அவள் சொல்ல , அதற்கு அவன், " அப்படி என்றால், அதன் பொருள் என்னுடையது... ஆனால் அதில் இருக்கும் Style Bharathi உடையது " என்று சொல்லி , அவளுடைய அழகு முகத்தையே பார்தத படி அந்த கவிதையை சொல்ல . ஆரம்பித்தான். அவள், குறுகுறுவென்று கண்சிமிட்டாமல், அவனையே பார்த்துக் கொண்டு இருக்கிறாள், கண்களில் காதல் பொங்க.



புதுக்கவிதை. : மீசை இல்லா பாரதியடி நீ...


சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா,

சித்திரப்பாவையடி என் கண்ணம்மா,

என் சித்தம் கலங்குதடி.

உன் முகத்தழகு சிற்ப
நேர்த்தியடி,

உன் முத்தழகு சிற்ப
நேர்த்தியடி.

அது எந்தன் சொற்களில் சிக்க மறுக்குதடி.

காந்த , மின்காந்த கண்களடி

நேசம் ஊருதடி ,

உன்மேல் என் ஆசை பெருகுதடி கண்ணம்மா !

நீ மீசை இல்லாத பாரதியடி , கண்ணம்மா

என் கண்ணம்மா என் ஆசை படுத்துதடி.

முட்டைக்கண்ணழகி, மொழிபேசும்

சொல்ழழகி , காந்தவிழியழகி

என்னை கவர்ந்தி ட்ட பேழழகி.

சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா

உன்முகத்தை பார்த்தவுடன் கள்வெறி

நீ மீசை வைக்காத பாரதி நீ.




அவள் அருகில் வந்த அவன் தன் கைகளால், அவளை மெல்ல அணைத்துக் கொள்ள , அவள் அதாங்க, இந்த கதையின் கதாநாயகி, அவனுடைய காதல் நாயகி, அவனை கண்களில் காதல். பொங்க பார்த்து, 'என்ன' என்று ஜாடையில் கேட்டாள்,


அவள் பெயரை சொல்லவில்லையே. அவள் பெயர் தான் 'மதுமிதா'. அதற்கு அவன் சிறிது நேரம் பதில் எதுவும் சொல்லாமல், " சிறிது பொறு... உனக்கு சொல்கிறேன் என்று சொல்லி, அவளுக்கு கருப்பு காஜல் பென்சிலால் , அவளுடைய முகத்தில் மீசை வரைந்து விட்டு , " இப்போது பார் என்று சொல்லி, அவளை கண்ணாடி முன்னால் நிறுத்தி, அவளை பின்னால் இருந்து கட்டித்தழுவி அவளுடைய கன்னத்தில் , மிருதுவாக முத்தம் ஒன்று கொடுத்தான்.

மதுமிதா உடனே, " சீ போங்க... காலங்காத்தாலே , ஆரம்பிச்சிட்டிங்களா... நீங்க ரொம்ப மோசம் " என்று பொய்யாக சிணுங்கி்னாள் சந்தோஷமாக.

பிறகு அவனிடம், " உங்க கவிதை நல்ல இருக்கு... எனக்கு ஆபீஸிக்கு கிளம்ப நேரம் வேறு ஆகிவிட்டது. நான் கிளம்புகிறேன்.
உங்களுக்கு தேவையான வற்றை எல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன். டேபிள்ள...

டிபனை ஹாட்பேக்கிலே , எடுத்து வைத்திருக்கிறேன். மறக்காம போட்டு சாப்பிட்டுட்டு போங்க . நான் ஆபீஸூக்கு கிளம்புகிறேன் என்று கூறி விட்டு தன்னுடைய தலையில கட்டியிருந்த டர்க்கி டவலை அவிழ்த்து விட்டு செல்லும் போது அவன் கூறினான் , " உன் முகத்தில் நான் உனக்கு போட்டிருக்கற அந்த
மீசையை அழித்து விட்டு ஆபீஸ் போ , இல்லைனா ரோட்டில் உன்னை நாய் துரத்த போகுது " என்று சொன்னான் புன்சிரிப்புடன்.

அதற்கு அவள், " பெண்கள் எல்லோரும் துப்பட்டாவிலே முகத்தை முழுசா, மறைத்துக்கொண்டு போறாங்க... அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை " என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றாள்.

" நீ போனவுடன் போன் பண்ணு... என்று கூறிவிட்டு, உன்னை மீசை இல்லாத பாரதின்னு சொன்னது தப்பே இல்லை " என்றான்.

அவள் அவனுக்கு, " சீ.. யூ... லவ் யூ " என்று சொல்லி விட்டு அறைக்கதவை சாத்திக் கொண்டு சென்று விட்டாள் . அவன் அவளையே கண் கொட்டாமல் , பார்த்து இருந்து விட்டு பிறகு அவன் ஆபீஸூக்கு அவசரமாக புறப்பட ஆயுத்தமானன்.

மதுமிதா மிகவும் வேகமாக 7 மணி பஸ்ஸை பிடிக்க ரோட்டில் நடந்து போய்கொண்டு இருந்தாள் . அவள் எதிர்புறம் உள்ள ஆட்டோ ஸ்டேன்ட் பக்கம் செல்ல, அந்த ரோட்டை மிகவும் கஷ்டப்பட்டு க்ராஸ் செய்து கொண்டிருந்தாள்.

அப் போது, ரோட்டின் அடுத்த பக்கத்தில் ஒரு பெண் போவதையும் , அவளை ஒருவன், Follow செய்து அவளை தொடர்ந்து சென்று கொண்டு , தொந்தரவு செய்து கொண்டு போவதையும் தூரத்தில் இருந்து அவள் பார்த்து விட்டாள்.

எனவே மதுமிதா அவள் அருகில் சென்றதும் , " ஏம்மா நீ ராம் அங்கிள் வீட்டு பொண்ணு தானே " என கேள்வி கேட்க, அவளும், " ஆமாம் ஆன்டி . என்ன பிரச்சினை என்று மதுமிதா கேட்க, அதற்கு அவள் , " இவன் நான் ஸ்கூல் போகும் போதும் , வரும் போதும் தொடர்ந்து வந்து, என்னை தொந்தரவு செய்து கொண்டு இருக்கிறான் ஆன்டி " என்றாள் அந்த பெண் பயத்துடன், அவனை பார்த்து க்கொண்டே.

அவள், அந்த பெண் பெயர் லலிதா. அதற்கு மதுமிதா , " ஏம்மா... இதைப் பற்றி உன் அப்பாகிட்ட சொல்ல வேண்டிய தானே என்று கேட்க , அந்த லலிதா , " அப்பா பத்திதான் உங்களுக்கு தெரிமே ஆன்டி , அவர் சின்ன, சின்ன விஷயத்துக்கே எப்படி Tension ஆகி React செய்வார்ன்னு !? .

இது அவருக்கு தெரிந்தால், அவ்வளவு தான். என்னை ஸ்கூலுக்கே அனுப்ப மாட்டார் , நீ படித்து கிழித்தது போதும்ன்னு என்னை ஸ்கூலுக்கு அனுப்பா என்னை ஸ்கூல்ல விட்டே நிறுத்திடுவார் ஆன்டி , அதனால் தான், நான் அவருகிட்ட எதுவும் சொல்லவில்லை " என்று அழுதுகொண்டே சொன்னாள் .

உடனே அதை கேட்ட மதுமிதா , அந்த பையனைப் பார்த்து, " அவள் தான் உன்னை அவளுக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டளே !? . நீ ஏன் அவளை தொந்தரவு செய்கிறாய் ? பேசாம இங்கிருந்து போயிடு .

யாரையும் கட்டாயப்படுத்தி காதலிக்க வைக்க முடியாது. அப்படி வந்தால், அது காதலே அல்ல, எனவே அவளை இனிமே தொந்தரவு (Disturb) செய்யாதே " என்று கூறினாள்.

அதைக்கேட்ட அவன் லலிதாவிடம், " என்ன... ஆளை கூட்டிட்டு வந்து மெரட்ரியா? நானும் ஆளை கூட்டிட்டு வரட்டா ? என்று கேட்டான்.

பிறகு மதுமிதா விடம் , " நீ ஒன் வேலையை பார்த்துக் கொண்டு போடி " , என்று சொல்ல, உடனே மது கோபத்தில் , அவன் கன்னத்தில ஓங்கி , ஒரு அறைவிட்டாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவன், சற்று நேரம் திகைத்து விட்டு , ஒரு கையால் கன்னத்தை தடவிக்கொண்டே அவளையே முறைத்து பார்த்தான் .

மதுமிதா , " என்ன நெனைச்சுக்கிட்டு இருக்க ? யார்கிட்ட உன் வேலையை காட்டறே ? பிச்சுபுடுவேன்... பிச்சு ... ஜாக்கிரதையா இருந்துக்கோ... ஆமாம் சொல்லி புட்டேன்... இன்னொரு தடவை இப்படி உன்னை பாத்தேன், அவ்வளவு தான். "


" யாரைப்பாத்து என்ன சொல்லறே ?
என்னைப்பார்த்தா போடினா சொல்றே" "கட்டாயபடுத்தி காதலிக்க வைக்கிறவன் எல்லாம் ஆம்பிளையே இல்லை ". அப்படி யாரையும், கட்டாயபடுத்தி காதலிக்க வைக்கவும் முடியாது. " அப்படி செய்யறவன் எல்லாம் ஆம்பிள்ளையே இல்லை " , என்று மறுபடியும் அழுத்தமாக கூறினாள் கோபத்துடன்.

அவள் அறைந்ததில் அந்த பையன் ஷாக்காகி அப்படி யே நின்று விட்டான். பிறகு அந்த பெண்ணை பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தாள். இந்த விஷயத்தை எல்லாம் மதுமிதா, வீட்டில் கணவனிடம் கூட சொல்ல வில்லை.

மதுமிதா விடம் அடி வாங்கிய அந்த பையன் , அவனுடைய நண்பர்களிடம் நடந்ததை எல்லாம் சொல்லி , மதுமிதாவை ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினான். அதற்கு அவன் நண்பன், " என்ன செய்ய வேண்டும் என்று சொல்லு நண்பா... உனக்கு பதிலாக நான் செய்து விட்டு வருகிறேன் " என்று கூறினான்.

அதற்கு அந்த அடிவாங்கிய பையன் , " என்னை பார்த்து ஆம்பளையான்னு கேள்வி கேட்டாடா , அவளை ஏதாவது செய்யனும். நானே செஞ்சாதா தான் என் மனசு ஆறும். நா யாருன்னு அவளுக்கு நாளைக்கு காட்டறேன் " என்று கோபத்தோடு கூறினான்.

அதற்கு அவன் நண்பன் " என்ன செய்ய போறே நண்பா " என்று கேள்வி கேட்க , " நீ என்னோடு தானே இருக்கப்போறே !? நான் என்ன செய்யப் போகிறேன்னு என்று நீ நாளை பார்க்கத்தானே போறே !? " என்று கூறினான்.

அவன் கண்கள் மிகவும் இரத்த சிவப்பாக சிவந்திருந்தது. குடித்திப்பானோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் அறியாத மதுமிதா வழக்கம் போல, அடுத்த நாளும் அதே ரோட்டில் வந்து கொண்டு இருந்தாள்.

பைக்கை நிறுத்தி விட்டு , அந்த பையன் அவன் நண்பன் ஆகியோர் , அவள் வருவதற்காக, அங்கு, அந்த இடத்தில், காத்துக்கொண்டு இருந்தார்கள்.

அவள் வருகிறாளா என்று பார்த்து விட்டு அவள் அவர்களை தாண்டி சென்ற பின் , பைக்கை ஸ்டார்ட் செய்து , அவளை பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தனர்.

இதையெல்லாம் அறியாத மதுமிதா, மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தாள் . அப்போது அவளுக்கு தெரியாது, தனக்கு பின்னால் ஆபத்து தொடர்ந்து வந்து கொண்டு இருப்பது.

அப்போது நேற்று அவளிடம் அடிவாங்கிய அந்த பையன் தன்னுடைய கையில் கூரான கத்தியை வைத்துக் கொண்டு அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் , இரண்டு பேரும் கர்ச்சிப்பால் முகத்தைமறைத்து, மூடிக்கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்து , மெதுவாக மதுமிதாவின் பின்தொடர்ந்து சென்றனர்.

அவள் அருகில் வந்ததும் , பின் சீட்டில் இருந்த , நேற்று உதை வாங்கிய பையன், திடீர் என்று என்ன நினைத்தான் என்று தெரியவில்லை. கத்தியை எடுக்காமல் தன் கையில் இருந்த ஆசிட் பாட்டிலில் இருந்த திராவகத்தை மதுமிதாவின் முகத்தை குறி வைத்து வீசி விட்டு இரண்டு பேரும் வேகமாக , பைக்கில் பறந்து சென்று விட்டனர்.

அப்போது அந்த ரோட்டில் ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லை. அது அவர்களுக்கு செளகரியமாக போயிற்று, சுலபமாக தப்பித்துக் கொள்ள.

மதுமிதா வின் முகத்தில் ஆசிட் பட்டதும், அனிச்சையாக, தன் இருகைகளால் முகத்தை மூடிக்கொண்டு , மிகவும் துடிதுடித்துப் போய் கீழே சரிந்து விழுந்து விட்டாள். அப்புறம் அவளை, அங்கிருந்தவர்கள், எல்லொரும் சேர்ந்து, தூக்கி அருகில் இருந்த ஒரு
ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவளுடைய போனைப் பார்த்து , அவளுடைய கணவருக்கு உடனே தகவல் தரப்பட்டது. போலீஸக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுமார் ஒரு மாதத்திற்கு மேல் ஆஸ்பத்திரியில் இருந்தாள் மதுமிதா. நல்ல வேளையாக கண்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை அவள் முகத்தை மூடியிருந்த தால்.

முகத்தில் தான் பல இடங்களில் ஆசிட்டின் தாக்குதலால் அதிக பாதிப்பு.
அதுவும் கால்வாசிக்கு மேல் தீக்காயம் மாதிரி மிகவும் அசிங்கமாக இருந்தது.

டாக்டர் வந்தார். அவளுக்கு முகத்தில் போடப்பட்ட கட்டுகளை மெதுவாக அவிழ்த்து பிறகு பேண்டேஜ் துணியை மெதுவாக ரிமூவ் செய்தார்.

பிறகு நர்ஸிடம் ஒரு கண்ணாடியை கொண்டு வரச் சொல்லி , அதை மதுமிதா விடம் கொடுத்து அவளுடைய முகத்தை பார்க்கச் சொன்னார்.

மதுமிதா , முதலில் தன்னுடைய முகத்தை பார்க்க மறுத்து விட்டாள். மிகவும் பிடிவாதமாக . பிறகு மதுமிதாவின் கணவனை முதுகில் தட்டி கொடுத்து விட்டு, அவளை பார்த்துக் ( Take Care Of Her. )
கொள்ளுமாறு ஜாடையில்கூறிவிட்டு , அந்த அறையை விட்டு வெளியில் சென்றுவிட்டார். போகும் பொழுது, அவனிடம் பிறகு தேவையென்றால், அவளுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம் என்று சொன்னார்.


அவன், மதுமிதாவை வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து சில நாட்கள் ஆயிற்று. அவள் கணவன் தான், அவளுக்கு எல்லாவற்றையும் பார்த்து, பார்த்து செய்தான்.

மதுவின் போக்கில் நிறைய மாற்றங்கள். அவள் கணவனை பார்பதில்லை. அவனுடன் சரியாக அவள் பேசுவதும் இல்லை. அவனுக்கு என்ன செய்வதென்றும் , இந்நிலை எத்தனை நாள் இருக்கும் என்றும் தெரியவில்லை.

அவன், அவளை மதுமிதாவை , வீட்டை பகைத்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டதால், அவனுக்கு உதவி செய்ய என்று யாரும் இல்லை.

காதல் திருமணம் செய்து கொண்டதால் அவள் வீட்டிருந்தும் யாரையும் உதவி செய்ய அழைக்க முடியாத சூழ்நிலை. ஒருவழியாக மதுமிதா உடல் தேறிவந்தாள்.


இப்பொழுதெ ல்லாம் அவள் டைவர்ஸ் பற்றி அதிகம் யோசிக்க ஆரம்பித்தாள். அவள் கணவனிடம் தன்னை டைவர்ஸ் செய்ய சொன்னாள். அவள் அவனுக்கு சரியான ஜோடி இல்லை என்று நினைக்க ஆரம்பித்தாள். அவனிடம் சொன்னாள். அவள் அதிகமான மன அழுத்தத்தில் இருந்ததால், அவன் அமைதியாக இருந்தான், அவள் சொன்ன எதற்கும் பதில் பேசாமல்.

அவள்கணவனும் பொறுத்து, பொறுத்து பார்த்து விட்டு ஒருநாள் அவளிடம், " நீ ஏன்டி இப்படி இருக்கிறாய். என்னுடன் சரியாக பேசுவது கூட இல்லை இப்போது எல்லாம். நான் என்ன பாவம் செய்தேன் உனக்கு !? " என்று கேட்டான்.

அதற்கு அவள், " நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை அதுதான் பிரச்சினையே " என்றாள். அவள் கணவன், " இதில் நான் என்ன செய்ய இருக்கிறது !?. போலீஸில் கம்பெளண்ட் கொடுத்து இருக்கிறேன். போலீஸார் அவனை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கு இருக்கும் C C T V Cameraவில் இருக்கக்கூடிய. Footage எல்லாவற்றையும் செக் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

விரைவில் அந்த பையனை, அந்த குற்றவாளியை அரஸ்ட் செய்து விடுவார்கள். அப்படி தான் போலீஸ் கமிஷனர் என்னிடம் கூறினார். அதனால் நீ அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் " என்று கூறினான்.

நீ எதற்காக மது கவலைப்படுகிறாய் ?. நான் உன்னுடன் தானே இருக்கிறேன் !?. இந்த உலகம் மாறவில்லை. அதைவிட நான் மாறவே இல்லை. நீ தான் மிகவும் மாறி விட்டாய். உனக்கு என்ன ஆயிற்று ? . நடந்தது நடந்து விட்டது. அவனையும் சீக்கிரமே பிடித்து விடுவார்கள்... "

" நீ , நான் மாறி இருந்தால் தான் கவலைப்பட வேண்டும் " என்று கூறினான். " இவ்வளவு நாள், நீ உன் அப்பா , அம்மா கொடுத்த முகத்தோடு இருந்தாய் . இனிமேல் இந்த சமுதாயம் கொடுத்த முகத்தோடு இருக்கப் போகிறாய். அதற்கு நீ ஏன் கவலைப்பட வேண்டும் !?. சொல்லப் போனால் இந்த சமுதாயம் தான் , உன்முகத்தை பார்த்து வெட்கப்படவேண்டும், வேதனைப்படவேண்டும் , வெட்கி தலைகுனிய வேண்டும் ... "

" நமக்கென்று , அழகான ஒரு வாழ்க்கை இருக்கிறது. நான் உன்னுடன் தானே இருக்கிறேன். நாம் நம் வாழ்க்கையை வாழலாம் வா . இந்த உலகத்தில் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும் " என்று கூறினான்.

" இல்லை நான் இப்படித்தான் இருப்பேன் என்றால் , நான் உன்னுடன் இருக்க முடியாது " என்று கூறினான்.

அதைக்கேட்ட அவள் , " நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அன்று கூட நீங்கள் என் முகத்தை பார்த்து தானே கவிதை பாடினீர்கள் !?. அந்த முகம் தான் இப்படி ஆகிவிட்டதே !?. அதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது "என்றாள்.

அதற்கு மதுமிதாவின் கணவன்கூறினான், " நான் உன்னை காதலித்து கல்யாணம் செய்து கொண்டவன். உன்னுடைய புற அழகை பார்த்து காதல் வந்திருந்தாலும் , நான் உன்னுடன் வாழ ஆரம்பித்த இத்தனை வருடங்களில் உன்னுடைய அக அழகை நினைத்தே, நான மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்...

" உன்னுடைய அன்பில் நீ என்னை கட்டிபோட்டு இருக்கிறாய். நான் அன்று உன்னை , உன்னுடைய முகத்தை பார்த்து பாடியது வேறு . நீ இவ்வாறு தான் இருப்பாய் என்று சொன்னால், நான் உன்னுடன் இல்லாமல் வேறு எங்காவது போகிறேன் " என்றான் கோபத்துடன்.

" இத்தனை வருடங்கள் என்னுடன் வாழ்ந்து என்னை நீ புரிந்து கொண்டது அவ்வளவு தானா மது !? " என்றான் காதலுடன்.

எல்லாவற்றையும் மெளமாக கேட்டுக்கொண்டிருந்த , மதுமிதா சற்றே தெளிவாகி , மகிழ்ச்சியாக அவளுடைய முகத்தை வைத்துக்கொண்டு, அவனை நேராக பார்த்து , " இப்போது என் முகத்தை பார்த்து ஒரு கவிதை சொல்லுங்கள் " என்றாள்.

அவன், அவளுடைய முகத்தை தன் இரண்டு கைகளாலும், ஆசையுடன் ஏந்திக்கொண்டு, அவளுடைய கண்களை நேராக பார்த்து கவிதை சொல்ல ஆரம்பித்தான் .



சின்னச்சிறு கிளியே கண்ணம்மா

என் சித்திரப்பாவையடி.

நீ அக்னி குஞ்சடி என் கண்ணம்மா

நீ பாரதி கண்ட புதுமைப் பெண்ணடி

நீ தைரியமானவளடி,

சாதனை புரிய
வந்தவளடி ,

நீ சாதிக்க பிறந்தவளடி.

நீ சரித்திரம் படைப்பவளடி கண்ணம்மா.

உன்னை இந்த திராவகம் என்ன செய்யும் ?


அவன் பாடி முடித்து விட்டு, அவளை அவனுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். அவளும் அப்படியே அவனுடைய மார்பில் சாய்ந்து கொண்டாள். அவளுடைய கண்களில் இருந்து அவளை அறியாமல் கண்ணீர் அருவியாக, வந்துகொண்டிருந்தது. அவளுடைய மனதில், வாழ்க்கை யின் மேல் அவளுக்கு ஒரு புதுநம்பிக்கை பிறந்தது.








(V R K)

(முற்றும்)
 
Last edited:

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
59
27
18
Deutschland
மனம் கலங்கி படித்த கதை 😥
இன்றையய சமுதாயத்திற்கு தேவையான கதையும் 👏
ஒரு ஒழுக்கமில்லா பையனுக்கு எடுத்து சொன்னதுக்கு விலைதான் இது ....இன்றைய காலகட்டத்தில் இப்படி எத்தனை எத்தனை நிகழ்வுகள் 🤧 .....எத்தனை மதுக்களின் வாழ்க்கையை பழிவாங்கியிருக்கும்😢
தனது மனைவி மேல் அளவுகடந்த காதல் இவன் தான் ஹீரோ 😀இவளுக்கு கிடைத்த கணவன் யாருக்கு கிடைக்கும்
கவிதை செம சகோ 👏😀
சூப்பர் 😀😀😀😀😀
வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
 
  • Like
Reactions: V Ramakrishnan

V Ramakrishnan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 4, 2023
6
5
3
Salem
மனம் கலங்கி படித்த கதை 😥
இன்றையய சமுதாயத்திற்கு தேவையான கதையும் 👏
ஒரு ஒழுக்கமில்லா பையனுக்கு எடுத்து சொன்னதுக்கு விலைதான் இது ....இன்றைய காலகட்டத்தில் இப்படி எத்தனை எத்தனை நிகழ்வுகள் 🤧 .....எத்தனை மதுக்களின் வாழ்க்கையை பழிவாங்கியிருக்கும்😢
தனது மனைவி மேல் அளவுகடந்த காதல் இவன் தான் ஹீரோ 😀இவளுக்கு கிடைத்த கணவன் யாருக்கு கிடைக்கும்
கவிதை செம சகோ 👏😀
சூப்பர் 😀😀😀😀😀
வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐

உங்களுடைய மேலான கருத்துக்கு, எனது வாழ்த்துக்கள் சகோ. எனது நாவல்கள் பிரதிலிபியில் இருக்கிறது. முடிந்தால் இங்கு பதிவு செய்கிறேன்.
 
  • Like
Reactions: Thani

V Ramakrishnan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 4, 2023
6
5
3
Salem
@Thani, மற்றும் ஒரு கதைஎழுதி இருக்கிறேன் சகோ. " காதல் சொல்ல வந்தேன்". படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
 
  • Like
Reactions: Thani

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
188
63
Coimbatore
இந்த கதையை நான் ஏற்கனவே படித்திருக்கேன்,🤔🤔🤔🤔
மீசை இல்லா பாரதியடி..
மீசை வேண்டும் என்று இல்லை
மனதில் உறுதி இருந்தால் போதுமடி கண்ணம்மா.....
மாசற்ற இதயம் இருக்க
மக்கி போகும் முக அழகு எதுக்கடி
செல்லம்மா....
சுடும் விழிகளும்
ரௌத்திரம் பழகும் பெண்ணே....
பாரதி போல எதிர்த்து நில்
பலர் உன் பின்னாடி வருவார்கள் கண்ணே.....
பார்க்கும் பார்வையில் இல்லையடி என் காதல்
பழகும் என் இதயத்தில் உள்ளதடி....
மனம் கனக்கிறது
💐💐💐👏👍
 
  • Like
Reactions: V Ramakrishnan

V Ramakrishnan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 4, 2023
6
5
3
Salem
நீங்கள் இந்த கதையை படித்திருக்கலாம் வேறு தளத்தில் கடந்த வருடம், நான் அதில் போஸ்ட் செய்திருந்தேன். சமூக அவலங்களை படம்பிடித்து காட்ட நினைத்தேன். அதேபோல் நடக்கும் தவறை, பெண்கள் தட்டிக் கேட்க வேண்டும் என்றும் நினைக்கின்றேன். கருத்துக்கு நன்றி. இன்னும் ஒரு கதை எழுதி இருக்கேன் படித்து பாருங்கள்.உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சகோ.