• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

28. இதயம்

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
718
148
93
Jaffna
ஊர் முழுவதும் பாரதி பேச்சுத்தான். ஊருக்கே தெரியும் போது, அவள் தந்தைக்கும் தம்பிக்கும் தெரியாதா? காஞ்சனாவே அவர்கள் வந்ததும் நடந்தவற்றை கூறி விட்டார்.

அதைக் கேட்டதும் கண் மண் தெரியாத கோபம் பழணிச்சாமிக்கு உண்டாக, மகனின் சட்டை காலரை கொத்தாகப் பற்றியவர்,

இப்போ சந்தோஷமாடா... இதுக்காகத்தோனே கண்டவன் கடையவனை எல்லாம் வீட்டுக்கு கூட்டி வந்த... எத்தனை வாட்டி உங்கம்மா தலை பாடா அடிச்சிக்கிட்டாங்க... வயசு பொண்ணு இருக்கிற வீட்டுக்குள்ள எந்த பசங்களுயும் கூட்டிட்டு வராதன்னு.

என் பொண்ணு மனச கெடுத்ததும் இல்லாம, இப்பிடி ஊரே சிரிக்க வைச்சிட்டியே! இனிமே என் பொண்ணுக்கு எப்பிடி வாழ்க்கை அமைச்சுக் குடுப்பேன்." அவன் முதுகில் இரண்டு தட்டுத் தட்டியவர் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.

இதுவரை பெற்ற பிள்ளைகளின் மேல் கை வைத்ததில்லை அவர். முதல் முறை அதுவும் தோளுக்கு மேல் வளர்ந்தவன் மேல் கை வைக்கிறார் என்றால், தான் செய்த தவறு எந்தளவுக்கு வீட்டினரை பாதித்திருக்கிறது. இதற்கு எல்லாம் மூலகாரணம் அவன் தான், அவனை....


தசரதன் கோபம் அத்தனையும் அவன் புறம் திரும்ப, நேராக அவன் வீடு தான் வந்தான்.

"டேய் சந்ரூ.. வெளிய வாடா.." பெரிதாய் கத்தியவன் சத்தம் அக்கம் பக்கம் எல்லாம் கேட்டிருக்கும்.

அவன் குரல் கேட்டு வெளியே வந்த சந்ரூவின் தாய், அவனது கோபம் அறியாது.

"வாப்பா.... என்ன திடீர்ன்னு இந்தப்பக்கம்.?" என்க.

"ஏம்மா உங்களுக்கு பண்ண நல்லதுக்கு நீங்க பண்ற நன்றிக் கடனிம்மா இது? உங்ககிட்ட என்ன பேச்சு? முதல்ல அந்த பொறுக்கிய கூப்பிடுங்க." என்றான் கர்ஜனையாய்.

"ஏப்பா.. என்னாச்சு? அவன் பொண்டாட்டிய கூட்டிட்டு கடை வரைக்கும் போயிருக்கான். கல்யாணம் நெருங்குதில்லையா?"
"கல்யாணம் ஒன்னு தான் அந்த நாய்க்கு குறை! ஏம்மா தெரியாம தான் கேட்கிறன், பிள்ளைங்கள பெத்ததும் தண்ணி தெளிச்சு விட்டிடுவீங்களா என்ன? நல்லது கெட்டது எல்லாம் சொல்லி குடுக்க மாட்டிங்களா" என்றான் சற்றும் கோபம் குறையாது.

"ஏப்பா வந்ததில இருந்து கோபமாவே பேசுற? அப்பிடி என்ன நடந்திச்சு.?"

"இன்னும் என்ன நடக்கணும். ஒரு தெரு நாய தெரியாம வீட்டுக்குள்ள விட்டுட்டேன். எல்லா இடமும் வாய் வைக்கிறா மாதிரி, என் வீட்டிலயும் வாய் வைச்சிடிச்சு. என் அக்கா தூக்கு வரைக்கும் போயிட்டா.. அவன் மட்டும் என் கண்ணில மாட்டினான்னா, அவன் சாவு என் கையில தான் சொல்லி வைங்க." என்றவன் பேச்சு சற்றும் புரியவில்லை அவருக்கு.

"என்னப்பா சொல்லுற? பாரதி தூக்கு போட்டாளா? ஏன் அப்பிடி என்னாச்சு?" என அவர் பதற,

"என்னாச்சா...? என்னாச்சுன்னு வீட்டில வந்து சத்தம் போட்டுட்டு போன, உங்க மருமகளை கேளுங்க." என்றவனுக்கு அங்கு நிற்கவே அசிங்கமாக இருந்தது. சுற்றம் நின்று வேடிக்கை பார்த கூட்டத்திடம் திரும்பியவன்,

"இந்த குடும்பத்த நம்பி யாரும் வீட்டுக்க விட்டீங்க, குடி முழுகிப் போயாடும்" என்றவன் திரும்பி விட்டான்.

அடுத்து வந்த சில நாட்கள் யாருடனும் பாரதி பேசவில்லை. அறையே தஞ்சமென அதற்குள்ளேயே கிடந்தாள்.



காஞ்சனா வெளியே அழைத்தாலும், அமைதியாகவே உக்காருவளே தவிர, ஓர் வார்த்தை உதிர்ப்பதென்பது அரிது. சாப்பாடு எடுத்து வந்து கொடுத்தாலும், நாலே நாலு பருக்கை கடமையே என வாயில் வைப்பவள், போதும் என தட்டை தள்ளி விடுவாள்.

இத்தனைக்கும் இதற்கு மேல் உயிரோடு எதற்கு இருக்க வேண்டும் என்ற குற்ற உணர்வு தான். இப்போதும் தான் ஏமாத்தப் பட்டு விட்டேனே என்ற குற்ற உணர்வு இல்லை. உண்மை எதுவென சரியாக விசாரிக்காது, ஒரு பெண்ணின் வாழ்கயகையை சீரழிக்க நினைத்தோமே என்ற நெருடல் தான்.

எப்படி இப்படி ஓர் இழிவான காரியம் செய்யத் துணிந்தோம்? விபரம் அறியாது செய்திருந்தால், தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழிவதுடன், அவள் வயிற்றில் வளரும் குழந்தையின் எதிர் காலமும் அல்லவா பாதிக்கப்பட்டிருக்கும்.

தவறுதான். அவன் நல்லவனோ கெட்டவனோ, எப்போது இன்னொரு பெண் கழுத்தில் தாலியை கட்டினானோ, அப்போதே அவனுடனான பேச்சை நிறுத்தி இருக்க வேண்டும். அது தான் ஓர் நல்ல பெண்ணுக்கு அழகு. அதை விடுத்து, அவன் சொல்கிறான் என்று, அவனுடன் செல்ல நினைத்த என் புத்தி..." நினைக்கவே அருவெருப்பாக இருந்தது.

ஒவ்வொரு நாளும் அதே நினைவு அவளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த, வெளியே செல்ல அச்சம் கொண்டவளாய் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போனாள்.

கையில் சாதத்துடன் வந்த காஞ்சனாவையே விறைக்க விறைக்கப் பார்த்தவள், அவள் காலடியில் சட்டென எதையோ ஒன்றை தூக்கிப் போட்டு உடைத்தாள்.
பாதிக்கப்பட்டு சில தினங்கள் கடந்த போதிலும், இத்தனை நாளில், ஓர் நாள் கூட அவள் இப்படி ஆக்ரோசமாக நடந்து கொண்டதில்லை. திடீரென்ற அவள் செய்கையில், தனக்கு அடிபடாது எச்சரிக்கையாக கால் தூக்கி தப்பித்துக் கொண்டவர், அப்போது தான் தரையில் நொருங்கிக் கிடந்தது எதுவென ஆராய்ந்தார்.

வேறு எதுவும் இல்லை. அவளது தொடு திரை தான் அது.

"அவன் கூப்பிடுறானும்மா. எனக்கு அவன்கூட பேச எதுவுமில்ல." குரலில் அழுத்தம் இருந்தாலும், மீண்டும் மீண்டும் தன்னை முட்டாளாக்க நினைக்கும் அவனது செயல் கண்ணீரை வரவழைத்தது.

அதற்கு அவள் தானே காரணம். தெளிவு உண்டாகும் போதே, தன் முடிவில் உறுதியாக இருந்திருந்தால், இவன் என்ன? இவனைப் போல பத்துப் பேர் வந்திருந்தாலும், ஓர் பார்வை போதும், பத்தடி விலகி நில் என்று எச்சரிக்க.

நீண்ட நாட்களுக்குப் பின் தொடராக நீண்ட வசனம் பேசுகிறாள். ஆனால் அந்த பேச்சு ரசிக்கும் படியாக இல்லை.

"இல்லம்மா... ஒன்னும் இல்லை... நீ செய்தது சரி தான். அவன் தொடர்பே உனக்கு வேண்டாம்." தட்டை ஓரமாக வைத்து விட்டு, மகளை ஆதரவாக அணைத்தவாறு படுக்கையில் அமர்த்தியவர்,

"இந்த போன் மாதிரி, உன் மனசில இருக்கிற அவன் சம்மந்தமான எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டு, முன்னாடி நீ எப்பிடி இருந்தியோ அப்பிடியே இரும்மா... பாவம் பசங்க.. டீச்சர் எப்போ பாடம் சொல்லி தருவாங்க. இன்னும் ரெண்டு வாரத்தில எக்ஸாம் வருது. மார்க் எப்பிடி வருமோன்னு வருத்தப்படுறாங்க." எங்கு அடித்தால் அசருவாளோ, அங்கு குறி வைத்தார் காஞ்சனா.

சற்று நேரம் அவர் தோளிலே சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவள், தனக்குள் ஓர் முடிவு எடுத்தவளாய் எழுந்தமர்ந்து.
"பசிக்குதும்மா..." என்றாள் அப்பாவியாய். அவள் அப்படி கேட்டதும் பாவமாகிப் போனது காஞ்சனாவிற்கு. கண்களின் ஓரம் சிறிதாய் கண்ணீர் எட்டிப் பார்க்க மறைத்தவராய்,

"இதோ அம்மா எடுத்துட்டு வரேன்." வைத்த இடத்தை நோக்கி ஓடியவர், அதை பிசைந்து பாரதியின் வாயில் ஊட்டி விட, உமிழ் நீர் இழுபட வாய் திறந்து வாங்கிக் கொண்டவளுக்கு, அவள் பிடித்துக் கொடுத்த சாதத்தின் அளவு சிறியதாய் இருந்தது போல, தட்டை தாயின் கையிலிருந்து இழுத்து எடுத்து, அவுக் அவுக் என்று மூன்று வாய் உள்ளே தள்ளியவள், அதை மென்று கொண்டே,

"எப்பவுமே முட்டாள் தனமா முடிவெடுக்கிறேன்னலம்மா... தப்பு பண்ணது நான், தண்டனை ஏன் பசங்களுக்கு கொடுக்கணும். அவங்க எதிர் காலமாவது நல்லா இருக்கணும். எல்லாரையும் நாளைக்கே ரியூசன் வரச் சொல்லிடுறீங்களா?" என்றாள் தாயின் கண்களையே பார்த்தவாறு.

இது போதுமே.. மகளை முழுதாய் வெளியே கொண்டு வர முடியவில்லை என்றாலும், ஏதோ ஓரளவிற்கு தேற்றி விடலாம் என்று நம்புவதற்கு.

"ம்ம்.." புன்னகை மலரக் கூறியவர், தண்ணீரையும் எடுத்து கையில் கொடுத்து, மெதுவா சாப்பிடு தொண்டைக்குள்ள சிக்கிடப் போகுது" என்றார்.

அதற்கு ஓர் புன்னகையை கொடுத்தவளது சிரிப்பின் அர்த்தம் தான் புரியவில்லை காஞ்சனாவிற்கு.

"உங்களுக்கு வேலை இருந்தா பாருங்க.. சாப்பிட்டு தட்டை நானே எடுத்திட்டு வரேன்." என்றதும் அத்தனை சந்தோசம் அவரக்கு. இன்றோடு மகளின் வனவாசம் முடிகிறது அல்லவா.

அந்த நாளின் பின் சாதாரணமாக வளைய வந்தவள் மனதில் உண்டான காயமும், இ்ன்னொரு பெண்ணுக்கு தான் செய்ய நினைத்த துரோகமும் என அவளை சாதாரணமாக இருக்க விடவில்லை. கடமையே என சிரித்துப் பேசுபவள், ஆண்கள் என்று வரும் போது, பத்தடி தள்ளியே நின்று கொள்வாள்.
இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டு தான் இருந்தது. ஆனால் அவள் மேல் படிந்த கறை மட்டும் போவதாக இல்லை. அவளை காணும் போதெல்லாம் முகத்திற்கு பின்னால் பேசுபவர்கள் பேச்சு அவள் காதுக்கும் எட்டத் தான் செய்யது. காது கேட்காதது போல் இருந்து கொள்பவளும், தான் செய்யத் துணிந்த வேலைக்கு இது தேவை தான் என்று எண்ணிக் கொள்வாள்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடந்திருந்த நிலையில் தான், அந்தப் பேச்சை ஆரம்பித்தார் காஞ்சனா.
அன்று ஓர் வெள்ளிக்கிழமை.

"எம்மாடி பாரதி... இன்னைக்கு ஒரு நாள் ஸ்கூல்க்கு லீவ் போடுறியா...? கோவில் போயிட்டு வரலாம்." என்றாள்.

"கோவிலா.. என்ன திடீர்ன்னு....?" கேட்டது நம் பாரதி தான்.

"இல்லம்மா.. இவ்ளோ நாள் நடந்த பிரச்சினையில கோவில் பக்கம் நீ போகல. உனக்கு சாமி மேல எல்லாம் கோபம் இல்லையே!" என்றார் எங்கே அவளுக்கு நடர்ந்த பிரச்சரனைக்கு காரணம் சாமி தான் என நினைத்து அவரை வெறுத்து விட்டாளோ என்று

"சாமி என்னம்மா பண்ணிச்சு...?" கேட்டுவிட்டு பொய்யாய் சிரித்தவள் செயலே சொன்னது, தன் தவறுக்கு சாமி மேல் பழியினை தூக்கிப் போடுது எவ்வகையில் நியாயம் என்று.

"உண்மை தான்ம்மா... அந்த கடவுள் தான், கடைசி நிமிஷத்தில காப்பாத்தி இருக்காரு.. இல்லன்னா..." மேலே நினைத்து பார்க்கவே பயமாகிப் போக,

"வாம்மா.. அம்மா திருப்திக்காக ஒரு தடவை வரீயா...? உன் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வருவோம். இனிமேல் நடக்கிறதாவது நல்லதா நடக்கட்டும்." கெஞ்சுவது போல், அவள் கைபற்றிக் கேட்டவர் பேச்சினை தட்டிக் கழிக்க மனம் இடம் தரவில்லை.

"சரி இருங்க ரெடியாகி வரேன்" என திரும்ப,

"அம்மாகிட்ட புதுசா ஒரு புடவை இருக்கு. இரு எடுத்துட்டு வரேன். அதையே கட்டிட்டு போலாம்." என திரும்பியவர் சந்தோஷத்தை கண்டவள் உதடுகளும் புன்னகைத்தது.

உண்மை தான். இதற்கு மேல் தனக்கென்று வாழ அவளுக்கு எதுவுமில்லை. பெற்றவர்கள் சந்தோஷத்திற்காகவே வாழ்வவதென்று முடிவெடுத்தவளுக்கு, தன்னால் தாய் சந்தோஷமாக புன்னகைப்பதை பார்க்கையில் ஆனந்தம் தான்.
காஞ்சனா கொடுத்த பட்டுப் புடவையினை கட்டிக் காெண்டு காஞ்சனாவுடன் கோவிலுக்குச் சென்றான்.

கோவில் சன்னிதானத்தை மிதித்ததும், அவளையும் அறியாது ஓர் நிம்மதி பரவ, பய பத்தியோடு அர்ச்சணை செய்து தரிசனம் முடித்தவள், சிறுது நேரம் சன்னிதானத்தில் அமர்ந்து விட்டு கடிகாரத்தை திருப்பிப் பார்த்தாள். மதியம் ஆவதற்கு ஒரு சில நிமிடக்களே இருந்தது.

"சரிம்மா... வாங்க போகலாம்." என எழுந்தள் கையினை இழுத்து மீ்ண்டும் அமர வைத்வர்,

"என்ன அவசரம்? இன்னும் கொஞ்சம் உக்காந்திட்டு போவோம்" என்றவர் விழிகளோ வாசலையே ஆராய்ந்தது.

"இப்பவே சாப்பாட்டு டைம் ஆகுதும்மா... அடுப்பில உலை கூட வைக்கல.. அப்பா சாப்பாட்டுக்கு வந்தா என்ன சாப்பிட குடுப்பீங்க?"

"சமையல் பெரிய வேலையா என்ன? ரெண்டு அடுப்ப பத்தை வைச்சா, சீக்கிரம் முடிஞ்சிடப் போகுது." என ஆரம்பித்த பேச்சு. அது இதுவென நேரத்தை கடத்தியிருந்தது.

"உங்கட ஆசைக்கு ரொம்ப நேரம் இருந்தாச்சு.. எந்திரிங்க.." என தாயின் கையினை பிடித்திழுத்தாள்.

"இன்னும் கொஞ்ச நேரம்மா இப்போ வந்திடுவாங்க." அவரையே அறியாது வார்த்தையை விட்டவர் பேச்சில், சட்டெ சுதாரித்தவள்,

"யாரு வந்திடுவாங்க.?" என்றாள் புருவம் இரண்டு விரிய. அவள் அப்படி கேட்டதும் தான், அதுவரை தனக்குள் சொல்லிக் கொண்டிருந்த நாமத்தை வெளியே சொல்லி விட்டோம் என்பது புரிந்தது.

"வருவாங்களா.. யாரு...?" என்றார் அந்த வார்த்தையை தான் சொல்லாதது போல் மழும்பி.

"அம்மா உண்மைய சொல்லுங்க.. யாருக்காக காத்திட்டு இருக்கிங்க?" என்றவளுக்கு அப்போது தான், காலையில் தானாக வந்து தன்னை கோவிலுக்கு வா என்று அழைத்ததும் இல்லாது, சாதாரண நாளில் தன்னை பட்டுப் புடவை கட்டச் சொல்லி கேட்டதன் அர்த்தம் சற்றே புடிபட்டது.

"அப்போ இந்த பட்டு புடவை.. என்ன மாப்பிள்ளை ஏதாவது பார்க்கிறீங்களா?" என்றாள் தாயை தீர்க்கமாய் ஓர் பார்வை பார்த்தவாறு. அவளது கேள்வியில் தடுமாறிப் போனவர்,

"அது.. உனக்கும்..." பேசி முடிக்கவில்லை.

"நான் உங்களுக்கு பாரமா இருக்கேனா..? இருந்தா சொல்லுங்க. வீட்டை விட்டே போயிடுறேன்." என்றவள் அதற்கு மேல் ஒரு நிமிடம் அங்கு நிற்கவில்லை. கோபத்தில் விறு விறுவென வாசலுக்கு வந்தவள் பார்வையில் விழுந்தனர் அங்கு நின்றவர்கள்.

ஆம் அது வேறு யாருமில்லை. அவனே தான் சந்ரூ.. குடும்பமாக சேர்ந்து குழந்தைக்கு மொட்டை போட்டு, சோறு ஊட்ட வந்திருப்பார்கள் போல, பொங்கல் வைத்துக் காெண்டிருந்த இடத்தில் அவர்களுக்குள் ஏதோ சர்ச்சரவு.



"பொய் சொல்லுறான்ப்பா... வந்ததில இருந்து அந்த பொண்ணை பார்த்திட்டே இருந்தான். அப்புறம் அவகிட்ட போய், ஏதோ பேசினான். என்ன பேசினான்னு கேளுங்க. போன் நம்பர் கூட வாங்கிருப்பான்ப்பா" தந்தையிடம் புகார் அளித்துக் கொண்டிருந்தது வேறு யாருமல்ல. அன்று அவள் வீட்டில் வந்து கத்திச் சென்றவள் தான்.

"அய்யோ நானா போய் அவகிட்ட பேசல.. அத்தை தான் தண்ணி வேணும்னு கேட்டாங்க. அதை எடுக்க போனப்ப தான், அந்த குழாய் தண்ணி குடிக்கலாமான்னு கேட்டிச்சு அந்த பாெண்ணு. தெரியாதுன்னு சொல்லிட்டு வந்திட்டேன் மாமா." நீண்ட விளக்கம் தந்தவனை இழிவான பார்வை பார்த்த அந்த பெண்.

"நீ தானே.. கண்டிப்ப அந்தளவு தான் பேசிருப்ப.. உன்னை பத்தி தெரியாது. புள்ளைய தந்திட்டு, என்னை ஒழுக்கம் கெட்டவன்னு சொன்ன ஓடுகாளி நாய் தானே நீ? அவகிட்டயும் அந்த மாதிரி சொல்லி தானே வழிஞ்ச... இப்ப வந்து எங்ககிட்ட நல்லவன் வேஷம் போடுற..? அப்பா ரெண்டு தட்டுத் தட்டி உண்மை எதுன்னு கேளுங்கப்பா..." என்றாள் கணவன் பேச்சில் நம்பிக்கை அற்று.

எப்படி நம்பிக்கை வரும்? தவறை தான் செய்து விட்டு, எப்படி எல்லாம் இன்னொரு பெண்ணை அடைவதற்காக திட்டம் போட்டு பாெய் கூறினான் என்பதை நேராக அறிந்தவள், நம்பிடிடுவாளா..? அதற்கு அவள் பாரதி இல்லையே!


அன்றைய தினத்தின் பின்னர், தினம் தினம் அவன் மேலாச சந்தேகப் பார்வையில், அவன் வாழ்க்கையை நரகம் ஆக்கிக் காெண்டிருந்தாள்.

அவள் கூறி முடிக்கவில்லை. அவன் கன்னம் பழுத்திருக்க வேண்டும். அந்த சத்தம் அவள் காதுவரை கேட்க. இதை எதையும் கண்டு கொள்ளாதவள் போல் நடந்தவள் இதழ்களில் கேலியாய் ஓர் புன்னகை. அவளை யார் கண்டார்களோ இல்லையோ, கண்டுவிட்டான் அவன், அவளை மாத்திரமல்ல.. அவள் உதிர்த்த புன்னகையையும்.

வேகமாய் வந்தவள், சற்றே தேங்கி நின்றதை கண்ட காஞ்சனா,
'அப்பிடி எதை பார்க்கிறா?' என அவள் பின்னே வந்தவருக்கு இத்தனை நாள் பதுக்கி வைத்திருந்த கோபம் அவர்களை கண்டதும் எரிமலையாய் கொப்பளிக்க ஆரம்பித்தது.

"என் புள்ளை மனச நோகடிச்சிட்டு, நீங்க எல்லாரும் உள்ளாசம பண்டிகை கொண்டாடுறீங்களோ! என்ன மருஷப் பிறப்பு நீங்கல்லாம்.

பிள்ளைய தறுதலையா வளர்தது, உன் பொண்ண வாழ வைச்ச என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியேடி சண்டாளி.

குடும்பமா இது? தறி கெட்ட கழுசடை குடும்பம். கலியாணத்துக்கு முன்னாடி புள்ளைய வாங்கியும் குடுத்தும்... த்தூ... கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாம எப்பிடி சாதி சனம் முகத்தில முழிக்கிறீங்க.?

இங்க நிக்கிறாரா மகாராசா.. உன்னை தான் கண்டா காறி துப்பணும்ன்னு நினைச்சேன். ஏன்டா பாெம்பிள பொறுக்கி, இன்னும் உன் பொறுக்கிற புத்தி மாறலயா?

அந்த தெய்வம் சாட்சியா சொல்லுறன். என் பொண்ணுக்கு பண்ண பாவத்துக்கு, நீ எல்லாம் புளு புடிச்சுத்தான்டா சாவ, புளுப்புடிச்சுத் தான் சாவ.." கத்தியவர் ஆதங்கம் தீர்ந்தும் மகள் பின்னே ஓடினார்.

திடீரென புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது அந்த இடமே.

"அப்பா வாங்க போலாம்." கூட்டம் தம்மையே வேடிக்கை பர்ப்பது அன்று வந்து கத்தியவளுக்கு ஒரு மாதிரியாகிப் போனது போல,
யாரை பற்றிய கவலையின்றி, பிள்ளையை தூக்கியவள், தந்தையையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

யாரை பார்க்கக் கூடாது என்று நினைத்தாளோ அவனே கண்ணெதிரில். இனியொரு தரம் அவனை அவள் பார்கக் கூடாது. அப்படி பார்காது இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வதென பலமாக சிந்தித்தளுக்கு கிடைத்த பதில், இந்த நாட்டை விட்டு, தொலை தூரம் எங்கேயாவது போய் விட வேண்டும் என்பது தான்.

இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில் தந்தையிடம் வந்தவள்,

"எனக்கு இங்க இருக்க பிடிக்கலப்பா.. ஏதாவது தூர தேசத்துக்கு அனுப்பிடுறீங்களா?" என்றாள்.

"அதுக்கென்ன? மாப்பிள்ளை எப்போ நீ ஓகே சொல்லுவேன்னு காத்து கிடக்காரு. நீ மட்டும் ஓகேன்று ஒரு வார்த்தை சொல்லு, ஒரு வாரத்தில கல்யாணத்தை முடிச்சு, கையோடயே கூட்டிட்டு போக சொல்லுறேன்." சிரித்தவாக்கில் அவர் கூற,

"இல்லை.. நான் கல்யணத்தை பத்தி பேசல.. எனக்கு அப்பிடி ஒரு எண்ணமும் இல்ல. நான் சொன்னது இலங்கை வேண்டாம்ன்னு. வேற எதாவது நாட்டுக்கு வீசா எடுங்க நான் போறேன்." என்றாள்.

"பாத்தீங்களாங்க... எவ்வளவு அழுத்தக்காரியா இருந்தா, உங்கிட்டையே இந்த வர்த்தையை சொல்லுவா..? தப்பு செய்தது அந்த சந்ரூ.. ஆனா தண்டனைய மாத்திரம் எங்களுக்கு தரா.." முந்தாணையை வாயில் அடைந்து முணுமுணுக்க ஆரம்பித்தார் காஞ்சனா. பெண்களால் வேறு என்ன செய்ய முடியும்.

"பாரதி நீ பண்றது தப்பு. நானும் என் பாெண்ணு நாெந்து போய் இருக்கா, பேசக்கூடாதுன்னு அமைதியா இருந்தா, ரொம்பத்தான் பிடிவாதம் பண்ற.. ஏமாத்தினவனே பொண்டாட்டி பிள்ளைங்களோட சந்தோஷமா இருக்கிறப்போ, உனக்கு என்ன வந்தது. இதை பாரு.. நீ இந்த மாதிரியே இருந்தேன்னா, ஊரு உன்னை மாத்திரம் இல்ல.. எங்களையும் தப்பா பேசும்.
இன்னைக்கு வரை நீ செய்த காரியத்தினால, தலை நிமிர்ந்து நடக்க முடியல. எங்க போனாலும் என்ன மாதிரி, பொண்ணு நல்லா இருக்காளா...? ஏன் இப்பிடி ஒரு காரியம் பணணான்னு கேட்டு கேட்டு நோகடிக்கிறாங்க. நாங்க பெத்த பொண்ணு தானேன்னு தான் நாங்களும் இதை எல்லாம் தாங்கிக்கிறோம்.

ஆனா நீ மட்டும் எங்களுக்கு பிள்ளை இல்லையே! தம்பியோட வாழ்க்கையையும் பார்க்கணும்ல. செய்த பிழைய சரி செய்யணும்னா, நீ கல்யாணம் செய்தே ஆகணும் பாரதி. இது உனக்காக மட்டுமில்ல.. உன்னை சார்ந்து யாரெல்லாம் இருக்காங்களோ அவங்களுக்கும் அது தான் தீர்வு.

நானே இதை உன்கிட்ட பேசணும்ன்னு நினைச்சேன். நீயே வந்து பேசனது நல்லதா போச்சு. வர வாரம் ஒரு நல்ல நாளா பார்த்து, மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள அழைச்சு நிச்சயம் முடிக்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன். அதனால இனியும் மாட்டேன்னு அடம்பிடிக்காம, கல்யாணத்துக்கு ரெடியாகிற வழியப்பாரு." என்று விட்டார் அவர்.
அவர் சொன்னதன் பிற்பாடுதான், தன் செயலால் தான் மட்டும் தான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என நினைத்தவளுக்கு, மொத்தக்குடும்பமும் பாதிக்கப் பட்டிருப்பது புரிந்தது.

ஆனால் ஒரு தவறை சரி செய்ய, இன்னொரு தவறு எப்படி தீர்வாகும்? தன் மனசாட்சிக்கு மாத்திரமல்ல. கணவன் ஆகப் போகின்றவனுக்கு அவள் செய்யும் துரோகம் இல்லையா? நாளை அவனையும் ஊர் தன்னால் அர்ச்சிக்கக் கூடும். பின் இருவர் வாழ்க்கையும் நரகமாகிவிடும்." திரும்பத்திரும்ப தந்தை சொன்னதை அசை போட்டவளுக்கு வேறு வழி தெரியவில்லை.
அதனாலேயே இதற்குப் பின்னர் தன்னால் யாரும் பாதிக்கப் படக்கூடாது என்று நினைத்து, யார் கண்ணும் காணாத இடம் தேடி வந்து விட்டாள்.
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
66
37
18
Tirupur
ரொம்ப சூப்பர் 👌 ஆனால் திரும்பவும் ஒரு தவறான முடிவ தான் எடுக்குறா...
ஏற்கனவே குடும்பமே மனசுடைஞ்சு போயிருக்காங்க... இப்ப இதனால அதிகமா தானே வேதனைப்படுவாங்க?