• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

28.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem

28.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே​



ராமைய்யா காத்திருக்க முடியாமல் வர்மனுக்கு அழைக்க எந்த போனையும் அவன் எடுக்கவில்லை.


சார் போன் அடிக்குது என்று வசந்த் சொல்ல


ஹான் என்றவன் எந்த எதிர்வினையும் செய்யாமல் அமர்ந்து இருக்க, பிரைவேட் ஹெலிக்காப்டர் தயாராயிருக்கு அதுல போய்ட்டலாம் சார் என்று சொல்ல அதற்கும் பதில் இல்லாமல் அமர்ந்து இருந்தான்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் கோவை சென்று இறங்கி இருக்க எங்க போகனும் வசந்த் என்று அப்போது தான் வாய் திறந்தான்..

இங்க தான் பக்கத்துல சார் என்றவன் காரை கிளப்ப அடுத்த அரைமணி நேரத்தில் ஹாஸ்பிடல் வாசலில் வந்து நின்று இருந்தது வண்டி,நெஞ்சை அடைத்தது கொண்டு வந்தது வர்மனுக்கு என்ன ஆச்சு இவளை யார் இப்ப இங்க வரச் சொன்னது என்று தடுமாறி இறங்க மீண்டும் மீண்டும் வர்மனின் போன் ஒலிக்க அதை வசந்த் கையில் கொடுத்து விட்டு தடுமாறி வேகமாக உள்ளே செல்ல பரத் வேந்தன் ரவி என அனைவரும் அங்கே இருக்க அவர்களை கடந்தவன் அறையை பார்க்க அங்கே வாகியை கட்டி கொண்டு நின்று இருந்தான் விதுரிஷி..


வேகமாக கதவை தள்ளிக்கொண்டு வர்மன் வர அந்த சத்ததில் விது வாகியை விட்டு விட்டு திரும்ப அம்மு என்னாச்சு எப்படி இருக்கா என்று அவனை தள்ளிவிட்டு பார்க்க சேரில் கையில் கட்டுடன் உட்கார்ந்து இருந்தாள் வாகி…

அம்மு அம்மு என்று அரற்றியவனுக்கு பெட்டில் படுத்திருக்கும் ஆளை உணரவில்லை.

அவளை இறுக்கமாக அணைத்து கொண்டு அவன் அரற்ற..

விடுங்க அத்தான் அவளுக்கு ஒன்னும் இல்ல என்று விதுரிஷி தான் அவனை சமாதானம் செய்ய உன்னையே யாரு இப்ப வரச் சொன்னது அப்படி என்ன உனக்கு இங்க வேலை.. என்று அவளை விடாமல் அணைத்து கொண்டு கேட்க..அவனிடமிருந்து விடபட முடியாமல் இப்ப விடப்போறீங்களா இல்லையா மிஸ்டர்,யார் வேணும் ன்னாலும் கட்டி பிடிக்கிற அளவுக்கு இன்னும் தரம் தாழ்ந்து போகல என்று சொன்னதும் பட்டென அவளை விட்டு கண்ணை திறந்து பார்க்க அவள் பார்வையோ கட்டிலில் படுத்து இருப்பவர் மீது இருக்க அப்போது தான் அவனும் பார்வையை திருப்பினான். பார்த்த நொடி அதிர்ந்து இவரு இங்க என்று தடுமாற..


ஆமா என்னோட மாமா…

அம்மு…

இப்ப இங்க என்ன வேலை உங்களுக்கு எதுக்கு இங்க வந்து அடுத்த டிராமா?

என்னடி விட்டா ஓவரா பேசிட்டே போற ஆமா தப்பு பண்ணிட்டேன் தான் அதுக்கு அதையே பிடிச்சு தொங்கனுமா?

நான் தொங்க சொல்லல ..

அடியேய் ப்ச் இப்ப அந்த விஷயத்தை விட இவரை எதுக்கு பார்க்க வந்த?

அதை கேட்க நீங்க யாரு..

வாகி…

போதும் மிஸ்டர் என்னோட மாமா நான் பார்க்க வந்தேன்.

ஆமா ஊர் உலகத்துல இல்லாத மாமா யாரை பத்தியும் கவலை இல்லாத சுயநலபிசாசு..

இன்னொரு வார்த்தை தப்பா வந்துச்சு அவ்வளவு தான் மரியாதையா வெளியே போங்க என்று கத்த..

போதும் வாகி இவருக்கு என்ன தகுதி இருக்குன்னு இப்படி கத்துற?

என்ன தகுதி இல்ல அவருக்கு?

அவர் குடும்பத்தை வச்சு பார்க்கிற தகுதி இல்ல, பொண்டாட்டி பிள்ளையை கை கழுவிட்டு போன ஜென்மம் என்று பேசிக்கொண்டே போக ஓங்கி பளார் என்று அறைந்து விட்டாள் வாகி…


அக்கா என்று விதுரிஷி அருகில் வர..

விடுடா இந்த மர மண்டைக்கு ராமைய்யா பல்லவி மட்டும் தான் சரி, மத்தவங்க எல்லாம் தப்பு. அவங்க எது செஞ்சாலும் நல்ல விஷயம் மத்தவங்க எல்லாம் சுயநலம், இப்படி பட்டவங்க என்ன சுயநலத்துக்காக இங்க வந்து நிக்குறாங்க ன்னு கேளுடா இப்பையும் அவங்களுக்கான விஷயத்துக்காக தான் வந்து நிப்பாங்க வேற எந்த காரணமும் இல்ல எதாவது தேவையா என்று அவள் நிறுத்த..

படுத்திருந்த வரை பார்த்து கொண்டே இருந்தவன் விதுரிஷியிடம் என்னாச்சு எங்க இந்த ஆளை பார்த்தீங்க ?

விதுரிஷி, “ அத்தான் சொல்லுறேன்னு கோவிச்சுக்காதீங்க அவரை ஏன் இப்படி வெறுக்குறீங்க?

பின்ன கொஞ்சனுமா?

அத்தான்…

ப்ச் இந்த ஆளை எதுக்குடா நீங்க பார்க்கனும்..

நாங்க பார்க்காம அவரு பெத்தது தான் தருதலையா இருக்கே அப்புறம் வேற யாரு பார்ப்பா…

வாகி கடுப்பை கிளப்பாத விட்டுட்டு ஓடினவரை பத்தி என்ன தெரியும் உனக்கு?

உனக்கு என்ன தெரியும் அவரைப் பத்தி…என்று வாகி எழுந்து விட அக்கா என்றவன் அவளை அணைத்து கொள்ள நிற்க முடியாது தடுமாறினாள். ப்ச் விடுடா எப்ப பாரு மத்தவங்களை குறை காணுறது தான் இவங்களுக்கு வரும் ஏன்னா அது அவங்க குடும்ப வழக்கம் என்றவளை பற்கள் நறநறக்க பார்த்தவன்..,எதுக்கு இப்ப எல்லாரையும் இழுக்குற ? என்ற வர்மனை ஓஓஓ அப்ப நீங்க செய்யுறது எல்லாம் என்ன சார் என்றவள் பல்லவி செய்த காரியத்தை வீடியோ போட்டு காட்ட‌..

புருவசுழிப்புடன் முகம் கசங்க நின்றவன் என்னால் என்ன முடியுமோ அவ்வளவும் பண்ணிட்டு தான் இருக்கேன் என்று வர்மன் சொல்ல…


என்ன பண்ணாலும் அடிக்க அடிக்க எழுந்து வர குணம் அவங்களது என்றவள் ப்ச் அது எனக்கு தேவையில்லாதது என்னைய சீண்டாத வரை நான் நல்லவ, நான் நேர்மையா தான் தண்டனையை வாங்கி தந்து இருக்கேன். ஆனா அவங்க பண்ணது? நம்பிக்கை துரோகம் ன்னு சொல்ல மாட்டேன். இது அதைவிட கேவலமான ஜென்மம், எதுலையும் சேத்த முடியாது. ச்சே தன் புருஷனையே கொல்ல பார்த்தாங்க எங்களை எல்லாம் என்னனு பார்க்க போறாங்க.. காசு பணம் இருக்கிறவங்க மட்டும் தான் மனுசனா ? இதையெல்லாம் பார்த்தும் நீங்க எல்லாம் எங்களை கேள்வி கேட்டா ஒன்னுமே பண்ண முடியாது.

என்ன சொல்லுற என்று வர்மன் கேட்க..

விது கிளம்பச் சொல்லு மாமா முழிக்கும் போது தேவையில்லாத விஷயத்தை நான் செய்ய விரும்பல என்றவள் வெளியே எட்டி பார்க்க பரத் வேந்தன் இருவரும் ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர்.


விது…

அக்கா ..

சொன்னதை செய்டா அவனுங்களை வரச் சொல்லு என்று வெளியே கண்காட்ட..

விதுரிஷி, “ போகலாம் அத்தான் வாங்க என்று அழைத்து கொண்டு வெளியே செல்ல வேந்தன் உள்ளே நுழைந்தான்.

என்ன வாகி வலி பரவாயில்லையா?

ஓகே தான், மாமா தான் கண்முழிச்சு வரனும் ன்னு வெயிட்டிங், வந்தது யார் ன்னு தெரிஞ்சதா?


ம்ம்ம் எல்லாம் வெளியாட்கள் தான் அதுவும் நம்ம நாடு இல்ல

வாகி யோசனையோடு வேந்தனை பார்க்க இந்தா வாகி என்று ஒரு பேப்பரை நீட்டி இருந்தான் பரத்..

என்னது இது என்று பிரித்து பார்க்க பர்வேஷ் பல்லவி இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் இருக்க..

இது யாரு பரத் ..


இது தான் உன் அத்தான் வீட்டுக்கு ரொம்ப வருஷமா காவல் போல என்று சொல்ல…

பரத்…

அவன் ஆஸ்திரேலியா நேத்து கூட பல்லவியை பார்த்துட்டு தான் கிளம்பி இருக்கான் .

சரி என்றவள் யோசனையோடு பார்க்க..இவன் தான் இதுக்கு பேஸ், ஆட்களை தயார் பண்ணதும் இவன் தான். டூரிஸ்ட் மாதிரி இவன் வந்து இரண்டு மாசத்துக்கு மேல இருக்கும் அப்பவே ஆளை இறக்கிட்டான் என்றவன் கொஞ்சம் கவனம் தேவை. இன்னும் எங்க எல்லாம் ஆள் இருக்குன்னு தெரியல என்று பரத் சொல்ல..

அப்ப மோதுறது பெரிய இடம் ன்னு சொல்லு என்று வாகி சிரிக்க..

போதும் நிறுத்து இருக்கிற பிரச்சினையில் இது வேற என்ற ரவி அவனை எதுக்கு இங்க வரவச்சீங்க என்று மூவரிடமும் கேட்க..

யாரை என்று மூவரும் ஒரேநேரத்தில் கேட்டதும் முறைத்தவன் வர்மனைத்தான் என்றான்..

எங்களுக்கு என்ன பைத்தியமா அவனை வரச் சொல்ல.


அப்புறம் அவனுக்கு எப்படி தெரியும் நானும் பேசுறது இல்ல இதோ இந்த ஒரு மாசமா அவன் உனக்கு வச்சு இருந்த செக்கியூரிட்டி வேணாம் ன்னு அனுப்பி விட்டாச்சு அப்புறம் அவனுக்கு எப்படி தெரியும் என்று கேட்டதும் மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்க..

என்ன என்றான் ரவி…

அப்ப அவனுக்கு தகவல் தரது இல்லாம, நீ செக்யூரிட்டி வச்சு இருக்கிறதை கூட சொல்லல ..

அது வந்து என்று ரவி தடுமாற..

இந்த பேச்சை விடுங்க இப்ப நமக்கு வேற வேற பிரச்சினை இருக்கு பல்லவி வேற என்னென்ன பண்ணுறாங்க ன்னு நமக்கு தெரியனும்.

அதெல்லாம் மொத்தமா எடுத்தாச்சு என்ற பரத், ஸ்மக்லிங் பண்ணுறாங்க நிறைய பொண்ணுங்களை அதுக்கு அடிமையாக்கி அதையும் விலைபேசி சீக்கிரம் முடிச்சி விட்டுடுறாங்க ..

ச்சே என்னடா பொழப்பு இது எப்ப பாரு பொண்ணுங்களை யூஸ் பண்ணுறது தான் இவங்களுக்கு வேலையா..


அதுல போதையும் அதிகம் காசும் அதிகம் என்றான் வேந்தன்.

வாகி முறைக்க..

என்னைய பார்த்தா அது தானே உண்மை காலங்காலமாக விதவிதமா இது ஒன்னு தான் தொடர்ந்து நடக்குது என்றவன் இது சின்னதா நடக்கல ஆளும்கட்சி எதிர்க்கட்சிக்கு எல்லா ஆளும் உள்ள இருக்கு? அதான் பல்லவி துள்ளி விளையாடுறாங்க..

அது பத்தின சில விஷயங்கள் தான் உங்க அம்மா கையில் இருந்தது.

வாகி, “இனி என்ன பண்ண முடியும் அவங்களால் அதான் படுத்த படுக்கையாக இருக்காங்களே?…

அப்படி இருந்தும் தானே உன்னையே கொல்ல ஆள் செட் பண்ணி இருக்காங்க ஆனா அதுல தெரியாம இவரு மாட்டிக்கிட்டாரு என்று படுக்கையில் இருந்தவரை கை காட்ட


மாமா என்றாள் உருகும் குரலில் இந்த இருபது வருடங்களில் சொந்தமாக இருந்தவர் இதோ இப்போது பேச்சே இல்லாமல் படுத்து இருக்க தாளமுடியவில்லை அவளால். அருகில் இல்லை என்றாலும் நாம் பார்த்து இருந்த ஒரு உண்மையான உறவல்லவா அதுவே அவளை உடைத்து விட இவனோ வந்த வேகத்தில் அவரை சுயநலவாதி என்று வேற பேசிவிட இன்னுமே வெறுப்பை ஏற்றி இருந்தாள் மனதில்.


இங்கே வர்மனோ விதுரிஷியிடம் கத்த..

எதுக்கு அத்தான் இவ்வளவு கோவம் மாமாவை சரியா நீங்க புரிஞ்சுக்கல அத்த செய்யுற தப்பை தெரிஞ்சு கண்டிச்சவரு, அவரையே தவறானவரா சித்தரிச்சு வெளியே அனுப்பியது மட்டும் இல்ல அவரை அப்பவே கொலை செய்யவும் அவங்க தயங்கல நீங்களே உங்க அம்மா கிட்ட கேட்டு பாருங்க என்றவனை பார்த்தவன் ,இல்ல அப்படி எல்லாம் இருக்காது விது

எப்படி அத்தான் அப்படி சொல்லுறீங்க?

எனக்கு தெரிஞ்சே அவரு அவரு என்று தயங்க..


மாமா க்கு எந்த பொண்ணு கூடவும் தொடர்பு இல்ல அத்தான், உங்க அம்மாக்கு தான் என்று நிறுத்திவிட விது என்று இரைந்து இருந்தான் வர்மன்..


தொடரும்






 
  • Angry
Reactions: shasri