"எதுக்கு ஊரை கூப்பிட்டுக் கொண்டு வாறாள்" என்று கூறிக்கொண்டே கேட்டை எட்டிப்பார்த்தார்.
தொப்பலாக நனைந்திருந்தவளோ, எல்லோரையும் விட வேகமாக காந்தி முன்னே வந்து நின்றவளை கண்டவர்,
"என்னடி இது கோலம்.? ஊரில பெய்யாத மழை, மொத்தமா உன்னில கொட்டிச்சா என்ன?"
"செம காமடி பாட்டி" என்றாள் இலக்கியா.
"ஏய்... உன்ர பாதாள வாயை மூடுறியா? வந்திட்டா விருது தர," என்றாள் பப்லு இலக்கியாவை மு றத்தவாறு.
"என்ர வாய் பாதாள வாய் இருக்கட்டும், உன்ர வாயை என்ன என்டுறதாம்? இப்ப இப்பிடி நிக்கிறதுக்கும் காரணம் அது தான், அதை தட்டி கேட்க வக்கில்லை... வாயில்லா பூச்சிட்ட, வீரத்தை காட்டுறது." என்றாள் பப்லுவை வம்பிழுக்கும் விதமாய்.
கயிற்று கட்டில்மேல் இருந்த தாத்தாவிடமம் திரும்பியவளோ,
"பாருங்க தாத்தா! இவன் கோவில்ல வைச்சிருந்த மஞ்ச தண்ணிய என்னில ஊத்திட்டான். என்னன்டு கேளுங்கோ" என்று ஜெகனை தாத்தாவிடம் மாட்டி விட்டாள்.
"அவனை கேக்கிறது இருக்கட்டம்... நீ அவனுக்கு என்ன செய்த, அத சொல்லு" என்றார் பாட்டி.
என்மேல தண்ணி ஊத்திருக்கான், அவனை என்ன ஏதுன்னு கேக்காம, என்னை விசாரிக்கிறியா நீ.....?
உன் செல்ல பேரன் தான், என் முடிய இழுத்து, வம்புக்கு இழுத்தான்.
நான் அவனை அடிக்க துரத்தினன். கையில சிக்காம ஓடிட்டான்.
எனக்கு கோபம் வந்துது. பக்கத்தில கிடந்த சின்ன கல்ல தூக்கி எறிஞ்சன். அதுவும் அவன்ல பாடேல." சொல்லி முடிக்கவில்லை.
"அடி பாவி......! சுத்த பொய் பாட்டி.....! இவ வாயால வாறத நம்பாதிங்கோ. சின்ன கல் என்டு, எதை சொல்லுறா தெரியுமா? பெரிய பாறாங்கல் பாட்டி!
அவளின்ர தலையை விட, ரெண்டு மடங்கு பெருசு பாட்டி...!
அதை போட்டு என்னை கொள்ள பாத்தா .
கொஞ்சம் சுதாரிக்கேல என்டா, உன்ர பேரன் உனக்கில்லாம போயிருப்பன்." என்று வராத கண்ணீரை துடைத்தவன்,
ஆவேசம் வந்தவன் போல்,
"அதான் பாட்டி! திடீர்னு இவளுக்கு என்னாச்சு? சின்ன பிள்ளையால எப்பிடி இந்த பெரிய கல்ல தூக்க ஏலும்? இவளுக்குள்ள பேய் ஏறிட்டுதோ என்டு நினைச்சுதான் தான் பாட்டி, சாமிக்கு குளிப்பாட்ட வைச்சிருந்த மஞ்சள் தண்ணிய இவள்ல ஊத்தி, பேய ஓட்டலாம் என்டு நினைச்சேன்.
நான் செய்தது தப்பா பாட்டி?" என தான் செய்தது நிஜாயம் போல் ஏற்ற இறக்கங்களுடன் கூறினான்.
அதை கேட்டதும், அனைவரும் சத்தம் வெளிவராதவாறு சிரித்து வைத்தனர். ( அட பெருசா சிரிச்சா கருப்பு அடிச்சிடுமே அதான் அப்பிடி சிரிக்கிறாங்க.)
ஜெகனை முறைத்தவளோ,
"தாத்தா... நீங்களும் இவனை கேக்க மாட்டிங்களா.?" என்றாள் சிணுங்கலாய்.
"இரு தாத்த கேக்கிறன்" என்றவர் வார்த்தையோடு நில்லாது கண்டிக்கலானார்.
இவர்கள் பேச்சு சிரிப்புக்கு நடுவே துஷாவை கண்ட மல்லி, அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
இளாவிற்கு வந்த சந்தேகம், அவளிடமும் ஒட்டிக்கொள்ள, மாமியாரிடம் வந்தவள்,
"யாரத்தை இந்த புள்ள?" என்றாள்.
"நம்ம வாசனோட உறவுக்காற புள்ளம்மா.... இனி இங்க தான் தங்குவா" என்றார்.
நெற்றி புருவங்கள் முடிச்சிட, அவளை ஆரந்தவள்,
"வாசன் அண்ணாவுக்கு எந்த முறை சொந்தம்" என்றாள்.
திடீரென கேட்டதும் சற்று தடுமாறியவளோ,
"அம்மாவுக்கு தூரத்து அண்ணன் முறை"
"ஓ.... உன்ர பெயர சொல்லேலயே" என்று கேட்டவரை முந்திக்கொண்டு வந்த பப்லுவோ,
"துஷாந்தினி பெரியம்மா." என்று அவருடன் சேர்த்து எல்லோருக்கும் அறிமுக படுத்தியவள்,
"வா துஷா! எல்லாரையும் நான் உனக்கு அறிமுக படுத்துறன். இவா என்ர பெரியம்மா மல்லி! பொன்வண்ணன் பெரியப்பாவோட பொண்டாட்டி.
பாட்டிக்கு ரெண்டாவது மருமகள்." என்று ஆரம்பித்து, ஒவ்வொருதராக அறிமுக படுத்தியவள், கடைசியாக ஜெகன் முறை வரவும்,
"இந்த கொடிய விஷம் இருக்கிற ஜந்துவ எல்லாம் என்னால அறிமுக படுத்த ஏலாது. நீயும் அதோட சேராத, பிறகு உன்னையும் கடிச்சு வைச்சிடும்" என்றாள் முகம் சுழித்து.
"போடி அவிஞ்ச அணுகோண்டா! நீ என்ன என்னை அறிமுக படுத்தாட்டி என்ன? நான் சொல்லுறன்.
ஹாய் நான் ஜெகன்" என்றவாறு அவளை அணைப்பதற்காக முன்வந்திட, அவசரமாக இடை புகுந்தவளோ,
"வளியுது... உன்ர காதல் மன்னன் விளையாட்ட இவளிட்ட காட்டாத, அப்பாட்ட சொல்ல வேண்டி வரும்." என்றாள் அவன் காதருகே சென்று அவனுக்கு மட்டும் கேட்பது போல்
எஉண்மையில் தன் மேல் உள் கடுப்பில் சொல்லி விடுவாளோ என்று பயந்தவனும் அமைதியாகிக்கொண்டான்.
"அவளை நீ அறிமுகம் செய்தது காணும், போய் அந்த ஈர உடுப்பை மாத்து... இல்லாட்டி, காய்ச்சல் உனக்கு அறிமுகமாகிடும்
முதல்ல எல்லாரும் போயி குளிங்கடா! வேர்வை நாத்தம் மூக்க விட முடியேல.." என்றதும் தான் எல்லோரும் கலைந்து சென்றனர்.
மல்லியின் விழிகள் மட்டும் துஷாவை ஆராய்ந்தவாறே சென்றது.
அவளுக்கு தெரியாதா சுதாகரனை?
ஆண் வேசம் போட்டால் சுதாகரனை போல் இருப்பவள், அவள் கண்களில் மட்டும் தப்ப முடியுமா?
திரை மறைவில் ஏதோ ஒன்று நிகழ்வதாக உணர்ந்தவளுக்கு, வாசனும் இதற்கு உடந்தை எனும்போது தான் குழப்பமாகிற்று.
அவள் ஆருயிர் தோழி இப்படி செய்வாள் என மல்லியும் தான் நினைக்கவில்லை.
குடும்பத்திற்காக காதலே வேண்டாம் என்பவளை, புரிய வைக்க தான் அன்று அவ்வளவும் பேசினாள்.
அதுவும் வீட்டின் பெரியவர்கள் சம்மதத்துடன் தன் காதலை அடைவாள் என்று எதிர் பார்த்து தான், இருவரையும் தனிமையில் சந்தித்து பேசி, குழப்பங்களை தீர்த்து, ஒரு முடிவு எடுப்பார்கள் என்று அவளை கோவிலுக்கு போகும்படி கூறினாள்.
ஆனால் தன் பேசியதால், இவள் அனைவரையும் தவிக்க விட்டு செல்வாள் என்று மல்லியும் நினைக்கவில்லை.
சரி தன் காதலை தான் தேடிப்போனாள், நிச்சயம் ஒரு நான் தன்னை புரிய வைப்பதற்கு கொஞ்ச நாட்களில் வருவாள் என்று இவளும் தான் எதிர் பார்த்து காத்திருந்தாள்.
பாவம் காத்திருப்புக்கு கிடைத்தது என்னமோ ஏமாற்றம் மட்டுமே. தன்னால் தான் இந்த குடும்பம் இவ்வளவு வேதனை அனுபவிக்கிறது என்ற குற்ற உணர்வு அவளுக்கு.
அன்று சுதாகர் கொடுத்த கடிதம் மட்டும் அவள் தேவியிடம் கொடுக்காமல் இருந்திருந்தால், இன்நிலமை யாருக்குமே வந்திருக்காது. இதில் இளா வேறு, சாப்பிடாமே மூலையில அடைந்து கிடப்பான். படிப்பை வேறு இடையில் குழப்பிக்கொண்டான்.
இவளும் அடிக்கடி வந்து இளாவுடன் பேச முயற்ச்சி செய்வாள். ஆனால் அவன் தான் யாருடனும் பேசுவதே இல்லையே!
அதைவிட இவள் இரண்டு நாட்களுக்கு முன்னம் வந்து போனதால் தான், தமக்கை தன்னை பிரிந்து சென்றாள் என்று அவனும் இவளுடன் பேச்சு வைக்கவில்லை.
நாட்க்கள் நகர்ந்தோட, அன்னம்மா தான் இவள் அடிக்கடி வந்து போவதை பார்த்து விட்டு, பொன்வண்ணனுக்கு கட்டி வைத்தால், தேவியின் இழப்பு தெரியாது என்று நினைத்து கட்டிவைத்தார்.
ஆனால் இளாவோ அவளுடன் எப்போதும் போல் பேசாமல், தேவைக்கு மாத்திரமே அண்ணி என்று தேடுவான்.
முன்னமெல்லாம் நரியாரே என்று அழைத்தால் போப படுபவள், இப்போது அவன் அழைப்புக்கு ஏங்க தொடங்கினாள்.
நாட்கள் நகர்ந்ததே தவிர, இளா மாறுவது போல் இல்லை.
அவளுக்கும் அது பழகிப்போக அப்படியே விட்டு விட்டாள்.
ஆனால் குற்ற உணர்வு மட்டும் குறைத்த பாடில்லை. துஷாவை கண்டதும் நினைவுகளை மீட்டி பார்த்தவள், எதுவாக இருந்தாலும் தான் தேவியை மன்னிக்க போவதில்லை.
ஆனால் அவளால் செய்ததற்கு இவள் என்ன செய்வாள்? இவளும் தன் பிள்ளைகளை போல எதுவும் அறியாதவள் தானே!' என்று அவள் மேல் பாசம் தான் வந்தது.
குளித்து வந்தவர்கள், இரவு உணவினை தயாரிக்க செல்ல. இளையவர்கள் வழக்கம் போல் ஒன்று கூடி, வட்டமானாடு நடத்த தொடங்கினார்கள்.
ஓரமாக அவர்களையே பார்த்து கொண்டிருந்த துஷாவை பார்த்த பப்லு,
"நீயும் வா துஷா!" என்றழைத்து தம்முடன் இணைத்துக்கொண்டாள்.
சிறிது நேரம் தங்கள் கல்லூரி, பாடசாலை கதையளந்தவர்கள்.
"ஏதாச்சும் விளையாடலாமா?" என்ற கௌதமிடம்.
"ம்டா.. எனக்கும் அலுப்படிக்குது" என்று கூறிய காவியா,
"திருடன் போலீஸ் விளையாடலாமா?" என்றாள்.
அனைவரும் அதற்கு சம்மதிக்க. எட்டு காகிதங்களை நறுக்கி, உள்ளே திருடன் பொலீஸ் என்று ஒரு சில பெயரெழுதி, சீட்டை குழுக்கி போட்டார்கள்.
ஒருவருக்காருவர் காட்டாமல், தாம் யார் என்பதை தெரிந்து கொண்டு பேசாமல் இருந்து கொண்டனர்.
இந்த விளையாட்டில் திருடனுக்குக்கும் பொலீஸிற்கு மாத்திரமே வேலை.
போலீஸ் அகப்பட்டவன் திருடன் யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும். மாறி கூறினால், மதிப்பென் இல்லை.
இருமுறை வென்றும் தோற்றும் என விளையாடி மூன்றாம் முறை உருட்டியதில், இம்முறை துஷாவிற்கு அருகில் இருந்த கௌதமிடமே திருடன் போனது. அதை துஷாவும் அவனுக்கு தெரியாமல் பார்த்து விட்டாள்.
அவனோ ஏற்கனவே தன் சட்டை பையில் மறைத்து வைத்திருந்த துண்டை, யாருக்கும் தெரியாமல் அதனுள் போட்டு விட்டு, மாற்றி எடுத்து எதுவும் தெரியாதவன் போல் இருந்து கொண்டாள். இதையும் துஷா பார்த்து விட்டாள்.
கூடவே சிரிப்பும் வந்தது. எங்கு அங்கேயே இருந்தால் சிரித்து அவனை காட்டி கொடுத்திடுவேனோ என்று நினைத்தவள்,
" நான் பாட்டிக்கு உதவி செய்யிறன்" என்று எழுந்து கொண்டவளை.
"அப்ப நீ தான் கள்ளனா?"
"உண்மையா இல்லை.. பார்!" என்று தனது சீட்வை காட்டினாள்.
அவள் கள்ளன் இல்லை என்றதுமே அனுமதித்தனர். தப்பினேன் என்று ஓடி விட்டாள் துஷா.
சமையல் அறைக்கு வந்தவள். அங்கு அனைவரும் ஒவ்வொரு வேலை செய்து கொண்டிருந்தனர்.
"என்னம்மா நீ விளையாடேலயா" என்றார் காந்தி.
"கௌதம் கள்ளாட்டம் ஆடுறார் பாட்டி! நான் பாத்திட்டன், அங்க இருந்த சிரிச்சு காட்டி கொடுத்துடுவன். அதான் வந்திட்டன்" என்றாள்.
"கொஞ்ச நேரம் பொறு! இப்ப என்ன கத்து கத்துங்கள் என்டு தெரியும்." என்றார் அவரும்.
"நானும் உதவி செய்யவே பாட்டி!"
"சமையல் எல்லாம் தெரியுமா உனக்கு?"
"தெரியுமே!
அம்மா திட்டித் திட்டியே சமைக்க பழக்கிட்டாங்க. படிக்கேக்கயே நான் தான் சமைச்சு சாப்பிடன்."
"ஏன்ம்மா? அப்பவே அம்மாக்கு வருத்தம் வந்திட்டுதா?" என்றார் கவலையாய்.
"அப்பிடி எல்லாம் இவ்லை பாட்டி! கொழுப்பு யுனிவசிட்டில தான் படிச்சன். சாப்பாட்டுக்கு புறம்பா காசு கட்டோணும். ஆனா சாப்பாடு நல்லா இருக்காது. அதால சமையல் நான் தான்"
"பரவாயில்ல... எங்கட வீட்டிலயும் இருக்குதுங்ளே! சாப்பிட மட்டும் தான் குசினியே தெரியும்." என்ற நேரம்,
"பாட்டி.......!" என்று ஓலமிட்டாள் பப்லு.
" தொடங்கீட்டாள்... இதகளுக்கு விலக்கு பாக்கிறதிலே, ஆயுசு முடிய போகுது. மத்ததுகள் அமைதியா இருந்தாலும், இவ தொண்டைய திறந்திடுவா" என்றவர் அவர்களிடம் விரைந்தார்.
"இங்க வா துஷா!" என்று அழைத்தாள் மல்லி, இந்த வெங்காயத்தை வெட்டித் தாறியா? என்று கொடுத்தவள்,
"அம்மா பெயர் என்ன என்ட" என்றாள் இயல்பாக விவபுபவளை போல்.
சிறிதும் யோசிக்காது சாந்தி என்றாள் அவளும்.
உடனே பொறி தட்டத்தொடங்கியது மல்லிக்கு.
ஆம் சுதாகர் எழுதிய கடிதத்தில் இருந்ததும் அதே சாந்தி தான். அடுத்த கேள்வியாக, அப்பா பெயர் கேட்டதும் தான் தன் அத்தை தன்னை குறுக்கு விசாரணை செய்வது புரிய, என்ன சொல்லலாம் என சிந்தித்தவள்.
இதுக்காக தான் வாசன் அங்கிள் உடனேயே ஓடினாரா.? என்னை தவிர எல்லாருமே கெட்டிக்காறங்க தான். நான் தான் நல்லா மாட்டிக்கிட்டன்.
சரி ஆத்தில இறங்கியாச்சு, நனைசிடுவனோ என்டு பாத்தா முடியுமா? என நினைத்தவள்,
"கரன் அத்தை!" என்றாள்.
'ரொம்ப விபரம் தான்' என நினைத்தவரும்.
"என்ன படிச்சிருக்க"
"டாக்டருக்கு படிச்சன் அத்தை! ஆனா கடைசி பரீட்சை எழுதேல"
"ஏன்மா கஷ்டப்பட்டு படிசிட்டு,எதுக்கு எழுதேல"
சட்டென "அப்பாக்கு.." என்று வாய் விட்டவள், அதோடு நிறுத்தி விட்டு,
"பரீட்சை எழுதுற நேரத்தில அப்பாக்கு விபத்தாச்சு. அதால எழுதேலாம போச்சு" என்றவள் முகம் சிறு நொடியிலேயே மாறிப்போயிருந்தது.
"சரி பழைய கதையெல்லாம் எதுக்கு?
இப்ப எல்லாரும் நல்லா இருக்கினம் தானே!' என்றாள்.
எங்கோ இருந்து இடையே ஓடி வந்து காந்தி,
"என்னடி அவளை துருவிக்கொண்டிருக்கிற?
நீ போம்மா... சமையல் முடிய பாட்டியே கூப்பிட்டுறன்" என்றார் கண்டு கொண்டார் அவளது வாடிய முகத்தை.
பழைய நினைவுகளின் தாக்கம் அவளையும் சூழ்ந்து கொள்ள, அவளுக்குமே தனிமை தேவைப்பட்டது. உடனை சரியென தலையசைத்து அங்கிருந்து வெளியேறினாள்.
"அடியே விவஸ்த கெட்டவளே! அவளோ ர
ண்டு பேரையும் இழந்துட்டு, அனாதையா விடுதியில தங்கியிருந்தாள். அவளிட்ட போய், இதெல்லம் கேட்டுக்கொண்டிருக்கிற...
பாவம் புள்ள... கொஞ்ச நேரத்தில சோந்து போச்சு.
முதல்லையே சொல்லி இருக்கோணும் உன்னட்ட.... இனிமே யாரும் அவளை துருவாதிங்கோ" என்றவர் பேச்சை கேட்டதும் மல்லிக்கு் உடம்பு உதறத் தொடங்கியது.
திடீர்ரென மல்லியின் உடல் நடுங்குதை கண்டு பயந்த காந்தி,
"என்னடி செய்யிது? இப்ப தானே குளிச்ச..? இப்பிடி வேர்த்து கொட்டுது." என அவளை அதரவாக பற்றிக்கொண்டவருக்கு, அவள் உடல் வியர்வையில் குளிர்ந்திருப்பதை உணர்ந்து.
" எனக்கு பயமா இருக்கு ஊர்மி! என்ன என்டு ஒருக்கா பார்" என்றார் அவளை துணைக்கு அழைத்து.
தன் நிலையை கண்டு காந்தி பயந்திருப்பதை உணர்ந்தவளும்,
"எனக்கு ஒண்டுமில்ல அத்தை! தலை சுத்துற மாதிரி இருக்கு. படுத்தா சரியாகிடும்" என்றாள்.
"நாங்க இங்க பாக்கிறம். நீ போய் ஓய்வொடு" என்றவர், புணிதாவிடம்,
"இவளை கைதாங்கலா பிடிச்சுக்கொண்டு போம்மா! எங்கையாச்சும் விழுந்திட போறா"
அவளை கைதாங்கலாக பிடித்து கொண்டு அவள் அறையில் விட்ட புணிதா.
"திடீரென்டு ஏன் இப்பிடி ஆச்சு? அத்தை திட்டவும் பயந்திடடியா? அவங்களை தான் தெரியுமே. அன்பா இருந்தாலும், கோபமா இருந்தாலும் மறைக்க மாட்டா..
ஒன்டையும் யோசிக்காம, கொஞ்சம் ஓய்வெடு! குடிக்க ஏதாவது கொண்டு வரவா?" என அன்பாக வினவ,
"வேண்டாம் புணிதா!
கொஞ்சம் தனியா நான் இருக்கோணும். அத்தைக்கு நீ போய் உதவி செய்! ஊர்மி தனிச்சு போயிடுவாள்" என்றாள்.
"சரி பிறகு வந்து பாக்கிறன்." என்றவள் கதவை சாத்தி விட்டு சென்றுவிட்டாள்.
மல்லியின் நடுக்கம் தான் நின்ற பாடில்லை. பாட்டியின் வார்த்தைகள் தான் திரும்ப திரும்ப அவள் காதில் ஒலித்தது.
அப்ப இனிமேல் தேவி இங்க வரவே மாட்டாளா? எப்பயாவது ஒரு நாள் அவளை பார்த்து, நாலு கேள்வி கேட்ட பின்பு தான் அவளுடன் பேசவேண்டும்.
வீட்டில் நடந்த அத்தனை விஷயமும் பகிரவேண்டும், உன் அண்ணி நான் என்று முறுக்கி கொண்டு அவள் முன்னே அதிகாரம் செய்ய வேண்டும் என எண்ணிக்கொண்டதெல்லம், கனவாய் பேனதை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
மடை உடைத்து வெளியேறும் ஆற்று நீரை போல். அவள் கட்டுப்பாட்டை இழந்து கண்ணீரும் பெருக்கெடுத்தது.