• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

29. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
சாருபாலா சென்ற பிறகு, அடுத்த வாரத்தில் கோவிலில் வைத்து, அனிதாவுக்கு ஆனந்தன் தாலி கட்டினான்! முன்பு போல அனிதாவிடம் அவன் பேசிப் பழகுவதில்லை!சற்று விலகியே இருந்தான்! அனிதாவுக்கு புரியத்தான் செய்தது! ஆனால் இது மாதிரியான சமயங்களில், பெண்கள் கணவனின் அருகாமையை தேடுவார்கள்! தாயின் நினைவும் அதிகம் வந்தது! ஆனால் அவளுக்கு அந்த இரண்டும் கிடைக்க வகையின்றி போயிற்று!
விசாலாட்சி தான், முடிந்த அளவிற்கு அவளை பார்த்துக் கொண்டார்!

ஆனந்தன் குற்றவுணர்வில் குடியின் துணையை அதிகம் நாட ஆரம்பித்தான்! விசாலத்திற்கு மகனின் இந்த நிலைக்கு அவரும் காரணம் என்று உள்ளூர மருகினார்!

அனிதாவிற்கு,விசாலத்தின் மீது அன்பு ஏற்படுவதற்கு பதிலாக, வெறுப்பு உண்டாயிற்று! எல்லாம் இந்த அத்தையால் தான்! புத்திமதி சொல்ல வேண்டியவளே தூண்டி விட்டு, இப்போது பெற்றவர்களை இழந்து நிற்பது நான்தானே? ஆனந்தன் ஆண்பிள்ளை, அவனும் இரண்டு பெண்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, அவளது உணர்வைகளுடன் விளையாடி விட்டான்! இன்றைக்கு என்னவோ தவறு எல்லாம் என்னுடையது போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அலைகிறான்! இத்தனையில் முழுபாதிப்பு என்றால் அது சாருபாலாவுக்கு தான்!

சாருவின் இடத்தில் வேறு எந்த பெண் இருந்தாலும்,
உண்மை தெரிஞ்சதும், கத்தி ஆர்ப்பாட்டம் செய்து, ஊரை கூட்டி பஞ்சாயத்து வைத்திருப்பாள், போலீஸில் பிராது கொடுத்து ஆனந்தனை லாக்கப்பில், வைத்திருப்பாள்! தன்னைக்கூட அவள் இழிவாக பேசி, வீட்டை விட்டு வெளியேற்றியிருக்கலாம்!
ஆனால் அவள் இப்படி ஒன்றையும் செய்யவில்லை! அனிதாவிற்கு சாருவை நினைக்கையில் ஆச்சர்யம் மட்டுமின்றி, ஒரு மரியாதையும் உண்டாயிற்று!

என்ன மாதிரியான பெண் அவள்? கணவன் செய்த துரோகம்,பெற்ற பிள்ளையை பிரிய நேர்ந்த வேதனை ஒருபுறம், எல்லாமும் தாங்கிக் கொண்டு பேசாமல் போய்விட்டாளே? ஏன்?

🩷🩵🩷

சாருபாலா மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தாள்! காலையில் வக்கீல் கருணாகரன் வீட்டில் இருந்தது வரை எதுவும் நடவாதது போல் அவள் நடந்து கொள்ள முயன்றாள்! திலகம் முதல் முறையாக பழகும் நபரைப் போல இல்லாமல் சகஜமாக அவளுடன் பேசி பழகினார்! அவளை தங்கள் பெண் போலவே பாவித்தார் எனலாம்! இந்த பாசம் அவளுக்கு அவளது இறந்து போன தாயாரை நினைவுபடுத்தியது!

சாருவை இரவில் தன்னுடன் தங்க வைத்துக் கொண்ட திலகம், அவளிடம் தேவையற்ற எந்த பேச்சையும் பேசவில்லை! அவளது வேலை நேரம் எப்படி என்ன என்று விபரங்களை கேட்டுக் கொண்டார்! அவளுக்கு ஏதேனும் ஆசை இருக்கிறதா என்று கேட்டார்! சாரு தன் விருப்பத்தை சொன்னாள்! சிலகணங்கள் மௌனமாக இருந்தவர்,அந்த கேள்வியை கேட்டார்! " நீ அவசியம் ஹாஸ்டலில் தான் தங்க வேண்டும் என்று நினைக்கிறாயா?" அல்லது ஏதேனும் ஒருவரது வீட்டில் பேயிங் கெஸ்டாக போக விருப்பமா? இதை நான் ஏன் கேட்கிறேன் என்றால், இத்தனை நாட்கள் ஒரு குடும்பத்தில் இருந்து விட்டு இப்போது தனித்து இருக்கும் போது கண்ட நினைப்பெல்லாம் வரும்! அதனால,தான்மா!

சாருபாலாவுக்கு, இன்னொருவர் வீட்டில் போய் எப்படி தங்குவது என்று தயக்கம் தான் உண்டாயிற்று! ஆகவே யோசித்து சொல்வதாக சொன்னாள்! ஆனால் அவளால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை! காலையில் கிளம்பும் பரபரப்பில், இருந்தாள்! இன்னும் அவகாசம் தேவைப்பட்டது!

காரின் வேகத்தை குறைத்தவள் சாலையின் ஓரத்தில் சற்று நேரம் வண்டியை நிறுத்திவிட்டு, அமர்ந்திருந்தாள்! நடந்து போனதை அவளால் எளிதாக ஒதுக்க முடியவில்லை! அவளது கண்மணியை இனி பார்க்க முடியாது என்பதே,மிகுந்த வேதனை அளித்தது! நடந்த குற்றத்திற்கு மறைமுகமாக அவளும் ஒரு காரணம் தான்! எல்லாரையும் நம்பியது அவள் செய்த குற்றம் தானே? ஆனால் அதற்கான தண்டனையை அவள் மட்டுமின்றி அவளது குழந்தையும் அனுபவிக்கிறது! இந்த பருவத்தில், அவனுக்கு தாயின் முகம் பார்த்தால் மட்டும்தான் அடையாளம் தெரியும்! போகப்போக அவளது பிம்பம் அவன் மனதில் இருந்து கொஞ்சமாக மறைந்து போகும்! நினைக்க நினைக்க மனது வலித்தது!

சாலையோடு போன, ஏதோ ஒரு வாகனத்தின் ஓசையில் நிகழ்வுக்கு திரும்பியவள், கண்ணீரை அவசரமாக துடைத்துக் கொண்டு காரை கிளப்பினாள் சாரு!

எப்படியும் ஆடுத்த ஆண்டு பள்ளியில் சேர்த்து விடுவார்கள்!இங்கேயே இருந்தால் மகனை தூரத்தில் இருந்து பார்த்துக் கொள்ளலாம் தான்! அவளது மனம் மகனிடம் சென்று நின்றது!

மருத்துவமனை வந்துவிட, தன் எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, காரை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள் சாரு! அதன் பிறகு, வேறு நினைக்கவோ, சிந்திக்கவோ நேரமின்றி, பிற்பகல் வரை அவளுக்கு வேலை சரியாக இருந்தது!

வேலை முடிந்து வெளியே வந்தபோது தான், திலகம் மதிய உணவிற்கு வீட்டிற்கு அழைத்தது நினைவு வந்தது! கூடவே அவர் சொன்ன விஷயமும்! வீடு வந்து சேரும்வரையுமே அவளுக்கு அந்தம்மாளின் யோசனையை ஏற்றுக் கொள்ளாது போனால் என்ன நினைப்பாரோ என்று சங்கடத்துடன் நினைத்தாள்!

"வாம்மா, போய் கை கால் கழுவிட்டு வா! இரண்டு பேருமாக சாப்பிடலாம்!" என்று அன்பாக உரைத்தார்!

"என்னம்மா நீங்க? மணி என்ன ஆகுது? இவ்வளவு நேரமாக சாப்பிடாமல் இருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?"என்று கடிந்து கொண்டவளை, சின்ன சிரிப்புடன் வாஞ்சையோடு பார்த்திருந்தார் திலகம்!

சற்று நேரத்தில் சாப்பிட வந்து அமர்ந்தவளோடு தானும் அமர்ந்து கொண்டு, "நீ இப்படி உரிமையாக பேசுவது எனக்கு ரொம்ப, சந்தோஷமாக இருக்கிறதும்மா! இப்படி தினமும் உன் வாயால் அம்மா என்று நீ அழைத்துப் பேசினால் எவ்வளவு நல்லா இருக்கும்? ஆனால் எனக்குத்தான் கொடுத்து வைக்கலை!" பேச்சு ஒரு புறம் நடக்க தட்டில், சாதம் போட்டு, குழம்பை ஊற்றிவிட்டு,பொரியலையும் பரிமாறினார்!

முதல் கவளத்தை வாயருகே கொண்டு சென்ற சாரு, இன்ப அதிர்வுடன், அவரை நிமிர்ந்து பார்த்தாள்!

"ம் சாப்பிடுமா! என் கைப் பக்குவம் உனக்கு பிடிக்குமானு தெரியலை! சாப்பிட்டுவிட்டு சொல்லு மா!"

"அம்மா, நீ.. நீங்க பேயிங் கெஸ்டாக இருக்க சொன்னது உங்க வீட்டுலேயா?" என்றாள்!

"ஆமா மா! நாள் முழுக்க அவர் வேலை என்று போயிருவார்! அது போக வெளியூருக்கும் கிளம்பிடுவார்! நான் இந்த வீட்டை சுத்திட்டு,புத்தகம் படிச்சு, டிவி பார்த்துட்டு பொழுதை நெட்டித் தள்ளுவேன்! உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! அதான் அவர்கிட்ட சொன்னேன்! சாருவுக்கு விருப்பம்னா எனக்கு நோ அப்ஜக்ஷன் என்றார், ஆனால் உனக்கு தான் அந்த யோசனை பிடிக்கவில்லையே, விடுமா! நான் உன்னை தப்பா நினைக்க மாட்டேன்! சங்கடப்படாதே சரியா?"

"இல்லை அம்மா, யாரோ ஒருத்தர் வீட்டில் போய் எப்படி என்றுதான் எனக்கு தயக்கமாக இருந்தது! உங்க வீட்டில் என்றால் நான் தங்கிக்கிறேன்!

"நிஜமாவா சொல்றே சாருமா?

"ஆமா அம்மா! ஆனால் பணம் கட்டாயம் வாங்கிக்கணும்! ஓகே வா?"

"வாங்கிப்பேன் மா! இன்னும் கொஞ்சம் சாதம் வச்சுக்கோ தயிர் ஊற்றிக்கோ!"

இருவருக்குள் ஒருவித பந்தம் உருவாகிவிட்டது! அன்றில் இருந்து சாருபாலா அந்த வீட்டில் ஒரு அங்கமானாள்!

மாதங்கள் சில சென்றது! மகனுடைய படத்தை பார்த்து அவ்வப்போது கண் கலங்கினாலும், மனதை கொஞ்சம் கொஞ்சமாக திடப்படுத்திக் கொண்டு, அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தாள்! மேல் படிப்பு படிக்கலாம் என்று முடிவு செய்தாள்!

அந்த சமயத்தில் அந்த செய்தி வந்தது!

அதனால் அவளது முடிவை தள்ளி வைக்கும்படி ஆயிற்று!
 

Attachments

  • Picsart_24-05-04_15-06-20-975.jpg
    Picsart_24-05-04_15-06-20-975.jpg
    69.1 KB · Views: 10